Yarl Forum
வலைப்பூ, நுகர்வும் சில சிந்தனைகளும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: வலைப்பூ, நுகர்வும் சில சிந்தனைகளும் (/showthread.php?tid=3231)

Pages: 1 2 3


- kuruvikal - 09-25-2005

kurukaalapoovan Wrote:அப்படி என்ன தான் புதுசா இருக்கு :roll: கட்டுப்பாடு தணிக்கையிருக்காது. விமர்சனம் விவாவதம் கருத்தாடல் இருக்காது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உண்மைதான்...ஒரு சிலர் மட்டும் சொந்தப் பார்வையை துணிஞ்சு எழுதிறாங்க...மிச்சம் எல்லாம்..அதுக்கு ஆமா சாமி...போட்டிட்டு இருக்கினம்...! இதால என்ன நன்மை..???!!!!! அதுமட்டுமில்லாம வலைப்பூவை நிறுவிறவர்...தன்ர விருப்பத்துக்கு கருத்தை அனுமதிப்பார் அழிப்பார்...!!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 09-25-2005

KULAKADDAN Wrote:நாரதர் நீங்கள் யாரை குற்றம் சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் யாழ் களத்துக்கு எவ்வளவு காலம் பழையவர்/ எவ்வளவு காலம் புதியவர் என்பது எனக்கு தெரியாது.

கீழே உள்ள இரண்டு இணைப்புக்கள் உங்களுக்கு இங்கு வலைப்பதிவுகள், தமிழ் மணம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டதை சான்று பகரும்.

இதைவிட கவிதைபகுதியிலும் எங்கோ ஓரிடத்தில் தமிழ் மணம் பற்றியும் அதன் இணைப்பும் உள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=225

http://www.yarl.com/forum/viewtopic.php?t=2427

வசி மிக பழைய உறுப்பினர். அவர் மேற்சொன்ன தலைப்புக்களை பார்க்கவில்லையா என்பது எனக்கு தெரியாது?

நான் வலைப்பதிவில் இடும் அனைத்தையும் இங்கும் பிரதியிடுவேன்
அது படமாகிலும் சரி, வேறு ஆக்கங்கள் ஆகினும் சரி
அதேபோன்றே குருவிகள், தமிழினி அக்கா, கவிதன், ஆகியோரும் செய்கிறனர்.
சண்முகி அக்காவின் வலைப்பதிவில் உள்ள ஆக்கங்கள் இங்குள்ள பலராலும் களத்தில் அடிக்கடி அறிமுகப்படுத்தபடுகிறன.

அதை நீங்கள் எனது வலைப்பதிவையும் என்னால் ஆரம்பிக்கப்பட்ட தலைப்புக்களையும் பார்த்துபுரிந்துகொள்ளலாம்.

இவையெல்லாம் உங்களுக்கு தெரியாது போனது துரதிஷ்டமே

ஹரியண்ணாவும் அப்படித்தான் செய்கிறவர் என்று நினைக்கிறன். யாழ் மூலம் தான் எங்களுக்கும் தமிழ்மணம் அறிமுகம் ஆனது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- narathar - 09-25-2005

ம்...
வலைப்பூ அல்லது குடில் போடவேணும் எண்ட ஆசையில கன பேர் தொடங்கியிருந்தாலும்,சுயமான சிந்தனை படைப்புத்திறன் இதுகளைப் பொறுத்தே வந்து வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை தங்கி உள்ளது.அத்துடன் மதிப்பீடு செய்யும் முறையும் நல்ல வலைப் பதிவை இனங்காட்டும்.மேலும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு பதில் அழிப்பவர்களே தமது பதிவை ,சிந்தனையய் வளர்த்துக் கொண்டு மேலும் வாசகர்களை உள் வாங்குகின்றனர்.
எனது அனுபவத்தில் பல வலைப் பதிவாளர்கள் ஆளமான சிந்னை உடயவர்களாக இருக்கின்றனர்,அவ்வாறு என்னைக் கவர்ந்தவர்களின் வலைப் பதிவுகளயே நான் வாசிக்கிறேன்,சும்மா வெட்டி ஒட்டுவது அல்லது ஆங்கிலத்தில் இருக்கும் தகவல்களை மொழி மாற்றி எழுதுவது என்பவற்றை வாசிப்பது கிடயாது.ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கலாம்.
தணிக்கை அற்ற கருத்துச் சுதந்திரம்,மற்றும் எவரும் கருத்திடலாம் என்பவையே பலரை வலைப் பூக்களின் பால் நகர்த்தியுள்ளது எனலாம்.


- kuruvikal - 09-25-2005

narathar Wrote:ம்...
வலைப்பூ அல்லது குடில் போடவேணும் எண்ட ஆசையில கன பேர் தொடங்கியிருந்தாலும்,சுயமான சிந்தனை படைப்புத்திறன் இதுகளைப் பொறுத்தே வந்து வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை தங்கி உள்ளது.அத்துடன் மதிப்பீடு செய்யும் முறையும் நல்ல வலைப் பதிவை இனங்காட்டும்.மேலும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு பதில் அழிப்பவர்களே தமது பதிவை ,சிந்தனையய் வளர்த்துக் கொண்டு மேலும் வாசகர்களை உள் வாங்குகின்றனர்.
எனது அனுபவத்தில் பல வலைப் பதிவாளர்கள் ஆளமான சிந்னை உடயவர்களாக இருக்கின்றனர்,அவ்வாறு என்னைக் கவர்ந்தவர்களின் வலைப் பதிவுகளயே நான் வாசிக்கிறேன்,சும்மா வெட்டி ஒட்டுவது அல்லது ஆங்கிலத்தில் இருக்கும் தகவல்களை மொழி மாற்றி எழுதுவது என்பவற்றை வாசிப்பது கிடயாது.ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கலாம்.
தணிக்கை அற்ற கருத்துச் சுதந்திரம்,மற்றும் எவரும் கருத்திடலாம் என்பவையே பலரை வலைப் பூக்களின் பால் நகர்த்தியுள்ளது எனலாம்.

நல்ல வளமான கருத்து..தமிழ் வலைப்பூக்களை விட ஆங்கில வலைப்பூக்களில் அதிகம்.... நிறைய நிறைய கருத்தியல் சிந்தனைகள் தமிழர்களதை விட நிறைந்து கிடக்கிறது..சுதந்திரமும் அதிகம்...! நாங்கள் அவைதான் படிக்கிறது...! ஆங்கிலம் தெரியாத ஆக்கள் தான் தமிழில எழுதிறது... தமிழ் படிக்கிறது...! மொத்தத்தில் தமிழ் வலைப்பூக்கள் வேஸ்டாகத்தான் தெரியுது..ஆங்கிலத்தோட ஒப்பிடேக்க...! ஆங்கிலந் தெரிஞ்சவ..அங்க போகலேமே..! வளமா சிந்தனைச் சிற்பிகள் ஆகிடுவியள்..!

வலைப்பூக்களைப் பார்த்தா தெரியும்...ஒரு குறிப்பிட்ட சிலரே எல்லாத்துக்கும் பதில் எழுதுகிறார்கள்...அதுமட்டுமன்றி...வலைப்பூக்களிலும் கொசிப்புக்கு குறைவில்ல..யதார்த்ததை உள்வாங்க மறுப்பவர்களுக்கு கருத்துச் சொல்லிப் பயனில்லை...ஏதோ சண்டைக்கு தொடங்கின தலைப்புப் போல இருக்கு இது...! இதுதான் யாழ் களத்தின் தலைவிதி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- narathar - 09-25-2005

kuruvikal Wrote:
narathar Wrote:ம்...
வலைப்பூ அல்லது குடில் போடவேணும் எண்ட ஆசையில கன பேர் தொடங்கியிருந்தாலும்,சுயமான சிந்தனை படைப்புத்திறன் இதுகளைப் பொறுத்தே வந்து வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை தங்கி உள்ளது.அத்துடன் மதிப்பீடு செய்யும் முறையும் நல்ல வலைப் பதிவை இனங்காட்டும்.மேலும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு பதில் அழிப்பவர்களே தமது பதிவை ,சிந்தனையய் வளர்த்துக் கொண்டு மேலும் வாசகர்களை உள் வாங்குகின்றனர்.
எனது அனுபவத்தில் பல வலைப் பதிவாளர்கள் ஆளமான சிந்னை உடயவர்களாக இருக்கின்றனர்,அவ்வாறு என்னைக் கவர்ந்தவர்களின் வலைப் பதிவுகளயே நான் வாசிக்கிறேன்,சும்மா வெட்டி ஒட்டுவது அல்லது ஆங்கிலத்தில் இருக்கும் தகவல்களை மொழி மாற்றி எழுதுவது என்பவற்றை வாசிப்பது கிடயாது.ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கலாம்.
தணிக்கை அற்ற கருத்துச் சுதந்திரம்,மற்றும் எவரும் கருத்திடலாம் என்பவையே பலரை வலைப் பூக்களின் பால் நகர்த்தியுள்ளது எனலாம்.

நல்ல வளமான கருத்து..தமிழ் வலைப்பூக்களை விட ஆங்கில வலைப்பூக்களில் அதிகம்.... நிறைய நிறைய கருத்தியல் சிந்தனைகள் தமிழர்களதை விட நிறைந்து கிடக்கிறது..சுதந்திரமும் அதிகம்...! நாங்கள் அவைதான் படிக்கிறது...! ஆங்கிலம் தெரியாத ஆக்கள் தான் தமிழில எழுதிறது... தமிழ் படிக்கிறது...! மொத்தத்தில் தமிழ் வலைப்பூக்கள் வேஸ்டாகத்தான் தெரியுது..ஆங்கிலத்தோட ஒப்பிடேக்க...! ஆங்கிலந் தெரிஞ்சவ..அங்க போகலேமே..! வளமா சிந்தனைச் சிற்பிகள் ஆகிடுவியள்..!

வலைப்பூக்களைப் பார்த்தா தெரியும்...ஒரு குறிப்பிட்ட சிலரே எல்லாத்துக்கும் பதில் எழுதுகிறார்கள்...அதுமட்டுமன்றி...வலைப்பூக்களிலும் கொசிப்புக்கு குறைவில்ல..யதார்த்ததை உள்வாங்க மறுப்பவர்களுக்கு கருத்துச் சொல்லிப் பயனில்லை...ஏதோ சண்டைக்கு தொடங்கின தலைப்புப் போல இருக்கு இது...! இதுதான் யாழ் களத்தின் தலைவிதி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


குருவியாரே உம்முடன் கருத்தாடும் எண்ணம் எனக்கில்லை ஆனால் நீர் நான் எழுதி உள்ளதை மேற்கோள் காட்டி திரித்து எழுதி உள்ளீர்.இதுவே உமது வழமையான பாணி.

தமிழோ,ஆங்கிலமோ சுயமானா எழுத்தும்,சிந்தனையுமே வலைப் பதிவிடுதலின் நோக்கம்.அதை விடுத்து வெட்டி ஒட்டலும்,மொழி பெயர்ப்பும் அல்ல(இது விக்கிமீடியா மற்றும் ஆவணக் காப்பு இனயத்தளங்கள் செய்யும் வேலை).

விமர்சன ரீதியாக இடப்படும் தலைப்புக்கள் எல்லாம் சண்டைக்குத் தொடங்கினது என்று நினைத்து எழுதும் உம் போன்றவரால், ஆரோக்கியமான கருத்தாடல்கள் தனி நபர் பிரச்சனைகளாகத் திசை திருப்பப்படுவதே யாழ்க் களத்தின் தலை விதியாகி இருக்கிறது.இத் தலை விதியை மாற்ற தனி நபர் தூற்றல் இன்றி எழுதுவீர்கள் உங்கள் கருதுக்களை. :evil:


- kuruvikal - 09-25-2005

Quote:தமிழோ,ஆங்கிலமோ சுயமானா எழுத்தும்,சிந்தனையுமே வலைப் பதிவிடுதலின் நோக்கம்.அதை விடுத்து வெட்டி ஒட்டலும்,மொழி பெயர்ப்பும் அல்ல(இது விக்கிமீடியா மற்றும் ஆவணக் காப்பு இனயத்தளங்கள் செய்யும் வேலை).

ஓஓஓஓ....இதுதானா பிரச்சனை... அப்ப நீங்கள் எழுதிறதெல்லாம் ஆங்கிலத்தில வராத விசயங்களா....சரி சரி...! மொழிபெயர்க்கப்படாததுகளா எழுதினம்...ம்ம்ம்...! காலமடா சாமி.... அவனவன் ஆங்கிலத்தில உள்ளது சிங்களத்தில உள்ளது தமிழில இல்லை என்று அழுதிட்டு இருக்கான்...இங்க...ம்ம்ம் இன்னும் எவ்வளவு பூ இருக்கு சுத்த...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- narathar - 09-26-2005

[quote=kuruvikal][quote]தமிழோ,ஆங்கிலமோ சுயமானா எழுத்தும்,சிந்தனையுமே <span style='font-size:30pt;line-height:100%'>வலைப் பதிவிடுதலின் </span>

ஓஓஓஓ....இதுதானா பிரச்சனை... அப்ப நீங்கள் எழுதிறதெல்லாம் ஆங்கிலத்தில வராத விசயங்களா....சரி சரி...! மொழிபெயர்க்கப்படாததுகளா எழுதினம்...ம்ம்ம்...! காலமடா சாமி.... அவனவன் ஆங்கிலத்தில உள்ளது சிங்களத்தில உள்ளது தமிழில இல்லை என்று அழுதிட்டு இருக்கான்...இங்க...ம்ம்ம் இன்னும் எவ்வளவு பூ இருக்கு சுத்த...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]

:roll: :evil:


- vasisutha - 09-26-2005

தலைய சுத்துதுடா சாமி........ :oops: :oops: :? :roll:


- Muthukumaran - 09-28-2005

மனதில் பட்டதை எந்தத் தடையுமின்றி பதிவு செய்ய வலைப்பூக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. இது நமது டைரி மாதிரிதான். நாம் விருப்பப்பட்டால் மட்டுமே இங்கு மற்றவர்கள் தங்கள் பதிலை இட முடியும். இது நல்ல மாற்றம்..

ஆனால் ஒன்று நிச்சயம். இங்கும் நமது பதிவை எல்லோரும் பார்ப்பார்கள் விமர்சித்து பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியது. தொடர்ந்து வாசிப்பவர்கள் கூட கருத்து தெரிவிக்காமல் இருப்பார்கள்... அவர்களை வசப்படுத்துவதில் நம் எழுத்தின் வெற்றி இருக்கிறது.ஆனால் இன்று தமிழ் வலைப்பூக்களில் நல்லவற்றை சேற்றில் தொலைத்த முத்தைப் போலவே தேட வேண்டியிருக்கிரது.. எங்கெங்கு காணினும் ஒருவரை ஒருவரை தாக்கி கூச்சல்கள்.. சண்டைகள் என்று நிரம்பிக் கிடக்கிறது...

நல்ல நிகழ்வுகள் நடக்கையில் இது போன்ற சில தொல்லைகளும் தவிர்க்க முடியாதுதான்


- Mathan - 09-28-2005

narathar Wrote:சில வலைப் பதிவுகளில் யாழ்க் களமும் ,அங்கத்தவர்களும் பேசு பொருளாகவும் வந்துள்ளனர்.சில பதிவுகளில் யாழ் உறுப்பினர்கள் பின்னூட்டம் இட்டும் உள்ளனர். நான் கூட இவற்றைத் தற்செயலாகத் தான் கண்ணுற்றேன்,இங்கே நெடு நாளாக எழுதுவோரோ ,வலைப் பதிவுடும் உறுப்பினர்களோ இவற்றைப் பற்றி எதுவும் இங்கே ஏன் எழுதவில்லை என்பது புதிராகவே இருந்தது,இவர்கள் இரு வேறு உலகங்களில் உள்ளனரா என்றும் எண்ணத் தோன்றியது.இதில் வசி தமிழ் மணத்தைப் பற்றி தெரியாமல் இருந்தது ஆச்சரியம் இல்லை.இன்னும் வலைப் பதிவுகளில் மும் முரமாக இருக்கும் உறுப்பினர் எவரும் இங்கே இத் தலைப்பிற்குள் கருத்து எதுவும் எழுதவில்லை ,சில வேளை யாழ்க் களத்தில் எழுதுவது அவர்களுக்கு எதாவது பிரச்சனையோ தெரியாது?

நாரதர்,

வலைப்பூவை அதன் ஆரம்பகாலங்களிலேயே உள்வாங்கிய பல யாழ்கள உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இரண்டாண்டுகளுக்கு முன் தமிழில் வலைப்பூ பிரபல்யம் அடைய தொடங்கிய போது மோகன் அண்ணாவும் www.yarl.net எனும் தளத்தின் மூலம் வலைப்பூ அமைக்க கூடிய வசதியை வழங்கினார். அப்போது ஆரம்பமான பெரும்பாலான வலைப்பூக்கள் புளொக்கர் அல்லது யாழ் நெட் மூலம் அமைக்கப்பட்டவை. இப்படி தமிழில் அமைக்கப்பட்ட வலைப்பூக்கள் அல்லது குடில்களை அறிமுகம் செய்வதற்காகவே யாழ் களத்தில் இணையம் பிரிவில் சுரதா அண்ணாவினால் குடில்கள் என்ற தலைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

குடில்கள் http://www.yarl.com/forum/viewtopic.php?t=160

அப்போதெல்லாம் தமிழ்மணம் என்று ஒரு தளம் இருக்கவில்லை, இந்த தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஒரு தாய்தளமாக <b>வலைப்பதிவுகளுக்கான வலைப்பதிவு</b> என்ற பெயரில் ஒரு தாய்தளம் http://www.valaippoo.blogspot.com/ என்ற முகவரியில் இயங்கி வந்தது, அது பின்னர் மூவபிள் டைப் வசதிக்காக http://valaippoo.yarl.net என்ற முகவரிக்கு மாற்றப்பட்டது. இந்த வலைப்பதிவுகளுக்கான தாய்தளத்தில் வாரம் ஒருவர் ஆசிரியராக இருந்து மற்ற வலைப்பதிவுகளை அறிமுகம் செய்ததுடன் அவற்றின் குறை நிறைகள் உட்பட வேறுபல விடயங்களையும் பேசினார்கள். இந்த தாய்தளத்தின் முதல் ஆசிரியராக இருந்து சிறப்பித்தவர் மூத்த யாழ் கள உறுப்பினர் சந்திரவதனா அக்கா என்று நினைக்கின்றேன். அதற்கு பின்பு ஈழவன் என்ற பெயரில் களத்தில் இப்போதும் எழுதும் நண்பர் ஈழநாதன் கூட ஆசிரியராக இருந்திருக்கின்றார். இந்த தாய்தளம் தான் இப்போது வளர்ந்து தமிழ்மணம் இணைய தளமாக உருவெடுத்திருக்கின்றது. அண்மையில் கூட தமிழ்மணத்தில் ஈழநாதன் மீண்டும் ஆசிரியராக இருந்தார் என்று நினைக்கின்றேன்.

இந்த வலைப்பூக்கள் மற்றும் தமிழ்மணம் குறித்து பலதடவைகள் பல இடங்களில் பேசப்பட்டிருக்கின்றது. வலைப்பதிவுகளில் இருந்து எத்தனையோ பதிவுகள் யாழில் இணைக்கப்பட்டிருக்கின்றன. சந்திரவதனா. ஈழநாதன், சயந்தன், கறுப்பி, முத்து, வெங்கட், சுந்தர் உட்பட பலரின் பல பதிவுகளை நான் களத்தில் இணைத்திருக்கின்றேன்.

நம்முடைய நண்பர் திரிஷா புகழ் <b>சயந்தன் சாரல்</b> என்ற பெயரில் வலைபதிகின்றார், அதில் இருந்து அவரின் யாழ் சென்று வந்த அனுபவங்களை களத்தில் இணைத்திருந்தேன்.

சாரல் http://sayanthan.blogspot.com/

அரசியல் மட்டுமன்றி வேறுபல விடயங்களும் பேசும் <b>ஈழநாதனின் பதிவுகள்</b> .......

அகவிதைகள் http://www.kavithai.yarl.net/

படிப்பகம் http://padippakam.blogspot.com/

படைப்பு http://padaippu.blogspot.com/

ஈழத்து இலக்கியங்களின் வரலாற்றுப் பதிவு http://www.eelanatham.yarl.net/

சலனச்சுருள் http://www.salanasurul.blogspot.com/

இதுதவிர சந்திரவதனா, குருவிகள், குளக்காட்டான், தமிழினி, நளாயினி, ஹரி, சியாம் உட்பட இன்னும் பல பதிவுகள் இருக்கின்றன.


- narathar - 09-28-2005

நன்றி மதன்,
எனக்கு பழய விசயங்களைத் தெரியத் தந்தமைக்கு.இப்போது தமிழ் மணம் நடுத்துபவர் காசி மற்றும் மதி கந்தசாமி என்றல்லவா தமிழ் மணத்தில் இருக்கிறது.ஈழ நாதன் முதலானோர் நட்சத்திரப் பதிவாளர்களாக இருக்கின்றனர்.எவ்வாறு தேர்வு நடக்கிறது என்று தெரியாது.மற்றது இது யாழ்க் களத்தில் தொடங்கப் பட்டது என்றால் எவ்வாறு இப்போது தனித்து இயங்குகின்றது.கை நழுவி விட்டதா?மற்றப் படி குடில்கள் என்ற வார்த்தை இங்கு மட்டுமே பிரயோகிக்கப் பட்டுள்ளது.
தமிழ்மணம் பிரயோகிக்கும் தொழில் நுட்பம்(RSS feed) புதிய வலைப் பதிவுகளையும்,பின்னூட்டங்களயும் வாசகருக்குக் காட்டுகிறது.இது முன் பிருந்தது போல் தெரியவில்லை.தமிழ் மணம் பிரபல்யம் அடைவதற்கு இதுவும் ஒரு காரணமா?
முன்னர் எழுதியவர்கள் ஏன் இப்போது யாழ் களத்தில் எழுதுவதுதில்லை?ஆரோக்கியமான விவாதங்கள் இன்றி ,தனி நபர் தூற்றல் காரணமா?


- kuruvikal - 09-28-2005

Quote:முன்னர் எழுதியவர்கள் ஏன் இப்போது யாழ் களத்தில் எழுதுவதுதில்லை?ஆரோக்கியமான விவாதங்கள் இன்றி ,தனி நபர் தூற்றல் காரணமா?

முந்தி சிலர்தான் பல பெயரில் எழுதினர்...இப்போ பலர் சில பெயரில் எழுதுகின்றனர்..! தனிநபர் தூற்றல் ஒரு சிலர் வருகையால்... வேண்டும் என்று வைக்கப்படும் கருத்துக்களால்..ஆற்றாமையைப் போக்க வைக்கப்படும் கருத்துக்களால் முன்பு தொடக்கம் இன்று வரை இருக்கிறது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathan - 09-29-2005

narathar Wrote:இப்போது தமிழ் மணம் நடுத்துபவர் காசி மற்றும் மதி கந்தசாமி என்றல்லவா தமிழ் மணத்தில் இருக்கிறது.ஈழ நாதன் முதலானோர் நட்சத்திரப் பதிவாளர்களாக இருக்கின்றனர்.எவ்வாறு தேர்வு நடக்கிறது என்று தெரியாது.மற்றது இது யாழ்க் களத்தில் தொடங்கப் பட்டது என்றால் எவ்வாறு இப்போது தனித்து இயங்குகின்றது.கை நழுவி விட்டதா?

நாரதர்,

தமிழ் வலைப்பதிவுகள் யாழ் களத்தில் தான் தொடங்கப்பட்டது என்று சொல்லவரவில்லை, வலைப்பதிவுகள் வர தமிழில் ஆரம்பித்த போது அதில் யாழ்கள உறுப்பினர்கள் சிலரும் யாழ்களமும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது என்று சொல்லலாம். கள உறுப்பினர்கள் சிலர் அதனை ஆரம்பகாலத்திலேயே உள்வாங்கி கொண்டு வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்தார்காள். யாழ் தளமும் வலைப்பூ அமைப்பதற்கான வசதியை யாழ்.நெட் மூலம் அளித்தது. அது தவிர சுரதா அண்ணாவின் எழுத்துரு மாற்றிகள் உள்ளிட்ட சில செயலிகளும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு மிகபெரிய உதவியாக இருந்தது.

இந்த தமிழ் வலைப்பதிவுகள் குறித்து பேச ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ என்ற பதிவுதான் நாளடைவில் தமிழ்மணமாக உருவெடுத்தது என்று குறிப்பிட்டிருந்தேன். இது உருவாகுவதற்கு காசி முக்கிய பங்காற்றினார் ..... அது அவரின் சொந்த பணத்தில் இயங்குகின்றது. அந்த தமிழ்மணத்தை வழி நடத்துபவர்களாக நிர்வாக குழுவில் காசி, மதி அக்கா, செல்வராஜ், அன்பு போன்றோர் இருக்கின்றார்கள்.


- narathar - 09-29-2005

தகவலுக்கு நன்றி மதன்,
நல்ல பதிவுகளைப் பார்த்தால் இங்கே இணைப்பதற்கும் ,விமர்சிப்பதற்குமே இந்தத் தலைப்பை தொடக்கினேன்.எனக்கு இவை புதிய தகவல்கள். நான் பார்த்தவரையில் சிலரது பதிவுகள் தரமானவயாக இருந்தன,அவ்வாறு தரமான பதிவுகளை இடுவோர் யாழ் கள உறுப்பினராக இருந்தனர் அல்லது இன்னும் இருக்கின்றனர்,ஆனால் குளக் காடான்,ஈழ நாதன் தவிர மற்றவர்கள் இங்கே இப்போது எழுதுவதாகத் தெரியவில்லயே.


- Mathan - 09-29-2005

நாரதர்,

நீங்கள் குறிப்பிட்ட நட்சத்திர பதிவாளர் குறித்து சொல்லாமல் விட்டுவிட்டேன். இந்த வலைப்பதிவுகளுக்கான தளம் வலைப்பூ என்ற பெயரில் புளொக்கரிலும் பின்னர் யாழ்நெட்டிலும் இயங்கிய போது அதில் தமிழில் வலைப்பதிபவர்கள் வாரம் ஒரு முறை ஆசிரியராக இருந்து சிறப்பித்தார்கள். காசி, மதி, சந்திரவதனா அக்கா உள்ளிட்ட சிலர் தமிழில் வலைப்பதிபவர்களில் ஒருவரை வாராவாரம் வலைப்பூ ஆசிரியராக இருக்கும்படி கேட்டுகொள்வார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர் வலைப்பூ தளத்திற்கான பாஸ்வேட்டை நடத்துனர்களிடம் இருந்து பெற்றுகொண்டு அந்த தளத்தில் ஒரு வாரம் எழுதுவார்கள், அந்த ஒருவாரத்தில் மற்றய வலைப்பூக்கள் அவற்றின் குறைநிறைகள் தவிர வேறுபலவிடயங்களும் அந்த வார ஆசிரியரின் கோணத்தில் அலசப்படும். அதற்கு பின்பு அடுத்ததாக இன்னொருவர் வருவார். அப்போதெல்லாம் புனைபெயரில் அல்லாமல் தமது பெயரில் வலைபதிபவர்களே வலைப்பூ ஆசிரியராக இருந்திருக்க வேண்டும்.

தற்போது தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவாளராக தமிழில் வலைபதியும் யாரும் இருக்கலாம், புனைபெயரில் இருக்க கூடாது என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. தமிழ்மண நட்சத்திர பதிவாளரை காசி, மீனாக்ஸ், பத்ரி, சந்திரவதனா அக்கா, மதி அக்கா கொண்ட குழு தேர்ந்தெடுக்கின்றது. அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர் தன்னுடைய வலைப்பதிவிலேயே கருத்துக்களை எழுதலாம், அவை தமிழ்மணம் வலைப்பதில் நட்சத்திரபதிவு தலைப்பின் கீழ் இணைக்கப்படும். முன்பு போல் நேரடியாக தாய்தளத்திலேயே எழுதுவது இல்லை.


- kuruvikal - 09-29-2005

Mathan Wrote:
narathar Wrote:இப்போது தமிழ் மணம் நடுத்துபவர் காசி மற்றும் மதி கந்தசாமி என்றல்லவா தமிழ் மணத்தில் இருக்கிறது.ஈழ நாதன் முதலானோர் நட்சத்திரப் பதிவாளர்களாக இருக்கின்றனர்.எவ்வாறு தேர்வு நடக்கிறது என்று தெரியாது.மற்றது இது யாழ்க் களத்தில் தொடங்கப் பட்டது என்றால் எவ்வாறு இப்போது தனித்து இயங்குகின்றது.கை நழுவி விட்டதா?

நாரதர்,

தமிழ் வலைப்பதிவுகள் யாழ் களத்தில் தான் தொடங்கப்பட்டது என்று சொல்லவரவில்லை, வலைப்பதிவுகள் வர தமிழில் ஆரம்பித்த போது அதில் யாழ்கள உறுப்பினர்கள் சிலரும் யாழ்களமும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது என்று சொல்லலாம். கள உறுப்பினர்கள் சிலர் அதனை ஆரம்பகாலத்திலேயே உள்வாங்கி கொண்டு வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்தார்காள். யாழ் தளமும் வலைப்பூ அமைப்பதற்கான வசதியை யாழ்.நெட் மூலம் அளித்தது. அது தவிர சுரதா அண்ணாவின் எழுத்துரு மாற்றிகள் உள்ளிட்ட சில செயலிகளும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு மிகபெரிய உதவியாக இருந்தது.

இந்த தமிழ் வலைப்பதிவுகள் குறித்து பேச ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ என்ற பதிவுதான் நாளடைவில் தமிழ்மணமாக உருவெடுத்தது என்று குறிப்பிட்டிருந்தேன். இது உருவாகுவதற்கு காசி முக்கிய பங்காற்றினார் ..... அது அவரின் சொந்த பணத்தில் இயங்குகின்றது. அந்த தமிழ்மணத்தை வழி நடத்துபவர்களாக நிர்வாக குழுவில் காசி, மதி அக்கா, செல்வராஜ், அன்பு போன்றோர் இருக்கின்றார்கள்.

யாழில்.. தமிழில்.. சுரதா அண்ணா (யாழண்ணா) தான் குடில்கள் என்று blogs ஐ வரையறுத்தவர். பின்னரே திசைகள் மாறனால் அவை வலைப்பூக்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டன..! யாழ் அண்ணாவின் யுனிக்கோட் எழுத்துரு மாற்றிகளின் வரவோடு வலைப்பூக்கள் தமிழில் விருத்தி கண்டன..! முதன் முதலில் தமிழ் வலைப்பூக்களை (குடில்களை) வரிசைப்படுத்திய பெருமையும் சுரதா அண்ணாவையே சாரும்..! அத்தோடு காசி ஆறுமுகம் ஆரம்பம் முதலே வலைப்பூக்களில் அக்கறையோடு செயற்பட்டு வந்திருக்கிறார்...! அவர் தனது இணையத்தளம் ஒன்றிலும் வலைப்பூக்கள் பற்றி எழுதி சில உதாரணங்களையும் வெளியிட்டு இருந்தார்...! அதன் பின்னரே தமிழ்மணத்தை உருவாக்கினார்...! அதற்கு முன்னர் யாழுக்கு அப்புறமா திசைகளுக்கே வலைப்பூக்களை ஊக்குவித்த பெருமை சாரும்...! குறிப்பா மாறனை இந்த இடத்தில் பாராட்ட வேண்டும்..அவரும் திசைகளினூடு வலைப்பூக்களை வரிசைப்படுத்திய முக்கியமானவர்களில் ஒருவர்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathan - 09-29-2005

தமிழ் வலைப்பதிவுகளுகளில் சுரதா அண்ணாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதனை ஏற்கனவே எழுதி இருந்தேன். சுரதா அண்ணாவின் மொழிமாற்றிகள் மற்றும் ஸ்கிரிப்ட் செயலிகள் தமிழ்மணம் உருவானபோதும் அதற்கு அடிப்படை உதவியாக இருந்தது, அவற்றை தமிழ்மணத்திற்கு சுரதா அண்ணா கொடுத்துதவினார். அதுதவிர தமிழ் வலைப்பதிவுகளை முதலில் வரிசைப்படுத்தியவர் மதி கந்தசாமி (மதி அக்கா) என்று நினைக்கின்றேன்.

<b>1) முதல் தமிழ் வலைப்பதிவுகளின் தொகுப்பு - மதி கந்தசாமியால் தொகுக்கப்பட்டது.</b>

http://tamilblogs.blogspot.com/

<b>2) வலைப்பதிவுகளுக்காக ஒரு தாய் தளம் வலைப்பூ - புளொக்கர் வசதியினால் உருவாக்கப்பட்டது.</b>

http://www.valaippoo.blogspot.com/

இதில் காசி, மதிகந்தசாமி உள்ளிட்ட சிலர் இதில் இருந்தார்கள். வேறு யார் யார் என்று சரியாக தெரியவில்லை.

<b>3) வலைப்பூ தாய்தளம் மூவபிள் வசதியுடன் யாழ்நெட் வசதியுடன் உருவாக்கபட்ட தளத்திற்கு மாற்றப்பட்டது.</b>

http://valaippoo.yarl.net/

யாழ்நெட் வசதியை வழங்கியோர் சுரதா அண்ணா, மோகன் அண்ணா

<b>4) குடில்கள் என்று பெயரிட்டு சுரதா அண்ணா உருவாக்கிய தொகுப்பு தளம்</b>

http://kudil.blogspot.com/

செயலிகள் (Script) மூலம் தமிழ் வலைப்பதிவுகளில் எழுதப்படும் விடயங்களை தொகுத்து அவற்றின் சுருக்கம் இந்த தளத்தில் தெரிவது போல் சுரதா அண்ணா செய்தார். இதே போல செய்வதற்கு நவீனும் முயற்சி செய்தபோதிலும் அது வெற்றியளிக்கவில்லை. இந்த தொழில்நுட்பத்தை சுரதா அண்ணா காசிக்கு வழங்க அதை அதனை அடிப்படையாக வைத்து தமிழ்மணத்தை அமைத்தார்.

<b>5) தற்போதைய தமிழ்வலைப்பதிவுகளின் தொகுப்பு தமிழ்மணம்</b>

http://www.thamizmanam.com/tamilblogs/

சன் டிவி புகழ் மாலன் தன்னுடைய திசைகள் சஞ்சிகையில் தமிழ்வலைப்பதிவுகள் குறித்து எழுதியிருக்கின்றார்


- kuruvikal - 09-29-2005

இதுதான் நாங்கள் கண்ட முதல் புளக் பற்றிய சுரதா அண்ணாவின் வலைப்பூ...!

http://aayutham.blogspot.com/2003_07_01_aa...am_archive.html

சுரதா அண்ணா ஆரம்பத்தில் ஒரு எளிமையான வரிசைப்படுத்தலை செய்திருந்தார்...! அது பின்னர் அவ்வளவு வளரவில்லை...!

திசைகள்... மாலன் என்பதை மாறன் என்று குறிப்பிட்டு விட்டோம்...மாலன் என்பதே சரி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- vasisutha - 10-21-2005

<b>தமிழ்மணம் குறித்து</b>
<i>சன்னாசி @ 6:53 pm </i>

காசியை சர்வாதிகாரி என்று தாக்கியும், ஓசியில் நண்டு விசிடி கொடுப்போம் என்றும் ரகரகமாய்ப் பதிவுகள்/கருத்துக்கள். இப்போது வரும் பெரும்பாலான தாக்குதல்கள்/விமர்சனங்கள் அனைத்தும் ஒரு திசையை நோக்கி இருப்பது போலத்தான், தமிழ்மணத்தின் ஒரு சாதாரணப் பயனாளன் என்ற ரீதியில் தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில், இதற்கு முன்னான குழுமங்கள் அனைத்தும் - ராயர் காப்பி கிளப், மரத்தடி, திண்ணை இத்யாதி அனைத்தும் எழுத்தார்வம் உள்ளவர்களால் தொடங்கப்பட்டன என்று நினைக்கிறேன் - அதே அளவுகோல்களை வைத்து இப்போது விமர்சிக்கும் அனைவரும், வெறுமனே பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணத்தை உருவாக்கிய காசியையும் போட்டுத் தாக்குகிறார்களோ என்று தோன்றுகிறது. ஒன்று மட்டும் எனது அனுபவத்தில் சொல்கிறேன் - பிற ‘தளங்கள்’ போலவோ, சிறுபத்திரிகைகளின் Mini-Meக்கள் போலவோ, பெரும்பத்திரிகைகளின் Baron Munchhausenகள் போலவோ ஏதேனும் இடியாப்பங்கள் தமிழ்மணத்தை நடத்தியிருந்தால் இந்த விவாதங்களெல்லாம் எவ்வளவு நாளுக்கு முன்பே வந்து, செத்தும் போயிருக்குமென்று யோசிப்பதை அவரவர் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் காசியும் பிறரும் உருவாக்கி நிர்வகித்த/நிர்வகிக்கும் தமிழ்மணம், அடிப்படையில் மொழி மேல் உள்ள ஆர்வத்தால், தொழில்நுட்பம் தெரிந்த சிலரால் உருவாக்கப்பட்டதென்பது என் அபிப்ராயம். இதே தமிழ்மணத்தை காசுகொடுத்து எவரிடமாவது நிரல்கள் எழுதி வாங்கி, இப்போது போட்டுத் தாக்கும் இடியாப்பங்கள் “நடத்தி” வந்தால் இப்போது சர்வாதிகாரம் சர்வாதிகாரம் என்று கூச்சலிடுபவர்களில் குரல் ஒரு துக்கடா தயவுதாட்சண்யமுமின்றி என்றோ நசுக்கப்பட்டிருக்கும் - நாய் கூடச் சீந்தாது என்று ஒரு சொலவடை இருக்கிறதே, அது போல. அனைத்துப் பிரச்னைகளுக்கும்/சாத்தியப்பாடுகளுக்கும் ஒரு holy Grailஐத் தேடுகிறேன் என்று சொல்லிவிடுவது சுலபம். தன் பதிவில் மயூரன் சொன்னதுபோல, தமிழ்மணம் ஆரம்பித்த சில காலங்களுக்குப் பின் வேறுவிதமான திரட்டிகளை எதிர்பார்த்தேன். இவ்வளவு ஏன், உலகத் திரைப்படங்கள் பற்றிய பார்வை அனுபவங்களைத் தொகுக்கும் வலைப்பதிவைத் தொகுக்க ஆரம்பித்தபோதுகூட, ஏன் வெட்டி வெட்டி ஒட்டி சிரமப்படவேண்டும், தமிழ்மணம் போல, எழுதுபவர்களெல்லாம் தங்கள் சுட்டியை இணைத்துவிடும் ஒரு நிரலை எழுதினால் வேலை எளிதாகப் போயிற்று என்று காசி அபிப்ராயம் தெரிவித்தார். பிள்ளையார் கோவில் பிரசாதமென்பதால் அண்டாவோடு வாயில் கவுத்திக்கொள்ளக்கூடாதென்றும், அவருக்கென்று ஒரு தொழில், குடும்பம், வாழ்க்கை குறித்த சிந்தனைகள் இருக்குமென்பதால், நமது நேரத்தையும் சிறிது செலவழிப்போமே என்று வெட்டி வெட்டி ஒட்டிக்கொண்டும் தொகுத்துக்கொண்டும் இருந்தேன். சொல்லவந்தது இதுதான்: எனக்குக் கணிப்பொறித் தொழில்நுட்பம் குறித்து ஒரு இழவும் தெரியாது, அதனால் ஒரு இழவும் செய்யமுடிவதில்லை. இப்போது கூக்குரலிடும் ஆசாமிகளில் இதுவரை வேறு திரட்டிகளை/அல்லது அதுபோன்ற தொழில்நுட்ப வேலைகளை யாரும் செய்ய முயலாதது ஏன்? காசி சொன்ன படியளப்பு விஷயத்திலும் ஒரு உண்மை இருப்பதாகத்தான் நினைக்கிறேன். ஒருவேளை தானியமும் தொழில்நுட்பமும் வாங்கியிருந்தாலும் எவ்வளவு பிரச்னைகள் இருந்திருக்குமோ என்னவோ? நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டாரேன், சோறு சமைச்சு ஆளுக்குப் பாதி சாப்பிட்டுக்கலாம் என்ற ரீதியில் இருந்திருந்து, இந்தப் பிரச்னையும் வந்திருந்தால் தமிழ்மண நிர்வாகிகள் தலையிலோ (அல்லது காசி தலையிலோ) ஒரு முடி கூட மிஞ்சியிருக்காதென்று நினைக்கிறேன். அந்தவிதத்திலாவது அவரது தீர்க்கதரிசனத்தைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

தமிழ் வலைப்பதிவுகளின் மொத்தப் பிரதிநிதி என்று தன்னைக் காசி project செய்துகொள்வதுபோல சில கருத்துக்கள்/பதிவுகள், குடியரசுத் தலைவருக்கு ஏனய்யா கடிதம் எழுதினீர் என்று கேள்விகள்? இனித்தான் சுரங்கம் தோண்டுவது ஆரம்பிக்குமென்று நினைக்கிறேன். மூன்று வருடங்களுக்குமுன் அவர் தன் வலைப்பதிவில் எழுதிவைத்ததைத் தோண்டியெடுத்துப் போட்டு மிக்ஸியில் அரைத்து “சர்வாதிகார” எலிமெண்ட்டுகள் இங்கேயிருக்கிறது பார் என்று சுட்டிக்காட்டுவது - இந்த நோய் எங்கிருந்து வருகிறதென்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழ் வலைப்பதிவுகளின் வாசல் என்று சொல்லிக்கொண்டு இப்போது ஏன் தூக்குகிறீர்கள் என்றால்? அதே குதர்க்கத்துடன் கேட்கிறேன் - தூக்கமாட்டோம் என்று யாரும் உங்களுக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்தார்களா? உன் பதிவைத் தூக்கியிருந்தால் தெரியும் என்று பின்னூட்டம் எழுதமுயல்பவர்களை நினைத்துச் சிரித்துக்கொள்கிறேன்: தயவுசெய்து வளரப் பாருங்கள்!

ஆக, என் சிற்றறிவுக்கு எட்டியபடி நடந்த கதை இது. காசி என்ற ஒரு மனிதர் வலைப்பதிவுத் திரட்டியொன்றை ஆரம்பிக்கிறார் - தங்கள் பதிவுகளை அனைவரும் சேர்க்கிறார்கள் - எழுதுகிறார்கள் - ‘எழுதுகிறார்கள்’ என்பதில் அவரவர் விருப்புவெறுப்புக்கேற்ப ‘குப்பைகளும்’ உண்டு, நல்லவையும் உண்டு - வெளியில் சொல்லும்போது காசி “தமிழ் வலைப்பதிவுகளின் வாசல்” என்கிறார் - ஏனெனில் எழுதுபவர்கள் அனைவரும் வாசல் வழியாகப் போய்வரத்தான் விரும்புகிறார்களே தவிர, தன் தேவைக்கென்று ஒரு வாசலை உருவாக்கிக்கொள்ளத் தயாராயில்லை, எனவே, இருக்கும் ஒரு வாசல் மட்டும் இருந்துகொண்டே இருக்கிறது - பிற சௌகரியங்களைச் சேர்க்கிறார் காசி - பின்னூட்டமிடப்பட்ட பதிவுகள் - நட்சத்திரக் குத்து (இதுக்கு ஒரு பாட்டம் அழுது தீர்த்தாயிற்று முன்னமே) - சிறந்த பதிவுகள், கடந்த ஒரு மாதத்தில் தேவையான பதிவுகள் - என்று ஒரு உபயோகிப்புக்கு எளிதான வழிமுறையை - வலைப்பதிவு எழுதும் அனைவருக்கும் இது சௌகரியமாக இருக்கிறது - எழுதுகிறார்கள் எழுதுகிறார்கள் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள் - மதத் தூஷணப் பதிவுகள் - பின்னூட்டங்களில் டோண்டு, ரோசாவசந்த், உஷா, பெயரிலி, பத்மா ஏன், எனக்குத் தெரிந்து தனிப்பட்ட முறையில் ஒருவரையும் கடுமையாக விமர்சித்திராத தங்கமணி என்று பலரக வலைப்பதிவர்கல் மீது சகட்டுமேனிக்கு இழிவசைகளைப் பொழியும் கணினி தட்டத்தெரிந்த படித்த கனவான்களின் கூட்டம் - இதற்கு நடுவில் ப்ளாகர் செய்யும் குழப்படிகளைத் தமிழ்மணத்தில் நடக்கும் குழப்பங்கள் என்று எழும் கேள்விகள் - தங்களால் முடிந்தளவு உதவிசெய்ய முயலும் நிர்வாகிகள் குழு - இவ்வளவு நிகழும்வரையும் வலைப்பதிவர்கள், நான் உட்பட - எழுதுகிறார்கள் எழுதுகிறார்கள், எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள் - இப்போதுதான் வருகிறது தற்போதைய பிரச்னை: எழுதாமல் விடப்பட்ட பதிவுகளை, மதத் தூஷணப் பதிவுகளை என்று சில விஷயங்களைச் சுட்டி, இப்பதிவுகளை தமிழ்மணத்தில் “திரட்டாமல் விடுகிறேன்” என்று சொல்கிறார்: சர்வாதிகாரம் என்று ஆரம்பித்துவிடுகிறது கூக்குரல். காசி மட்டும் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராக இருந்து, தானும் இரண்டு கதை கவிதை எழுதுபவராக இருந்தால் இந்த மட்டையடி எவ்வளவு உச்சத்துக்குப் போயிருக்குமென்பதை யோசித்துப் பார்க்க இன்னும் தமாஷாக இருக்கிறது. தொழில்நுட்பம், மொழியார்வம் என்பதை மட்டும் முன்வைக்கும் ஆள் என்று காசிக்கொரு பிம்பம் இருப்பதால், தாக்குனர்கள்கூட குழப்பத்துடனேயே தாக்குகிறார்களென்றுதான் எனக்குத் தோன்றுகிறது; போகப்போக பிக்கப் ஆகிவிடும், கவலை வேண்டாம் . ரோசாவசந்த், கார்த்திக், டிஜேதமிழன் என்று தொடர்ந்து நான் படித்துவரும் வலைப்பதிவர்களும்கூட பின்னூட்டத்தில் இது “ஒரு unilateral முடிவு” என்ற ரீதியில் எழுதியிருப்பது இந்தவிதமான ஒரு அபிப்ராய மயக்கத்தினாலோ என்றுதான் தோன்றுகிறது. பஸ்ஸில் அனைவரும் சௌகரியமாகப் பயணிக்க இலவசப் பயணம் உதவுமென்று நினைத்தோம், முடியவில்லை, அப்படியிருக்கப் பயணிகள் விரும்புவதாகத் தெரியவில்லை, இலவசப் பயணம் முடிந்தது, இனி போகவேண்டுமானால் டிக்கெட் எடுங்கள் என்பதைச் சர்வாதிகாரம் என்று எப்படிப் பார்ப்பதென்றுதான் எனக்கு விளங்கவில்லை.

இதை நான் இப்படிப் பார்க்கிறேன்:
ஒரு தனிப்பட்ட வலைப்பதிவரின் blogroll: முன்பே எங்கோ ஒருமுறை நான் சொன்னதுபோல, தமிழ் வலைப்பதிவுகளை மேய ஆரம்பகாலத்தில் எனக்கிருந்த ஒரு வாசல், பத்ரியின் வலைப்பதிவில் அவரது blogroll - அங்கிருந்து கிடைத்த வலைப்பதிவுகளின் மூலம் பிற வலைப்பதிவுகள், அங்கிருந்து, அங்கிருந்து என்பதுதான் பொதுவான வலைப்பதிவுத் தத்துவம் என்று நினைக்கிறேன் - இப்போது நிகழ்ந்தவற்றைப் பார்த்தபின், தமிழ்மணத்தை காசியின், தமிழ்மண நிர்வாகிகளின் தனிப்பட்ட blogroll ஆகப் பார்ப்பதில் எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை - ஏதாவது காரணங்களுக்காக என் பதிவு தூக்கப்பட்டாலும் கூட. “அப்போ அப்பிடிச் சொன்னீங்க இப்போ இப்பிடிச் சொல்றீங்க” என்பதில் எவ்வளவு நியாயம் இருக்கிறதென்பது அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது .

குசும்பனின் பதிவு தூக்கப்பட்டது ஒருவகையில் வருத்தமே. சகட்டுமேனிக்குக் குசும்பன் அடிக்கும் கிண்டல் சில சமயங்களில் எரிச்சலளிக்கும்போதுகூட, நான் யாரையும் கிண்டல் செய்ததில்லையா, நான் “நாகரீக விமர்சனம்” என்று நினைத்துச் செய்வது சம்பந்தப்பட்ட நபருக்கு வெறும் “அசட்டுக் கிண்டல்” என்று மட்டும் பட்டால் அவர் அடையும் எரிச்சல் எவ்வளவு இருக்கும் என்று சுயவிமர்சனம் செய்வதற்கான, முதலில் என் முதுகை நான் சொறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே அது இருந்துவந்திருக்கிறது. இருப்பினும், சாவு குறித்த செய்தியைக் கூடக் கிண்டலடிக்குமளவு குசும்பின் தரம் இறங்கும் என்பது நானும் எதிர்பார்த்திராதது.

நானும் எதைக்குறித்தாவது காசியைத் திட்டவேண்டுமென்றால், முதலில் நான் குரைத்துக் கடிப்பது அவரது தயவுதாட்சண்யத்தைத்தானாக இருக்கும். தத்தமது வலைப்பதிவில் விடப்படும் அறிக்கைகளுக்கும் சவால்களுக்கும் அவர் பதில் சொல்வது அவசியமற்ற ஒன்று. கூக்குரல்/விமர்சனம் எழுப்புபவர்களில் பெரும்பாலானோர் இதுவரை நிகழ்ந்ததை மீளுருவாக்கம் செய்து பார்க்கத் திராணி உள்ளவர்களே.

தான் நினைப்பதைப் பிறர் வாயிலிருந்து பிடுங்கவேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களுடனான விவாதங்கள் அலுப்பூட்டுபவை; ஜல்லியடி ஜல்லியடி என்று தமிழ் வலைப்பதிவுகளில் படித்து வந்திருக்கிறேன் - இப்போது காசி மீது எழுப்பப்படும் விமர்சனங்கள்தான் எனக்கு இதுவரை கண்டதிலேயே மிகச்சிறந்த ஜல்லியடியாகத் தெரிகிறது.

எந்த நெரஸூஷ் காப்பி குடித்த தெம்பில் இதை எழுதமுடிந்ததென்றால், இத்தனை மாதங்கள் தமிழ்மணத்தில் செய்த freeloading தந்த தெம்பில்தான். நாளைக்குத் தமிழ்மணம் இப்படியே இருந்தாலும், வேறுமாதிரியாக இருந்தாலும் தங்கிப்போக உதவிய, சில வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு அமைப்புக்குக் கூறும் குறைந்தபட்ச நன்றிதான் - இணையத்துக்கு, கூகிளுக்கு, ப்ளாகருக்கு, wordpressக்கு, சிஎன்என்னு, இஎஸ்பிஎன்னுக்குக் கூறுவது போல: காசியையோ நிர்வாகிகளையோ வேறு எவரையோ patronize செய்வதற்கு அல்ல - அந்த அவசியம் எவருக்கும் இல்லை, அந்த அவசியத்தைக் கொண்டிருப்பவர்களால் காசிக்கோ அவரைப்போன்ற வேறெவருக்கோ கூட பைசா பிரயோஜனம் இருக்கமுடியாது.

http://dystocia.weblogs.us/archives/172

நன்றி
கரிசல்


- vasisutha - 10-21-2005

தமிழ்மணத்தில் பிரச்சனை இப்படி எல்லாரும்
அலர்றாங்கள். :roll: