Yarl Forum
பிரித்தானிய தகவல்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: பிரித்தானிய தகவல்கள் (/showthread.php?tid=5711)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- Mathan - 04-06-2005

பிரிட்டனில் மே 5ஆம் திகதி தேர்தல்

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40997000/jpg/_40997647_blair_ap_203.jpg' border='0' alt='user posted image'>

பிரிட்டனில், அடுத்த மேத்திங்கள் 5 ம் தேதி, பொதுத் தேர்தல் நடக்கும் என, பிரதமர் டோனி பிளேயர் அறிவித்திருக்கிறார்.

தேர்தலை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர், அவர் பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்று, நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி, மகாராணி இரண்டாம் எலிஸபெத்தை வேண்டினார்.

பின்னர், டவுணிங் வீதி 10 ம் இலக்கத்திலுள்ள, தனது அதிகாரபூர்வமான இல்லத்திற்கு வெளியே, தேர்தல் தேதியை அறிவித்தார்.

தொழிற்கட்சியின் தலைவராக அவர் சந்திக்கும் மூன்றாவது தேர்தல் இது.

1997 ம் ஆண்டிலிருந்து, தொழிற்கட்சி பதவியில் இருக்கிறது.

ஈராக் போரில் பிரிட்டன் சம்பந்தப்பட்டது, வாக்காளப் பெருமக்கள் பலருக்கு அவர்மீதிருந்த நம்பிக்கையைக் குறைத்துவிட்டது என்றாலும், மக்கள் கருத்துக் கணிப்புகளில், அவரின் தொழிற்கட்சி குறிப்பிடத்தக்க முன்னணியில் இருப்பதாக, அரசியல் விவகாரங்களுக்கான பிபிசி நிருபர் குறிப்பிட்டுள்ளார்.

BBC தமிழ் செய்தி


பிரித்தானியதேர்தல் - நேசன் - 04-25-2005

வரும் பிரித்தானிய தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கு வாழும் ஈழத்தமிழருக்கும் எமது போராட்டத்திற்கும் சாதகமாக இருக்கும்?


- Mathan - 04-26-2005

நேசன் இந்த தலைப்பை பாருங்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=3105


- நேசன் - 04-26-2005

நன்றி மதன் .நல்லது நீங்கள் வேளைக்கே கருத்துக்களத்திற்கு அந்த விடயத்தை கொண்டு வந்து விட்டீர்கள்


- இராவணன் - 04-26-2005

இரண்டையும் இணைத்துவிட்டேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 04-26-2005

பிரிட்டன் தேர்தலின் இறுதி நேர பிரச்சாரப் பொருளாக மாறும் இராக் விவகாரம்

பிரிட்டனில் மே மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் இறுதி நேரத்தில் முக்கிய வாதப் பொருளாக, இராக் போர் விவகாரம் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்றது.

இராக் மீதான போர், சர்வதேச மட்டத்தில் சட்ட ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் அரச தலைமை வழக்கறிஞர், அரசுக்கு ஆலோசனை கூறியதாகவும், ஆனால் அரசாங்க தரப்பில் இருந்து வந்த கடுமையான அழுத்தம் காரணமாக அவர் பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும் கடந்த ஞாயிறன்று வெளியான பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்த பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளயர் அவர்கள், வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் இதனை தற்போது தூக்கிப்பிடிப்பதாக குறைகூறுகிறார்.

கடந்த நாடாளுமன்றத்தில் பெற்ற ஆசனங்களின் அடிப்படையில் மூன்றாவது நிலையில் உள்ள லிபரல் டெமொக்கிரட்டிக் கட்சியினர் ஆரம்பம் முதலே இராக் மீதான போரை எதிர்த்து வந்திருக்கின்றனர்.

போருக்கு செல்வதற்கான காரணத்தை நியாயப்படுத்த அரசாங்கத்தால் கூறப்பட்ட உளவுத் தகவல்கள் குறித்து பொது விசாரணை ஒன்று தேவை என்று அந்த கட்சியின் தலைவர் சார்ள்ஸ் கென்னடி கூருகிறார்.

கொன்சேர்வேட்டிவ் கட்சி போருக்கு தனது ஆதரவை வழங்கியிருந்த போதிலும், பிரதமர் பிளயரின் நேர்மையை அது குறைகூறுகிறது.

அவரால் முன்வைக்கப்பட்ட உளவுத்தகவல்கள் குறித்தே அந்த கட்சியின் தலைவரான மைக்கல் ஹவார்ட்டும் குறைகூறுகிறார்.

நன்றி - பிபிசி தமிழ்


- Mathan - 04-29-2005

பிரித்தானிய பொது தேர்தல் இன்னும் 6 நாட்களில் நடைபெற இருக்கின்றது. மே 5ம் திகதி நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் தமிழர்கள் அனைவரும் தமது வாக்குகளை தவறாது அளிக்க வேண்டும்.

தற்போதைய தொழிற்கட்சி, கன்சவேர்டிவ், லிபரல் என்று மூன்று முக்கிய கட்சிகள் தேர்தல் களத்தில் இருக்கின்றன. இவற்றுள் கன்சவேர்டிவ் கட்சி தீவிர போக்குடையது என்பதுடன் குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பாக கடுமையான போக்கை கொண்டிருக்கின்றது. மற்றய இரு கட்சிகளில் லிபரல் கட்சிக்கு ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு செல்வாக்கு இல்லை. இந்நிலையில் தொழிற்கட்சிக்கு வாக்களிப்பதே நமக்கு இருக்கும் ஒரே வழி. சிலர் கொள்கையளவில் லிபரல் நல்லது அதற்கு வாக்களிப்பதே நல்லது என்று நினைக்கின்றார்கள். ஆனால் அப்படி செய்யும் போது அது வாக்குகளை பிரிப்பதால் மறைமுகமாக கன்சவேர்டிவ் பதவிக்கு வரவே வழி வகுக்கும்.


- Mathan - 05-02-2005

பிரித்தானிய தேர்தலுக்கு இன்றும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் தொழிற்கட்சி மற்றும் கன்சவேர்டிவ் கட்சி இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் ஆசியர்கள், கறுப்பினத்தவர் மற்றும் இந்நாட்டில் குடியேறியோர் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். எனவே ஈழதமிழர்கள் தவறாது வாக்களிக்க வேண்டும்.


- இளைஞன் - 05-02-2005

மதன் பிரித்தானியத் தேர்தல் தகவல்களையும், அதுபற்றிய கருத்துக்களையும் இணைப்பதற்கு நன்றிகள். சாத்தியமில்லை என்று சோம்பேறிகளாய் இருப்பதைக் காட்டிலும், முடிந்தளவு முயற்சி செய்வது நல்லதே.


- sinnappu - 05-03-2005

tamilini Wrote:நம்ம டொனி பிளேயருக்கு தான்.. நாங்க கடந்த வருடம் தான் வாழ்வில முதல் முதல் வோட் பண்ணினம். :mrgreen:

ஓ அப்ப நீங்கள் லண்டன் பிரசை ம் ம் அம்மாச்சீ சவுண்டு விடேக்கை தெரியுது
நடத்துங்கோ
:twisted: :twisted: :twisted: :twisted:


- sinnappu - 05-03-2005

இராவணன் Wrote:இரண்டையும் இணைத்துவிட்டேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தொழிற்கட்சி, கன்சவேர்டிவ் இந்த 2 கட்சியையுமா ?
:oops: :oops: :oops: :oops: :oops: :oops:


- tamilini - 05-03-2005

Quote:ஓ அப்ப நீங்கள் லண்டன் பிரசை ம் ம் அம்மாச்சீ சவுண்டு விடேக்கை தெரியுது
நடத்துங்கோ
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen:


- Niththila - 05-03-2005

மதன் அண்ணா நானும் லேபர் கட்சிக்கே வோட்
போடுவதாக உள்ளேன். :wink:


- stalin - 05-03-2005

லேபர்கட்சியிலும் வலதுசாரி இடதுசாரி என இரு பிரிவினர் இருப்பதை அவதானிக்கலாம் சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராக சட்ட வரைவு கொண்டு வரும் பொழுது லேபர் கட்சியிலுள்ள இடதுசாரி போக்குள்ளவர் எதிர்க்கும்போது கன்சர்வேட்டிவ்கட்சியும் லோபர்கட்சியும் ஒனறிணைந்து செயற்படுவதை பார்க்கலாம் சிறுபான்மையரின் செல்வாக்கு பாரளு மன்றத்தில் செலு்த வேணுமென்றால் லிபரல்டெமக்கிரேட்டுக்கு வோட்டு போட்டால் நல்லமென்று நினைக்கிறேன்


- manimaran - 05-03-2005

மேலே பலர் குறிப்பிட்டது போல தொழிற்கட்சிக்கும் பழமைபேண் கட்சிக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. தொழிற்கட்சி தான் ஆட்சிக்கு வந்தால் 1951 ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட அகதிகளுக்கான ஐநா வின் ஒப்பந்தத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ்தான் இதுவரைகாலமும் அகதிஅந்தஸ்து அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தது.

என்னைப்பொறுத்தவரையில் லிபரல் கட்சிக்கு வாக்களிப்பது பொருத்தமானதாயிருக்கும். அவர்களால் ஆட்சியமைக்க முடியாதென்பது வெளிப்படை. ஈழத்தவரது தற்போதைய அரசியல் பலத்தை அடிப்படையாக வைத்து நோக்குகையில் அவர்களால் பெரிய கட்சிகளில் பாரியளவு செல்வாக்கை செலுத்தக்கூடிய வல்லமை தற்போதைக்கு இல்லை. எனவே லிபரல் போன்ற கட்சிகளிற்கு வாக்களித்து அவர்கள் மூலம் எமது பிரச்சனைகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு போவதற்கு முனையலாம். தகுந்த அணுகுறை மூலம் லிபரல் கட்சியை ஒப்பீட்டளவில் இலகுவாக அணுகலாம் (Lobby)


எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு மில்லியன் மக்கள் இலண்டன் வீதியில் அணிதிரண்டு எதிர்த்தும் பிளேயர் போருக்குச் சென்றார். எனவே அவரைப் புறக்கணிப்பதன் மூலம் மக்களை எதிர்த்து நகர்வுகளை மேற்கொண்டால் எப்படியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை அரசியல்வாதிகளுக்கு விடுக்கும் ஒரு செய்தியாக இந்த வாக்களிப்பை வாக்காளர்கள் பயன்படுத்தலாம்.


- sinnappu - 05-03-2005

Niththila Wrote:மதன் அண்ணா நானும் லேபர் கட்சிக்கே வோட்
போடுவதாக உள்ளேன். :wink:

பிள்ளை என்ர சார்பா 2 ஐ போடு பிள்ளை
<img src='http://img137.echo.cx/img137/6637/vot1is.gif' border='0' alt='user posted image'>


- vasisutha - 05-03-2005

அப்ப இந்த முறை வோட் போடச் சொல்றீங்கள்.. :roll:


- Mathan - 05-03-2005

தவறாமல் இம்முறை வோட் போடுங்கள் வசி. ஈழ தமிழர்கள் பலரும் வோட் போடுவதில் அக்கறை கொள்வதில்லை, நீங்கள் ஒவ்வொருவரும் வோட் போடாமல் இருக்கும் போது அது கடும் போக்குள்ள கன்சவேர்டிவ் கட்சி ஆட்சிக்கு வரும் வாய்ப்பை அதிகரிக்கின்றது என்பதை மனதில் கொள்ளுங்கள். மே 5ம் திகதி அன்று என்ன வேலை இருந்தாலும் இதற்கென ஒரு அரை மணித்தியாலத்தை ஒதுக்கி தவறாமல் தொழிற் கட்சிக்கு வோட் போடுங்கள்,


- tamilini - 05-03-2005

Quote:அப்ப இந்த முறை வோட் போடச் சொல்றீங்கள்..
அப்ப இதுவரை போட்டதில்லையா..?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 05-03-2005

இதுவரை போடவில்லை..தமிழினி..:wink:
இம்முறை போடப்போகிறேன்.. எடுத்துக் காட்டிய
மதனுக்கு நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .


Quote:நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவரி.

நீங்கள் எப்படி தமிழினி? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->