Yarl Forum
கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள் (/showthread.php?tid=6438)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


- tamilini - 11-14-2004

Quote:இப்ப ஏன் உதைப் பெரிசாக்கிறியள்.. பிறகு கிறைம் வோட்சில அடையாளம் காணப் போட்டிடுவாங்கள்...! ஏன் குருவிகள் உயிரோடு இருக்கிறது பிடிக்கல்லையா...!
_________________

பறந்திட மாட்டியள் நிங்க தான் குருவியாச்சே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Sriramanan - 11-14-2004

Quote:என்னதான் மழுப்பினாலும் கனடாவில் நம்மாக்கள் குழப்படி கூடத்தான்... ஒற்றுமையில்லாத தன்மை... தற்பெருமை பேசுறது.. அதற்காயே வாழ்வது... சாதிப்பிரிவினைகள்... கோஷ்டி மோதல்கள்... சந்தியில் சண்டித்தனம்...பெண்களை இரண்டாந்தரப் பிரஜைகளாய் நடத்துவது..
குருவிகளே நீங்கள் சொல்வதில் கோஸ்டி மோதல் சந்தியில் சண்டித்தனம் ஆகியவைதைான் கனேடிய தமிழ் இளைஞர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. மற்றயவை எல்லாம் ஊரிலிருந்து வந்தவை. சாதிப் பிரச்சினையோ அல்லது சாதிப் பாகுபாடோ இங்கே தமிழ் இளைஞர்களிடம் அறவே கிடையாது.


- kuruvikal - 11-15-2004

அப்ப சாதியம் இல்லை என்றீங்க.... அப்ப எந்த அடிப்படையில கோஷ்டிகள் உருவாகுது...????! பல்கலைகழகங்கள் அடிபடையிலா... இல்ல... சில பல்கலைக்கழக இணையத்தளங்களப் பார்த்தா அன் ஒவீசியலா பல தளங்கள் பல்கலைக்கழகங்களின் பெயரில் அரைகுறைத் தமிழ் தெரிந்த... ஆங்கிலப் புலமைவாதிகளால் ஏட்டிக்குப் போட்டியா நடத்தப்படுகிறது தெரிகிறது அதுதான்....???! :wink:

பிறகு சொல்லாதேங்க ஆங்கில மொழி ஆதிக்கத்துக்கு கீழேயும் மாணவர்கள் தமிழ் தெரிந்திருக்கிறார்களே என்று பெருமைப்படச் சொல்லி... தாயகத்தில் பல தமிழ் மாணவர்கள் சிங்கள மொழி ஆதிக்கத்தின் கீழ் தமிழும் ஆங்கிலமும் தெரிந்துதான் இருக்கின்றனர் என்பதையும் கவனியுங்கள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kavithan - 11-15-2004

kuruvikal Wrote:இப்ப ஏன் உதைப் பெரிசாக்கிறியள்.. பிறகு கிறைம் வோட்சில அடையாளம் காணப் போட்டிடுவாங்கள்...! ஏன் குருவிகள் உயிரோடு இருக்கிறது பிடிக்கல்லையா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன குருவிகளே நீங்கள் ஒரு காங் அமைத்து அவையை போட்டு தாக்குறது தானே... சா..சா.. எப்ப உங்கடை காங் ரெடி ஆகும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 11-15-2004

Quote:கனடா தவிர மற்ற நாடுகளான, சிறி லங்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் தமிழ் இளைஞ÷கள் குழுக்களாக செயற்படுவதில்லையா? அல்லது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லையா?

என்ன யூட் அண்ணா எங்கடை ஊரிலும் இருந்தது காங் ஆனால் எல்லாம் அடங்கீட்டுது புலிகளின் ஆட்சியின் போது இப்ப இங்கை எத்தினை காங் திரியுது சும்மா ஏதாவது கதைத்தா எவன் கண்ணை தூக்குறான் கத்தியை தூக்குறான் எண்டே தெரியலை... அட வேறை யாரும் இல்லை சில பாடசாலை மாணவர்கள் தான் அப்படி அதில் மாட்டு பட்டு கெட்ட பெயர் எடுக்கிறது பல.. அதிலை தம் வாழ்க்கையை இழப்பதும் சில.. என்னத்தை சொல்ல..


- Sriramanan - 11-15-2004

Kuruvikal Wrote:அப்ப சாதியம் இல்லை என்றீங்க.... அப்ப எந்த அடிப்படையில கோஷ்டிகள் உருவாகுது...????! பல்கலைகழகங்கள் அடிபடையிலா... இல்ல... சில பல்கலைக்கழக இணையத்தளங்களப் பார்த்தா அன் ஒவீசியலா பல தளங்கள் பல்கலைக்கழகங்களின் பெயரில் அரைகுறைத் தமிழ் தெரிந்த... ஆங்கிலப் புலமைவாதிகளால் ஏட்டிக்குப் போட்டியா நடத்தப்படுகிறது தெரிகிறது அதுதான்....???!
குருவிகளே
சாதிய ரீதியாக கனடாவில் எந்த தமிழ்த் தெருக் கோஸ்டியும் இல்லை என்பது 100 சதவீதம் உண்மையே. சாதியம் என்பது கனேடியத் தமிழ் இளைஞர்களிடம் இல்லைவே இல்லை என்று அடித்துக் கூறலாம்.

கனேடியத் தமிழ்த் தெருக் கோஸ்டிகள் எந்த அடிப்படையில் உருவாகிறார்கள் என்ற எந்த ஆராட்சியையும் நான் செய்யவில்லைக் குருவிகளே. ஆனால் அவர்கள் சாதிய ரீதியாக கோஸ்டிகளை வைத்திருக்கவில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.
Kuruvikal Wrote:சில பல்கலைக்கழக இணையத்தளங்களப் பார்த்தா அன் ஒவீசியலா பல தளங்கள் பல்கலைக்கழகங்களின் பெயரில் அரைகுறைத் தமிழ் தெரிந்த... ஆங்கிலப் புலமைவாதிகளால் ஏட்டிக்குப் போட்டியா நடத்தப்படுகிறது தெரிகிறது அதுதான்....???!

பிறகு சொல்லாதேங்க ஆங்கில மொழி ஆதிக்கத்துக்கு கீழேயும் மாணவர்கள் தமிழ் தெரிந்திருக்கிறார்களே என்று பெருமைப்படச் சொல்லி... தாயகத்தில் பல தமிழ் மாணவர்கள் சிங்கள மொழி ஆதிக்கத்தின் கீழ் தமிழும் ஆங்கிலமும் தெரிந்துதான் இருக்கின்றனர் என்பதையும் கவனியுங்கள்....!
குருவிகளே நீங்கள் இதை ஏன் எழுதினீர்கள் எண்டு எனக்குப் புரியவில்லை. இந்தாலும் அரைகுறைத் தமிழ் தெரிந்த ஆங்கில புலமைவாதிகள் எண்டு வருந்தும் நீங்கள் தயவு செய்து "அன் ஒவீசில்" போன்ற வற்றைத் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.


- Jude - 11-15-2004

[quote="kavithan"][quote]
என்ன யூட் அண்ணா எங்கடை ஊரிலும் இருந்தது காங் ஆனால் எல்லாம் அடங்கீட்டுது புலிகளின் ஆட்சியின் போது இப்ப இங்கை எத்தினை காங் திரியுது சும்மா ஏதாவது கதைத்தா எவன் கண்ணை தூக்குறான் கத்தியை தூக்குறான் எண்டே தெரியலை... அட வேறை யாரும் இல்லை சில பாடசாலை மாணவர்கள் தான் அப்படி அதில் மாட்டு பட்டு கெட்ட பெயர் எடுக்கிறது பல.. அதிலை தம் வாழ்க்கையை இழப்பதும் சில.. என்னத்தை சொல்ல..[/quote]

அங்கே இருந்த 48 இயக்கங்களில் சிலது இந்த தெருச்சண்டியருடையது தான். பெரிய இயக்கங்களுக்கு பயந்து ஒழிந்திருந்த இவ÷களை இந்திய புலனாய்வு துறை துப்பாக்கியும் கையுமாக திரும்பி அனுப்பி வைத்தது. பிறகு விடுதலைப்புலிகள் தடியெடுக்க ஓடித்தப்பி அந்தநாளில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சிகள் என்று ஏமாற்றி பணம் சே÷த்துக்கொண்டு கனடா மாதிரி நாடுகளுக்கு வந்து சே÷ந்து விட்டா÷கள். இவ÷களது வாரிசுகள் தலையெடுத்து வழிநடத்துகிறா÷கள் போல.


- kuruvikal - 11-15-2004

Sriramanan Wrote:
Kuruvikal Wrote:சில பல்கலைக்கழக இணையத்தளங்களப் பார்த்தா அன் ஒவீசியலா பல தளங்கள் பல்கலைக்கழகங்களின் பெயரில் அரைகுறைத் தமிழ் தெரிந்த... ஆங்கிலப் புலமைவாதிகளால் ஏட்டிக்குப் போட்டியா நடத்தப்படுகிறது தெரிகிறது அதுதான்....???!

பிறகு சொல்லாதேங்க ஆங்கில மொழி ஆதிக்கத்துக்கு கீழேயும் மாணவர்கள் தமிழ் தெரிந்திருக்கிறார்களே என்று பெருமைப்படச் சொல்லி... தாயகத்தில் பல தமிழ் மாணவர்கள் சிங்கள மொழி ஆதிக்கத்தின் கீழ் தமிழும் ஆங்கிலமும் தெரிந்துதான் இருக்கின்றனர் என்பதையும் கவனியுங்கள்....!
குருவிகளே நீங்கள் இதை ஏன் எழுதினீர்கள் எண்டு எனக்குப் புரியவில்லை. இந்தாலும் அரைகுறைத் தமிழ் தெரிந்த ஆங்கில புலமைவாதிகள் எண்டு வருந்தும் நீங்கள் தயவு செய்து "அன் ஒவீசில்" போன்ற வற்றைத் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

உண்மையில் குருவிகள் ஆங்கிலச் சொல்லை தமிழில் தருவது தகவலுக்கு ஒரு கவனயீர்ப்பை அல்லது கட்டாய தேவை அல்லது சாதாரண எங்கள் பேச்சு நடையை பிரதிபலிக்கச் செய்வதற்காகவே அன்றி வேறிற்கில்லை...!

எங்களுக்குக் கவலை அளித்த விடயம்... பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அமைப்புக்கள்.... என்ற வகையில் உருவாகும் செயற்பாடுகள் தமிழ் மொழிப் பாவனையை முற்றாகத் தவிர்ப்பதுதான்.... இப்போ தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் தமிழ் மாணவர்கள் ஒரு தமிழ் அமைப்பை உருவாக்க வேண்டின் கெஞ்சிக் கூத்தாட வேண்டும்... அப்படி அனுமதி கிடைத்துவிட்டால் அவர்கள் தாங்கள் கொண்ட இலக்கை தெளிவாக அடைய முனைவதைக் காணலாம்... சிங்கள மாணவர்கள் போன்று....ஆனால் கனடா பிரித்தானியா போன்ற இடங்களில் பெயருக்குத்தான் தமிழ் மாணவர்கள் அமைப்புக்கள் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் இயங்குகின்றனவே தவிர அவை ஒரு கல்விச் சமூகத்துக்கே உரித்தான முறையில் ஓர் இலக்கைத் தீர்மானித்து அடைய முற்படுகின்றனவா என்றால் இல்லை...ஏதோ தங்களை பிரபல்யப்படுத்தவும் சுய தம்பட்டம் அடிக்கவும்...டிஸ்கோவுக்கு நைற் அவுட்டுக்கு கெற்றுகெதருக்கு அழைப்பதும் சினிமா சார் நிகழ்ச்சிகளை நடத்தவும் என்றுதான் இயங்குகின்றனர்... இதற்கும் தமிழ் மாணவர்கள் என்ற உச்சரிப்புக்கும் என்ன தொடர்பு வேண்டி இருக்கிறதோ....???! அதைச் சுட்டிக்காட்டத்தான் கேட்டோம்...மாணவர்களும் பெரும்பாலும் இளைஞர்கள் தானே....!!! :twisted: Idea


- கறுணா - 11-15-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

காய் கனடா போய்ஸ்!

லொண்டனிலாம் டமிழ் பிஸ்னஸ் மக்னெட்டுகள் தானாம், டமிழ் காங்குகளை வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்களாம்? அப்பதான் கள்ள மட்டை(கிறடிட் காட்தான்), கள்ள சிகிரட், கள்ளத் தண்ணி, பிஸ்னெஸ் எதிர்ப் பாட்டிகளுக்கு தட்டுகள் போட, . என்ன சேவை மனப்பான்மை? வாழ்க! வாழ்க!! வளர்க!!!

www.karuna@onion.com/damilgangs

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- MEERA - 11-15-2004

வள÷த்த கடா மா÷பில பாயேக்க தான் உவங்களுக்கு புரியும்.


- manimaran - 11-15-2004

'வளர்த்த கடா' மார்பில் பாய்வதில் என்ன தப்பு?


- கறுணா - 11-15-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

"ஐயய்யோ
ஊரே கெட்டுப் போச்சு!
அம்மாடி
காலம் மாறிப் போச்சு!
நாகரீகம்
போறவேகம்
நடுத் தெருவிலே
நம்ம இனம்!
அய்யய்யோ!
அம்மாடி!"

இது பொபிசைப் பிதா நித்தி கனகரட்னத்திடமிருந்து சுடாதது?

www.karuna@onion.com/damizhgangs

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- kavithan - 11-15-2004

அட இதையாவது வடிவா சுடுறியளே..சந்தோசம் கருணாம்மான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- MEERA - 11-16-2004

சரியாக கஷ்டப்பட்டுத்தான் சுட்டிருப்பா÷.


- Nanthaa - 11-16-2004

Jude Wrote:
நிதர்சனம் Wrote:<b>கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள்</b>

கனடாவில் பல தமிழ் இளைஞர்கள் குழுக்களாகச் சேர்ந்து சட்டரீதியற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அதிக முறைப்பாடுகளைக் கனடாவிலிருந்து விடுமுறைக்குத் தாயகம் திரும்பும் பலரும் கவலை தெரிவித்துள்ளார்கள்.

<ul>
<li>கனடா தவிர மற்ற நாடுகளான, சிறி லங்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் தமிழ் இளைஞ÷கள் குழுக்களாக செயற்படுவதில்லையா? அல்லது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லையா?

கனடாவிலும் மற்ற நாடுகளில் இடம் பெறுவதை போல இங்கொன்றும் இங்கொன்றுமாக இளைஞ÷கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகிறா÷கள். போலிஸ் நடவடிக்கை எடுக்கிறது. மக்களும், மக்கள் அமைப்புகளும் நிறையவே பொலிஸூக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறா÷கள். இதிலென்ன புதுமை?
<li> கனடாவில் தமிழ÷ தவிர வேறு இனத்தை சே÷ந்தவ÷கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லையா? கனடாவில் ரோறன்றோவில் மட்டும் 100 க்கு மேற்பட்ட இனமக்கள் வாழ்கிறா÷கள். ஈழத்தமிழ÷ தொகை, ஆங்கிலேய÷, பிரஞ்சுக்கார÷, யூத÷, இத்தாலிய÷, கிரேக்க÷, இந்திய÷. ஆபிரிக்க÷ இப்படியாக பல இன மக்களில் தனித்தனி தொகையிலும் பா÷க்க மிகவும் குறைவு. தமிழ÷ மத்தியில் சட்டவிரோத நடவடிக்கைகள், இந்திய÷, ஆபிரிக்க÷, இத்தாலிய÷ போன்ற பல்வேறு இனங்களிலும் பா÷க்க குறைவு.
<ul>
நித÷சனம், பெய÷ ஊ÷ குறிப்பிடாமல் இதையும் ஒரு செய்தியாக வெளியிடுவது, ஈழத்தமிழ் மக்களை இந்திய தமிழ÷ முன் காடையராகவும் வன்முறையாளராகவும் காட்டி தமிழ்நாட்டு தமிழரிடம் இருந்து ஈழத்தமிழரை பிரிக்க இந்தியப்புலநாய்வுத்துறை செய்யும் சதிக்கு துணை போவதாகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

நிதர்சனம் Wrote:இவ்வாறு குழுக்களாக நடமாடும் தமிழ் இளைஞர்கள் செய்யும் தவறுகள் பல சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசியத்திற்கே இழுக்காக அமைவதாக கனடாவில் வாழ்ந்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்..

நித÷சனத்தின் கற்பனையில் உதித்த இந்த ஊ÷ பெய÷ இல்லாத (புத்திசுவாதீனமற்ற) "பல்கலைக்கழக விரிவுரையாளர்" தமிழ் தேசியம் என்றால் என்னவென்றே தெரியாதவ÷ போலும். கனடாவில் எல்லாருமே வந்தேறு குடிகள். அதற்காக ஒரு ரஷ்யன் களவெடுத்தால் ரஷ்யாவின் தேசியத்துக்கு என்ன கேடு? அல்லது ஒரு பிரெஞ்சுக்காரன் போதையில் பிதற்றினால் பிரான்சு தேசத்தின் தேசியத்துக்கு இழுக்கு வருகிறது என்று கொள்ளும் ஒருவ÷ புத்திசுவாதீனமானவ÷ எனக்கருதப்பட முடியுமா?

நிதர்சனம் Wrote:இவர்கள் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தமிழ் மக்கள் மீது கனடா நாட்டவர்கள் வைத்திருக்கும் நற்பெயரைச் சீர்கெடுப்பதாகவும் இந்தக் குழுக்களின் நடவடிக்கைகள் அரசியல் சிக்கல்களையும் ஏற்படுத்துவதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர் தெரிவித்தார்.

நித÷சனத்தின் கற்பனையில் உதித்த இந்த ஊ÷ பெய÷ இல்லாத (புத்திசுவாதீனமற்ற) "பல்கலைக்கழக விரிவுரையாளர்" கனடாவிலே இருப்பவ÷ போல் தெரியவில்லை. இந்திய புலநாய்வு துறையுடன் டெல்லியில் இருப்பவராக இருக்கவேண்டும். கனடாவிலுள்ள தமிழ÷கள் கனேடிய÷கள் என்பதை இவ÷ அறியாதவராக தெரிகிறா÷. அதற்கும் மேலாக இங்கே தமிழருக்கு அப்படியொன்றும் விசேட 'நற்பெய÷" இருக்கவில்லை, அதை தமிழ் இளைஞ÷களின் போக்கு கெடுப்பதற்கு. நாமும் இங்கேயுள்ள 100 ற்று மேற்பட்ட இனங்களில்ட ஒரு இனம் அவ்வளவு தான்.


நிதர்சனம் Wrote:இவ்வாறு தொழிற்படும் ஆயுதக்குழு ஒன்று இன்றும் கனடாவில் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு ஆயுதங்கள் கைபற்றப்பட்டதாகவும் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

நன்றி: நிதர்சனம்



இந்திய புலனாய்வு துறை சொல்லிக்கொடுத்ததை நித÷சனம் அப்படியே எழுதியிருப்பது போல தெரிகிறது. இது உண்மையல்ல. உண்மையில் நடந்தது இதுதான். சில பாடசாலை மாணவ÷கள் சென்ற வாகனத்தை பொலிஸ் வழக்கமான சாதாரண விசாரணைக்கு உட்படுத்தய போது வாகனத்தில் வெடிமருந்து செய்யக்கூடிய பெருமளவு இரசாயனத்தை கண்டு அனைவரையும் கைது செய்தா÷கள். இவ÷களில் ஒருவருக்கு வயது 17. பின்லாடனின் தாக்குதலிற்கு பிறகு பொலிஸ் கொஞ்சம் தீவிரம். இவ÷கள் எதற்காக இரசாயனத்தை காரில் கொண்டு போனா÷கள் என்ற தகவல் தரப்படவில்லை. இப்படியான இரசாயனங்களை வாணவேடிக்கைகள், பொழுதுபோக்காக ரொக்கற் செய்பவ÷கள் எல்லாம் பாவிப்பா÷கள். நகருக்குள் ரொக்கற் விடத்தடை இருப்பதால் காரில் வெளியிடத்துக்கு கொண்டு போய் விடுவா÷கள்.

நித÷சனம் சொல்வது போல, முற்றுகையோ, ஆயுதங்களோ இருக்கவில்லை. இவை பொய், ஈழத்தமிழரை பயங்கரவாதிகளாக காட்ட நித÷சனம் இந்திய புலனாய்வு துறையுடன் சே÷ந்து செய்யும் பிரச்சாரமாக தான் இது இருக்க முடியும்.

அப்பு நிதர்சன் ஏனடிராசன் தேனீயும் , நுளம்பும் , குழவியும் தந்தா செய்தி நிதர்சனம் தந்தா அது பொய்யேடா கண்ணா ? அதென்னடாம்பி நிதர்சு பொய்யளை உண்மையாக நம்புறியள் உண்மையை பொய்யெண்டு , றோவும் , றாவும் , சீ யும் என்கிறியள் Idea


- Thevajani - 11-16-2004

நிதர்சன் + தேனீயும் = O


- Sriramanan - 11-17-2004

நந்தா Wrote:அப்பு நிதர்சன் ஏனடிராசன் தேனீயும் , நுளம்பும் , குழவியும் தந்தா செய்தி நிதர்சனம் தந்தா அது பொய்யேடா கண்ணா ?
இங்கை யாரும் தேனிக்கு வக்காளத்தும் வாங்கவில்லை. அதைப் பற்றி யாரும் மூச்சும் விடவில்லை. நிதர்சனம் இணையத்தினர் விடும் சில தவறுகளைத்தான் இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் வன்முறைகள் குறைந்து கொண்டு செல்கையில் நிதர்சனம் வன்முறைகள் அதிகரிப்பதாக உண்மைக்குப் புறம்பாக செய்தி வெளியிட்டால் அதைப் பற்றி அறிந்தவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறதிலை தவறில்லை. இந்தச் செய்தியை குளவியோ அல்லது நுளம்மோ அல்லது ப(நெ)ருப்போ அல்லது மீன் கத்தும் இணையங்களோ வெளியிட்டால் அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஏனென்டா அவை எமது தேசியத்திற்கு எதிரானவை. ஆனால் விடுதலைப் புலிகளின் நிறுவனமான நிதர்சன நிறுவனத்தின் பெயரைப் பாவித்து உண்மைக்குப் புறம்பான அல்லது கீழ்த்தரமான செய்திகளை நிதர்சனம் வெளியிடுவதே எங்களிற்கு விசனத்தை உண்டாக்குகிறது.


- paandiyan - 11-17-2004

Sriramanan Wrote:
நந்தா Wrote:அப்பு நிதர்சன் ஏனடிராசன் தேனீயும் , நுளம்பும் , குழவியும் தந்தா செய்தி நிதர்சனம் தந்தா அது பொய்யேடா கண்ணா ?
இங்கை யாரும் தேனிக்கு வக்காளத்தும் வாங்கவில்லை. அதைப் பற்றி யாரும் மூச்சும் விடவில்லை. நிதர்சனம் இணையத்தினர் விடும் சில தவறுகளைத்தான் இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் வன்முறைகள் குறைந்து கொண்டு செல்கையில் நிதர்சனம் வன்முறைகள் அதிகரிப்பதாக உண்மைக்குப் புறம்பாக செய்தி வெளியிட்டால் அதைப் பற்றி அறிந்தவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறதிலை தவறில்லை. இந்தச் செய்தியை குளவியோ அல்லது நுளம்மோ அல்லது ப(நெ)ருப்போ அல்லது மீன் கத்தும் இணையங்களோ வெளியிட்டால் அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஏனென்டா அவை எமது தேசியத்திற்கு எதிரானவை. ஆனால் விடுதலைப் புலிகளின் நிறுவனமான நிதர்சன நிறுவனத்தின் பெயரைப் பாவித்து உண்மைக்குப் புறம்பான அல்லது கீழ்த்தரமான செய்திகளை நிதர்சனம் வெளியிடுவதே எங்களிற்கு விசனத்தை உண்டாக்குகிறது.

சரியாச் சொன்னியள் ரமணன். இதைத்தான் நானும் முன்பு ஒருவருக்கு சுட்டிக்காட்டினேன். :roll:


- thaiman.ch - 11-17-2004

வணக்கம்
கெட்ட பெயர் எடுக்க ஒரு வினாடி போதும்! நல்ல பெயர் எடுக்க வருடங்களாகலாம்!
நாங்கள் எத்தனை நல்ல காரியங்கள் பண்ணிணாலும் அதை ஒரே ஒரு கெட்ட காரியத்தில் மறைத்துவிடலாம்! உதாரணமாக கருணாவை எடுத்துக்கொள்ளுங்கள்!

மற்ற இனத்தவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்பது எமக்கு முக்கியமில்லை. எங்கட வீட்டுக் குப்பய நாங்கள் முதல்ல ஒதுக்குவம்!

வெளிநாட்டில தமிழர்களிற்கு அனைத்து நாடுகளிலும் நன்மதிப்பு உண்டு. அதையெல்லாம் கெடுப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்? 1000 கரடிகளிற்கு மத்தியில் ஒரு வெள்ளைக்கரடி இருந்தா, அந்த வெள்ளைக்கரடி தான் மக்கள் கண்ணுக்கு வித்தியாசமா தெரியும்! நாங்கள் எவ்வளவு தான் நல்லது பண்ணிணாலும், நாங்கள் பண்ணுகிற தவறு தான் உலகின் கண்களிற்கு தெரியும்! இது தமிழர்களிடத்தில் மட்டுமல்ல அனைத்து இனத்தவர்களிடத்திலும் உள்ளது.
ஒரு குறிப்பிட்ட வயதினர் குழுக்களாக சேர்ந்து வண் முறை செய்வது அனைத்து இனத்தவர்களிடத்திலும் உள்ளது. குறிப்பிட்ட வயது என்று நான் சொல்ல வருவது 16-20 வயதுப் பிரிவினரையே. இது ஒரு வயதுக்கோளாறு. இந்த வயதில் அனைவருமே இப்படித் தான். நானும் தான்!
இளைஞர்களை தவறாக சொல்பவர்களிற்கு நான் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய வயதிலஇ நீங்கள் இங்கு இருந்திருந்தால் எப்படியெல்லாம் ஆடியிருப்பீர்கள்?


- கறுணா - 11-17-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

காய் கூய் சிறீரமணா!

கனடாவில் நம்ம போய்ஸ்ஸிடம் வன்முறை குறைந்து கொண்டு போகின்றதா? கேட்கவே வெட்கமாகவுள்ளது! எனது உளவுத் தகவல்களின்படி போய்ஸ் சீஸ்பயராம்! உதுகளை விடமாட்டினமாம்! களவு, வெட்டுக்கொத்து, சொகுசு வாழ்வு, ....... பெருமைதானே? ஒரு குறூப் போனால் நூறு வருமாம்? இப்படியே எங்கள் அடையாளங்களைக் காப்பாற்றச் சொல்லுங்கோ?

www.karuna@onion.com/damizhboysgangs

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்