Yarl Forum
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? (/showthread.php?tid=4285)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- tamilini - 05-17-2005

நிலவன் மற்றும் ஒற்றன் எழுதிய கருத்துக்களைத்தான். :mrgreen: :mrgreen: :mrgreen:


- sathiri - 05-17-2005

தமிழ் உங்கட குடும்ப சிரிப்பு நல்லா இருக்கு :mrgreen: :mrgreen: :mrgreen:


- tamilini - 05-17-2005

|ஆனால் அதை நீங்க.. கொப்பி பண்ணுறது தான் நல்லாய் இல்லை சாத்திரி.. :wink:


- sathiri - 05-17-2005

வீழ்வது யாராயினும் வாழ்வது நானாகட்டும்
வீழ்வது யாராயினும் வாழ்வது நானாகட்டும்
:mrgreen:


- vasisutha - 05-17-2005

ottan Wrote:யூ இடியட் கன்றிபரூட் வாட்ஸ் டமில். தற்ஸ் கன்றிபுரூட் லாங்குயிச் . வீ கான்ற் ஸ்பீக் டமில். வை யூ றைற் ஹியர் ஸபீக் டமில். வீ டேன்ற் லைக் டமில். தற்ஸ் வெரி பாட். அவர் பேரன்ஸ ஓல் சோ டோன்ற் லைக் டமில். வாட்ஸ் யூ ஸபீக்.? திஸ் இஸ் first ரைம். வென் யூ நெக்ஸ் ரைம் யூ றைற் டமில் வீ வில் கில் யூ. வீ லைக் ஒன்லி வைற் வுட் தற்ஸ் வெரி நைஸ்..அவர் மதர் லாங்குயிச் இங்கிலீஸ்.
[/color]
ஒற்றன் எழுதினது இதுதான் :roll:

<i>முட்டாள் பட்டிக்காட்டு தமிழர்களே.. என்ன தமிழ்? அது ஒரு பட்டிக்காட்டு
மொழி.. எங்களால் தமிழ் பேச முடியாது.. ஏன் இங்கு தமிழில் பேசவேண்டும்?
தமிழை நாங்கள் விரும்பவில்லை...அது மிக இழிவானது..
எங்கள் பெற்றோரும் தமிழை விரும்பவில்லை..
நீங்கள் என்ன பேசுவது? இது தான் முதல் தடவை என்றபடியால்
பேசாமல் விடுறன்.. இன்னொரு தரம் தமிழ் பேச முயற்சித்தால்
நாங்கள் உங்களை கொலை பண்ணுவோம்..
நாங்கள் விரும்புவது எங்கள் தாய் மொழி ஆங்கிலமே..</i>


- tamilini - 05-17-2005

ஓ பெரிய நன்றி வசி.. :wink: :mrgreen:


- vasisutha - 05-17-2005

நிலவன் எழுதியது.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

உங்களுக்கு தமிழ் வேண்டாம் என்றால் நல்லது அதை உங்களோடு
வைத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் மற்றவர்களை பேச வேண்டாம் என கூற முடியாது.. யாழ் தளத்தை விட்டு ஓடிடுங்க ஐயா...
உங்களுக்கு தமிழை பிடிக்கலயா அது உங்க பிரச்சனை அதை ஏன்
இங்க பேசுறீங்கள்? உங்களுக்கு ஆங்கிலத்தில எழுத தெரியாது
என்று நினைக்கிறன்..
அடுத்த தடவை மவனே இங்க வந்து தமிங்கிலீசில எழுதின பிச்சுப்புடுவன் பிச்சு.
நீங்க யாரை வேணுமென்னாலும் கொல்லுங்க எனக்கு கவலை இல்லை
ஆனா எங்கள் மொழியை கொலை பண்ணாதீர்கள்.. அதுக்கு மன்னிப்பே இல்லை...

------
எப்படி என்னோட மொழி பெயர்ப்பு? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:


- Danklas - 05-17-2005

அதுசரி வசி கடைசில நிலவன் ஏதோ தமிழிழ எழுதி இருந்தர் வட் இஸ்த்தற்றய்யா?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :evil:


- tamilini - 05-17-2005

நன்றி வசி.. மொழிபெயர்பிற்கு :wink:

Quote:எப்படி என்னோட மொழி பெயர்ப்பு?
சூப்பராக்கும்.. :wink:


- MUGATHTHAR - 05-17-2005

இந்தப் பக்கத்தை பாத்த போதுதான் விளங்கியது எப்பிடி எங்கடை தமிழ் சனம் தமிழ் சமூகத்தை முன்னேற்றியிருக்கிறது என்று.............


- ottan - 05-17-2005

மன்னிக்கவும் களத்தின் கட்டுபாட்டை குழப்பியதற்கு
நிலவன் நீங்கள் நினைப்பதுபோல நான் தமிழை பழிக்கவில்லை.. கறுனா உசுப்பேத்தி தமிழை வெறுக்கின்ற பெற்றோர்களை இன்னும் கொஞ்சம் அர்ச்சனை செய்த தூண்டுவதற்காகத்தான் அதை எழுதினேன். அந்தப்பெற்றொர்கள் தமிழில் எழுதமாட்டார்கள் அவர்களுக்கு சரியாக ஆங்கிலமும் வராது அவர்கள் எழுதினால் இப்படித்தான் எழுதுவார்கள் என்றுதான் எழுதினேன். நீங்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் ஆங்கிலத்தில் கருத்துக்களை வைத்துவிட்டீர்கள். களத்தில் உங்களை மாதிரி பலர் இப்படி ஆங்கிலத்தில் கருத்தை வைக்ககூடும். . தயவு செய்து நீங்கள் உங்கள் ஆங்கில கருத்தை நீக்கிவிடுங்கள்.. உங்கள் தவறை உணர்ந்தால் அது களத்துக்கு ஆரோக்கியம். எனக்கு இன்னமும் களத்தில் கருத்துக்களை நீக்குவதற்கு அனுமதிக்கவில்லை. 50 கருத்துக்களுக்குமேல் எழுதிவிட்டேன். ஆதலால் என்னை திருத்தம் செய்வதற்கு அனுமதிப்பார்கள் என்று நினைக்கின்றேன். அனுதித்ததும் எனது கருத்தை நீக்கிவிடுகிறேன்.


- Mathan - 05-17-2005

[size=13]ஒற்றன்:

ஒருவர் பதில் கருத்து எழுதி அதற்கு மற்றவர்கள் பதில் எழுதிய பின்பு பிழை திருத்தம் தவிர வேறு ஏதும் செய்ய கூடாது என்பது விதி. அதனால் உங்களுக்கு சம்மதமானால் அந்த கருத்தை மட்டுறுத்தினர்கள் நீக்கி விடுவார்கள்


- Nilavan - 05-18-2005

Quote:மன்னிக்கவும் களத்தின் கட்டுபாட்டை குழப்பியதற்கு
நிலவன் நீங்கள் நினைப்பதுபோல நான் தமிழை பழிக்கவில்லை.. கறுனா உசுப்பேத்தி தமிழை வெறுக்கின்ற பெற்றோர்களை இன்னும் கொஞ்சம் அர்ச்சனை செய்த தூண்டுவதற்காகத்தான் அதை எழுதினேன். அந்தப்பெற்றொர்கள் தமிழில் எழுதமாட்டார்கள் அவர்களுக்கு சரியாக ஆங்கிலமும் வராது அவர்கள் எழுதினால் இப்படித்தான் எழுதுவார்கள் என்றுதான் எழுதினேன். நீங்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் ஆங்கிலத்தில் கருத்துக்களை வைத்துவிட்டீர்கள். களத்தில் உங்களை மாதிரி பலர் இப்படி ஆங்கிலத்தில் கருத்தை வைக்ககூடும். . தயவு செய்து நீங்கள் உங்கள் ஆங்கில கருத்தை நீக்கிவிடுங்கள்.. உங்கள் தவறை உணர்ந்தால் அது களத்துக்கு ஆரோக்கியம். எனக்கு இன்னமும் களத்தில் கருத்துக்களை நீக்குவதற்கு அனுமதிக்கவில்லை. 50 கருத்துக்களுக்குமேல் எழுதிவிட்டேன். ஆதலால் என்னை திருத்தம் செய்வதற்கு அனுமதிப்பார்கள் என்று நினைக்கின்றேன். அனுதித்ததும் எனது கருத்தை நீக்கிவிடுகிறேன்

தவறுக்காய வருந்துகிறேன்....

ஆனாலும் ஒற்றன்... நீஙகள் தமிழ் அங்கிலத்தில் எழுதினால் அது தமழ் நான் அதற்க்கு ஆங்கிலத்தில் கதில் எழுதினால்.. புரியாமல் எழுதினதாகுமோ? நீங்கள் உங்கள் மனதுக்குள் நினைப்பதை என்னால் ஊகிக்க முடியாது. அதை நீங்கள் புரிந்த கொள்ள வேண்டும். நீங்கள் எழுதுவதற்க்கு முன் புலம்பெயர்ந்து வெளிநாடு வந்த சில பெற்றோர்கள்.. என்று போட்டு விட்டு தொடங்கியுpருந்தால் எனக்கும் குழுப்பமில்லாமல் இருந்திருக்குமு; அல்லவா?


- Baarathi - 05-18-2005

[quote=கறுணா]டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

அய்யோ! அய்யய்யோ!! ஓஓஓஓஓஓ....................

புலத்தில் முன்னேற்றமோ? ஒரே முன்னேற்றம்தான்! உந்த முன்னேற்றங்களை உங்கத்தையான் வானொலி, தொலைக்காட்சி எல்லாம் அடிக்கடி காட்டுதாம்!! ஐயோஓஓஓஓஓஓ........

1. வெட்டுக் கொத்துகள்.
2. வீடு வீடாக களவுகள்
3. ஊர் கோஷ்டிச் சண்டைகள்
4. கிறடிக்காட் மோசடிகள்
5. இளசுகள் தனியத் திரியேலாது
6. வெளியே வராத பாலியல் வன்முறைகள்
7. வீட்டுக்கு வீடு கோள், குண்டனி
8. காட்டிக்கொடுப்புகள

1. தமிழே வீடுகளிலை கதைக்காத ஒரு கூட்டமாம்.
2. பிள்ளைகள் தமிழ் கதைத்தால் வெட்கமாக எண்ணும் ஒரு மானஸ்தர் கூட்டமாம்.

எதோ சலசலப்புக் கேக்குது! நிண்டால் போட்டுடுவாங்கள் பேந்து உசிரோடிருந்தால் வாறன்....................

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- Sooriyakumar - 05-19-2005

Nilavan Wrote:ஆனாலும் ஒற்றன்... நீஙகள் தமிழ் அங்கிலத்தில் எழுதினால் அது தமழ் நான் அதற்க்கு ஆங்கிலத்தில் கதில் எழுதினால்.. புரியாமல் எழுதினதாகுமோ? நீங்கள் உங்கள் மனதுக்குள் நினைப்பதை என்னால் ஊகிக்க முடியாது. அதை நீங்கள் புரிந்த கொள்ள வேண்டும். நீங்கள் எழுதுவதற்க்கு முன் புலம்பெயர்ந்து வெளிநாடு வந்த சில பெற்றோர்கள்.. என்று போட்டு விட்டு தொடங்கியுpருந்தால் எனக்கும் குழுப்பமில்லாமல் இருந்திருக்குமு; அல்லவா?
தம்பி நிலவன் நீங்கள் எழுதியிருப்பதை ஒருமுறை தமிழாக்கம் செய்யுங்கள். புரியவேயில்லை மிக்க நன்றி.


- Nitharsan - 05-22-2005

மதன் Wrote:அப்படி அவர்களுக்கு மட்டும் சுதந்திரம் அளவு மீறிவிட்டது? என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

சுகந்திரம் இருக்க வேண்டும் அதை யாரும் தட்டிப்பறிக்க முடியாது. அது நியாயமும் இல்லை. ஆனால் அவர்களின் வாதத்தின் படி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற சுகந்திரம் போதவில்லை... ஆண்களுக்கு மிஞ்சிய சுகந்திரம் பெண்களுக்கு இருக்கிறது என்பதில் எவருக்கும் ஐயம் தேவையில்லை. அவர்கள் அந்த சுகந்திரத்தின் வழியே தமது எல்லை மீறிய செயற்பாடுகளை செய்கிறார்கள். குறிப்பாக அவர்களினால் எமது கலாச்சாரம் தூக்கி வீசப்படுகின்றது. சாதராணமாக உடை மற்றும் அணிகலன்கள் அணிவதில் கூட அவர்களுக்கு விருப்பமில்லை. அதை தாான் சொன்னேன்....அவர்கள் எப்படி இருக்க வேண்டும் அவர்கள் எவ்வாறு எமது கலை கலாச்சாரங்களை மதிக்க வேண்டும் அவற்றை எவ்வாறு பாதுகாக் வேண்டும் என்பவற்றை நான் சொல்ல முடியாது. அவர்கள் தாமாகவே உணரவேண்டும் அவர்கள் உணரும் வரை இவை தொடரும்

மதன் Wrote:பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? யாழிலும் இப்படி நடக்கின்றதே?
பிள்ளைகளை வளர்ப்பதில் தவறு என்று நான் சொல்ல வரவில்லை. பெற்றவர்கள் அனைவரிடமும் உள்ள ஒரே குறைபாடு தமது பிள்ளைகளின் வீட்டு செயற்பாடுகளை வைத்து கணிப்பிடுவது. அதாவது ஒரு பிள்ளை வீட்டில் நல்லவனாய் படிப்பில் சுட்டியாய் இருப'்பானாய் இருந்தால் போதும். அவன் தண்ணி அடித்தால் என்ன.....புகைதால் என்ன.....________________-செய்தால் என்ன.. இவர்களுக்கு தெரியப்போவதில்லை. இதனால் இவர்கள் தங்கள் பிள்ளைகளால் ஏமாற்றப்படுகின்றனர். எனவே தமது பிள்ளைகள் வெளியில் என்ன செய்கிறார்கள்.. யாரோடு பழகுகிறார்கள் என்று அறிய வேண்டும். யாழிலிலும் தமிழர்கள் தானே இருக்கின்றார்கள். அங்கு இங்கிருக்கும் இளைஞர்களுக்கும். அங்கு இருக்கும் இளைஞ்களக்கும் இளைஞர்கள் என்ற ரீதியிலே ஒற்றுமையுள்ளது. இன்னும் சொல்லப்போனால் சண்டையிணிகளில் உருவாக்த்தில் விளைநிலமே எமது தாயகம் தான்.... அப்படியிருக்கையில்...இப்படி கேட்பது நியாயமா?

மதன் Wrote:அதற்காக கீழே தாழ்த்தி வைத்திருந்தால் பிரைச்சனை வராது என்று நினைக்கிறீர்களா?
அப்படியில்லை... நீங்கள் எப்படி வைத்திருந்தாலும் இவர்கள் பிரச்சினையை கிளப்பியே தீருவார்கள் (அனைவரும் அல்ல ஒரு சிலர்)
நன்றான இருக்கும் குடும்பத்தில் ஒரு தொலைக்காட்சி தொடர் நாடகம் கூட பிரச்சினையை உண்டு பண்னலாம்...கீழே தாழ்த்தி வைத்திருப்பது பெண்ணடிமையாக்கப்படுவது. இதற்க்கும் நான் மெலே சொன்னது போல... இவர்கள் தாங்களாக உணரவேண்டும்... ஒரு வசனத்தை பேச முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டும்......இங்கு பெரும்பால விடையங்களில்.. கணவன் மனைவிக்கிடையே சம்பாசனை நடைபெறுகையில் சில வசனங்களை அவதானிக்க முடியும்.....அவை தமிழில் பார்க்கும் போது அவை......எமது சமூக கட்டுப்பாட்.டுக்குள் இருந்த மீறப்பட்டவையாக இருக்கும்...எங்கள் சமூக கட்டுப்பாடு என்று நான் சொன்னது மதங்களை அல்ல தமிழ் சமூக கட்டுப்பாடுகளை... தமிழரின் சமூக கட்டுப்பாடுகள் எவரையும் அடிமைப்படுத்துவதற்காய் அமைக்கப்பட்டவை அல்ல என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்........


- poonai_kuddy - 05-24-2005

ஆண்களுக்கு மிஞ்சின சுதந்திரம் பெண்களுக்கிருக்கெண்டு நீங்கள் சொல்லுறது எனக்கு புரியேல நிதர்சனண்ணா அப்பிடியென்ன மேலதிக சுதந்திரமிருக்கெண்ட எழுதுங்க பாப்பம் :evil:


- samsan - 05-25-2005

இங்கே எழுதியிருக்கிறது எல்லாவற்றையும் நான் வாசிக்கவில்லை. அதனால் அதன் போக்கை நான் அறியேன். என்கருத்துப்படி மறுமணம் செய்வது ஒன்றும் தீய செயலல்லவே. என்னைப்பொருத்தவரைக்கும். ஒருவர் மறுமணம் செய்ய விரும்பும் பட்சத்தில் இந்த சமூகம் என்ன சொல்லுவது. அதற்கு அவர் என்ன பயம்கொள்வது. இது சாத்தியமானதா சாத்தியமில்லாததா என அறிந்து அவர்தான் முடிவெடுக்கவேண்டும்.

இதைக்கேள்வியாக கேட்பதைவிட்டுவிட்டு கட்டளையிடவேண்டியதுதான்.


- Nitharsan - 05-25-2005

samsan Wrote:இங்கே எழுதியிருக்கிறது எல்லாவற்றையும் நான் வாசிக்கவில்லை. அதனால் அதன் போக்கை நான் அறியேன். என்கருத்துப்படி மறுமணம் செய்வது ஒன்றும் தீய செயலல்லவே. என்னைப்பொருத்தவரைக்கும். ஒருவர் மறுமணம் செய்ய விரும்பும் பட்சத்தில் இந்த சமூகம் என்ன சொல்லுவது. அதற்கு அவர் என்ன பயம்கொள்வது. இது சாத்தியமானதா சாத்தியமில்லாததா என அறிந்து அவர்தான் முடிவெடுக்கவேண்டும்.

இதைக்கேள்வியாக கேட்பதைவிட்டுவிட்டு கட்டளையிடவேண்டியதுதான்.

ம்ம் அது கணவனை இழந்தவர்களுக்கு அது சரி.... கணவனை மாற்றுவோருக்கு??...நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்று நினைத்தேன் அதற்கான பதில் ...... நான் ஒன்றும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று கல்லோடும் புல்லோடும் வாழ்க்கை நடத்த சொல்வதாய் எண்ண வேண்டாம். இங்கு தேவையற்ற பிரச்சினைகளுக்காய் விவாகரத்து ஏற்ப்படுகிறது அது மட்டுமன்றி.. விவாகரத்துக்கு விண்ணப்பிக்க மன்னனே அடுத்த மாப்பிள்ளை பார்க்கிறார்கள் சிலர்....


- Nitharsan - 05-25-2005

poonai_kuddy Wrote:ஆண்களுக்கு மிஞ்சின சுதந்திரம் பெண்களுக்கிருக்கெண்டு நீங்கள் சொல்லுறது எனக்கு புரியேல நிதர்சனண்ணா அப்பிடியென்ன மேலதிக சுதந்திரமிருக்கெண்ட எழுதுங்க பாப்பம் :evil:
மன்னக்கனும் பூனைக்குட்டி நேரமாச்சு நித்திரை வேறு வருகிறது உங்கள் கேள்விக்கான விளக்கத்தை இதே இடத்தில் நாளை தருகிறேன்....