![]() |
|
15 ஆண்டாக கோமாவில் இருக்கும் பெண் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: 15 ஆண்டாக கோமாவில் இருக்கும் பெண் (/showthread.php?tid=4686) Pages:
1
2
|
- Mathan - 04-01-2005 ஜனநாயகமும், மனிதாபிமானமும் ஓரள்வுக்கேனும் உள்ளமையால் தான் இந்தவிடயம் வெளியில் வந்தது. 15 வருடமாக கோமா நிலையில் ஒருவரை உயிருடன் வைத்திருக்க முடிந்தது. இலங்கையில் என்றால் அவர் இறந்த இடத்தில் புல் என்ன 15 வருடத்தில் மரமே முளைத்திருக்கும். - அசோகன் - 04-01-2005 பரிதாபம். பெற்றோர், கணவன் இரண்டு பகுதியினரின் உணர்வுகளையும் புரிந்த்து கொள்ளக்கூடியிருக்கிறது. புரிந்து கொள்ள முடியாதது அமெரிக்க ஊடகங்களினதும் அரசியல்வாதிகளினதும் நடப்புத்தான்: நாட்கணக்கில் இதைப்பற்றியே பேசினார்கள்; அரசியல்வாதிகள் ஆவேசம் கொண்டார்கள். ஓரு உயிருக்காக இதெல்லாம் செய்வதில் ஆச்சரியமில்லை. ஆனால் இதே ஆசாமிகள் பல்லாயிரக்கணக்கான் உயிர்கள் இராக்கிலும் வேறு இடங்களிலும் அழியும் போது அலட்டிக்கொள்ளவேயில்லையே. |