![]() |
|
கண்கள் கலயை நோக்கட்டும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: (தீவிர) இலக்கியம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=32) +--- Thread: கண்கள் கலயை நோக்கட்டும் (/showthread.php?tid=3069) |
- narathar - 10-06-2005 ம்ம்ம் உண்மை நல்லாத்தான் உறைக்குது,கவிதை வரிகளின் தாக்கம் எவ்வளவு தீர்க்கமானது என்பதற்கு மேலுள்ள 'சிறப்பு விமர்சனங்கள்' நல்ல சான்று.மேலும் நான் இங்கு இந்தக் கவிதயை இட்ட பின்னே டிசேயின் தளத்தில் மேற்குறிப்பிட்ட சிறப்பு விமர்சனம் இடப்பட்டுள்ளது.மிகுதியை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். சரி இடப்பட்ட மிகுதி 16 பின்னூட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்று பார்ப்போமா.. பதிந்தது:karthikramas Superb!!!! 26.9.2005 By Anonymous, at September 26, 2005 2:22 PM This post has been removed by the author. By karthikramas, at September 26, 2005 2:24 PM THanks for this post! By Thangamani, at September 26, 2005 2:53 PM ப்ரோ, சன்னாசி மாதிரி உமக்கும் இனி அருமை பின்னூட்டத்திலே சொல்லப்போவதில்லை; ஒத்துவராததாயிருந்தால்மட்டும், எருமை என்று சொல்ல எண்ணம் By -/பெயரிலி., at September 26, 2005 3:21 PM நன்றாகவுள்ளது. நல்ல கவிதை என்றெல்லாம் சொல்லி வாய் உளையுது. இப்படி வாய் உளையச் சொல்ல ஆசைதான். ஆனாலும் அவற்றையெல்லாம் மனதில் சொல்லிக்கொள்ளப்போறேன். நானும் பெரியலி ஸொரி, பெயரிலி ப்ரோவை இந்த விதயத்தில் பின்பற்றவுள்ளேன்! தொடர்ந்து கவி எழுதுக நண்ப! -மதி By மதி கந்தசாமி (Mathy), at September 26, 2005 3:57 PM நண்பரே: இன்று முழுக்க ஒரு பயிற்சியில் இருந்தேன். இடைவேளையில்" சுத்தமாயிருக்கத்தான் ஆசை" என்று கவிதை (!) எழுதி இருந்தேன் என்னார் என்பவருடைய பின்னூட்டத்திற்கு பதிலாக. உங்களின் கவிதையை படித்தபின், நல்லவேளை தமிழை அவமதிக்காமல் இருந்தேன் என்று சந்தோஷப்படுகிறேன். நல்ல மொழி ஆளுமை இருக்கிறது உங்களிடம். By தேன் துளி, at September 26, 2005 4:45 PM obsessive about the past, oblivious to the future என்று ஒரு பதம் சொல்வார்கள். எவருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, இந்தமாதிரிக் கோமாளிக் கூட்டத்துக்கு வெகு கச்சிதமாகப் பொருந்தும். இந்த pathological voyeurismன் உச்சகட்டம், சுந்தர் சி.யை வம்புக்கு இழுப்பது (சுட்டியைக்கூடத் தர இஷ்டமில்லை இங்கே)! தமிழ்க் கலாச்சாரத்துக்கு அற்புதமான உதாரணம் இதைவிட வேறென்ன வேண்டும். By சன்னாசி, at September 26, 2005 5:50 PM //இந்த pathological voyeurismன் உச்சகட்டம், சுந்தர் சி.யை வம்புக்கு இழுப்பது (சுட்டியைக்கூடத் தர இஷ்டமில்லை இங்கே)! தமிழ்க் கலாச்சாரத்துக்கு அற்புதமான உதாரணம் இதைவிட வேறென்ன வேண்டும். // இம்மாதிரி இழுப்பார்கள் என்று சிறிதும் யோசிக்காமல், வேசம் போடாமல் தனது கருத்தைச் சொன்ன குஷ்புவின் நேர்மையில் துளிகூட இல்லாததுகள் தான் ஒழுக்கத்தை, கற்பை, பண்பாட்டை மீள்வரையறை செய்கின்றன. By Thangamani, at September 26, 2005 7:38 PM //குஷ்புவின் நேர்மையில் துளிகூட இ // அதே மாதிரி "நேர்மையாய் " தன் கருத்தை தங்கரும் சொன்னார் என்று ஒப்புக்கொள்வீர்களா தங்கமணீ ? By இராஜேஷ், at September 26, 2005 7:48 PM டிசே, உங்கள் கோபமே எனக்கும் - இன்னும் காட்டமாய். By Kannan, at September 26, 2005 11:07 PM டீசே, நியாயமான கோபத்தின் அற்புதமான வெளிப்பாடு இந்த கவிதை. நன்றி. By Sudharsan, at September 27, 2005 2:55 AM கார்த்திக், தங்கமணி, பெயரிலி, மதி, பத்மா, சன்னாசி, இராஜேஷ், கண்ணன் மற்றும் சுதர்சன், உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. ..... பத்மா, நீங்கள் எழுதிய கவிதையையும் பதிவில் போட்டால், நாங்களும் வாசிக்கலாமே. By டிசே தமிழன், at September 27, 2005 10:30 AM இராஜேஷ், தங்கமணியின் கடைசிப் பதிவை வாசித்தால் தஙகமணி என்ன கூற வருகின்றார் என்பது புரியும். மற்றப்படி தஙகர்பச்சன் அப்படிக் கூறியதற்கு அவருக்கு கண்டனம் தெரிவித்தவன் என்றவகையில் சிலவற்றை நானும் கூறலாம் என்று நினைக்கின்றேன். முதலில் தஙகர்பச்சன் சோ, விசுவைப் போன்று stereo typedயாய் தொடர்ந்து பெண்கள் பற்றி 'முற்போக்கான' கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தவர் அல்ல. ஏன் இத்தனை எதிர்ப்பு தஙகர்பச்சன் கூறியதற்கு வந்ததென்றால் அவர் மீது நாம் கொண்ட அபிப்பிராயம் வேறு மாதிரியானது. அவரா இப்படிச் சொன்னார்? என்ற ஆதங்கத்தில் எழுந்ததே. ரோசாவசந்த் கூட தனது பதிவில் குறிப்பிட்டிருப்பார், தங்கர்பச்சனின் பேச்சை நேரடியாக ஒருதடவை கேட்டவன் என்றவகையில், பச்சன் இப்படியான அபத்தமான கருத்தைக் கூறியிருப்பார் என்று நம்புவது கடினமாய்த்தான் இருக்கிறது என்று. நம்மில் அனேகருக்கு ஆணாதிக்க, சாதியக் கூறுகளில் இருந்து வெளியேற விரும்பினாலும் எம்மையறியாமலே சிலவேளைகளில் அபத்தமான கருத்துக்கள் வெளிவரத்தானே செய்கின்றது (பிழைகளை ஒத்துக்கொண்டபடி மேற்கொண்டு நகர்ந்தால்தான் நாம் விரும்பிய இடங்களை அடையமுடியுமல்லவா?) உண்மையில் தங்கர்பச்சன் அபத்தமான கருத்தைச் சொன்னபின் தனது பிழையை ஏற்றுக்கொண்ட நேர்மை(அந்த நேர்மை கூட இங்கே பலருக்கு இல்லை என்பது உண்மை) பிடித்திருந்தது. திருமாவளவன் கூட விகடனில் கூறியிருப்பார், இந்த விடயத்தில் தனக்கு ஆதரவாய் எதுவும் பேசக்கூடாது என்று தங்கர் கேட்டிருந்தார் என்று. ..... குஷ்பு கூறியதை நான் புலம்பெயர் வாழ்வோடும் கூடத்தான் ஒப்பிட்டுப்பார்த்தேன் (அதைத்தான் மேலெயுள்ள 'கவிதை(?)'யிலும் இங்குள்ள பருவங்களை வைத்தே எழுதினேன்). அண்மையில் இங்கே வாசித்த ஒரு செய்தியில் பெரும்பான்மைக்கு அதிகமான ஆண்கள்/பெண்கள் பதின்மத்திலேயே(13 வயதளவில்) உடலுறவில் ஈடுபட விளைகின்றார்கள் என்று. இனி பதின்மத்தில் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்று அறிவுரை கூறுவதைவிட, பாதுகாப்பாய் உறவில் ஈடுபடுங்கள் என்று கூறுவதே பொருத்தமானது என்று, இவை குறித்து ஆய்வு செய்த வைத்தியக்குழு ஒன்று கூறியிருந்தது (கிட்டத்தட இதே கருத்தைத்தான் குஷ்புவும் கூறியிருந்தார்). இதில் குறிப்பிடப்படும் பெரும்பான்மைக்குள்ளும் எமது பிள்ளைகளும் அடங்கத்தானே போகின்றார்கள். அவர்கள் அப்படிப் போய்விடுவதால் எமது தமிழ்ப்பிள்ளைகள் இல்லை என்றாகிவிடுமா? .......... குஷ்பு ஒரு கருத்துக் கூறியிருக்கின்றார். அது சரியா/பிழையா என்று வேண்டுமானால் நாம் விவாதிக்கலாம். அதைவிட்டு ஏன் அவருடன் சம்பந்தபட்ட பிறரையோ/பிற விடயங்களையோ இழுக்கவேண்டும்? தஙகர்பச்சன் விடயத்தில் இப்படி எதையாவது நாம் செய்திருக்கின்றோமா? குஷ்புக்கு மட்டுமல்ல, எழுத்து உட்பட எல்லாக் கலைகளுக்கும் வரும் பெண்களை சுதந்திரமாக கருத்துச் சொல்ல எங்கே விட்டிருக்கின்றோம்? திருமணமான ஒரு பெண் திருமணத்தைப் பற்றி விமர்சனம் செய்தால்,உடனே அவர் கணவனோடு நல்லாய் இல்லை என்றுதானே நினைத்துப் பேசத் தொடங்குகின்றோம்? ஏன் ஒரு பெண் பிறருக்காய் பாட/பேச/எழுத முடியாதா என்ன? இன்று எழுத வருகின்ற பெணகள் தமிழ் நாட்டிலும், புலம் பெயர் தேசங்களிலும் எவ்வளவு மன உளைச்சல்/வார்த்தை வன்முறைக்குள் (சுகிர்தராணி போன்றவர்களுக்கு தொலைபேசியிலும் 'ஆண்மைத்தனம்'காட்டுவதென) வாழ்ந்துகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டேதானே இருக்கின்றோம்? ..... மேலும் தமிழ்க்கலாச்சாரத்தைப் பேசப்போகின்றோம் என்றால், தமிழர்களுக்கு சாதிகளும், திருமணத்தில் தாலி கட்டும் முறைகளும் இருந்ததில்லை என்றுதான் நான் வாசித்தவரையில் அறிந்து வைத்திருக்கின்றேன். வேண்டுமென்றால் அவற்றை விவாதிப்பதிலிருந்து/ சமூகத்திலிருந்து இல்லாமல் ஒழிப்பதிலிருந்து ஆரம்பிப்போம். By டிசே தமிழன், at September 27, 2005 12:16 PM கவிதையின் பேசுபொருள், அதை சொல்லிய விதம் மிக மிக அருமை DJ By kulakaddan, at September 27, 2005 1:04 PM நன்றி குழைக்காட்டான். By டிசே தமிழன், at September 27, 2005 11:22 PM hello stop writing nasty words in ur poem. what do u think about peoples (readers).....don't think u writing in right way....STOP NASTY WORDS By Thamilachchi, at September 29, 2005 9:09 PM பின்னூட்டத்துக்கு நன்றி தமிழச்சி. உங்களுக்கு ஒருவித்மான பார்வை இருப்பதுபோல எனக்கும் வேறுவிதமான பார்வை இருக்கும்தானே. ஆகையால் என்னால் முடிந்ததை நான் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருப்பேன் போலத்தான் தோன்றுகின்றது. உங்களுக்கும் பிடித்தமானதையும் ஒருந்நாள் எழுதிவிடாம்லா போய்விடப்போகின்றேன் :-)? By டிசே தமிழன், at September 29, 2005 10:59 PM பதிந்தது:nii oru luusu போடா லூசா கவிதையா இது.... எருமை மாடு பன்னி... 2.10.2005 By Anonymous, at October 02, 2005 7:56 AM post at www.thamizmanam.com Current rating is: (இதுவரை 17 பரிந்துரைகள்) Click on the stars for voting pad. . - Birundan - 10-06-2005 எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 02, 2005 12:23 pm Post subject: கண்கள் கலயை நோக்கட்டும் narathar Wrote:ம்ம்ம் உண்மை நல்லாத்தான் உறைக்குது,கவிதை வரிகளின் தாக்கம் எவ்வளவு தீர்க்கமானது என்பதற்கு மேலுள்ள 'சிறப்பு விமர்சனங்கள்' நல்ல சான்று.மேலும் நான் இங்கு இந்தக் கவிதயை இட்ட பின்னே டிசேயின் தளத்தில் மேற்குறிப்பிட்ட சிறப்பு விமர்சனம் இடப்பட்டுள்ளது.மிகுதியை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். சரி இடப்பட்ட மிகுதி 16 பின்னூட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்று பார்ப்போமா.. - narathar - 10-06-2005 பிருந்தன் என்ன சொல்லுறீங்க என்று விளங்கேல்ல நான் குறிப்பிட்டது இந்த சிறப்பு விமர்சனத்தை,அது இடப்பட்டது Oct 2. பதிந்தது:nii oru luusu போடா லூசா கவிதையா இது.... எருமை மாடு பன்னி... 2.10.2005 By Anonymous, at October 02, 2005 7:56 AM - Thala - 10-06-2005 நாரதா நண்பர்களுக் கிடையில இப்படியானதை பேசிக்கருதாடினாலும் பொதுவான இடங்களில் கருத்தாடுகிற அளவு நாங்கள் இன்னும் பக்குவம் அடயேல்ல என்பதைத்தான் அவர் சிவப்பால குறியீடு போட்டு விளக்க முற்பட்டிருக்கிறார் போல... எனக்கும் அந்தளவு பக்குவம் வர இல்லை...... என்னாலும் தெளிவான கருத்து சொல்ல முடியாது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Birundan - 10-06-2005 [quote=narathar]பிருந்தன் என்ன சொல்லுறீங்க என்று விளங்கேல்ல நான் குறிப்பிட்டது இந்த சிறப்பு விமர்சனத்தை,அது இடப்பட்டது Oct 2. பதிந்தது:nii oru luusu போடா லூசா கவிதையா இது.... எருமை மாடு பன்னி... 2.10.2005 By Anonymous, at October 02, 2005 7:56 AM எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 02, 2005 12:23 pm Post subject: கண்கள் கலயை நோக்கட்டும் - narathar - 10-06-2005 ம்ம் நேரத்தை கவனிக்கவைல்லை ஆனா இந்த நேரம் என்ன நேரம்,உள்ளூர் நேரமா? அல்லது GMT யா? சரி மிகுதி பின்னூட்டங்கள் கவிதை நல்லா இருக்கு எண்டு தானே சொல்லுகின்றன? அத்துடன் அவை ஆளமான விமர்சனக்களாகவே இருக்கின்றன.மேலுள்ள விமர்சனத்தை நீங்க சிறந்த விமர்சனம் என்டு சொல்லுவீங்களா? - Birundan - 10-06-2005 Thala Wrote:நாரதா நண்பர்களுக் கிடையில இப்படியானதை பேசிக்கருதாடினாலும் பொதுவான இடங்களில் கருத்தாடுகிற அளவு நாங்கள் இன்னும் பக்குவம் அடயேல்ல என்பதைத்தான் அவர் சிவப்பால குறியீடு போட்டு விளக்க முற்பட்டிருக்கிறார் போல... எனது கருத்து கருத்துகளை கருத்துக்களால் கதைப்போம் நேரடியான அல்லது மறைமுக தனிநபர் தாக்குதல்கள் ஏன்,அதை தவிர்பது காத்திரமான கருத்தாடலுக்கு வலுச்சேர்க்கும் அல்லவா? என் கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும். - Birundan - 10-06-2005 narathar Wrote:ம்ம் நேரத்தை கவனிக்கவைல்லை ஆனா இந்த நேரம் என்ன நேரம்,உள்ளூர் நேரமா? அல்லது GMT யா? ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், கருத்துக்கூற அனைவருக்கும் உரிமை உண்டல்லவா? அதை ஏற்பதும் ஏற்காததும் படிக்கும் வாசகன் பொறுப்பு அல்லவா. - narathar - 10-06-2005 ம்ம் பிருந்தன் எதை தனி நபர் தாக்குதல் என்கிறீர்கள்.எனக்கு விளங்கவில்லை.ஒருவர் இன்னொருவரின் ஒழுக்கம் பற்றித் தான் ஒரு கனவானைப் போல் கதைப் பதற்கு முன்,தனது ஒழுக்கத்தைப் பற்றியும் சிந்திப்பது நலம்.மேலுள்ள கவிதை அதைத் தான் சுட்டி நிக்கிறது. நீ கல்லை எறிய முதல் உன்னக்கு அந்த கல்லை எறிவதற்கான தகுதி இருக்கா என்று பார்க்க வேண்டும்.இதை யேசு நாதரும்(?) ஒரு பெண்ணை விபச்சாரி என்று கல்லெறிந்தவர்களிடம் சொன்னர் என்று எங்கோ படித்த நாபகம். இங்கே களத்தில் குஸ்பு பற்றியும் இன்னும் பல்வேறு தனி நபர் பற்றியும் பல்வேறு வகை யான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.அவர்களுக்கு இங்கே அதற்கு பதில் சொல்ல முடியாது.இவை தனி நபர் தாக்குதல்கள் போல் தெரியவில்லயா.அவர் முன் வைத்த கருத்துக்களை விமர்சிக்காமல் அவர் விபச்சாரி என்றும் மானக்கெட்டவர் என்று விமர்சிப்பது எவ்வகையில் நியாயம்.அது போலவே சீர்திருத்தம் கதைத்தால் இவர்கள் ஒழுக்கம் அற்றவர்கள் என்றும்,பெண்ணிய விடுதலை கதைத்தால் இவர்கள் விபச்சாரிகள் ,என்றும் கருத்தாடுவது தனி நபர் தாக்குதல் ஆகாதோ?உங்களின் ஒழுக்கத்தை கேள்வி ஆக்கினால் மட்டுமா தனி நபர் தாக்குதல்?அதுவும் நீங்கள் இங்கே களத்தில் இட்ட கருத்துக்களை மேற்கோள் காட்டிச் சுட்டிக்காட்டினால்.ஆரோக்கியமான கருத்தாடலுக்கு அடிப்படை உண்மை பேசுதல்,அதற்கான முதிர்ச்சி உங்களுக்கு இல்லாவிட்டால் அதற்கு நான் என்ன செய்வது? - sinnakuddy - 10-06-2005 நாரதர் சொல்லுவது போல் கருத்துகளை சீர்தூக்கி பார்க்கும் முதிர்ச்சியின்மையையும் கருத்துகளின் உண்மைகள் உறைக்கின்றபோது அவர்களுடைய கருத்துகள் நிலையியல் தன்மையால் அம்மணமாகின்ற போது இயலாவளியின் கடைசி கூச்சல் தான் இவை.... இந்த கவிதையை இங்கு இட்ட நாரதருக்கு வாழ்த்துக்கள் - இவோன் - 10-06-2005 நன்றி நாரதர். நீங்கள் இங்கே இக்கவிதையைப் போட்டபின்தான் அந்தக் கடைசிப் பின்னூட்டம் அங்கே போடப்பட்டதென்பது என்புரிதல். ஏனென்றால் நான் பார்க்கும்போது அப்பின்னூட்டம் அந்தப் பதிவிலில்லை. மேலும் முன்பு போடப்பட்ட பின்னூட்டங்களைச் சொல்லியோர் என்னைப்பொறுத்தவரை விளையாட்டுப் பிள்ளைகளில்லை என்பது என்புரிதல். குறிப்பாக கார்த்திக்ரமாஸ், தங்கமணி, பெயிரி, மதிகந்தசாமி, பத்மா அரவிந் போன்றவர்களின் எழுத்துக்களும் சமூகத்தில் அவர்களின் நிலையும் உயர்வானவையே. (முக்கியமாக பெண்கள் இக்கவிதையை வரவேற்றிருப்பது கவனிக்கத்தக்கது. அதுவும் தம் அடையாளங்களைப் பகிரங்கப்படுத்தி எழுதும் அப்பெண்களின் இக்கவிதைக்கான வரவேற்பு கவனிக்கத்தக்கது.) சின்னக்குட்டியரே, கலக்குங்கள். - kuruvikal - 10-06-2005 <b>கலையே உச்சரிக்க கற்றறியாத காவாலிக் கூட்டம் முன் காவியம் பாடிக் கவித் தமிழ் தந்த கம்பனும் காமுகன்...! சிந்தையைக் கருவாக்கி சிற்பம் செதுக்கி சிலையான சிற்பியும் சில்லறைகள் முன் சில்மிசக்காரன்..! அஜந்தாவும் சிகிரியாவும் தாங்குவது உலகப் பிரசித்தம் சித்தம் கலங்கியதுகள் சித்திரத்திலும் தேடுவது தங்கள் சில்லறைக்கு தீனி...! உழைத்துக் களைத்து ஊர் போக ஓடும் உழைப்பாளிக்கு ஊரில் பஸ் பிடிக்கவே நேரமில்லை ஊர் சுத்தும் தெருநாய்கள் உரசலுக்கு தேடுது பஸ்களில் ஊத்தை...! பள்ளியிலே பாடம் வைத்து படிப்படியாய் விளக்குகிறார் பாலர் முதல் பட்டதாரி வரை..! படித்ததை விட்டு பரதேசிக் கூட்டம் பார் பேசுவதை..! . நெறியிழந்த நெருடலில் உளறுதுகள் சிலது உலகில் உள்ளதெல்லாம் தம் போலாம்..! உள்ளத்தால் அடங்கியது உன்னிலும் மேல் உலகில் மிக அதிகம் உணர்ந்து திருந்து இல்லை... உறைத்தால் ஒதுங்கு தெருவோரக் குப்பையாய்...!</b> குறித்த ஒரு கவிக்குப்பைக்குள் புரளும் உண்ணிகளுக்காய்...ஓர் மனிதனின் குரல்...! (இது குருவிகளின் கிறுக்கல் அல்ல..பல மனிதர்களின் கூட்டு மொழி....! தேவை கருதி தரப்பட்டுள்ளது..!) ![]() Bye bye..! :evil: :twisted: - stalin - 10-06-2005 http://www.yarl.com/forum/viewtopic.php?t=4468 - narathar - 10-06-2005 கலாசார நாட்டாமைகள் எப்போதுமே கலாசார நாட்டாமை என்பது அடிப்படைவாதத்தின் ஒர் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. அண்மைக் காலத்தில் அத்தகைய நாட்டாமை மனோபாவம் ஆப்கானிஸ்தானில் தாலிபானிடமும், மும்பையில் சிவ சேனாவிடமும், வெளிப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். இந்தியாவின் பல பகுதிகளில் 'இந்துக் கலாசாரத்தை'க் காப்பதாகச் சொல்லிக் கொண்டு சங் பரிவார் அமைப்புக்கள் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்திய கிளர்ச்சிகளும் நமக்குப் புதிதல்ல. முற்போக்கான சிந்தனைகள் பலவற்றிற்கு, சமூக நடைமுறைகள் மீதான விமர்சனங்களுக்கு, இடமளித்த வரலாறும் பெருமையும் கொண்ட தமிழகத்தில், சமீப காலமாக, இத்தகைய கலாசார நாட்டாமை தலையெடுக்கத் துவங்கியிருப்பது கவலை அளிக்கிறது. பெரியார் வாழ்ந்த மண்ணில், பெரியாரைத் தங்கள் ஆதர்சமாக ஏற்றுக் கொண்டவர்கள் எனத் தங்களை அறிவித்துக் கொண்ட சில தலைவர்களின் நேரடி/ மறைமுக ஆசிகளோடு, இந்தக் கலாசார நாட்டாமை நடைபெறுவது திகைப்பளிக்கிறது. நடிகை குஷ்பு தொடர்பாக நடைபெற்றுவரும் சர்ச்சை ஓர் உதாரணம். ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், உருவ பொம்மை எதிர்ப்புக்கள், கீழ்நிலை நீதி மன்றங்களில் ஏறத்தாழ 20 வழக்குகள் எனத் தமிழகமே கொந்தளித்துப் போயிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தமிழக ஊடகங்கள் சில முயன்று வருகின்றன. அப்படி ஆட்சேபகரமாக குஷ்பு என்ன சொல்லிவிட்டார்? "பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செகஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்" இதில் ஆட்சேபத்திற்குரியது என்ன? நமது சமூகத்தில், திருமணங்களின் போது, ஒரு பெண்ணை, virginity என்ற அம்சத்தை முதன்மைப்படுத்தி எடை போடும் வழக்கமிருக்கிறது; ஆனால் ஒரு பெண்ணை அதனை மட்டுமே கொண்டு எடை போடக் கூடாது; அவலது அறிவாற்றல், செயல்திறன், சிந்தனைப் போக்கு, சமூக அக்கறை போன்ற பல்வேறு விஷயங்களும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். கல்வியின் மூலம் உள்ளொளி பெற்ற ஓர் இளைஞன் அதைத்தான் செய்வான். திருமணத்திற்கு முன்பு செகஸ் வைத்துக் கொள்கிற பெண்கள் உஅடல் நலன்,சமூக நலன் கருதி சில எச்சரிக்கைகளைக் கைக்கொள்வது நல்லது என்கிற கருத்தில் பெண்கள் மீதான கரிசனம் வெளிப்படுகிறதா அல்லது அவர்களை இழிவுபடுத்தும் மனம் வெளிப்படுகிறதா? மணவிலக்குப் பெறுகிறவர்களின் எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகரித்து வருகிற காலகட்டம் இது. பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தச் சமூகத்தில் கன்னித்தன்மை ஒன்றை மட்டுமே முன்நிறுத்தி பெண்ணை மணத்திற்குத் தகுதியுள்ளவளாகக் கருதுவது என்பது சரிதானா? விதவைகளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்பதைப் போன நூற்றாண்டிலேயே வலியுறுத்திய மண் தமிழ் மண். பாரதியார், பெரியார் போன்றவர்கள் விதவைகள் மறுமணத்தை முன் வைத்து வாதிட்டபோது அதைக் கண்டித்த சநாதானவாதிகளுக்கும், இன்று கன்னிமையை வலியுறுத்திப் போராடுபவர்களுக்கும் சாராம்சத்தில் என்ன வித்தியாசம்? தமிழ்ப் பெண்களை கற்பிழந்தவர்கள் என்று சொல்லி விட்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. கற்பு என்கிற கருத்தாக்கமே பெண்களை அடிமைப்படுத்தும் நோக்கில் உருவானது என்பது ஒரு புறம் இருக்கட்டும்; ஆண்களின் பங்களிப்பு இல்லாமல் பெண்கள் 'கற்பிழக்க' முடியாது என்பதும் இருக்கட்டும். கற்பு என்பது உடலைச் சார்ந்ததா, மனதைச் சார்ந்ததா என்ற கேள்விகளும் இருக்கட்டும். குஷ்பு சொல்லியதில் கற்பு பற்றி ஏதேனும் இருக்கிறதா? எந்த இடத்திலாவது தமிழ்ப் பெண்கள் என்று குறிப்பிட்டிருக்கிறாரா? அவர் சொல்வது எல்லாப் பெண்களுக்கும் பொருந்துவது அல்லவா? இதைத் தமிழ்ப் பெண்களுக்கு மாத்திரம் உரியதென்று சித்தரிப்பவர்கள் அல்லவா தமிழ்ப் பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள்?. கன்னித்தன்மை பற்றிய கருத்தைத்தான் கற்பு என்று கிளர்ச்சியாளர்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பகுத்தறிவாளர்கள், கற்பு என்பது பெண்ணை அடிமை செய்ய உருவாக்கப்பட்ட கருத்து என்று எண்ணுகிறவர்கள், பெரியார் சொல்கிற 'நிர்பந்தக் கற்பு' என்ற கருத்தை ஏற்பவர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கற்பைப் பற்றிய ஒரு விவாதத்தை உருவாக்கி சமூகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கல்லவா முயற்சிக்க வேண்டும்? ஆனால் அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆசி வழங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். "எந்த ஒரு காரணத்திற்காக ஆனாலும், ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம், முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ, மற்ற மூன்றாமவர்கள் யாராவது பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்." என்ற பெரியாரின் கருத்தை நினைவூட்டி நான் அக்டோ பர் இரண்டாம் தேதி சண்டே எகஸ்பிரசில் (இந்தியன் எக்ஸ்பிரசின் ஞாயிறுப் பதிப்பு) எழுதிய கட்டுரையைச் சுட்டிக்காட்டி, செய்தியாளர்கள் அக்டோ பர் 4ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது டாக்டர்.ராமதாசிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் அது ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பெரியார் சொன்னது என்று மழுப்பியிருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் அக். 5 2005 பெரியாரின் கருத்து இருபாலருக்கும் பொதுவானது, ஆண்களுக்கு மட்டுமானதல்ல என்பது அவரது வார்த்தைகளைப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும். " ஒரு ஆணின் அல்லது பெண்ணின்", "மற்றொரு ஆணோ அல்லது பெண்ணோ" என்று தெள்ளத் தெளிவாக, திட்டவட்டமாகப் பெரியார் எழுதுகிறார். இதில் ஆணாதிக்கம் எங்கிருக்கிறது? இதை ஆணாதிக்கத்திற்கு எதிராகத்தான் சொன்னார் என்பது அவரைத் திரிப்பதல்லவா? குஷ்புவை முடக்குவதற்காகப் பெரியாரைத் திரிக்கலாமா? பிரசினை, கருத்துக்கள் அல்ல, கருத்துக்களை வெளியிட்டவர்தான். கூர்ந்துபார்த்தால் குஷ்பு மீது பலருக்கு பல்வேறு காரணங்களுக்காக இருந்துவரும் ஆதங்கங்கள், மனத்தாங்கல்கள்களால், கத்தி செருக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது புலனாகும். அதுதான் ஆபத்தானது. தன் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் கருத்துரிமையை நசுக்குவது என்பது, வன்முறையை ஏவிவிடுவது என்பது, அடிப்படைவாதத்தின் குணாம்சம். தங்கள் கலாசாரம் மேன்மையானது என எவரும் பெருமை கொள்வதில் தவறில்லை. ஆனால் கலாசாரத்தின் மீது பெருமையும் அதன் காரணமாக அதன் மீது கரிசனமும் கொண்டவர்கள், அது சறுக்கல்களை சந்திக்க நேரும் போது கவலை கொள்வார்கள்.'நாமம் இதுத் தமிழரெனக் கொண்டிங்கு வாழ்தல் நன்றோ?' என்று மகாகவி துயருற்றதைப் போல. தமிழ்நாட்டின் செகஸ் மனோபவம் இன்று பெருமை கொள்வது போல் இருக்கிறதா? இந்தியாவில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோ ர் தமிழகத்தில் வசிக்கிறார்கள். எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கைக் கடந்த ஐந்தாண்டுகளில், அதற்கு முன்னிருந்த 10 ஆண்டுகளைவிடப் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. ஐந்து வயதுச் சிறுமியைப் பலாத்காரம் செய்த ஆசிரியர் பற்றியும், ரயிலில் உடன் பயணம் செய்து கொண்டிருந்த 60 வயதுக் கிழவியைப் பலாத்காரம் செய்த இளைஞர்கள் பற்றியும் செய்திகள் வருகின்றன. வீதி முனையில் ஈவ் டீசிங் நடக்கிறது. பெண்களைத் துரத்தி அவர்களது பால் உறுப்புக்களை வர்ணித்து இரட்டை அர்த்தத்தில் பாடல் பாடி நடிக்காத ஹீரோவே கிடையாது. எம்.ஜி.ஆரிலிருந்து சிம்பு வரை இது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்தப் பாடல்கள் அலுவலகங்களிலும், வீதி முனைகளிலும் கல்லூரி வாயில்களிலும் எதிரொலிக்கின்றன. குஷ்புவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தலைவர்கள், 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா, புள்ளை குட்டிப் பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா' என்பதைப் போன்ற பாடல்களைத் தடைசெய்யவேண்டும் என்று அறிக்கை கூடவிடவில்லை. குறைந்த பட்சம் தனது இயக்கதில் இருப்பவர்களைக் கூட குருவி கடிச்ச கொய்யாப்பழங்களைத் தவிர்க்கும்படி அறிவுரை சொல்வதில்லை. ஒரு புறம்சினிமா ஆபாசமாகிவிட்டது என்று சொல்லிக் கொண்டே அதில் நடிக்கிறார்கள். சினிமாக்களுக்கு முக்கியத்துவம் தரும் பத்திரிகைக்களுக்கு/ தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் தரமாட்டோ ம், அதில் எழுத மாட்டோ ம் என்ற அறிவிப்பையாவது குறைந்த பட்சம் அவர்களால் வெளியிடமுடியுமா? பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் அவர்கள்தான் முதலில் அழைக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் அவசரமாகவும் ஆக்கபூர்வமாகவும் செய்யப்பட வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. திருப்பூர் சாயக் கழிவுகள் பிரசினை ஓர் உதாரணம். கங்கை கொண்டான் கோகோ கோலா தொழிற்சாலை ஓர் உதாரணம். கிராமங்களை எட்டாத மருத்துவ வசதிகள் ஓர் உதாரணம்; நகர்ப்புற வீட்டு வசதி ஓர் உதாரணம்; கல்வி வணிகமயமாதலின் பின் விளைவுகள் ஓர் உதாரணம். இப்படிப் பல. தலைவர்கள் அவற்றில் கவனம் செலுத்தட்டும். அவற்றைவிட, குஷ்பு, கல்லூரி மாணவர்களின் ஆடைகள், திரைப்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இவை முக்கியமானவை அல்ல. அன்புடன் மாலன் http://www.thisaigal.com/october05/anbudanuni.html - narathar - 10-06-2005 "மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதற்கெல்லாம் 'இது காதல்ல' 'அது காதலுக்கு விரோதம்' 'அது காம இச்சை' ' இது மிருக இச்சை' 'இது விபச்சாரம்' என்பன போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவிதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால், அப்படிப்பட்டவர்கள் கூற்றையும், கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம்" எது கற்பு? எது காதல்? பெரியார் உண்மையாகப் பெண்கள் விடுதலை வேண்டுமானால் ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்பந்தக் கற்பு முறை ஒழிந்து இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்படவேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும். கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும். கற்புக்காக மனதுள் தோன்றும் உண்மை அன்பை காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும். எனவே இக் கொடுமைகள் நீங்கின இடத்திலே மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பை காணலாமே ஒழிய நிர்பந்தங்களாலும் ஒரு பிறப்புக் கொரு நீதியாலும் வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காணமுடியாது என்பதுடன் அடிமைக் கற்பையும் நிர்பந்தக் கற்பையும் காணலாம். அன்றியும் இம்மாதிரியான கொடுமையைவிட வெறுக்கத்தக்கக் காரியம் மனித சமுகத்தில் வேறொன்றும் இருப்பதாக என்னால் சொல்லமுடியாது. இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரு மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தப்பட்டும் வருகின்றது. ஆனால் இந்தப்படி சொல்கிறவர்களை எல்லாம் உலக அனுபவமும், மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உணமையை அறிந்தும் வேறு ஏதோ காரியத்திற்கு வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றுதான் கருத வேண்டியிருக்கின்றது. அன்றியும் இம்மாதிரி விசயங்களைப் பற்றிச் சொல்லும் பொழுது மற்றொரு விஷயம் என்னவென்று சொன்னால், காதலன் காதலியாக வாழ்வது என்ற தன்மையெல்லாம், வேறு ஒருவன் ஜோடி பார்த்து சேர்ப்பதும், பிள்ளைகளைப் பெறுவதற்கும், வீட்டு வாழ்க்கை உதவிக்கென்றும், இயற்கை உணர்ச்சிக்குமான பரிகாரத்திற்காகத்தான் சேர்க்கப்படுகின்ற ஜோடிகளாக இருந்து வருகிறதே தவிர, தாங்களாக, காதல் மிகுதியால், காதல் தெய்வத்தால் கட்டுவித்ததைக் காணுவது அரிதாகத்தானிருக்கின்றது இது எப்படியிருந்தாலும் எந்த ஒரு காரணத்திற்காக ஆனாலும், ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம், முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ, மற்ற மூன்றாமவர்கள் யாராவது பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம். இன்னும் திறந்து வெளிப்படையாய் தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால், இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலிலே சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக்கடையில் பலகாரம் வாங்குவது போலவும், சாமான் வாங்குவது போலவும், அவவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும்தான் சொல்ல வேண்டும். காதல் காதலானது ஒரு ஆணுக்கொ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகிறது? இது தானகவே உண்டாகிறதா? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகிறதா? ஒருசமயம் தானகவே உண்டாவதாகயிருந்தால், எந்த சந்தர்ப்பத்தில், எந்த ஆதாரத்தின் மீது என்பவைகளைக் கவனித்தால் பெண் ஆணையோ, ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும் உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ, வேறு வழியில் பார்க்க கேட்க நேரிடுவதாலுமேதான் உண்டாகக்கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது. இந்தப்படியும் கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம்.இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்டாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில், தெரிந்த மாத்திரத்தில், அந்த வஸ்து தனக்கு இருக்கலாம், வேண்டும் என்பதாக ஆசைப்படுகிறானோ, ஆவல் கொள்கிறானோ, அது போலத்தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கிறதே தவிர வேறு எந்த வழியாலாவது ஏற்படுகிறதா என்பது நமக்குப் புலப்படவில்லை. எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை, அதாவது தனது இஷ்டத்தை, திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதுவும் காதலர்கள் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது. அதாவது அழகைக் கொண்டோ , பருவத்தைக் கொண்டோ , அறிவைக் கொண்டோ , ஆஸ்தியைக் கொண்டோ , கல்வியைக் கொண்டோ , சங்கீதத்தைக் கொண்டோ , சாயலைக் கொண்டோ , பெற்றோர் பெருமையைக் கொண்டோ , தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ, குணத்தையோ கொண்டோ தான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ளும் போது, இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம்; அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம்; அல்லது வேஷமாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம். உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உய்ரவானதா? சரீரத்தைக் கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா அல்லது சரீரத்தின் நிலை முதலியவை தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா என்பனவற்றைக் கவனிக்கும் போது சரீர மாறுபாடாலும் , பொருத்தமின்மையாலும் எப்படிப்பட்ட உண்மைக்காதலும் ஏன் மாற முடியாது என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருவன் ஒருத்தியுடன் காதல் கொண்டுவிட்டால், - ஒருத்தி தப்பாய்- அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய்க் கருத நேர்ந்தால், அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும், தன் மனதுக்கு சந்தேகப்படும்படி வந்துவிட்டால் அப்போது கூட காதல் மாறாமல் இருந்தால்தான் உண்மைக்காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால், அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல் குற்றமான காதலா என்பத்ற்கு என்ன மறுமொழி பகர முடியும்? அதுபோலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக் கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும்.பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்துவிடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்வதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டுவிடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்வதும் இயற்கையேயல்லவா? ஆகவே ஆசையை விட, அன்பை விட, நட்பை விட, காதல் என்பதாக ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு ஆசை, நட்பு ஆகியவை கூட மக்களுக்கு அஃறிணைப் பொருட்களிடத்திலும், மற்ற உயர்திணைப் பொருட்களிடத்திலும் ஏற்படுவது போலத்தானே ஒழிய வேறில்லை என்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையிலிருந்து, மனப்பான்மையிலிருந்து, தேவையிலிருந்து, ஆசையிலிருந்து உண்டாவது என்றும் அவ்வறிவும், நடவடிக்கையும், யோக்கியதையும், மனப்பான்மையும், தேவையும், ஆசையும் மாறக்கூடியது என்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியதுதான் என்றும், மாறக்கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே இதிலிருந்து நாம் யரிடமும் அன்பும், ஆசையும், நட்பும் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ, அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை ஆனால் அன்பும் ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும், திருப்திக்குமேயொழிய, மனதிற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுத வேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதற்கெல்லாம் 'இது காதல்ல' 'அது காதலுக்கு விரோதம்' 'அது காம இச்சை' ' இது மிருக இச்சை' 'இது விபச்சாரம்' என்பன போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவிதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால், அப்படிப்பட்டவர்கள் கூற்றையும், கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப்பற்றி எழுதலானோம். * http://www.thisaigal.com/october05/essaype...periyaruni.html - kuruvikal - 10-06-2005 செய்த தவறுக்காய் உலகத்தைக் குறைபிடித்து தனது தவறை நியாயப்படுத்த முனையும் மனிதர்களின்... மனித உயர்வுக்கான நாகரிகக் கட்டுப்பாட்டை வெறுக்கும் மனிதர்களின் குழப்பத்தின் விளைவே மேலே உள்ளவை..! இவர்களின் கருத்துப்படி பார்த்தால்...மனிதன் மனம் போன போக்கில் வாழ்வதே இயற்கை என்பதாகும்...அப்படி உலகில் மனிதன் வாழ முனைந்திருந்தால் இன்று மனித இனம் உலகில் இருக்க முடியாது. மனிதன் சிந்தித்து தன்னை தானே கட்டுப்படுத்த பாதுகாக்க முனைந்தது முதலே மனித இனத்தின் வளர்ச்சி ஆரம்பமானது...! நாடோடி மனிதன் குகைகளுக்குள் கட்டுப்பட்டு பாதுகாப்புத் தேடியதே...அவனின் முதல் வளர்ச்சிப்படி எனலாம்..! இதன் மூலம் கட்டுப்பாடு... வாழ்வியல் நெறிமுறை என்பதே வளர்ச்சிக்கு அவசியம் என்பது நிரூபணமாகிறது...! பரீட்சையில் சித்தி எய்தத் தவறினால் தவறு தன்னிடத்தில் காண முதல் பாடத்தில் தான் காண்பர்...! அதுதான் இயற்கை என்றால் அதுவல்ல உண்மை...! இது விடயத்தில் மனித இயற்கை என்பது பரீட்சையே எழுதாமல் அலைந்து திரிவது தான்...பகுத்தறிவு வளர்ந்து மனிதன் இயற்கையை ஆளப்பழகிய பின்னும்...பெண்ணும் ஆணும் கட்டுப்பாடிழந்து வாழ வேண்டும் என்று இயற்கை பேசும் இவர்கள்...எழுத்தில் இவற்றை எழுதக் கூடாது... இவற்றை காட்டில் இருந்து கூச்சலாக விலங்குகளோடு விலங்குகளாக இட்டுக்கொண்டிருக்க வேண்டும்...அப்படித்தான் கூர்ப்பின் ஆரம்பத்தில் மனிதன் செய்து கொண்டு இருந்தான்...தான் விரும்பிய நேரம் விரும்பினது செய்ய விலங்குகள் கடித்துக் குதற...வசதிகள் வாய்ப்புகள் இன்றி இயற்கைக்குள் கட்டுப்பட்டு வாழ்ந்தான்...! பகுத்தறிவு வளர முதல்...இப்பவும் விலங்குகள் வாழுதுகளே...அதுபோல காதல் அன்பு உணர்ச்சி என்ற ஒரு பாகுபாடில்லாது... கண்டதும் கொண்டதும் வாழ்வென்று வாழ்ந்து வந்தான்..! அதுவல்ல நாகரிக மனிதனிடம் இன்று வேண்டுவது...! அண்மையை விஞ்ஞான ஆய்வே பிறப்புரிமையியல் ரீதியில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மனிதனுள் நிறுவுவதாக செய்தி வரும் இக்காலத்தில்...மீண்டும் கற்காலம் பேச சிலர் ஏன் முற்படுகின்றனர்....????! அதற்கு காரணம் இல்லாமல் இல்லை... மனித மனத்துக்குள் ஒரு உறுதி நிலை இல்லை என்றால் அதற்குள் நிலையாமை பெருகிக்கிட்டு...ஆடு மாடு போல அங்கும் மேஞ்சு இங்கும் மேஞ்சு வாழத்தான் முனையும்...அதனால் தவறிழைப்பவர்கள்...தங்களில் தவறு காணாமல் சமூகத்தில் காண்பதும் அதற்காக மனித நாகரிகத்தினைப் பழிப்பதும்...அதனால் தான் பழிவாங்கப்படுவதாக கூச்சலிடுவதும்...ஏமாற்றத்தில் வாழும் சூழலுக்குள் தன்னை மாற்றியமைக்க முடியாமையின் விளைவுகளே அன்றி வேறில்லை...இது ஒரு உளவியல் பிரச்சனையாகவும் கூடப் பார்க்கப்பட வேண்டும்...அறிவு பூர்வமானதாக இவை பார்க்கப்பட இவை ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டவையல்ல...தவறுகள் மூலம் நியாயப்படுத்த முனையப்படுபவை..! இவை மனித வரலாற்றில் ஒன்றும் புதிய விடயமுமல்ல...! மனிதன் விலங்கு நிலையில் இருந்து விடுபட்டு தனக்கான விதிகளுடன் பகுத்தறிவு வளர்த்து வாழப்பழகிய பிந்தான் உலகில் அவன் பல உயர்வுகளைக் கண்டான்...நாகரிகங்களின் வளர்ச்சியில் தான் நவீன மனிதனின் விருந்தியே தங்கி இருக்கிறது...! நாகரிகமற்ற கட்டுப்பாடற்ற வாழ்வியல்... மீண்டும் விலங்கு நடத்தைக்கு மனிதனை இட்டுச் சென்று சீரழிக்கவே வழி செய்யும்...அதை இந்திய ஆபிரிக்க தேசங்கள் இன்றும் காட்டி நிற்கின்றன...! இந்த இரண்டிலும் படிப்பறிவு குறைவு...படித்தது சிலது இப்படி உளறுவதைக் கேட்டு மக்கள் வாழ முனைந்தால்...இந்திய தேசத்தின் அழிவின் ஆரம்பம் இவர்களால் தான்...என்பது மட்டும் நிச்சயம்...! இவர்கள் மேற்குலகை பார்த்து நாகரிக வரைபு செய்ய விளைகிறார்கள்...மேற்குலகம் சுரட்டி வைத்துக் கொண்டு கல்வி மற்றும் இதர துறைகளில் துரித வளர்ச்சி கண்டு கொண்டு மனிதப் பாதுகாப்புக்கு வித்திட்டுக் கொண்டு மாற்றங்களுக்கு வழி சொல்கிறது..! குஷ்பு போன்ற அடிமுட்டாள்கள் சொல்லும் கருத்து ஏழைகளும் கல்வி அறிவு குறைந்தோரும் வாழும் ஒரு தேசத்துக்கு எத்துணை பொருத்தம் என்பதை..இந்தக் கட்டுரைவரையும் தமிழ் மேதாவிகள் கொஞ்சம் சிந்தித்து இயற்கைக்கு கட்டுப்பட்டு வாழ முனைவதாக "புரட்சிக்" கருத்துச் சொல்வது சிறப்பாக அமையும்...அல்லது..இயற்கையாக வாழ வேண்டின்...நேரே காட்டுக்கு போக வேண்டியது...ஏன் நாட்டில் இருக்கிறியள்...வேடுவர்கள் இன்னும் நீங்கள் வேண்டும் இன்றைய உங்கள் நிலையில்... சிந்திக்காமலே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...டிஸ்கவரி பாக்கிறனியள் தானே...!!!! (இங்கு வைக்கப்படும் கருத்துக்கு ஒரு தலைப்பட்டசமாக சிலர் வந்து ஆமா போட...அது தொடர்வதால்..அதுவே நியாயம் என்பதல்ல அர்த்தம்...என்பதைக்காட்ட இக்கருத்து இடப்படுகிறது..! கருத்துக்கள கருத்தாளர்கள் சிலரைக் கண்டு பயப்பிடாது உங்கள் கருத்துக்களை பார்வைகளை முன் வையுங்கள்...வெட்டி ஒட்டுவதால் அவர்கள் பெரிய புதிய சிந்தனாவாதிகள் என்றோ...அல்லது பக்கம் பக்கமாய் புத்தகம் புத்தகமாய் எழுதுவதால் பெரிய சமூகப் புரட்சியாளர்கள் என்றோ அர்த்தமல்ல...! ஒரு சிறிய சிந்தனை என்றாலும் ஆரோக்கியமானதுவாக இருந்தால்...அது உலகில் மதிக்கப்படும் வரவேற்கப்படும்...பாவிக்கப்படும்...அதுவே அவசியம்..!) - sinnakuddy - 10-06-2005 ஒழுக்கமென்று ஓங்கி கத்தி ஒதுங்கி நிற்கும் பெண்ணை ஓரங்கட்ட நினைப்பர் தங்கையே தமயந்தியே-என்று தரணியெல்லாம் பாடுவர்-ஆனால் தருணம் கிடைத்தால் தந்திரமாக தகிடுத்தினம்-செய்து தாரமாக்க நினைக்கும் கயவர்-இவர்கள் உண்மைகள் உறைக்கும் போது உருக்கொண்டு எழுந்திடுவர் தலை முழுக்க காமுங்களாக தந்திரமாக தாளம் போட்டு பாச மழை பொழிந்து- பாசாங்கு காட்டி பள்ளியறைக்கு வழி தேடுவர் இவர்கள் தானாம் கலாச்சர காவலர்கள் தங்கள் கண்றாவிகளை எல்லாம் செய்து-மறைத்து கல்யாணத்துக்கு புது மாப்பிளையாக போய் கன்னி தன்மைபற்றி கதைக்கும் கபடதாரிகள்-இவர்கள் - kuruvikal - 10-06-2005 சின்னக்குட்டி...கவிதை அருமை...உங்கள் அனுபவத்தை அப்படியே சொல்லி இருக்கிறியள் போல...! காலம் இன்னும் கண்ணதாசன்களைத்தான் இங்கும் பிறப்பிக்கிறது...! கெட்டழிஞ்ச பின் சித்தாந்தம் பேசிறதிலும்...முன்னைய மனிதர்கள் விட்ட தவறுகளில் இருந்து பாடம் படிப்பவன் தான் நவீன மனிதன்..! கோவலனைக் காட்டினது பின்பற்ற அல்ல...அழிக்க வேண்டிய ஒரு பாத்திரம் என்று...இப்ப கோவலனைக் காட்டாதே...காட்டினால் பின்பற்றுவேன் என்பது...புரட்சியல்ல ...பீதி...தன்னைத்தானே ஆள முடியாத மனப்பலவீனத்தின் வெளிப்பாடு..!
- Thala - 10-06-2005 Birundan Wrote:Thala Wrote:நாரதா நண்பர்களுக் கிடையில இப்படியானதை பேசிக்கருதாடினாலும் பொதுவான இடங்களில் கருத்தாடுகிற அளவு நாங்கள் இன்னும் பக்குவம் அடயேல்ல என்பதைத்தான் அவர் சிவப்பால குறியீடு போட்டு விளக்க முற்பட்டிருக்கிறார் போல... hock: :roll: :roll:
- Birundan - 10-07-2005 Thala Wrote:Birundan Wrote:Thala Wrote:நாரதா நண்பர்களுக் கிடையில இப்படியானதை பேசிக்கருதாடினாலும் பொதுவான இடங்களில் கருத்தாடுகிற அளவு நாங்கள் இன்னும் பக்குவம் அடயேல்ல என்பதைத்தான் அவர் சிவப்பால குறியீடு போட்டு விளக்க முற்பட்டிருக்கிறார் போல... :roll: :roll: :roll: :roll: :wink: தல நான் உங்களை சொல்லவில்லை பொதுவாகச்சொன்னேன். :wink: |