![]() |
|
சைவசமயத்தை மேன்மையுறச் செய்த ஆறுமுகநாவலர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: சைவசமயத்தை மேன்மையுறச் செய்த ஆறுமுகநாவலர் (/showthread.php?tid=3339) |
- kuruvikal - 09-15-2005 நாவலர் சொன்னது சரிதானே... ஒருவரை மற்றவர் தீண்டினால்...எத்தனை பிரச்சனை... தொற்றுநோய் பரவும்... ஒருவேளை பெண் என்றால்...ஈவ்ரீசிங் கேட்டு கேசு என்றாகிடும்... இல்ல சண்டை சச்சரவு வந்திடும்.... ஆதலால்.. அப்ப நாவலர் சொன்னது இப்பவும் சரியாத்தான் படுகுது...! வைரமுத்துவோ..யாரோ எழுதினாங்க ஒரு பாட்டு...தீண்டாதே என்னைத் தீண்டாதே என்று...யாரோ பாடுறாப் போல....அப்ப அதுவும் தீண்டாமையா...??! ஏய்யா...உங்களுக்கு வேற வேலையே இல்லையா...புதிசா எழுதிறம் என்று பழைய குப்பையை தேடிக் கொண்டு வந்து கொட்டி நாறடிச்சிட்டு இருக்கிறியள்...! :wink: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- preethi - 09-15-2005 Quote:எனக்கு சரி என்பதை சரி என்கிறேன்,பிழை என்பதை பிழை என்கிறேன் இங்கு எவருக்கும் வக்காலத்து வாங்குவதற்கோ அல்லது எது எனது சமயம் ,சாதி என்கின்ற நிலைகளுக்குள் நின்று கொன்டு நான் கருத்து எழுதவில்லை.அப்படி எழுதுவதானால் நான் வேறு விதமாகத் தான் எழுத வேண்டும்.ஆகவே வரலாற்று உண்மைகளை மறைக்காமல் உண்மை பேசுவோம். வருணாச்சிரமத்தைத் தமிழ்ர்களிடையில் அறிமுகப்படுத்திப் பலநூற்றாண்டுகளாக பிரத்தியேக சலுகைகளையும்,அத்தஸ்தையும் அனுபவித்தவர்கள் பார்ப்பான்கள். அப்படியான பார்ப்பான்களுக்கு வக்காலத்து வாங்கிய நாரதர் சாதிக்கொடுமைக்கு வெள்ளாளரைச் சாடுவது சந்தேகத்தை உண்டாக்குகிறது. பார்ப்பான்களால் அறிமுகப்படுத்தப் பட்ட சாதிப்பாகுபாடு, தமிழர்களை பிரித்துப் பலவீனப் படுத்தியது மட்டுமல்ல, சாதிப்பாகுபாட்டைக் காட்டுவதில் பார்ப்பான்களை விட நாங்கள் ஓன்றும் சளைத்தவர்களல்ல என்று பல தமிழர்கள் நிரூபித்திருக்கிறார்கள். வருணாச்சிரமம் இந்து சமயத்திலிருக்கிறது ஆனால் உண்மையான, தமிழரின் சைவ சமயத்தில் இல்லை. யாழ்ப்பாணச்சைவத்தின் அடிப்படை வேதங்களல்ல. சைவ சித்தாந்தங்களும், ஆகமங்களும்,தேவார திருவாசகங்களும் தான் யாழ்ப்பாணச்சைவத்தின் அடிப்படை. வைதீகத்தின் அடிப்படை தான் வேதங்களும், வருணாச்சிரமும். வருணாச்சிரமத்தின் படி ஈழத்து வெள்ளாளரும் சூத்திரர் தான். காஸ்மீரச்சைவம் போல, கன்னடரின் வீரசைவம் போல், ஈழத்தமிழரின் சித்தாந்த சைவமும் வித்தியாசமானது. தமிழரின் யாழ்ப்பாணச் சைவத்தை வைதீகப் படுத்தியது ஆறுமுக நாவலர் தான். வருணாச்சிரமப்படி தான் சூத்திரனாக விரும்பாத நாவலர் "சற்சூத்திரன்" என்ற பதத்தை அறிமுகப் படுத்தினார். அதற்காக நாவலரைக் குறை கூறுவதில் நியாயமில்லை. <b>அவர் இருந்த காலத்தின் கட்டாயம் அது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நாவலருடைய முக்கிய நோக்கம் சைவத்தை கிறிஸ்தவ மிஷனரிமாரிடமிருந்தும், மக்களை மதம் மாற்றுவதில் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்த ஆங்கிலே அரசிடமிருந்து காப்பதாகும். சாதியொழிப்பு அவருடைய நோக்கமல்ல சைவத்தைக் காப்பது தான் அவருடைய நோக்கம். அவர் அதில் வெற்றியும் கண்டார்</b>. நாவலர் இருந்திருக்காது விட்டால், நல்லூர்க கந்தன் இருக்குமிடத்தில் நல்லை மாதா இருப்பார், எங்கள் எல்லோருக்கும் ஒரு ஐரோப்பிய பெயர் முதல் பெயராக இருந்திருக்கும், ஆறுமுக நாவலர் அளப்பரிய தமிழ்த் தொண்டும் சமயத் தொண்டும் ஆற்றினார் என்பதில் எந்த அய்யமும் இல்லை. ஆனால் அதன் அடிப்படையில் அவரை ஒரு தமிழ்த் தேசியவாதியாகப் பார்ப்பது, பார்க்க முனைவது பொருந்தாது. மேலும் ஆறுமுகநாவலர் அனைத்துத் தமிழரையும் மொழியின் அடிப்படையிலும் சமயத்தின் அடிப்படையிலும் ஒன்று திரட்டியவர் அல்லர். <b>நாவலர் இருந்த காலத்தை கருத்தில் கொள்ளாது, 150 வருடங்கள் பின்னோக்கிப் போய், நாவலரைச் சாதியை வளர்த்தவர் என்று கூறும் நவீன மிஷனரிமார், கிறிஸ்தவ சமயம் மானுடத்துக்குச் செய்த கொடுமைகளை எண்ணிப் பார்ப்பதில்லை. </b> தமிழ்த் தேசியத்தின் அடையாளம் மொழி, சமயம் அன்று. அதனால் நான் கிறிஸ்தவத்துக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ எதிர்ப்பல்ல ஆனால் ஒரு விடய்த்தைப் பற்றி விவாதிக்கும் போது பாரபட்சம் காட்டக் கூடாது. <b>இந்த நவீன மிஷனரிமார் சைவசமயத்தின் முதுகிலுள்ள அழுக்கைச் சுட்டிக்காட்டுமளவுக்கு, தங்களின் முதுகிலுள்ள அழுக்கை அவர்களால் பார்க்க முடிவதில்லை. யாராவது அவ்ர்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டுமல்லவா?</b> கடந்த நூற்றாண்டு வரை கிறிஸ்தவமும், கிறிஸ்தவர்களும் மானுடத்துக்குச் செய்த கொடுமைகள் எண்ணிலடங்காதவை. சிலுவை யுத்தம் தொடங்கி இரண்டாம் உலகப்போர் வரை சமயத்தின் பேரால் கோடிக்கணக்கான் யூதர்களையும், முஸ்லிம்களையும் கொன்று குவித்தவர்கள் தான் கிறிஸ்தவர்கள். சமயத்தின் பேரால் பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை மறுத்தும் பல விஞ்ஞானிகளைக் கொன்றது கிறிஸ்தவம். மதத்தின் பேரால் பல அப்பாவிப் பெண்களைப் புதைத்தும், மரத்தூண்களில் கட்டியும் எரித்தது கிறிஸ்தவம். நாசிகளையும் ஹிட்லரையும், அவனது concentration campச், Gas chamber எல்லாவற்றையும் ஆசீர்வதித்துத் தொடக்கி வைத்தவர் போப்பாண்டவர் பயஸ். யேசு யூதர்களின் மீட்பராக இருக்க விரும்பினார், அவ்ருடைய சீடர்கள் அவரைக் கடவுளாக்கி விட்டார்கள். யேசுநாதர் ஒரு போதும் தான் கடவுள் என்று சொன்னதில்லை. Bible is bundle of contradictions. Paul says one thing and Luke says another and John says something else. Spanish inquistion, Massacre of millions of American Indians, Colonization etc. எல்லாம் நடந்தது கிறிஸ்தவத்தாலும், கிறிஸ்தவர்களாலும் தான். மற்ற மதங்களோடு ஓப்பிடும் போது இந்து சமயம் ஒரு மென்மையான, பொறுமையான, சுதந்திரமான மதம். யாரும் இங்கு தலைவரில்லை, யாரும் எவரையும் கட்டாயப் படித்துவதில்லை. எந்த ஐயருக்கும் பணியத் தேவையில்லை. கடவுளைக் கூட நிந்திக்கலாம், அதற்காக யாருமே எவரையும் கொல்லுவதற்குப் Fatwa விடப் போவதில்லை. - Eelavan - 09-15-2005 யூட் தற்காலத்தில் எந்த மதம் சாதியை வளர்க்கிறது என்று கேட்டால் கிறிஸ்தவம்,சைவம் இரண்டுமே விதிவிலக்கல்ல. மதக் கொள்கைகள் கோட்பாடுகள் என்பன வெறுமனே எழுதப்பட்ட பைபிள்,வேதாகமங்கள் என்று கொண்டால் நீங்கள் சொல்வது மறுக்க முடியாது.வர்ணாச்சிரமக் கோட்பாடு இந்து மதத்தின் ஆரம்பகாலத்திலேயே வரையறுக்கப்பட்டுவிட்டது. ஆனால் மதம் என்பது அதனை வழிநடத்துபவர்களையும் பின்பற்றுபவர்களையும் கூட உள்ளடக்கியது என்றால் நிற,சாதி பாகுபாடுகளில் இந்துமதத்திற்கு எவ்விதத்திலும் குறைவில்லாதது கிறித்தவ மதம். ஒரு வேளை பைபிளின் இன்னொரு புதிய ஏற்பாடு எழுதப்பட்டால் அதிலே அந்தப் பாகுபாடுகளும் எழுதப்பட்டலாம். மற்றது சாதிப் பாகுபட்டையும் அதற்குக் காரணமான பார்ப்பனரையும் திட்டிக்கொண்டே நான் கலப்பில்லாத யாழ்ப்பாணத்து வெள்ளாளனாக்கும்.என்பவர்களை எப்படிப் புரிந்துகொள்வது என்று புரியவில்லை. நான் வெள்ளாளன் என்று சொல்வதைக் கூட ஓரளவு புரிந்துகொள்ளலாம் அதையெல்லாம் கடந்து வருவதற்கு இன்னும் பல வருடங்கள் பயணிக்கவேண்டும். ஆனால் கலப்பில்லாத வெள்ளாளன் என்றால் என்னவென்று புரியவில்லை.அப்படிச் சொல்பவர்கள் ஒருமுறை கே.டானியலின் அடிமைகள்,கோவிந்தன்,பஞ்சமர் ஏதாவதொரு நாவலை வாசித்துப் பாருங்கள் - kuruvikal - 09-15-2005 [quote=Eelavan]யூட் தற்காலத்தில் எந்த மதம் சாதியை வளர்க்கிறது என்று கேட்டால் கிறிஸ்தவம்,சைவம் இரண்டுமே விதிவிலக்கல்ல. மதக் கொள்கைகள் கோட்பாடுகள் என்பன வெறுமனே எழுதப்பட்ட பைபிள்,வேதாகமங்கள் என்று கொண்டால் நீங்கள் சொல்வது மறுக்க முடியாது.வர்ணாச்சிரமக் கோட்பாடு இந்து மதத்தின் ஆரம்பகாலத்திலேயே வரையறுக்கப்பட்டுவிட்டது. ஆனால் மதம் என்பது அதனை வழிநடத்துபவர்களையும் பின்பற்றுபவர்களையும் கூட உள்ளடக்கியது என்றால் நிற,சாதி பாகுபாடுகளில் இந்துமதத்திற்கு எவ்விதத்திலும் குறைவில்லாதது கிறித்தவ மதம். ஒரு வேளை பைபிளின் இன்னொரு புதிய ஏற்பாடு எழுதப்பட்டால் அதிலே அந்தப் பாகுபாடுகளும் எழுதப்பட்டலாம். மற்றது சாதிப் பாகுபட்டையும் அதற்குக் காரணமான <b>பார்ப்பனரையும் திட்டிக்கொண்டே நான் கலப்பில்லாத யாழ்ப்பாணத்து வெள்ளாளனாக்கும்.என்பவர்களை எப்படிப் புரிந்துகொள்வது என்று புரியவில்லை. நான் வெள்ளாளன் என்று சொல்வதைக் கூட ஓரளவு புரிந்துகொள்ளலாம் அதையெல்லாம் கடந்து வருவதற்கு இன்னும் பல வருடங்கள் பயணிக்கவேண்டும். [b]ஆனால் கலப்பில்லாத வெள்ளாளன் என்றால் என்னவென்று புரியவில்லை ஏன் இவ்வளவு கஸ்டப்படுகினம்...அதைச் சொல்லத்தானே ஈழவன்...! சாதி ஒழிய வேண்டும் என்று ஒருபுறம் கூச்சல் போடும் யூட்டும் மறுபுறம் தன் சாதி மேலாண்மையை நிலைநிறுத்த பார்பர்ணியத்தை எதிர்ப்பதாக கதைவிடும் பிரீத்தியும்...சாதி..அது என்னென்ன...எது அதை உருவாக்கிறது...என்ற அடிப்படைகளையும் தாறது...அவர்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக்குது தானே...! ஆறுமுகநாலவர் பற்றி இதுவரைக்கும் நாங்கள் அறிந்தது... தமிழும் சைவமும் வளர்த்த பெரியார் என்றுதான்...இங்க தான் அறியுறம்...சாதியும் தீண்டாமையும் வளர்த்தவர் என்று...இன்று அவரை பாடசாலைகளில் சிலையாகவும் படமாகவும் வரைந்து போற்றுகிறார்களே...தீண்டாமையை பரப்பத்தானா...??! நல்லூர் நாவலர் சிலையடியில் விளையாடியதுண்டு...அப்போ தீண்டாமை அறிந்து தீண்டாமல் இருந்ததில்லை எவரையும்...ஆனால் இன்று எத்தனையோ மாற்றங்களின் பின்னும் இக்களத்தில் அறிகின்றோம்..நாவலர் இன்னொரு நல்லது தீண்டாமை செல்லி இருக்கிறார் என்று...உண்மை...[b]இந்த பிரீத்தி, யூட் போன்று மனத்துக்குள் சாதி வெறி வளர்க்கும் மறைமுக சாதி வெறியர்களைத் தீண்டுதலிலும் நாவலனின் தீண்டாமை நன்றே...! </b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Thala - 09-15-2005 நல்லாச் சொன்னீங்கள் குருவீஸ்..... உதுல பிரீதி எண்டது...யார் என்ன சொன்னவை எண்டு வாசிச்சுப் பாக்காமக் கருத்தெழுதும் எண்டாப் பாருங்கோவன்.... அதிலயும் இண்டக்கும்... தமிழனைக் கொல்லுற முஸ்லீம்கள்.. சிங்களவனப் பற்றிக்கவலை இல்லை... தன்ர சாதியப் பற்றித்தான் கவலை எல்லாம்... இதில சோனி வீடு பூந்து ஆக்கள வெட்டேக்க மனிசிமாரின்ர சீலத்தலைப்புக்குள்ள ஒளிவினம்... மணி அடிக்கிற ஐயந்தானே எண்டுதான்... உந்த ஆட்டம் .. - kurukaalapoovan - 09-15-2005 தலா நீங்கள் பிரீத்திய குறை கூறிக் கொண்டு எமது இஸ்லாமிய சகோதரர்களை பற்றி அப்படி (முக்கியமாக இந்தக்கால கட்டத்தில் கூறுவது) ஆரோக்கியமாக தெரியவில்லை. கடந்த கால அனுபவங்கள் கசப்பானவை இல்லை என்று கூறவில்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை நோகடிக்கவும் முயலவில்லை. ஆனால் கடந்த கால நிகள்வுகளில் புறக்காரணிகள் (வெளிச்சக்திகளின்) தூண்டுதல் இருந்ததையும் கவனத்தில் கொள்ளவேண்டும். புதியதொரு அத்தியாயம் தொடங்கப்பட்டு இன்னுமொரு சந்தர்பம் வழங்கப்பட்டிரிக்கிறது எம் எல்லோருக்கும். அதை பாதிக்கக்கூடி கருத்துக்களை வைப்பதை தவிர்பது நல்லது என நினைக்கிறேன். - Thala - 09-15-2005 அதைதான் அண்ணா நானும் சொல்ல வந்தனான்.. கெடுதல் செய்தவருடன் நட்பு.. எங்களிடம் அண்டி வாழ்வபரிடம் காழ்ப்புணர்ச்சி... இது எந்த வகையில நியாயம்... - narathar - 09-15-2005 அப்படியான பார்ப்பான்களுக்கு வக்காலத்து வாங்கிய நாரதர் சாதிக்கொடுமைக்கு வெள்ளாளரைச் சாடுவது சந்தேகத்தை உண்டாக்குகிறது. நான் களத்தில எழுதினது எல்லாத்தையும் வடிவா வாசித்தால் தெரியும் நான் பார்ப்பனருக்கு வக்காளத்துவாங்கிறவனா என்று, கேட்டுப் பாரும் குருவிய.மேலும் இங்க நான் கருத்து எழுதிறது உம் மிடம் சேட்டிபிகற் வாங்க இல்ல.அதக் குடுக்க உமக்கு எந்தத் தகுதியும் இல்லை. பார்ப்பனரைச் சாடி சுத்த வெள்ளாளன் என்று கருத்து எழுதும் உமக்கு இருப்பது சாதிய வெறி,இந்துமதத்தை தாழ்த்தி கிரித்துவமத்ததை உயர்த்தி எழுதும் ஜூட்டுக்கும்,தீண்டாமை பறுவாயில்லை என்று எழுதும் குருவிக்கும் இருப்பது தனது மதம் என்னும் வெறி.சாதியத்தைச் சாடும் தல ,இசுலாமிய சகோதரரை சோனிகள் என்று இழிவாக எழுதுவதும் அவரது அறியாமயே. எயேசுவும், நபிகளும், நாவலரும் அந்த அந்த சமூகக் காலகட்டங்களில் தோன்றிய சமுதாயச் சிந்த்னை ஆளர்களே.அவர்கள் எம்மைப் போன்ற மனிதர்களே.அவர்களை கடவுள் ஆக்கி நிறுவனப் படுத்தியவர்கள் அதனை மதமாக்கினர்.இதுகளைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு நாங்கள் ஏன் இது என்ட மதம் எண்டு மதத்தோட கருத்து எழுதவேணும். இப்ப எங்களுக்கு வேண்டியது பரந்த நடு நிலயான சமூகவியற் வரலாற்றுப் பார்வையே.இப்ப எங்களுக்குத் தேவை சமத்துவம்,மனித நேயம், சகோதரத்துவம் ஆகியனவே.மற்றெல்லாம் நான்,எனது மதம் ,சாதி எங்கின்ற அழுக்காறுகள், அகந்தைகள். - Eelavan - 09-15-2005 குருவி நாவலர் சைவமும் தமிழும் தழைத்தோங்க வந்தவர் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை அவர் சாதியையும் முன்னிறுத்தியது. வல்வெட்டித்துறைச் சிவன்கோவில் கட்டுவதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தபோது மீனவர்களான அவர்களுக்கு ஏன் சிவன் கோவில் என்று கொச்சையாகக் கேட்டது மாத்திரமன்றி அதனாலேயே சைவம் அழிந்துவிடும் என்று பிரசுரமும் வெளியிட்டவர். ஆனால் அவர் தமிழுக்குத் தந்த அரும்பெருங்கொடைகளை மறக்க முடியாது.தமிழ் அச்சுவாகனம் ஏறுவதற்கும் பழைய ஏட்டுச் சுவடிகள் பதிப்பிக்கப்படுவதற்கும்.தமிழின் வரிவடிவத்தில் குற்றுகளுடன் கூடிய ஒற்றுகள் வழக்கத்திற்கு வருவதற்கும் காரணமாக இருந்தவர். தமிழ்த்தேசிய முன்னோடியாக இருந்தாலும் நாவலர் கொண்டாடப்படாததற்குக் காரணம் அவரது சாதிப்பற்று - narathar - 09-15-2005 மேலும் பிரீத்தி, நீர் இன்னும் நான் உமது சைவசமயம் என்கின்றதைப் பற்றி வரலாற்று ரீதியா கேட்ட கேள்விகளுக்குப் நீர் பதில் அழிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நீர் இங்கு பெரியாரைப் பாவிப்பது உமது சாதிய வெறிக்கு தீனி போட. பார்ப்பனீயத்தை மூர்க்கமாக எதிர்த்து எழுதிய நான் உமது சாதிய நோக்கத்தை அம்பலப் படுத்துவதற்காக எழுதுவது உமக்கு பார்ப்பன சார்பாகத் தெரிகிறது.அதற்குக் காரணம் பெரியாரின் கருத்துக்கள் சாதியவெறியர்களினால் , சாதிய எதிர்ப்புக்காகப் பாவிக்கப் பட்டு கொச்சைப் படுத்தப் படக் கூடாது என்பதுவே.பெரியார் சாதியத்தை எதிர்த்தார்,அதனால் பார்ப்பனீயத்தை எதிர்த்தார், உம்மைப் போல் மனிதர்களை அல்ல. - kuruvikal - 09-15-2005 Eelavan Wrote:குருவி நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் ஈழவன்...எத்தனையோ...நல்ல பழமைகளைத் தூக்கி எறிந்துவிட்ட நாம்...நாவலரின் தனிப்பட்ட விருப்பின் பால் (எந்த மனிதனுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருப்பதும் அது வெளிப்படுவதும் இயல்பு...அதை எல்லாம் சமூகம் ஏற்க வேண்டும் என்பது நியதி இல்லையே...!) எழுந்த சாதியம்.. தீண்டாமையை...தூக்கி எறிந்துவிட்டு அவரின் நல்லதை மட்டும் ஏன் காட்ட தயங்குகின்றோம்..இக்களத்தில்..! நாங்கள் அறிந்த வரைக்கும்.. நாவலர் கல்வி கற்ற கற்பித்த பாடசாலைகள் இரண்டிலும் கண்டதன்படி...சாதியம் தீண்டாமை என்பது எங்கும் காட்டப்பட்டதில்லை...! களைய வேண்டிய பழையதுகளை களையாமல்...புதுமை புகுத்துவதாக அவற்றை சுட்டிக்காட்டி விமர்சித்துக் கொண்டிருப்பதால் கிடைக்கப் போகும் பலன் என்ன...???! :wink:
- narathar - 09-15-2005 பழயன கழிவதற்கு.....
- Birundan - 09-16-2005 [quote="kuruvikal"]நாவலர் சொன்னது சரிதானே... ஒருவரை மற்றவர் தீண்டினால்...எத்தனை பிரச்சனை... தொற்றுநோய் பரவும்... ஒருவேளை பெண் என்றால்...ஈவ்ரீசிங் கேட்டு கேசு என்றாகிடும்... இல்ல சண்டை சச்சரவு வந்திடும்.... ஆதலால்.. அப்ப நாவலர் சொன்னது இப்பவும் சரியாத்தான் படுகுது...! வைரமுத்துவோ..யாரோ எழுதினாங்க ஒரு பாட்டு...தீண்டாதே என்னைத் தீண்டாதே என்று...யாரோ பாடுறாப் போல....அப்ப அதுவும் தீண்டாமையா...??! அப்படியானால் குருவியாரே நீங்கள் தீண்டாமையை ஆதரிக்கிறீர்களா? - kurukaalapoovan - 09-16-2005 தீண்டாதே என்னை தீண்டாதே சுற்று விழி பார்வை... என்று ஒரு திரைப்படபாட்டு இருக்கு. தீண்டாய் என்னை தீண்டாய்... என்றும் இருக்கு ஒரு திரைப்படப் பாட்டு. இவை இரண்டுக்கும் சாதி அடிப்படையில் பேசப்படுகிற தீண்டாமைக்கும் என்ன சம்பந்தம்? :? - sOliyAn - 09-16-2005 நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாது நாளைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாதே! புதியதல்லவே தீண்டாமை என்பது புதுமையல்லவே அதை நீயும் சொன்னது சொன்ன வார்த்தையும் இரவல்தானது - திரு நீலகண்டரின் மனைவி சொன்னது. 8) - kuruvikal - 09-16-2005 <!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->தீண்டாதே என்னை தீண்டாதே சுற்று விழி பார்வை... என்று ஒரு திரைப்படபாட்டு இருக்கு. தீண்டாய் என்னை தீண்டாய்... என்றும் இருக்கு ஒரு திரைப்படப் பாட்டு. இவை இரண்டுக்கும் சாதி அடிப்படையில் பேசப்படுகிற தீண்டாமைக்கும் என்ன சம்பந்தம்? :?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது எப்படி கவிஞனின் கற்பனையோ...அதேபோல்...அது நாவலன் எனும் தனி மனிதனின் சித்தாந்தம்..அதையேன் எதிர்கிறோம் என்று சொல்லி நிகழ்காலத்துக்குள்ளும் காவுகிறீர்கள்...இப்போ...இங்கு சிலர் சொல்லும் தீண்டாமையை..சாதிய அடிப்படையில் அமைந்ததை...சமூகத்துள் நிராகரிக்க வைத்து...சில தசாப்தங்கள் கடந்தாயிற்று...இனியும் ஏன் அதன் பேச்சுத் தொடர்வான்...???! :roll:
- kirubans - 09-16-2005 பாம்பு மனிதரைத் தீண்டுவதும், மனிதன் மங்கையைத் தீண்டுவதும் ஒன்றாகுமா? முதலாவது மரணத்திலும், இரண்டாவது மகிழ்விலும் முடியும். தீண்டுதம், தீண்டாமை என்பன என்ன சந்தர்ப்பத்தில் பாவிக்கப்படுகின்றன என்பதை முதலில் புரிய வேண்டும். பிற சாதிகளுடன் கலந்து உறவாடாமல் இருப்பது (வீடுகளுக்குப் போகாமல் இருப்பது, போனாலும் உணவைத் தவிர்ப்பது) போன்றன தீண்டாமையின் அம்சங்கள். - Birundan - 09-16-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kurukaalapoovan+--><div class='quotetop'>QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->தீண்டாதே என்னை தீண்டாதே சுற்று விழி பார்வை... என்று ஒரு திரைப்படபாட்டு இருக்கு. தீண்டாய் என்னை தீண்டாய்... என்றும் இருக்கு ஒரு திரைப்படப் பாட்டு. இவை இரண்டுக்கும் சாதி அடிப்படையில் பேசப்படுகிற தீண்டாமைக்கும் என்ன சம்பந்தம்? :?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது எப்படி கவிஞனின் கற்பனையோ...அதேபோல்...அது நாவலன் எனும் தனி மனிதனின் சித்தாந்தம்..அதையேன் எதிர்கிறோம் என்று சொல்லி நிகழ்காலத்துக்குள்ளும் காவுகிறீர்கள்...இப்போ...இங்கு சிலர் சொல்லும் தீண்டாமையை..சாதிய அடிப்படையில் அமைந்ததை...சமூகத்துள் நிராகரிக்க வைத்து...சில தசாப்தங்கள் கடந்தாயிற்று...இனியும் ஏன் அதன் பேச்சுத் தொடர்வான்...???! :roll: <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->தீண்டாமையை காவ யார் விரும்பியது, ஆனால் தீண்டாமை இன்று எம் சமுதாயத்தில் இல்லை என்று கூறமுடியுமா? அப்படி என்றால் உண்மையை ஏற்க மறுக்கிறோம் என்று அர்த்தம் படாதா? - narathar - 09-16-2005 தீண்டாமை என்பது எதோ தொடுவதை மட்டும் குறிக்கும் என்று இங்கே சிலர் பேசுவதும் வாதிடிவதும் நகைப்புக்கிடமானது.தீண்டாமை இப்போதும் இருக்கிறதா என்பதை அறிய எந்த தமிழ் பத்திரிகையிலும் உள்ள மணமகன் - மணமகள் தேடும் சிறு விளம்பரங்களே சாட்சி.எங்காவது பாத்திருக்கிறீர்களா மண மகனுக்கு மணமகள் தேவை என்று, முதல் வரியே யாழ் வேளாள .... என்றல்லவா ஆரம்பிக்கிறது? மிகக் கோரமாக இருந்த சாதியம் தொடர்ச்சியான போராட்டங்களினாலும், ஆயுதப் போராட்ட முன்னணி சக்தியான புலிகளின் கோட்பாட்டு ரீதியான வழி காட்டலிலும் இன்று அமிழ்ந்து போய் உள்ளதே ஒழிய,தீண்டாமை ஒழியவில்லை. அதனை மறு தலித்து நாவலரின் சாதிய முகத்தை மறுதலிப் போர் மறைக்க விரும்புவது எதை? சமுதாயப் பிறழ்வுகளை அடயாளம் காட்டாமல் அவற்றை இல்லாமல் செய்வது எங்கனம்,பூசி மெழுகுவது எதைப் பாதுகாக்க? - kuruvikal - 09-16-2005 <!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kurukaalapoovan+--><div class='quotetop'>QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->தீண்டாதே என்னை தீண்டாதே சுற்று விழி பார்வை... என்று ஒரு திரைப்படபாட்டு இருக்கு. தீண்டாய் என்னை தீண்டாய்... என்றும் இருக்கு ஒரு திரைப்படப் பாட்டு. இவை இரண்டுக்கும் சாதி அடிப்படையில் பேசப்படுகிற தீண்டாமைக்கும் என்ன சம்பந்தம்? :?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது எப்படி கவிஞனின் கற்பனையோ...அதேபோல்...அது நாவலன் எனும் தனி மனிதனின் சித்தாந்தம்..அதையேன் எதிர்கிறோம் என்று சொல்லி நிகழ்காலத்துக்குள்ளும் காவுகிறீர்கள்...இப்போ...இங்கு சிலர் சொல்லும் தீண்டாமையை..சாதிய அடிப்படையில் அமைந்ததை...சமூகத்துள் நிராகரிக்க வைத்து...சில தசாப்தங்கள் கடந்தாயிற்று...இனியும் ஏன் அதன் பேச்சுத் தொடர்வான்...???! :roll: <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->தீண்டாமையை காவ யார் விரும்பியது, ஆனால் தீண்டாமை இன்று எம் சமுதாயத்தில் இல்லை என்று கூறமுடியுமா? அப்படி என்றால் உண்மையை ஏற்க மறுக்கிறோம் என்று அர்த்தம் படாதா?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> [quote=kirubans]பாம்பு மனிதரைத் தீண்டுவதும், மனிதன் (ஆண்) மங்கையைத் தீண்டுவதும் ஒன்றாகுமா? முதலாவது மரணத்திலும், இரண்டாவது மகிழ்விலும் முடியும். தீண்டுதல், தீண்டாமை என்பன என்ன சந்தர்ப்பத்தில் பாவிக்கப்படுகின்றன என்பதை முதலில் புரிய வேண்டும். பிற சாதிகளுடன் கலந்து உறவாடாமல் இருப்பது (வீடுகளுக்குப் போகாமல் இருப்பது, போனாலும் உணவைத் தவிர்ப்பது) போன்றன தீண்டாமையின் அம்சங்கள். இப்படித்தான் தீண்டாமைக்கு...சாதியச் சிந்தனை உள்ளவர்களால்...சாதிய அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்படுகிறது என்பது சாதாரணமா சாதிய விளைவுகளை சந்தித்த எல்லோருக்கும் தெரியும்... ஆனால் தீண்டாமைக்கு பல வேறு அர்த்தமும் இருக்கு என்பதையும் காட்டுதல் சாதியத் தேவை இல்லாதோருக்கு உதவுமெல்லா...! அதுக்கு இடமளிக்கமாட்டேன் என்றியளே..உடன தீண்டாமைக்கு உங்கட வரைவிலக்கணம் கொடுத்திட்டியள்...! பிறகு திட்டியும் தீர்க்கிறியள்...உங்கட நிலைதான் பரிதாபமா இருக்கு...! இப்போ..சாதி என்று பேசினால் கடைப்பிடித்தால்தான்...அது சார்பாக இருக்கட்டும்..எதிர்ப்பாக இருக்கட்டும்... புதிசா வாற குழந்தைக்கு...அதென்ன சாதி என்ற கேள்வி முளைக்கும்...அதைப் பேசாமல் தவிர்த்தால்...அது வர சந்தர்ப்பம் குறைவு...குறிப்பா புலத்தில் வாழும் குழந்தைகளிடம்...தாயகத்தில் வாழும் குழந்தைகளிடம்..இந்த தீண்டாமை ...(அது பெளதீகத் தொடுகை ஆகட்டும்...மன உணர்வு ரீதியானதாகட்டும்...நடத்தையியல் ரீதியானதாகட்டும்)... என்பது...கெட்டதை தொடாதே என்பதுதான்... மனிதரை தீண்டத் தவிர் என்பதல்ல...! அதை பெரிய மனிதர்கள் சிலரும் தெரிந்து கொள்வது கட்டாயமாகிட்டுது இப்ப...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|