![]() |
|
நலமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நலமா? (/showthread.php?tid=667) |
- வர்ணன் - 03-04-2006 நன்றி தல. ஆகா ஆரம்பிச்சிங்களா? சரி உங்க கவிதயை நானும் முயற்சி பண்ணுறன் [b]முகிலாய் எழுந்து மழையாய் விழுந்தோம்! மழையாய் விழுந்து பயிராய் எழுந்தோம்! பயிராய் எழுந்தே விதையாய் ஆனோம்! விதையாய் புதைந்து மீண்டும்- செடியாய் ஆனோம்! திரும்பி பார்க்கிறோம் கவி புறப்பட்ட இடத்தில் ! வாழ்க்கை ஒரு வட்டம்! சொன்னால்-தரணியில் உள்ளவர் கேட்கிறாரா இந்த தல கேட்க? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Snegethy - 03-04-2006 ஆகா.....தல வர்ணன் கவிதை மிகவும் நல்லாயிருக்கு. - வர்ணன் - 03-04-2006 Snegethy Wrote:ஆகா.....தல வர்ணன் கவிதை மிகவும் நல்லாயிருக்கு. சினேகிதி தல செய்த வேலையை பார்க்கேக்க எனக்கு ஒரு விடயம் கிளிக் பண்ணிச்சு கதை பகுதியில செய்யுறது போல - கவிதை பகுதிலயும் ஆர்வமுள்ளவங்க - இப்பிடி - ஒருவர் தலைப்பை இன்னொருவர் தொடரகூடாதா? :roll: :roll: சுவாரசியமா இருக்கும் எண்டு நினைக்கிறேன்! 8) - Snegethy - 03-04-2006 சுவாரிசயமாத்தானிருக்கும் வர்ணன்....கவிதை எழுதத் தெரிஞ்ச ஆக்களுக்கு.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->எதுக்கும் தொடக்கி வையுங்கோ நானும் எழுத முயற்சி செய்யுறன். - வர்ணன் - 03-04-2006 ஆஹா அதுக்கு என்னையே மாட்டி விடுறதா? சரி முயற்சிப்பம்! <b>மூன்றெழுத்து கனவுதான்! முடிவென்பது யாரும் கண்டதில்லை! பிறப்பிலிருந்து இறப்பு வரை இதை நழுவி சென்றவர் எவருமில்லை! கனவு வென்றால் பச்சை வயல் - தோற்றால் உன் விழிமேல் பூத்த எருக்கலம் பூ...</b> தொடருங்கள் சினேகிதி 8)
- RaMa - 03-04-2006 தல வர்ணன் இரண்டு கவிதைகளும் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள். வர்ணன் நல்ல முயற்சி. ஆனால் அடுத்து தொடங்குபவர் எதை கருவாக வைத்து தொடங்க வேண்டும் என்று சொன்னால் முயற்சி செய்ய சுகமாக இருக்கும் என்பது எனது கருத்து - வர்ணன் - 03-04-2006 அடுத்து தொடங்குபவர் -ஒருவர் முடிக்கும் வரில இருந்து ஆரம்பிப்பதுதான் ரமா-! கரு- தலைப்பை ஆரம்பித்தவருக்குதான் சொந்தம்! யாராவது இப்பிடி முயற்சி எடுத்தால் நானும் பங்கு கொள்கிறேன் -! 8) - Snegethy - 03-04-2006 வர்ணன் எருக்கலம் பூவைப்பற்றி ஒன்றும் தெரியாதெனக்கு.....வேற மாதிரி தொடங்கவா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கரு காதலா?
- வர்ணன் - 03-04-2006 என்ன சினேகிதி :? ஒருவர் முடிக்கும் வரில அடுத்தவர் - கவிதை தலைப்பை ஆரம்பிக்கணும் என்று இல்லையே- தல எழுதினத பாருங்க அதே போல உ_ம்: மல்லிகையே மூச்சு விடு உன் மெளனத்தை விட்டு தள்ளு -என்று ஒருவர் ஆரம்பித்தால்- நீங்கள் தள்ளி தள்ளி போகிறாய் - நீ மெல்ல மெல்ல சாகிறேன் நான் - இப்பிடி ஆரம்பிக்கலாம்- நான் நினைக்கிறேன் - ஒருவர் முடித்த வரியை தலைப்பாய் கொண்டு ஆரம்பிக்கணும் என்று நீங்க நினைச்சு இருக்கிங்க போல - அப்பிடி இல்ல வரியை -!! :roll: - Snegethy - 03-04-2006 நான் அரட்டைப் பேர்வழி நீ அமைதியா அடாவடி பண்றாயே :oops: - Snegethy - 03-04-2006 நான் என்று தொடங்கி முயற்சித்தேன் வர்ணன்.....சரியா வராதாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வர்ணன் - 03-04-2006 இல்ல நீங்க எழுதினது சரி - நான் அரட்டைப் பேர்வழி நீ அமைதியா அடாவடி பண்றாயே -இப்பிடி தொடர்ந்தேன் - என்னென்று என்னை நினைத்தாய் என்னிதயம் உனக்கு அடகு கடையா என்ன? - Thala - 03-04-2006 <b>என்னென்று என்னை நினைத்தாய் என்னிதயம் உனக்கு அடகு கடையா என்ன?</b> இருந்தாலும்.. வட்டிக்கடையில் பத்தரை மாற்று உன்னை அடகாய்வைத்து அன்பை குட்டியாய் போடுவேன்.! வர்ணன். கவிதை தொடர்வதற்கு வசதியாய் கேள்வியோடோ இல்லை தொடராய் அமைவது போலவோ வரவேண்டுமா...?? இல்லை வந்தால் நண்றாக இருக்குமானால். என் வரிகளை சிறிது மாற்றுங்கள்...... :!: - Jenany - 03-04-2006 ம்ம்...நல்ல முயற்சிதான் தொடருங்கள்...... - RaMa - 03-04-2006 [quote="Thala"]<b>என்னென்று என்னை நினைத்தாய் என்னிதயம் உனக்கு அடகு கடையா என்ன?</b> இருந்தாலும்.. வட்டிக்கடையில் பத்தரை மாற்று உன்னை அடகாய்வைத்து அன்பை குட்டியாய் போடுவேன்.! அன்பை குட்டியாய் தான் நீ தருவாய்? வட்டியும் முதலுமாய் சேர்த்து தருகின்றேன் தந்திடு உனது இதயத்தை! - ப்ரியசகி - 03-04-2006 குழப்புவதாக நினைக்காதீர்கள்.. கலாப காதலன் படத்தை பார்த்த பின் நானும் இப்படி ஒன்று தொடங்கலாமா என்று நினைத்தேன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் தொடங்கி விட்டீர்கள்..ஏன் இதற்கு தனியாக ஒரு பகுதி அமைக்க கூடாது? அப்போ நிறைய பேர் பங்கு பற்றும் வாய்ப்பு இருக்குமல்லவா? :roll: :roll: :roll: - ப்ரியசகி - 03-04-2006 RaMa Wrote:[quote=Thala]<b>என்னென்று என்னை நினைத்தாய் [b]தந்து விடுகிறேன்.. இதயத்தை.. ஆயுள் வரை... வட்டி செலுத்துவாயானால்...! - Thala - 03-05-2006 எல்லாரது முயற்சியிலும் இதுவரை வந்ததை தொகுத்து....<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [b]மல்லிகையே மூச்சு விடு உன் மெளனத்தை விட்டு தள்ளு தள்ளி தள்ளி போகிறாய் - நீ மெல்ல மெல்ல சாகிறேன் நான் நான் அரட்டைப் பேர்வழி நீ அமைதியா அடாவடி பண்றாயே என்னென்று என்னை நினைத்தாய் என்னிதயம் உனக்கு அடகு கடையா என்ன? இருந்தாலும்.. வட்டிக்கடையில் பத்தரை மாற்று உன்னை அடகாய்வைத்து அன்பை குட்டியாய் போடுவேன்.! அன்பை குட்டியாய் தான் நீ தருவாய்? வட்டியும் முதலுமாய் சேர்த்து தருகின்றேன் தந்திடு உனது இதயத்தை! தந்து விடுகிறேன்.. இதயத்தை.. ஆயுள் வரை... வட்டி செலுத்துவாயானால்...! சோர்ந்து விள உன் தோழும் தூக்கிவிட உன் மொழியும். இனாமாகத் தருவாயா.? பணத்துக்கு அதை வாங்கிவிட படுபாவி அல்லவே நான். - வர்ணன் - 03-05-2006 <b>ஆதவன் மறையும் பொழுதில் என்னுள் உதிக்கிறாய்! அனலென்றே ஆகி நெஞ்சை எரிக்கிறாய்! பேசடி கிளியே கொஞ்சம் என்னை பிடிக்காதா? ஏதெனினும் சொல்லு ஏங்குதடி நெஞ்சு! வாசமலரே நில்லு! என் வாழ்வழிதா? எட்டு நிறத்தில் என் இதயம் இல்லயடி உன்னை பார்த்த நாள் முதலாய் பைங்கிளியே இருக்கும் இதயமும் எனக்கு சொந்தம் இல்லையடி! கடலில் காய்ந்த நிலவென்றாகுமோ? வாழ்வு காட்டில் பெய்த மழையென்றாகுமோ?</b>
- வர்ணன் - 03-05-2006 ப்ரியசகி Wrote:குழப்புவதாக நினைக்காதீர்கள்.. ப்ரியசகி சொல்வது- உண்மை! இந்த தலைப்பில் எழுதியவர்கள் வரிசையில்- கவிதை என்ற ரீதியில் நீங்கதான் மூத்த உறுப்பினர் - என்று நினைக்கிறேன் !- சரியோ தெரியல - நீங்களே - ஒரு தலைப்பை ஆரம்பிக்கலாம் என்பது என் எண்ணம்- ! மற்றவர்கள் கருத்தையும் அறியணும்-! இதால நல்லா நாங்க எழுதுறமோ இல்லையோ - நாங்களும் எழுதி பார்த்தா என்ன என்று - இதுவரை முயற்சி எடுக்காதவர்களுக்கு - ஒரு ஆர்வத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன் -! 8) |