Yarl Forum
விடைபெறக் காத்திருக்கிறேன்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: விடைபெறக் காத்திருக்கிறேன்! (/showthread.php?tid=622)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- Vaanampaadi - 03-19-2006

<b>பாரிஸில் புஷ்பராஜாவின் இறுதிக் கிரியை புலம்பெயர்ந்த தமிழர்கள் அஞ்சலி!</b>
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/March/19/pus.jpg' border='0' alt='user posted image'>
பாரிஸிலிருந்து ஜி.நல்லரெத்தினம்

பிரான்ஸில் கடந்த 10.03.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று புற்றுநோய் காரணமாக மரணமான சி.புஸ்பராஜாவினுடைய இறுதிக் கிரியைகள் கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸின் புறநகர்ப் பகுதியான வில்தனஸ் மயானத்தில் நடைபெற்றது. <b>இவ்விறுதி வழியனுப்பும் நிகழ்வில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெருந்திரளான அரசியல், கலை, இலக்கியம், சார்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.</b>

இறுதி அஞ்சலி நிகழ்வு கோவை நந்தன் தலைமை தாங்கி நடத்தினார். அவரது உரையில், எம்மை எல்லாம் விட்டுப் பிரிந்துள்ள சி.புஸ்பராஜாவை ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்றும் தனது நெருங்கிய நண்பனாகவும் இருந்தார் என்றும் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கும் சிறை, சித்திரவதை எனப் பல்வேறு இன்னல்களை அனுபவித்தவன் சி.புஸ்பராஜா என அவரது உரை அமைந்திருந்தது.

அடுத்து இடது சாரி சிந்தனையாளரான தேவதாஸ் தனதுரையில் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின்பாலும் பின்னர் தேசிய மாணவர் பேரவையின் பாலும் இருந்த புஷ்பராஜா பிற்பட்ட இறுதிக்காலங்களில் இடது சாரிக் கொள்கையுள்ள ஒரு சிந்தனையாளராகவே தன்னைப் பல இடங்களிலும் அறிமுகப்படுத்திக் கொண்டார் என்றும் கூறினார்.

அதன் பின்னர் அரியநாயகம் மாஸ்ரர் தனதும் புஸ்பராஜாவினுடைய அரசியல் பின்னணி அவர்களுடைய தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினால் பட்ட வேதனைகளை விபரமாக எடுத்துரைத்தார். பின்னர் ஜேர்மனியிலே இருந்து வந்த இலக்கிய விமர்சகர் யசீந்திரன் நீண்ட நேரம் உரையாற்றினார். சிங்கள தேசத்திலிருந்து விடுபடுவதற்காக அகிம்சைப் போராட்டம் பயனளிக்காது. இனி ஆயுதம் ஏந்தியே போராட வேண்டும் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் புஸ்பராஜா சிவகுமாரன், சத்தியசீலன் போன்றவர்களாலேயே ஆயுதப் போராட்டம் பரிநாம வளர்ச்சி பெற்றதாகக் கூறியதோடு அவரது ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற சர்ச்சைக்குரிய நூல் சம்பந்தமாகவும் இலக்கிய சந்திப்புகளில் சி.புஸ்பராஜாவின் பங்கு எவ்வாறு இருந்தது என்பது பறறியும் எடுத்து கூறினார்.

போராட்டத்தில் புஸ்பராஜாவின் குடும்பமே பெண்களையும் போராட்டத்தின் பால் முதல் முதல் ஈடுபடுத்தியது என்ற வகையில் பெண்கள் அமைப்பு சார்பாக ஜெயா பத்தநாதன் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார்.

உயிர் நிழல் சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவரான லக்ஷ்மி அவர்களும் இலக்கிய நண்பராக அறிமுகமாகிய புஸ்பராஜா பற்றிப் பேசினார். பின்னர், அவர் வகித்த அமைப்பின் சார்பில் (EPRLF)இன் இருவர் தமது கருத்துகளை முன்வைத்தார்கள். பின்னர், சுவிற்சர்லாந்திலிருந்து கலந்து கொண்ட மூர்த்தி மாஸ்டர் தமதுரையில் ஆளுமை மிக்க துணிச்சலான நண்பனை இழந்திருப்பதாக கூறினார். இறுதியாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் துணைவியார் திருமதி மங்கையர்க்கரசி கண்ணீர் மல்கியபடி தனது பேச்சை தொடர்ந்தார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான சி.புஸ்பராஜா மரணம் தமக்கு நெருங்கி விட்டது என்பதை அறிந்து தமிழர்கள் இனியாவது ஒற்றுமையாகி ஈழம் என்ற கனவை நனவாக்குங்கள் என இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் எழுதிய வாசகம் அவர் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்ப எப்படி பற்றுறுதி கொண்டுள்ளார் என்பதை எடுத்துகாட்டியது. அத்துடன், நின்றுவிடாது தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழீழத்தை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளிடமே உள்ளது என்றும் என்றோ ஓர் நாள் தமிழ் ஈழம் மலரும் என்றும் நான் விடைபெறுகின்றேன் என கடந்த வாரத்திற்கு முதல் வாரம் இந்திய சஞ்சிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


http://www.thinakural.com/New%20web%20site.../Article-11.htm


- narathar - 03-19-2006

அஜீவன் அண்ண சொன்ன பலவற்றில் எனக்கு உடன் பாடு இருந்தாலும், புஸ்பராசா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நான் நினைக்கவில்லை.ஏனெனில் அவர் வரலாறு என தனது விருப்பு ,வெறுப்புக்களை சேர்த்து எழுதிய புத்தகம்,சில இந்தியப் பதிரிககளால் அரசியல் நோக்கங்க்களுக்காக வரலாறு ஆக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் உண்டு.குறிப்பாக இந்திய அமைதி காக்கும் படையுடன்,இபிர்லேf இயங்கிய காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள்,படுகொலைகள் முற்று முழுதாக இவரது புத்தகத்தில் மறைக்கப் பட்டுள்ளன.ஆகவே இவரை விமர்சிக்காமல் விடுவது வரலாறு என்று இவர் எழுதிய புத்தகத்தை விமர்சனம் இன்றி வருங்காலச் சந்ததி ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலமையை உண்டு பண்ணும்.ஆகவே இவரின் பின் புலம்,இவரின் செயற்பாடுகள் ஈழ விடுதலைபோரின் வரலாற்றின் அடிப்படியில் விமர்சிக்கப் பட வேண்டிய அவசியம் இருக்கிறது.இவர் ஆடிய ஆட்டம் என்ன என்பது பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்,ஆனால் இறுதியில் தனது பாவங்களைக் கழுவ முயற்சித்தார் என்பது உண்மையே.
மறப்போம்,மன்னிப்போம் ஆனால் வரலாற்றைத் திரியோம்.


- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-19-2006

¿¡Ã¾÷ ¸ÕòÐ ¬¸îºÃ¢ ! þíÌûÇ (¾Á¢ú¿¡Î) ¬¾¢ì¸ °¼¸í¸û «Å÷ ±Ø¾¢ÔûÇ Òò¾¸õ ¾¡ý ²§¾¡ ®Æ ÅÃÄ¡ü¨È §¿÷¨Á¡¸ ÜÈ¢ÔûÇÐ §À¡ø ¾¨Ä¢ø à츢 ¨ÅòÐ ±ØÐ¸¢ýÈÉ. þ¨¾ ¸Åɢ측Áø Ţ𼡧ġ «øÄРŢÁ÷º¢ì¸¡Áø þÕ󾡧ġ «¨¾ ÅÃġȡ츢 Å¢ÎÅ¡÷¸û.


- Vaanampaadi - 03-19-2006

[size=18]இவர் உண்மையில் அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது கௌரவிக்கபட வேண்டியவர்.......... அப்படி செய்யாதது தவறு....வருந்துகிறேன்


- ஜெயதேவன் - 03-19-2006

Quote:இவர் உண்மையில் அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது கௌரவிக்கபட வேண்டியவர்.......... அப்படி செய்யாதது தவறு....வருந்துகிறேன்

என்னாது???? .... அப்படியானால் நாளைக்கு உண்டியலான், முஸ்தப்பாவும் நாற்பது திருடர்களும், .... வரிசையில் நிற்குங்களல்லோ????? ... உவர் போயிட்டார் .... அதே போதும்!!!!!


- Vaanampaadi - 03-19-2006

[size=24]ஜெயதூபி
நீங்கள் உன்மையில் உங்களின் 24மணி நேர வாழ்க்கையை உண்டியலுக்காக செலவழிப்பதால் இதைப்பற்றி அறிய உங்களுக்கு வாய்ப்பில்லைதான்..... ஆனால் இவர் நிச்சயம் அந்த பட்டத்தை அடையும் தன்மை உடையவர்


- sathiri - 03-19-2006

<!--c1-->CODE<!--ec1-->ஜஉழனநஸஇவர் உண்மையில் அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது கௌரவிக்கபட வேண்டியவர்.......... அப்படி செய்யாதது தவறு....வருந்துகிறேன்<!--c2--><!--ec2-->


வானம்பாடி உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது நாட்டுபற்றாளராக அவரை கௌரவிக்க அவர் தனது நாட்டிற்கும் அதன் மக்களிற்கும் ஏதாவது செய்திருந்தால் கட்டாயம் கௌரவிக்கபடவேண்டியவரே அப்படி ஏதாவது அவர் செய்திருந்தால் அதனை எங்களுக்கும் தெரியபடுத்துங்களேன்


- Vaanampaadi - 03-19-2006

அவர் அனுபவியா துன்பம் எங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன் அனுபவித்தவரோ


- sathiri - 03-19-2006

ஒ மயிலிட்டி புஸ்பராசாவையும் வல்வெட்டி துறை பிரபாகனையும் அவர்களது வரலாற்றையும் நன்கு அறிந்தவர்களிற்கு யார் என்ன துன்பம் அனுபவித்தவை என்று நன்றாக விழங்கும் அதை விடத்து புஸ்பராசா எழுதின பாதி புகள் பாடும் பாதி புளுகு பாடும் புத்தகத்தை படிச்சிட்டு கருத்து எழுதினால் இப்பிடித்தான் மாணவர் பேரவையில் அவரின் பங்கு அவர் தன்மக்களிறகாக என்ன செய்தார் என்று அவரை நன்கு அறிந்வர்கள் அவரது ஊர்காரர் மற்றும் இன்று இங்கிலாந்தில் இருக்கும் அந்த மாணவர் பேரவையின் தலைவர் ஆகியொருக்கு நன்றாக தெரியும் அது இருக்கட்டும் புஸ்பராசாவை பற்றி தானே கதைக்கிறம் பிறகேன் பிரபாகரன் இதுக்கை வாறார் திருவாளர் வானம்பாடி அவர்களே உமக்கு பிரபாகரனிலை தனிப்பட்ட கோபம் எண்டால் அதை தனிய ஒரு தளத்தை திறந்து பக்கம் பக்கமாய் உமக்கு தெரிந்ததை தாராளமாய் எழுதலாமே ஏன் எப்ப பாத்தாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதக்கையும் புலியளையும் பிரபாகரனையும் இடையிலை புகுத்திறனீர் எண்டு ஒருக்கா சொல்லும்


- kirubans - 03-19-2006

டக்ளஸ் கூட வெலிகடைக் கொலைகளில் இருந்து தப்பியவர். அவரையும் நாம் நாட்டுப்பற்றாளர் என்று கெளரவிக்கலாமே.


ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற புஸ்பராஜாவின் புத்தகத்தை நானும் வாசித்தேன். அவர் சிறையில் வேதனைகளை அனுபவித்தார் என்று அறியமுடிந்தது. அவரைவிட மிகவும் கொடுமையான சித்திரவதைகளையும், துன்பங்களையும் அனுபவித்த பலர் மண்ணோடு மண்ணாக மாண்டுபோனார்கள்;சிலர் தற்போதும் வாழுகின்றார்கள். அவர்களையும் நாம் நினைவுகோர வேண்டும்.

ஒருவர் தனது கொள்கையிலிருந்து எப்போது வழுவி, கொண்ட கொள்கைக்கு எதிராக செயற்படுகின்றாரோ, அப்போதே அவர் தனது முந்தைய சிறப்புத் தகுதிகளை இழந்து சாதாரணமானவராகின்றார், அல்லது துரோகியாகின்றார். எமது போராட்டத்தில் பல உதாரணங்கள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியத்தைப் படிக்கும்போது வந்த கேள்விகள்.
1. மக்களின் செயற்பாடுகள் புஸ்பராஜா எதிர்பார்த்ததைவிட
மிகவும் தீவிரமாக இருந்தன. மாணவர் அமைப்பினர், மக்களின் விருப்பம் என்னவென்பதை அறிந்து மக்களை அரசியல் மயப்படுத்த முடியாமல் இருந்தனர். போராட்டத்தை முன்நகர்த்த மக்கள் தயாராக இருந்தும், இவர்களால் சரியான தலைமையை, வழிநடத்தலைக் கொடுக்கமுடியவில்லை. மாறாக தங்களுக்குள் மோதிச் (கொள்கை மோதலும், பதவி ஆசையும்தான் அப்போதைய பிரச்சினைகள்) சிதந்து கொண்டிருந்தனர். இதை புஸ்பராஜா ஒப்புக்கொண்டமாதிரித் தெரியவில்லை.

2. சிறையிலிருந்து வெளிவந்த 80களின் ஆரம்பப் பகுதிகளில் போராட்டம் முனைப்புடன் வேகமாக வளர்ந்தது. ஆனால் இவரால் அந்தக் காலத்தில் காத்திரமான எந்தப் பங்களிப்பும் செய்யமுடியவில்லை. போராட்டத்தை விட்டுவிட்டு பிரான்ஸுக்கு ஏன் புலம்பெயர் என்ற காரணத்தை சொல்லவேயில்லை. ஏதோ நாட்டைவிட்டுப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக மட்டும்தான் கூறுகின்றார்.

3. ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர்கள் நாபா, பெருமாள் போன்றோர் இந்திய இராணும்வக் காலத்தில் மக்கள்விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டபோது, இவரால் அவர்களின் கொள்கைகளை செயற்பாடுகளை மாற்றமுடியவில்லை. மாறாக அசோக் ஹொட்டலில் தங்கி, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் குண்டர்கள் புடைசூழ நகர்வலம் வந்தார் என்றே எழுதுகின்றார். குறைந்தபட்சம் ஈ.பி.ஆர்.எல்.வுடனான தொடர்புகளை அந்த நேரத்தில் கைவிட்டிருக்கலாம்.

வாசித்து முடித்தபோது, இவர் போன்றவர்கள் நமது தலைவர்களாக வராமல்விட்டது நாம் செய்த புண்ணியம் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.


- தூயவன் - 03-20-2006

உண்மை தான் கிருபன்
தமிழன் எதை இழந்தாலும் உறுதிப்பிடிப்புள்ள தேசியத் தலைவரையும் போராளிகளையும் பெற்றது பெறும்பேறாகவே நான் கருதுகின்றேன்!! அனைவரும் நீடித்த ஆயுளுடன் வாழ வாழ்த்துகின்றேன்!!


- அருவி - 03-20-2006

"அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது" என்று நீங்கள் கூறுவதன் மூலம் நாட்டுப்பற்றாளர்கள் நாட்டிற்கு ஒன்றும் செய்யாமல் சும்மா அவர்களின் பெயர்களை அலங்கரிப்பதற்காக கொடுக்கப்படுவதென்று நீங்கள் கருதுவது தெளிவாகத் தெரிகிறது.


- கந்தப்பு - 03-20-2006

kirubans Wrote:டக்ளஸ் கூட வெலிகடைக் கொலைகளில் இருந்து தப்பியவர். அவரையும் நாம் நாட்டுப்பற்றாளர் என்று கெளரவிக்கலாமே.


.

டக்ளஸினைக் கட்டாயம் நாட்டுப்பற்றாளனாகக் கெளரவிக்கவேண்டும். (சிங்கள சிறிலங்கா நாட்டுப்பற்றாளனாக).


- Luckyluke - 03-20-2006

வழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...

இந்திய சுதந்திர போரிலும் காந்தி மற்றும் நேதாஜி இருவரின் வழி வேறாக இருந்தது... ஆனால் லட்சியம் ஒன்று தான்....


- sathiri - 03-20-2006

<!--c1-->CODE<!--ec1-->வழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...<!--c2--><!--ec2-->luckyluc
லக்கிலுக் ஒன்றை இங்கு நன்றாக விளங்கி கொள்ளுங்கள் இங்கு தமிழீழம் என்பது புஸ்பராசாவின் இறுதிகாலத்தில் அவரது வாயிலிரந்து வெளிவந்த வெறும் வார்த்தைகள்தான் இலட்சிமல்ல ஒருவரது இரட்சியத்திற்கும் வெறும் வார்த்தைகளிற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றது.அதைவிட் நீங்கள் சொன்னது போல காந்தியின் பாதையும் நேதாஜியின் பாதைகளும் வேறானவைதான் இங்கு புஸ்பராசாவை யாருடன் ஒப்பிடுகிறிர்கள் காந்தியுடனா ?? அல்லது நேதாஜியுடனா??தமிழீழம் என்பதை அவர் இலட்சியமாக ஏன் ஒரு விருப்பமாக கொண்டிருந்தால் கூட இங்கு பிரான்சில் அவர் சபாலிங்கம் மற்றும் உமாகாந்தன் கோவை நந்தன் கலைசெல்வன் போன்றோருடன் சேர்ந்து தமிழீழ போராட்டத்திற்கும் தமிழுpழ மக்களிற்கும் எதிராக செயல்களை செய்து கொண்டு தங்கள் வயிறு வளர்த்திருக்க மாட்டார்கள். இறுதியில் தனது நாட்கள் நெருங்கிவிட்டது என்று அறிந்ததும் புலிகள் ஈழம் பெற்றுதருவார்கள் என்று அறிக்கை விட்டால் உடனே அவர்கள் செய்த எல்லா வரலாற்று துரோகங்களும் மறந்துவிட முடியுமா? சொல்லுங்கள்.


- Sivakolunthu - 03-20-2006

Luckyluke Wrote:வழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...

இந்திய சுதந்திர போரிலும் காந்தி மற்றும் நேதாஜி இருவரின் வழி வேறாக இருந்தது... ஆனால் லட்சியம் ஒன்று தான்....

அடுத்தவர் வந்திட்டாரு கொஞ்ச காலம் அமத்தி வாசிச்சவரு இப்ப வந்திருக்கிறாரு

ஏன்பா இதுக்க இப்ப உங்க இந்தியப் பிரச்சினைய கொண்டுவாறீங்க.

உங்க பார்வைல யார்யாரு நாட்டுப்பற்றாளரா இருந்தா நமக்கென்ன உங்க பார்வை என்ன எண்டததான் நாலு சனத்துக்கும் தெரியுமே.


- கந்தப்பு - 03-20-2006

Luckyluke Wrote:வழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...

இந்திய சுதந்திர போரிலும் காந்தி மற்றும் நேதாஜி இருவரின் வழி வேறாக இருந்தது... ஆனால் லட்சியம் ஒன்று தான்....




லக்கிலுக்கு, பிரித்தானியா அரசுக்கு ஆதரவாக இந்தியாப்போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தினவர்களினை உதாரணங்களாக நீங்கள் காட்டியிருக்கலாம். அவர்களுக்கும் காந்திக்கும்,பகவத்சிங்குக்கும் ஒரே இலச்சியமா இருந்தது?


- Luckyluke - 03-20-2006

அண்ணன் அஜீவன் அவர்களின் கருத்துகளை பார்த்து தான் நான் என் கருத்தை வைத்தேன்.... என் கருத்துகளை வாசிக்க விருப்பமில்லை என்றால் கூறுங்கள்.... உங்கள் நாட்டைப் பற்றிய விவாதங்களில் நான் பங்கேற்க மாட்டேன்....


- Sivakolunthu - 03-20-2006

ஒரு விசயத்த சொல்லுறதெண்டா அதக் கொஞ்மாகிலும் தெரிஞ்சக்கணும். அப்புறம் அதப்பற்றி சொல்லாம்.இதுக்குள்ள நாம யாரும் வந்து ஏதாவது சொல்லுறமா நமக்கு தெரியல எண்டிட்டு பேசாம இருக்கல :wink: :twisted:


- Luckyluke - 03-20-2006

சிவக்கொளுந்து மலையாளத்தில் உரையாற்றுவதை விட்டு விட்டு தமிழில் உரையாற்றவும்....