![]() |
|
பாலியல் உறவுக்கான வயதெல்லை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பாலியல் உறவுக்கான வயதெல்லை (/showthread.php?tid=3275) |
- Mathan - 09-18-2005 நமக்கு அவர்களுடனான கருத்துவேறுபாடுகள் பிணக்குகளுக்காக என்ன வேண்டுமானால் சொல்ல கூடாது. உண்மையில் நாங்கள் இப்படி சொல்வதன் மூலம் அவர்களை தாழ்த்துவதாக நினைத்து சந்தோஷப்படுகின்றோம். ஆனால் உண்மை அது அல்ல, ஏன் நாங்கள் ஒட்டுமொத்த சிங்களவர்களையும் பகைக்க வேண்டும்? இவற்றை தவிர்ப்போம் பிருந்தன். - Birundan - 09-18-2005 உண்மைதான் மதன் ஆனால் சிறுவர்களை, போரில் ஈடுபடுத்துகிறார்கள் என்று நாடு நாடக போய் ஒப்பாரி வைக்கும் சிங்கள அரசு, சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதை கண்டும் கானாமலும் இருக்கிறதே, இச்சட்டம் அமுலுக்கு வந்தால், சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்குதான் உதவியாக இருக்கும். - Vasampu - 09-18-2005 உண்மையில் இந்தச் சட்டத்தினால் பெருண்பான்மையாகப் பாதிக்கப்படப்போவது சிங்களச் சிறுமிகளே. ஆனாலும் சிறுமியின் சம்மதமில்லாமல் நடந்ததாக நிருபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவருக்கு தண்டனை கிடைக்கலாம். என்றாலும் பணபலத்தால் சிறுமியின் வாக்குமூலத்தை மாற்றியமைக்க நிறையச் சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் பொதுஅமைப்புகள் எவையாயினும் நீதிமன்றத்தை நாடி இந்தச் சட்டம் நடைமுறைக்கு வராமல் தடுக்க முடியும் மதன் கூறிய கருத்துக்களையும் எம்மவர் உள்வாங்கி கருத்துக்களை பகிர்வது சாலச்சிறந்தது. சில அரசியல்வாதிகளின் செயல்களுக்காக மொத்த சிங்கள மக்களையும் குறைசொல்வது நியாயமல்ல. எனவே கனவுலகில் வாழாமல் நிஜத்தில் நியாயங்களை பகிர்ந்து கொள்வோமே!!!!! - Eelathirumagan - 09-18-2005 இருவிழி உங்கள் கருத்து சரியானதே. ஆணித்தரமான வாதங்களை முன்வையுங்கள். இவை பயனுள்ள கருத்துப்பரிமாற்றத்திற்கு உதவியாக இருக்கும். - Birundan - 09-18-2005 Vasampu Wrote:உண்மையில் இந்தச் சட்டத்தினால் பெருண்பான்மையாகப் பாதிக்கப்படப்போவது சிங்களச் சிறுமிகளே. ஆனாலும் சிறுமியின் சம்மதமில்லாமல் நடந்ததாக நிருபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவருக்கு தண்டனை கிடைக்கலாம். என்றாலும் பணபலத்தால் சிறுமியின் வாக்குமூலத்தை மாற்றியமைக்க நிறையச் சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் பொதுஅமைப்புகள் எவையாயினும் நீதிமன்றத்தை நாடி இந்தச் சட்டம் நடைமுறைக்கு வராமல் தடுக்க முடியும் மதன் கூறிய கருத்துக்களையும் எம்மவர் உள்வாங்கி கருத்துக்களை பகிர்வது சாலச்சிறந்தது. சில அரசியல்வாதிகளின் செயல்களுக்காக மொத்த சிங்கள மக்களையும் குறைசொல்வது நியாயமல்ல. எனவே கனவுலகில் வாழாமல் நிஜத்தில் நியாயங்களை பகிர்ந்து கொள்வோமே!!!!! ஒருசில அரசியல் வாதிகள்களின் செயலா? இக்கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது, வேனுமென்றால் ஒருசிலர் நல்லவராக இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன். - Vasampu - 09-18-2005 பிருந்தன் நீங்கள் சிங்கள மக்களுடன் பழகியிருக்கின்றீர்களா?? வெறும் ஊகங்களை மட்டும் வைத்து நீங்கள் பதிலெழுதியுள்ளீர்கள் என்று நான் நினைக்கின்றேன். - cannon - 09-18-2005 வா!..சம்பு!! என சொந்தப் பெயரில் யாழில் உலாவும் சமூகச் சிந்தனையுள்ள முழு அறிவாளி!!!!!!!! தங்களின் சிந்தனை உதிர்வுகளிலிருந்து...... Quote:உண்மையில் இந்தச் சட்டத்தினால் பெருண்பான்மையாகப் பாதிக்கப்படப்போவது சிங்களச் சிறுமிகளே. இந்த கணொன் அறிவிலிக்கு விளங்கவில்லை? உங்கள் அதீத சிந்தனையிலிருந்து கொட்டுப்பட்டவைகள்!!! என் போன்ற அறிவிலிகள் நினைத்தோம்!! வடக்கு/கிழக்கு பகுதிகளில்தான் இலங்கையிலிளேயே கூடியளவு சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு, சிறீலங்கா பாதுகாப்பு மிருகப் படைகளினால் உட்படுத்தப்படுகிறார்களென்றும், இனி அப்படியான செயல்களுக்கு சட்ட அங்கீகாரம் கூட கிடைக்கப் போவதாக??????? நாளை மிருகங்களின் பசிக்கு அகப்படப்போகும் எம் சிறார்கள்; விரும்பியே பாலியல் உறவில் உட்பட்டார்கள் என சிறீலங்கா நீதிமன்றங்களே காரணம் கூறி, சிறீலங்காவின் சட்டமே இவர்களைப் பாதுகாக்கூடும்!!!!!........ இது இந்த அறிவிலியின் கருத்து!! வா...சம்பு, உம் போன்ற மேதாவிகளினால் தான் சமூகத்திற்கான பொன்மொழிகளை திருவாய் மலர்ந்தருள முடியுமென நான் திடமாக நம்புகின்றேன்!!!!!!!! தயவுசெய்து ஆட்டுக்கை மாட்டைச் செருகாமல், உம்முடைய ஏழாவதைப் பாவித்து, இந்த அறிவிலி போன்ற பலருக்கு புரியும்படி திருவாய் மலருங்களேன்!!!!! - narathar - 09-18-2005 எபி நிறுவன செய்திகளின் படி இலங்கை அரசாங்கம் இதை சட்டமாக்காது போலுல்ளது.மேலும் இச் சட்டம் வன்புணர்வு சம்பந்தமான வழக்குகளில் ஒரு எதிர்வாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாத ஒன்று என்று வேற சொல்லி இருக்கினம்.இதை பிரதம நீதியரசரின் அனுமதியுடனேயே இரு இள வயதினர் இடையே ஏற்படும் வழக்குகளிலேயே பயன் படுத்தலாம் என்றும் சொல்லி இருக்கு. அரை குறயாக விளங்கிக் கொண்டு அவசரப்பட்டு கருத்து எழுதுவது சரி யாகப் படவில்லை. - cannon - 09-18-2005 நாராயண!! நாராயண!! நீர் போகுமிடமெல்லாம் .......... , எல்லாம் நன்மைக்கே!! இலங்கையின் சுதந்திரத்திற்குப் முன்/பின்னுள்ள வரலாற்றில் .... டொனமூர் தொடக்கம் இன்றுள்ள பயங்கரவாதச்சட்டம் வரை, இவைகள் தமிழர்களுக்கெதிராக பயன்படுத்தப்பட மாட்டாது!!! மாட்டாது!!! மாட்டாது!!! என்ற உத்தரவாததை எத்தனை முறை தமிழர்கள் மீது அள்ளியெறிந்து விட்டார்கள்!!!!!!!!!! .. * எங்கே அந்த உத்தரவாதங்களும், உறுதிமொழிகலும் .......... காக்கா கொண்டு போட்டுதோ???????? விடிய விடிய ராமர் கதை, ......... பின் முறை என்னவெண்டால் "மகளெண்டானாம்" முற்றும் விளங்கிய மாமுனி!!!!! "அடிமேல் அடிமேல் .... அடி அடித்தால் அம்மியும் நகருமாம்" உந்தப் பழமொழியைச் சொன்னவனை தேடித்திரிகிறேன்!!! கண்டால் பிச்சோ பிச்செண்டு பிச்சிடுவன்! - Vasampu - 09-18-2005 உண்மைதான் நாரதர்! உங்களுக்கு விளங்கியமாதிரி சில அறிவிலிகளுக்கு விளங்குமென்று நான் எதிர் பார்க்க இயலாது தான். அறிவிலிகளுக்கு பிரைச்சினைகளை பெரிதாக்கி அதில் சுகம் காண்பதிலேயே இன்பம். புனைப்பெயருக்கும் அடுத்தவரின் பெயரில் வந்து அசிங்கப்படுத்துவதங்கும் வித்தியாசம் தெரியாதவனெல்லாம் யாழ் களத்தில் கருத்தெழுத முற்பட்டால் இப்படிததானாகும். சில விடயங்களை மேலோட்டமாக படித்துவிட்டு கருத்தெழுதுவோரால்தான் இப்படியான பிரைச்சினைகள் வருகின்றன. எதையும் ஆழமாக படிப்பதற்கும் அடிப்படை அறிவு வேண்டுமே??? அது இல்லாதோருக்கு நாம் என்ன முதியோர் கல்வி நிலையமா நடாத்த முடியும்?????? :roll: :roll: - cannon - 09-18-2005 Quote:இச் சட்டம் வன்புணர்வு சம்பந்தமான வழக்குகளில் ஒரு எதிர்வாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாத ஒன்று என்று வேற சொல்லி இருக்கினம். அரோகரா!! புல்லரிக்குது!! அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் அள்ளிவீச, இவர் லங்காபுவத்துக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஸ்பீக்கர் பூட்டாத குறையாக நிற்கிறார்!!!!! Quote:இதை பிரதம நீதியரசரின் அனுமதியுடனேயே இரு இள வயதினர் இடையே ஏற்படும் வழக்குகளிலேயே பயன் படுத்தலாம் என்றும் சொல்லி இருக்கு. ஓ......ஓஓஓஓ...... இங்கைதானே உதைக்குது!!!! இன/மத பேதமற்ற நல்ல நீதீயோ நீதியான மனுசருகள்தானே உந்தப் பதவிகளில் இருக்கிறவர்கள்!!!! இவர்கள் வரலாற்றில் இன/மத பேதமே இல்லாமல்தானே நடந்திருக்கிறார்கள்!!!! ஐயோ! ஐயோ!! ........ ஆருட்டைச் சொல்லியழ .......... - Vasampu - 09-18-2005 பிரதம நீதியரசரின் அனுமதியுடன் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில்தான் விசாரணை நடைபெறும். அங்கு நீதிபதியாக இருப்பவர் பிரதம நீதியரசரல்ல. நீதித்துறையிலும் நீதிபதிகளின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டால் பின் புதிதாக வரும் சட்டங்கள் பற்றி ஏன் கவலைப் படுகின்றார்கள் என்பதே புரியவில்லை. " ஆண்டவா இனியாவது சிலருக்கு நல்ல புத்தியை கொடு " :?: :roll:
- Birundan - 09-18-2005 Vasampu Wrote:பிரதம நீதியரசரின் அனுமதியுடன் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில்தான் விசாரணை நடைபெறும். அங்கு நீதிபதியாக இருப்பவர் பிரதம நீதியரசரல்ல. நீதித்துறையிலும் நீதிபதிகளின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டால் பின் புதிதாக வரும் சட்டங்கள் பற்றி ஏன் கவலைப் படுகின்றார்கள் என்பதே புரியவில்லை. கிருஷாந்தி கொலைவழக்கிலும், செம்மனி படுகொலை வழக்கிலும் சிங்கள நீதிமண்றங்கள் என்ன செய்தன :wink: - Vasampu - 09-18-2005 ஓ பிருந்தனா ! ஏன் ஏனைய படுகொலைகளையும் விட்டுவிட்டீர்கள். இதுவரை நடைபெற்ற எத்தனை படுகொலைகளுக்கு வடகிழக்கில் நீதி வழங்கப்பட்டுள்ளதென்பதை தாங்கள் தயவுசெய்து கூறுவீர்களா???? - Birundan - 09-18-2005 Vasampu Wrote:ஓ பிருந்தனா ! அப்படிப்பட்ட சிங்கள நீதிமண்றங்கள் இச்சட்டத்தை தமிழ் சிறுவர்களுக்கு எதிராக பயன்படுத்தாதா? என்பதே என் கேள்வி, எந்த சட்டமும் தமிழர்க்கு சாதகமாக பயன் படும் என்று நான் நினைக்கவில்லை. அதனால்தான் எமக்கென்றொரு புது நீதிசபை சமைத்தோம் அதை எந்த நாளும் காப்போம். - narathar - 09-18-2005 கனோன் நான் சட்ட வல்லுணரில்லை ஆனா மேல ஜூட் கனடாவிலும் அப்படித் தான் என்று எழுதி உள்ளார்.இவ்வாறான சட்ட விதிகள் நடை முறயில் ஏற்படும் சில சட்ட சிக்கல்களை கையாளவே திருத்தப் படுகின்றன.மேலும் விளக்கம் யாராவது சட்டத் தரணிகள் அழித்தால் நல்லம்... இச் சட்டம் தமிழர்களை மட்டும் பாதிக்காது சிங்களவரையும் தான்.மற்றயது சிங்கள நீதித் துறை பேரின அடக்குமுறயின் அங்கம் என்பதில் எந்த சந்தேகமும் கிடயாது ஆனால் இந்தச் சட்டத்துக்கும் அதுக்கும் என்ன தொடர்பு என்று எனக்கு விளங்கேல்ல , நீங்கள் விளக்கினால் கேக்கிறன். - narathar - 09-18-2005 cannon Wrote:Quote:[quote]இதை பிரதம நீதியரசரின் அனுமதியுடனேயே இரு இள வயதினர் இடையே ஏற்படும் வழக்குகளிலேயே பயன் படுத்தலாம் என்றும் சொல்லி இருக்கு. நான் நினச்சன் இங்க ஒரு புதிய சட்டத்தைப் பற்றிக் கதைக்கிறம் எண்டு நீங்க சட்ட அமுலாக்கத்தைப் பற்றிக் கதைக்கிறியள், நீங்க சொல்லுறது உண்மை தான். - narathar - 09-20-2005 பாலியல் உறவுக்கான இணக்க உரிமை வயதெல்லை 13 ஆக குறைக்கப்பட மாட்டாதென அறிவிப்பு சட்ட திருத்தம் எதுவுமில்லையென நீதியமைச்சு நிராகரிப்பு பாலியல் உறவிற்கான இணக்க உரிமை வயதை 16 இலிருந்து 13 ஆக குறைக்கும் சட்டத் திருத்தம் எதுவும் கொண்டுவரப்பட மாட்டாது என நீதி மற்றும் நீதித்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பெண்களின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான வயதை 16 இலிருந்து 13 ஆக குறைக்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நிமால் சிறிபால டி சில்வா கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளையடுத்து நீதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; பாலியல் வல்லுறவிற்கான சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சிகள்நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதியமைச்சு பாலியல் வல்லுறவிற்கான நியதி சட்ட வயதை குறைப்பதற்கான முயற்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றது. 1995 இலிருந்து நீதியமைச்சுக்கு பல அறிக்கைகள் கிடைத்துள்ளன. இவ்வாறான சம்பவங்களில் குற்றம் சாட்டப்படும் பையன் சிறு வயதுடையவனாகவும் சிறுமியின் விருப்பத்துடனேயே இவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதிலும் குற்றம் சாட்டப்பட்ட பையன் மீதான விசாரணைகள் நீதியின் நோக்கங்களை நிறைவேற்றாதவையாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலைகள் நீதிக்கு புறம்பானவை எனக் கருதப்படுவதால் உத்தியோகபூர்வமற்ற சில நடவடிக்கைகளின் மூலம் குற்றவாளிக்கு தண்டனை தவிர்க்கப்படுவதும் தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் எப்போதும் நியாயபூர்வமானவை அல்ல என்பதுடன் சம்பந்தப்பட்ட தரப்பின் நலன்களையும் பூர்த்தி செய்வதில்லை. 18 வயதிற்கு உட்பட்ட குற்றவாளிகளுக்கு குறைந்தளவு தண்டனையை வழங்கலாம் என குற்றவியல் கோவையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெண்ணின் சம்மதத்துடனேயே இவ்வாறான செயல்கள் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களிலும் கூட பையனே குற்றவாளியாக கருதப்படுகின்றான். பெண் குழந்தையின் நலனைப் போல் ஆண் குழந்தையின் நலனும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். பருவம் எய்தாத வயதில் சம்மதத்துடன் நடைபெறும் பாலியல் செயற்பாடுகளை மன்னிக்கவோ அல்லது குற்றமாக கருதவோ முடியாத நிலைமை உள்ளது. பையனை மாத்திரம் குற்றவாளியாக்கும் அதன் மூலம் அவனை விசாரணைக்குரியவனாகவும் தண்டனைக்குரியவனாகவும் மாற்றும் தற்போதைய நிலை குறித்தே எமது கவலை அமைந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது நீதியமைச்சின் பொறுப்பும் கடமையுமாகும். பாலியல் வல்லுறவுக்கான நியதிச் சட்டப்படியான வயதெல்லையை 13 ஆக குறைப்பதற்கான யோசனை எதுவும் முன்வைக்கப்படவில்லை. 13 வயதிற்கு குறைவடையாத சிறுமியொருத்தியின் இணக்கத்துடன் நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள் பையனும் வயது குறைந்தவனாக உள்ளபோது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள முயலும்போது சட்டமா அதிபரின் அனுமதியை பெறுவதே எமது யோசனைகளின் முக்கியமான விடயம். நீதிமன்ற விசாரணைகள் நீதியின் நோக்கத்தை நிறைவேற்றும் என கருதும் பட்சத்திலேயே இந்த அனுமதி வழங்கப்படலாம். இவை பாலியல் வல்லுறவை குற்றமாக்காமல் விடும் நோக்கத்துடனேயே வயதெல்லையை குறைக்கும் நோக்கத்துடனேயே கொண்டு வரப்படுபவையல்ல. சட்டத்தின் எந்த அறிக்கையும் எமது சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட விழுமியங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சு உறுதியாகவுள்ளது. சட்டங்கள் நீதியின் நோக்கத்தை நிறைவேற்றுபவையாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.thinakural.com/New%20web%20site...Important-5.htm - iruvizhi - 09-21-2005 சிறீலங்கா அரசாங்கமோ இல்லை சிங்கள இனவாதிகளோ என்றுமே சிறுவர்களை மனிதர்களாக கருதியது இல்லை. அது தமிழ் சிறுவர்கள் ஆயினும் சரி சிங்கள சிறுவர்களாயினும் சரி. சிறுவர்களை இந்த சிங்கள மேலாண்மை வாதிகள் எப்போதும் தங்களுக்கு பயன் படும் ஒரு சடப்பொருள் போன்றே பாவித்து வந்திருக்கின்றனர். தமிழ் சிறார்கள் பலர் பல படை எடுப்புகளாலும்இ குண்டுவீச்சு விமானங்களாலும் கொன்று குவிக்கப் பட்டு இருக்கின்றார்கள். இதனையும் விட பல தமிழ் சிறுமிகள் சிங்கள படையினரால் பாலியல் வல்லுற்வுக்கும் உட்படுத்தப் பட்டுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சிங்களச் சிறுமிகளும் பல மலையக தமிழ் சிறுவர்களும் பல மேலாண்மை போக்குடையவர்களால் இலங்கையில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு பின்னர் பாலியல் வல்லுறவிற்கும் ஈடுபடுத்தப் படுகின்றார்கள் என்பதனை நாம் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கேள்விப் படுகின்றோம். எனவே உலக நாடுகள் இவற்றினை கண்டும் காணாமலும் இனிமேலும் மௌனமாக இருந்துவிட முடியாது. இலங்கை அரசாங்கத்தினை கண்டிப்பதோடு. இலங்கையில் சிறுவர்களுக்கு பாதுகாப்பினையும் வழங்குவது அவசியம். - iruvizhi - 09-21-2005 சிறிலங்காவில் பாலியல் உறவுக்கான வயது எல்லை குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் நாட்டை பாலியல் தொழிலாளர்களின் சொர்க்கமாக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் மாற்றிவிட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. நன்றி புதினம் ஐ.தே.க. காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமகுமார நாணயக்கர ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: பாலியல் உறவுக்கான வயது எல்லையை குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்த போதும் சட்டத்தரணி செயலகம் அதை செயல்படுத்தாது என்று கூறப்படுகிறது. இந்த நாட்டை பாலியல் தொழிலாளர்களின் சொர்க்கமாக இந்த அரசாங்கம் மாற்றி வருகிறது. புத்த மத கோட்பாட்டுகளை பாதுகாப்பதாக கூறி வரும் ஜே.வி.பி.இ ஜாதிக ஹெல உறுமயவினர் இந்த விடயத்தில் ஏன் மெளனம் சாதிக்கிறார்கள்? என்றார். |