![]() |
|
வன்மையாக கண்டிக்கிறோம்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: வன்மையாக கண்டிக்கிறோம்.. (/showthread.php?tid=3151) Pages:
1
2
|
- adithadi - 09-27-2005 மீராவின் கருத்து: "அவர்களை சாட்டாமல் எல்லா புலம்பெயர் மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்...." நாம் எவ்வாறு இலங்கை அரசின் அட்டுழியங்களை மேற்குலக நாடுகளுக்கு தெரியப்படுத்தலாம். எம்மவரிகளில் சிலரை தேர்வு செய்து முழு நேர ஊழியர்களாக செயல்படுத்த வேண்டும், அத்தோடு அவர்கள் அரசியல் செல்வாக்கும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்குரிய செலவை புலம்பெயர்ந்த மக்களிடம் அறவிட வேண்டும். இங்குள்ளவர்களோ சுனாமியின்போது வந்தார்கள், பின்பு ஆட்களை கானோம். - Anandasangaree - 09-27-2005 வெளிநாட்டிலை தாயகத்துக்கு வேலை செய்யுறம் என்டு ஒரு கூட்டம் சனத்தின் காசிலை ஓசி சோறு தின்னுகினம் அவையளின் பணத்தை கொஞ்ச அரசியல் மட்டங்களுக்கை ஊடுருவி ஊடக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராட்டத்தை முன்னகர்தகூடிய ஒரு கட்டமைப்பு உருவாகவேனும். சும்மா தமிழிலை உரக்க கத்தி ஒரு பயனும் இல்லை ஆயிரம் ஊடகங்கள் ஆயிரம் கோணத்தாலை தாகத்தின் பொராட்டத்ததை வலுபட செயலாற்றவேனம். - kurukaalapoovan - 09-27-2005 சமாதான தேவன் ரணில்பாடு வில்லங்கம் தான் இனி. - Thala - 09-27-2005 kurukaalapoovan Wrote:சமாதான தேவன் ரணில்பாடு வில்லங்கம் தான் இனி. இல்லை....! என்னைக் கேட்டாக் கொண்டாட்டம் தான் என்பேன்.. புலிகள். ரணிலுக்கு ஆதரவு அளிப்பார்கள் எண்டுதான் அமெரிக்கா ஐரோப்பா எல்லாம் நினத்திருந்தார்கள்.. அமெரிக்காவின்ர செல்லப்பிள்ளையான ரணில் வருவதுதான் அமெரிக்காவின் கனவு அதுக்குப் புலிகள் வைத்த ஆப்பினால் தான் இப்பிடி ஒரு அழுத்தம் ஏற்படுத்தப் பட்டதாக நினைக்கிறன்... அதுக்கு சந்தர்ப்பங்களும் அதிகம்.. Re: வன்மையாக கண்டிக்கிறோம்.. - Jude - 09-28-2005 selvanNL Wrote:தமிழும் தமிழீழமும் எங்கள் இருவிழிகள் தமிழ் "விழி" என்று கையெழுத்து போடும் நீங்களே தமிழை கொன்றுவிட்டு, "ஐயோ, குய்யோ சிங்களவன் தமிழை கொல்கிறான்" என்று ஓலமிடலாமா? '<b>உற்சாகம்</b>' என்ற அருமையான தமிழ் சொல்லை <b>உட்சாகம்</b> என்று எழுதுகிறீர்கள். '<b>இனியும்</b>' என்ற தமிழ் சொல்லை <b>எனியும்</b> என்று எழுதுகிறீர்கள். பாடசாலையில் தமிழ் படிக்கும் போது, அக்கறையில்லாமல் படித்திருப்பது, அப்படியே தெரிகிறது. பிறகு என்ன கையெழுத்தில் அட்டகாசம்? - அருவி - 09-28-2005 ஒருவரிற்கு அறிவுரை கூறமுன்பு தனக்கு அத்தகுதி இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளவேண்டும். [quote] தமிழ் "விழி" என்று கையெழுத்து போடும் நீங்களே தமிழை கொல்கிறான்" என்று ஓலமிடலாமா? 'உற்சாகம்' என்ற அருமையான தமிழ் சொல்லை உட்சாகம் என்று எழுதுகிறீர்கள். 'இனியும்' என்ற தமிழ் சொ Re: வன்மையாக கண்டிக்கிறோம்.. - selvanNL - 09-28-2005 Jude Wrote:selvanNL Wrote:தமிழும் தமிழீழமும் எங்கள் இருவிழிகள் யூட், நன்றி உங்க உதவிக்கு..அதை திருத்தியுள்ளேன்.. இங்கே களத்திலே கருத்துக்கள் முன்வைப்பவர்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் பாவிக்கும் சொற்களை பாவிப்பதனால்த்தான் நானும் அப்படியான சில சொற்களை பேச்சுவழக்கு மொழியில் எழுதினேன்.. திருத்த முயற்சி செய்கிறேன்.. நன்றி..
- kurukaalapoovan - 09-28-2005 செல்வன் என்ன அப்படி நன்றி சொல்லி திருத்துறீங்கள் உங்களுக்கு என்ன நடந்தது? äட் யார் உங்களில பிழை பிடிக்க எண்டு அவர் விட்ட பிழைகள் எண்டு பந்தி பந்தியா எழுதி அதோடை ஒப்பிடேக்கை உதெல்லாம் சின்விசயம் எண்டு ஒரு பிடிபிடிக்க வேணும். 2 நாளில என்னத்தில ஆரம்பிச்சதென்றே இல்லாமல் எங்கையோ கொண்டுபோய் விடவேணும். அதிலதான் உங்கடை கெட்டித்தனம் இருக்கு. ஜநா, மனிதஉரிமை, புலிகள், வன்னி, பாரதியர், நாவலர், குஸ்பு எண்டு எல்லாரை இழுத்துப்போட்டு கொஞ்சப்படங்களையும் இணைச்சு நடத்தவேணும் காரசாரமா கருத்தாடல். - Birundan - 09-28-2005 kurukaalapoovan Wrote:செல்வன் என்ன அப்படி நன்றி சொல்லி திருத்துறீங்கள் உங்களுக்கு என்ன நடந்தது? அப்படி போடு அருவாள. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: வன்மையாக கண்டிக்கிறோம்.. - Jude - 09-29-2005 selvanNL Wrote:யூட், நன்றி உங்க உதவிக்கு..அதை திருத்தியுள்ளேன்.. இங்கே களத்திலே கருத்துக்கள் முன்வைப்பவர்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் பாவிக்கும் சொற்களை பாவிப்பதனால்த்தான் நானும் அப்படியான சில சொற்களை பேச்சுவழக்கு மொழியில் எழுதினேன்.. திருத்த முயற்சி செய்கிறேன்.. நன்றி.. செல்வன் உங்களுக்கு உண்மையிலேயே நல்ல தமிழ் பற்றும் தவறை ஏற்றுக்கொண்டு தன்னை தானே திருத்திக்கொள்ளும் நற்பண்பும் இருக்கிறது. - Jude - 09-29-2005 Aruvi Wrote:ஒருவரிற்கு அறிவுரை கூறமுன்பு தனக்கு அத்தகுதி இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒருவரிற்கு அறிவுரை கூறமுன்பு தனக்கு அத்தகுதி இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளவேண்டும். - narathar - 09-29-2005 kurukaalapoovan Wrote:செல்வன் என்ன அப்படி நன்றி சொல்லி திருத்துறீங்கள் உங்களுக்கு என்ன நடந்தது? என்ன குறுக்ஸ் இன்னும் கனக்க பினாத்தல்களை விட்டுட்டியள் ......பப்பில தண்ணியடிக்கிறது,சீர்திருத்தம் எண்டு சீரழிக்கிறது,பெண்ணியம் பேசி விபச்சாரம் செய்யிறது, சரி விசயத்திற்கு வருவம். இங்கே அண்மையில் இந்திய அரசாங்கம் யுரோப்பியன் யுனீயனோட செய்துகொண்ட மிகப்பெரிய அயர்பஸ் ஏற்றுமதி ஒப்பந்தமும்,அதை கை யெழுத்திட பிளயர் சென்றதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.சர்வதேச அரசியல் நியாயத்தின் படி நடத்தப் படுவதில்லை அது நலன் சார்ந்ததாகவே நடத்தப் படுகிறது.இன்றய நிலவரத்தின்படி நாங்கள் எவ்வளவு தான் கூக்குரலிட்டாலும் சர்வதேச அரசியலில் தாக்கம் செலுத்வல்லவை சந்தை,வர்த்தகம் சார்ந்த நலங்கள்,சர்வதேச வர்த்தகப் பாதைகள், இவற்றைப் பாதுகாக்கும் இராணுவ வல்லாதிக்கம்,அதனை நிலை நிறுத்தும் கேந்திர தளங்கள். சுற்றிச் சுற்றி இறுதியில் நாம் வந்தடைவது திருகோணமலைத் துறை முகத்தையும்,பலாலி விமானத் தளத்தையும் தான்.இவை தானே சர்வதேச அரசியலின் துருப்புச் சீட்டுக்கள். - adithadi - 09-29-2005 <b>Why Tamil Media is sleepin ?</b> Please read the following title by Asian Tribune! Why Norway is passive in dealing with LTTE? - UN Secretary General asks? What measures does Canada propose to take against LTTE? Sep 29 (AT) In an e-mail communication sent to Ms. Anne McLellan, the Deputy Prime Minister of Canada, SLUNA of Canada has asked “we have yet to hear of any steps against LTTE, the terrorist organization in Canada, which allows it to conduct wide scale propaganda by operating several newspapers and broadcasting stations to shore up support and also raise funds for its terrorist warfare in Sri Lanka. Let Tamil Media / Tamil Congress (are they live) send a e-mail to Anne McLellan regarding what SL Gov't have done to Tamil Community? ஐரோப்பாவின் நடவடிக்கைக்கு எதிரான அதிருப்தி மனுக்களை அனுப்ப வ - வினித் - 09-29-2005 ஐரோப்பாவின் நடவடிக்கைக்கு எதிரான அதிருப்தி மனுக்களை அனுப்ப வேண்டுகோள்! [வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2005, 18:37 ஈழம்] [சுவிஸ் நிருபர்] <b>தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் மற்றும் புத்திதீவிகள் தங்கள் அதிருப்தியையும் வேண்டுகோள்களையும் வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பான மனுக்களை தொடர்ந்து அனுப்பி வைக்குமாறும் பொதுமக்களையும் புத்திஜீவிகளையும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மனுக்களில் - விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கை தமிழ் மக்களிற்கு எதிரானது. விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்த உடன்பாடுகளில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். - ஐரோப்பிய ஒன்றியம் இணக்க முயற்சிகளின் பிரதான ஆதரவாளராக இருப்பதால் நடுநிலையுடன் செயற்படுவது அவசியம். அதன் அறிவிப்பு நடுநிலையானதல்ல. விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்வதும் கருத்துக்களை சொல்வதும் தடுக்கப்படுவது வேதனைக்குரியது. - சிங்கள தேசியவாதிகளை இது பலப்படுத்தி போரிற்கு இட்டுச்செல்லும். ஆகியவை இடம் பெற வேண்டும் என்றும் கீழ்க்கண்ட முகவரிகளுக்கு அவற்றை அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.</b>முகவரிகள்: (1) EU commissioner for external relations Fax: 00 32 2 2981 12 97 Postal Address: Ms.Ferrero-Waldner, Office of Commissioner External affaires, European Commission, B-1049 Bruxelles Belgique (2) Prime minister of UK and the EU presidency Fax: 00 442079250918 Postal Address: Hon. Prime Minister, 10 Downing Street, London, SW1A 2AA Copy to the PM appeal Mr.John Grant Permanent UK Representative to EU E-mail: john.grant@fco.gov.uk(3) The chairman of the European Parliament foreign affaires committee Herr Brok Elmar Parlement européen Bât. Altiero Spinelli 10E130 60, rue Wiertz / Wiertzstraat 60 B-1047 Bruxelles/Brussel Fax: 32 (0)2 284 9323 Copy to Herr Brok Elmar Parlement européen Bât. Louise Weiss T06063 Allée du Printemps BP 10024/F F-67070 Strasbourg Cedex Fax: 33 (0)3 88 17 9323 http://www.eelampage.com/?cn=20430 - kurukaalapoovan - 09-30-2005 <b>ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவின் பொய்ப்பரப்புரையை நம்பி விட்டதா?</b> மேற்கத்தைய நாடொன்றின் பாராளுமன்ற அரசியல்வாதியான அவர் தமிழர்களின் போராட்டத்திற்கு எதிரான கருத்துடையவர். இதனால் எமக்கு எதிரானவர் என்ற தோற்றத்தையே தமிழர்களிடையே அவர் பெற்றிருந்தார். அவரை ஒரு வைபவத்தில் ஏதேச்சையாக சந்தித்து உரையாடிய போது தமிழர் தரப்பைப் பற்றிக் கதையைத் திருப்பி தனது கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது தமிழர்கள் மொழி வாரியான ஒரு இனம் என்பதையும் மூன்று மதங்களைச் சார்ந்தவர்களே தமிழர்கள் என்றும் குறிப்பிட்ட போது அவர் அப்படியா? அவர்கள் அல்கொய்தா போன்றவர்கள் என்றும்இ மத அடிப்படைவாதிகள் போன்றுமல்லவா சிறிலங்கா இராஜதந்திரிகள் எனக்குத் தெரிவித்திருந்தார்கள் என்று ஆச்சரியப்பட்டார். நாங்கள் கதைத்த விடயங்கள் பல தனக்குப் புதியவை என்றார். இதன் பிற்பாடு அவர் தமிழர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. இந்த விடயத்தை சிறிலங்கா அரசு தனது பொய்ப் பரப்புரையில் வெற்றி பெற்றது என்று என்னால் நோக்க முடியவில்லை. மாறாக தமிழர்கள் பற்றிய உண்மைத் தன்மையை மேற்படி அரசியல்வாதி விளங்கிக் கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பதோடு அவ்வாறு விளக்குவதற்கான முயற்சிகளை நாமாக தமிழர்கள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றவுணர்வே எனக்கு ஏற்பட்டது. ஏனெனில் <b>அவர்கள் தங்களது மக்கள் தொகுதி நாடு பாதுகாப்பு கட்சியின் கொள்கை என இன்னோரன்ன பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருபவர்கள். அவ்வாறானவர்கள் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய பூரண பட்டறிவைக் கொண்டிருப்பார்கள் என்று கருதுவது நியாயமில்லை.</b> ஆனால் இப்போது இங்கிலாந்து என்ற நாட்டின் விவகாரத்திலும் இந்த சிறிய உதாரணமே கன கச்சிதமாகப் பொருந்துகிறது என்பதே துரதிஸ்டவசமான உண்மை. இதன் அர்த்தம் இங்கிலாந்து ஏதோ விடயமறியாத நாடு என்றல்ல. சகலதுமாய் அறிந்துள்ள நாடு தான் என்றாலும்இ தற்போதைய சமாதான காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய பார்வையேதுமில்லாத நிலையே அதனது என்பதாலேயே இந்த ஒப்பீடு. <b>இங்கிலாந்து ஏற்கனவே விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ள நாடு. ஆதனால் எந்தவித பாதிப்புக்களையும் தமிழர் தரப்புப் பெற்றிருக்கவில்லை. மாறாக அமெரிக்க இங்கிலாந்துத் தடைகளின் பின்னரேயே தமிழர் தரப்பு மாபெரும் வெற்றிகளைப் பெற்று அனைத்துலகின் பார்வையை தமிழீழத்தின் பக்கம் திருப்பினார்கள்.</b> ஆனால் இங்கிலாந்து தற்போது ஐரொப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியில் இருக்கிற காரணத்தாலேயே இதில் நாம் சிரத்தை கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமையான இங்கிலாந்து ஏதோ ஒரு உந்துதலால் ஒரு தீவிர பரிசீலனையற்ற அறிக்கையை வெளியிட்டு தமிழர்களை அடக்க முனையும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தி வரும் சிங்களத்திற்கு உரமேற்றும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. <b>தடை பற்றிய பரிசீலிப்பையே மேற்கொள்கிறோம் என்ற அறிவிப்பானது அவர்கள் தவறவிடுவதற்கு முன்னரேயே திருத்துவதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கிறது.</b> <b>என்ன ஏது என்ற தீவிர விசாரிப்புத் தன்மையற்ற ஒருதலைப்பட்சமான இந்த அறிவிப்பையே ஈழத்தமிழனின் நிரந்தரத் தலைநிமிர்விற்கான திறவுகோலாக மாற்ற முயன்றால் நிச்சயமாக தமிழர்கள் இந்த விடயத்தில் வெற்றி பெற்றேயாவார்கள்.</b> இவ்வாறானதொரு அறிக்கை வெளியீட்டிற்கான பின்னணி என்ன என்று பார்த்தால் சிறிலங்கா அரசின் முழு முயற்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற உண்மை யாருக்குமே புலப்படும். ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்டு வைத்திருந்த திட்டத்தை அவர்கள் கதிர்காமரின் கொலையோடு மேற்குலகில் அரங்கேற்றினார்கள். கதிர்காமரின் கொலையையடுத்து விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை சிறிலங்கா அரசு வலுவாக முன்னெடுத்தது. இந்த நடவடிக்கை மேற்குலகு முழுவதும் உள்ள தனது தூதரகங்களினூடாகவும் கொழும்பிலிருந்து இதற்கென விசேடமாக அனுப்பப்பட்டவர்களாலும் (தமிழின எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட) மேற்கொள்ளப்பட்டன. சிறிலங்கா அரசு இவ்வாறான பிரச்சாரத்தை முன்னெடுத்த போது விடுதலைப் புலிகளிற்கெதிரான பல பழைய ஆவணங்களையும் தற்போதைய கிழக்கு வன்முறைக்கு புலிகளே முழுப்பொறுப்பு என்பது போன்ற செய்திகளையும் மேற்குலக ஐரோப்பிய ஊடகங்களினூடாக பல லட்சம் டொலர்கள் செலவில் பிரசுரித்தும்இ ஒளிபரப்பியும் இருந்தது. <b>இவ்வாறு திட்டமிட்டு இதர நாடுகளில் விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய முற்று முழுதாக முயன்ற சிறிலங்காவோ தங்களது நாட்டில் அவர்களைத் தடை செய்யவில்லை. மாறாக புலிகளுடன் பேசியே நாங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்கிற மாய மந்திரத்தையே தொடர்ந்தும் உச்சரித்து கொண்டே வருகின்றார்கள். சிறிலங்கா அரசாங்கமே இலங்கைத் தீவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்யாது அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறி வரும் இவ்வேளையில் எதற்காக மேற்குலகில் மாத்திரம் தடையை ஏற்படுத்த சிறிலங்கா அரசு தீவிரமாய் முனைகிறது என்பதை ஆராய இங்கிலாந்து ஏனோ மறந்து விட்டது.</b> இதுவே அந்த அறிக்கை இங்கிலாந்தின் தெளிவான பார்வைக்குட்படாததொன்றாக நாம் கருதுவதற்கான காரணம். விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்களில் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புக்கள் பற்றியோ அல்லது சமாதான முயற்சிகளைக் குழப்புவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்ட சதிகள் பற்றியோ இங்கிலாந்து ஒரு முறையாவது பரிசீலிந்திருந்தால் இந்த அறிக்கை வெளியீட்டில் சிறிலங்கா அரசையும் கண்டித்து இரண்டு தரப்பையும் பேச்சுவார்த்தையை நோக்கிச் செல்லுமாறு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். இம் மாதம் 19 ஆம் திகதி அமெரிக்காவில் உதவிவழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் அவசர கூட்டமொன்று நடைபெற்றது. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளிற்காக தார்மீக பொறுப்பையேற்றுள்ள அமெரிக்கா ஐப்பான்இ நோர்வே ஆகிய மேற்படி இணைத்தலைமையானது களநிலைமைகளைப் பரிசீலித்து சிறிலங்கா அரசு மற்றும் தமிழர் தரப்பு ஆகிய இரு தரப்புக்களையும் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததோடு இரு தரப்பையும் கண்டித்திருந்தது. இங்கிலாந்து மேற்படி இணைத் தலைமையின் அறிக்கையைப் பின்பற்றியிருக்க வேண்டும் இல்லாவிடினும் சமாதான காலத்தில் சாதகமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் யுத்தமொன்றிற்கான வழிகளை ஏற்படுத்தியது யார் என்ற அடிப்படையையாவது தள யதார்தத்தை வைத்து ஆராந்திருக்க வேண்டும். குரங்குப்பாஞ்சான் முகாமை விவகாரமாக்கி சமாதான முயற்சிகளைக் குழப்பியது யார்? ஆயுதபாணிகளை உருவாக்கிஇ அரவணைத்து வைத்து நிழல் யுத்தத்தைத் தொடர்வது யார்? போர்நிறுத்த ஒப்பந்தம்இ வட-கிழக்கிற்குப் புனர்வாழ்விற்கான உதவி வழங்கும் நாடுகளின் பங்களிப்பு ஆழிப்பேரலையின் பின்னான கட்டமைப்பு என்பவற்றில் தடைகளை ஏற்படுத்துவது யார்? போன்ற ஒரு சில காரணங்களையாவது இங்கிலாந்து கவனத்தில் கொண்டிருந்தால் அது இவ்வறிக்கை வெளியீட்டைத் தவிர்த்திருக்க முடியும். மேற்குறிப்பிட்ட சிறிலங்காவின் அரச ஆதரவு ஆயுதக்குழுக்களின் பேரிலான தாக்குதல்களிலிருந்துஇ நிழல் யுத்தத்தில் இருந்து தப்புவதற்கானஇ அவற்றைத் தடுப்பதற்கான தற்காப்பையே தமிழர் தரப்பு மேற்கொண்டு வருகிறது. எனவே இங்கிலாந்து தனது அறிக்கையில் குறிப்பிடுகின்ற பயங்கரவாதத்தை (?) தூண்டிவிட்ட சக்தி சிறிலங்கா அரசே என்பதும் தமிழர் தரப்பு அதனை எதிர்கொள்வதற்கான தற்காப்பையே மேற்கொள்கிறார்கள் என்பதும் அதற்குப் புரிய வைக்கப்பட வேண்டிய விடயங்கள். ஆகவேதான் தமிழர்களின் வெற்றிக்கான நியாயத்திற்கான திருப்புமுனையாக இந்த அறிவிப்பை மாற்ற வேண்டிய உடணடிச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனையும் சார்ந்து நிற்கிறது. புலம்பெயர்ந்த தேசங்களில் தனது சுய அடையாளத்தை இழக்காமல் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் இதில் இணைந்து செயற்பட வேண்டிய தேவையை அது ஏற்படுத்தியிருக்கிறது. அத்தோடு காரண காரியங்களை தகுந்த ஆதாரங்களோடு விளக்கும் வல்லமை பெற்ற சக்தியான தமிழர் தரப்பு இந்த விடயத்திலும் தமது இராஜதந்திரப் வழிமுறைப் பேணலை மேற்கொண்டு சிறிலங்காவின் சமாதான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆதாரங்களோடு விளக்கி சிறிலங்கா அரசையே குற்றவாளியாகச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஆழிப்பேரலையின் பின்னான கட்டமைப்பு போன்ற ஒப்பந்தங்களை சர்வதேச அனுசரணையுடன் தமிழர் தரப்பு மேற்கொண்டதானது நாம் விரும்பியோ விரும்பாமலோ இதர விடயங்களையும் அவர்களிற்கு விளக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்குள் எம்மைத் தள்ளியுள்ளது. எனவே இந்த முயற்சியைச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். அத்தோடு அனைத்துத் தமிழர்களும் தமிழர்களின் அமைப்புக்களும் இந்தப் பணியை தமது சொந்தப் பணியாக ஏற்று ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தால் போரே முடிவாக அமையும் என்பதனை விளக்குவதோடு சிறிலங்காவின் கபடத் தன்மையை வெளிக்கொணரும் செயற்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் வதியும் நாடுகளின் அரசுகளை வெளியுறவு அமைச்சகங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் பகுதிப் பாராளுமன்ற உறுப்பினரைச் சந்தியுங்கள். உங்களுக்கு தெரிந்த பிரமுகர்கள் உங்கள் தொழில்நிறுவன அதிபர்கள் என இன்னொரன்ன வழிகளிளெல்லாம் உங்கள் கருத்துக்களை வெளிக்கொணருங்கள். நீங்கள் மாத்திரமல்லாமல் உங்கள் உறவினர்கள் மற்றும் உங்கள் பள்ளிப்பிள்ளைகள் மூலமாகவும் இந்த முயற்சியை மேற்கொள்ளுங்கள். வெற்றியென்பது எமக்கு எவ்வளவு அருகில் உள்ளது என்ற உண்மையை அப்போது உணர்வீர்கள். வரலாறு சில சந்தர்ப்பங்களைத் தானாகவே தந்து இனங்களின் விடுதலைக்கு வழிவகுத்து நிற்கும். அந்த வகையில் தமிழினத்தின் விடுதலைக்கான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான சந்தர்ப்பத்தை இங்கிலாந்து தானாகவே தந்து நிற்கிறது. போரா? சமாதானமா? தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிவகுக்கும் என்பதனை தீர்மானிக்கின்ற பொறுப்பை இங்கிலாந்தினூடாக அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மேற்குலகிற்கும் வழங்கி நிற்கிறது. எனவே தடையகற்றல் என்பதே போரற்ற நிரந்தர சமாதானத்தையேற்படுத்தும் என்பதையும் தடையேற்பட்டால் போரே நிரந்த சமாதானத்தைப் பிறப்பிக்கும் என்பதையும் விளக்க வேண்டிய தார்மீகக் கடமையில் நாமும் இணைவோம். இன்றே செயற்படுவோம். http://www.eelampage.com/?cn=20435 - Netfriend - 10-04-2005 'நீ(தியா?)யுமா, ஐரோப்பிய ஒன்றியமே?" புலிகள் மீதான தடை அதிர்ச்சியை தெரிவிக்க பின்வரும் Post Card - வினித் - 10-04-2005 <b>புலிகள் மீதான தடை -ஐரோப்பிய யூனியனுக்கு உங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை தெரிவிக்க பின்வரும் Post Card ஐ நிரப்பி அனுப்பவும்</b> <img src='http://img323.imageshack.us/img323/9476/eu13xh.jpg' border='0' alt='user posted image'> http://sooriyan.com/index.php?option=conte...id=2354&Itemid= |