![]() |
|
ஐரோப்பிய கிண்ணம் 2004 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41) +--- Thread: ஐரோப்பிய கிண்ணம் 2004 (/showthread.php?tid=7073) |
- ganesh - 06-15-2004 12 வது ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டப்போட்டியின் நான்காவது நாளான செக்கி 2 1 என்ற ரீதியில் லெத்வேனியாவை வென்றது மற்றையபோட்டியில் ஜேர்மனி நெதர்லாந்தை எதிர்த்து விளையாடியது இப்போட்டி 1 1என்ற hPதியில் வெற்றி தோல்வியின்றி முடிந்தது ...................................... தற்போதையநிலை A கிறீஸ் 3 புள்ளிகள் ஸ்பெயின் 3 புள்ளிகள் போர்த்துக்கல் புள்ளிகள் இல்லை ரஸ்யா புள்ளிகள் இல்லை B பிரான்ஸ் 3 புள்ளிகள் குரோசியா 1 புள்ளி சுவிஸ் 1 புள்ளி இங்கிலாந்து புள்ளிகள் இல்லை C சுவீடன் 3 புள்ளிகள் இத்தாலி 1 புள்ளி டென்மார்க் 1 புள்ளி பல்கேரியா புள்ளிகள்இல்லை D செக்கி 3 புள்ளிகள் ஜேர்மனி 1 புள்ளி நெதர்லாந்து 1புள்ளி லெத்வேனியா புள்ளிகள் இல்லை - ganesh - 06-16-2004 2004 <img src='http://home.hccnet.nl/j.j.wesseling/sports/SPORT033.jpg' border='0' alt='user posted image'> - ganesh - 06-16-2004 http://www.uefa.com <img src='http://www.uefa.com/ImagesContent/home/euro2004_banner.jpg' border='0' alt='user posted image'> - ganesh - 06-16-2004 ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ரஸ்யா முதலாவது நாடாக முதலாவது சுற்றுடன் வெளியேற்றம்? தற்போது இடைவேளை வரை போர்த்துக்க்லுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போட்டியில் 1 க்கு 0 என்ற நிலையில் உள்ளது அத்துடன் ரஸ்ய பந்துபாப்பாளர் சிவப்புகாட் கிடைத்தபடியால் மைதானத்ததை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் ஆகவே 10 வீரர்களுடன் மட்டுமே மற்றைய 45 நிமிடங்களுக்கு விளையாடவேண்டும் அடுத்த சுற்றுக்கு இவர்கள் செல்லவேண்டும் என்றால் குறைந்தது 2 கோல்களை அடுத்த 45 நிமிடத்திற்குள் போடவேண்டும் போடுவார்களா? - vasisutha - 06-16-2004 நன்றி கணேஸ். அங்க இங்க ஓடித்திரியாமல் தகவல்களை இங்கேயே பார்க் முடிகிறது. - ganesh - 06-16-2004 ரஸ்யா போட்டியில் கலந்துகொள்வதற்காக முதலாவதாக போர்த்துக்கலுக்கு வந்தார்கள் ஆனால் விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்துவிட்டார்கள் இதனால் முதலாவதாக வெளியேற்றப்டட நாடு ரஸ்யா ஆகும் இறுதியாக ரஸயா கிறீஸ் உடன் மோதவேண்டியுள்ளது அவர்கள் இந்தபோட்டியில் வெற்றிபெற்றாலும் அடுத்தசுற்றுக்குசெல்ல முடியாது பிரிவு ஏ யில் தற்போது கிறீஸ் 4 புள்ளிகளையும் ஸ்பெயின் 4 பள்ளிகளையும் போர்த்துக்கல் 3 புள்ளிகளையும் பெற்றுள்ளது முதலாவது சுற்று இறுதிப்போட்டியில் ஸ்பெயின் போர்த்துகலை எதிர்த்து விளையாடும் போட்டியில் சமநிலை பெற்றால் போதும் அடுத்தசுற்றிற்கு செல்வதற்கு போர்த்துக்கல் அடுத்தசுற்றிற்கு செல்லவேண்டுமானால் நிச்சயம் ஸ்பெயினை வெல்லவேண்டும் கிறிஸ் அடுத்த சுற்றுசெல்லவேண்டும் என்றால் ரஸ்யாவுடன் சமநிலையாக விளையாடினால் போதுமானது - ganesh - 06-17-2004 2004 - ganesh - 06-17-2004 ஜேர்மனிய உதைபந்தாட்டவீரர் மிச்சல் பல்லாக்கின் விலை 50 மில்லியன் ஈரோக்கள் இப்படிசொல்லியுள்ளார் ப்பயரன் முன்சன்கிளப் தலைவர் ப்பேக்கன்பவர் அவர் எமது கழகத்துடன் சரியானமுறையில் இணைந்துள்ளார் அவர் எமது கழகத்தில் தொடர்ந்து இருப்பார் ஆனாலும் சரியான விலைகிடைத்தால் விளையாட்டுவீரர்களை விற்பதற்கு தயாராகவுள்ளோம் இதன்படி இவரின்விலை 50 மில்லியன் ஈரோக்கள் இவரை வாங்குவதற்கு ஸ்பெயின் பார்சலோனா 15 மில்லியன் கொடுக்கத்தயாராகவுள்ளது - ganesh - 06-17-2004 இங்கிலாந்து சுவிற்ஸ்லாந்தை 3 0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றுள்ளது இங்கிலாந்து சார்பில் ரொனை 2 கோல்களையும் கேராட் 1 கோலையும் போட்டுள்ளார்கள் - kuruvikal - 06-20-2004 என்ன கணோசண்ண...உவையின்ர உளறல்களுக்குப் பயந்து விளையாட்டைக் கைவிட்டுவிட்டியள்....அதுகள விடுங்கோ....இப்ப உதைபந்தாட்டம் பற்றிச் சொல்லுங்கோவன்....தொடங்கிச் சுவாரசியமாப் போனதை உந்த வல்லை முனி வந்து குழப்பி அடிச்சுப்போட்டு ஓடி ஒழிச்சிட்டுது...உதைத்தான் சொல்லுறது தானும் உதவான் மற்றவனையும் உதவ விடான் எண்டு......! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ganesh - 06-20-2004 நன்றி குருவிகள் நீங்களும் வேறுசிலரும் கேட்டுகொண்டதற்காக மீண்டும் தற்காலிகமாக இணைந்துகொள்கிறேன் ஆனால் அந்த குப்பைகளும் இருக்கும் பகுதிக்கு செல்லமாட்டேன் - ganesh - 06-20-2004 வெற்றிக்கிண்ணத்தை எதிர்பார்த்த நாடுகளான இத்தாலி ஜேர்மனி நெதர்லாந்து அடுத்தசுற்றுக்கு செல்லுமா? - ganesh - 06-20-2004 தற்போதையநிலை A கிறீஸ் 2 4 ஸ்பெயின் 2 4 போர்த்துக்கல் 2 3 ரஸ்யா 2 0 B பிரான்ஸ் 2 4 இங்கிலாந்து 2 3 குரோசியா 2 2 சுவிஸ் 2 1 ? C சுவீடன் 2 4 டென்மார்க் 2 4 இத்தாலி 2 2 பல்கேரியா 2 0 D செக்கி 2 6 ஜேர்மனி 2 2 லெத்வேனியா2 1 நெதர்லாந்து 2 1 - ganesh - 06-20-2004 செக்கோ இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றிபெற்று முதல் நாடாக அடுத்தசுற்றுக்கு செல்லதெரிவாகியுள்ளது அத்துடன் செக்கி அடுத்தபோட்டியில் ஜேர்மனியை எதிர்த்து விளையாடவுள்ளது ஜேர்மனி செக்கியை வெல்லும் என்பது சந்தேகமே? நெதர்லாந்து அடுத்தபோட்டியில் லெத்வேனியாவை எதிர்த்து விளையாடவுள்ளது இதில்வெற்றி பெறும் நாடு அடுத்தசுற்றுக்குசெல்ல சந்தற்பம் உண்டு ஆனால் ஜேர்மனி செக்கியை வெற்றிபெற்றால் ஜேர்மனி அடுத்தசுற்றுக்குசெல்லும் நேற்றைய போட்டியில் லெத்வேனியா ஜேர்மனியுடன் விளையாடி சமநிலைப்படுத்தியதும் இதனால் ஜேர்மனி அடுத்தசுற்றுக்கு செல்லும் சந்தற்பத்தை இழந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது உதைபந்தாட்டத்தில் எதுவும் நடக்கலாம் அடுத்த புதன் இரண்டாவது இடத்ததை கைப்பற்றும் நாடு எது என்று தெரிந்துவிடும் அதுவரை ? - ganesh - 06-20-2004 27-06-2004 மாலை 8.45 போற்ரோ மைதானத்தில் செக்கி எதிர் சுவீடன்? டென்மார்க்? இத்தாலி? - kuruvikal - 06-20-2004 கணேசண்ண எமது கருத்தையும் கணக்கில் எடுத்து மீண்டும் வந்து செய்திகளைத் திறம்பட இணைத்துத் தருவதற்கு நன்றிகள்.....! குப்பைகள் பக்கம் என்று தெரிந்தால் உடனவே அங்கிருந்து விலகுவதுதான் நாமும் குப்பைகளோடு குப்பைகளாக நாறாமல் இருக்க வழி செய்யும்....! நாளைக்கு நடக்க இருக்கும் இங்கிலாந்து மற்றும் குரோசிய அணிகளுக்கிடையேயான போட்டி இங்கிலாந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு போட்டி....அது பற்றி உங்கள் பார்வை என்ன.....அதாவது போட்டிக்கு முந்தையதான அணிகளின் பலம் பலவீனம் மற்றும் வெற்றி வாய்ப்பு.....(நேரம் இருந்தால் எழுதுங்கள்....!) - ganesh - 06-20-2004 குறூப் பி யில் தற்போது 2 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடன் பிரான்ஸ் முன்னனியில் உள்ளது 3 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும் 2 புள்ளிகளுடன் குரோச்சியா 3வது இடத்திலும் 1புள்ளிகளுடன் சுவிஸ் 4வது இடத்திலும் உள்ளது ஆனாலும் இதுவரை எந்த நாடு அடுத்தசுற்றுக்கு செல்லும் என்று தீர்மானிக்கமுடியாமல் உள்ளது என்றாலும் பிரான்ஸ் நாளை சுவிற்சலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது சுவிஸ் அடுத்தசுற்றுக்கு செல்லவே;ண்டுமானால் ஆகக்குறைந்தது 5 கோல்களைப்போடவேண்டும் அதேவேளை இங்கிலாந்து அடுத்தசுற்றுக்கு செல்லவேண்டுமானால் நாளையபோட்டியை சமநிலைப்படுத்தினால் போதுமானது அதேவேளை குரோசியா நிச்சயம் நாளையபோட்டியில் வெற்றிபெறவேண்டும் அவர்கள் பிரான்ஸ்சுக்கு எதிரான போட்டியில் கடைசிநேரத்தில் வெற்றியை நழுவவிட்டுவிட்டார்கள் குறூப் பி இறுதிமுடிவுகள் 1 பிரான்ஸ் ? 2 இங்கிலாந்து? 3 குரோசியா? 4 சுவிஸ்? - ganesh - 06-20-2004 தற்போதையநிலை 21-06-2004 A போர்த்துக்கல் 3 6 கிறீஸ் 3 4 ஸ்பெயின் 3 4 ரஸ்யா 3 3 B இங்கிலாந்து 2 6? பிரான்ஸ் 2 5? குரோசியா 2 2 ? சுவிஸ் 2 2? C சுவீடன் 2 4 டென்மார்க் 2 4 இத்தாலி 2 2 ? பல்கேரியா 2 0 ? D செக்கி 2 6 ஜேர்மனி 2 2 ? லெத்வேனியா2 1 ? நெதர்லாந்து 2 1? - ganesh - 06-20-2004 <img src='http://www.tamil.nl/por1.jpg' border='0' alt='user posted image'> - ganesh - 06-21-2004 செக்கொவையடுத்து போர்த்துக்கலும் கிறீசும் கால் இறுதியாட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது போர்த்துக்கல் ஸ்பெயினை 1 0 என்ற ரீதியில் வெற்றிபெற்றுள்ளது அதேவேளை கிறீஸ் ரஸ்யாவுடன் 2 1 என்ற ரீதியில் தோல்வியடைந்தபோதிலும் முன்புபெற்றபுள்ளிகளின் அடிப்படையில் கால் இறுதியாட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது |