Yarl Forum
அபாயம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அபாயம் (/showthread.php?tid=7043)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


- kuruvikal - 06-17-2004

vallai Wrote:உதிலை உவன் கணேசுத்தம்பி வேலை செய்யுறன் எண்டான் நீங்களும் கணேசண்ணா எண்டு வழிஞ்சியியள் அவரும் பதிலுக்கு வழிஞ்சார் இப்ப என்னடாவெண்டா அவ வியூ சற்றடே வியூ சண்டே வியூ எண்டுறியள்
இப்பத்தான் பழைசையெல்லாம் கொஞ்சம் கிண்டிப்பாத்தன்

கணேசண்ண கள உறுப்பினர்...அதுபோக அவர் ஒரு செய்தியாளர்...அவரோ அல்லது எவரோ ஒரு நிறுவனத்திற்குள் வேலைக்குச் செல்லும் போது அந்த நிறுவனத்தின் பின்னணி அதன் மூலம், நோக்கம் என்று என்று எல்லாம் அறிந்துதான் செல்ல முடியுமா...??! அது மிகுந்த சாத்தியக் குறைவான விடயம்..ஒரு சாதாரண நபருக்கு......!

சரி அவர் அவ்வாறு எல்லாம் அறிந்து சென்றிருந்தாலும் கூட அவருக்குள் இருக்கும் அவருடைய நிலையை நியாயப்படுத்தும் அம்சங்களை கண்டறிவதே அவர் ஏன் அங்கு சென்றார்...ஏன் அடிப்படைப் பொதுநியாயங்களுக்கு அப்பால் விலகிச் செல்கிறார்...அதனால் அவருக்கு கிடைக்கும் நன்மை என்ன....அப்படி நியாயத்துக்கு அப்பால் சென்று அவர் சாதிக்கப் போவதென்ன......என்பவற்றை இயன்றமட்டில் கண்டறிந்து.....அவை ஒருவகையில் அவருக்கே கெடுதியாகும் என்பதை அவருணரத்தக்கதாக அவருக்கே சிநேகித பூர்வமாகச் சொல்ல வேண்டுமே தவிர ...வெட்டுவேன் கொத்துவேன் துரோகி என்பதாலோ எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை...அப்படிச் செய்வது அவர்கள் தொடர்ந்து நியாயத்துக்கு அப்பால் விலகிச் சென்று அநியாயங்கள் பக்கம் சாயவே துணை புரியும்.....உண்மையில் அவருடைய கருத்துக்களை நிதானமாகப் பார்க்கின்ற போதே உண்மையில் அவர் சுயநலம் கருதித்தானா இவற்றைச் செய்கிறார் என்றும் அறியக்கூடியதாக இருக்கும்....அதுமட்டுமன்றி பலர் தம்மை அறியாமலே அநியாயக்காரர்களின் சூழ்ச்சிவலையில் சிக்கியும் உள்ளனர்....ஏன் அப்படியான ஒருவராக அவர் இருக்க முடியாது...???!

அதுபோக வெளிப்படையாக தமிழ் தேசியத்தையும் தேசத்தையும் ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டு அதற்கு எதிராக ஆக்கிரோசமாக செயற்படுபவர்கள் மத்தியில் ஒருவேளை கணேசண்ணை தமிழ் தேசியத்திற்கும் தேசத்திற்கும் எதிரானவாரக இருப்பினும்....அவர்களைவிட மேல் என்றே நாம் கருதுகிறோம்....தேசத்துரோகிகள் தாமாகவும் உருவாகுகின்றனர்....உருவாக்கப்படுபவர்களும் இருக்கின்றனர்....அதேபோல் வெளிப்படையாக தெரியும் துரோகிகள் ஆபத்துக் குறைந்தவர்கள்...வெளிப்படையாகத் தெரியாத துரோகிகளே ஆபத்தானவர்கள்...அவர்களை ஆடையாளம் காண்பதே தேசத்துரோகிகள் மேலும் மேலும் பெருகாமல் இருக்க வழி வகைகளைச் செய்ய முடியும்.... !

அத்துடன் தேசத்துரோகிகளுக்குள்லும் ஒரு மனம் உண்டு அதைப்படிப்பதன் மூலமே அவர்கள் பாதையில் சென்று அவர்களை வழிநடத்தி சரியான இலக்கு நோக்கி அழைத்துவர முடியும்...நாம் துரோகிகள் என்று அவர்களுக்குள் இருக்கும் திறமைகளுக்கு இடம்கொடுக்காமல் அவர்களைத் துரத்திக் கொண்டிருப்போம் என்றால் எதிரிகள் அவர்களை நண்பர்களாக்கி இப்போது செய்வதைவிட இன்னும் பல் மோசமான கெடுதிகளை தொடர்ந்து முடிவில்லாமல் செய்து கொண்டிருப்பர்.....ஒருவரைத் துரோகி என்று விலக்கி வைக்க முன் இவற்றையும் கவனத்தில் எடுங்கள்.....!

நாகங்களின் மத்தியில் வாழ்ந்தாலும் அவற்றோடு கூடி வாழும் பாம்பாட்டியைவிட சாதாரண மனிதன் அவற்றிற்கு அதிகம் அஞ்சுவான்..நாகங்களின் பலம் பலவீனம் அறிந்தவன் பாம்பாடியாகவும் வாழுவான் சாதாரண மனிதனாகவும் வாழக் கற்றிருப்பான்.....நாகங்கள் மத்தியில்....! அதுவே விவேகம்....! நாகங்களைக் கொல்வதைவிட.....! காரணம் கொல்வதால் ஒரு நாகத்தை அந்தவேளைக்கு மட்டும் அழிக்கலாம் ஆனால் ஆபத்து என்னவோ தொடர்கதைதான் மற்றைய நாகங்களால்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- ganesh - 06-17-2004

மன்னிக்கவேண்டும் நான் 6 வருடங்களாக ரிபிசி யில் இன மத அரசியல் பேதமின்றி இணைந்துள்ளேன் அதில் இருந்து பிரிந்துசென்றவர்களும் இருப்பவர்களும் எனது நண்பர்களே நான் ரிபிசி மட்டுமல்ல சகலவானொலிகளையும் கேட்டு வருகிறேன் ஏன் சேது வானொலிகளில் பயன்படுத்தும் நாகரிகமற்றவார்த்தைகளை நிறுத்தும் படி அந்தவானொலியின் முக்கியமானவருடன் தொடர்புபொண்டு கூறியுள்ளேன் ஆகவே தேவையற்றவைகளை எழுதுவதை தவிர்த்துக்கொள்ளவும் மேலும் கருத்துக்களத்தில் எழுதும் எனது கடமை முடிந்துவிட்டது தற்போது
நடைபெறும் ஈரோ2004 முடிந்தவுடன் நான் கருத்துக்களத்தில் இருந்து நிரந்தரமாகவே விலகிக்கொள்கிறேன்


- vallai - 06-18-2004

அப்பு குருவி அவரும் சுவரும் அரைகுறை மதிலும் எண்டு ஆயிரத்தெட்டு நொண்டியடிச்சாலும் எவனொருவன் தமிழ்த் தேசியத்துக்கு துரோகம் செய்கிறானோ அவனும் அவனுக்கு உதவி செய்யிறவையும் துரோகியள் எண்டு நான் சொல்லேல்லை நீதான் கொஞ்சநாளைக்கு முன்னாலை தம்பி பீ.பீ.சி மேலை பாய்ஞ்சாய் அப்ப இவ்வளவு விண்ணாண விளக்கங்களும் உமக்குத் தெரியேலையே.

அவங்கள் துரோகவானொலி துரோகவானொலி நிப்பாட்டு எண்டு கத்துறாங்கள் இவர் என்னடாவெண்டா 6 வருசமா இன மத பேதமெண்டு இல்லாமல் இணைஞ்சிருக்கிறாராம் சீமான் 6 வருசமா அவங்கள் சொல்லுறது செய்யுறது தெரியாது இனைஞ்சிருக்கிறாரோ அல்லது குடுக்குற காசுக்கு நாக்கு வழிக்கிறாரோ அதுக்கை தன்ரை சகோதரம் புலியாம் ஆருக்கடா சுத்துறீங்கள் காதிலை பூ


- ganesh - 06-18-2004

யார் துரோகி? ஒருவரைப்பார்த்து நீ என்ன சாதியென்று பேசுகிறாரே அவர்தான் துரோகி தான் ஒரு பத்திரிகையாளன் என்று சொல்p மக்களை ஏமாற்றுபவன்தான் துரோகி எத்தனையோ கோபாலசாமி நெடுமாறன் போன்றவர்கள் எமது மக்களுக்காக
சிறை சென்றார்கள் அவர்களை வானொலியில் பகிரங்கமாக வடக்கத்தையார் என்று குரைக்கிறாரே அவர்தான் துரோகி

சகலவானொலிகளிலும் இன மத அரசியல் பேதமின்றி இணையுங்கள்
சாதியைப்பற்றி பேசும் போலிஊடகவியலாளரை வானொலிகளைவிட்டு தூக்கிஎறியுங்கள்


- vallai - 06-18-2004

அப்பு சாமி கோபம் வரக்கூடாது கேட்டியளே சேது செய்யிறான் பிழை எண்டு சொல்லிக்கொண்டே சேத்துக்குள்ளை இருந்து உருளாதை எல்லா வானொலியிலையும் பேதமின்றி இணையவேணும் பேதி குடிச்சிட்டு இணையக்கூடாது அதென்ன உந்த ஓட்டை றேடியோ மாதிரி இணைந்திருக்கிறன் இணைந்திருக்கிறன் என்று சொல்லுறாய்

நட்டுப்போட்டி பிக்ஸ் பண்ணியிருக்கே


- sethu - 06-18-2004

நான் யாரையும் சாதி கதைக்க இல்லை உந்த துரொக வானொலி காறர் சொல்லினம் 25 வருடமா ஈழத்துக்கு அடிபட்டது தாங்களாம். தாங்கள் வடக்குகிழக்கை தாயகமாக கொன்டநாங்களாம் அதைதான் நான் சொல்லுறன் அவை வடக்கும் இல்லை தாயகம் கிழக்கும் இல்லை தாயகம் இலங்கையும் இல்லை தாயகம் அவர் வந்து இந்தியநாட்டு தமிழன் மட்டகளப்பில் கூலிவேலை செய்தவர் புளட் இயக்கத்திற்கு கடைசிகாலத்தில் கஞ்சா வித்துகொடுத்தவர். இந்திய இறானுவத்தின் உளவாளி. இதை முதல் கனேஸ் மறுப்பரோ அல்லது அந்த குறிப்பிட்ட நபர் மறுப்பரோ, இல்லவே இல்லை இவற்றுக்கு ஆதாரம் இவருடைய பிறப்பு அத்தாட்சி பத்திரம் புhர்வீகம் இந்தியா என்டு கிடக்கு ஏன் அதுமட்டுமில்லை இவருடைய அடயாளஅட்டை எக்ஸ் அடயாளம் பெரிதா முன்பக்கம் போட்டிருக்கு ஏன் இந்திய தமிழ் என்டாதான் இலங்கை ஆட்பதிவுத்தினைக்களம் இதை போடும் இவை எல்லாம் பொய்யோ? இவற்றை வெளியே சொன்னால் அது சாதியோ? அதற்காக இந்த துரொகிகள் எல்லாம் கோபலசாமி நெடுமாறன் என்டு நினைப்போ?


- Mathivathanan - 06-18-2004

ஏன்ராப்பா சேது.. நீயும்தான் அந்த றேடியோவிலை வேலைசெய்தாய்.. அதுவும் மலரும் மடலும் (நேயர் கேள்வி பதில்) செய்த உனக்கு எப்படி உந்தாளை துரோகியெண்டு சொல்ல தகைமை வரும்..? எப்படி..?
:?: :?: :?:


- sethu - 06-18-2004

2000 ம் ஆன்டு யுhலாய் இலன்டனில் காலடி வைச்சு 2001 மே மாதம் இலங்கை போய்விட்டன். இதுக்கை 3 மாதம் இலன்டனில் இல்லை 6 மாதம் வேலை வேறு ஒரு நிறுவனத்தை அந்த வானொலியிலை 10 நிமிச புறோக்கிறாம் செய்திருப்பனோ இல்லை. ஆனால் அனைவருடனும் நல்லாக கூட பளகினேன். மாலைப்பொளுதில் ஆனால் அந்த வான்எலி தொடங்கி 6 வருசம் இதுவரை வானொலி நிர்வாகம் என்னை அவர்களின் உத்தியோகத்தராகவோ அல்லது அறிவிப்பாளராகவோ அறிவிக்கேல்லை. தாங்கள் போலவே தன்னிப்பிரியன் தன்னி யாருடனும் அடிக்கலாம் ஆனால் தங்கள் தங்கள் கோவணம் களராமல் பாக்கனும் தாத்தா. நான் அன்றும் அவர்களை எதிர்த்தவன் இன்றும் எதிர்த்தவன். இனியும் எதிர்த்தவன். உந்தவானொலி சாமான் கொஞ்சம் விக்க இருக்கு ஆரும் வேனும் என்டா சொல்லுங்கோ


- sethu - 06-18-2004

ஊடகதுறைசார்ந்தவன் எதிரிகளுடனும் துரோகிகளுடனும் விபச்சாரிகளுடனும் அதிகம் பிளங்கினால்தான் செய்தி கனக்க சேகரிக்கலாம் அது என் அனுபவம்.


- Mathivathanan - 06-18-2004

மலரும் மடலும் வாசிச்சவர் வான்முரசு பத்திரிகைக்கு அசிஸ்ரன் எடிற்றர் வேலை பார்த்தவர் எதிர்த்தவராம்.. இவர் சேர்ந்து தண்ணியடிக்க இவரை சாமம் சாமமா வீட்டுக்கு காரோடிக்கொண்டுபோய் விட்டது நான்.. அப்படியிருக்க இவர் என்னை குறை சொல்லுறார்.. சொன்ன நேரத்துக்கு விடிய வந்து செய்திப்பிரிவிலை செய்தி எடுத்துத்தாற சின்ஸியர் வேக்கர் எண்டு பெயரெடுத்தது இவர்.. பின்னேரம் போனவராம்..
வானொலியிலை செய்திப்பிரிவு முக்கியமா ஆமித்தளங்களில் வாற செய்தியள் எடுத்துக்குடுத்த இவர் எதிர்த்தவராம்.. இவர் செய்தியெடுக்கேக்குள்ளை காட்டித்தந்ததுகள்தான் நான் இப்ப பார்க்கிற ஆமித் தளம்.. தான் எதிர்த்தவராம்.. யாருக்கு பூச்சுத்துறார்..
:?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 06-18-2004

தாத்தா நல்லா கதை விடுவியள் வாசிக்கவும் சுதியாத்தான் இருக்கும் பாக்கிற சனத்திற்கும் நல்லாத்தான் இருக்கும் உங்களுக்கு ஒன்டு புரியுமோ ஆடுறமாட்டை ஆடித்தான் கறக்கனும். அதுபோக உங்கட *** எங்கை இப்ப?


*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- Mathivathanan - 06-18-2004

[quote=Mathivathanan]ஏன்ராப்பா சேது.. நீயும்தான் அந்த றேடியோவிலை வேலைசெய்தாய்.. அதுவும் மலரும் மடலும் (நேயர் கேள்வி பதில்) செய்த உனக்கு எப்படி உந்தாளை துரோகியெண்டு சொல்ல தகைமை வரும்..? எப்படி..?
:?: :?: :?:[/quote]
[quote=sethu]2000 ம் ஆன்டு யுhலாய் இலன்டனில் காலடி வைச்சு 2001 மே மாதம் இலங்கை போய்விட்டன். இதுக்கை 3 மாதம் இலன்டனில் இல்லை 6 மாதம் வேலை வேறு ஒரு நிறுவனத்தை அந்த வானொலியிலை 10 நிமிச புறோக்கிறாம் செய்திருப்பனோ இல்லை. ஆனால் அனைவருடனும் நல்லாக கூட பளகினேன். மாலைப்பொளுதில் ஆனால் அந்த வான்எலி தொடங்கி 6 வருசம் இதுவரை வானொலி நிர்வாகம் என்னை அவர்களின் உத்தியோகத்தராகவோ அல்லது அறிவிப்பாளராகவோ அறிவிக்கேல்லை. தாங்கள் போலவே தன்னிப்பிரியன் தன்னி யாருடனும் அடிக்கலாம் ஆனால் தங்கள் தங்கள் கோவணம் களராமல் பாக்கனும் தாத்தா. நான் அன்றும் அவர்களை எதிர்த்தவன் இன்றும் எதிர்த்தவன். இனியும் எதிர்த்தவன். உந்தவானொலி சாமான் கொஞ்சம் விக்க இருக்கு ஆரும் வேனும் என்டா சொல்லுங்கோ[/quote]
[quote=sethu]ஊடகதுறைசார்ந்தவன் எதிரிகளுடனும் துரோகிகளுடனும் விபச்சாரிகளுடனும்
[quote=Mathivathanan]மலரும் மடலும் வாசிச்சவர் வான்முரசு பத்திரிகைக்கு அசிஸ்ரன் எடிற்றர் வேலை பார்த்தவர் எதிர்த்தவராம்.. இவர் சேர்ந்து தண்ணியடிக்க இவரை சாமம் சாமமா வீட்டுக்கு காரோடிக்கொண்டுபோய் விட்டது நான்.. அப்படியிருக்க இவர் என்னை குறை சொல்லுறார்.. சொன்ன நேரத்துக்கு விடிய வந்து செய்திப்பிரிவிலை செய்தி எடுத்துத்தாற சின்ஸியர் வேக்கர் எண்டு பெயரெடுத்தது இவர்.. பின்னேரம் போனவராம்..
வானொலியிலை செய்திப்பிரிவு முக்கியமா ஆமித்தளங்களில் வாற செய்தியள் எடுத்துக்குடுத்த இவர் எதிர்த்தவராம்.. இவர் செய்தியெடுக்கேக்குள்ளை காட்டித்தந்ததுகள்தான் நான் இப்ப பார்க்கிற ஆமித் தளம்.. தான் எதிர்த்தவராம்.. யாருக்கு பூச்சுத்துறார்..
:?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]
[quote=sethu]தாத்தா நல்லா கதை விடுவியள் வாசிக்கவும் சுதியாத்தான் இருக்கும் பாக்கிற சனத்திற்கும் நல்லாத்தான் இருக்கும் உங்களுக்கு ஒன்டு புரியுமோ ஆடுறமாட்டை ஆடித்தான் கறக்கனும். அதுபோக உங்கட ***
தாய்லாந்தோ.. நீங்களெல்லோ அங்கை போய் வந்தனியள்.. நான் நேரா லண்டனுக்கு வந்திட்டன்.. கட்டுநாயக்கா-கீத்றோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 06-18-2004

தாத்தா ஆமிகாறனோட சேந்தால் ஆமிக்காறன் மாதிரித்தான் நிக்கனும் துரோகியோடசேந்தால் துரோகிமாதிரித்தான் நிக்கனும் விபச்சாரியோட சேந்தால் விபச்சரிமாதிரித்தான் நிக்கனும் சனத்தோடசேந்தால் சனம் மாதிரித்தான் நிக்கனும் அப்பத்தான் அலுவல் நடக்கும் கலர் காட்டுறவையும் தங்களை தாங்கள் யார் என்டு வெளிக்காட்டுறவையும் ஊடகத்திலை நிலைத்திருக்கமடியாது ஆனால் நீங்கள் எப்பவும் நீங்களாகவே இருக்க தெரியனும். இவை எனது அனுபவ கற்கைகள்.


- sethu - 06-18-2004

நான் உவங்களை வென்ட பெரிய துரோகிகளையும் காட்சட்டைசேட்டுப்போட்டவர்களையும் கன்டிருக்கிறேன். குன்டுபோடும் அன்ரனோவ் விமானத்தில் சென்றும் செய்தி சேகரித்திருக்கிறேன் ஆனால் நான் எப்பவும் ஒரு கொள்கையுடன் நானாகவே இருக்கிறேன் அதுதான் முக்கியம் தேசத்துரோகிகள் இனங்கானப்படவேன்டும் அவை மக்கள் முன் நிறுத்தப்பட்டு தன்டிக்கப்படவேன்டும் நான் ஏதாவது தவறு செய்திருந்தால் நடுறோட்டில் சுட்டுப்போட்டாலும் சாவை ஏற்றுக்கொள்ளதயார். குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறக்கும் தாங்கள் தமிழ்தேசியத்திற்கு செய்த தவறுகளை மறைக்க எல்லாதுரொகிகளும் ஒன்றாக இனைந்து நடுநிலமைபேசுறாங்கள். றயனி திரனகமவ கொலை செய்தது ஈ பீ ஆர் எல் எவ் அந்த கொலையை செய்தவனே ஒப்புக்கொன்டிருக்கிறான் ஆனால் அதை புலி என்டுறாங்கள் பத்மநாபாவை கொலைசெய்தது உட்புhசல் ஆனால் அதை புலி என்டுறான்கள் சிறீ சபாரத்தினத்தை கொலை செய்தது அதே இயக்கம் ஆனால் அதை புலி என்டுறாங்கள். உப்படியே எல்டலாத்தையம் புலியின் முதுகிலை அரையுங்கோ அரச்சாத்தான் உங்கள் எல்லாருக்கும் மதிப்பு.


- sethu - 06-18-2004

Handiwork of the Government – a shocking revelation
”The suicide jacket that was retrieved at Grandpass was a handiwork of the Government – a shocking revelation." The Sri Lanka Government as it was involved in an evil design to implicate the Liberation Tigers of Tamil Eelam after the so-called detection of claymore bombs and suicide jacket in the Grandpass police division, Colombo. It was reported that two powerful land mines and a suicide jacket in a fertilizer bag were found abandoned and the police recovered those items from a location adjacent to the street corner in Grandpass police area, according to the police version. “This drama is said to be the deceitful act of the United People’s Freedom Alliance Government according to confidential information received from a Minister in the government.” Sri Lanka President and the Government was thus involved in a sinister design to tarnish the image of the Liberation Tigers of Tamil Eelam.


- sethu - 06-18-2004

http://www.oslovoice.com/


- Mathivathanan - 06-18-2004

றீல் விடுறால றீல்.. ஒண்டா சமைச்சு சாப்பிட்டு.. ஒண்டா குடிச்சு வெறிச்சு.. ஒண்டா படுத்து எழும்பி.. ஒண்டா அவங்களுக்காக அடிபட்டிட்டு.. இப்ப றீல் விடுறான்..
தன்னைத்தானே பத்திரிகையாளன்.. ஒற்றுவேலைசெய்பவன் எண்டு யார் பறையடிப்பான்..
யாரை துரோகியெண்டுறான் இவன்..

எப்பவும் அவன் துரோகி.. உதுதான் இவனுடைய ஊடகச் செய்தி.. அவன் கொலைசெய்தான் இவன் கற்பழிச்சான்.. இவள் அவனோடை படுத்தானள.. அவள் இவனோடை ஓடினான்.. இதுதானோ ஊடகவியளாள செய்தி.. செய்த ஒருபக்கத்து கொலையை மறைக்க அடுத்தவன் தலையிலை கட்டி அப்பிடி இப்பிடி இல்லாத பொல்லாத பழியெல்லாம் அள்ளிக்கொட்டி இதுதான் இவனுடைய ஊடகவியல்..
இல்லாத பொல்லாத பொய்யெல்லாம் சொல்லி சமுகத்துக்குள்ளை கலவரம் உண்டக்கிறதுதானோ இவனுடைய ஊடகச் செய்தி..
:?: :!: Idea


- kuruvikal - 06-18-2004

vallai Wrote:அப்பு குருவி அவரும் சுவரும் அரைகுறை மதிலும் எண்டு ஆயிரத்தெட்டு நொண்டியடிச்சாலும் எவனொருவன் தமிழ்த் தேசியத்துக்கு துரோகம் செய்கிறானோ அவனும் அவனுக்கு உதவி செய்யிறவையும் துரோகியள் எண்டு நான் சொல்லேல்லை நீதான் கொஞ்சநாளைக்கு முன்னாலை தம்பி பீ.பீ.சி மேலை பாய்ஞ்சாய் அப்ப இவ்வளவு விண்ணாண விளக்கங்களும் உமக்குத் தெரியேலையே.

அவங்கள் துரோகவானொலி துரோகவானொலி நிப்பாட்டு எண்டு கத்துறாங்கள் இவர் என்னடாவெண்டா 6 வருசமா இன மத பேதமெண்டு இல்லாமல் இணைஞ்சிருக்கிறாராம் சீமான் 6 வருசமா அவங்கள் சொல்லுறது செய்யுறது தெரியாது இனைஞ்சிருக்கிறாரோ அல்லது குடுக்குற காசுக்கு நாக்கு வழிக்கிறாரோ அதுக்கை தன்ரை சகோதரம் புலியாம் ஆருக்கடா சுத்துறீங்கள் காதிலை பூ

வல்லை முனியார்...உங்கட தம்பி பீபீசி துரோகியோ தராகியோ நாம் அறியோம்....ஆனா உள்ள சிங்களவன்ர இந்துதுவாவின்ர ஏகாதபத்திய குரல்களின் தமிழ்தேசியம் தேசத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மறைமுகமாகச் சொல்லும் பரப்பும் பொய்ச்செய்செய்திகளை எல்லாம் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து போட்டார்...அப்பவே சொன்னம் தெரிஞ்சோ தெரியாமலோ செய்கிறார்கள்...கவனிக்கச் சொல்லியே தவிர...துரோகிகள் எண்டில்ல எண்டதை கொஞ்சம் முனியாட்டம் போடமா நிதானமாப் போய் எழுதினத திரும்பப்படிச்சுப் பாருங்கோ....எழுதினதொண்டும் ஓடிப்போகல்ல இங்கதான் கிடக்கு...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடுத்தது உப்படித் துரோகி துரோகி எண்டுதான்...மாறி மாறி... எத்தின பேரை ஒழிச்சுக்கட்டியாச்சு ..... ஆனா உண்மையான துரோகிகள ஒழிக்க முடிஞ்சதோ....கொஞ்சம் யதார்த்தமாப் பாருங்கோ...நியாயம் என்ற ஒண்டை விளங்கிக் கொள்ளுறவன் எப்பவும் துரோகியா இருக்க மாட்டான்....சந்தர்ப்ப சூழ்நிலையால் துரோகியா இருந்தாலும் அவனுக்கு அவன்ர தப்பை தெளிவாக உணர்த்தும் போது அவனே நியாயத்தைத் தேடிவருவான்....வேணும் எண்டா உந்த துரோகிப் பழிப்புகளைவிட்டு அவர்களையும் நல்வழிப்படுத்த ஏதாவது நாலு செய்யுங்கோ சொல்லுங்கோ பிரயோசனப்படும்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ganesh - 06-18-2004

தயவு செய்து கருத்தை எழுதுங்கோ வன்செயல்களை தவிருங்கள் நாங்கள் எல்லாம் உடன் பிறவா சகோதரர்கள் தற்போது சண்டையிடுவோம் பின்பு இணைவோம் பொறுத்திருங்கள் காலம் பதில் சொல்லும் தயவுசெய்து மீண்டும் வன்செயல்களைத்தவிருங்கள் மோகன் உங்களிடம் பணிவாக பேட்டுக்கொள்கிறேன் இனியும் வெட்டுவோன் குத்துவேன் என்று எழுதுவதை அனுமதியார்கள் ஏதாவது சம்வங்கள் நடந்தால் உங்கள்மீதுதானம் வீண்பழி சுமத்தப்படும் ஆகவே உடனடியாக இப்படி வன்செயல்களை
ஏற்படுத்தும் வார்த்தைகளை அகற்றிவிடுங்கள்


- vallai - 06-18-2004

அப்பு குருவி ஏதும் அறளை கிரளை பேர்ந்து போச்சோ அல்லது உவன் கணேஸ் ஏதேனும் தந்தவானோ அல்லது எங்கை உன்றை குட்டு வெளிச்சிட்டுது எண்டு ஒப்பாரியோ தெரியா அவனுக்கு ஒரு புத்தி சொல்லுவம் எண்டில்லை உந்த வானொலியிலை ஏன் இருக்கிறாய் எண்டு சேர்ந்து நிண்டு வக்காளத்து வாங்கிறீர்க் கருணா துரோகியெண்டதும் மற்றவர்களைத் துரோகியெண்டு கூசாமல் சொன்னதும் ஊருக்குபதேசம் உனக்கிலையடி எண்ட மாதிரியெல்லோ கிடக்கு

நீங்கள் சொன்னா துரோகி எண்டு பிற்பாட்டுப்பாடவேண்டும் உனக்கு ஏதேனும் ஆதாயமெண்டா கணெசையென்ன கருணாவையே தூக்கிப் பிடிப்பாய் போலிருக்கு தப்பு ஆர் செய்தாலும் தப்பெண்டு ஒத்துக்கொள்ளவேணும் இல்லாட்டி பார்க்கிறவன் சிரிப்பான் உதென்ன குருவி குத்துக்கரணம் அடிக்குதெண்டு