Yarl Forum
நெஞ்சம் மறக்குமா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: நெஞ்சம் மறக்குமா (/showthread.php?tid=4038)

Pages: 1 2


- ப்ரியசகி - 02-02-2006

நல்ல முயற்சி..வாழ்த்துக்கள் தூயா...அன்ட் தொடருபவர்கள் எல்லோருக்கும்..நானும் எழுதுகிறேன்..


- அருவி - 02-03-2006

தூயவன் Wrote:
அருவி Wrote:கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தேசவிடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த எங்கள்
நேசக் குழந்தைகளை நீசர் வழிமறிக்க(2)
கடலம்மா.....
.

பாடல் வந்தகாலப்பகுதியில் இப்பாடலைக் கேட்கும்போ உண்மையில் எனக்கு மனது கனப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இப்பாடலை கீழுள்ள இணைப்பில் சென்று முன்றாவது தெரிவாக கேட்கலாம்.
http://www.eelasongs.com/content/view/25/12/


- தூயா - 02-10-2006

[size=15]தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

(2)

கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்
அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும

(2)

நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை
நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் வரவில்லை

(2)

ஊர் முழுதும் ஓலம், நான் உறங்கி வெகு காலம (3)
நீ ஓடி வந்தால் போதும்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில்
ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த வேளையிலே

(2)

எங்கள் புலி வீரர் அவர் இருக்குமிடம் போறேன் (3)
தமிழீழம் வந்தால் வாறேன்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும

தென்றல் வந்து தொட்டு என்னை கேலி செய்தது
நீ சென்ற இடம் சொன்ன பின்னர் வேலி போட்டது

(2)
காலம் வந்து சேரும் புலி கழுத்தில் வாகை சூடும் (3)
என் கழுத்தில் மாலை ஆடும்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

தங்க மேனி நொந்து ஈழ தாய் அழுகின்றால்
எம் தலைவன் இந்த நிலையை பார்த்து தான் உருகுகிறான்
(2)
எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும் (3)
தமிழ்ழீழம் வந்து சேரும்..

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

உன்னை நெஞ்சில் தூங்க வைத்து பாட்டு பாடுவேன்
என் உரிமைக்காக நானும் வந்து படையில் சேர்வேன்

(2)
வேங்கை தோற்பதில்லை நம் வீரர் சாவதில்லை (3)
என் விடிவு தூரம் இல்லை


- Mathan - 02-10-2006

வாழ்த்துக்கள் தூயா, அருவி, அனிதா, விஷ்ணு, தூயவன் உட்பட அனைவருக்கும் .... தொடர்ந்து தாருங்கள்


- Niththila - 02-10-2006

நன்றி தூயா என்னால்முடிந்தால் நானும் எழுதுகிறேன்


- I.V.Sasi - 02-10-2006

கேட்ட பாடல்கள் எழுத்து மூலம் பார்ப்பதில் சந்தோசம்
வாழ்த்துக்கள் தொடர்த்து எழுதுங்கள்


- கந்தப்பு - 03-16-2006

என்ன தூயா தொடர்ந்து எழுதுவதினை நிறுத்திவிட்டீர்கள். தொடர்ந்து ஈழப்படல்களினை எழுதுங்கள்


- Snegethy - 03-17-2006

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் (2)
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் (2)
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்
பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் - சாவை
எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்
பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்
பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு
கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு
அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்
அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்


- Niththila - 03-17-2006

நன்றி சினேகிதி