![]() |
|
நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம். (/showthread.php?tid=384) |
- கந்தப்பு - 04-06-2006 தூயா, நீங்கள் என்னை எழுதச்சொன்னீர்கள். அதன் பிறகு நீங்களும், சுண்டலும் ஒரு மகாபாரதம் எழுதுவதாகச்சொன்னீர்கள். எப்ப எழுதப்போறிர்கள்? - TRAITOR - 04-06-2006 கந்தப்பு எழுதியது: "சிட்னியில் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கு முருகன் கோவில் திருவிழா வழி வகுக்கிறது. திருவிழாவின் போது ஈழத்தில் புகழ்பெற்ற நாதஸ்வரவித்துவான்களினை அழைத்து கச்சேரிகள் வைப்பார்கள். இந்தமுறை இணுவில் புண்ணியமூர்த்தியின் வாரிசுகளின் நாதஸ்வர இசையினைக் கேட்கும்போது ஈழத்தில் இருப்பதுபோலத்தோன்றுகின்றது. இம்முறை தேர்த்திருவிழா வருகிற திங்கள் நடைபெறவுள்ளது. பலர் அன்று வேலையில் இருந்து லீவு எடுத்துக்கொண்டு முருகப்பெருமானின் ரத உற்சவத்தினைக் கண்டுகளிப்பார்கள். ஈழத்தினை விட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு இக்கோவிலுக்குச் செல்லும்போது நாதஸ்வரக்கச்சேரிகள்இ காவடிகள்இ அன்னதானம்இ தண்ணீர் பந்தல் போன்றவற்றினைப் பார்க்கும் போது ஈழத்தில் இருப்பது போலத் தோன்றும்." நல்ல காரியங்கள் தான் சிட்னியில் செய்கின்றார்கள். அதுவும் ஈழத்திலிருந்து வித்துவான்களை அழைக்கின்றார்கள். ஆனால் கனடாவில் இப்படி அழைப்பது குறைவு. இங்கு கோயில்களில் இந்தியன் பாடகர்களை அழைத்து சீடி, டீவீடி வெளியிடுகின்றார்கள். எப்பதான் இவர்கள் திருந்துவார்களோ தெரியாது :?: . பொறுத்திருந்து பார்ப்போம். :roll: - SUNDHAL - 04-06-2006 அரோகரா......................... - sathiri - 04-06-2006 என்ன சுண்டல் இங்கை வந்து அரோகரா போடாதையும் கோயிலடியிலை போய் போட்டாலும் அன்ன தானமாவது கிடைக்ககும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதை படிக்க ஒண்டு விழங்கிது சும்மா கிடக்கிற பிரச்சனையை ஒரு வானொலி ஊதி பெரிசாக்கிது கடைசியிலை பிரச்சனை பெரிசாகி கொயிலை அவுஸ்ரேலியா அரசு இழுத.;து சாத்தாமல் விட்டால் சரி அதுசரி இதிலை சுண்டல் எந்த வானொலி 1 அல்லது 2 :wink: :wink:
- sayanthan - 04-06-2006 என்ன சொல்லுங்க..! முருகன் கோயில் சாப்பாடு அந்த மாதிரி..! நிர்வாகங்கள் பற்றியெதுவும் தெரியாது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் சின்னச் சின்ன குகைகளுக்குள், குடோன்களுக்குள் கோயில் இருக்க, சிட்னியில் பிரதான வீதியொன்றின் ஓரம் கோபுரத்துடன் விசாலமாக அமைந்திருக்கும் இக்கோயில் கோயில் சென்று வணங்க விரும்புகின்றவர்களுக்கு ஏற்ற இடம். - narathar - 04-06-2006 ஐரோப்பாவில் இருப்பவை பெட்டிக் கடைகளே ஒழிய கோவில்கள் அல்ல.ஒரு சரக்குகள் களஞ்சியப் படுத்தும் இடத்தை மிகக் குறைந்த குத்தகைக்கு எடுக்கிறார்.பின்னர் அதைக் கோவில் எண்டு விளம்பரம் செய்கிறார்.ஒரு விக்கிரகத்தை வைக்கிறார், உண்டியலை வைக்கிறார்.மக்கள் வருகிறார்கள் உண்டியல் நிரம்புகிறது.பின்னார் உண்டியலின் வருமானத்திற்கு அமைய மீண்டும் அந்தக் கோவிலை அது தான் பெட்டிக் கடையய், கூடிய விலையில் இன்னொருவருக்கு குத்தகைக்கு குடுக்கிறார்.குறைந்த முதலில் கூடியா லாபம் பெறும் தொழில் இது ஒன்றே ஆகையால், கடை நடாத்தியவர்கள்,பெற்றோல் நிலையம் நடாத்தியவர்கள்,மதுபானக் கடை நடாத்தியவர்கள் எல்லோரும் இதைத் தான் கடசியாகச் செய்வார்கள். - SUNDHAL - 04-06-2006 sathiri Wrote:என்ன சுண்டல் இங்கை வந்து அரோகரா போடாதையும் கோயிலடியிலை போய் போட்டாலும் அன்ன தானமாவது கிடைக்ககும் <!--emo& சும்மா கிடக்கிற பிரச்சனை என்டு விட்டா புூனைக்கு யார் தான் மணி கட்டிறது? - Selvamuthu - 04-06-2006 ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா இவையெல்லாம் நாம் புகுந்த இடங்கள். இதிலே எது பெரிது எது சிறிது என்று நாம் வாதிப்பதும், பெருமை கொள்ளவதும் பொருத்தமற்றது. அவுஸ்திரேலியா பெரிய நாடு. அங்கே எல்லாமே பெரியன. அதோடு ஐரோப்பாவை ஒப்பிடுவதும், கிண்டலடிப்பதும் எமக்குத் தேவையா? "செய்யும் தொழிலே தெய்வம்" என்று தமிழில் ஓர் அருமையான பழமொழி இருக்கின்றது. கடை நடாத்துபவர்கள், பெற்றோல் நிலையம் நடாத்துபவர்கள், மதுபானக்கடைகள் வைத்திருப்பவர்கள் என்று அவர்களின் தொழிலைக்கொண்டு தரம்பிரித்தல் நாம் இன்னமும் முன்னேறவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. எம் முன்னோர் விட்ட தவறுகளை இளைஞர்கள் மீண்டும் விடாமல் இருக்கவேண்டும். தாயக வளர்ச்சிக்கும், உறவுகளின் முன்னேற்றத்திற்கும் புலம் பெயர்ந்த எம்மால் நல்லன எதுவும் செய்யமுடிந்தால் அதனை முழுமனத்தோடு அனைவரும் செய்யவேண்டும். இதுவே எனது அன்பான வேண்டுகோள். - Aravinthan - 04-07-2006 இக்கோவில் கொடியேற்ற நிகழ்வின் தொகுப்பு இன்று சிகரம் தொலைக்காட்சியில் பிற்பகல் 7மணி தொடங்கி 8மணி வரை காண்பிக்கப்படும்.வரும் திங்கள் மாலை 3.30 மணியிலிருந்து 4.30 வரை மீண்டும் மறுஓளிபரப்பாகும். கொடியேற்றப்படங்களினை முருகன் கோவில் இணையத்தளத்தில் காணலாம். படங்களினைப்பார்க்க கீழே உள்ள இணைப்பிற்குச் செல்லவும். http://www.sydneymurugan.org.au/gallery/gallery.htm - putthan - 04-07-2006 இங்கு கோயில்களில் இந்தியன் பாடகர்களை அழைத்து சீடி, டீவீடி வெளியிடுகின்றார்கள். எப்பதான் இவர்கள் திருந்துவார்களோ தெரியாது . பொறுத்திருந்து பார்ப்போம். இங்கேயும் இதை மாதிரி தான் இந்தியா பாடகர்கள் அட்டகாசம் இருக்கு.ஒரு கண்துடைப்புக்கு தான் ஈழத்து கலைஞர்கள். தம்பி அது சரி இங்கேயுள்ளவனுக்கு கட்டாயம் அன்னதானம் தேவையா?????? ஊரிலே அன்னதானம் கோவிலில் வாங்கி சாப்பிட்டால் ஒரு மாதிரி பார்கிற ஆட்களும் உண்டு.இங்கே அவர்களும் சேர்ந்து அன்னதானம் வாங்க வரிசையில் நிற்பார்கள். - putthan - 04-07-2006 சிட்னியில் பிரதான வீதியொன்றின் ஓரம் கோபுரத்துடன் விசாலமாக அமைந்திருக்கும் இக்கோயில் கோயில் சென்று வணங்க விரும்புகின்றவர்களுக்கு ஏற்ற இடம் எழுதியது சயந்தன் தம்பி அந்த கோயில் இருக்கும் இடத்தின் பெயர் வைகாசி குன்றுமுருகன் பெற்றோரிடம் சண்டை பிடித்து உலகம் சுற்றும் போது இங்கு தான் இளப்பாரி பிறகு கதிர்காம்த்துக்கு சென்றவர்.வெள்ளைகாரன் பிடித்த பிறகு தான் இதனை May hills என்று மாற்றிவிட்டார்கள், - narathar - 04-07-2006 Selvamuthu Wrote:ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா இவையெல்லாம் நாம் புகுந்த இடங்கள். இதிலே எது பெரிது எது சிறிது என்று நாம் வாதிப்பதும், பெருமை கொள்ளவதும் பொருத்தமற்றது. அவுஸ்திரேலியா பெரிய நாடு. அங்கே எல்லாமே பெரியன. அதோடு ஐரோப்பாவை ஒப்பிடுவதும், கிண்டலடிப்பதும் எமக்குத் தேவையா? செல்வமுது அவர்களுக்கு ஒரு விளக்கம், நான் கடை வைதிருப்பவரையோ அன்றி பெற்றோல் நிலயம் வைதிருப்பவரையோ குறைத்து எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லை, இவற்றைப் போன்றது ஒரு வியாபாரமாகவே அதுவும் மிகவும் லாபம் தரும் வியாபாரமாக ஐரோப்பாவில் கோவில்கள் இருகின்றன என்பதயே சொன்னேன்.இவை ஒரு பொதுவான பொது அமைபின் கீழ் வர வேண்டும் என்று பிரித்தானியாவில் எடுக்கப் பட்ட முயற்ச்சிகளுக்கு சில கோவில்களில் என்ன நடந்தது என்பது எலோருக்கும் தெரிந்த விடயம். - putthan - 04-07-2006 சாமியார் வியாபாரத்திற்கும் இங்கே நல்ல கிராக்கி, - putthan - 04-07-2006 சிட்னி சைவ நாயனார்கள் மீது சீற்றம் அடைந்துள்ளார்கள் பா சுவாமியின் சீடர்கள். இதற்கு காரணம் அண்மையில் வெளியான் சைவமாநாட்டு மலரில் ஒரு சிட்னி சைவநாயனார் எழுதிய ஆக்கம் தான் காரணம்.அவர் பின்வருமாரு தன் ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதில் அவர் மனிதனாய் பிறந்தவனை கடவுளாக கும்பிடுவது தப்பு என்றும்.வாயில் இருந்து லிங்கம்,நகைகள்,கடிகாரம்,விபூதி போன்றவற்றை எடுத்து வித்தை காட்டுவதை பற்றியும்.வாயால் லிங்கம் எடுப்பது சைவத்தை(சிவனை) முதன் முதல் கடவுளாக கொள்பவர்களுக்கு இது இழுக்கு என்றும் அவ் ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு அவர் இவர்களையும் கும்பிட்டுகொண்டு கோயிலுக்கும் வருகிறார்கள் இது இரு தோணியிற் கால் வைத்ததிற்கு சமன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த பா சுவாமியின் சீடர்கள் சீற்றமடைந்து பதில் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்கள்.அவ் கடிதத்தில் இவ் ஆக்கத்தை எழுதியவர் ஒரு சைவ தீவிரவாதியென்றும்,சுவாமிகளின் சீடர்களை புண்படுத்தியது மட்டுமல்லாது தங்கள் மதத்தையும் புண்படுத்தி விட்டார் எனவும்,இவருக்கு ஆன்மீகம் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். (போகிற போக்கில் சிட்னி சைவநாயனாரை கல்லில் கட்டி கடலில் போடுவார்கள்,சுண்ணாம்பு அறையில் பூட்டுதல்,கழுகில் ஏற்றல் போன்றவற்றை செய்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. ஆனால் நம்ம நாட்டு சட்டம் இதற்கு இடம் கொடுக்காது. இந்த சைவ நாயனார்களும்,பா சுவாமியின் சீடர்களும் ஒன்று சேர்ந்து தான் 1.சுனாமியின் போழுது கோயிலுக்குல் பணம் சேர்க்க வேண்டாம் என தடுத்தவர்கள். 2.மாவீரர்களுக்கு அர்ச்சணை செய்ய தடை விதித்தவர்கள். 3.வயது போனவர்கள்(கோயிலுக்கு போகமுடியாத வயோதிபர்கள்) நேரடியாக வானோலியில் ஒளிபரப்பாகும் கோயில் பூசையை கேட்டு மகிழ்ந்தவர்களை கேட்கமுடியாத வண்ணம் நேரடி ஒளிபரப்புக்கு தடை விதித்தவர்கள். இவர்கள் தான் unity பஜன்,அன்பேசிவம்,என்று கதைக்கும் குருமார்கள். _________________ "To think freely is great To think correctly is greater" - Vasampu - 04-07-2006 புத்தன் அப்படியே நம்ம பக்க வீரப்பிரதாபங்களையும் கொஞ்சம் எடுத்து விடுவோமா?? 1) கோயில் கூடாது அது மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றது என்று அறிக்கை விடுவது. நாம் எந்த சமயத்தையும் ஆதரிக்க மாட்டோம் என்பது. 2) ஆனால் திருமணத்தின் போது கோயிலுக்கு சென்று இந்து முறைப்படி தாலி கட்டுவது. 3) கோயில்களில் நல்ல வருமானம் கிடைப்பதால் அவற்றை எல்லாம் தாமே நடத்த வேண்டுமென்று முன்னிற்பது. (அப்போது மட்டும் மூடநம்பிக்கை என்னாச்சு என்ற கேள்வி கேட்கக் கூடாது) அடுத்தவனைக் குறை சொல்லும் முன் நாம் சரியாக நடந்து காட்ட வேண்டாமா???? :roll: :?:
- putthan - 04-07-2006 அடுத்தவனைக் குறை சொல்லும் முன் நாம் சரியாக நடந்து காட்ட வேண்டாமா???? வசம்பு எழுதியது அது சரிதான் - SUNDHAL - 04-07-2006 putthan Wrote:சாமியார் வியாபாரத்திற்கும் இங்கே நல்ல கிராக்கி, ke ke ke அதான் நீங்களும் புத்தன் என்டு பேர் வைச்சிட்டிங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கந்தப்பு - 04-08-2006 3 வருடங்களுக்கு முன்பு இக்கோவில் திருவிழாவுக்குத் தென்னிந்தியாவில் இருந்து தான் நாதஸ்வரகோஸ்டியினர் வரவழைப்பார்கள். இப்பொழுது சில நிறுவாகிகள் ஏன் ஈழத்தில் இருந்து கலைஞர்களினை அழைக்ககூடாது என்று கேட்க ஈழத்திலிருந்து நாதஸ்வரக்கலைஞர்கள் அழைக்க ஆரம்பித்துள்ளார்கள். சிட்னியில் கட்டப்படும் அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தென்னிந்தியாப் பக்திப்பாடகர்களினை அழைத்துக் கச்சேரி செய்வதுண்டு. ஈழத்தில் புகழ் பெற்ற வர்ணராமேஸ்வரன் போன்றவர்களை இவர்களுக்குத் தெரியாதா? - கந்தப்பு - 04-10-2006 இன்று தேர்த்திருவிழா. திங்கள் கிழமையாக இருந்தும் பலர் வேலையிலிருந்து லீவு எடுத்து கோவிலுக்கு சென்றிருந்தார்கள். இக்கோவில் சைவ ஆகம முறைப்படி கட்டிய கோவில். சைவ சமயத்தில் இல்லாத இராமர், அனுமார், அய்யப்பனுக்கு இக்கோவிலில் சிலைகள் இல்லை. இங்கு கோவிலில் நடைபெறும் பஜனைகளில் சாயிபக்தர்கள், ராமரினையும்,அனுமாரினையும், முருகனுக்குப்பாடும்போது இடையே சாயி முருகா என்று பாட, பஜனைகளில் சாயி,ராமா, அனுமா என்று பாடுவது கோவில் நிற்வாகத்தினரால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சில தீவிர சாயி பக்தர்கள் கோவில் நிற்வாகத்தின் மீது கோபம் கொண்டார்கள். - putthan - 04-10-2006 கந்தப்பு நேற்றைக்கு சாப்பாடு எப்படி???எல்லோரும் அதற்கு வந்தவர்கள் போல சாமி இறக்க முன் சாப்பாட்டுக்கு வரிசையில நின்றவை கந்தப்பு தாங்கள் எப்படி???? |