Yarl Forum
படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாது (/showthread.php?tid=5522)

Pages: 1 2


- anpagam - 02-02-2005

அரசியல்வாதிகளையும் சினிமாக்காரர்களையும் நம்பவே இயலாது 2வகையினரும் நல்லாவே நடிப்பார்கள் ஒருபட்டமும் கொடுக்கவே தேவையில்லை அதுதானே ஆஸ்காரே (oscar) அங்கால வருவதில்லை... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சிலவேளை சில உயிர்கள் வீண்போகலாம்.... இதணால் பலர் ஆதாயம் அடையலாம்.... வீணாக மனிதசக்திகள் குறிப்பிட்ட காலத்தில் வீணடிக்கப்படலாம்.... நாமும் இங்கு இதனால் நேரத்தை வீணாக்கலாம்... பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கொண்டாட்டம்தான். தமிழ்குடிதாங்கி உறவுகளுக்குள்ளேயே பூகம்பம் வரலாம்.... :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: என்னும் உள்ளது...

.... ஆனால் தமிழ்குடிதாங்கி உறவுகளுக்கு.
உங்கள் உணர்சிகள் எங்கள் ஒவ்வொருதமிழனின் தமிழின் உணர்சிகள்...
உணர்சிகள் உருவம் பெறவாழ்த்துக்கள். விலைகொடுக்கவேண்ட கனக்க இருக்கும்.... ஆனால் தமிழ்வாழும்.
நன்றி


- Jude - 02-02-2005

Mathuran Wrote:
Jude Wrote:
Mathuran Wrote:வணக்கம்,
சரி இராமதாசும் திருமாவளவனும் சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது? ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்கினால் தானே நாம் கோடு வரைய முடியும்.

Aalavanthan Wrote:வடமொழி பெயரைத் தாங்கிக்கொண்டி ருக்கிற ராமதாஸ் தனது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொள்வாரா? மாட்டார்* ஊருக்குத்தானே உபதேசம்* ஆங்கிலப் பெயர்களை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கிற ராமதாஸ், குடும்பத் தொலைக்காட்சிகளின் பெயர் களைத்தமிழில் மாற்றச் சொல்லி போராடுவாரா?

ராமதாஸின் பெயர் தொடங்குவதற்கேற்ற நல்ல புள்ளிதான். இல்லையா மதுரன்?

வணக்கம்,

தாராளமாக தொடங்கி இருக்கலாம். என்ன அதர்க்குமுன் அவர்கள் திரைப்படம் என்னும் புள்ளியில் இருந்து தொடங்கி இருக்கின்றார்கள். எனவே அதில் இருந்து கீற தொடங்குவோம். நீங்கள் போடுவது புதிய புள்ளி அல்லவா ஜீட் அண்ணா? எனவே தமிழ் பாதுகாப்பு இயக்கம் போட்டுள்ள பழய புள்ளியில் இருந்து ஆரம்பிதால் ( மும்பை எக்ஸ் பிரஸ்ஸ்) தொடக்கம் சண்தொலைகாட்சி, ராமதாசு, ஜெயலலிதா, ஸ்டலின், ஜுட், சுரேஸ் ரமேஸ் என பல கரும்புள்ளிகளை அளித்து நல்ல தமிழ் புள்ளிகளை இணைக்கலாம். நீங்கள் யாவரும் தயாரோ இதற்கு. அப்படியாயின். நாமும் தயார்.

மதுரன்,
சில சமயங்களில் ஏனோ முக்கியமான பெயர்கள் மறந்து போய் விடுகிறது. பின்வரும் பெயர்கள் எந்த மொழி என்று நீங்கள் சொல்லவே இல்லையே?

<ul>
<li> அன்ரன்
<li> பாலசிங்கம்
<li> பிரபாகரன்
<ul>

அது போக, தமிழிலே இத்தாலிய பாதிரியார் பெஸ்கி (வீரமாமுனிவர்) புகுத்திய மெய்யெழுத்துக்களின் குத்துக்கள் கமா முழுத்தரிப்பு எல்லாம் அந்நிய ஊடுருவல் இல்லையா? அவற்றை எப்போது அகற்றப்போகிறீர்கள்?


- tamilini - 02-02-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 03-04-2005

<b>தமிழ் திரைப்பட பெயர்கள் குறித்த சர்ச்சையை தொடர்ந்து இந்த பட அறிவிப்பு வந்துள்ளது.</b>

எஸ்.ஜே.சூர்யா படத்தின் புதிய தலைப்பு 36-28-36
-மண்டையை பிய்த்துக் கொள்ளும் சண்டை கோஷ்டிகள்!

வெறுப்பேற்றுவது என்றால் இதுதான் போலிருக்கிறது. பி.எஃப் படத்திற்கு பேரை மாற்று என்று கொடி பிடித்து கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், இது மட்டும்தானா, இன்னும் தாரேன் பிடிச்சிக்கோ என்பது மாதிரி இன்னொரு டைட்டிலை தன் படத்திற்கு வைத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா!

தன் புதுப்படத்திற்கு 36-28-36 என்று பெயர் வைத்திருக்கிறார் சூர்யா. படத்திற்கு இவர் டைரக்டர் இல்லையென்றாலும், கதாநாயகன் இவர்தான். டைரக்டர் எழிலிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தமிழ்வாணன் என்பவர் இந்த படத்தின் இயக்குனர்.

மூத்த ஹீரோக்களின் படங்களில் நடித்த ஒரே காரணத்தால் இளைய தலைமுறை ஹீரோக்களால் புறக்கணிக்கப்பட்ட நயன்தாரா 36-28-36-ல் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். கவர்ச்சியா...? அள்ளிக்கோ! கண்ணா பின்னா டிரஸ்சா..? போட்டுக்கிறேன்! -இப்படி இழுத்த இழுப்புக்கெல்லாம் கழுத்தை நீட்டுகிறாராம் நயன்தாரா. இவரின் நோக்கம் இளசுகளின் மனசில் இடம் பிடிப்பது மட்டும்தான்!

இதையெல்லாம் விடுங்கள்... மேற்படி டைட்டில் தமிழா? ஆங்கிலமா? மாற்றச் சொல்லலாமா? வேண்டாமா? மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள், சண்டை போடும் கோஷ்டிகள்!

தமிழ் சினிமா


- tamilini - 03-04-2005

Quote:இதையெல்லாம் விடுங்கள்... மேற்படி டைட்டில் தமிழா? ஆங்கிலமா? மாற்றச் சொல்லலாமா? வேண்டாமா? மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள், சண்டை போடும் கோஷ்டிகள்!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சவால் தரன்.


- Mathan - 04-12-2005

படத்தலைப்பு விவகாரத்தில் ராமதாஸ் மனமாற்றம்

சினிமாப் படங்களுக்கு தமிழில்தான் கட்டாயம் பெயர் வைக்கவேண்டும் என்று வற்புறுத்தி வந்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளார்.

டாக்டர் ராமதாஸும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் இணைந்து 'தமிழ் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பை நிறுவி, தமிழ்ப்படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்கவேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா 'பி.எஃப்' என்ற தனது படத் தலைப்பை 'அஆ' என்று மாற்றினார். ஆனால் 'மும்பை எக்ஸ்பிரஸ்' என்ற தனது படத்தின் தலைப்பை நடிகர் கமல்ஹாசன் மாற்ற மறுத்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் ராமதாஸ் இந்த விவகாரத்தில் தங்களது நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தெரிவித்தார். பேட்டியின்போது ராமதாஸ்,

"சினிமாப் படப் பெயர்களை தமிழில் வையுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பதுடன் நாங்கள் நிறுத்திக்கொள்வோம். வன்முறையில் ஈடுபடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. திருந்துபவர்கள் திருந்தட்டும்.

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் மொழிப் போராட்டம் எனும்போது சினிமாப் பட பிரச்சனையை விட பெரிய சாதனைகளை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறோம். சிறு பிரச்சனைக்கு போராட்டம் நடத்தி எங்கள் சக்தியை வீணடிக்க மாட்டோம். மக்களுக்காக போராட வேண்டியது உள்ளிட்ட அதிகமான வேலை எங்களுக்கு உள்ளது. புலி வேட்டைக்கு புறப்பட்டவர்கள் எலி வேட்டையில் இறங்கமாட்டோம்" என்றார்.

தாமதாக இருந்தாலும் இந்த முடிவை எடுத்து, வீண் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததற்காக டாக்டர் ராமதாஸுக்கு பாராட்டுக்கள்.

Cine South


- tamilini - 04-12-2005

அப்ப இனித்தான் அடிபிடி தொடங்கப்போகுதா..?? :roll:


- stalin - 04-12-2005

ராமதாசின் மனமாற்றம் எதிர்பார்த்ததான் எதிர்கால நாற்காலி கனவுகளுடன் இருக்கும் அவர் ஒரு அளவு தான் முதலாளிகளை எதிரக்கமுடியும் தொடர்ந்தும் முதலாளித்துவ வர்க்கத்தை பகைக்க விரும்பவில்லை அவ்வளவுதான். இவர்கள் மக்களை உசுப்புஏற்றுவதுல்லாம் வெறு பரபரப்புக்குத்தான்--------------------------------ஸ்ராலின்


- Mathan - 04-12-2005

ராமதாஸ் மட்டுமல்ல இந்தியாயவில் பலரும் மக்களை உசுப்பேற்றவும் தங்கள் சொந்த நலங்களுக்காகவும் ஆட்சியை கைப்பற்றவும் தமிழ் கோஷத்தை உபயோகிக்கின்றார்கள்.


- sayanthan - 04-12-2005

அ..ஆ.. என்பது ஒலி அடிப்படையில் வேறேதோ அர்த்தத்தை கொண்டிருக்கிறதாம். இந்த சின்னப் பெடியனுக்கு இவ்வளவுக்குத்தான் விளக்க தெரியும்.