![]() |
|
ஆதாரம்... :?: - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: ஆதாரம்... :?: (/showthread.php?tid=5474) |
- kuruvikal - 02-02-2005 kirubans Wrote:தமிழர் அரக்கர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். கறுப்பாயும், குள்ளமாயும், விகாரமான பற்களையும் கொண்டுள்ளனர். இதுதான் திராவிடரின் அடையாளம். அரக்கர் தேவர் என்பதெல்லாம் ஆதாரமில்லா கற்பனை வடிவங்கள்..அப்போ தமிழர்கள் கற்பனை உருக்களா...அரக்கர்கள் என்றால் இப்படித்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு....! இது தொடர்பில் முன்னரே ஒரு தடவை விளக்கி இருந்தம்...ஆனால் அது சரியாக விளங்குப்படேல்லப் போல...அரக்கர் தேவர் சூரியர் சூத்திரர் எல்லாம் மனிதர்கள் தான்....பண்டைக்காலத்தில் பிராமணியர்கள் இப்படித்தான் வகுத்திருந்தனர்.....இது இப்ப கூட அசுர கணம்...தேவ கணம்...மனிச கணம் என்று பிராமணியப் பாவனையில் இருக்கு...ஆனா அரக்கர்கள்...குள்ளம் கறுப்பு பருத்த உருவம் பாரிய வேட்டைப்பற்கள்...என்று அம்புலிமாமா ஆதாரம் காட்டுறது தப்புங்க..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-02-2005 [quote=vasisutha][quote] அதை என் 11/12 வயதில் படித்துவிட்டேன்... [/quote] 11 வயசிலே இதெல்லாம் படிப்பினமா? நான் அந்த வயசில அம்புலிமாமா படிச்சு நேரத்தை வீணாக்கிட்டேனே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அந்த வயசில நான் டாக்டர் நோ ராணி காமிக்சும் முத்து காமிக்ஸ் இரும்புக்கை மாயாவியும்தான் படிச்சன்
- KULAKADDAN - 02-02-2005 [quote=vasisutha][quote] அதை என் 11/12 வயதில் படித்துவிட்டேன்... [/quote] 11 வயசிலே இதெல்லாம் படிப்பினமா? நான் அந்த வயசில அம்புலிமாமா படிச்சு நேரத்தை வீணாக்கிட்டேனே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> குளக்காட்டான் அண்ணா நல்ல விவாதம் ஒன்று ஆரம்பித்துள்ளீர்கள். அக்கா பாடத்துக்கு படித்தார்கள்......நான் நல்ல கதை போன்று இருந்ததால் படித்தேன் - Eswar - 02-02-2005 திருவாளர் குளக்காட்டான் அவர்களே ! உங்களுக்குத் தெரியும் உயிரினங்களை அவைகளின் உடலியல் வாழ்வியல் குணவியல் அடிப்படையை வைத்து பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருப்பது. உ.ம் பறப்பன ஊர்வன இங்கு பொதுவான தொழிற்பாட்டு அடிப்படையில் பிரிக்கப் பட்டிருப்பது உற்களுக்கு விளங்கும். இதைப் போல முதலை பல்லி டைனோசர் ஒரு குடும்பமாகவும் புலிக்குடும்பத்தில் பு"னையும் உள்ளது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இனி விடயத்துக்கு வருகிறேன். மொழியை எடுத்துக் கொண்டால் அதன் இலக்கண பயன்பாட்டு அடிப்படையில் அவற்றை பல குழுக்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. திராவிட மொழிக் கட்டமைப்பும் ஆரிய மொழிக் கட்டமைப்பும் வேறுவேறானவை. திராவிட மொழிக்குடும்பத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் என்பனவும் ஆரிய மொழிக் குடும்பத்தில் ஐரோப்பிய மொழிகள் உட்பட பாளி சமஸ்கிரதம் என்பன உள்ளன. - kuruvikal - 02-02-2005 குருவிகள் ஒரு குட்டி நூலகசாலையே நடத்திச்ச்சுதுகள்... யாரட்டையன் காசு சேர்த்து புத்தகம் வாங்கிப் படிச்சிட்டு கடனுக்கு விடுறது ஆளாளுக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kirubans - 02-02-2005 குருவி, நான் என்னுடைய கருத்தை எழுதவில்லை. படித்ததைத்தான் எழுதினேன். மேற்குறிப்பிட்ட "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகத்தில்தான் அப்படி எழுதியுள்ளது. அம்புலிமாமாவில் அல்ல. அரக்கர் என்ற பதம் பிராமணர்கள், பிராமணியம் வருவதற்கு முன்னைய காலத்தின் வரலாறாக உள்ளது. புத்தகத்தில் உள்ளதை அப்படியே தருகின்றேன். "கட்டை குட்டையாக, நல்ல கறுப்பு நிறம். அழகற்ற உடல்; மூக்கை காணவே முடியாது; முகத்தோடு அமுங்கி இருக்கும். இதோடு ஒரு கெட்ட பழக்கமும் அவர்களிடத்திலிருக்கிறது. மனிதர்களை வாங்கவும் விற்கவும் செய்கிறார்கள்." அதாவது திராவிடரைத்தான் அசுரர் என்று வர்ணித்தனர். கைபர் கணவாய் ஊடாக வந்த ஆரியரை தேவர் என்றனர். மேலும் இந்திரன், முருகன் (குமாரன்) போன்றோரெல்லாம் அக்கால மன்னர்கள். இவ்வாறு புத்தகம் போகின்றது. இங்கு விவாதம் வைத்து யாரும் பரிசு கொடுக்கவில்லை. தமக்குத் தெரிந்தவற்றை யாரும் எழுதலாம். வாசிப்பவர்கள் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்களாக இருந்தால் சரியான கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வார்கள். - kuruvikal - 02-02-2005 அவங்க என்ன ஆதாரத்தின் அடிப்படையில் எழுதி இருக்காங்க...பிப்லியோகிரபி...அல்லது றெபரன்ஸ் போட்டிருக்காங்களா...??! :wink:
- KULAKADDAN - 02-02-2005 [ Eswar Wrote:திருவாளர் குளக்காட்டான் அவர்களே ! உயிரியலும் தெரியும்...... Quote:இனி விடயத்துக்கு வருகிறேன். மொழியை எடுத்துக் கொண்டால் அதன் இலக்கண பயன்பாட்டு அடிப்படையில் அவற்றை பல குழுக்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. திராவிட மொழிக் கட்டமைப்பும் ஆரிய மொழிக் கட்டமைப்பும் வேறுவேறானவை. திராவிட மொழிக்குடும்பத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் என்பனவும் ஆரிய மொழிக் குடும்பத்தில் ஐரோப்பிய மொழிகள் உட்பட பாளி சமஸ்கிரதம் என்பன உள்ளன.[/quote] இதுவும் தெரியும்..... அப்ப தமிழ் பேசும் எல்லோரும் திராவிடர்.... பாளி சேர்ந்த சிங்களம் பேசும் சிங்களவர் ஆரியர் - kuruvikal - 02-02-2005 Eswar Wrote:திருவாளர் குளக்காட்டான் அவர்களே ! நீங்க பழைய காலத்தில இருக்கீங்க போல...இப்ப பிறப்புரிமையியல், உருவவியல், உடற்றொழிலியல், உடலமைப்பியல் நடததையியல் மற்றும் சூழலியல் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன...! அப்ப இந்தி எதுக்க வருகுது...???! :wink:
- Eswar - 02-02-2005 சிங்களவர்களது மகாவம்சம் சொல்கிறது தங்கள் மூதாதையர் வடஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாக (விசயனும் அவர்கள் கூட்டாளிகளும்) இது அவர்களது ஆரிய மூலத்தைக் காட்டுகிறது. பின்னர் அவர்கள் இலங்கையில் ஏற்கனவே வாழ்ந்து வந்த நாகத்தை குலதெய்வமாக வழிபட்டதால் "நாகர்" என்ற பெயர் பெற்ற கூட்டத்தவருடன் கலந்து வம்சத்தை வளர்த்ததால் ஆரியருக்குரிய தனித்துவமான சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தை இழந்து விட்டனர். அவர்கள் மொழியும் (சிங்களம்) தமிழ் பாளி சமஸ்கிருதம் கலந்த மொழியாக உருவெடுத்தது. - shiyam - 02-02-2005 ராகுல சாங்கிருத்தியனின் வால்காவிலிருந்து கங்கை வரை என்னிடம் உள்ளது யாருக்கு வேண்டும் - kirubans - 02-02-2005 Eswar Wrote:மொழியை எடுத்துக் கொண்டால் அதன் இலக்கண பயன்பாட்டு அடிப்படையில் அவற்றை பல குழுக்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. திராவிட மொழிக் கட்டமைப்பும் ஆரிய மொழிக் கட்டமைப்பும் வேறுவேறானவை. திராவிட மொழிக்குடும்பத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் என்பனவும் ஆரிய மொழிக் குடும்பத்தில் ஐரோப்பிய மொழிகள் உட்பட பாளி சமஸ்கிரதம் என்பன உள்ளன. சரியான கருத்து. தென்னிந்தியாவில் ஓலைச் சுவடிகளில் எழுதியதால்தான் எமது எழுதுக்கள் வளைந்து வருகின்றன (இல்லாவிட்டல் ஓலை கிழிந்துவிடும்). வட இந்தியாவில், மண்தகடுகளில் எழுதியதால்தால்தான் எழுத்துவடிவம் கோடுகளால் அமையப்பெற்றது. - Mathan - 02-02-2005 சிங்களம் கூட வளைச்சு வளைச்சு தானே எழுதுறம்? - KULAKADDAN - 02-02-2005 KULAKADDAN Wrote:[[பாளி சேர்ந்த சிங்களம் சந்தேகத்துக்குரியது.....பல சிங்கள சொற்கள தமிழ் சொறகள் அல்லது மரூஊ நன்கு அவதானித்தால் புரியும்...... - shiyam - 02-02-2005 சிங்களத்தில் பாளி தமிழ் போர்ச்சுக்கல் சமஸ்கிரதம் எல்லாம் கலந்த ஒரு சாம்பாறு தான் சிங்களம். சிங்களத்திற்கான ஒழுங்கான அகராதி இல்லை - kirubans - 02-02-2005 kuruvikal Wrote:அவங்க என்ன ஆதாரத்தின் அடிப்படையில் எழுதி இருக்காங்க...பிப்லியோகிரபி...அல்லது றெபரன்ஸ் போட்டிருக்காங்களா...??! :wink: புத்தகம் Ph.D க்காக எழுதியதல்ல. படிக்காவிட்டல் தேடிப் படிக்கவும் (19 பதிப்புக்கள் வந்துள்ளது). புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள தேவையில்லை என்று முன்பே சொல்லியுள்ளேன். அதேபோல் நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களும் வேதவாக்குகள் அல்ல. வேதங்கள் ஆகமங்கள் எப்படி வந்தன என்பதும் விளக்கப்பட்டிருக்கு. நான் 16 வயதில்தான் படித்தேன். குளக்காட்டான் 11/12 வயதில் விளங்கிப்படித்திருந்தால் இத்தலைப்பைத் தொடங்கியிருக்கமாட்டார். 8) - shiyam - 02-02-2005 Quote:[quote]புத்தகம் Ph.னு க்காக எழுதியதல்ல. படிக்காவிட்டல் தேடிப் படிக்கவும் (19 பதிப்புக்கள் வந்துள்ளதுஇல்லை 21 பதிப்புக்கள் கடைசி பதிப்பு ஆவணி 1997 - KULAKADDAN - 02-02-2005 Eswar Wrote:சிங்களவர்களது மகாவம்சம் சொல்கிறது தங்கள் மூதாதையர் வடஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாக (விசயனும் அவர்கள் கூட்டாளிகளும்) இது அவர்களது ஆரிய மூலத்தைக் காட்டுகிறது. பின்னர் அவர்கள் இலங்கையில் ஏற்கனவே வாழ்ந்து வந்த நாகத்தை குலதெய்வமாக வழிபட்டதால் "நாகர்" என்ற பெயர் பெற்ற கூட்டத்தவருடன் கலந்து வம்சத்தை வளர்த்ததால் ஆரியருக்குரிய தனித்துவமான சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தை இழந்து விட்டனர். அவர்கள் மொழியும் (சிங்களம்) தமிழ் பாளி சமஸ்கிருதம் கலந்த மொழியாக உருவெடுத்தது.அது உண்மைங்கிறீங்க.... :wink: அப்ப அவர்களை துரத்திவிட்டு......இந்தியாவிலிருந்து பெண்ணெடுத்தது....... [இது 10 11 சமூககல்வி] அடுத்தது.... இலங்மை வேடர் ஆருடைய பரம்பரை........ - Eswar - 02-02-2005 நீங்க பழைய காலத்தில இருக்கீங்க போல... பழைய காலத்தில இருக்கேல்ல..... பழையதைப் பற்றிக் கேடஇடா பipய காலத்துக்குப் போக வேண்டியதாப் போச்சு. இது அடிப்படை . இதுக்குப் பிறகு பல கிளை மொழிகள் காலத்துக் காலம் தோன்றிக் கொண்டே இருக்கும். ஆங்கிலமே இங்கிலாந்தில் ஒருமாதிரியும் அமெரிக்காவில் வேறு மாதிரியும் பேசப்படுகிறது. யாழ்ப்பாணத் தமிழ் முதல் வந்ததா மெட்ராஸ் தமிழ் முதல் வந்ததா என்று பிற்காலத்தில் எம் சந்ததி ஆராய்ச்சி செய்யக்கூடும். - kirubans - 02-02-2005 Mathan Wrote:சிங்களம் கூட வளைச்சு வளைச்சு தானே எழுதுறம்? சிங்களவர்தான் தம்மை ஆரியர் என்று கூறுகின்றனர். சிங்கத்திற்குப் பிறந்த சிங்கவாகுவும், சிங்கவல்லியும் (கவனிக்க: அண்ணன், தங்கை) சிங்களவரின் மூதாதையர் என்ற மகாவம்சக் கூற்றை ஏற்றுக் கொள்பவர்தான் சிங்களவர் ஆரியர் என்பதையும் ஏற்றுக் கொள்ளுவர். அவர்களுடைய உணவு (தேங்காய் அதிகம் பாவித்தல்), உடை (மலையாள மண்டு) பழக்கங்கள் அவர்களை, தென்மேற்கு இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்றுதான் சொல்லவைக்கும். |