![]() |
|
சுவாரசியமான சம்பவங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சுவாரசியமான சம்பவங்கள் (/showthread.php?tid=6970) |
- kavithan - 07-19-2004 [u]<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 12</b></span> <img src='http://go2tamil.com/news/news110704_5.jpg' border='0' alt='user posted image'> <span style='font-size:25pt;line-height:100%'><b>100 </b>வயதுவரை வாழ்வதே இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதனைதான். ஆனால் இந்த 100 வயதிலும் இன்னொரு சாதனை படைப்பது என்பது அபூர்வமான விடயம். தென் ஆபிரிக்கரான Philip Rabinowitz என்பவர்100 மீற்றர் தூரத்தை 30.86 வினாடிகளில் ஓடி முடித்து, உலக சாதனையாளராகி இருக்கின்றார். இதன் மூலம் ஆஸ்திரிய நாட்டவரான Erwin Jaskulsi எனபவர் 36.19 வினாடிகளில முன்பு ஓடி முடித்த சாதனையை முறியடித்து இருக்கின்றார். தினமும் அப்பிள் சாப்பிடுவதும், தினசரி 7 கி.மீற்றர் தூரமாவது நடப்பதும், தன் ஆரோக்கியத்தின் இரகசியம் என்கிறார் இந்தத் தாத்தா. உலக வலம் வந்த ஒலிம்பிக் தீபம் சென்ற மாதம், தலைநகரான Cape Town வந்தபோது, இவரே தூக்கிச் சென்றிருக்கின்றார். சாதனைகளுக்கு வயதென்பது வரம்பில்லை என்பது உண்மைதான்.</span> நன்றி சூரியன் இணையம் - kavithan - 07-29-2004 <span style='font-size:30pt;line-height:100%'> <b> இதில் காணப்படுபவை வித்தியாசமான சம்பவங்கள் வாசித்து பாருங்கள்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </b></span> [u]<span style='font-size:25pt;line-height:100%'><b>அமெரிக்காவில் துகிலுரியபப்பட்ட இந்தியா? </b> </span> [size=16] Wednesday, 28 July 2004 அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு இணை அமைச்சர் ஸ்ட்ரோப் டொல்பொட் எழுதிய புத்தகம், இந்திய அரசியலில் வெடிகுண்டு வீசியிருக்கிறது. 'இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெர்ணாட்டோஸ், அமெரிக்கா வந்தபோது ஆடைகள் களையப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்" என்ற வரிகள் அந்தப் புத்தகத்திலிருந்து கிளம்பிய புயல். 'Engaging India - Diplomancy,Domocracy And The Bomb' என்ற பெயரில் டொல்பொட் எழுதியிருக்கும் அந்தப் புத்தகம், அடுத்த மாதம் வெளியாகப் போகிறது. அதிர்ச்சியூட்டும் பல விஷயங்கள் இதில் இருப்பதாக முன்கூட்டியே செய்தி பரவிவிட்டது. கார்கில் போர் உச்சகட்டத்தில் இருந்த சமயத்தில், அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன், இந்திய பிரதமர் வாஜ்பாயோடும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்போடும் பேசினார். அதைத்தொடர்ந்து சத்தமில்லாமல் போர் முடிவுக்கு வந்தது. இலங்கையிலிருந்து திரும்பும்போது நவாஸ் ஷெரீப் கைது செய்யப்படுவார்; ஆட்சிக்கவிழ்ப்பு நடக்கும்; முஷாரப் ஜனாதிபதியாவார் என்பதையெல்லாம் அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த்சிங் முன்கூட்டியே கணித்தார். செரீப்பைக் காப்பாற்ற முயன்றார். கார்க்கில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிவாங்கத் தான் முஷாரப்பின் கட்டளைப்படி இந்திய விமானம். ஆப்கானிஸ்தான் கந்தஹாருக்குக் கடத்தப்பட்டது. ஜ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைத்திருக்க வேண்டியது: பி.ஜே.பி அரசின் பிடிவாதத்தால் அது கிடைக்காமல் போனது என்று தன் புத்தகத்தில் இஷ்டத்துக்கும் ஏதேதோ போட்டுத் தாக்கியிருக்கிறார் டொல்பொட். டொல்பொட், இப்போது ஒஸ்பென் இன்ஸ்ட்டிடியூட்டில் கௌரவ பேராசிரியர். இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்காவிலிருந்து இவர் தலைமையில், அரசுகராக இருந்த ஸோர்ஜை சந்தித்தது.அதுபற்றி, தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் டொல்பொட்;. பாதுகாப்பு அமைச்சரிடம் நாங்கள் விடை பெறும் நேரம் அடுத்து அவரை சந்திக்க எத்தியோப்பிய தூதுக்குழு ஒன்று வந்துவிட்டது. எங்கள் குழுவிலிருந்து ஆர்வக் கோளாறான உறுப்பினர் ஒருவர், 'அடுத்து எப்போது அமெரிக்கா வருகிறீர்கள்?' என்று அமைச்சரிடம் கேட்க, இயல்பாக இருந்த அமைச்சரின் முகம் சிவந்துவிட்டது. 'இனிமேல் எப்போதும் அமெரிக்காவில் காலடி வைக்கமாட்டேன். அமைச்சர் என்றும் பார்க்காமல், அமெரிக்கக் குடியுரிமை அதிகாரிகள் விமான நிலையத்தில் என்னை நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்தனர். இரண்டுமுறை உங்கள் நாட்டில் இப்படி நடந்தது" என்று சொன்னார் ஜோர்ஜ். டொல்பொட் புத்தகத்தில் இப்படி கூறப்பட்டு இருப்பது பற்றி இப்போது ஜோர்ஜ் பெர்னாண்டஸிடம் கேட்கப்பட.... அவரும், அது உண்மைதான் என்று சொல்ல.. விவகாரம் நன்றாகவே பற்றிக் கொண்டிருக்கிறது. 2002ஆம் ஆண்டு துவக்கத்தில் ஒரு தடவை... 2003ல் பிரேஸில் போகும் வழியில் அமெரிக்காவில் இறங்கியபோது ஒரு தடவை. இருமுறை டல்லாஸ் விமான நிலையத்தில் நிர்வாணப்படுத்தி என்னைச் சோதித்தனர். இந்திய தூதரக அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி அமைச்சரான என்னைச் சோதித்தனர்.' என்று சொன்ன ஜோர்ஜ் நான் இதைப்பற்றி வாஜ்பாயிடம் முறையிட்டேன் என்று கூடுதலாக ஒரு தகவலையும் போகிற போக்கில் எடுத்துவிட்டார். அவ்வளவுதான். காங்கிரஸ் வகையாக இதைப் பிடித்துக் கொண்டுவிட்டது. 'கிரிமினல் அமைச்சர்களை நீக்கு" என்று நாடாளுமன்றத்தில் தங்களை வறுத்தெடுக்கும் பி.ஜே.பி-யைச் சமாளிக்க பிடி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த காங்கிரஸ், இந்த விஷயத்தை இவ்வளவு நாள் மறைத்து வைத்து ஜோர்ஷம், வாஜ்பாயும் இந்தியாவை அவமானப்படுத்திவிட்டார் என்று கொந்தளித்து எழுந்துவிட்டது. ஜோர்ஜின் சொந்தக் கட்சியான ஜக்கிய ஜனதாதளம் கட்சிக்குள்ளேயே குட்டிக் கலகம் உண்டாகிவிட்டது. இந்த விஷயத்தை மறைத்ததின் மூலம் இந்தியாவின் மரியாதையை ஜோர்ஜ் குலைத்து விட்டார். இது தனிப்பட்ட அவருக்கு நேர்ந்த அவமானம் இல்லை கோடிக்கணக்கான இந்திய மக்களின் பிரதிநிதியாக போனபோது அவமானப்பட்டு இருக்கிறார். இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர வைத்ததாக வாஜ்பாய் மார்தட்டிக் கொண்டது இதைத்தானா? இதை வெளியில் சொல்லி, முறைப்படி கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று சீறி இருகிறார் அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரமுகரான பிரபுநாத் சிங். இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்கும்போது இப்படியெல்லாம் நடக்குமா? அமைச்சர் என்ற முறையில் ஜோர்ஜ் இராஜதந்திரிக்குரிய கடவுச்சீட்டில்தான் பயணித்திருப்பார். இந்தரக கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களிடம் எந்ந நாட்டு விமான நிலையத்திலும் கெடுபிடி காட்டமாட்டார்கள். அதிலும் ஒரு அமைச்சரை நிர்வாணமாக்கியிருப்பார்களா? என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி, இந்த விஷயத்தில் லேசாக வாய்திறக்க, அதுவும் பலருக்கும் அவல் ஆகிவிட்டது. 'ஜோர்ஜ் இதுபற்றி என்னிடம் சொல்லவில்லை அமெரிக்கா போனால், ஷீவையும், சொக்ஸையும் மட்டும் கழற்றச் சொல்வார்கள். அது வழக்கமான நடைமுறைதான். ஜோர்ஜ் இதை மிகைப்படுத்தி நிர்வாணம் என்கிறாரோ என்னவோ?' என்றார் அத்வானி. இதையும் தன்னுடைய குரலுக்கு சார்பான விஷயமாக ஆக்கிக் கொண்ட காங்கிரஸ், ஜோர்ஜை மட்டும் குறிவைத்து அமெரிக்காவில் ஏன் சோதித்து அவமானப்படுத்தினார்கள்? இதுபற்றி இப்போது அரசு விசாரித்து, நடந்த விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விவகாரத்தை மேலே மேலே கொண்டுபோகத் தொடங்கிவிட்டது. விஷயம் இப்படிப் பரபரப்பாக போன நிலையில், 'இது விஷயமாக ஜோர்ஜ் என்னிடம் எதுவும் சொல்லவில்லை" என்று மிகத் தாமதமாக வாஜ்பாய் வாய் திறக்க.... ஜோர்ஜூம் தடாலடியாக பல்டி அடித்து, என்னை நிர்வாணப்படுத்தவில்லை. கோட் மற்றும் ஷீக்களை கழற்றச் சொன்னார்கள். கைகளைத் தூக்கச் சொன்னார்கள் என்று சொல்லியிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து அண்மையில் இந்தியா வந்த பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், இந்த விஷயம் குறித்து, டெலிபோன் மூலம் ஜோர்ஜிடம் மன்னிப்புக் கேட்டிருப்பதோடு விஷயம் நிற்கிறது. வாஜ்பாஸ் பிரதமாராகவும், ஜோர்ஜ் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த காலத்தில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் இந்தியா வந்தார். அப்போது அவரை மட்டுமில்லை, அவரது பாதுகாப்பு பணிக்காக வந்த மோப்ப நாய்களைக்கூட இந்திய விமான நிலையத்தில் பரிசோதிக்கவில்லை. இந்த விவகாரங்கள் இப்படியிருக்க அண்மையில் அமெரிக்கா சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பியான சம்பந்தனுக்கும் இந்த மாதிரியான ஒரு அனுபவம் ஏற்பட்டதாக உத்தியோக பூர்வமற்ற தகவலொன்று தெரிவித்தது. சம்பந்தன் எம்.பி.டள்லஸ் விமான நிலையத்திலிருந்து டொரண்டோவுக்கு செல்லும் போது அமெரிக்கக் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் சுமார் மூன்று மணிநேரம் சோதனை என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டார் என்று அந்தச் செய்தி மேலும் தெரிவித்திருந்தது. இந்தத் தகவல் குறித்து வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது: சம்பந்தன் எம்.பி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு வந்துள்ளார் என்பது குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் தான் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டதாக சம்பந்தன் எம்.பி.தம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை என்று விமானநிலையத்தில் இப்படியான அசௌகரியங்களை எதிர்கொண்டால் இலங்கைப் பயணிகள் உடனடியாக இலங்கைத் தூதரகத்துடன் தொடர்புகொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தூதரகப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். பரதன் வீரகேசரி சூரியன் இணையம் - tamilini - 07-29-2004 Quote:அமெரிக்காவில் துகிலுரியபப்பட்ட இந்தியா? இதை சுவாரசியம் என்று சொல்ல முடியல....! எப்படி என்று சொல்லுறது என்றும் தெரியல...! - kuruvikal - 07-29-2004 அமெரிக்கா ஏகாதபத்தியத்தோடு கைகுலுக்க நிற்கு இந்திய வல்லாதிக்கத்துக்கு இதுகும் வேணும் இன்னும் வேணும்....! :twisted: - tamilini - 07-29-2004 kuruvikal Wrote:அமெரிக்கா ஏகாதபத்தியத்தோடு கைகுலுக்க நிற்கு இந்திய வல்லாதிக்கத்துக்கு இதுகும் வேணும் இன்னும் வேணும்....! :twisted: என்ன குருவிகளே அடுத்தவன் தலைகுனிவில் இப்படி சந்தோசமோ......! - kavithan - 07-29-2004 tamilini Wrote:Quote:அமெரிக்காவில் துகிலுரியபப்பட்ட இந்தியா? <b>வித்தியாசமான சம்பவங்கள்</b> என்று தானே சொன்னேன் :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 07-29-2004 அவையள் இரண்டு பேரும் எங்கட தலையையே குழிக்க போட நிக்கேக்க... அவை ஒருத்தர ஒருத்தர் குட்டுப்பட்டு...தலை குனியுறது நமக்கு வேடிக்கைதானே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-29-2004 அப்படியா அப்ப சரி... வேடிக்கை பாருங்கோ...! - tamilini - 07-29-2004 Quote:வித்தியாசமான சம்பவங்கள் என்று தானே சொன்னேன்சுவாரசியமான சம்பவங்கள் என்ட தலைப்பிற்கு கீழ் இருந்திச்சா அது தான் கேட்டேன்... தம்பி - kavithan - 07-29-2004 அதற்கு கீழ் சம்பவம் ஒன்று ..இரண்டு என வகை படுத்தி இருந்தேன் ஆனால் இதற்கு தனி தலைப்பை கொடுத்திருக்கிறேன்..ஆனாலும் kavithan Wrote:சம்பவம் 2 இது சுவாரசியம் என்றால்....... மற்றதும் சுவாரசியமானது தான்.. - tamilini - 07-29-2004 அப்படியா அப்பசரி......! - kavithan - 08-02-2004 [u]<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 13</b></span> [u] <b><span style='font-size:23pt;line-height:100%'>திருமணத்துக்கு வழங்கிய பரிசை மீளப்பெறப் பொலீஸாாிடம் புகார் </b></span> <span style='font-size:25pt;line-height:100%'><b>பெ</b>ண்ணொருவர் கடந்த இரண்டு ஆண்டுக ளுக்கு முன்னர் அயல் வீட்டில் இடம்பெற்ற திருமணத்தின்போது தம்பதிக்கு வழங்கிய திருமணப் பரிசை மீளப்பெற்றுத் தருமாறு பொலீஸாரிடம் கோரியுள்ளார். கொழும்பு கட வத்தைப் பகுதியில் இந்த விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2002 ஆம் ஆண்டில் அயல் வீட்டில் நடந்த திருமண வைபவத்துக்கு பிரஸ்தாப பெண் ணுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. திருமணத் துக்குச் சென்ற அவர் மணமக்களுக்குத் தனது பரிசாகக் கண்ணாடிக் குவளைகள் கொண்ட பெட்டியைப் பரிசளித்துள்ளார். அண்மையில் இந்த இரு தரப்பினருக்கு மிடையே வேலித் தகராறு இடம்பெற்றது. அதைத் தொடர்ந்தே திருமணத்தின்போது தாம் வழங் கிய திருமணப் பரிசைத் திரும்பப் பெற்றுத் தருமாறு அந்தப் பெண், பொலீஸாரிடம் கோரி யுள்ளார். பொலீஸார் இரு தரப்பினரையும் பொலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பரிசை வாங் கிய பெண் அப்போது ரூபா 150 பெறுமதி கொண்ட கண்ணாடிக் குவளைகள் அடங்கிய பெட்டி யொன்றைப் பொலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தார். ஆனால் அதுதான் வழங்கிய பரிசுப்பொருள் அல்ல என்று மற்றப் பெண் தெரிவித்தார். தாம் ரூபா 350 பெறுமதியான கண்ணாடிக் குவளைகள் அடங்கிய பெட்டியையே பரிசளித் தார் என்று அப்பெண் கூறினார். பின்னர் அயல் வீட்டுப் பெண் மேற்படிப் பெண்ணுக்கு 350 ரூபாவை வழங்கியதையடுத்துக் கடவத்தைப் பொலீ ஸார் இந்தத் திருமணப்பரிசு விவகாரத்தை ஒரு வாறு முடித்துவைத்தனர்.</span> - vasisutha - 08-02-2004 இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால்.. யாரும் பரிசுப் பொருட்களை வாங்காதீர்கள் என்பது தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-02-2004 இல்ல... வாங்கிங்க திருப்பிக் கொடுக்கக் கூடியதா வாங்கிங்க.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-02-2004 வாங்கினால் அதை யார் தந்தார்கள் என்று எழுதிபோட்டு அப்படியே வையுங்கள்.. ஞாபகமாய் இருக்கட்டும் கேட்டாலும் திருப்பிக்கொடுக்கலாம்..என்ன இது உலகம்.. 2 ஆண்டுகளின் முன் கொடுத்த பரிசு பொருளை திருப்பி கேட்குதுகள்... - kuruvikal - 08-02-2004 உது கண்டாக்களட்டையும் வாங்கிறவைக்குத்தான் பிரச்சனை... வாங்கினா ஒராளட்ட வாங்கிப் போட்டு ஆயுள் முழுக்க கேக்கக்கேக்க கொடுத்துக் கொண்டே இருக்கலாமே... லிஸ்டும் தேவையில்ல றிஸ்கும் தேவையில்ல கோட்டும் தேவையில்ல சூட்டும் தேவையில்ல....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-02-2004 Quote:உது கண்டாக்களட்டையும் வாங்கிறவைக்குத்தான் பிரச்சனை... வாங்கினா ஒராளட்ட வாங்கிப் போட்டு ஆயுள் முழுக்க கேக்கக்கேக்க கொடுத்துக் கொண்டே இருக்கலாமே... லிஸ்டும் தேவையில்ல றிஸ்கும் தேவையில்ல கோட்டும் தேவையில்ல சூட்டும் தேவையில்ல....!அப்படியா...? கேக்க கேக்க எப்படி கொடுக்க முடியும்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 08-02-2004 ஒராளுக்குத்தானே அதுவும் சொந்தாளுக்குக் கேக்கக்கேக்க கொடுக்க மனசென்ன மாட்டேன் என்றா சொல்லும்.... கொடுக்கேக்க தெரியும்... வாங்கிறவங்களுக்கு எப்படி கேக்கக்கேக்க கொடுக்கிறாங்க என்று....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-02-2004 Quote:ஒராளுக்குத்தானே அதுவும் சொந்தாளுக்குக் கேக்கக்கேக்க கொடுக்க மனசென்ன மாட்டேன் என்றா சொல்லும்.... கொடுக்கேக்க தெரியும்... வாங்கிறவங்களுக்கு எப்படி கேக்கக்கேக்க கொடுக்கிறாங்க என்று....! அப்படியா கொடுத்து கொடுத்து அனுபவமோ..! - tamilini - 08-02-2004 அப்ப சரி......! |