![]() |
|
"கதிர்காமர்" கொலையிலுள்ள மர்மங்கள்!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: "கதிர்காமர்" கொலையிலுள்ள மர்மங்கள்!!! (/showthread.php?tid=3676) |
- narathar - 08-13-2005 மந்தையை இழந்த மேய்ப்பர்களின் புலம்பல். Time to read riot act in Lanka, feels Delhi PRANAY SHARMA New Delhi, Aug. 13: India feels it is time the Sri Lankan government as well as the international community should read out the riot act to the Tamil Tigers and redefine the peace terms to the rebels. Delhi has not officially blamed the LTTE or anybody else. But after the “brutal assassination” of foreign minister Lakshman Kadirgamar, it wants a strong signal to the Tigers that such violent acts in future would lead to global isolation. Kadirgamar, a hardliner who helped outlaw Tamil Tiger rebels internationally and was long seen as a prime target, was shot dead yesterday by a sniper at his heavily guarded Colombo home. In a brief but strongly worded statement, India today “unreservedly” condemned the assassination. Although it did not name the LTTE, it expressed hope that the “perpetrators of the terrorist crime” will be brought to justice. Delhi made it clear that the assassination was aimed at “undermining Sri Lanka’s unity and political stability” and maintained that it will not support any move for a separate Tamil Eelam. “The Government of India’s support for the unity and territorial integrity of Sri Lanka remains constant and undiluted,” foreign ministry spokesperson Navtej Sarna said while reading out the statement this afternoon. This is a known Indian position but that Delhi decided to repeat it now was a clear signal to the rebels what its stand is on the issue. The statement expressed hope that the Sri Lankan government will overcome the challenge posed by the assassination by making sure that the peace process remains on track. Sources in the Indian government said it was for Colombo and the international community to turn the heat on the Tigers. But, at the same time, it was important that the LTTE does not break away from the talks for a peaceful settlement of the ethnic conflict that has claimed thousands of lives. Although the Sri Lankan government has not yet blamed the LTTE, its army has clearly said the Tigers are behind the killing. Sources in Colombo said the Tigers may have denied any involvement, but the assassination bore the “hallmark” of the LTTE. The sources pointed out that though it was the first time that a sniper had killed a senior political leader, similar tactics had been used against army officials when the Indian Peace Keeping Force was deployed in the eighties. Kadirgamar, they added, was killed not only because he was one of the strongest opponents of the Tamil Tigers but also because the LTTE wanted to return to the limelight. With the focus being on the coming presidential elections, the Tigers, the sources said, were getting increasingly agitated that their demands were being pushed to the backburner by President Chandrika Kumaratunga and the leadership in Colombo. An official announcement is likely on the dates of the presidential polls by next week. - narathar - 08-13-2005 <img src='http://img82.imageshack.us/img82/4756/2105grenede0eu.jpg' border='0' alt='user posted image'> படம் சுட்டது நிதர்சனம் இணயத்தளம், - narathar - 08-13-2005 <img src='http://img196.imageshack.us/img196/1834/p1index10vr.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img145.imageshack.us/img145/3943/p1index20pf.jpg' border='0' alt='user posted image'> உதை எப்படிக் கொன்டுபோனார்கள்,படம் Island - aathipan - 08-14-2005 மகிழ்ச்சி சந்தோசம் யார் கொன்றிருந்தாலும் அந்த வீரனுக்கு எந்தக்கெடுதலும் நிகழாது இருக்க ஆண்டவன் அருள்புரியட்டும். - aathipan - 08-14-2005 இவ்வளவு தூரத்தில இருந்து சுட்டு இருக்கலாம் அல்லது பக்கத்தில் வைத்து சுட்டுவிட்டு அங்கும் ஒரு துப்பாக்கியை தயார் செய்து வைத்து கதையைத்திருப்பி இருக்கலாம். - Thala - 08-14-2005 மேற்குலக நாடு ஒன்றின் பங்கு கொலையில் இருப்பதற்கான சந்தர்ப்பம் பற்றி ஆய்வாளர்கள் பேசிவருகிறார்கள். கதிர்காமரின் அண்மைக்கால மேற்குலக விரோதப்போக்கும் இந்திய ஆதரவுப்போக்கும் காரணமாயிருக்கலாம் என்கின்றனர். எது எப்படி என்றாலும் சில மாதங்களில் அவர் மறக்கப்பட போகிறார் என்பது தான் உண்மை. - Thala - 08-14-2005 narathar Wrote:<img src='http://img82.imageshack.us/img82/4756/2105grenede0eu.jpg' border='0' alt='user posted image'> 40mm கிரனேற் பிஸ்ரல் அதுவும் இராணுவ குண்டுகள் தாங்கியுடன் கொண்டுவந்து எறிந்து விட்டுப்போனார்களாம். ம்..ம் . உது இராணுவத்தால் இல்லை இராணுவ உதவியோடதான் நடந்திருக்கு... மறைச்சுக்கொண்டு வரவேண்டியது வெளிப்படயாய் இராணுவ உறைகளோடயே கொண்டு வந்தார்களாமா? - narathar - 08-14-2005 தமிழர் கையைக் கொண்டே தமிழர் கண்ணைக் குத்தும் திட்டத்தைப் பொறுப்பேற்ற கதிர்காமர் Sunday, 14 August 2005 -------------------------------------------------------------------------------- விடுதலைப்புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்கால நிர்வாக அதிகாரசபை ஒரு தனிநாட்டிற்குரிய அடிப்படை நகல் வரைபு. அதனை ஏற்றுக் கொள்வது பிரச்சினைக்குரியதாக இருக்கும். என்று அமெரிக்கா வோசிங்டனில் மே 2004இல் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு தமிழர் இவராவார். சிறிலங்கா முப்படையினரின் நிகழ்வுகளில் கதிர்காமர் கலந்து கொள்வதுடன், அந்நிகழ்வுகளில் பிரதம விருந்தினராகவும் கௌரவிக்கப்படுகின்றார். கதிர்காமரின் சகோதரரான ராஜன் கதிர்காமர் 16.11.1960 தொடக்கம் 01.07.1970 வரை சிறிலங்கா கடற்படை தளபதியாக (றியர் அட்மிரல்) கடமையாற்றியிருந்தார். இவரின் நினைவாக கடற்படையில் தலைசிறந்த மாணவருக்கான விருது வழங்கும் நிகழ்வு வருடாவருடம் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் நடைபெறும். 1998ஆம் ஆண்டிற்கான இவ்விருது வழங்கும் நிகழ்வில் லகஸ்மன் கதிர்காமர் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசும் போது மகாபாரதத்தில் அருச்சுனனுக்கு கண்ணபரமாத்மா போதித்ததாகக் கூறப்படும் பகவத்கீதையை உதாரணம் காட்டிப் பேசியுள்ளார். இங்கு இவர் உரையாற்றும் போது சிறிலங்கா இராணுவத்தினரை பாராட்டிப் பேசியதுடன், அவர்களை உற்சாகப்படுத்தியும் பேசியுள்ளார். அவர் பேசிய பேச்சிலிருந்து சில பந்திகள் பின்வருமாறு:- "ஒரு படைவீரனின் வாழ்வு இலேசானதொன்றல்ல. இராணுவத் தொழில் ஒரு விசேடமாகக் கருதக்கூடிய வாழ்க்கைமுறை. அது ஒரு ஒழுங்குக்கும், ஒழுக்கமுறைமைக்கும் அமைவான வாழ்க்கைமுறை, அது பெருமதிப்பிற்குரிய அம்சங்கள் பலவற்றிற்கு கடப்பாடு கொண்டவர்களின் வாழ்க்கை முறை. தமது தோழர்களுக்கும் அதேநேரத்தில் அரசுக்கும் விசுவாசம் காட்டி வாழும் முறை. தனிநபரின் வாழ்க்கைக்கு ஆபத்தைத் தேடித்தரும் வாழ்க்கை முறையும் அதுவே" "சிறிலங்காவின் இராணுவம் சம்பிரதாயக் கடமைகளை நிறைவேற்றும் ஒரு அமைப்பாக இன்று இல்லை. அது போரில் ஈடுபட்டுள்ள உலகின் எந்தவொரு இராணுவத்திற்கும் சளைக்காத ஒன்று. இன்று இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளவர்களே எதிர்காலத்தில் இராணுவத்திற்கு தலைமையேற்கப் போகிறவர்களாவர். வழிகாட்டும் தலைமையை பெறுவதற்கு விரும்பும் ஒருவர்தான் அதற்கான தகுதியைப் பெறுவதற்கு எவ்வாறான சேவையைப் புரியவேண்டுமென்பதை அறிதல் வேண்டும்." "அண்மைக்காலங்களில் போரில் இறந்துபோன பெரும் அதிகாரிகள் மற்றும் படையினர் விடயத்தில் நாம் மிகுந்த பெருமிதமடைகின்றோம். இவர்களில் பலர் உலகின் வேறுபல நாடுகள் கூட தம்நாட்டவர் என்று அணைத்துக் கொள்ள விரும்பிய உயர் பண்புகளையும் தகுதிகளையும் கொண்டவர்களாயிருந்தனர். அவர்கள் துணிச்சல் மிக்கவர்கள், திறமைசாலிகள், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் கனவான்களாயிருந்தனர். நான் இன்று இங்கே எடுத்துரைத்த நற்பண்புகள் யாவற்றையும் கொண்டவர்களாயிருந்தனர். இன்று பயிற்சி முடித்து வெளியேறும் அதிகாரிகள் உதாரணமாகக் கொள்ளக்கூடிய முன்னோடிகளாக அவர்கள் திகழ்ந்தனர். ஒருஅதிகாரி பேராண்மையுள்ளவராக மட்டுமன்றி பெருமதிப்பிற்குரியவராகவும் இருத்தல் வேண்டும்." "எனது இளம் நண்பர்களே. இந்தக் கனவை அடைய நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும். உங்களது கடமைகளில் வெற்றிபெற வாழ்த்துகின்றேன். நான் உங்கள் பெற்றோர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் இணைந்து உங்களுக்காக சிரத்தையுடன் பிரார்த்திப்பதுடன் நாம் நம்பிக்கை கொண்டுள்ள கடவுள் நமக்கு கருணையும் பாதுகாப்பும் வழங்குவார் என நான் நம்புகின்றேன். விரைவில் யுத்தம் முடிவடையும்." ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற வடக்கு கிழக்கு பகுதியில் நிவாரணம், மீள்கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதற்கான பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் மிகவிரைவில் கைச்சாத்தாகும் என ஐ.நா.சபையின் 61ஆவது கூட்டத்தொடரில் பேசுகையில் குறிப்பிட்டார். அத்துடன் இந்தப் பொதுக் கட்டமைப்பிற்கு உதவி செய்யும் வெளிநாடுகளிடமிருந்து உதவி கோருவதாகவும் கூறினார். இந்தப் பொதுக் கட்டமைப்பு ஒரு முடிவில்லாத ஒரு கட்டுக்கதையாகவே உள்ளது. இதன்மூலம் வடக்குக் கிழக்கு பயன்பெறும் என்பது பொய்யானதே. இந்த உரையில் கதிர்காமர் குறிப்பிட்ட தரவுகள் பிழையானவை என வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கதிர்காமர் மேற்கொண்ட அமெரிக்க விஜயத்தின் போது விடுதலைப் புலிகளைத் தடை செய்யும்படி அமெரிக்கப் பாதுகாப்புச் செயலராக இருந்த மெடலின் அல்பிறைட்டிடம் கேட்டிருந்தார். இதற்கமைவாகவே அமெரிக்கா தயாரித்த 30 அமைப்புகளைக் கொண்ட பயங்கரவாதப் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயரையும் இணைத்துக் கொண்டது. அத்துடன் பிரிட்டனிடமும் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும்படி நேரடியாக கோரியிருந்தார். விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை முடக்கவும், சீர்குலைக்கவும் கதிர்காமர் மேற்கொள்ளும் தீவிர முயற்சியே காரணமென Janas Defence Weekly யின் இலங்கை ஆய்வாளரும்,ஸ்கொட்லாந்து சென்.அன்றூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான எழுத்தாளர் றொகான் குணரட்ண தெரிவித்திருந்தார். வன்னி மக்களுக்கு உணவு மருந்து வழங்குவதற்கான பாதை திறப்பு விடயத்தில் விடுதலைப் புலிகள் ஒத்துவராவிட்டால் எமது படையினர் வன்னிக்குள் ஊடுருவி மக்களுக்கு உதவி செய்வர் 1999 ஓகஸ்ட்டில் பத்திரிகையாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார். ஐ.நா. மாநாட்டில் உரையாற்றும் போது விடுதலைப் புலிகள் சிறுவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்துகின்றாhர்கள் எனவும் இதை வந்து நேரில் உறுதிப்படுத்தும்படியும் ஐ.நா சிறுவர் நிதியத்தைச் சேர்ந்த விசேட பிரதிநிதியான ஒலரா ஒட்டுண்ணுவிடம் இவர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே ஒலரா ஒட்டுண்ணு சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டார். மார்ச் 2005இல் BBCக்கு வழங்கிய பேட்டியொன்றில் 'இராணுவ ஆதரவு இல்லாமல் கருணாவால் எவ்வாறு தனித்தியங்க முடிகின்றது' என பேட்டியாளர் கேட்ட கேள்விக்கு 'யுத்தகளத்தில் அவர் ஒரு சிறந்த தளபதியாக செயற்பட்டவர். எனவே தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வலிமை அவரிடமிருக்கின்றது.' என்று பதிலளித்தார். 1990களின் இறுதியில் சந்திரிகா சமாதானப் புறாவாக வேசமிட்டுத் தேர்தல் களமிறங்கி பெரும் மக்கள் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய போது நாட்டின் அதிமுக்கிய பதவிகளில் ஒன்றான வெளியுறவு அமைச்சர் பதவிக்கு முன்பின் அரசியல் அரங்கில் அடிபடாத பெயருக்குரிய புதுமுகமான லக்ஸ்மன் கதிர்காமரை நியமித்த போது தமிழ் மக்கள் மூக்கில் விரலை வைத்து வியந்தே போயினர். சந்திரிகா உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வை வழங்குவார் என்றே நம்பினர். ஆனால், வரலாறு வேறு விதமாகவே இந்தப் பதவி நியமனத்திற்கான காரணத்தை பதிந்து வைத்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அதனைப் பயங்கரவாத நடவடிக்கையாக உலகிற்குப் பிரசாரம் செய்துள்ள சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தமிழ் மக்களுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தவும், விடுதலைப் புலிகளைப் பூண்டோடு அழிக்கவும் ஒரு தமிழரைப் பயன்படுத்த நினைத்த சதியின் காரணமாகவே கதிர்காமரின் அந்த நியமனம் அமைந்தது. தமிழர் கையைக் கொண்டே தமிழர் கண்ணைக் குத்தும் திட்டத்தைப் பொறுப்பேற்ற கதிர்காமர் அப்போது அமைச்சரானார்.ஜனாதிபதிக்கு விசுவாசமாக, பதவிபக்தியோடு கதிர்காமர் செயற்பட்டதன் காரணமாக ஆட்சி மாறியதும்ஜனாதிபதி அவரைத் தனது ஆலோசகராக நியமித்ததுமல்லாமல் ஒரு அமைச்சருக்கான பாதுகாப்பு உட்பட சகல வசதிகளையும் செய்து கொடுத்தார். சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும் ஜனாதிபதியின் குரலாக, சமாதான நகர்வுகளுக்கு எதிரான கருத்துக்களை (தெளிவாகக் கூறுவதானால் மீண்டும் ஒரு யுத்தத்தை ஆரம்பிக்கத் தூண்டும் பிரசாரங்களை) தீவிரமாக்கினார். குறிப்பாக இந்தியாவை சமாதான முயற்சிகள் மீது எரிச்சல் கொள்ள வைக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தார். 1950களின் நடுப்பகுதியில் இலங்கை சட்டக்கல்லூரியில் அதிதிறமைச் சித்தி பெற்ற லக்ஸ்மன் கதிர்காமர் 1950களின் இறதியில் லண்டன் சென்று ஒக்ஸ்போட்டில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்னரான காலத்தில் லண்டனில் வழக்கறிஞராக கடமையாற்றிய கதிர்காமர் 1970களின் ஆரம்பத்தில் உலகத் தொழிலாளர் அமைப்பின் ஆலோசகராக கடமையாற்றிய பின், அனைத்துலக அறிவுப் பிழைப்பாளர்கள் காப்புரிமை அமைப்பின் இயக்குநராக 1988 வரை கடமையாற்றினார். இக்காலகட்டத்திலான இவரது மேற்கத்தைய அனுபவத்தை சிங்களத்தின் தேவையையொட்டிப் பயன்படுத்துவதற்கான சந்திரிகாவின் எண்ணப்பாடே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக 62 வயதில் கதிர்காமரைப் பதவியில் அமர்த்தியது. இவ்வாறு அரசியலுக்குள் தன்னை நுழைத்துக் கொண்ட கதிர்காமர், தனது மேற்குலக அனுபவத்தைப் பயன்படுத்தி, தமிழர் தரப்பு மீதான மேற்குலகின் பார்வையை தலைகீழாக மாற்றும் நடவடிக்கையை மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினார். அத்துடன் சிறிலங்கா வெளிவிவகாரத் துறையின் புதிய பரிமாணத்திற்கும் வித்திட்டார். சிறிலங்கா விமானப்படையினரால் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மந்துவிலில் 1999ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் அப்பாவிப் பொது மக்கள் உயிரிழந்ததை ஐக்கியநாடுகள் சங்கத்தின் மனித உரிமைகள் சங்கம் கண்டனம் வெளியிட்டதை எதிர்த்து கதிர்காமர் ஐ.நா.வில் நிருபர்களைச் சந்தித்துக் கண்டித்தார். 'இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை விடுத்து, ஐக்கிய நாடுகள் தனது நடவடிக்கைகளை மலேரியா மற்றும் நுளம்பு குறித்த விடயங்களில் கவனம் செலுத்தும் விதத்தில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்' எனவும் கூறினார்.இவ்வாறு ஐ.நா அமைப்பை கதிர்காமர் விமர்சித்தமையானது அந்நேரத்தில் பெரும் சர்ச்சைக்குரியதொன்றாக அமைந்தது. வெளிவிவகார அமைச்சராக இல்லாது சந்திரிக்காவிற்கான ஆலோசகராகக் கடமையாற்றிய காலப் பகுதியில் தாம் பதவியில் அமர்ந்தால் சமாதான செயற்பாடுகளிலிருந்து நோர்வேயின் தலையீடு முற்றாக நீக்கப்படுமென JVP தலைவர் சோமவன்ச அமரசிங்கவிற்கு வாக்குறுதி அளித்திருந்தார். சமாதான முயற்சிகளில் நோர்வேயைப் புறந்தள்ளி இந்தியாவை உள்நுழைக்கும் முயற்சியில் கதிர்காமர் (மிகத் தீவிரமான இராஜதந்திர முயற்சிகளில்) ஈடுபட்டு வந்தார். அண்மைக்கால இந்திய விஜயங்களின் நோக்கங்களும் இதற்கமைவாகவே அமைந்திருந்தன. இவரின் இந்திய விஜயத்தின் போது சிறிலங்கா இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவது, சமாதான முயற்சியில் இந்தியா பங்குகொள்வது போன்ற கருத்துக்களே இவரால் முன்வைக்கப்பட்டன. கதிர்காமர் தன்னை ஒரு தமிழன் என இனங்காட்டிக் கொள்வதைவிட தன்னை ஒரு சிறிலங்கன் எனக் காட்டிக் கொள்வதிலேயே முனைப்பாக இருந்து வந்துள்ளார். இது இவரை மேலும், மேலும் சிங்கள மக்களுடன் நெருக்கமானவராக ஆக்குகின்றது. சிறிலங்கா இராணுவம் யாழ்.குடாநாட்டை 1995ஆம் ஆண்டின் இறுதியில் கைப்பற்றிய சமயம் ஐந்து இலட்சத்திற்கு மேலானவர்கள் வன்னியில் அகதிகளாக மாறி மரத்தின் கீழ் உணவின்றி வாழ்ந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் ஐ.நா. செயலாளராக இருந்த éட்ரோஸ் காலி சர்வதேச சமுதாயத்தை இலங்கை தமிழர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், கஸ்டத்திற்கும் உதவி புரியும்படி ஒரு இதயéர்வமான கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை இது உள்நாட்டு விடயம் எனக் கூறி நிராகரித்த பெருமை கதிர்காமருக்கே உரியது. தமிழ் அகதிகளுக்கு வெளிநாட்டவர்கள் மனிதாபிமான முறையில் உதவி புரிய வந்ததம்கூட தடுக்கப்பட்டது. 1995 ஜூலையில் நவாலி தேவாலயத்தில் குண்டுவீசி அங்கு தஞ்சம் அடைந்திருந்த மக்களை மரணமடையச் செய்வதற்குப் பொறுப்பாக இருந்த விமானப்படையின் செயலை சர்வதேசத்திற்கு செஞ்சிலுவைச் சங்கம் எடுத்துக் காட்டியது. அதற்காக அமைச்சர் கதிர்காமர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். BBC பேட்டியொன்றின் போது 'நீங்கள் ஒரு தமிழராயிருந்தும் உங்கள் நிலைப்பாடு காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு துரோகியென கருதப்படுகின்றீர்களே' என நிருபர் கேட்ட கேள்வியொன்றிற்கு கதிர்காமர் பதிலளிக்கையில், 'அதனை நான் சிறிதும் பொருட்படுத்தப்போவதில்லை. இனஉணர்வினை அதிகளவில் பிரயோகிப்பது கேடானது' Ethnicity overdon is destructive- என்பது அவர் ஆங்கிலத்தில் அளித்த பதிலாகும். இவர் ஒரு தமிழ் மந்திரியாக இருந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை இனச் சுத்திகரிப்பு மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி சிறிலங்காவிலோ அல்லது பிறநாட்டிலோ ஒரு சந்தர்ப்பத்திலாவது இவர் குரல் கொடுக்கவில்லை. எனவேதான் தமிழ் சமுதாயம் இவருக்கு சிறிலங்காவிலோ அல்லது பிறநாட்டிலோ ஒருவரவேற்பும் கொடுக்கவில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை முறியடிப்பதற்கு - சிதறடிப்பதற்கு எமது இதயபூமியான மணலாறு, வெலிஓயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு சிங்களக் காடையர்கள் குடியேற்றப்பட்டனர். இந்த காடையர்களின் குடியேற்றங்களை அமைப்பதில் மாலிங்க H.குணரட்ண போன்ற தீவிர சிங்கள இனவாதிகள் JR இன் மகனான ரவி ஜெயவர்த்தனவின் உதவியுடன் முன்னின்று உழைத்தனர். இந்தத் திட்டத்தை தாம் எவ்வாறு நடைமுறைப்படுத்தினோம் என விளக்கி விபரமாக "For a Sovereign State" எனத் தான் எழுதிய புத்தகத்தில் மாலிங்க H.குணரட்ண குறிப்பிடுகின்றார். இதேபாணியில் சிறிலங்காவின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும், விசுவாசமாக சிங்கள தேசத்திற்காக உழைத்த புலனாய்வு அதிகாரிகளான ஸேர்னி விஜேசூரிய, கப்டன் S.H.முகமட் நிலாம் போன்றவர்களை சிங்கள தேசப்பற்றாளர்களாக வலியுறுத்தியும், இதே மாலிங்க H.குணரட்ண 'Tortured Island" என்ற புத்தகத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்தப் புத்தகத்தில் 'பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் LTTE ஐ வெறுக்கின்றார்கள். அவர்கள் ஒன்றுபட்ட சிறிலங்காவிற்குள் வாழ விரும்புகின்றார்கள் என்று குறிப்பிடும் மாலிங்க H.குணரட்ண, "LTTE ஐ எதிர்த்த தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சிங்கள பொலிஸ், ஆயுதப்படை மற்றும் அரசியல் தலைவர்கள் துரோகமிழைத்து விட்டார்கள்" என்றும் மேலும் குறிப்பிடுகின்றார். 12.06.2005 அன்று BMICHஇல் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கதிர்காமர் இந்த நாடு பிளவடையாது தடுத்து, நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாக்க தன்னால் முடிந்த எதையும் செய்யத் தயாராயிருப்பதாகவும், இந்த எழுத்தாளரை தனக்கு 40 வருடங்களாகத் தெரியும் என்றும், தாம் இருவரும் பலமணித்தியாலங்கள் ஒன்றாக இருந்து பல விடயங்கள் பற்றியும் விவாதித்ததாகவும் கூறினார். இந்த வைபவத்தில் உரைநிகழ்த்திய இன்னொரு தீவிர சிங்கள இனவாதியாகிய S.L.குணசேகர, 'தான் மதிப்பளிக்கும் ஒரேயொரு அமைச்சரவை அமைச்சர் கதிர்காமர்" என்று குறிப்பிட்டிருந்தார். சிறிலங்கா என்ற சிங்கள தேசத்திற்காக உழைத்து உயிர் நீத்த PLOTE மோகன் போன்ற தியாகிகளுக்கு காணிக்கை" என்று கூறி மேற்படி S.L.குணசேகர ABOMINATION என்ற புத்தகத்தை முன்னர் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கல்யாணி, அடானா http://sooriyan.com/index.php?option=conte...id=2139&Itemid= - sinnakuddy - 08-14-2005 ரோய்ட்டர் செய்தியொன்றில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு மேல் கெலி பிளேன் மூலம் தேடுதல் நடைபெறுகிறது என்ற செய்தி நம்பகத்தன்மையுடையதா...அத்துடன் அச்செய்தி கூறுகிறது ..கடற்ப்படைக்கலங்களும் புலிகளின் கட்டுப்பாட்பகுதிக்கண்மையில் நிற்கின்றெனதென கூறுகிறது - cannon - 08-14-2005 1) லக்ஸ்மன் கதிர்காமரின் கொலையைத் தொடர்ந்து, அவரது வீட்டுக்கு அருகேயுள்ள வீடு தமிழருக்கு சொந்தமானதெனவும், அங்கிருந்தே கதிர்காமர் கொல்லப்பட்டதாகவும், அவ்வீட்டிலிருந்த ஒரு வயோதிப தமிழ்த் தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.... * லக்ஸ்மன் கதிர்காமர் இருந்த/கொல்லப்பட்ட வீடுள்ள புல்லர்ஸ் லேனானது, கொழும்பு-7௭ பகுதியைச் சார்ந்தது. அப்பகுதிகளில் தமிழர்கள் என்று கூறப்படும் சிலர் வசிக்கிறார்கள்தான். ஆனால் அந்த தமிழர்கள் என்று கூறப்படும் தமிழர்களுக்கு தமிழ் மொழி என்ன என்றாலே தெரியாது, ஆங்கிலமும், சிங்களமும்தான் அவர்களது அன்றாட பேச்சுமொழிகள், மேலைத்தேய வாழ்க்கை முறைகள், அவர்களது திருமனங்களும் ஒன்றில் மேற்கு நாட்டவர்களுடனாயிருக்கும் இல்லையேல் உயர் சிங்களவர்களுடனாகவிருக்கும், வடக்கு/கிழக்கு தொடர்பே அற்றவர்கள், அவர்களது பெயர்களை வைத்து சிலசமயம் தமிழர்கள் என்று இனங்காணலாம் ஒழிய! இவர்களுக்கு இனம்-மொழி-தேசியம்-தன்னாட்சிகளிலெல்லாம் நம்பிக்கையோ/ஆதரவோ இல்லாதவர்கள்!!... இப்படியானதொரு சாக்கடையிலிருந்து வந்தவர்கள்தான் - கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு இருக்கும் வயோதிப தம்பதிகளும்!!!.... இவர்களா லக்ஸ்மன் கதிர்காமரின் கொலைக்கு உடந்தையாக இருக்கப் போகிறார்கள்???? மிக திட்டமிட்டு தமிழர்கள் மேல் கொலைப்பழியை போடுவதற்கான நாடகமே இந்த வயோதிப தம்பதிகள் கைது!!!! - narathar - 08-14-2005 அவ்வாறு நடப்பது இந்தத் தமிழ் பெயருள்ள சிங்களவருக்கு ,அவர்களின் விசுவாசம் எது வரை சிங்கள இனவாதிகளினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதை உணர்த்தட்டும். - Niththila - 08-14-2005 என்னதான் சொல்லுங்கோ சிங்களவன்களும் இந்தியாவும் புலிகள் செய்தது என்றுதான் சாதிப்பினம் :evil: நாங்க ஏன் இதை தமிழ் அமைச்சர் :evil: :twisted: :evil: ஒருவரை அனியாயமாக சிங்களவன்கள் கொன்றுவிட்டதாக கேக்க கூடாது அவைக்கு மட்டும்தான் நாடகமாடத் தெரியுமா என்ன :roll: - vasisutha - 08-14-2005 அதானே.. வர வர நம்மட அண்ணாக்களுக்கு புத்திசாலித்தனம் குறைஞ்சு போச்சு.. :roll: - Birundan - 08-15-2005 Thala Wrote:கீழ இருக்கிற படம் ஒரு குத்துமதிப்பான அழவுதான் ஆனால் சாதாரணமாக எல்லா சினைப்பர் வகையும் ஒரே நீழத்தில் தான் இருக்கும். இல்லாவிடில் ஆளைக்கொல்லும் தூரம் குறைந்து விடும். (அதாவது. killing range)<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தூக்கிக்கொண்டுதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnakuddy - 08-15-2005 http://science.howstuffworks.com/sniper1.htm - Thala - 08-16-2005 Birundan Wrote:Thala Wrote:எனது கேள்வி என்ன வென்றால் இதை எப்படி கொண்டு செண்றார்கள் அப்ப ஆமிக்காறர் பூப்பறிச்சுக் கொண்டிருந்தவை ஆக்கும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 08-16-2005 தூக்கிக் கொண்டு போனதே ஆமிக்காரர் தானே தல அண்ணா :wink: :roll: :roll: - Thala - 08-16-2005 Niththila Wrote:தூக்கிக் கொண்டு போனதே ஆமிக்காரர் தானே தல அண்ணா :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இதச்சொன்னா நம்பாத சனமும் இருக்கு - Birundan - 08-16-2005 ஆமிக்காறனோ பூக்காறனோ, யார் என்றாலும் தூக்கிக்கொண்டுதானே போகவேண்டும் இழுத்துக்கொண்டுபோக முடியுமா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன தல இந்த சின்னவிசயம் கூட தெரியலயா? நித்திலாக்கு தெரிந்திருக்கு. என்ன தல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 08-16-2005 நானும் எதாலும்... இப்படி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பிறகு... இப்படி hock: :wink:மிச்சத்துக்கு இப்படி.. :? .... எண்டு கருத்தெழுதினால் தான் கட்டையில போற வயதுவர முதல் 50 கருத்தாவது எழுதிப்போட்ன் எண்டு எழுதினதை திருத்த விடுவினமாம்.
|