Yarl Forum
அழகான களத்தை அசிங்கம் பண்ணலாமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: அழகான களத்தை அசிங்கம் பண்ணலாமா??? (/showthread.php?tid=6933)

Pages: 1 2


- Eelavan - 07-17-2004

நன்றி இளங்கோ மட்டுறுத்தினர் என்ற அளவில் இல்லாமல் சக கருத்தாளர் என்ற முறையில் உங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கு.

இங்கு நீங்கள் எப்படியோ அப்படித்தான் மயூரனும் எனக்கு சக கருத்தாளர். அவரோடு முன்னமே களத்தில் இருந்தவர் என்ற முறையில் உங்களுக்கு நிறைய விடயங்கள் ஒவ்வொருவர் எழுத்து கருத்து வெளிப்படுத்தும் முறையில் உள்ள வேறுபாடுகள் தெரிந்திருக்கும்.

ஆனால் மயூரன் சொன்னதில் உள்ள ஒரு விடயம் அதாவது தலைப்புக்குச் சம்பந்தமாக கருத்துகள் இல்லாமற் போனது பல தடவை நடந்து வெட்டல்கள் தூக்கல்கள் அதனால் மட்டுறுத்தினருடன் வாக்குவாதங்கள் நடந்துள்ளன எனக்கு அதுமட்டும் தான் தெரியும்.சிலவேளைகளில் கருத்துத் திசைமாறிப்போவதற்கு பலவழிகளில் நானும் காரணனாக இருந்திருக்கிரேன் அந்த வகையில் சுயவிமர்சனம் ஒவ்வொருத்தரும் செய்துகொள்ளுவது நன்று என்று சொன்னேன்.

வேண்டுமானால் களத்தில் ஒருவர் பச்சைத் தூஷணத்தில் எழுதியதை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் எவ்வளவு தூரம் மட்டுறுத்தினர்களால் அதனைத் தடுக முடியும் அரைமணிநேரமே அந்தக் கருத்து களத்தில் இருந்தாலும் அந்த நேர இடைவெளியில் களத்துக்கு வரும் பலரது விசனத்தை அது பெற்றிருக்கும்.

இது எங்கள் களம் யாரோ ஒருவரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்-எங்கள் உறவுகளுக்கிடையில் உறவுப்பாலம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட களம் என்ற சிந்தனையில் ஒவ்வொருத்தரும் தாங்கள் எழுதுவதை சுய தணிக்கை செய்துகொண்டால் நல்லது அதனைத் தான் சொன்னேன்.மற்றும் படி குருவிகளால்தான் குழப்பம் என்று நான் சொல்லவில்லை அது குருவிகளுக்கும் தெரியும்


- kuruvikal - 07-17-2004

எமது கருத்தின் நோக்கம் ஆர்வத்துடன் கருத்தாட வந்த மயூரன் மீது குற்றம் சுமத்துவதல்ல.... வந்ததும் வராததுமாய் அவரின் பழைய பாணியிலையே.... கண்டிக்க வேண்டும் அல்லது குறைபிடிக்க வேண்டும் என்பதிலும் பார்க்க குறைகளை சுட்டிக்காட்டுதலும் நிவர்த்திக்கான வழிகளை முன்வைத்தலுமே பரிசீலனைகள் மூலம் குறைகள் விரைந்து நிவர்த்தியாக வழிசெய்ய முடியும்... வெறுமனவே அங்கு குறை இங்கு குறை அது அசிங்கம் இது அசிங்கம் என்பதால்...அந்த அசிங்கங்கள் அங்கங்கிருந்து அகன்றா விடும்.....அசிங்கத்தைச் துப்பரவு செய்ய தானும் மற்றவரும் முயல வழி சொல்வதே அல்லது செய்து காட்டுவதே திறமை....அதுவே களம் களமாக இருக்க உறுதுணையாகும்... என்பது எமது பார்வை....அவ்வளவும் தான்...!

இது தொடர்பில் மயூரன் இளங்கோ ஈழவன் மற்றும் அனைவரதும் கருத்துக்களை கள அங்கத்தவர்கள் எல்லோரும் கருத்தில் எடுத்துக் கொண்டு களம் பற்றிய பொது விமர்சனங்கள் எந்த வகையில் உள்ளது என்பதை அறிந்து கொண்டு கருத்தாட முனைவதும் களத்துக்கு நல்லதுதானே.....!

களத்தில் கருத்தாடும் எமக்குத் தெரியாத தவறுகளை களத்துக்கு வெளியே வாசகனாக இருப்பவர்கள் கண்பதற்கு சந்தர்ப்பம் அதிகம் அந்த வகையில் மயூரனின் கருத்துக்களையும் நோக்குவோமே இளங்கோ அவர்களே....!


அனைவருக்கும் வணக்கம்! - Mayuran - 07-18-2004

அனைவருக்கும் வணக்கம்!

நான் கூற நினைத்தவற்றில் பலவற்றை ஈழவன் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். அதனால் அவற்றை விட்டுவிட்டு விடயத்துக்கு வருகிறேன். நான் கடந்த காலங்களில் கருத்து எழுதாதுவிட்டிருந்தாலும் களத்தை அதிகமாக பார்த்து வந்த பார்வையாளன் என்ற வகையிலும் களத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன் என்ற வகையிலும் என் கருத்தக்களை முன் வைக்க நினைக்கின்றேன்.

வந்ததுக்கு ஏதாவது கூறவேண்டும் என்பதற்காகவோ? குறை கூறவேண்டும் என்பதற்காகவோ இத் தலைப்பை நான் தொடுக்கவில்லை. இது போன்ற விடயங்களால்த்தான் நான் இதுவரைகாலமும் கருத்தெழுத வராமல் விட்டிருந்தேன்.

இன்று மட்டுறுத்துனர்களால் இக் களத்தில் நீக்கப்பட்டுள்ளது என சிவப்பு நிற எழுத்தால் குறிப்பிடப்பட்டு நீக்கப்பட்ட விடயங்கள் எல்லாம் உண்மையிலேயே தேவையான அல்லது தலைப்புக்குப் பொருத்தமான கருத்துக்கள்தானா? இளங்கோ பதில்தேவை?

இவற்றில் சில கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாகவும் மட்டுறுத்துனர்களால் கவனிக்கப்படாமல் அல்லது அவர்களின் நேரமின்மையால் நீக்கப்படாது விடப்பட்டிருந்தது. (அவற்றை கருத்தெனக் கூறமுடியாது) அப்படிப்பட்ட அசிங்கங்கள் பலவற்றை பார்க்கும் துன்பியல் நிலை எனக்குக் கிட்டியது. என் நண்பர்கள் பலருக்கு யாழ் கருத்துக்களத்தை அறிமுகஞ் செய்து வைத்து கருத்துக்களை எழுதத் து}ண்டியிருக்கிறேன். அவர்களில் பலர் இப்படியான விடயங்களைப் பார்த்துவிட்டு து}ஷணம் பழகவா இந்தக் களத்தின் முகவரி தந்தாய் என என்னைக் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரங்களின் நான் மிகவும் வேதனைப்பட்டதுண்டு. இவை பின்னர் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நீக்கப்படும் வரை நு}ற்றுகணக்கான பார்வையாளர் அவற்றைப் பார்த்துத்தானிருக்கிறார்கள். இது போன்ற விடயங்களை எழுதுபவர்கள் நிச்சயமாக பிழையானவை என்பதை அறிந்துதானிருப்பார்கள். ஏனெனின் எவரும சிந்தனா சக்தி இயங்காமல் இங்கு எழுத வரவில்லை.

இவர் இப்படி எழுதினார் என அந்த ஒரு சிலரின் பெயர்களை நான் குறிப்பிட்டிருந்தால் இந்தத் தலைப்புக் கூட இப்பொழுது தலைப்புக்கு பொருத்தமில்லாத அசிங்கங்களைத் தாங்கியிருக்கும் என்பதில் எவருக்கும் மறுப்புக் கருத்த இருக்காது என எண்ணுகின்றேன்.

இளங்கோ கூறியிருந்தீர்கள் மற்றவர்களின் கருத்தை மலசலகூடத்தோடு ஒப்பிட்டது தவறென்று. உண்மைதான் நான் இங்கே குறிப்பிட்டவற்றை கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. மலசலகூடத்தை விட இழிவான சொல் எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அதைத்தான் நிச்சயமாக எழுதியிருப்பேன்.(களத்தின் நாகரீகம் கருதி விட்டுவிட்டேன்.)

நாம் முன் வைக்கும் கருத்துக்கள் ஆக்கப10ர்வமானவையாகவும் அறிவை வளர்ப்பவையாகவும் இருத்தல் வேண்டும். இதுதான் என் ஆவல்.


- kuruvikal - 07-18-2004

சரி அவதானிப்போம் அவதானம் ஆவோம்....! இதில் விதிவிலக்குகள் என்று எவரும் இல்லை.... தவறு செய்யாதவனாய் இறைவனே இல்லை....! எனவே எவரும் தாம் உயர்ந்தவர் என்று பறைசாற்றவும் முடியாது மற்றவன் தாழ்ந்தவன் என்று தள்ளி வைக்கவும் முடியாது... சூழ்நிலைக்கேற்ப தவறுகள் விட்டவர்கள் திருந்த வழிகாட்டி சந்தர்ப்பம் அளிப்பதே சிறப்பு... அன்றி மற்றவரின் தவறின் மேல் தன்னை தூயவனாகக் காட்ட எண்ணுவது ஒன்றும் திறமை அல்ல.... அவர்களும் குற்றம் விளைவிக்கக் கூடிய சந்தர்ப்பங்களைக் கையாளும் விதங்களைக் கொண்டு தான் அதை தீர்மானிக்க முடியும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே...அது ஆண்டவன் செய்தால் என்ன சாதாரண மனிதன் செய்தால் என்ன..???! குற்றம் செய்ததற்காய் மற்றவனை மலசலகூடத்தில் போட எனக்குத் தகுதி இருக்கா என்று பார்ப்பது நலம்....இறைவனே குற்றவாளியாக இருந்ததாக காட்டப்படுவது... மனித சமூகத்திற்கு ஒரு உண்மையைச் சொல்லத்தான்... குற்றம் என்பதை அறியாமலே நீ குற்றம் செய்திருப்பாய்....எனவே குற்றம் என்று ஒன்று உணக்கு உணர்த்தப்படும் போது அதை அறிந்து உள்வாங்கக் கற்றுக் கொள் என்பதே.... அப்படி குற்றத்தை அறிந்து ஆய்ந்து உள்வாங்க்கிக் கொள்பவன் கண்ட இடத்திலும் மீண்டும் அதே குற்றம் இழைக்கமாட்டான்....! Idea

அதேபோல் வெளியில் இருந்து விமர்சிப்பவன் எல்லோரும் சுத்தவாளியும் கிடையாது ஆனால் சந்தர்ப்பவாதியாக இருக்கலாம்.....?????! அவர்களின் கருத்தைக் கவனிக்க வேண்டும்... கவனித்துக் களைய வேண்டியதைக் களைய வேண்டும் ஆனால் அதுவே வேதம் என்று அப்படியே ஏற்றுக்கொள் என்று யாருக்கும் புகட்ட முடியாது......வேண்டும் ஆனால் சிந்திக்க கொடுக்கலாம் ஒரு கருவாய்......! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 07-18-2004

எழுதுபவர்கள் எவரது கருத்தையும் காணவில்லை.... நீங்கள் மட்டும் எழுதிக்கொண்டே இருக்கிறீங்கள்...... ஓ வாசிப்பார்கள் தானே.......!


- vasisutha - 07-19-2004

திரும்ப வந்த மயுரனை துரத்திப்போட்டீங்களா? :roll:


- Mayuran - 07-21-2004

vasisutha Wrote:திரும்ப வந்த மயுரனை துரத்திப்போட்டீங்களா? :roll:

வசிசுதா!

நான் யார் துரத்தினாலும் திரும்பிப் போறேல்லை எண்டுற முடிவோடைதான் வந்திருக்கிறன்.


- kuruvikal - 07-21-2004

vasisutha Wrote:திரும்ப வந்த மயுரனை துரத்திப்போட்டீங்களா? :roll:

வசி சும்மா கதைவிட்டு... கதை பிடுங்கிறியள் போல...! நடக்கட்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->