![]() |
|
9 பேர் சுட்டுக் கொலை... ! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: 9 பேர் சுட்டுக் கொலை... ! (/showthread.php?tid=4478) Pages:
1
2
|
- sinnappu - 04-15-2005 ஐயோாாாாாாாாாாாாாாாாாாாாாா முதல்லில சொல்லுறேல்லையோ 10 :evil: வரப்போகுது
- eelapirean - 04-16-2005 லெப்.கேணல் கௌசல்யனைக் கொன்ற இந்திய குடியுரிமைக்குரிய விஜயனின் குடும்பம் இந்தியாவின் தமிழ்நாடு சலாமில் வாழ்கின்றனர். இந்தியாவிற்கு இறந்தவரின் உடல் செல்லுமா? லெப்.கேணல் கௌசல்யனைக் கொன்ற இந்தியக் குடியுரிமை பெற்ற விஜயனின் உடலை அடக்கம் செய்வதில் இலங்கை அரசாங்கத்திற்குப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் இந்திய இராணுவத்தின் உதவிப்படை உறுப்பினரான இவர் லண்டன் ராமறாஜனின் உத்தரவிற்கு அமைய தனது சகாக்கள் சிலருடன் இலங்கை வந்துள்ளார். இலங்கை இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் முதலாவது தாக்குதலாக மட்டு அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறப்பாளரைக் கொலை செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவரானார். இவர் இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவருடைய மனைவி பிள்ளைகள் தற்போதும் இந்தியாவில் தமிழ் நாட்டின் சலாம் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இறந்தவரின் உடலை மீட்டுத்தருமாறு அவருடைய குடும்பத்தவர்கள் இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சை அணுகியுள்ளனர். இதனால் இந்திய வெளிநாட்டு அமைச்சில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் சமதாதானத்தைக் குழப்பும் சக்தி இந்தியா என்பது இன்றைய சம்பவத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அச்சமடைந்துள்ளதாக வேறொரு தகவல் ஊடாக தெரியவருகிறது. சுட்டது நிதர்சனம் - tamilini - 04-16-2005 உடனிருந்தவர்களாலேயே முகாம் தாக்கப்பட்டிருக்கிறது: பிரிக்கேடியர் தயா ரத்னாயக்கா ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ வெள்ளிக்கிழமைää 15 ஏப்பிரல் 2005ää 22:10 ஈழம் ஸ பொலன்னறுவை மாவட்டம் சொறிவிலவிலுள்ள கருணா குழுவின் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது அவர்களுடன் இருந்தவர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தாம் கருதுவதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் தயா ரத்னாயக்கா தெரிவித்துள்ளார். அப்பிரதேச மக்களின் தகவல்களின் படி பாரிய மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் நடமாடியதற்கான தடயங்களும் இல்லை. இந்நிலையில் இத்தாக்குதல் சம்;பவமானது உள்வீட்டு வேலையாகவே இருக்கலாம் என கருதப்படுகின்றது. இதேவேளை கருணா குழுவினரின் இம் முகாம் காட்டிற்குள் மறைவிடமொன்றில் ஐந்து கூடாரங்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கூடாரத்திற்குள் சமையல் பொருட்களும் மற்றுமொரு கூடாரத்திற்குள் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட உடுதுணி வகைகளும் காணப்பட்டுள்ளன. இதனைத்தவிர இராணுவ சீருடைகளும் றப்பர் செருப்புகளும் காணப்பட்டுள்ளது என தகவல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது www.puthinam.com - anpagam - 04-18-2005 சொறிவில மோதலில் மறைக்கப்பட்ட நான்கு சடலங்கள் இந்தியர்களுடையது? சொறிவில மோதலில் இறந்த ஒன்பது சடலங்களில் நான்கு சடலங்கள் இந்தியர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பொலன்னறுவை மாவட்டம் சொறிவில கிராமத்தில் கருணா குழுவினரின் முகாமில் நடந்த இத்துப்பாக்கி சூட்டுச்சம்பவமானது சிறீலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கருணா குழுவினரின் முகாம்கள் இருக்கின்றன என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கருணா குழுவினருக்கு பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்த பிரதேசத்தில் முகாம்கள் இருப்பதை ஆங்கில வார இதழான சண்டே லீடர் சில வாரங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தியது. போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைப் பிரதிநிதி ஸ்டீன் ஜோர்னசன் சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னலையில் அளித்த சாட்சியத்தில் இதனை உறுதிபட தெரிவித்திருந்தார். ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அளித்த சாட்சியத்திலும் இதனை நிராகரிக்கும் வகையில் சாட்சியமளித்திருந்தனர். இவர்கள் அதாவது நான் சொல்வதெல்லாம் உண்மை என சத்தியம் செய்து இச்சாட்சியத்தை அளித்துள்ளனர். இப்படி இவர்கள் சாட்சியமளித்து இரு வார காலத்திற்குள் கருணா குழுவினரின் முகாம்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இவர்களது சாட்சியம் பொய் என்பதை நிரூபித்து விட்டதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இச்சம்பவமானது சிறீலங்கா அரசிற்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை மேலும் உறுதிப்படுத்தியதாகவே கருத வேண்டியுள்ளது. இருந்தபோதிலும் சிறீலங்கா இராணுவ அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் அப்படியான முகாம்கள் எதுவும் இல்லை என ஊடகங்களுக்கு தெரிவித்தனர். குறிப்பிட்ட கருணா குழுவின் முகாமில் தங்கியிருந்தவர்கள் தொடர்பாக தொடர்ந்தும் மர்மங்கள் நீடிக்கின்றன. இராணுவம் மற்றும் பொலிஸ் தரப்பினர் சில தகவல்களை ஊடகங்களுக்கும் தெரிவிக்க மறுத்து வருகின்றனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது. ஆனால் நான்கு சடலங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் பொலிசாரினால் இந்திய வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் பொலிசார் இது பற்றி எதுவும் கூற மறுக்கின்றனர். இதனைத் தவிர இரண்டு சாக்குகளில் துப்பாக்கி ரவைகள்ää இராணுவ உரு மறைப்பு வலைகளும் அங்கு காணப்பட்டுள்ளன. நன்றி: புதினம் <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 8) :wink:
|