Yarl Forum
திருமலைக் கடலில் விசித்திர ஒளி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: திருமலைக் கடலில் விசித்திர ஒளி (/showthread.php?tid=3185)

Pages: 1 2


- narathar - 09-26-2005

சரியான சொற்களோ தெரியாது,தமிழில சொன்னால்,
வளி மண்டலத்தில் இருக்கும் அதிகூடிய வெப்பவிதியாசங்களினால் ஏற்படும் ஒளிச் சிதறலினால் ஏற்படுத்தப்படும் நிறப் பிரிகையினால் உருவாகும் ஒரு வகை மாயத் தோற்றம்.


- Birundan - 09-26-2005

கானல் நீரில் உருவங்கள் தெரியும், பச்சை நிறமும் தெரியுமா?


- narathar - 09-26-2005

http://mintaka.sdsu.edu/GF/explain/simulat...f-mirSS4GF.html
<img src='http://img21.imageshack.us/img21/3434/infmir6ml.png' border='0' alt='user posted image'>
<img src='http://img242.imageshack.us/img242/6379/infmirss4gf9qw.gif' border='0' alt='user posted image'>


- kurukaalapoovan - 09-26-2005

"தலையும் மலையும"; வாசிச்சு ஆர்வமா கருத்தெழுதுகிறதுகளுக்கு உந்த விழக்கத்தை போட்டா Confusedhock:

ஏதாவது கிரகப் பெயர்ச்சி, கிரகணம் நேர்த்திகடன் விரதம் என்டு விளக்கம் குடுங்கோ. ரஜனிக்காந்தும் ஆழிப்பேரலைக்கு அறிக்கை விட்டமாதிரி எதாவது விடுவர். வாசிச்சுப்போட்டு தலைவா எண்ணுவினம் இல்லாட்டி எங்க சுப்பர் ஸ்ரார் எண்ணுவினம். 8)


- Paranee - 09-27-2005

இதுதான் உண்மையாகவும் இருக்கலாம்.

நேற்று இரவும் இந்த அதிசய நிகழ்வு ஏற்பட்டதாக திருமலை நண்பர்கள் கூறினார்கள். மக்கள் பயஉணர்வுடனும் ஏதோ அதிசய காட்சியை காணும் ஆவலுடனும் திருமலை உல்லாச கடற்கரை முழுவதும் படையெடுத்தவண்ணம் இருந்தார்களாம்.

Birundan Wrote:சேதுசமுத்திரதிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், மண் அகழும் போது அடியில் இருந்த நுன்னிய பாசிகள், கரையை நோக்கி தள்ளப்பட்டிருக்கலாம், சில குளங்களில் நீர் பச்சையாக இருப்பதை அவதானிக்க முடியும், இக்குழப்பத்தை தீர்க்க அந்தநீரை லாபுக்கு அனுப்பி பரிசோதித்தால் உண்மை தெரிந்துவிடப்போகுது. இதற்க்கு நல்ல உதாரணம் செங்கடல், செங்கடலின் சிவப்பு நிறத்துக்கு காரணம் அதில் கானப்படும் சிவப்பு நிற பாசியே.



- narathar - 09-28-2005

மீனவர்களுக்கு தெரிந்தது ,இந்த பரபரப்பாக செய்தி விடும் பத்திரிகையாளர்களுக்குத் தெரியவில்லை.எதையும் ஆராயாமல் கண்மூடித் தனமாகக் கருத்து எழுதுவது அறியாமயய்யே வளர்க்கும்.

திருமலை, கிண்ணியா கடற்கரை பகுதியில் ஒளிக்கீற்றைப் பார்க்க மக்கள் முண்டியடிப்பு கோடை காலத்தில் கடலில் தென்படும் இயற்கை நிகழ்வென்கின்றனர் மீனவர்கள்

திருகோணமலை நகரம் மற்றும் கிண்ணியா பட்டினம் மற்றும் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் திங்கள் இரவு 9 மணி தொடக்கம் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக கடலில் தெரிவதாகக் கூறப்பட்ட ஒளிக்கீற்றைப் பார்க்க அகப்பட்ட வாகனங்களில் கடற்கரையை நோக்கிச் சென்றனர்.

திருமலை நகரில் நூற்றுக் கணக்கானோர் கடற்கரையில் திரண்டதால் அப்பகுதியில் சன நெரிசல் ஏற்பட்டது. பொலிஸார் உடனடியாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டு சன நெரிசலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடலில் கோடை காலத்தில் ஏற்படும் இயற்கை நிகழ்வுகளில் ஒளிக்கீற்று தென்படுவதும் ஒன்று என கடற்றொழிலில் நீண்ட காலமாக ஈடுபடுபவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வுக்கும் கடல்கோள் அபாயத்திற்கும் எதுவிதத் தொடர்புமே கிடையாது என்று அனுபவமிக்கவர்கள் கூறுகின்றனர்.

வால்வெள்ளி ஒன்று கடலில் விழுந்து நொருங்கியதால் கடலில் தீப்பிடித்துள்ளது என்றும் வதந்திகள் தீ போன்று பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்தே கடலை நோக்கி சனக்கூட்டம் ஆட்டோக்கள், சைக்கிள்கள், லொறிகள், மோட்டார் சைக்கிள்கள் கடற்கரையில் திரண்டது.

ஒளிக்கீற்றைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய அதிகாரி ஒருவர், ஆண்டாண்டு காலமாக கடலில் வெப்ப காலத்தில் இடம்பெறும் இயற்கை நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்றும் இதனை `கெவுர்' என்று கடற்றொழில் சார்ந்தவர்கள் அழைப்பர் என்றும் தினக்குரலுக்குத் தெரிவித்தார்.

கடல்கோளுக்கு முன்பு, கடலை எவரும் உன்னிப்பாக கவனிப்பதில்லை. கடல்கோளுக்குப் பின்னர் அனைவரின் கண்களும் கடல்மேல்தான். அதனால் வந்த விளைவுதான் `கடலில் ஒளிக்கீற்று' என்ற பரபரப்பான தகவல் என்றும் அவர் கூறினார்.

http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm


மீண்டும் திருகோணமலைக் கடற்பரப்பில் நிற மாற்றங்கள் - iruvizhi - 10-04-2005

திருகோணமலை உள்துறைவீதி கடற்பகுதியில் கடல்நீரின் தன்மை திடீர் என்று நிறம் மாறிக்காணப்பமுவதாகவும், அதனைப் பார்ப்பதற்கு மக்கள் பெரும் எண்ணிக்கையாக வருகைதந்த வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரதேசங்களில் கடலின் நிறம் திடீர் என மாறி இளம்பச்சை, கபிலநியம், கரும் நீலம், மற்றும் மங்கலான வெள்ளைநிறம், ஆகிய நிறங்களில் காணப்படுகின்றது. அத்துடன் அந்த இடத்தில் ஒருவகையான துர்நாற்றமும் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் நெடுங்காலமாக கடற்றொழில் புரியும் ஒரு மீனவர் ஒருவர் இது பற்றி தெரிவிக்கையில், திடீர் என் ஏற்படும் காலநிலை மாற்றங்களால் இது போன்ற நிறமாற்றங்களும், துர்நாற்றமும் வீசுவது வழமை ஆகினும் இது போல் பாரிய அளவில் இதுவரை இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்திற்கு முன்னரும் திருகோணமலைக் கடற்பரப்பில் ஒரு ஒளிபோன்ற வடிவம் தென்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆழிப்பேரலைத் தாக்கத்தின் பின்னர் கடலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மக்களின் கவனத்திலும், பீதியையும் ஏற்படுத்துகின்றமை குறிப்பட்டத்தக்கது.


ஒளிப்படங்களைப் பார்க்க http://www.sankathi.net/index.php?option=c...=2810&Itemid=41

நன்றி சங்கதி


மீண்டும் திருகோணமலைக் கடற்பரப்பில் நிற மாற்றங்கள் - mayooran - 10-04-2005

திருகோணமலை உள்துறைவீதி கடற்பகுதியில் கடல்நீரின் தன்மை திடீர் என்று நிறம் மாறிக்காணப்பமுவதாகவும், அதனைப் பார்ப்பதற்கு மக்கள் பெரும் எண்ணிக்கையாக வருகைதந்த வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரதேசங்களில் கடலின் நிறம் திடீர் என மாறி இளம்பச்சை, கபிலநியம், கரும் நீலம், மற்றும் மங்கலான வெள்ளைநிறம், ஆகிய நிறங்களில் காணப்படுகின்றது. அத்துடன் அந்த இடத்தில் ஒருவகையான துர்நாற்றமும் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
<img src='http://www.sankathi.net/images/stories/october2005/tinco_sea.jpg' border='0' alt='user posted image'>

அப்பகுதியில் நெடுங்காலமாக கடற்றொழில் புரியும் ஒரு மீனவர் ஒருவர் இது பற்றி தெரிவிக்கையில், திடீர் என் ஏற்படும் காலநிலை மாற்றங்களால் இது போன்ற நிறமாற்றங்களும், துர்நாற்றமும் வீசுவது வழமை ஆகினும் இது போல் பாரிய அளவில் இதுவரை இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
<img src='http://www.sankathi.net/images/stories/october2005/tinco_sea4.jpg' border='0' alt='user posted image'>

கடந்த வாரத்திற்கு முன்னரும் திருகோணமலைக் கடற்பரப்பில் ஒரு ஒளிபோன்ற வடிவம் தென்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆழிப்பேரலைத் தாக்கத்தின் பின்னர் கடலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மக்களின் கவனத்திலும், பீதியையும் ஏற்படுத்துகின்றமை குறிப்பட்டத்தக்கது.


- MUGATHTHAR - 11-13-2005

<b>திருமலையில் இலட்சக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின! </b>

திருகோணமலை கடற்பிரதேசத்தில் இலட்சக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.

திருகோணமலை கடற்படை தளத்துக்கும் நகரத்துக்கும் இடையேயான 2 கிலோ மீற்றர் இடைவெளியில் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்ட வகை மீன்கள் இலட்சக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கின.

குறிப்பிட்ட ஒரு வகை மீன்கள் மட்டுமே இறந்திருப்பதால் இயற்கை மாற்றங்களால் இந்த இறப்புகள் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

நகர சபைஇ மீன் வளத்துறை ஐ.நா. மற்றும் அமெரிக்க உதவி நிறுவனங்களின் சூழலியல் துறை அதிகாரிகள் இணைந்து இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். நகரசபைக்கு சிறிய அளவிலே உழவு இயந்திரங்கள்இ கையுறைகள்இ வாளிகள் ஆகியவற்றை கையளிக்க முடிந்தது என்றும் தொடர்ச்சியான மழையால் ஒட்சிசன் சுவாசக் காற்று கிடைக்காமல் இந்த மீன்கள் இறந்திருக்கலாம் என்று கருதுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்புகள் நிறுவனத்தின் திருமலை தலைவர் பிரிட்டா ஹெல்லெலன்ட் கூறினார்.

கடந்த சில நாள்களாக தொடர்ந்து இறந்த மீன்களை நாம் அப்புறப்படுத்தி வந்தாலும் நாளாந்தம் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது அதிகரித்து வருவதால் நிலைமை மோசமாக உள்ளதாக திருமலை நகர சபையின் சுகாதார ஆய்வாளர் என். செந்தில்நாதன் கூறினார். இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் நகரசபை ஊழியர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தொண்டர்களும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் செந்திநாதன் கூறினார்.

நன்றி புதினம்
http://www.eelampage.com/?cn=21657