![]() |
|
ஜெயரட்ணம் கடத்தல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஜெயரட்ணம் கடத்தல் (/showthread.php?tid=4404) Pages:
1
2
|
Pathivu.com - விது - 05-03-2005 கொழும்பில் நியூட்டன் காணாமல் போன பின்பே ஜெயரட்ணம் காணாமல் போய்யுள்;ளார். விடுதலைப்புலிகளின் உறுப்பினர் நியூட்டன் உட்பட மூவர் கடந்த 20ஆம் திகதி காலை 7.30மணியிலிருந்து காணாமல் போய்யுள்ளனர் என தெரியவருகிறது. நியூட்டனும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய நேரு மாஸ்டரும் அவரின் சாரதியும் வாகனத்தில் கடந்த 20ஆம் திகதி காலை கொழும்பில் இருந்து செல்லும் போதே கடத்தப்பட்டுள்ளனர் எனவும் அன்று காலை 7.30 மணிக்கு பின் அவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. அதேவேளை கடந்த 20ஆம் திகதி இரவு 11 மணிக்குப் பின்பே குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெயரெட்ணம் காணமல் போனது குறிப்பிடத்தக்கது. ஆனால் புலிகளின் புலனாய்வுப் பிரிவு நீயூட்டன் கொழும்பிற்கு வருகை தந்திருந்த போதே ஜெயரட்ணம் புலிகளால் கடத்தப்பட்டதாக போலியான தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு கடும்பிரயத்தனத்துடன் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. http://www.pathivu.com/content/news/doc/02...02_05_20054.htm இது உண்மையா யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் மண்டை வெடிக்கிறது என்ன பாவம் செய்தோமோ எமக்குமட்டும் ஏன் இப்படி. - விது - 05-03-2005 இதை நான் எதிரியின் தளம் ஒன்றிலும் பார்த்தேன் அதுதான்... - sathiri - 05-03-2005 :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: ஜயரட்ணம் கடத்தல் - திட்டமிட்ட நாடகம்? - eelapirean - 05-03-2005 ஜயரட்ணம் கடத்தல் - திட்டமிட்ட நாடகம்? கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிபரான ரி.ஜெயரட்ணம் விவகாரம் குறித்த மாறுபட்ட தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. தற்போது தெரியவரும் தகவல்களின் பிரகாரம்ää இது சிறீலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினதும் அதனுடன் நெருக்கமாக இணைந்து செயற்படும் இராணுவ துணைப்படையினரதும் மற்றுமொரு நாடகம் என்றே தெரியவருகிறது. குறிப்பாகää விடுதலைப்புலிகளின் உறுப்பினர் நியூட்டன் கொழும்புக்கு வருகை தந்திருந்த போது விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டதாக போலியான தகவல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவு கடும் பிரயத்தனத்துடன் மேற்கொண்டு வருகின்றது. குற்றத்தடுப்புப்பிரிவின் இன்ஸ்பெக்டரான ஜெயரட்ணம் காணாமல் போனதாக ஊடகங்கள் மூலம் இராணுவ புலனாய்வுப்பிரிவினரே திட்டமிட்டு செய்தி வெளியிட்டிருந்தார்கள். நியூட்டன் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பரான கூறப்படும் நேரு மாஸ்டர் மற்றும் நேரு மாஸ்டருடைய வாகனச் சாரதி ஆகியோர் இக்கடத்தடலுடன் தொடர்புபட்டிருந்ததாக இராணுவப் புலனாய்வுப் பிரிவே இச்செய்தியை கசியவிட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படிää சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் குறிப்பிடப்படும் இம் மூவரும் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவிலேயே கொழும்பிலிருந்து கண்டி நோக்கி செல்லும் போது காணாமற் போயுள்ளார்கள் என்றே தெரியவருகிறது. இதேவேளை ஜெயரட்ணம் 20 ஆம் திகதி நள்ளிரவு 11.30 மணியிலிருந்தே காணாமற் போயுள்ளதாகவே ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான நியூட்டன் உட்பட மூவர் காணாமற் போன செய்தியை மூடி மறைப்பதற்காகவே இந்தச் செய்தி உலாவ விடப்பட்டுள்ளதாகவும்ää அத்தோடு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சர்வதேச பிரச்சாரத்தையும் தடுப்பதற்காகவும் ஜெயரட்ணம் காணாமற் போன சம்பவம் நன்கு திட்டமிட்ட முறையில் சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் அதன் துணைக்குழுக்களாலும் கசியவிடப்பட்டுள்ளது என்றே உறுதியாக நம்பப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து இதுபற்றிய கருத்துக்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. சுட்டது புதினம் - eelapirean - 05-21-2005 இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தை விடுவிக்குமாறு அவரின் மனைவி உருக்கமான வேண்டுகோள் கடத்திச் செல்லப்பட்டுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தை கண்டுபிடித்து அவரை விடுதலை செய்ய மனித உரிமை அமைப்புகளும் தொண்டர் நிறுவனங்களும் ஊடகங்களும் உதவ முன்வர வேண்டுமென திருமதி சரளா ஜெயரட்ணம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமையுடன் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் காணாமல் போய் சரியாக ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பொலிஸ் அலுவலகமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். எனக்கு எனது கணவர் தேவைஇ பிள்ளைகள் இரண்டுக்கும் அப்பா தேவை. அவரைக் கடத்திச் சென்றவர்கள்இ அவரை மன்னித்து விடுவிக்க வேண்டும். அவருக்காக மன்னிப்புக் கோர நான் தயாராக இருக்கின்றேன். எனது கணவர் விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகளை சந்திக்கவும் அவரை விடுவித்துக் கொள்ளவும் ஊடகங்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு அவசியமானதொன்றாகும். மேலும்இ மனித உரிமைகள் அமைப்புகள் உட்பட சமய ஸ்தாபன தலைவர்களும் எனது இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். எனது கணவரை விடுவித்து என்னிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் எந்த வித நிபந்தனைக்கும் கட்டுப்பட தயாராக உள்ளேன். எதிர்காலத்தில் எந்த வித சிக்கல்களிலும் தொல்லைகளிலும் ஈடுபடாமல் அமைதியான குடும்ப வாழ்க்கையொன்றையே எதிர்பார்த்துள்ளேன். இப்போது எந்த வித ஆதரவும் இன்றி பிள்ளைகளுடன் தனித்துப்போய் நிர்க்கதியான நிலையிலுள்ளேன். எனவேஇ இரக்கம் காட்டுமாறு வேண்டுகின்றேன். வன்னிக்கு சென்று விடுதலைப் புலிகளின் தலைமைகளுடன் பேசச் சந்தர்ப்பம் அளிக்குமாறும் ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் உருக்கமாக கேட்டுக் கொள்கின்றேன் என்றார். சுட்டது தினகுரல் - jeya - 05-21-2005 இதை முன்னம் எத்தனை அம்மாமார்..மனைவிமார் கதறி அழததை இந்த சரளா அம்மையார் அறிந்திரக்கவில்லையோ..அல்லது இழப்பு..துன்பம் எல்லாம் சரளா அம்மையாரின் வீட்டுக்கதவை தட்டிய பொழுதுதான் உணர்ந்தவவோ???? :twisted: :twisted: - eelapirean - 05-21-2005 காச்சலும் தலையிடியும் தனக்கு தனக்கு வந்தால்த் தான் தெரியும் :evil: |