Yarl Forum
பெய்யெனப் பெய்யும் மழை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பெய்யெனப் பெய்யும் மழை (/showthread.php?tid=4165)

Pages: 1 2


- Mathan - 06-10-2005

Quote:உள்ளிருந்த அல்லிகள்
பூண்டற்று அழிந்தன
இலங்கைத் தமிழராய்
இடம்பெயர்ந்து போயினவோ?

இடம் பெயர்வுக்கு உதாரணமாய் இலங்கை தமிழர் ஆகிவிட்டார்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kavithan - 06-10-2005

நன்றி வசி


- வெண்ணிலா - 07-12-2005

<b>ஒரு கவிஞன் விஞ்ஞானியானபோது...</b> (வைரமுத்து)


அரும்பான நாள்முதலாய் எனக்கோர் ஆசை
அடிநெஞ்சில் நான்முடிந்து வைத்த ஆசை
அரும்பொன்று மலர்கின்ற நிமிஷம் தன்னில்
அருகிருந்து தரிசிக்க வேண்டும்; அந்தச்
சிறுமடல்கள் விரிகின்ற சின்னச் சப்தம்
செவிமடலில் விழவேண்டும்; பூவின் ஜீவன்
சுறுசுறுப்பாய்க் கிளர்ந்தெழுமே அடடா அந்தச்
சுகத்துக்குள் நான்கரைந்து போக வேண்டும்

தென்றலுக்கு ரகசியமாய் விரல்மு ளைத்துத்
தீண்டுவதால் மலர்கிறதா? பூவில் தேனை
மொண்டுகொள்ளும் வண்டினங்கள் அரும்பை வந்து
முட்டுவதால் மலர்கிறதா? இதனைக் கூடக்
கண்டுபிடிக் காமலென்ன கவிதை என்றே
கனவுகளில் தினமழுதேன்; ஒரு நாள் நானும்
துண்டுவிரித் துட்கார்ந்தேன் கொடியின் கீழே
தும்பிதனைப் பிடிக்குமொரு பிள்ளை போலே

கொடிகளிலே உறங்குகின்ற குழந்தை என்னைக்
கூப்பிடட்டும் வாய்திறந்து; நானும் அந்த
நொடிகளிலே சுரந்துவரும் சந்தோ ஷத்தில்
நூறுவய தாகும்வரை மகிழ்வேன்; எந்தன்
மடிதனிலே கட்டிவைத்த அரிவை எல்லாம்
மறுதலிக்கக் கூடுமந்தக் காட்சி என்றே
விடிவிளக்கைப் போலங்கே தனித்தி ருந்தேன்
விழிக்கட்டும் அரும்பென்றே விழித்தி ருந்தேன்

கண்களைத்துப் போனதென்று சற்றே கொஞ்சம்
கண்ணிமைத்து நான்திறந்தேன்; அதற்குள் அந்தப்
பொன்னிதழ்கள் பூத்திருக்கக் கண்டேன்; நொந்தேன்
போடாபோ எனஅலறி மண்ணில் வீழ்ந்தேன்
கண்ணுக்குத் தெரியாத ரகசி யத்தைக்
கைதுசெய்து பார்ப்பதுதான் கவிதை போலும்
அண்ணாந்து பார்க்கும்பூ மட்டு மல்ல
அழகுடைய தெல்லாமே ரகசி யம்தான்.


- kuruvikal - 07-12-2005

நன்றி தங்கையே வைரனின் கவிதையை ருசிக்கத் தந்ததற்கு..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sathiri - 07-13-2005

Mathan Wrote:
Quote:உள்ளிருந்த அல்லிகள்
பூண்டற்று அழிந்தன
இலங்கைத் தமிழராய்
இடம்பெயர்ந்து போயினவோ?

இடம் பெயர்வுக்கு உதாரணமாய் இலங்கை தமிழர் ஆகிவிட்டார்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

வைரமுத்துவின் பிழைப்புக்கும் ஒப்பனைக்கும் இலங்கைத்தமிழர் எப்போதோ பலியாக்கிவிட்டார் கவியரசு. இந்தக் கள்ள அரசுவுக்கு பதக்கம் குடுத்து காலிலை விழுந்து சுவிசிலையிருந்து ஒர சதீசும் கனடாவிலை ஒரு யோகேந்தரலிங்கமும் இன்னும் கனபேர் வித்துக்கொண்டிருக்கினம் இலங்கைத்தமிழரை. இந்தியராணுவ நேரத்திலை ஒருவரி எழுதமாட்டேனெண்ட வைரமுத்துவை அவ்வளவு லேசிலை மறக்க முடியாதுங்கோய். Idea