Yarl Forum
தமிழ்ச் சொற்களஞ்சியம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: தமிழ்ச் சொற்களஞ்சியம் (/showthread.php?tid=4270)

Pages: 1 2 3

- thamilvanan - 05-22-2005

நான் என்ன சொல்கிறேன் என்றால் நடைமுறைக்கு ஏற்றவகையில் முதலில் பஸ் என்பதை பேரூந்து என்றும் றெயின் என்பதை தொடரூந்து என்றும் அவசியமானவற்றை முதலில் ஏற்றுக்கொண்டு திருத்துவோம்.

இங்கும் சில நடைமுறைப்பிரச்சனைகள் உண்டு. அதாவது தொடரூந்து என்பது பெரிய சொல்லாகி சொல்வதற்கு கடினமாக இருக்கிறது.

தொடரூந்து எத்தனை மணிக்கு வரும்? என்று சொல்வது நீண்டுவிட்டது.

ஆக செய்யவேண்டியதை முதலில் செய்வோம்.

அதைவிடுத்து
<b>"அவனுக்கு மாங்காயீரலில் நோயுள்ளதால் மாங்காயீரல் பண்டுவம் செய்யவேண்டும் என வைத்தியர் சொன்னார்"</b>
<b>
"தம்பி தான் வளர்த்த பொழுதுவணங்கியும் பூத்திருப்பது கண்டு பொந்திகை கொண்டான்"</b>

என கதைக்க எழுதவேண்டுமென நினைப்பது ஆரோக்கியமானதா?

- Sriramanan - 05-22-2005

நன்றி கலை
உங்களிடமிருந்து மேலும் தூய தமிழ்ச் சொற்களை எதிர்பார்க்கிறோம்.

- Kalai - 05-22-2005

thamilvanan Wrote:நான் என்ன சொல்கிறேன் என்றால் நடைமுறைக்கு ஏற்றவகையில் முதலில் பஸ் என்பதை பேரூந்து என்றும் றெயின் என்பதை தொடரூந்து என்றும் அவசியமானவற்றை முதலில் ஏற்றுக்கொண்டு திருத்துவோம்.

இங்கும் சில நடைமுறைப்பிரச்சனைகள் உண்டு. அதாவது தொடரூந்து என்பது பெரிய சொல்லாகி சொல்வதற்கு கடினமாக இருக்கிறது.

தொடரூந்து எத்தனை மணிக்கு வரும்? என்று சொல்வது நீண்டுவிட்டது.

ஆக செய்யவேண்டியதை முதலில் செய்வோம்.

அதைவிடுத்து
<b>"அவனுக்கு மாங்காயீரலில் நோயுள்ளதால் மாங்காயீரல் பண்டுவம் செய்யவேண்டும் என வைத்தியர் சொன்னார்"</b>

<b>
"தம்பி தான் வளர்த்த பொழுதுவணங்கியும் பூத்திருப்பது கண்டு பொந்திகை கொண்டான்"</b>

என கதைக்க எழுதவேண்டுமென நினைப்பது ஆரோக்கியமானதா?
தாய் மொழியில் கதைப்பது உங்களுக்கு ஆரோக்கியமாகத் தெரியவில்லையா தமிழ்வாணன்? <b>"அவனுக்கு மாங்காயீரலில் நோயுள்ளதால் மாங்காயீரல் பண்டுவம் செய்யவேண்டும் என வைத்தியர் சொன்னார்"</b>இப்படிக் கதைப்பதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை.

- Kalai - 05-22-2005

hari Wrote:முடிந்தளவு கள உறவுகள் யாழ் களத்தில் தூயதமிழில் உரையாட முயற்சி செய்வோமா?
நல்ல கருத்து

- Nitharsan - 05-22-2005

தமிழ் வாணன் நீங்கள் இதையே நீண்டு விட்டது சொன்னாள் மற்றவற்றை என்ன சொல்வீர்கள்....ரெயில் என்பதை..வேறு எப்படி தமிழில் சருக்கமாய் அழைப்பது.. எல்லாவற்றையும் சொல்வது இலகு ஆனால்... நடைமுறையில் அவை சாாத்தியமற்றவை

- hari - 05-22-2005

Kalai Wrote:
thamilvanan Wrote:நான் என்ன சொல்கிறேன் என்றால் நடைமுறைக்கு ஏற்றவகையில் முதலில் பஸ் என்பதை பேரூந்து என்றும் றெயின் என்பதை தொடரூந்து என்றும் அவசியமானவற்றை முதலில் ஏற்றுக்கொண்டு திருத்துவோம்.

இங்கும் சில நடைமுறைப்பிரச்சனைகள் உண்டு. அதாவது தொடரூந்து என்பது பெரிய சொல்லாகி சொல்வதற்கு கடினமாக இருக்கிறது.

தொடரூந்து எத்தனை மணிக்கு வரும்? என்று சொல்வது நீண்டுவிட்டது.

ஆக செய்யவேண்டியதை முதலில் செய்வோம்.

அதைவிடுத்து
<b>"அவனுக்கு மாங்காயீரலில் நோயுள்ளதால் மாங்காயீரல் பண்டுவம் செய்யவேண்டும் என வைத்தியர் சொன்னார்"</b>

<b>
"தம்பி தான் வளர்த்த பொழுதுவணங்கியும் பூத்திருப்பது கண்டு பொந்திகை கொண்டான்"</b>

என கதைக்க எழுதவேண்டுமென நினைப்பது ஆரோக்கியமானதா?
தாய் மொழியில் கதைப்பது உங்களுக்கு ஆரோக்கியமாகத் தெரியவில்லையா தமிழ்வாணன்? <b>"அவனுக்கு மாங்காயீரலில் நோயுள்ளதால் மாங்காயீரல் பண்டுவம் செய்யவேண்டும் என வைத்தியர் சொன்னார்"</b>இப்படிக் கதைப்பதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை.
எனக்கும் அது தவறாக தெரியவில்லை! அது பழக்கம் இல்லாததால் ஒரு மாதிரியாக தெரிகிறது என நினைக்கின்றேன்! முயற்சி செய்தால் மாற்றிக்காட்டலாம்!

- hari - 05-22-2005

அடுத்த வீட்டு அம்மா அழகாக இருக்கிறாள் என்பதற்காக அவளையா அம்மா என்றழைப்பது?

sss - thamilvanan - 05-22-2005

hari Wrote:அடுத்த வீட்டு அம்மா அழகாக இருக்கிறாள் என்பதற்காக அவளையா அம்மா என்றழைப்பது?

பார்த்தீர்களா அடுத்தவீட்டு அம்மா அழகு என்று நீங்களும் சொல்கிறீர்கள். நீங்கள் அதனை அடுத்தவீட்டு அம்மா என்று சொல்கிறீர்கள். அந்த அடுத்தவீட்டில் யாராவது சூரியன் என்பதை தங்களுடைய சொல்லாக பயன்படுத்துகிறார்களா?

சித்தாந்த ரீதியாக கதைக்காமல் விஞ்ஞான ரீதியாக சிந்தித்தால் இத்தேவையற்ற நடைமுறைகள் தற்போது அவசியம் இல்லை.

முதலில் கோமணம் தான் முக்கியமே தவிர தலைப்பாகை அல்ல.

தற்போது பல ஆங்கில சொற்களையே(முன்னர் அவ்வாறு கருதப்பட்ட) அவை அடிப்படையில் தமிழ் சொற்களே என அறிஞர்கள் நிறுவி வருகிறார்கள். எனவே இச்சொற்களும் எதிர்காலத்தில் தமிழ்ச்சொற்கள் தான் என நிறுவப்படலாம்.

sss - thamilvanan - 05-22-2005

இது தமிழ்ச்சொல்தான் என்பதை உறுதியாக சொல்லகூடிய அவ்வாறு தூயதமிழில் குறைந்தது 50 சொற்களில் ஒரு பந்தியை யாராவது இங்கு <b>சுயமாக</b> எழுதினால் நானும் உங்கள் பேரணியில் இணைந்துகொள்கிறேன்.

Re: sss - hari - 05-22-2005

thamilvanan Wrote:இது தமிழ்ச்சொல்தான் என்பதை உறுதியாக சொல்லகூடிய அவ்வாறு தூயதமிழில் குறைந்தது 50 சொற்களில் ஒரு பந்தியை யாராவது இங்கு <b>சுயமாக</b> எழுதினால் நானும் உங்கள் பேரணியில் இணைந்துகொள்கிறேன்.
எனக்கும் தெரியும் நாங்கள் எழுதுவது தூய தமிழ் இல்லையென்று என்ன செய்வது எங்கள் மூதாதையர் விட்டு பிழையை நாங்கள் திருத்த நினைப்பது தவறா? முயற்சி செய்தால் எதிர்கால சந்ததிக்காவது நல்ல தமிழை விட்டு செல்லலாம் அல்லவா?

- thamilvanan - 05-22-2005

நான் நீங்கள் கருதுவதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் உடனடியாக செய்யவேண்டிய வேலைகள் பல இருக்கின்றன என்பதைதான் நான் சொல்கிறேன்.

கலை அவர்கள் சொல்கிறார்:
அதாவது சூரியன் என்பதற்கு கதிரவன் என்ற அழகான தழிழ்ச் சொல் இருக்கும்போது ஏன் நாம் சூரியன் என்று பாவிக்க வேண்டும்.

நான் என்ன சொல்கிறேன் என்றால் <b>சண்ரீவி</b> என்று சொல்வதை ( அது கூட <b>சன் டிவி</b> ஆகிவிட்டது) முதலில் சூரியதொலைக்காட்சி என்றாவது மாற்றமுயற்சி செய்ய வேண்டும் என்பதுதான்.

நீங்கள் 100வீதம் வேண்டும் என்கிறீர்கள். நான் படிப்படியாக முன்னேறிசெல்வோம் என்கிறேன்.

உங்கள் அனைவரின் தமிழார்வத்துக்கும் நன்றிகள்.

- Kalai - 05-22-2005

<b>தமிழ்ச்சொல்----------------------வடசொல்</b>
மகிழ்ச்சி--------------------------சந்தோசம்
மருப்பு---------------------------தந்தம்
மறை-----------------------------வேதம்
முகில்-----------------------------மேகம்
முறை-----------------------------நீதி
வஞ்சினம்-------------------------சபதம்
வனப்பு---------------------------காவியம்
வியப்பு---------------------------ஆச்சரியம்
விலங்கு--------------------------மிருகம்
வெள்ளுவா----------------------பௌர்ணமி

- poonai_kuddy - 05-24-2005

எனக்கொரு சந்தெகம் கலையக்கா :?

விலங்கு எண்டால் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் எல்லாத்துக்கும் பொதுவா சொல்றதெண்டு நினைச்சன். மிருகம்: சிங்கம் புலி நாய் கழுதை குரங்கு; பறவை: கிளி, காகம், குருவி, மயில்; விலங்கு: மனிதர், புலி, கிளி இப்பிடித்தான் நினைச்சிருந்தன். இப்ப விலங்கெண்டுறது எத சொல்றதுக்கு பயன்படுது? மனுசர் சிங்கம் புலி கிளி காகம் எல்லாத்தையுமா இல்லாட்டி தனிய சிங்கம் புலி போன்றவற்றை மட்டுமா?

- poonai_kuddy - 05-24-2005

thamilvanan Wrote:நான் நீங்கள் கருதுவதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் உடனடியாக செய்யவேண்டிய வேலைகள் பல இருக்கின்றன என்பதைதான் நான் சொல்கிறேன்.

கலை அவர்கள் சொல்கிறார்:
அதாவது சூரியன் என்பதற்கு கதிரவன் என்ற அழகான தழிழ்ச் சொல் இருக்கும்போது ஏன் நாம் சூரியன் என்று பாவிக்க வேண்டும்.

நான் என்ன சொல்கிறேன் என்றால் <b>சண்ரீவி</b> என்று சொல்வதை ( அது கூட <b>சன் டிவி</b> ஆகிவிட்டது) முதலில் சூரியதொலைக்காட்சி என்றாவது மாற்றமுயற்சி செய்ய வேண்டும் என்பதுதான்.

நீங்கள் 100வீதம் வேண்டும் என்கிறீர்கள். நான் படிப்படியாக முன்னேறிசெல்வோம் என்கிறேன்.

உங்கள் அனைவரின் தமிழார்வத்துக்கும் நன்றிகள்.

அதேனண்ணா மாத்தேக்க நேரடியா தமிழில கதிரவன் எண்டு மாத்திட்டால் பிரச்சினையே இல்லத்தானெ. பிறகெதுக்கு ஆங்கிலத்திலிருப்பதை பிரெஞ்சு மொழிக்கு மாத்தி அத ஆங்கிலத்துக்கு மாத்தி கடைசில தமிழுக்கு மாத்துவான்? மக்களை களைப்படைய செய்யிற வேலைதானே உது. நேரடியாக "கதிர்" எண்டு வச்சாலே அழகா இருக்கும். மக்களிட்ட போய்ச் சேரும். அதுகள விடுங்கோண்ணா இங்க எங்கட ரிரிஎன் தொலைக்காட்சியே தன்ர பேர தமிழில போட்டுக் காட்டுறேல. தமிழ்த் தொலைக்காட்சி இணையம் என்று எல்லாருக்கும் தெரியும் ஆனா அத விளம்பரங்களில Tamil Television Network எண்டுதான் காட்டுகினம். ஏனெண்டு தெரியல. அகேனம் எண்டு லோகோ வச்சிருந்தால் மட்டும் போதுமா?

நீங்கள் சொன்னது படிப்படியாக இல்லை. ஒரு மீற்றர் கடக்கவேண்டிய தூரத்த இரண்டு மீற்றராக்கு சுத்தி வரச்சொல்லுறீங்கள். அது சரியில்ல :roll:

- Kalai - 05-25-2005

poonai_kuddy Wrote:எனக்கொரு சந்தெகம் கலையக்கா :?

விலங்கு எண்டால் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் எல்லாத்துக்கும் பொதுவா சொல்றதெண்டு நினைச்சன். மிருகம்: சிங்கம் புலி நாய் கழுதை குரங்கு; பறவை: கிளி, காகம், குருவி, மயில்; விலங்கு: மனிதர், புலி, கிளி இப்பிடித்தான் நினைச்சிருந்தன். இப்ப விலங்கெண்டுறது எத சொல்றதுக்கு பயன்படுது? மனுசர் சிங்கம் புலி கிளி காகம் எல்லாத்தையுமா இல்லாட்டி தனிய சிங்கம் புலி போன்றவற்றை மட்டுமா?
தாவரம அல்லாத ஏனைய உயிரினம்; (மனிதன் உள்ளடங்கலாக) அனைத்தும் <b>விலங்கு</b>. மிருகம் விலங்குக்காக நாம் பாவிக்கிற வடமொழிச் சொல்.

- thamilvanan - 05-25-2005

பூனைக்குட்டிக்கான பதில்: :roll:

கல்தோன்றி மண்தோன்றி முன்தோன்றாக் காலத்தே(?) பிறந்தது தமிழ்க்குடி என்றால் கூடுதலான சொற்கள் தமிழிலிருந்துதான் பிறமொழிக்கு சென்றிருக்க வேண்டும்.

தற்போது பல ஆங்கில சொற்களையே(முன்னர் அவ்வாறு கருதப்பட்ட) அவை அடிப்படையில் தமிழ் சொற்களே என அறிஞர்கள் நிறுவி வருகிறார்கள். எனவே இச்சொற்களும் எதிர்காலத்தில் தமிழ்ச்சொற்கள் தான் என நிறுவப்படலாம்.

எனவேதான் நான் சொல்கிறேன். இந்த விடயத்தில் முக்கியமான விடயத்துக்கு மட்டும் கவனம் செலுத்துங்கள்.

ஒரு சொல்லை பிழை என்றும் மற்றயதை தவறென்றும் சொல்வதானால் அதனை நிறுவவேண்டும். அதனை அப்போதுதான் ஏற்றுக்கொள்ளமுடியும்.

உதாரணத்துக்கு சூரியன் வடமொழி சொல் என்றும் அதன் அடி தமிழ் அல்ல என்றும் நிறுவவேண்டும். பின்னர் கதிரவன் என்பது சூரியனை குறிக்கும் தமிழ்ச்சொல் என நிறுவவேண்டும்.

அதனைவிடுத்து எழுந்தமானதாக இதனை தவறென்றும் அதனை சரியென்றும் சொல்லமுடியுமா? என்பதே என் கேள்வி.

அப்படி அல்லாமல் அதற்கான நிறுவல்கள் இருப்பின் அவற்றை வெளிப்படுத்துவதன் மூலமே அவை வலிதாகும்.

- thamilvanan - 05-25-2005

மேலும் தமிழ் என்பது கூட இந்த வடிவில் ஆதியில் இருக்கவில்லை என்பதையும் பலரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இதனை எழுதுகிறேன்.

திரவிடம் ---> திரமிளம் ---> திரமிழம் ---> தமிழம் ---> தமிழ்

இவ்வாறான ஒரு படிறையான வளர்ச்சியில்தான் "தமிழ்" ஏ பிறந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் தற்போது நாம் எழுதும் தமிழ் எழுத்து வடிவங்களோ அல்லது வசன அமைப்புகளோ அங்ஙனம் இருந்ததில்லை என்பதையும் தற்போது ஆதி தமிழ் எழுத்தாவணங்களை பார்த்து "மொழி பெயர்க்க கூடிய எவரும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என நினைக்கிறேன்.

ஏன் இதனை சொல்கிறேன் தமிழின் அடிப்படைகளை மாற்றாமல் தமிழ் மாற்றமடைந்துள்ளது என்பதையும் இன்னும் புதிய மாற்றங்கள் வரும் என்பதையும் கொள்க.

- Kalai - 05-25-2005

thamilvanan Wrote:பூனைக்குட்டிக்கான பதில்: :roll:

கல்தோன்றி மண்தோன்றி முன்தோன்றாக் காலத்தே பிறந்தது தமிழ்க்குடி என்றால் கூடுதலான சொற்கள் தமிழிலிருந்துதான் பிறமொழிக்கு சென்றிருக்க வேண்டும்.

தற்போது பல ஆங்கில சொற்களையே(முன்னர் அவ்வாறு கருதப்பட்ட) அவை அடிப்படையில் தமிழ் சொற்களே என அறிஞர்கள் நிறுவி வருகிறார்கள். எனவே இச்சொற்களும் எதிர்காலத்தில் தமிழ்ச்சொற்கள் தான் என நிறுவப்படலாம்.

எனவேதான் நான் சொல்கிறேன். இந்த விடயத்தில் முக்கியமான விடயத்துக்கு மட்டும் கவனம் செலுத்துங்கள்.

ஒரு சொல்லை பிழை என்றும் மற்றயதை தவறென்றும் சொல்வதானால் அதனை நிறுவவேண்டும். அதனை அப்போதுதான் ஏற்றுக்கொள்ளமுடியும்.

உதாரணத்துக்கு சூரியன் வடமொழி சொல் என்றும் அதன் அடி தமிழ் அல்ல என்றும் நிறுவவேண்டும். பின்னர் கதிரவன் என்பது சூரியனை குறிக்கும் தமிழ்ச்சொல் என நிறுவவேண்டும்.

அதனைவிடுத்து எழுந்தமானதாக இதனை தவறென்றும் அதனை சரியென்றும் சொல்லமுடியுமா? என்பதே என் கேள்வி.

அப்படி அல்லாமல் அதற்கான நிறுவல்கள் இருப்பின் அவற்றை வெளிப்படுத்துவதன் மூலமே அவை வலிதாகும்.
தமிழ்வாணன் இச் சொற்கள் தமிழ்ச் சொல்லாய்வுத் துறையில் ஒப்பற்றவராகக் கருதப்படும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. அவருடைய நூல்களை அடிப்படையாக வைத்துத்தான் இப்பொழுது பலரும் தமிழ்ச் சொல்லாரச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் சூரியன் என்பது தமிழ்ச் சொல்லாக இருக்க வாய்ப்பு இல்லை.

- Nilavan - 05-25-2005

தமிழ் நாட்டு தொலைக்காட்டி பெயரை நங்கள் மாற்றவா....அட பாவிங்களா தொலைச்சிடுவன் மவனுகள... நாங்கள் யார் தமிழின் தாய் வீடு நாங்கள் ஆங்கித்தை தமிழ்ல கலப்பம் தமிழை ஆங்கிலத்தில் கலப்பம் ஈழத்தமிழ் முட்டாள் வேண்டுமென்றால் தமிழுக்காய் உயிர் கொடுக்கட்டும் நாங்கள் மானப்பிறவிகள் எங்களுக்கு எங்கள் வீட்டுப்பிரச்சினைதான் முக்கியம் உழை உண் உடு படு சாவு...இந்த இரண்டெழுத்து வாக்கியங்கள் தான் எங்கள் தாரக மந்திரம் எவனாவது சண் ரீவியை சூரியன் தொலைக்காட்சி என்றோ ராஸ் ரீவியை ராஜா தொலைக்காட்சி என்றோ கதைச்சீக்க அவ்வளவு தான்...
ஆமா நம்ம தொலைகாட்சிகள் தானெ ஆங்கிலபெயால இருக்கு பேந்தேன்டா நீங்கள் கள்ளக்காட் பொட்டு அதை பாக்கிறீங்க....அதுமட்டுNமு உங்கடை ஆக்கள் தயாரிக்கற படங்களை கூட நீங்கள் நிராகரிக்கிறீங்கள் பிறகெதுக்கு உங்களுக:கு தமிழுணர்வு... தனித்துவமாய் ஏதாவது செய்யுங்க எங்களை கொப்பி பண்ணி படமெடுக்காதீங்க. எங்களை கொப்பி பண்ணி நாடகம் எடுக்காதீ;க..பாடல் படிக்கிறதுக்கு எங்கடை கலைஞர்களிட்ட வரதையுங்கோ... தனிச்சிறப்பொட எடுத்து வெற்றி பெறுங்க அதுக்கு பிறகு எங்களிட்ட கலைகளைப்பற்றி கதையுங்க.....
(நான் ஒரு இந்தியனாய் இருந்து பதில் சொன்னேன்)
நிலவன்

- Sriramanan - 05-25-2005

திரவிடம் ---> திரமிளம் ---> திரமிழம் ---> தமிழம்
தமிழ்வாணன் இதை

தமிழ் ---> தமிழம் ---> திரமிளம் ---> திராவிடம்
என்று பாருங்கள்

தமிழ் என்ற சொல் ஆரியர்களின் உச்சரிப்புக்களினாலேயே திராவிடம் என வந்ததாக கூறுகிறார்கள்.