Yarl Forum
கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை (/showthread.php?tid=420)

Pages: 1 2


- பிறேம் - 03-29-2006

Nitharsan Wrote:மின்னலுக்கு,
சின்னபிள்ளைத்தனமாக செய்திகள் வரும் போது சிறு பிள்ளை போல் கருத்தெழுதுவதில் தவறுகள் இல்லையே!.. :roll:
தலைமை செயலகத்தின் உறுப்பினர்கள் கனடாவில் செயற்ப்பட முடியாது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே அப்படியான பொய்யை கூறும் போதும் மக்கள் ஏமாற மாட்டார்கள். சாதாரணமாக கனடாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் கனடிய சட்டதிட்டங்கள் நன்றாகவே தெரியும். எனவே இப்படி ஒருவர் சொல்லி செயற்ப்படுகின்றார் என்றால்!.. இது உண்மை என்றால்!.. நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையினரிடமே தெரிவிக்கலாமே!...

நன்றி அண்ணா உங்கள் கருத்திற்கு. ஆயினும் சில விடயங்களை மறைக்க முயலாதீர்கள். இது சமூக விழிப்புணர்விற்காக கொடுக்கப்பட்ட தகவலே தவிர இதைவைத்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது.


- பிறேம் - 03-29-2006

Nitharsan Wrote:விளம்பரப்படுத்துவதன் மூலம் அவர்களை நாம் பெரியவர்களா மாற்றுகின்றோம் என்பதையும், கனடாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் துரெரிகளை இணைக்க சந்தர்ப்பம் வழங்குவதாக அமையும் என்பதையுமே சொன்னேன். அதே வேளை எட்டப்பர் இணையத்து செய்தி எவ்வளவு உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனாலும் அந்த செய்தி முற்று முழுதான உண்மையில்லை என்பதில் எனக்கு வேறு கருத்தேதும் இல்லை.

விளம்பரப்படுத்தாதே அவர்கள் இணைந்து கொள்வார்கள். அவர்களை இணைப்பதற்கு விளம்பரம் தேவையில்லை. காரணம் அவர்கள் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுவது பொதுவானவர்கள் மூலம். ஆகவே அவர்களை இணைக்க வேண்டிய தேவை யாரிற்கும் இல்லை. ஆயினும் அவர்களை சமூகத்தின் மத்தியில் காட்டவேண்டிய காலத்தின் தேவை உள்ளது. இன்று தமிழீழ போராட்டத்தின் முக்கியதொரு காலகட்டத்தில் நிற்கும் போது இவர்கள் மக்களிடையே ஊடுருவி தமிழரின் ஒற்றுமையை சிதைக்க முயல்வதை வெளிக்காட்டுவது தவறு என்று நீங்கள் கூறுகிறீர்களா :roll: Idea


- Nitharsan - 03-30-2006

பிறேம் நீங்களும் இங்கு சிலரும் ஒரே பார்வையில் இந்த செய்திகளை பார்க்கிறீர்கள். இவர்களை போல தான் டக்கிளஸ் ஆனந்த சங்கரி போன்றவ்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள் அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை தமிழ் தேசியத்தை சொல்லி கொண்டு துரோகி டக்ளஸ் துரொகி ஆனந்த சங்கரி என்று சொல்லிய ஊடகங்களையே சாரும். இல்லையேனில் ஒரு மூலையில் எங்கோ பெட்டிப்பாம்பாய் அடங்கி கிடந்திருப்பார்கள். நாய்கள் குரைக்க தான் செய்யும் அதற்காய் நாம் திருப்பி குரைப்பதில் பயனில்லை. அதை குரைக்காமல் நிறுத்த, அல்லது தன் பாட்டிலே அது குரைப்பதை நிறுத்த நாங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். மக்களை விழிப்புணர்வு படுத்துவது தவறல்ல. மக்களை விழிப்புணர்வு படுத்துவதங்க்கு முன், அவர்களை இச் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கி விட்டால் அல்லது, ஒழித்து விட்டால் மக்களுக்கு விழிப்புூட்ட வேண்டிய அவசியம் இல்லை. இங்கே போடப்பட்ட செய்தியை பார்க்கும் அவர்களுக்குள் ஒரு உத்வேகம் வருமே ஒழிய பயம் வரப்போவதில்லை. இதை நீங்கள் புரிய மறுக்கின்றீர்கள். தமிழீழ போராளிகளோ, தலைவரோ, துரோகிகளை பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அவர்களின் நடவடிக்கைகளுக்கு பின் தான் தெரியும் அவர்கள் மௌனத்தின் மறு மொழி. அது போல தான் நாமும் செய்ய வேண்டும். அதை விடுத்து சும்மா கத்துவதில் எந்த பிரயோசனமும் இல்லை. அத்தோடு தமிழ் மக்கள் முட்டாள்களாக இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். அடிக்க அடிக்க அடிவாங்கி காலமல்ல இது அடித்தாலும் திருப்பி அடிப்போம் என்று சொல்லும் காலத்தில் துரோகிகள் பற்றி மக்கள் விழிப்புணர்வின்றி இருக்கின்றனர் என்று நினைத்தால்... அது என் தவறல்ல.

குறிப்பு: ஒரு துரோகியை உருவாக்க மொழி தெரியாத, அன்னியனால் முடியுமெனில், ஒரு தன்மானத்தமிழனாக ,தேசியத்தின் பால் ஈர்க்க ஏன் தமிழர்டகளால் முடியவில்லை என்பதை பற்றியும் சிறிது சிந்தியுங்கள்.


- கந்தப்பு - 03-30-2006

காசி ஆனந்தனின் கவிதை http://thatstamil.oneindia.in/specials/art...ms/kaasi21.html


- narathar - 03-30-2006

நிதர்சன்,
நீங்கள் முதலில் ஒரு தேசிய விடுதலைக்கு எதிரான செயற்பாட்டாளர் ஏன்?எப்படி உருவாக்கப்படுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்?
இன்று இருக்கும் நிலையில் உண்மையாக உளத்தூய்மையாக,பொது நோக்கோடு சிந்திக்கும் எவருமே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இயங்க மாட்டார்கள்.இப்படி இயங்குபவர்களை இருவகைப் படுத்தலாம், ஒரு வகையினர் இதனை ஒரு பிழைப்பாக, தொழிலாக மேற்கொள்ளுகின்றனர்.இவர்கள் பணத்திற்கு வாங்கப் படுகின்றனர்.மற்றவர்கள் தமக்கு இருக்கும் தனிப்பட்ட கோபங்களால், தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இயங்குகின்றனர்.உதாரணம் நிர்மலா நித்தியானந்தன் பொன்றோர்.இவர்கள் தமிழ்த் தேசியம் என்பதையும்,அதன் பால் நடத்தப் படும் விடுதலைப் போராட்டத்தையும் ஒரு சர்வாதிகார ஜன நாயகம் அற்ற போராட்டம் என்பதாக பிரச்சாரம் செய்ய முனை கின்றனர்.அதற்கு மாற்றீடாக நாம் எதிர்ப் பிரச்சாரம் செய்தாலயே எம்மால் புலத்தில் ,இருக்கும் ஆதரவை குறிப்பாக புலத்தில் வளரும் இழஞ்சர் மத்தியில் வளர்க்க முடியும்.இங்கே நீங்கள் விடும் தவறு நீங்கள் நினைப்பதைப்போல் தான் எல்லா இழஞ்சர்களும் நினைப்பதாகக் கருதுகிறீர்கள்.குறிப்பாக இவர்கள் பாவிக்கும் சொற்பிரயோகங்களைக் கவனிதீர்களானால் ஜனா நாயகம்,மனித உரிமை ,பயங்கரவாதம் போன்றவை ,புலத்தில் வெகுவாக மேற்கத்திய அரசாங்களினால் பாவிக்கப் படும் சொற்பிரயோகங்கள்.
புலத்தில் இருக்கும் அடுத்த தலைமுறையிடம் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கானா ஆதரவை வீழ்த்தும் நோகுடனயே திட்டமிட்டு இவ்வாறான் பிரச்சாரங்கள் போராட்ட எதிர்ச் சக்திகளினால் நடத்தப் படுகின்றன.இவ்வாறனவற்றிற்கு நாங்கள் எதிர்ப் பிரச்சாரத்தை மேற்கொள்ளா விட்டால் இன்றிருக்கும் ஆதரவை நீண்ட கால நோக்கில் தக்க வைத்துக் கொள்ள முடியாது போகலாம்.

இன்று களத்தில் இருக்கும் தேசிய விடுதலைப் போராட்டதிற்கான ஆதரவு என்பது வெறும் ஆயுத பலத்தால் ஏற்பட்டது என்று நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது.அது அவ்வாறல்லாமல் நெடு நாட்களாக மேற் கொள்ளப் பட்ட அரசியல் மயமாக்கலால் ஏற்பட்டது, என்பது களத்தில் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் அரசியல் நடவடிக்கயில் ஈடுபட்டவர்களுக்கு ,அனுபவ ரீதியாக தெரிந்த ஒன்று.

ஆகவே ஒரு விழிப்புணர்வை ,அரசியல் தெளிவை புலத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் நாங்கள் நிச்சயமாக எதிர்ப் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இன்று எதிரி புலத்தில் பல எதிர்ப் பிரச்சார நடவடிக்கைகளை ஏன் மேற் கொள்கிறான் என்பதை சற்று சிந்தியுங்கள்?அவனுக்கு இதனால் பலன் ஏற்படாது என்றால் ஏன் அவன் இவ்வாறு செயற்பட வேண்டும்.

இவ்வாறு ஆங்காங்கே செயற்படுபவர்கள் ஏற்கனவே திட்டமிட்ட ரீதியிலேயே இயங்குகின்றனர்,இவர்களுக்கு பின் புலத்தில் இலங்கை அரசாங்கத்தின் உளவு அமைப்பு செயற்படுகிறது.ஆகவே இவர்கள் ஏற்கனவே இணைக்கப் பட்டு ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையிலயே இயங்கு கின்றனர்.இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எவ்வாறு புலத்திலே மேற்கொள்ளப் படலாம் என்று நீங்கள் கருதிகிறீர்கள்?
புலத்தில் நிலவும் சட்ட திட்டங்களுக்கு அமய ஒருவர் ஈழத்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுவது என்பது ஒரு குற்றம் ஆகாது.ஆகவே புலத்தில் இருக்கும் சட்ட திட்டங்களுக்கு எதிராக எம்மால் செயற்பட முடியாது.இப்படியான நிலமையில், இவர்களை எமது சமூகத்திற்கு அடயாளம் காட்டுவதும்,இவர்களுக்கு எதிரான பிரச்சார அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதே எமக்கு முன்னால் உள்ள தெரிவாகும்.அதை விடுத்து இவர்களைக் கண்டும் காணாமலும் விட்டால் ,இன்று சிறு விதையாக இருப்பது பின்னர் பெரு விரிச்சமாக வளரக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.இதை நங்கள் நிதர்சனமாக களத்தில் பார்த்திருக்கக் கூடிய விடயம்.

ஆகவே நான் முன்னர் கூறியதைப் போல் உங்களுக்கு மேற்குறிப்பிட்ட செய்தியில் பிழை இருப்பதகத் தெரிந்தால் ,அதனைக் கூறவும்.அதை விடுத்து எதிரிகளை இனங்காட்டக் கூடாது என்று சொல்வது, தீக் கோழி தலையை மண்ணில் புதைப்பதைப் போன்றது. நாங்கள் என்றுமே அரசியல் விழிப்புடன் செயற்பட வேண்டும்.


- கந்தப்பு - 03-31-2006

நிதர்சன் தம்பி, நாரதர் சொல்வது தான் சரி, உந்தக்களைகளை ஆரம்பத்திலையே அழிக்கவேண்டும். விட்டா பெரிசாவந்து எல்லாவற்றையும் அழிக்கப்பாக்கும்


- Vasampu - 03-31-2006

<b>நாரதர் எழுதியது</b>:

வணக்கம் நிதர்சன்,

எனக்கெண்டா நீங்க சொல்லுறது விளங்கேல்ல.இந்தச் செய்தி உண்மை அற்றது என்று சொல்கிறீர்களா?
அப்படியாயின் அதற்கான ஆதாரத்தை நீங்க முன் வைத்தால்இ படிப்பவர்கள் எது மெய்இஎது பொய் என்று முடிவெடுப்பார்கள்.
இதற்காகவே இந்தச் செய்தி இங்கே போடப் பட்டிருக்கலாம்.கருதுக் களத்தின் நோக்கமும் அது தான்.


<b>நாரதர்</b>

நிதர்சனிடம் ஆதாரத்தை கேட்கும் நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மேற் குறிப்பிட்ட செய்தியை நம்பி மேலும் மேலும் கருத்தெழுதுகின்றீர்கள். இங்கே சில இணையத்தளங்கள் தமது சொந்த வக்கிரங்களுக்காகவும் தனிப்பட்ட பகையுணர்ச்சி காரணமாகவும் பல பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றன.
அவற்றின் உண்மைத் தன்மையை ஆராயாமல் நாமும் மனம் போனபடி அது சார்ந்து கருத்தெழுதுவது தான் நியாமானதா?? இவ்விடயம் இதன் உண்மைத் தன்மை அறியும் நோக்குடன் தான் இங்கு போட்டிருக்கலாம் என எழுதும் நீங்கள் அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்காமல் மனம் போனபடி கருத்தெழுதுவது ஏனோ??


- kuloth - 03-31-2006

இந்தச் செய்தியில் சொல்லப்பட்டது அத்தனையும் 100% உண்மை. ஆகவே எல்லோரும் கவனம். இதர்க்கு தீவுகிடைக்கும்.


- kuloth - 03-31-2006

நிதர்சனம் அவர்களே நடந்தது அத்த்னையும் உண்மை. விரைவில் மேலதிக விபரம் வரும்


- Nitharsan - 03-31-2006

கந்தப்பு Wrote:நிதர்சன் தம்பி, நாரதர் சொல்வது தான் சரி, உந்தக்களைகளை ஆரம்பத்திலையே அழிக்கவேண்டும். விட்டா பெரிசாவந்து எல்லாவற்றையும் அழிக்கப்பாக்கும்

களையேடுப்பது தவறல்ல, கந்தப்பு களைகளை எடுக்கும் போது சில முளைகளும் கிள்ளுப்படுகின்றனவே,! அவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டுமல்லவா?


- தூயவன் - 03-31-2006

Nitharsan Wrote:களையேடுப்பது தவறல்ல, கந்தப்பு களைகளை எடுக்கும் போது சில முளைகளும் கிள்ளுப்படுகின்றனவே,! அவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டுமல்லவா?

இது களையெடுப்பு அல்லவே!! அவதானமாக இருக்கும்படி தானே கூறப்படுகின்றது. நிதர்சனமல்ல, வேறு எவர் சொன்னாலும் அவதானமாக இருப்பது நல்லது தானே!!


- Nitharsan - 03-31-2006

தூயவன் Wrote:இது களையெடுப்பு அல்லவே!! அவதானமாக இருக்கும்படி தானே கூறப்படுகின்றது. நிதர்சனமல்ல, வேறு எவர் சொன்னாலும் அவதானமாக இருப்பது நல்லது தானே!!

தூயவன் நான் அது எட்டப்பர் இணையத்தில் வந்ததால் அப்படி எழுதவில்லை. எச்சரிக்கை அ்லது அவதானமாக இருக்கும் படி கேட்டலுக்கும் இந்த் செய்திக்கு நிறைய வேறு பாடுகள் உள்ளன. ஒரு குழு இப்படியான செயற்ப்பாடுகளில் ஈடு படுகின்றது என்று சொன்னால் அது வேறு....அதை விடுத்து தனி நபர் ஒருவரின் பெயரையும் முகவரியையும் போட்டு இவர் தான் என்று சொல்லும் போது நாம் சற்று சிந்திக்க தலைப்படுகின்றோம். ஏனெனில் தமிழ் தேசியத்தின் பெயரினால் நல்ல முளைகளை நாம் கிள்ளி விடக்கூடாது என்பதற்காக. அவதானம் தேவை.. அந்த அவதானத்தையே வேண்டினேன். ஒரு தனி மனிதனுக்கு முழு உலகத்த தமிழினமுமே பயப்படுவது போல ஒரு பிரமையை இந்த செய்தி ஏற்ப்படுத்து கின்றது. அவர்கள் இதனூடாக மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர் என்பதையே நான் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கின்றேன். சம்பவம் உண்மையா? பொய்ா என்பது பற்றிபேசவில்லை. அவற்றை என்னால் உறுதி செய்யவும் முடியவில்லை. ஆனால் ஊடகங்கள் ஊடகத்துக்குள் நின்று செய்திகளை வெளியிடுவது தான் ஓர் சிறந்த ஊடகத்துக்க நன்று...


- மின்னல் - 03-31-2006

நிதர்சன், அவன் தனிமனிதனல்ல
.....


- narathar - 03-31-2006

Vasampu Wrote:<b>நாரதர் எழுதியது</b>:

வணக்கம் நிதர்சன்,

எனக்கெண்டா நீங்க சொல்லுறது விளங்கேல்ல.இந்தச் செய்தி உண்மை அற்றது என்று சொல்கிறீர்களா?
அப்படியாயின் அதற்கான ஆதாரத்தை நீங்க முன் வைத்தால்இ படிப்பவர்கள் எது மெய்இஎது பொய் என்று முடிவெடுப்பார்கள்.
இதற்காகவே இந்தச் செய்தி இங்கே போடப் பட்டிருக்கலாம்.கருதுக் களத்தின் நோக்கமும் அது தான்.


<b>நாரதர்</b>

நிதர்சனிடம் ஆதாரத்தை கேட்கும் நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மேற் குறிப்பிட்ட செய்தியை நம்பி மேலும் மேலும் கருத்தெழுதுகின்றீர்கள். இங்கே சில இணையத்தளங்கள் தமது சொந்த வக்கிரங்களுக்காகவும் தனிப்பட்ட பகையுணர்ச்சி காரணமாகவும் பல பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றன.
அவற்றின் உண்மைத் தன்மையை ஆராயாமல் நாமும் மனம் போனபடி அது சார்ந்து கருத்தெழுதுவது தான் நியாமானதா?? இவ்விடயம் இதன் உண்மைத் தன்மை அறியும் நோக்குடன் தான் இங்கு போட்டிருக்கலாம் என எழுதும் நீங்கள் அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்காமல் மனம் போனபடி கருத்தெழுதுவது ஏனோ??




வணக்கம் வசம்பு,

கை சுகமாகி விட்டதா? நலமா?

நான் இதை உண்மை என்று எங்காவது எழுதி உள்ளேனா?
நிதர்சன் சொன்னது இப்படியான செய்திகளைப் போட வேண்டாம் என்று, நான் சொன்னது அதை இங்கே போட்டால் தான் அது உண்மயா ,இல்லயா என்று தெரியும் என்று,எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்கும் நீங்கள் ,இந்த செய்தி பொய்யானது என்றும்,அது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் எழுதப் பட்டது என்றும் நிதர்சன் கூறியதற்கு ஆதாரம் கேட்டேன்.ஏனெனில் அந்த செய்தியில் பெயர்,முகவரி என விபரமான தகவல்கள் இருந்தன.ஆகவே நிதர்சன் கூறியது எந்த விதமானா ஆதாரம் இன்று ஒரு யூகமாகவே இருந்தது.இரண்டையும் ஒப்பு நோக்கியதில் எனக்கு எட்டப்பர் செய்தித் தளத்தில் இருந்ததே ஒபீட்டளவில் உண்மயாக இருந்தது.

உங்களுக்கு அப்படி இல்லாதவிடத்து,வெறும் யூகங்களில் நம்பிக்கை என்றால் நம்பிக்கை கொள்ளுங்கள், அது உங்கள் விருப்பம்.அதற்காக இங்கே செய்தித் தணிக்கயை வெறும் தனிப்பட்டவர்களின் யூகங்களின் அடிப்படையில் நிகழ்த்த முடியாது,அவ்வளவே.காரணம் கருத்துச் சுதந்திரம் என்பது உங்களுக்கு விருப்பமானவற்றை மட்டும் கேட்பது,போடுவது கிடயாது.


- ஜெயதேவன் - 04-01-2006

Quote:பிறேம் நீங்களும் இங்கு சிலரும் ஒரே பார்வையில் இந்த செய்திகளை பார்க்கிறீர்கள். இவர்களை போல தான் டக்கிளஸ் ஆனந்த சங்கரி போன்றவ்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள் அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை தமிழ் தேசியத்தை சொல்லி கொண்டு துரோகி டக்ளஸ் துரொகி ஆனந்த சங்கரி என்று சொல்லிய ஊடகங்களையே சாரும். இல்லையேனில் ஒரு மூலையில் எங்கோ பெட்டிப்பாம்பாய் அடங்கி கிடந்திருப்பார்கள். நாய்கள் குரைக்க தான் செய்யும் அதற்காய் நாம் திருப்பி குரைப்பதில் பயனில்லை. அதை குரைக்காமல் நிறுத்த, அல்லது தன் பாட்டிலே அது குரைப்பதை நிறுத்த நாங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். மக்களை விழிப்புணர்வு படுத்துவது தவறல்ல. மக்களை விழிப்புணர்வு படுத்துவதங்க்கு முன், அவர்களை இச் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கி விட்டால் அல்லது, ஒழித்து விட்டால் மக்களுக்கு விழிப்புூட்ட வேண்டிய அவசியம் இல்லை. இங்கே போடப்பட்ட செய்தியை பார்க்கும் அவர்களுக்குள் ஒரு உத்வேகம் வருமே ஒழிய பயம் வரப்போவதில்லை. இதை நீங்கள் புரிய மறுக்கின்றீர்கள். தமிழீழ போராளிகளோ, தலைவரோ, துரோகிகளை பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அவர்களின் நடவடிக்கைகளுக்கு பின் தான் தெரியும் அவர்கள் மௌனத்தின் மறு மொழி. அது போல தான் நாமும் செய்ய வேண்டும். அதை விடுத்து சும்மா கத்துவதில் எந்த பிரயோசனமும் இல்லை. அத்தோடு தமிழ் மக்கள் முட்டாள்களாக இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். அடிக்க அடிக்க அடிவாங்கி காலமல்ல இது அடித்தாலும் திருப்பி அடிப்போம் என்று சொல்லும் காலத்தில் துரோகிகள் பற்றி மக்கள் விழிப்புணர்வின்றி இருக்கின்றனர் என்று நினைத்தால்... அது என் தவறல்ல.

அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்....

விடிய விடிய ராமர் கதையாம்! விடிஞ்சாப் பிறகு ...????? என்னடாப்பா என்ன எழுதுகிறீர்கள் என்பது கூடத் தெரியாமல், எழுதுகிறீர்கள்!!! எந்த உலகத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்!! ...

* ஆனந்தசங்கரியை, டக்லஸை ஊடகங்களா விளம்பரப்படுத்தியது??
* இந்த இன விரோதக் கூலிகள் உலகின் மூலையில் பெட்டிப் பாம்புகளாகவா இருந்தார்கள்??
* ...

இந்த கூலி நாய்களுக்கெதிராக ...

* மக்களை விளிப்பூட்டுவதுதான் சரியெனில், எவ்விதத்தில் மக்களை விளிப்பூட்டினீர்கள்??
* இல்லை, இக்கூலிகளை தமிழ்த்தேசிய விரோத செயற்பாட்டிலிருந்து ஒதுக்கவா, ஒழிக்கவா என்ன நடவடிக்கைகள் புலத்தில் எடுக்கப்பட்டன???
* துரோகிகளைப் பற்றி களத்தில் களத்தில் விடுதலைப் புலிகல் அலட்டிக் கொள்ளவில்லையாயின், ஒட்டுப்படைகள் விவகாரங்களெல்லாம், ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது??
* களத்தில் துரோகிகளை கையாளுவது மாதிரி, புலத்திலும் கையாலலாமா??
.... வசனங்கள் எழுதுவதற்கு இலகுதான்!! ஆனால் நிஜத்திற்கு அப்பாற்ப்பட்டவை!! உண்மையில் இணைய ஊடகங்கள் வரத்தொடங்கியதே 2000 இற்குப் பின் தான்!! அதன் முன் ஒரிரு இணைய ஊடகங்களே இருந்தன!! ஆனால் துரோகிகள் போராட்ட ஆரம்ப காலத்திலிருந்தே புலத்தில் செயற்படத் தொடங்கி விட்டார்கள்!! சொல்லப்போனால், ஆரம்பத்தில் புலத்தில் தேசியத்திற்கெதிரான "சன்றைஸ்" என்ற வானொலியொன்றையே தொடங்கி செயற்படுத்தினார்கள். அப்போதெல்லாம் தேசியத்திற்காதராவான சரியான ஊடகங்கள் என்பதே இருக்கவில்லை!! தேசியத்திற்காதரவான செயற்பாடுகள் பிரச்சாரங்களை விட, எதிரானவைகளே மேலோங்கியிருந்தது!!

Quote:குறிப்பு: ஒரு துரோகியை உருவாக்க மொழி தெரியாத, அன்னியனால் முடியுமெனில், ஒரு தன்மானத்தமிழனாக ,தேசியத்தின் பால் ஈர்க்க ஏன் தமிழர்டகளால் முடியவில்லை என்பதை பற்றியும் சிறிது சிந்தியுங்கள்.

இவைகள் கேள்விகள்தான்!! கேட்கப்பட வேண்டியவைகள்தான்!! களத்தில் யுத்தம் உச்சத்திற்குச் சென்று, புலத்தினுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட காலத்தில், புலத்தில் தமிழ்த்தேசியத்திற்குப் பொறுப்பாக செயற்படும் பூசாரிகளே இந்நிலைமைக்குக் காரணம்!!!! இப்பூசாரிகள் இக்காலங்களில் தேசியத்தை வளர்ப்பதற்குப் பதிலாக தம் கதிரைகளை பாதுகாப்பதிலும், சேர்ந்து செயற்பட்ட பலரை புறந்தள்ளி விட்டதிலும், தேசியத்திற்கு ஆதரவான செயற்பட்ட பல அமைப்புகளை முடக்குவதிலுமே, இவர்கள் காலத்தைப் போக்கினார்கள்!! இவற்றின் அறுபடைகளே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!!

ஆகவே, புலத்தில், நாலு துரோகிகள் ஒவ்வொரு நாட்டிலும் செயற்பட்டு தேசியத்திற்கு பலபல இடைஞ்சல்களை ஏற்படித்திக் கொண்டிருக்கிறார்கள்! விவாதங்களுக்கு அப்பாற்பட்டு இவர்களை முதலில் மக்களுக்கு அம்பலப் படுத்துவோம்! அவர்களின் செயற்பாடுகளுக்கெதிரான செயற்பாடுகளில் இறங்குவோம்!! கூலிகலின் முகமூடிகளை கிளித்தெறிவோம்!!! ... அதை விடுத்து ..................???????

அ"றோ"கரா ...... Idea