Yarl Forum
பிருந்தனின் கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பிருந்தனின் கவிதைகள் (/showthread.php?tid=3637)

Pages: 1 2 3 4 5


- கீதா - 08-20-2005

Birundan Wrote:சொந்த கவிதை மட்டும் அல்ல சொந்த கதையும் கூட,அந்த நேரத்தில் நானும் அதில் மாட்டுப்பட்டேன்.அந்த அவலங்களை நேராக கண்டேன்.




அப்படியா

..............
jothika


- Nitharsan - 08-21-2005

ப்ரியசகி Wrote:நீங்கள் ரொம்ப நல்லா கவிதை எழுதுரீங்க பிருந்தன்அண்ணா...
நல்லா எழுத தெரிந்ததாலா தான் எழுதுறார்... :wink:


வாழ்த்துக்கள் பிருந்தன் உங்கள் கவிதைகள் தொடரட்டும்..


- Birundan - 08-21-2005

அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Birundan - 08-21-2005

காதல்அவஷ்த்தை

உனக்காக நான் சந்தியில் காத்திருந்தேன்
நீ வரும் திசையை என்றும் பார்த்திருப்பேன்!
தூரத்தில் உனது உருவம் கண்டால்
என் உடல் குளிர்ந்திருக்கும்!
உன் தரிசனம் கிடைத்துவிட
தன்னந்தனியாக புலம்பி நிற்பேன்!
நீ அருகில் நெருங்க நெருங்க
எனது இதயம் நொருங்கும்படி அடித்திருக்கும்!
உன்னை அருகில் கண்டவுடன்
எனது இரத்தம் உறைந்துவிடும்!
உனது தலை எனது பக்கம் திரும்ப
எனது விழிகள் படபடத்து மூடும்!
உன் முகத்தை முழுவதும் கண்டுவிட்டால்
என் தொண்டைகுழி ஏறி இறங்கும்!
உன்னுடன் பேச நினைக்கையிலே
நா உலர்ந்து பேச மறுக்கும்!
உனது நடை வேகம் குறைய
எனது கைகள் பிசைந்திருக்கும்!
என்னை தாண்டி நீ செல்கையில்
மூக்கையே சுட்டெரிக்கும் பெருமூச்சு வெளிவரும்!
முன்னே சென்று நீ திரும்பிப் பார்த்தால்
எனது நெஞ்சு விம்மித் தவிக்கும்.


- Anusa - 08-21-2005

உங்கள் கவிதை நல்லாயிருக்கு


அனுசா


- Birundan - 08-22-2005

நன்றி அனுஷா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 08-22-2005

ஆமா பிருந்தன் அனுபவமா


- ப்ரியசகி - 08-23-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ப்ரியசகி எழுதியது:  
நீங்கள் ரொம்ப நல்லா கவிதை எழுதுரீங்க பிருந்தன்அண்ணா...  

நல்லா எழுத தெரிந்ததாலா தான் எழுதுறார்... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


நல்லா இருக்கு...உண்மையா இருக்கு...
கூட..அனுபவங்கள் தான் கவிதையாக வரும் இல்லையா? :roll:


- Birundan - 08-25-2005

அனைவருக்கும் நன்றிகள்.

காலம் ஒரு போதி மரம்
அது நாளும் ஒரு சேதிதரும்.
_ வைரமுத்து. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Birundan - 09-02-2005

வெளிநாடு

வெளிநாடு வந்து விட்டால்
பலநோடு உழைத்திடலாம் என்றார்!
ஒருநோடும் இங்கில்லாது
கடநோடு இங்கிருக்கின்றோம்! இன்று
சிலநோடு உழைப்பதற்க்கு
பலனேதும் இல்லாது!
பலமோடு பார்த்திருப்போம் பலகாலம்!
வருடம் பலதாகியும் வேலையில்லை!
நிரந்தரமானதொரு விசாவுமில்லை!
இல்லை என்ற வார்த்தை எம்வாழ்வில் இல்லை!
என்று இறுமாந்திருந்த எமக்கு வாழ்வே இல்லை.


- ப்ரியசகி - 09-02-2005

கவிதை உணைமையா இருக்கு அண்ணா...தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்


- கீதா - 09-02-2005

Birundan Wrote:வெளிநாடு

வெளிநாடு வந்து விட்டால்
பலநோடு உழைத்திடலாம் என்றார்!
ஒருநோடும் இங்கில்லாது
கடநோடு இங்கிருக்கின்றோம்! இன்று
சிலநோடு உழைப்பதற்க்கு
பலனேதும் இல்லாது!
பலமோடு பார்த்திருப்போம் பலகாலம்!
வருடம் பலதாகியும் வேலையில்லை!
நிரந்தரமானதொரு விசாவுமில்லை!
இல்லை என்ற வார்த்தை எம்வாழ்வில் இல்லை!
என்று இறுமாந்திருந்த எமக்கு வாழ்வே இல்லை.









செந்தக் கவிதை போல ? நல்லகவிதை நன்றிஅண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Birundan - 09-04-2005

ப்ரியசகி,ஜோதிகாவுக்கு நன்றிகள்


- Mathan - 09-05-2005

வெளிநாட்டு வாழ்க்கையின் ஒரு பகுதியை கவிதையாக வடித்திருக்கின்றீர்கள், வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்,


- Birundan - 09-09-2005

அக்கரை

எம்மின மக்கள் இங்கு படும்பாடு
வேற்ரொரு மக்கள் பட்டதில்லை!
பாடுபட்டு உழைத்த மக்கள் எல்லாம்
இங்கு படாத பாடுபடுகின்றனர்!
சொகுசு வாழ்வு வாழ வந்த மக்கள்
கொசு வாழ்வு வாழுகின்றனர்!
ஒடுங்க ஒரு இடமில்லாது
ஓடித்திரிகின்றனர் வீதியிலே!
வீடு வேலை என்று ஓடிகின்றனர்
இவர் ஓட்டம் எதுவரை!
உயிர் ஓட்டம் உள்ளவரை
அலுத்துவிட்டது வெளிநாடு!
இவர் இனி சொர்க்கமென கருதுவது
இவர் தம் தாய் நாடே!
அக்கரைக்கு இக்கரை பச்சை
என ஓடிவந்தவர்க்கு
இப்போது அக்கரை
பச்சையாகத் தெரிகின்றது.


- கீதா - 09-10-2005

நல்ல கவிதை நன்றி தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Birundan - 09-12-2005

நன்றி ஜோ...


- Birundan - 09-17-2005

இயற்கை காதல்

இறைவன் படைப்பில் எத்தனை புதுமை
அத்தனையிலும் வைத்தான் இளமை!
நீலவானத்தில் ஓடித்திரியும் நிலவு
அதற்கு தோழியர் எத்தனபேர் முகில்களாக!
வாணத்து தேவதைக்குக் கூடநடக்குது வலைவீச்சு
எத்தனை நட்சத்திர இளைஞர் கண்சிமிட்டும் போட்டி!
அவள் உடுத்திக்கொள்ள ஏழுவர்ணத்தில் சேலை
அச்சேலைக்குக்கூட எத்தனை அலங்கரிப்புவேலை!
பன்னீர் தூவும் பனித்துளிகள்
அவள் குளிப்பதற்கு மழைத்துளிகள்!
இளம்காலைப்பொழுதில் வந்துவிட்டான் அவளது காதலன்
அவன்வருகையை பறைசாற்ற எத்தனைஉயிர்களின்ஆர்பரிப்பு!
காதலனை கண்டஅவளோ வெட்கத்தில் ஒளிந்து கொள்ள
அவளைக்காணாத கோபத்தில் அவனோ
எம்மை சுட்டெரிக்கிறான்.



- Senthamarai - 09-17-2005

நன்றாக இருக்கின்றது பிருந்தன் அண்ணா. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத.


- வெண்ணிலா - 09-17-2005

அருமையான வரிகள். வாழ்த்துக்கள் பிருந்தன்.