![]() |
|
தொடர் கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தொடர் கவிதை (/showthread.php?tid=627) |
- சுடர் - 03-05-2006 <b>குருதி ஆற்றில் ஒரு குவளை மொண்டு தாகம் தீர்க்க நினைப்பா? தரித்திரம்</b> தரித்திரம் தமிழனாம் இலங்கைத் தீவினிற்கு ஆதியிலே இத்தீவில் சரிசமமாய் இரண்டு ஆட்சி ஆங்கிலேயர் இணைத்திட்டார் இரண்டினையும் ஒன்றாக விலகிப்போகையிலே அயலிருந்த நாடுதனை இரண்டாகப் பிளந்திட்டார் இரண்டாக இருந்ததனை ஒன்றாக இணைத்திட்டார் போரினிலே பெறமுடியா தமிழர் நிலம் தனையே சதியால் கைப்பற்ற ஆடினார்கள் நாடகங்கள் எம்மினத்தின் எட்டப்பர் கொடுத்தார்கள் தம் கரத்தினையே தரித்திரங்கள் எம்மினத்தின் தரித்திரங்கள் செய்யத் தொடங்கினர் எசமானார் சேவகங்கள் சொந்த மண்ணினையே அடகுவைத்தார் மாற்றானிடம் அதைமீட்கும் வழியறிந்து புறப்பட்ட நம்மிளைஞர் வாசலிற்கு வந்து விட்டார் விடுதலையின் வாசலிற்கு விடுதலையின் வாசலிலே தமிழீழம் வீறுடனே. - Selvamuthu - 03-05-2006 தமிழீழம் வீறுடனே வென்றுவரும் தமிழருக்கு ஓர்நாடு என்றுவரும் சந்தேகமில்லை. தொடர் கவிதை தொடக்கி வைத்த தமிழ்ச்செல்வி சென்னதுபோல் தாயகத்தை நினைவிருத்தி தமிழ்க்கவிதை படைக்கின்றோம். தமிழ்வீரம் சொல்கையிலே அதன் வளங்கள் பகர்வோமா? நிலம் பெருமை குலம் சிறப்பு நால் வகைகள் நுகர்வோமா? - sankeeth - 03-05-2006 நால்வகை நிலங்களாய் கடலோடு உறவாடும் நெய்தலும், மலையோடு மணம் வீசும் குறிஞ்சியும், வனத்தோடு வளம் சேர்க்கும் முல்லையும், வயலோடு வறுமை போக்கும் மருதமும், இயற்கையின் நன்கொடைகளாய் தமிழ் வீரம்பகன்ற சான்றுகள் அன்றோ! - Selvamuthu - 03-06-2006 அன்று வாழ்ந்த வாழ்வை எண்ண இன்று உள்ளம் கனக்கிறதே! தலைவாழை இலையெடுத்து தமிழர் திருநாளிலே அன்னையோடும் தந்தையோடும் அண்ணனோடும் அக்காளோடும் அருகருகே உடன் அமர்ந்து உண்ணாமல் உளம் மகிழ்ந்து அன்னையவள் அள்ளிட்ட அமுதமின்றும் எந்நாவில் எந்நாளும் இனிப்பதுபோல் ஓர் உணர்வு! - Snegethy - 03-06-2006 ஓரு கவளம் சோறுண்ண ஒரு கொப்பு பலா இலை ஒடிச்சு மோர் மிளகாயும் சேர்த்து சொந்தம் சுற்றம் கூடி குலாவி குட்டிக்கதை பேசியது எதுவும் மறக்காது. - Selvamuthu - 03-06-2006 எதுவும் மறக்காது எழுதுகின்ற என்நினைவு பனித்திருக்கும் பவளமென புல்லினமும் நெல்லினமும் படருகின்ற பகலவனின் புதுக்காலைக் கதிர்பட்டு தனித்திருந்த பறவையினம் இனித்தூங்க மனமின்றி திரைதிரையாய் இனம்கூடி தொலைகூட்டும் திசைஎட்டு இனித்திருக்கும் இளவேனில் இளங்காலை எழில் இன்றும் மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு - sOliyAn - 03-06-2006 மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு தினந்தினமும் எழுகையிலே தாய்நாடு ஈர்க்கையிலே இடைநழுவும் களிசாணும் கிட்டிபுள்ளு தடிகளுமாய் குடைந்தசிறு குழிகளுமாய் புழுதியளைந்த பொழுதுகளும் போயினவே எட்டுமாங்கொட்டையும் கிளித்தட்டும் ஓடிப்போய் கனமான சுமைசேர்க்க எல்லாம் கனவாகி ஏதோஒரு காலமாகி மயங்குகின்ற ஓர்உணர்வு! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வர்ணன் - 03-06-2006 sOliyAn Wrote:மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு எல்லாம் கனவாகி ஏதோ ஒரு காலமாகி போனது போனதுதான் மயங்காதே என்கிறேன் மனசிடம் - கேட்கிறதா? அந்த ஓலை பாயில் உறங்கிய நாட்களையுன் பஞ்சு மெத்தை தூக்கம் வென்றதா என கேட்டு மீண்டும்... நெஞ்சில் அறைகிறதே!
- Snegethy - 03-06-2006 பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம் மாமரவடி மரக்கட்டிலுக்கு நன்றி காப்புறிதி கட்டியே கடனாளியானேன் நன்றி என் அன்புச் சைக்கிளே ஒரு நாளைக்கு மூன்று திரைப்படம் புனிதாக்கா உங்கட பசுக்கன்று எப்பிடியிருக்கு நீலம் சில்க்ல மலிவு விற்பனையாம் லோன்ரில சீருடை எடுக்கவேணும் வாடி நீயும். {நீலம் சில்க்-கனடாவில இருக்கிற ஒரு புடைவைக் கடை} - sOliyAn - 03-06-2006 Snegethy Wrote:பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம்எனக்கு தெரிந்த விளக்கம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம் ஊரோடு நின்று உக்கிய மாமரத்தடி கட்டிலே எப்போ வருவாய்? வாகனக் காப்புறுதி கட்டியே கடனாளியானேன் கிடங்கு முடங்கெல்லாம் என்னை குலுக்கிச் சிரித்த என் ஓட்டைச் சைக்கிளே நீ எங்கே?! ஒருநாளைக்கு மூன்றுபடத்தில் மூச்சு வாங்கல் பசுவை கன்றை நாயை பூனையை விசாரிக்கும் உலாத்தலில் ஊரில் தேகாரோக்கியம் நீலம் சில்க் மலிவு விற்பனையாம் அலுமாரியில் குட்டிக்கடை ஆரம்பம் 'லோன்ரில சீருடை எடுக்கவேணும் வாடி நீயும்..' சிக்கனத்தில் சிறந்த வாழ்வு. - அருவி - 03-06-2006 சிக்கனத்தில் சிறந்த வாழ்வு சிங்களத்தால் சிதைந்த வாழ்வு இலங்கைத் தீவினிலே சிங்கள வைப்பகத்தில் அதிகம் சேமித்தவர் தமிழர்தானாமே இன்றும் புலத்தில் அதிக சேமிப்புடன் தாயக நினைவுகளை விட்டெறியா பசுமையுடன் பச்சை வயல் வெளியில் பட்டம் விட்ட காலங்கள் பட்டம் காசுக்காய் விளம்பரங்களாய் பத்திரிகையில் பள்ளி படிக்கையிலே வெள்ளைச் சட்டையுடன் கையில் புத்தகமும் நையாண்டிப் பேச்சுகளும் வெள்ளைக்காரனிற்கு தலையாட்ட நையாண்டி சிரிப்புடனே அடுத்தவரை அழைத்துவந்து இவனிற்கு ஏவல் - அனிதா - 03-06-2006 [size=13]'இவனிற்கு ஏவல்' ஏவலிட்டது சிங்கள அரசு துவட்டப்பட்டனர் தமிழர் சிங்களக் குண்டர்களால்..! இழந்து விட்டோம் உயிர்கள் பல இடம்பெயர்ந்தோம் அகதிகளாய் புலம்பெயர்ந்தோம் வெளிநாடு கடன்பட்டோம் இந்நாட்டில் புலம்பெயர்ந்து தான் விட்டோம்-ஆனாலும் தாயக நினைவுகள் மட்டும் புலம் பெயர மறுக்கின்றது...! - சுடர் - 03-06-2006 <b>புலம்பெயர்ந்து தான் விட்டோம்-ஆனாலும் தாயக நினைவுகள் மட்டும் புலம் பெயர மறுக்கின்றது...!</b> புலம்பெயர மறுக்கின்றது புலம்பெயர்ந்த வாழ்வினிலும் சாதிகளே பெரிதென எண்ணும் எண்ணம் மட்டும் போக மறுக்கிறது சாதிகள் இல்லையடி குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றுரைத்த பாவலனின் கனவுதனை எள்ளி நகையாடி தொடர்கின்றனர் சாதிதனை தொழிலிற்கோர் சாதியென சாதித்து நின்றபின்னர் வாழ்விற்காய் செய்கின்றார் அத்தொழிலே தம் தொழிலாய் சாதிமட்டும் அழியவில்லை - sOliyAn - 03-06-2006 சாதிமட்டும் அழியவில்லை 'சாதி, சாதி' என்று ஆக்கங்கள் சொன்னாலும் புகலிடத்தில் சாதித்த சாதனைகள் என்ன என்ன?! தாயகத்தில் சாதித்த சரித்திரங்கள் கணக்கற்று வீரம் தியாகமென வீரியமாய் நிமிர்ந்துநிற்க புகலிடத்தில் சாதனைகள் தமிழினத்தை நிமிர்த்திடுமா?! - Snegethy - 03-06-2006 நிமிருமா நாய்வால் பேத வர்க்கமற்ற காதல் சமூகப் புரட்சி கதைக் கருவாக இன்னும் - Rasikai - 03-06-2006 கதை கருக்கள் இன்னும்.... கழிப்பறையிலேயே தூங்குகின்றன ... ஏதாவது சட்டம் யாரும் போட்டால் என்ன? .. இனியாவது திருந்து தமிழா.. எத்தனை மாற்றம் கொண்டாலும் ... ஏன் இன்னும் பழமை வாதம் எம் முதுகிலிருந்து .. இறங்கி போவதாய் இல்லை??? - சுடர் - 03-08-2006 இறங்கிப் போகமறுப்பதனை இறக்கி வைப்பதற்கு இறைவன் கொடுத்த இனிய கொடை இந்து சமுத்திரத்தில் புதிய நாடமைத்து பழமைவாதமெனும் மடந்தைதனை மாற்றி வைத்திடவே பரிதி போன்றவொரு தலைவன் கிடைத்திட்டான் அடுப்பங் கரையிலே அடக்கிக் கிடந்தவளை அந்நியப் படையை அடித்தழிக்கும் மகளாக்கி தேசத்தை காத்திடும் தேசியப் பணிதனிலே பங்கினை வளங்கிட வாரி அழைத்திட்டார் தாயகப் பணிதனிலே பங்கினை வளங்கி நிற்கும் மாதர் சொல்வார்தம் செயலான கதைக்கருவை - வர்ணன் - 03-10-2006 வளையலவள் என்று கதையும் சொல்லி வட்ட நிலா என்று கவியும் எழுதி அழகுப் பொருளாய் பெண்ணை அசிங்கப்படுத்தினரங்கே! தொலைந்தது அக்காலம்! தீ பந்தம் ஏந்திய தேவதைகள் - ஒளியில் தேசம் மெல்ல விடிகிறது!
- Thala - 03-12-2006 மொட்டைக் கறுப்பனுக்காய் தட்டையாய் நிலம் பரவி ஆழ நாற்று நட்டு மூமாதம் காந்திருந்து அறுக்கும் நாம் தமிழர். தேசப் பயிருக்காய் நாற்று நட்டோம் களை பறித்தோம் காவல் போட்டோம். காத்திருப்போம். அதை அறுக்க உளம் வருமோ...??? - Birundan - 03-12-2006 அறுப்பவர் தலைகள் அறுபடும் அறுப்பவர் உயிர்கள் விடை பெறும். மறுப்பவர் கைகள் உடைபடும் காப்பவர் கைகள் உரம்பெறும். ஏய்ப்பவர் செயல்கள் பொடிபடும் மேய்ப்பவன் செயல்கள் பலம் பெறும். புலிகளின் கனவுகள் நிஜம் பெறும் தமிழ் இனம் விரைவில் தமிழீழம் பெறும். |