Yarl Forum
HTML கற்போம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: HTML கற்போம் (/showthread.php?tid=4771)

Pages: 1 2 3 4


- hari - 03-15-2005

ஐயோ கவிதன் அது×ம் செய்தனான், யாழ் பக்கத்தில் இருக்கும் தமிழை கொபி பேஸ்ட் செய்யும் போது சரியாக வருகிறது.
<img src='http://img120.exs.cx/img120/5835/untitled1az.jpg' border='0' alt='user posted image'>


- yarlmohan - 03-15-2005

hari Wrote:ஈ-கலப்பையை பயண்படுத்தி தமிழில் எழுதும் போது இணையப்பக்கத்தில் தமிழ் எழுத்துரு தெரியவில்லை. ¬É¡Öõ ӾġÅÐ ¦¾¡¼÷ â÷ò¾¢¦ºöÐð¼ý!
<img src='http://img234.exs.cx/img234/9917/untitled9au.jpg' border='0' alt='user posted image'>
இங்கு நீங்கள் tscii எழுத்தமைப்பில் எழுதப்பட்டு இருப்பதாலேயே அங்கு சரியாகக் காண்பிக்கவில்லை என நினைக்கின்றேன்.

hari Wrote:யாழிலும் சில title இதே மாதிரி வருவதுண்டு,
இங்கு நாம் பாவிக்கும் யுனிகோட் எழுத்தில் tscii வடிவிலும் (அதாவது ஒவ்வொரு எழுத்துக்களும் 2 இடத்தில் அமைந்துள்ளது) இருப்பதால் யாராவது tscii முறையில் எழுதினாலும் அது வெளித்தெரிவதில்லை. அது யுனிகோட் வகையில் எழுதியது போன்றே தெரியும். அதனாலேயே யாழிலும் மேற்கூறிய பிரச்சனை இருக்கின்றது.(அனைவரும் யுனிகோட் அமைப்பிலேயே எழுத வேண்டுகின்றேன்)


- hari - 03-15-2005

ஈ-கலப்பையால் எழுதினால் அது யுனிக்கோட் இல்லையா?


- thamilvanan - 03-15-2005

லதா எழுத்துருவை பயன்படுத்தல்தான் இப்போதைக்கு நல்லது. ஈ-கலப்பையில் வேறொரு எழுத்துருவைத்தான் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே லதா எழுத்துருவை தரக்கூடிய எழுத்துரு மாற்றி ஒன்றை பயன்படுத்தவும்.


- hari - 03-15-2005

நன்றி தமிழ்வாணன்! எப்பொழுது அடுத்த தொடரை தொடங்க போறீர்கள்?


- thamilvanan - 03-15-2005

அனைவரின் ஆர்வத்துக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி. ஒரு வகுப்பறையைப்போல் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு விளக்கியதற்கு மீண்டும் நன்றிகள். இதோ இரண்டாவது தொடர்.


- thamilvanan - 03-15-2005

ஒரு பொதுவான HTML பக்கமானது <html> மூலகத்தை ஆரம்பத்திலும் இறுதியிலும் கொண்டிருக்கும். இதற்குள்ளே <head> மூலகம் <body> மூலகம் என்ற இருபகுதிகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு மூலகமும் தனது முடிவு மூலகத்தை கொண்டிருக்கவேண்டும். அதாவது <head> ஆனது </head> ஐயும் <body> ஆனது </body>ஐயும் கொண்டிருக்கவேண்டும். குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் மட்டும் சில மூலகங்களுக்கு முடிவு மூலகம் தேவைப்படாது. அது எச்சந்தர்ப்பத்தில் என்பதை அடுத்த தொடரில் குறிப்பிடுகிறேன். அதனை தெரிந்தவர்கள் இப்போது குறிப்பிடலாம்.

<b><head> மூலகத்தின் பயன்பாடு</b>
இது பல்வேறு முக்கியமான தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றபோதும் , ஆரம்ப நிலையில் அதுபற்றி குறிப்பிடப்போவதில்லை. பின்னர் ஆழமாக இதுபற்றி விளக்கப்படும். இங்கு கட்டாயம் பயன்படுத்தப்படவேண்டிய <title> மூலகம் பற்றி மட்டும் இப்போது பார்ப்போம். <title>, </title> என்பவற்றுக்கு இடையே எழுதப்படும் எழுத்துக்கள் இணையஉலாவியின் மேற்சட்டத்தில் தோன்றுவதை முதலாவது இணையப்பக்கத்திலிருந்து அறிந்திருப்பீர்கள்.

<b><body> மூலகத்தின் பயன்பாடு</b>
இப்பகுதியானது இணைய உலாவியின் இடைமுகப்பில் எமக்கு தேவையான பின்னனி படங்களை இடுவதற்கு பின்னனி நிறங்களை இடுவதற்கு பயன்படுத்தலாம்.

<html>
<head>
<title>தமிழ்வாணனின் பக்கம் - 2</title>
</head>

<body bgcolor="yellow">
<font color="red">வணக்கம் இது HTML தொடர் - 02.
<font color="green">இங்கு எழுத்துகள் தலைப்பாகும்.
<font color="blue">இங்கு எழுத்துகள் உபதலைப்பாகும்.
<b><font color="pink">இங்கு எழுத்துகள் தடிப்பாகும். </b>

<i><font color="brown">இங்கு எழுத்துகள் சாய்வாகும்.</i>

</body>
</html>

நீல எழுத்துக்களால் உள்ள மீயுரையை பிரதிசெய்து முதல் பயன்படுத்தவும்.

இங்கு இணையப்பக்கத்தின் பின்னனி நிறத்தை மாற்றியதுபோல பின்னனி படத்தை உள்ளிடலாம். இதற்கு உங்களுக்கு விருப்பமான படத்தை நீங்கள் தற்போது HTML கோப்பை சேமித்துவைத்திருக்கும் போல்டரில் சேமிக்கவும். பின்னர் மேற்தரப்பட்ட மீயுரையில் <body bgcolor="yellow"> என்பதற்கு பதிலாக <body background="myphoto.jpg"> என்பதை பிரதியிட்டு உங்களுடைய சேமிக்கப்பட்ட படத்தின் பெயரை உரிய இடத்தில் எழுதுக. தற்போது இவ் நோட்பாட் கோப்பை சேமித்துவிட்டு இப்போது அதனை இணைய உலாவியில் பாருங்கள்.

இங்கு நிறங்களை மாற்றியும் பின்னனி படங்களை மாற்றியும் நிறங்களை மாற்றியும் <b>, <i>, <h1>, <h2>, <h3>, <h4>, <h5>, <h6>, <font color="">,
என்பவற்றின் பயன்பாடுகளையும் அறிந்துகொள்ள கொஞ்சம் பயிற்சி செய்யுங்கள். நாளை மீண்டும் சந்திப்போம்.


- Thusi - 03-15-2005

மதன் அண்ண, கவிதன் உதவிக்கு நன்றி. ஆனால் ஹரிக்கு உள்ள அதே பிரச்சினைகள் தான் எனக்கும். யாழ் களத்தின் ஒரு தலைப்பும் எனக்கு சரியாய் வாறதில்லை - பெட்டி பெட்டியாய் தான் வந்து நிற்கும். :roll: :roll: :roll:


- இளைஞன் - 03-15-2005

வணக்கம் துசி அதற்கு காரணம்: உங்கள் கணினியில் யூனிக்கோட் எழுத்துருக்கள் நிறுவப்படாமல் இருக்கலாம். நீங்கள் பயன்படுத்துவது winXP ஆக இருந்தால் அதனை System Configuration இற்கு சென்று மொழிக்கான சேவையை அழுத்தி நிறுவிக்கொள்ளலாம். உங்கள் கணினியில் எந்த இயங்குதளம் உள்ளது என்று சொன்னால் நான் மேலதிக விளக்கத்தை தாறேன்.


வணக்கம் தமிழ்வாணன் நல்ல பயனுள்ள கட்டுரை. நன்றி


- Thusi - 03-16-2005

இளைஞன் அண்ணா எனது கணினி WinXP யில் இயங்குகின்றது.


- anpagam - 03-16-2005

ஒலிவடிவங்களாக விளக்கமும்... Hari போல் விடைகளை (எடுத்துக்காட்டு விடைகளை) போட்டால் இன்னம் விளக்கங்களாக இருக்கும். எழுதுவதைவிட (ஒலி,குரல்) இலகுவாக இருக்கலாம்... தமிழ்வாணனுக்கு அல்லது மற்றோருக்கும்... அவ்வுதவியை மோகன் இங்கு செய்து கொடுக்கலாமே... யாவருக்கும் பயனாகும்.... Idea
<span style='font-size:16pt;line-height:100%'>இடம் (Storage) காணதென்றால் உதவி செய்கிறேன் :| </span>
நன்றி: தமிழ்வாணன் & மோகன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


HTML தொடர் - 3 - thamilvanan - 03-16-2005

இன்று பெரும்பாலானோர் MS Office எனப்படும் தொகுப்பில் வேர்ட், பவர்பொயின்ற், அக்ஸஸ் போன்றவற்றை பயன்படுத்துவீர்கள். அங்கு புறன்ற்பேஜ் எனப்படும் இன்னொரு தொகுப்பு இருப்பதை காணலாம். அதுபற்றி இன்றைய வகுப்பில் பார்ப்போம்.

மைக்ரோசொப்ற் புறன்பேஜ் என்பது இணையவடிவமைப்பில் மிகப்பயன் உள்ளபோதும் சொந்தமாக நோட்பாட் போன்ற எடிட்டர்களில் இணையவடிவமைப்பு பழகுவதே நல்லது. கையாள்வதற்கு இலகுவானதாக இருப்பதால் அதனை இங்கு விளக்கமுயல்கிறேன்.

முதலில் மைக்ரோசொப்ற் புறன்பேஜ்ஜை இயக்குங்கள்.அங்கு புதிய பக்கத்தை திறந்துகொள்ளுங்கள். அப்போது கீழ்பக்கத்தில் Normal, HTML, Preview என பொத்தான்கள் இருப்பதை கண்டுகொள்ளலாம்.

<img src='http://www.geocities.com/thamilsangamam/webpotoes/frontpage.JPG' border='0' alt='user posted image'>

அதில் HTML ஐ கிளிக் செய்யவும். இப்போது கீழே காட்டியுள்ளவாறு அடிப்படை மீயுரை இருப்பதை கண்டுகொள்ளலாம்.


<html>

<head>
<meta name="GENERATOR" content="Microsoft FrontPage 5.0">
<meta name="ProgId" content="FrontPage.Editor.Document">
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=windows-1252">
<title>New Page 24</title>
</head>

<body>

</body>

</html>இதில் தமிழ் எழுத்துருபயன்பாட்டிற்காக charset=windows-1252என்று உள்ள இடத்தில் charset=utf-8 என மாற்றி கொள்ளுங்கள். <title> பகுதிக்குள்ளும் உங்களுக்கு தேவையான பெயரை மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்போது உங்களுடைய மீயுரையை <body> பகுதிக்குள் நேரடியாக எழுதலாம். அல்லது HTML பொத்தானுக்கு அருகில் உள்ள Normal என்ற பொத்தானை அழுத்தியும் இணையப்பக்கத்தை உருவாக்கலாம். அதனை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

நீங்கள் தட்டெழுதியோ அல்லது பிரதியிட்டோ விரும்பிய சொற்றொடரை பதிவு செய்யுங்கள். அதனை select செய்து மைக்ரோசொப்ற் வேட் இல் செய்வதை போல அதன் நிறத்தை மாற்றுங்கள்.

இப்போது HTML அழுத்தி மீயுரையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்கலாம். நிறத்தின் பெயர் எழுத்துகளில் குறிக்கப்பட்டிருக்கும்.
இப்போது Preview ஐ அழுத்தி இணையப்பக்கத்தின் தோற்றத்தை பார்க்கலாம். அதனை இணைய உலாவியில் பரிசோதிக்க கோப்பை சேமித்தபின்னர் இணைய உலாவியில் வழமைபோல் திறக்கவும்.

இதனை சரியான முறையில் செய்திருந்தால் மேற்கொண்டு முன்னர் கற்ற விடயங்களை இப்போது இரண்டு முறைகளாலும் செய்து பாருங்கள். மீண்டும் சந்திப்போம்.


- thamilvanan - 03-16-2005

இத்தொடர் சம்பநதமான சந்தேகங்களை உடனுக்குடன் கேளுங்கள். இணைப்பில் உள்ளவர்கள் அதற்கான விடை தெரிந்தால் உடனடியாகவே பதில் அளிப்பார்கள்.

நேரப்பிரச்சனை காரணமாக பூரண தயார்படுத்தல் செய்வதில் பிரச்சனைகள் இருப்பதால் தொடர் முழுமையாக இருக்கமாட்டாது.

எனவே அப்பகுதிபற்றிய சந்தேகத்தை மட்டும் கேளுங்கள்.

துசியின் கணனியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு இளைஞன் தீர்வு வழங்குவார். ஒரு உயிர்நிலையான வகுப்புக்கு அது முக்கியமென்பதால் அவரிடம் அதனை விட்டுவிடுகிறேன்.

என்றும்
அன்புடன்
தமிழ்வாணன்.


- hari - 03-16-2005

துசி உங்கள் பிரச்சனைக்கு இங்கு தீர்வுண்டு
http://www.yarl.com/forum/viewtopic.php?t=2546


- thamilvanan - 03-17-2005

இங்கு தொடர் பிரயோசனமாக இருக்கிறதா? இல்லையா ? என்பதை பொறுத்தே தொடர்ந்து தொடரை கொண்டுசெல்வதா? அல்லது மாற்றங்களை செய்யவேண்டுமா என தீர்மானிக்கலாம்.

எனவே உங்கள் கருத்துக்களே இதன் தொடர்ச்சியை தீர்மானிக்கும் என்பதால் கருத்துக்களை சொல்லுங்கள்.

என்றும்
அன்புடன்
தமிழ்வாணன்


- hari - 03-17-2005

தமிழ்வாணன் தொடந்து எழுதுங்கள் நல்ல பிரயோசனமாக உள்ளது!
பயன்டுத்துவது அடுத்த வரிக்கு செல்வதற்கா?


- tamilini - 03-17-2005

Quote:தமிழ்வாணன் தொடந்து எழுதுங்கள் நல்ல பிரயோசனமாக உள்ளது
ஆமா தமிழ்வாணன் தொடருங்கள். தெரியாதவற்றை தெரிந்து கொள்வம். பின்னால களத்தில வாறவைக்கும் தேவைப்படலாம் அதை கிடைக்க செய்ய நல்ல வழி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shobana - 03-17-2005

வணக்கம் தமிழ்வாணன் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்...
குறை கூறுகிறேன் என நினைக்கவேண்டாம்... தவறுகள் சுட்டிக்காட்டப்படின் வரவேற்கப்படும் என நம்பி எழுதுகிறேன் பிடிக்காவிட்டால் மன்னித்துக்கொள்ளுங்கள்...
(01) மைக்ரோசொப்ற் என தமிழில் எழுதும் போது பக்கத்தில் (Microsoft) இப்படியும் எழுதுங்களேன்...
(02) விளக்கங்களை சிறிய படங்களுடனும் குடுத்தால் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் அல்லவா?? அதே நேரம் மனதிலும் இலகுவில் புரிந்துவிடும் உதாரணமாக நீங்கள் குறிப்பிட்ட Normal HTML Pervieu அதை ஒரு கொப்பி செய்து இணைத்துவிடுவீர்கள் என்றால் புதிதாக HTML படிப்பவர்களுக்கு இலகுவாக மாதிரி மனதில் பதிந்து விடும்... இது எனது கருத்து தவறு இருப்பின் மன்னித்துக்கொள்ளவும்...
நன்றி


- Mathan - 03-17-2005

hari Wrote:பயன்டுத்துவது அடுத்த வரிக்கு செல்வதற்கா?

ஆம் அடுத்தவரிக்கு செல்வதற்கு தான்.


- Mathan - 03-17-2005

[quote=thamilvanan] இங்கு தொடர் பிரயோசனமாக இருக்கிறதா? இல்லையா ? என்பதை பொறுத்தே தொடர்ந்து தொடரை கொண்டுசெல்வதா? அல்லது மாற்றங்களை செய்யவேண்டுமா என தீர்மானிக்கலாம்.


தொடர் பிரயோசனாமாக இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்கள், அத்துடன் சோபனா குறிப்பிட்டது போல் உங்களால் படங்களை இணைக்க முடியுமா என்று பாருங்கள்,