Yarl Forum
அமெரிக்கர்களின் மனச்சாட்சியை உலுக்கும் தாயின் போராட்டம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: அமெரிக்கர்களின் மனச்சாட்சியை உலுக்கும் தாயின் போராட்டம் (/showthread.php?tid=2886)

Pages: 1 2


- Vaanampaadi - 10-16-2005

அடுத்தாப்பல ஈரான்
அதயும் இந்த புஷ் ஈராக் மாதிரி ஒரு போடு போட்டுத்தள்ளினா அங்கேயும் இந்த லொல்லு பிரச்சினங்க எல்லாம் முடிவுக்கு வந்துரும் .................
அதுக்கப்றம் எல்லாமே ஜாலிதான்....
எல்லாமுடிஞ்ச பிற்பாடு "I want the trurth" ன்னு ஒரு பனியன் போட்டுகிட்டு ஒரு மனுசி கத்திகிட்டுருக்கல் அதயும் கூட்டிக்கினுபோய் இந்த ஈரான்,ஈராக்கை ஒரு ரவுண்டு சுத்திகாட்டினா அதோட மவனும் ஆத்மசாந்தி அடஞ்சிருவான்..............
வாழ்க அமெரிக்கா..........வளர்க அமெரிக்கா.................


- Vaanampaadi - 10-16-2005

எப்பவும் உலகின் உண்மை நிலையை உணரவேண்டும்....அதன் பின்னர்தான் எதனை எதிர்ப்பது, எதனை ஆதரிப்பது என்ற நிலைக்கு வரவேண்டும்....
அதை விடுத்து சும்மா அமெரிக்கா ஒரு நாட்டின் மீது போர் தொடுத்ததும் அதன் அடி நுனி தெரியாமல் சும்மா "America Down" "America Down" என்று ஆட்டுமந்தைகள் போல் தலை ஆட்டுவதில் எதுவித பிரயோஜனமுமில்லை......அப்படித்தான் நீங்கள் பைத்தியக்காரத்தனமாக தலை ஆட்டினாலும் அமெரிக்கா தனது (Mission) இல் இருந்து திரும்பபோவதுமில்லை,பின்வாங்கபோவதுமில்லை ...........
உங்களைப்பார்த்து (அதாவது உங்கள் எதிர்ப்பை பார்த்து ) அவர்கள் ஒரு புண் சிரிப்பு சிரித்துவிட்டு அவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து கவனிப்பார்கள்....அதுதான் அவர்களின் கொள்கை.....(நான் இதனை உங்களை மட்டம் தட்டுவதற்காகவோ அல்லது இழிவுபடுத்துவதற்காகவோ இங்கு சொல்லவில்லை ) இதுதான் இன்றைய உண்மையான நிலமை...............ஒருவழியில் பார்த்தால் அவர்களின் முடிவு சரியானதே.... இதுவரைக்கும் அமெரிக்கா எடுத்து வந்த வெளிநாட்டு முடிவுகள் திருப்திஅளிக்கின்றன (Junior Bush)....இவரின் கொள்கை" வெட்டு ஒன்று துண்டு இரண்டு" என்பதாகும்.......நான் அதனை வரவேற்கிறேன் .............


- Vaanampaadi - 10-16-2005

kurukaalapoovan Wrote:சபாஸ் சரியான போட்டி.

இது போட்டி இல்ல சாமியோ.....இது நிஜம்

அது சரி புரியிறவ்னுக்கு சொல்லனும்....நான் போய் ஓன்கிட்ட சொன்னேன் பாரு .........என்ன செருப்பால அடிக்கனும்.................


- vasisutha - 10-17-2005

:roll: :roll:


- RaMa - 10-17-2005

வானம்படி
அமெரிக்கா இல்லையெனில் உலக நாடுகளில் பல நாட்டு மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள். உங்களுடைய புஷ் தனது கொள்கைக்காக தமது உயிரை அர்பணித்த மாவிரனின் பெற்றோரைக் கூட கவுரப்படுத்த தெரியல... பிறகு என்னவென்று மற்ற நாட்டு மக்களின் கொள்கைகளை மதிப்பார்?..
அந்த பெண்மனி இப்போது போரட்டாத்தை அரம்பித்து இருக்கிறார். அதுவே வெகு சீக்கிரம் ஒரு மக்கள் புரட்சியாக மாற மாட்டாது என்று என்ன நிச்சயம்????
அத்துடன் இந்த புஷ் சும்மா இருக்க மாட்டமால் எல்லோருடனும் சண்டைக்குப் போய் பாவம் எத்தனை லட்சம் அப்பாவி மக்கள் இறந்திருக்கின்றார்கள். அந்த பில் லேடனையே இன்னும் பிடிக்க முடியாலை. தன்னுடைய நாட்டில் உள்ள பிரச்சனைகளை அவரால் அடக்க முடியாலை பிறகு எப்படி உலக நாடுகளை திருத்த வெளிக்கிட்டார். இவரின் முரட்டு கொள்கைகளால் நஷ்டமடைந்தது அப்பாவி மக்களும் அப்பாவி அமெரிக்கா இராணுவத்தினரும் தான்.


- தூயவன் - 10-17-2005

ஓ... அப்படியா


- kuruvikal - 10-17-2005

Vaanampaadi Wrote:எப்பவும் உலகின் உண்மை நிலையை உணரவேண்டும்....அதன் பின்னர்தான் எதனை எதிர்ப்பது, எதனை ஆதரிப்பது என்ற நிலைக்கு வரவேண்டும்....
அதை விடுத்து சும்மா அமெரிக்கா ஒரு நாட்டின் மீது போர் தொடுத்ததும் அதன் அடி நுனி தெரியாமல் சும்மா "America Down" "America Down" என்று ஆட்டுமந்தைகள் போல் தலை ஆட்டுவதில் எதுவித பிரயோஜனமுமில்லை......அப்படித்தான் நீங்கள் பைத்தியக்காரத்தனமாக தலை ஆட்டினாலும் அமெரிக்கா தனது (Mission) இல் இருந்து திரும்பபோவதுமில்லை,பின்வாங்கபோவதுமில்லை ...........
உங்களைப்பார்த்து (அதாவது உங்கள் எதிர்ப்பை பார்த்து ) அவர்கள் ஒரு புண் சிரிப்பு சிரித்துவிட்டு அவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து கவனிப்பார்கள்....அதுதான் அவர்களின் கொள்கை.....(நான் இதனை உங்களை மட்டம் தட்டுவதற்காகவோ அல்லது இழிவுபடுத்துவதற்காகவோ இங்கு சொல்லவில்லை ) இதுதான் இன்றைய உண்மையான நிலமை...............ஒருவழியில் பார்த்தால் அவர்களின் முடிவு சரியானதே.... இதுவரைக்கும் அமெரிக்கா எடுத்து வந்த வெளிநாட்டு முடிவுகள் திருப்திஅளிக்கின்றன (Junior Bush)....இவரின் கொள்கை" வெட்டு ஒன்று துண்டு இரண்டு" என்பதாகும்.......நான் அதனை வரவேற்கிறேன் .............

சரிங்கண்ணா... இதுதான் உங்க ஆழமான சிந்தனையா..! இப்ப புரியுது...இந்தியா ஏன் வல்லரசாகுதில்லை என்று...!

அது சரி...தலிபான் உங்களை என்ன செய்துது... ஈராக் என்ன செய்துது...! சதாமும் சரி தலிபானும் சரி.. அமெரிக்கா தந்ததுகள் தான்..! சோவியத்தை எதிர்க்க பிறப்பிக்கப்படவை..! இன்று அவற்றின் தேவையில்லை... அவற்றை வைத்தே ஆக்கிரமிப்புக்களை கனகச்சிதமாக அமெரிக்கா செய்திட்டு இருக்குது...!

உண்மையில...நல்லாத்தான் ஆழமா கதைக்கிறேள்..! நாளைக்கு காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேசத் தலையீடு அவசியம் என்று அமெரிக்கா ஒரு அறிக்கை விடட்டும்...அப்புறம் தெரியும் உங்கள் ஆழமான கருத்து... அப்படியே தலைகீழா மாறும்...! இப்ப கார்கிளில உங்க மானம் காத்தது கிளிங்டன் எல்லோ...சோ...இப்படித்தான் சொல்வேள்..! தலிபான்காரன் காஷ்மீரில் இந்தியப் படையின் அடக்குமுறைக்குள் வாழும் மக்களுக்கு உதவினான் எல்லா..சோ..அவனை உங்களுக்கு பிடிக்க நியாமில்ல..! பாகிஸ்தான் காரனுக்கு ஆயுதம் கொடுத்து எழுபதுகள் யுத்ததுக்குப் பிறகு உங்களிடம் இருந்து பாதுகாத்தது அமெரிக்காதான்...ஏன் பாகிஸ்தானை எதிர்க்கிறியள் அமெரிக்காவை புகழிறியள்...! ஏன்னா முஸ்லீம்கள் என்றா உங்களுக்கு அமெரிக்காவை விட விரோதிகள்...இது தெரிஞ்சது தானேண்ணா..!

ஈராக்கில் அமெரிக்கா செய்வது அநியாயம் என்பதே இன்று உலக மக்களின் கருத்து..அதுவும் அணுகுண்டு பிடிக்கப் போய் அகழிக்குள் சதாம் எலி பிடிச்சிட்டு..இன்னும் ஏன் நிக்கிறேள்..வெளிய போக வேண்டியானே..! ஜனநாயகம் உருவாக்கினமாம்... அதென்ன ஈரான் ஈராக் யுத்தம் வரை உங்க ஜனநாயகவாதியாக இருந்த சதாமே அப்புறம் எப்படி பயங்கரவாதியானார்...??! எதையோ சாட்டி எதையோ இலக்கு வைச்சிருக்கு...இப்ப அமெரிக்க இலக்கு தன்னைச் சாரா இஸ்லாமிய உலகம்...அதிலதான் நீங்கள் எதிரிக்கு எதிரி நண்பன் ஆகிட்டேள்..பொறுங்கோ...உங்களுக்கும் இருக்கு ஆப்பு..! அமெரிக்க ஆக்கிரமிப்பு.. லேசானதில்ல...! நீங்க நினைக்கிறாப் போல..!

யூனியர் புஷ் சும்மா யுத்தம் செய்யல்ல வேலை மிணக்கட்டு...சோவியத் காலத்திலையே அமெரிக்கா இஸ்லாமிய உலகம் மீது நல்ல அபிப்பிராயம் வைச்சிருக்கேல்ல...சந்தோகத்தோடுதான் இருந்தது...ஆனா..அப்ப சோவியத்தான் முதல் எதிரி...எனவே வெளிப்படையா இஸ்லாமிய உலகை அமெரிக்கா பகைக்கவில்லை...! சோவியத் எதிர்த்த இஸ்லாமிய சமூகங்களை தன் நண்பனாக்கி இஸ்லாமிய இரட்சகனாக அமெரிகக் நடித்த காலமும் ஒன்று இருக்கு..! இப்போ சோவியத்தை பலவீனப்படுத்தியாச்சா...எனவே தனது அடுத்த இலக்கில பயணிச்சிட்டு இருக்கு...இது முடிய நீங்களும் சீனாவும் தான் இலக்கு...அது முடிய உலகமே அமெரிக்க கையில் தான்...! எல்லாம் அமெரிக்க நலனை வைச்சுத்தான் நடக்குத்து..இந்திய நலனைக் கருதியல்ல...என்றதுதான் உண்மை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- kurukaalapoovan - 10-17-2005

Vaanampaadi Wrote:
kurukaalapoovan Wrote:சபாஸ் சரியான போட்டி.

இது போட்டி இல்ல சாமியோ.....இது நிஜம்

அது சரி புரியிறவ்னுக்கு சொல்லனும்....நான் போய் ஓன்கிட்ட சொன்னேன் பாரு .........என்ன செருப்பால அடிக்கனும்.................

உங்கள் உலக அரசியல் ஞானத்தை வாசித்தவுடன் மெய்சிலிர்த்துப் போனேன் சாமி. தொடர்ந்து எழுதுங்கள் உங்களிடம் இருந்து அறிந்து கொள்ள இருப்பதோ சமுத்திரமளவு என உணரக்கூடியதாக உள்ளது. அப்படியே உங்கடை கொல்லையில் நடக்கிற கஷ்மீர் மற்றும் பங்களாதேசத்து சாதனைகள் போன்ற விடயங்கள் பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கோ. வாசிக்க சுவார்சியமா இருக்கும் என்று நம்புறன்.

ஜெய் அமெரிக்கா God bless Hindustan


- Vasampu - 10-17-2005

இங்கே எனக்கு இரண்டு ஆச்சரியங்கள்.
1) எப்போதும் அமெரிக்காவிற்கே ஜால்ரா போடும் டண் இதை இணைத்திருப்பது.
2) வானம்பாடியின் அளவிற்கதிகமான அமெரிக்க ஜால்ரா

அமெரிக்காவில் கணனித்துறையில் வேலை செய்த 3000 திற்கு அதிகமான இந்தியரை சந்தேகத்தில் கைவிலங்கிட்டு வீதியால் இழுத்துச் சென்று கௌரவப்படுத்தியதற்கு ஒருவேளை வானம்பாடி நன்றி செலுத்துகின்றாரோ என்னவோ??


- Jude - 10-18-2005

Vasampu Wrote:அமெரிக்காவில் கணனித்துறையில் வேலை செய்த 3000 திற்கு அதிகமான இந்தியரை சந்தேகத்தில் கைவிலங்கிட்டு வீதியால் இழுத்துச் சென்று கௌரவப்படுத்தியதற்கு ஒருவேளை வானம்பாடி நன்றி செலுத்துகின்றாரோ என்னவோ??

இந்த தகவல் உண்மையானது எனினும், 3000 என்ற எண்ணிக்கை மிகவும் மிகைப்படுத்தப்பட்ட தவறான தகவல். குறித்த ஒரு நிறுவனத்தில், அமெரிக்க குடிவரவு சட்டத்திற்கு மாறாக, தகுந்த அனுமதி இன்றி, வேலை செய்த சிலர் (40 பொறியியலாளர்கள்) கைது செய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, கொண்டு செல்லப்பட்டதே நடந்த சம்பவம்.
http://www.indolink.com/NRINews/Community/...y/arrestH1.html

ஆனால் இங்கு ஆசியர்கள், குறிப்பாக இந்தியர்களும், சீனர்களும், சிறந்த தொழில்களை செய்து, பெரும் பணத்துடன் இருப்பதாலும், மேலும் பலர் தமது சொந்த நிறுவனங்களை நிறுவி பெரும் பணம்படைத்தவர்களாக இருப்பதாலும், இங்கு வாழும் இந்தியர்கள், சீனர்களை பாதிக்கும் எந்த செயலும் பெரிய முக்கியத்துவம் பெறுகிறது. "இந்த கைவிலங்கிடப்பட்ட சம்பவம் இந்திய பொறியியலாளர்கள் வரவை குறைக்கும்" என்று இந்திய து}தரகம் எச்சரிக்கை விடுத்ததால் அதன் பாதிப்புகள் வணிக நிறுவனங்களுக்கு கடுமையாக இருக்கும், என்பதை புரிந்து கொண்ட அமெரிக்க அரசு, உடனேயே மேற்படி சம்பவத்துக்கு காரணமான குடிவரவு அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி, இனிமேல் இப்படி நடக்காது என்று உத்தரவாதமும் அளித்துள்ளது.