![]() |
|
உவங்கள் திருந்தவே மாட்டாங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: உவங்கள் திருந்தவே மாட்டாங்கள் (/showthread.php?tid=5940) |
- Mathuran - 01-06-2005 வணக்கம் பரியாரி தாத்தா! எப்படி சுகமா இருக்குறீங்களோ? கொஞ்சம் எங்களுக்கு புத்தி சொல்லுங்கோவன். சின்னப்பு தாத்தா நல்ல அருமையான விடயங்கள நமக்கு சொல்லுவார். அவர போல நீங்களும் ஆக்கபூர்வமான அறிவுரை சொன்னால் சந்தொசம் தானே. அப்ப வேற என்ன வரட்டே. அன்புடன் விதுரன் - thamizh.nila - 01-06-2005 வணக்கம் தாத்தா, இந்த கதிரைல இருந்து எங்களுக்கு புத்தி சொல்லுங்க... குடிக்க என்ன வேணும்? தேத்தண்ணி போடவே? <img src='http://www.fotosearch.com/thumb/IGS/IGS374/IS549-041.jpg' border='0' alt='user posted image'> - Vasampu - 01-06-2005 patiyaatiyaar Wrote:என்ன தம்பி நான்தான் பரியாரியார்.நான் நினைச்சனான் பரியாரியார் என்பதைத்தான் அப்பு ஆங்கிலத்தில் படுகொலை செய்திட்டாரெண்டு அது சரியாப்போச்சு. எனியென்ன உங்களுக்கு அடிக்கடி என் உதவி தேவைப்படும். :roll: :roll: :roll: :roll: - Vasampu - 01-06-2005 thamizh.nila Wrote:வணக்கம் தாத்தா, இந்த கதிரைல இருந்து எங்களுக்கு புத்தி சொல்லுங்க... குடிக்க என்ன வேணும்? தேத்தண்ணி போடவே?தாத்தா கவனம் திட்டம் போட்டு கடற்கரையில் கொண்டு போய் கதிரை போட்டாச்சு. தமிழினியோடு ஏதும் பிரச்சினையோ??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- thamizh.nila - 01-06-2005 கடவுளே...இது என்ன கொடுமை...வசம்பு, சரியா பாருங்கோ, அது இரணை மடு குளம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> கடல் இல்லை... ஆமா தமிழினிக்கும் கதிரைக்கும் என்ன சம்பந்தம்? அவ அரசியல்வாதியா? :mrgreen:
- Mathuran - 01-06-2005 ஐயோ தமிழினி அக்காவ ஏன் இதுக்க இளுக்கிறியள். பாவம் அவா தன்ர பாட்டில சிவனே எண்டு இருக்கிறா. சும்மா போற சீவனுக்கு கல் எறியாதயுங்கோ. தமிழ் நிலா அக்கா இரணமடு குளமும் வெள்ளம் வந்தால் உடைப்பல்லே எடுக்க போகுது. தயவு செய்து தாத்தாவ முத்தத்தில கொண்டுவந்து இருத்துங்கோ. தாத்தாவுக்கு தேத்தண்ணி வேண்டாம் அவருக்கு சக்கர வியாதியாமெல்லே. - thamizh.nila - 01-06-2005 நான் எங்க அவவ இழுத்தேன்? நீங்க தான் ... ஆனால் பாருங்கோ, தாத்தா அந்த காலத்து ஆள். அவருக்கு இந்த இரணை மடு குளம் ஒரு பெரிய விசயமே இல்லை. என்னை போல நீச்சல் குளத்தில யாதகம் பண்றவ தான் பயபடனும். சக்கர வியாதியோ? அப்படியா தாத்தா? வேணும் என்டா, பனங்கட்டி தரவா? - Mathuran - 01-06-2005 அப்ப பனங்கட்டியும் கொண்டுதான் திரியிறியள். நல்ல விசயம் என்னதான் நாடு விட்டு நாடு போனாலும் சிரட்டக்க கஞ்சி குடிக்குமா போல ஒரு சுகம் இல்ல பாருங்கோ. முடிஞ்சா தாத்தாக்கு பனங்காய் பணியாரம் சுட்டு கொடுங்கோ. ஒடியல் மாவில புட்டவிச்சு கொடுத்தாலும் நல்லம். எங்கட தாத்தாவ நாங்க பாக்காம யார் பாகிறது. - thamizh.nila - 01-06-2005 ஓ தாராளமா செய்து குடுக்கலாம்...தாத்தா அந்த கால மனுசன், அவர் எங்க கூட இருகிறது எவ்வளவு ஒரு நல்ல விசயம்... என்ன விதுரன் இப்படி கேட்டிடிங்க...இந்த வருசம் ஊருக்கு போன போது கூட பனங்கட்டி வாங்கி வந்தேன்...உங்களுக்கு வேணும் என்டா கொஞ்சம் அனுப்பி விடவா? - Mathuran - 01-06-2005 தமிழ்நிலா அக்கா உங்கள் தாராள வெள்ளை மனது பளிச்செண்டு தெரியுது. இப்படி அன்பா இருக்க வேணும் நாங்கள் எப்பொளுதும் எல்லாரிடத்திலும். நானும் அண்மைல ஈழத்திற்கு போயிருந்தேன். பின்னர் திரும்பி வரும் வளியில் என்னோட அக்கா கொஞ்ச பனங்கட்டி தந்தவ. அதனால அனக்கு இப்போது தேவைபடாது. பாவம் அந்த சுனாமியால கஸ்ர படுறதுகளுக்கு கொடுக்கலாம் தானே. அக்கா நாங்கள் தலைப்பு மாறி போகின்றோம் போல தெரிகின்றது. மற்றவர்கள் கண்டால் திட்ட போகின்றார்கள். அப்ப, இப்ப போய்விட்டு பிறகு வாறன் அக்கா அன்புடன் விதுரன் - patiyaatiyaar - 01-06-2005 தம்பி வசம்பு (வசம்பு ஒரு கைகண்ட சாமான் பல வருத்தத்துக்கு அதைப்பற்றி பிறகு கொல்லிறன்)நானும் பேரனும் கனநேரமா இப்பிடி பேரெழுதுறது சரியா பிழையா எண்டு விவாதிச்சதில அவன்ர மூட்டே அவுட்டாயிட்டுதாம்.(புக்கை கட்டவேணும் போல). சரிதான் அவன்போகட்டும் எண்டுட்டு பக்கத்துவீட்டு "பிரண்ஸ்" இட்டகேட்டன் அவன் சொன்னதிலயிருந்தும் எனக்கு விளங்கினதிலயிருந்தும் இப்பிடிஎழுதுறது சரிபோலதான் இருக்குது தம்பி. Pariyariyar எண்டுபோட்டா பறியாறியார் எண்டுதான் வரும். பாருங்கோ இப்பிடித்தான் பலவிசயம்.............................. - sinnappu - 01-06-2005 Quote:என்ன குளைக்காட்டுத்தம்பி.. குஞ்சாச்சியின்ட குணம் தெரியுமா..?? என்ன என்ர மனுசின்டை பேரை இழுக்கிறீங்கள் அவள் பாவி களத்துக்கு வந்தால் தெரியும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அப்பு 2 அடி எண்டால் அவள் 14 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இராவணன் - 01-06-2005 நகர்த்தப்பட்டுள்ளது. - tamilini - 01-06-2005 Vasampu Wrote:[quote=thamizh.nila]வணக்கம் தாத்தா, இந்த கதிரைல இருந்து எங்களுக்கு புத்தி சொல்லுங்க... குடிக்க என்ன வேணும்? தேத்தண்ணி போடவே?தாத்தா கவனம் திட்டம் போட்டு கடற்கரையில் கொண்டு போய் கதிரை போட்டாச்சு. அது சரி தமிழினியின் பெயர் இதுக்கை ஏன் cருளுது.. :roll: :roll: - ஊமை - 01-06-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நான் நினைக்கிறேன் தமிழினி அக்கா......... வசம்புக்கு வயசு போகப் போக அறளை பேர்ந்து டங்கு சிலிப்பாகுதெண்டு. பாவம் பிளைச்சு போகட்டும் விடுங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நிதர்சனம் - patiyaatiyaar - 01-06-2005 எட கடவுளே ஏன் இவங்கள் இப்படி சுத்துமாத்து காட்டுறாங்கள். பெடியள் நிதர்சனம் எண்ட பெயரில ஒரு பிரிவையே வைச்சிருக்க ஏன் இந்தவேலை இவங்களுக்கு. வெப்சைற்றுக்கு வேற பேர் ஒண்டும் இல்லையே. நாலு கருத்தை 04 பேர் சொல்லலாம். அதுக்காக புலியின்ர வெப்சைற் எண்டு தோற்றமளிக்கிறதா காட்டி நல்ல வியாபாரம் போல. Re: நிதர்சனம் - patiyaatiyaar - 01-06-2005 செய்தி:- :twisted: நிதர்சனம் வெப்சைற்றுக்கும் தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லையென விடுதலைப்புலிகள் அறிவிப்பு. Re: நிதர்சனம் - ஊமை - 01-06-2005 patiyaatiyaar Wrote:எட கடவுளே ஏன் இவங்கள் இப்படி சுத்துமாத்து காட்டுறாங்கள். பெடியள் நிதர்சனம் எண்ட பெயரில ஒரு பிரிவையே வைச்சிருக்க ஏன் இந்தவேலை இவங்களுக்கு. வெப்சைற்றுக்கு வேற பேர் ஒண்டும் இல்லையே. நாலு கருத்தை 04 பேர் சொல்லலாம். அதுக்காக புலியின்ர வெப்சைற் எண்டு தோற்றமளிக்கிறதா காட்டி நல்ல வியாபாரம் போல. அதுதான் குஞ்சையா எங்களூக்கும் வெப்பியாரம். ஊரில தெரியும் தானே...... நிதர்சனம்.............. புலிகளின்ர ரீ வி அல்லே. இவன் பாவி லண்டன் ல இருந்து இந்தப் பெயரில அதுகும் தமிழ்நாதம், யாழிற்கு போட்டியாகவல்லே தொடங்கினவர். உது எங்கை போய் முடியப்போகுதெண்டு நானறியேன். அதுகும் லங்கா புவத் போல் தமிழில பொய்யை தரும் ஊடகமல்லே. ஆனால் பெயர் தான் கொஞ்சம் எடுப்பா இருக்கு. என்ன செய்வம் அவன் பரம சிவன் கழுத்தில பாம்பு இருக்கிற மாதிரி லண்டனிலை அல்லே இருக்கிறான். Re: நிதர்சனம் - ஊமை - 01-06-2005 patiyaatiyaar Wrote:செய்தி:- :twisted: நிதர்சனம் வெப்சைற்றுக்கும் தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லையென விடுதலைப்புலிகள் அறிவிப்பு. ஓம் குஞ்சையா இதைப்பற்றி ஜேர்மனி ஓபகவுசனில (Oberhausen) உள்ள இயக்க அலுவலகத்துக்கு ஒரு அலுவலாக போகும் போது அங்க திரு.காவே பாலகுமார் அவர்கள் இருந்தார். அவரிடம் வினாவிய போது அவர் நீங்கள் கூறியது போலவே கூறினார். நான் நினைக்கிறேன் நிதர்சனம் ஆசிரியர் தமிழீழம் போனால் திரும்பி வரமாட்டார் என்று............. நீங்கள் என்ன நினைக்கிறியள் குஞ்சையா ? அதுசரி இந்த கருத்த பொடியளுட்ட கேட்டாதான் தெரியும். - Mathuran - 01-06-2005 யார் வேணுமண்டாலும் எத வேணுமென்டாலும் செய்யட்டும். மக்களுக்கு உண்மைத்தன்மைதனை இனம் காணும் பக்குவம் உண்டு. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், மெய்ப்பொருள் காண்பதுவே அறிவு. இங்கு நீங்கள் நீங்கள் குறிப்பிடும் செய்தியினை (பரியாரி தாத்தாவின் செய்தி) நாம் நம்ப வேண்டும் என்னும் கட்டாயம் நமக்கில்லை. அதேபோல நிதர்சனம் இணயம் தரும் செய்தியினை நம்பவேண்டும் எனும் கட்டாயமும் நமக்கில்லை. ஆனால் இரண்டினையும் ஒருமுறை ஆராந்து பார்ப்பதில் தவறில்லை என நான் எண்ணுகின்றேன். |