![]() |
|
மூளையுள்ள தமிழனா !? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: மூளையுள்ள தமிழனா !? (/showthread.php?tid=5311) |
- tamilini - 02-12-2005 அப்படியா செய்தி... றொம்ப சந்தோசம். :mrgreen: - Niththila - 02-12-2005 :mrgreen: :mrgreen: :mrgreen: - kuruvikal - 02-12-2005 உண்மையில தமிழனுக்கு மூளையில...வாய் மட்டும் இருக்கு...! விளாசிக்கட்டுறதில...! மற்றவன் வாயைப் பாவிக்காம மூளையப் பாவிப்பான்...நம்மாக்கள் மாறிப் பாவிக்கிறதுதான் வழமை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-13-2005 hari Wrote:இதே வசனத்தை ஒரு சினிமாக்காரன் சொன்னா கை தட்டி விசில் அடிப்பிங்கள், அதை நான் சொன்னால் அதற்கு ஒரு கடி பதில், என்னட உலகம்,? இது சரிவராது மதன் சூட்டிங்கை வெகுவிரைவில் ஆரம்பியும்! அங்கு ஆரம்பிக்கலாம். நிறைய வேலைகள் இருக்கின்றன, Re: மூளையுள்ள தமிழனா !? - Mathan - 02-13-2005 anpagam Wrote:நன்மாறன் நெடுஞ்செழியன் குமணன் இது தொடர்பில் கள உறுப்பினர்களின் கருத்து என்ன? ஏற்கனவே உள்ள தமிழர்களில் மற்றய மொழி கலப்பு பெயர்களை தமிழில் மாற்ற வேண்டுமா? - tamilini - 02-13-2005 இங்க என்ன பேசுறீங்க புரியல வாசிக்க ரைம் இல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :|
- KULAKADDAN - 02-14-2005 அஙகையுமிங்கையும் ஓடி திரியிற நேரத்துக்கு... வாசிச்சு விளங்கலாமெல்லோ.........
- tamilini - 02-14-2005 அது எப்பவோ எழுதியது இப்ப வாசிச்சாச்சு.. :mrgreen: - Mathan - 02-14-2005 அப்ப கருத்து என்ன? - anpagam - 02-15-2005 இளையராஜாவின் "திருவாசகம்" ... ......இது ஒரு சாதாரண பணி அல்ல இறைவன் இட்ட கட்டளையை நான் நிறைவேற்றியுள்ளேன். அது மட்டுமல்ல இது இளைய தலைறையினருக்காக நான் செய்துள்ள கடமை. அதற்காக இளைஞர்கள் தடம் மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன். அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழியின் கலாச்சாரம்செறிவு வளமை சிறப்பு குறித்து இளைய தலைறையினருக்கு சரியாகத் தெரியவில்லை. இது எனக்கு நிறைய வருத்தத்தைத் தருகிறது. இதுபோன்ற முயற்சிகள் அவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக் கூறும் என்றால் எனக்கு மெத்த மகிழ்ச்சி. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று கொண்டிருந்தபோது என்னுடன் வந்த நண்பர் ஒருவர் திருவாசகத்தை உச்சரித்தார். அதைக் கேட்டதும் உருகி நின்றேன். எனது இசைத் திறமையை நிரூபிக்க இதை நான் இயற்றவில்லை. திருவாசகம் நமது பொக்கிஷம் என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தவே இந்த பணியை செய்தேன். ஆகவே இளைய தலைறையினருக்கு இதை காணிக்கையாக்குகிறேன் என்றார் இசைஞானி..... மேற்கோள் - anpagam - 02-16-2005 சேர் பொன். இராமநாதன் ...சேர் பொன். இராமநாதன் 75 சதவீதத்துக்குமேல் அவருடைய நேரத்தை சிங்கள சமுதாயத்துக்கும் பௌத்த மதத்துக்கும் தான் செலவழித்தார் என்பது நாமறிந்த உண்மை. இன்று வெசாக் தினம் பொதுசன விடுமுறையாக இருப்பதற்கு அவர்தான் காரணம். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அரசாங்கம் சிங்கள மக்களிடம் தாங்க முடியாத தானிய வரியை அறவிட்டு அதன் விளைவாக அவர்கள் அடைந்த துன்பத்தை நாம் அறிவோம். 1915 ஆம் ஆண்டில் சிங்கள முஸ்லிம் கலவரம் தோன்றிய காலத்தில் அனேக சிங்களத் தலைவர்களை பிரித்தானிய அரசாங்கம் அவர்களைச் சிறைக்கு அனுப்பி எந்த நேரத்திலும் மரணதண்டனையை எதிர்பார்த்தனர். இந்தக் கொடூரத்தை சகித்துக் கொள்ள முடியாத சேர் பொன். இராமநாதன் தனது உயிரையும் மதிக்காமல் இங்கிலாந்து சென்று சிங்கள தேசியத் தலைவர்களுக்கு உயிர்ப் பிச்சை எடுத்துக் கொடுத்தார். இந்த வெற்றியை அடைந்த பின்பு சேர் பொன். இராமநாதன் வெற்றிவாகையுடன் திரும்பிவந்த பொழுது அவரை கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவருடைய வீடுவரை சிங்களத் தலைவர்கள் குதிரைகளாக மாறி அவரை வண்டியில் வைத்து அவர் வீடு வரை அழைத்துச் சென்றமை சகலருக்கும் தெரிந்த விடயம். அவர் சிங்களத் தலைவர்களுக்கு (உயிர்ப்பிச்சை) எடுத்துக் கொடுத்ததற்கு தங்கள் நன்றியை பகிரங்கமாகச் செய்தார்கள். சேர் பொன்.இராமநாதனுடைய சேவையை சிங்களத் தலைவர்கள் மறந்து அவருக்கு மிகக் கொடிய துரோகத்தை உண்டு பண்ணியது இன்றுவரை தன்மானமுள்ள எந்தத் தமிழனும் மறக்கமாட்டான். அவருடைய பிற்கால வாழ்க்கை மிகவும் விரக்தியடைந்த ஒன்று. இன்று யாழ். குடா நாட்டில் அவர் விரக்தியின் காரணமாக திருநெல்வேலியில் பரமேஸ்வரா கல்லூரியை ஸ்தாபித்தும் சுன்னாகத்தில் பெண்களுக்கு ஒரு தனியான கல்லூரியையும் அமைத்தார். அவர் அடைந்த விரக்தியை இது நன்கு புலப்படுத்திவிட்டது. இதன் விளைவாக இன்று அந்த இரு ஸ்தாபனங்களும் பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றுவிட்டன. அவர் துயரத்தில்தான் தனது பிற்கால வாழ்க்கையை செலவழித்தார். மேற்கோள்
- Niththila - 02-17-2005 தகவலுக்கு நன்றி அன்பகம் அண்ணா. - kavithan - 02-17-2005 நன்றி....அண்ணா - anpagam - 04-06-2005 மொரிஷியஸில் தமிழைத் தேடும் தமிழர்கள் தமிழர்களுக்காக வெளியாகும் தமிழ் வொய்ஸ்' பத்திரிகை ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலுமே அச்சாகிறது தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று மார்தட்டி கொள்ளும் அந்தத் தமிழர்களால் தமிழ் பேச முடியவில்லை என்பது வேதனையாக இல்லையா? கடல் கடந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மொரிஷியஸ் நாட்டுத் தமிழர்களின் நிலைதான் இப்படி இருக்கிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நான்கு நாள் சுற்றுப்பயணமாக கடந்த வாரம் மொரிஷியஸ் சென்றிருந்தார். அவருடன் சென்றபோதுதான் இந்த நிலையைக் காண முடிந்தது. கடந்த 1820 களிலேயே மொரிஷியஸ் நாட்டுக்கு பிழைப்புத் தேடிச் சென்றவர்கள் தமிழர்கள் அதன் பின்தான் பிஹாரிகளும் குஜராத்தியர்களும் ஆந்திர மாநிலத்தவரும் அங்கு வரத் துவங்கினர். இப்படி மொரிஷியஸில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை மொரிஷியஸ் மக்கள் தொகையான 12 இலட்சத்தில் 68 சதவீதம் (51 சதவீதம் இந்துக்கள் 17 சதவீதம் முஸ்லிம்கள்) அதில் தமிழர்கள் 6 சதவீதம் பேர். பெரும்பான்மையாக இருந்தாலும் கூட இந்தியப் பூர்வீக மக்கள் மதம் மொழி சாதி என்று பல்வேறு பிரச்சினைகளால் பிரிந்து கிடக்கின்றனர். மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டுமே உள்ள பிரெஞ்சோ- மொரிஷியர்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ளனர். 3 சதவீதமாக உள்ள சீனர்கள் வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். ஆபிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட கிரியோல் சமூகத்தினர் 28 சதவீதம் இருந்தாலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். மொரிஷியஸ் ரூபா நோட்டில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழில்தான் ரூபா மதிப்பு அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் சமூகத்தில் தமிழர்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லை. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். இங்கு ஏராளமான இந்துக் கோயில்கள் உள்ளன. குறிப்பாக கோபுரங்களுடன் தமிழர்கள் கட்டிய கோயில்கள் அதிகம். காவடி ஆட்டம் சிவராத்திரி தீ மிதிப்பு திருவிழா தமிழ்ப் புத்தாண்டு என எல்லா விழாக்களையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். தினசரி கோயிலுக்கு செல்லும் தமிழர்கள் ஹதமிழில் 'பக்திப் பாடல்களைப் பாடுகின்றனர். தமிழ் படிக்கத் தெரியாததால் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பாடுகின்றனர். ஆனால் தமிழ் பேசத் தெரியாது. பிரெஞ்சு ஹிந்தி ஆங்கிலம் பேசுகின்றனர். ஹிந்தி மொழி அங்கு நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தமிழ் மட்டும் மறைந்து போவதற்கு தமிழர்களிடையே ஒற்றுமை உணர்வு இல்லாததும் முக்கிய காரணம். சுய ஆதாயங்களுக்காக தமிழையே காட்டிக் கொடுக்கும் நிலைக்கு சிலர் சென்றுவிட்டனர் என்று இங்குள்ள தமிழர்கள் மனம் வெதும்புகின்றனர். ஹிந்தி பேசுவோர் தங்கள் உரிமைகளைப் பெற்றுவிட்ட நிலையில் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் பெரிய அளவில் குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை. தமிழர்களைப் பயன்படுத்தி செல்வாக்குப் பெற்றுவிட்ட ஹிந்தி பேசும் மக்கள் தற்போது தமிழர்களைக் கைவிட்டுவிட்டனர். இந்த நிலையில் தமிழ் கோயில்கள் சம்மேளனம் என்ற பெயரில் சுமார் 150 கோயில்களைக் கொண்ட அமைப்பு தமிழுக்காகக் குரல் கொடுக்கத் துவங்கியிருக்கிறது. அதில் அதிகாரிகள் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட தமிழ் லீக் இனிய தமிழ் ஆகிய அமைப்புகளும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. பாராளுமன்றத் தேர்தல்களில் பல்வேறு கட்சிகளின் சார்பிலும் முன்பு 7-8 ஆசனங்கள் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தன. தற்போது நான்கு அல்லது ஐந்தாகக் குறைந்துவிட்டது. குறைந்தபட்சம் நான்கு பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்து வந்தது. தற்போது இரண்டு அமைச்சர்கள்தான் உள்ளனர். அதனால் தமிழர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடத் துவங்கியிருக்கிறோம்' என்றார் தமிழ் கோயில்கள் சம்மேளனத் தலைவர் நரசிங்கம். மொரிஷியஸ் தொலைக் காட்சியில் ஹிந்திக்கு இணையாக தமிழுக்கு வாய்ப்புத் தரக் கோரி 6 மாதங்களுக்கு முன் 3 ஆயிரம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதேபோல் அரசுத்துறை நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு போதிய வாய்ப்புக் கேட்டுப் போராடி வருகிறோம். தமிழ் புத்தாண்டு தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வருகிறோம்' என்றார் அவர். தமிழர் என்ற பெயரைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு உரிமை உள்ளிட்ட சலுகைகளுக்காகப் போராடும் உங்களால் தமிழ் கூட பேச முடியவில்லை. தமிழ் மக்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை?' என்று அவரிடம் கேட்டபோது இதுவரை தமிழ் கற்றுக் கொடுப்பதற்கான சரியான முறையைக் கடைப்பிடிக்கவில்லை. தற்போது எந்த முறையைக் கையாண்டால் எளிதாகத் தமிழ் கற்றுக் கொடுக்கலாம் என்பது குறித்து மகாத்மா காந்தி இன்ஸ்டியூட் மூலம் முயற்சி எடுத்து வருகிறோம்' என்றார் நரசிங்கம். அரசு அனுமதியளித்தால் தமிழகத்திலிருந்து தமிழ் ஆசிரியர்களை பணியில் சேர்க்கத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார். தமிழ் கோயில்கள் சம்மேளனமும் அரசியல் வட்டாரத்துக்கு நெருங்கியவரான பர.வேலாயுதம் தலைமையில் இயங்கும் தமிழ் கலாசார சம்மேளனமும் எதிரும் புதிருமாக இருக்கின்றன. மொரிஷியஸ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு சிலர் பலியாகிவிட்டனர். ஆனால் அந்த சம்மேளனத்துடன் சேர்ந்து செயல்படவே விரும்புகிறோம்' என்றார் நரசிங்கம். தமிழ் வொய்ஸ்' என்ற பெயரில் தமிழர்களுக்காக வெளியாகும் பத்திரிகை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில்தான் அச்சாகிறது. தமிழ் இல்லை. இருந்தாலும் தமிழர்களுக்காக பல்வேறு வழிகளில் போராடுவதாகக் கூறுகிறார் அப்பத்திரிகையின் ஆசிரியர் நாயுடு. உலக அளவில் தமிழை வளர்க்க தமிழக அரசும் தமிழ் அறிஞர்களும் முயற்சி எடுத்தால் மொரிஷியஸில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் குற்றுயிராகக் கிடக்கும் தமிழுக்குப் புத்துயிரூட்ட முடியும் என உண்மையான தமிழ் ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் மொரிஷியஸில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவ முடியும். அவர்கள் அப்படி முயற்சி எடுத்தால் அது தமிழுக்கு ஆற்றும் பெரும் சேவையாக இருக்கும் என்று தெரிவித்தார் போர்ட் லூயி கடற்கரை விடுதி ஒன்றில் பணியாற்றும் தேவன் ராமச்சந்திரன். -தினமணி- நன்றி: தினக்குரல். - hari - 04-07-2005 Quote:மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டுமே உள்ள பிரெஞ்சோ- மொரிஷியர்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ளனர். 3 சதவீதமாக உள்ள சீனர்கள் வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் படிப்படியாக முன்னேறி வருகின்றனர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். நேரத்தை இதில் செலவழித்தால் எப்படி பொருளாதாரரீதியில் முன்னேறுவது? Quote:இங்கு ஏராளமான இந்துக் கோயில்கள் உள்ளன. குறிப்பாக கோபுரங்களுடன் தமிழர்கள் கட்டிய கோயில்கள் அதிகம். - anpagam - 04-07-2005 நேரத்தை இதில் செலவழித்தால் எப்படி பொருளாதாரரீதியில் முன்னேறுவது? 8) <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :? :?: - anpagam - 05-15-2005 தூய தமிழ்க் காவலரின் நூற்றாண்டு விழா பழ. நெடுமாறன் 1966ஆம் ஆண்டில் ஒரு நாள் மாலைப் பொழுதில் மதுரையில் உள்ள எனது வீட்டிற்கு மதிக்கத்தக்க தோற்றம் படைத்த பெரியவர் ஒருவர் வந்திருந்தார். அவரை வரவேற்று அமரவைத்த போதிலும் இன்னாரெனப் புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தேன். "குடியேற்றம் அண்ணல் தங்கோ' என அவரே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது நான் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தேன். தமிழறிஞரான எனது தந்தையார் கி. பழநயப்பனார் அவர்களைச் சந்திக்கவே அவர் வந்திருந்தார். வெளியில் சென்றிருந்த எனது தந்தையார் வரும்வரையில் அவருடன் பேசி மகிழும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தூயதமிழில் அவர் உரையாடியது என்னை மிகவும் கவர்ந்தது. ஏற்கெனவே அவர் எழுதிய நூல்களின் மூலம் அவரைப்பற்றி ஓரளவு அறிந்திருந்தேன். குறிப்பாக "மும்ர்த்திகள் உண்மை தெரியுமா'? என்ற தலைப்பில் அவர் எழுதிய புதுமையான நூலை மாணவப் பருவத்திலேயே நான் மிகமிகச் சுவைத்துப் படித்திருக்கிறேன். அந்நூலாசியரே எங்களின் இல்லத்திற்கு வருகை தந்திருப்பது கண்டு பரபரப்படைந்தேன். பேராயக் கட்சியில் நான் ஈடுபட்டிருப்பது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார். "தமிழரான காமராசர் அனைத்திந்தியப் பேராயக் கட்சியின் தலைவராக இருக்கும் போது உங்களைப் போன்ற இளைஞர்கள் அதில் இருப்பது மகிழ்ச்சிதான் நானும் பேராயக் கட்சியில் பல்லாண்டுகள் தொண்டாற்றிச் சிறை சென்றவன்தான். அந்த நாளில் சிறை சிறைவாழ்வு என்பது மிகவும் துன்பம் தருவது அவற்றையெல்லாம் இன் முகத்துடன் ஏற்று நாட்டு விடுதலைக்காகப் போராடினேன். ஆனாலும் உண்மையான தமிழர்களுக்கு அங்கு மதிப்பில்லை என்பதை உணர்ந்து வெளியேறினேன்' எனக் கூறினார். பிறகு மதுரையைச் சேர்ந்த பேராயக் கட்சித் தோழர்கள் குறித்து வினவினார். தியாகிகள் திரு. ரெ. சிதம்பரபாரதி சீனிவாச வரதன் சோமயாசுலு போன்றோருடன் இணைந்து கள்ளுக்கடை மறியல் நீலன் சிலை உடைப்புப் போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டுச் சிறை சென்றதை நினைவு கூர்ந்தார். அவரது பேச்சும் மூச்சும் தமிழுக்காக தமிழனுக்காக இருப்பதை அன்று அறிந்து கொண்டேன். அந்த நாள் எனது வாழ்வின் சிறந்த நாள்களுள் ஒன்றாகும். அவரது சந்திப்பு எனது சிந்தனையிலும் செயலிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறினால் அதுமிகையாகாது. ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியத் துணைக்கண்ட விடுதலைக்காகப் போராடிஇ சிறை சென்று அரிய ஈகம் புரிந்த அவர் தமிழைக் காக்கவும்இ தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும் அயராது பாடுபட்டார். வடமொழிப் பிடியில் சிக்கிக் கிடந்த தமிழை மீட்கும் போரின் தளபதியாகத் திகழ்ந்தார். தமிழ் காக்கும் பணியையே தலையாய பணியாகக் கொண்டார். தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெரியோர்களில் அவரும் ஒருவர். பெரியார் ஈ.வெ.இராமசாமி பெருந்தலைவர் காமராசர் அறிஞர் அண்ணா முத்தமிழ்க் காவலர் கி. ஆ.பெ. விசுவநாதம் மறைமலையடிகள் பாவேந்தர் பாரதிதாசன் மொழிஞாயிறு பாவாணர் தமிழவேள் பி.டி. இராசன் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் நாவலர் சோமசுந்தர பாரதியார் தமிழ்த்தென்றல் திரு.வி.க. ஞானியார் அடிகள் கலைஞர் மு. கருணாநிதி போன்றவர்களுடனும் மற்றும் பல தலைவர்கள் தமிழறிஞர்கள் ஆகியோருடனும் நெருங்கிப் பழகி அவர்களோடு இணைந்து நின்று தமிழ்வளர்ச்சி தமிழர் நலன் ஆகியவற்றுக்காக வாணாள் முழுவதும் அயராது தளராது தொண்டாற்றிய தூயதமிழ்ப் போராளி அண்ணல் தங்கோ ஆவார். தன்னலமறுப்பு பயன்கருதாத தூய தொண்டு தமிழின் மேல் கரைகாணாத காதல் தமிழர் விழிப்புணர்வே வாழ்வின் குறிக்கோள் ஆகிய நற்பண்புகள் நிறையப்பெற்ற அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதன் மூலம் இளைய சமுதாயம் புத்தறிவு புத்துணர்வு பெற முடியும். இன்றைய இளந் தமிழர்களுக்கு அவரே சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார். தமிழ்த் தேசியம் வீறுகொண்டு எழுந்திருக்கும் இவ்வேளையில் தூய தமிழ்க்காவலர் அண்ணல் தங்கோ அவர்களின் நூற்றாண்டு விழாவில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் செயலுக்கு வர நாம் முயலுதல் வேண்டும். அதுவே அவரது நினைவுக்கு நாம் செலுத்தும் காணிக்கையாகும். பழ. நெடுமாறன்(seide@md2.vsnl.net.in) இவரது முந்தைய படைப்பு: 1. சகுனிகள் வரிந்து கட்டுகிறார்கள் 2. சற்சூத்திரர்களான சைவ மடாதிபதிகள் 3. மக்களிடம் மன்னிப்புக் கேட்கட்டும் 4. பாதுகாப்பு உடன்பாடு இந்தியா மறுப்பு 5. இந்தி எதிர்ப்பு எத்தகைய வீழ்ச்சி! சரிவு! 6. தன்னம்பிக்கை இல்லாத தமிழர்கள் 7. இட்லர் பாதையில்... 8. மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது! படைப்புகளை அனுப்ப: கவிதை கட்டுரை சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thatstamildesk@indiainfo.com படைப்புகளை அனுப்பும்போது நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். - Vasampu - 05-15-2005 நன்றி அன்பகம். இப்ப நீர் ரொம்பத் தெளிவு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - anpagam - 05-22-2005 தமிழ்ப் பேரகராதியைத் திருத்த ஈழத்தமிழர்கள் உதவ வேண்டும் தமிழகப் பேராசிரியர் வேண்டுகோள் தமிழகத்தின் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறை தமிழ்ப்பேர கராதியின் திருத்திய பதிப்பை வெளியிட உள் ளது. இதற்கு இலங்கையில் உள்ளவர்க ளும் சொற்களை சேகரித்து அனுப்பி ஒத்து ழைக்க வேண்டுமென சென்னைப் பல் கலைக்கழக தமிழ்மொழித் துறைத் தலை வர் கலாநிதி வ.ஜெயதேவன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.சொற்களை அனுப்புவோர் தமது வட் டாரத்தில் பேசப்படும் சொற்களைச் சேக ரித்து அவற்றின் அர்த்தம் அவை பயன் படுத்தப்படும் விதம் இடம் ஆகிய குறிப்புக ளுடன் அனுப்புமாறும்-மகலாநிதி வ.ஜெயதேவன் தலைவர் தமிழ்மொழித்துறை சென்னைப் பல் கலைக்கழகம் சென்னை - 600005 என்ற முகவரிக்கோ 0091 44 28441126 091 44 28441686 0091 44 28444933 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டோ அல்லது ஏளூனநஸழிஐ @ சநனஷ்க்ஷூக்ஷூதுழிஷ்யி. உலிது என்ற மின் அஞ்சல் முகவரி மூலமோ சொற்களை அனுப்பலாம் என்றும் -அவர் மேலும் தெரிவித்தார்.மேற்படி தமிழ்ப் பேரகராதியில் சொல் உச்சரிப்பு இலக்கணக்குறிப்பு சொல் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் உதாரணவாக்கியம் ஆகியவை இடம்பெற உள்ளன. கடந்த மூன்றாண்டுகளாக பேர கராதியைத் திருத்தும் பணி நடைபெறுகி றது. கனடாவில் வாழும் கலாநிதி கந்தவனம் வித்துவான் ஜீவரத்தினம் போன்றோர் இலங்கையில் புழக்கத்தில் உள்ள சொற் களை வழங்கி உதவுகின்றனர்.இவ்வாறு கலாநிதி ஜெயதேவன் மேலும் தெரிவித்தார். உதயனில்... - kavithan - 05-22-2005 நன்றி அன்பகம் |