Yarl Forum
மணபெண்கள் கவனிப்பார்களா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: மணபெண்கள் கவனிப்பார்களா? (/showthread.php?tid=3909)

Pages: 1 2


- Malalai - 07-25-2005

நாரதர் உங்கள் படங்கள் மிகவும் பழமை வாய்ந்தனவாக இருக்கின்றன..மிகவும் நன்றாக இருக்கிறது இந்தப்படங்கள் உங்கள் சொந்தப்படங்களா? அல்லது இணையத்தளத்தில் எடுத்தீர்களா? உங்கள் சொந்தப்படங்கள் என்றால் இப் படங்கள் பற்றி மேலும் சொல்வீர்களா? (50 வருடத்திற்கு முந்தி எடுக்கபட்டவையா? பார்த்தால் அதை விட பழமை மாதிரித் தெரிகிறது?) நன்றி


- kuruvikal - 07-25-2005

பெண்களோ ஆண்களோ...காலத்துக்கு தேவைக்கு ஏற்ற வகையில் உடை அணிவதில் தப்பே இல்லை...! இருந்தாலும் பாரம்பரிய கலாசார அடையாளங்களை வெளிப்படுத்த விரும்புபவர்கள்...விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்ப சேலையோ இல்ல வேட்டியோ கட்டி பாரம்பரிய காலாசார தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்தலாம்...! ஆனா சேலையைத் தூக்கி எறிந்து ஜீன்ஸ் ரீசேட் போடுறது "விடுதலையின் விளைவு" என்பது தப்பான எண்ணப் பரப்புரை....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- narathar - 07-25-2005

கீழ இருக்கிற தொடர்பை அழுத்தினீர்கள் எண்டால்
இலங்கையில் எடுக்கப்பட்ட பல பழய படங்களைக் காணலாம்.

http://www.imagesofceylon.com/cover.htm


- stalin - 07-25-2005

நன்றிகள் இணைப்பை அறிமுகப்படுத்திய நாரதருக்கு


- Rasikai - 07-25-2005

[img]இப்ப கூட பெண்கள் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு போகும் போது சேலைதானே அணிகிறார்கள் ஆனா எத்தனை ஆண்கள் வேட்டி உடுக்கினம் :roll: :roll:[/img]

அப்படி போடு நித்திலா


- Sooriyakumar - 07-25-2005

[quote=kuruvikal]பெண்களோ ஆண்களோ...காலத்துக்கு தேவைக்கு ஏற்ற வகையில் உடை அணிவதில் தப்பே இல்லை...! இருந்தாலும் பாரம்பரிய கலாசார அடையாளங்களை வெளிப்படுத்த விரும்புபவர்கள்...விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்ப சேலையோ இல்ல வேட்டியோ கட்டி பாரம்பரிய காலாசார தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்தலாம்...! ஆனா சேலையைத் தூக்கி எறிந்து ஜீன்ஸ் ரீசேட் போடுறது "[size=18][b]விடுதலையின் விளைவு
:mrgreen:


- aswini2005 - 07-26-2005

எங்கேயும் பெண்களின் உடைத்தேர்வுகூட கலாச்சாரக்காவிகளான பெண்கள் மீது திணிக்கப்படுகிறதே ஏன் ? அதற்காக இதனைக் கேட்கும் நான்கூட பண்பாடுகளை து}க்கியெறிய நினைப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ளாது. நண்பர்கள் சிந்திப்பது நல்லது.

பெண்கள் கலாசர உடைகளை காவவேணும் எனக்கதைக்கின்ற ஆண்கள் அத்தனைபேரும் புட்டுக்குளலுடன் திருமண வீடுகளுக்கோ இதர கொண்டாட்டங்களுக்கோ போவதைப்பற்றி ஏன் இன்னும் உங்களால் பேசப்படவில்லையென்பது சற்று நெருடலைத் தருகிறது.

;;;இப்படிக் கேள்விகேட்கும் பெண்களே உங்கள் எதிரியாக எண்ணி எதிர்வாதங்களை மட்டும் செய்கின்றவர்களின் மோதும் குணத்துக்கு முதலில் தெளிவு உண்டானால் இங்கு பல பிரசசனைகளுக்கான தீர்வு கிடைத்துவிடும்:


- aswini2005 - 07-26-2005

stalin Wrote:நன்றிகள் இணைப்பை அறிமுகப்படுத்திய நாரதருக்கு

பெண் உடைத்தேர்வு பற்றிய தங்கள் கருத்தையும் அறியத் தரலாமே ? :?


- stalin - 07-26-2005

மிருகங்களோ பறவைகளோ மனிதரகளோ எல்லாம் எதிர்பாலரைக்கவருவதற்க்காக என்னன்ன வழிவகைகளை சில்மிசங்களை கையாளணுமோ அவ்வழிகளை கையாளலுமோ கையாளுமாம். இதில் காலத்துக்காலம் சில அம்சங்கள் மாற்றம் பெறும். ஆணோ பெண்ணோ விதிவிலக்கல்ல என்பது யதார்த்தம் இதில் பிழையில்லை. ஆனால் கலாச்சார பண்பாட்டு பூச்சாண்டிகாட்டி ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கொரு நீதி வைப்பது தான் பிழை


- தூயா - 08-04-2005

என்னமோ பெரியவையள் கதைக்கிறியள்...சரி சரி..

ஆனால் எனக்கு கன நாளா ஒரு சந்தேகம், தமிழர் உடை அது இது என்கிறோமோ...பழய காலத்தை எடுத்தால் இப்ப இருக்கிற உடைகளை விட உடல் தெரிவது போல் அணிந்து இருக்கிறார்களே... இல்லை எனில் படங்களில், கதை புத்தகங்களில் மட்டும் அப்படி உடைகளை காட்டுகிறார்களா?


- Rasikai - 08-04-2005

எனக்கும் இந்த சந்தேகம் தான் யாரவது பதில் சொல்லுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- narathar - 08-04-2005

இதில என்ன சந்தேகம் கலை ,கலாச்சாரம் ,ஆடைகள் எல்லாமும் எப்பொழுதுமே மாறிக் கொண்டிருக்கும்.
நிர்வாணம் பார்ப்பவர் கண்களிலேயே இருக்கிறது,அதே மாதிரித்தான், எது அரை குறை ,எது முழுசு என்பது பார்ப்பவர் கண்களிலேயே.