![]() |
|
பதில் தாருங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: பதில் தாருங்கள் (/showthread.php?tid=2837) |
- Birundan - 10-22-2005 nallavan Wrote:வசம்பு, ஏன் ஈழநாதன் பக்கத்தில் விவாதிக்க என்ன பயமா? ஜந்துபக்கத்தில் மூண்றை ஏற்கனவே காசி தூக்கிட்டாரு. மீதி இரண்டு இருக்குதானே அதில் விவாதிக்கலாமே பயமா? இதை அங்கு விவாதித்தால், மிச்சம் இருக்கிறதையும் தூக்கிடுவார் என்று. உங்களுக்கு முலையையும்,யோனியையும்பற்றி விவாதிக்க யாழ்களம்தானா கிடைத்தது? இங்கு சிறுவரும் வருவதற்க்கு அனுமதிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியாதா? உதுக்கு ஏத்த இடம் நாதனின் பக்கம்தான். :wink:
- kurukaalapoovan - 10-22-2005 ஈழவன், யாழ் போன்ற கருத்துக்களத்தில் ஒருவரின் கருத்துக்களுக்கு அனுமதியில்லை என்பதற்கா குடில் ஒன்றை உருவாக்குவது சரியா? குற்றங்குறையில்லாத மனிதர் யார் என்பதை நீங்களே ஒத்துக்கொள்ளுறீர்கள். அனுசரித்துப் போக வேண்டும். நிர்வாகம் பிழைவிட்டால் ஆதாரங்களை காட்டி மாற்றங்களை கொண்டுவர வேண்டும். தமிழினம் கருத்துக்களத்தில் கூட ஒற்றுமையாக இருப்பதற்கு பக்குவமடையவில்லை அதற்குள்ளும் தனிமனித சுதந்திரத்தை மதிப்பளிக்க முடியாதது மிகவும் கவலைக்குரிய விடயம். இரு தனிமனிதரிடம் இயல்பாகவே இருக்கும் வேற்றுமைகளை அனுசரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை அடிப்படை நன்நடத்தையாக நாம் உணரவேண்டும். இந்த அடிப்படை மனிதவிழுமியங்களை (நாகரீகமடைந்தாக கூறிக்கொள்ளும் மனிதர் என்னும் விலங்குகளிற்கு) இல்லை என்றால் எமக்கு மொழி கலாச்சாரம் பண்பாடு சமூகம் என இருந்து என்ன பயன்? நாம் ஒவ்வொருவரும் சொந்தமாக குடில் தொடங்கலாம் இல்லை கொஞ்ச பணத்தை செலவளித்தால் சொந்தமாக கருத்துக்களம் ஒன்றையும் ஆரம்பித்து ஈ ஓட்டலாம். இதுதான் எங்கள் அனைவருக்கும் (சந்தேகம் இன்றி நான் உட்பட) உள்ள குறைபாட்டிற்கான தீர்வா? கோழைகளாக இல்லாது எங்கள் குறைபாடுகளை விமர்சித்து எம்மை முன்னேற்ற முனைவோம். ஒளவையார் திருவள்ளுவர் கண்ணதாசன் எழுதிவைத்தது தான் எங்கள் கலாச்சாரம் அல்ல. நாம் ஒவ்வொருவரும் தினம் தினம் இதயசுத்தியோடு கடைமைக்கா என்றில்லாது உண்மையாக நடத்தும் வாழ்வுதான் எங்கள் கலாச்சாரம் பண்பாடு. யாழ்களத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இன்று தமிழராகிய எமது உண்மையான கலாச்சாரம் பண்பாட்டின் அங்கங்கள் என்றதை மறந்துவிடாதீர்கள். - nallavan - 10-22-2005 பிருந்தன் அண்ணோய், வணக்கம். ஈழநாதனின்ரயில மூண்டைத் தூக்கினதுக்கு அது தொடர்ச்சியா எழுதப்படாதது தான் காரணம். மேலும் அங்கே பதிவுகள் ஏன் தூக்கப்பட்டதென்பது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. ஏதோ பாலியல் பற்ற எழுதினதால்தான் தூக்கப்பட்டதாக நீங்கள் நினைத்து எழுதியிருக்கிறீர்கள். இதைவிடக் கடுமையான வாதங்கள் நடந்த பக்கங்கள் அப்படியேதான் இருக்கிறது. ஏன் நாஞ்சில் நாடனின்கட்டுரை வந்த பக்கம் (ஈழநாதன் இங்கே அதன் இணைப்பைத் தந்துள்ளார். பார்த்தீர்களா?) கூட அப்படியேதான் இருக்கிறது. இன்னும் பாலியல் தொழிலைச் சட்டரீதியாக்குதல், ஓரினச்சேர்கை பற்றியெல்லாம் விரிவான விவாதங்கள் நடந்த பதிவுகள் அப்படியேதான் இருக்கின்றன. இந்த விவாதத்தால் பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து தூக்கப்படுமென்று பயப்படவேண்டிய நிலையில் அங்கே பதியும் யாருமில்லை. நான் சொல்ல வந்தது. இந்தக் கதைகளை தமிழ்மணத்தில் அங்கத்துவமாயிருக்கும் ஒரு பதிவில், அதுவும் ஈழநாதனின் பதிவுபோல ஒன்றில் எழுதினால் அங்குள்ளவர்கள் சிரிப்பார்கள். ஏன் தெரியுமா? உயர்தர வகுப்பில் வந்து ஆனாஆவன்னா படிப்பி;க்கிறாய் என்று. இதைத்தான் ஈழநாதனும் சொன்னார். அதை, அங்கு எழுதப்பயம் என்று சொல்லி நீங்கள் ஆறுதல் பட்டுக் கொள்:ளுங்கள். வேணுமேண்டால் கேளுங்கள். இன்னும் தூக்கப்படாமல், நீங்கள் ஆபாசம் என்று நினைக்கும் விடயங்களைப்பற்றி எழுதப்பட்ட பத்தோ இருபதோ பதிவுகளை நான் தருகிறேன். எதுவும் அங்கிருந்து தூக்கப்படவில்லை. ஏன், இந்தப்பக்கம்கூட அப்படியேதான் இருக்கிறது. இதைவிடவும் காட்டமான வாதங்கள் வெளிப்படையாய் நடந்த பக்கங்கள் இன்னும் இருக்கிறது. இந்த அளவுக்குக்கூட வாதிக்கும் நிலை யாழ்க்களத்தில் இருக்கிறதா? அரிச்சுவடியிலிருந்து தொடங்கும் நிலையில் அதை ஈழநாதனின் பதிவில் தொடங்குவது எவ்வளவு சிரிப்புக்கிடமானது? - nallavan - 10-22-2005 குறுக்கால போவான், கடசியா எழுதினது நக்கலோ இல்லாட்டி உண்மையிலயே உம்மட கருத்துத்தானோ? பிருந்தன் அண்ணோய், இன்னொரு விசயம். ஈழநாதன், யாழ் உறவுகளுடன் கருத்தாடத்தான் ஒரு வசதியைக் கோருகிறார். அந்த அடிப்படையைப் புறந்தள்ளிவிட்டு இன்னொரு வலைப்பக்கத்தில எழுது என்று சொல்வது எவ்விதம் பொருந்தக்கூடும். யாழ் உறவுகள் எல்லோரும் ஈழநாதனின் பக்கத்துக்கு வந்துபோகிறவர்களா? அதற்கென தனிப்பட்ட வாசகர் வட்டமொன்று உண்டு. இங்குள்ளவர்களோடு கதைப்பதற்கு ஒரு களம் தரச்சொல்லிக் கேட்க, சம்பந்தப்படாத இன்னொரு இடத்தில் எழுது என்று சொல்வதைப் போல்தான் நான் உணர்கிறேன். --------------------------------------------- வயதுப்பிரச்சினைக்கு;த்தான் நான் வயதுவந்த அல்லது முதிர்ச்சியடைந்தோருக்கான களப்பக்கமொன்றை ஏற்படுத்தலாமென்று சிபாரிசு செய்தேன். அல்லது இதைப்பற்றிக் கதைக்காமலே வழமையாக கவிதைகள் எழுதியோ, செய்திகளைப் படியெடுத்துப்போட்டோ எங்கள் 'விவாதங்களை' நடத்தலாம். இதுபற்றிக் கதைக்கவும் வேணும். ஆனால் யாழில் கதைக்க முடியாது என்றால் என்ன பலன்? கதைக்காதே அல்லது கதைக்க முடியாது என்பதுதானே கருத்து? - வலைஞன் - 10-22-2005 ஈழவனின் கேள்விக்கு விரைவில் பதில் தரப்படும். நன்றி. - kirubans - 10-22-2005 பதிலைத் விரைவாகத் தாருங்கள். கற்றுக்குட்டி விவாதங்களை ஆரம்பிக்க நாங்களும் தயார்தான். :wink: - Birundan - 10-23-2005 nallavan Wrote:பிருந்தன் அண்ணோய்,உங்களுக்கு விவாதம் செய்ய வேறுவிடயமே கிடைக்கவில்லையா? டிசேசன் என்ன மகாகவியா? அல்லது உலககவியா? அல்லது கால்மாக்ஸா புரட்சி கருத்து கூறிவிட்டார் விவாதிப்பதற்கு, அதுதானே அந்தவிடயத்துக்கு பூட்டே போட்டாச்சு பிறகு இங்க வந்து தொங்கிக்கொண்டு நிக்கிறியள், :wink: - nallavan - 10-23-2005 அப்பிடிப் போடுங்கோ பிருந்தன் அண்ணோய். அப்ப நானும் வாறன் எண்டு முன்னுக்கு ஓரிடத்தில சொன்னது என்னத்துக்கு? இதுகள் கதைக்கக்கூடாத விசயங்கள் எண்ட உங்கட பார்வையைத் தெளிவாச் சொன்னதுக்கு நன்றி. அதை, நானும் வாறன் எண்டு சொல்லமுதலே சொல்லியிருக்கலாம். மாறாக அதுக்கு ஆதரவான கருத்து மாதிரி ஒண்டைச் சொல்லிப்போட்டு பிறகு எங்களில பாய்ஞ்சா என்ன அர்த்தம்? டி.சே யை ஆர் மகாகவியெண்டது? ஈழநாதன் கேட்டது டி.சேயின்ர கவிதையை விவாதிக்கத்தானா? நீங்கள் அடிப்படைக் கேள்வியைப் புறந்தள்ளிவிட்டுக் கதைக்கிறீர்கள். கருத்துக்களம் மூடப்பட்டதைப் பற்றித்தான் கேள்வியே. பிறகு நீங்கள்வந்து அங்க மூடியாச்சு பிறகேன் இங்க வந்து கதைக்கிறியள் எண்டு கேக்கிறது என்ன நியாயம்? அதை உங்கட முதற் கருத்திலயே கேட்டிருந்தாலும் ஒரு நேர்மை இருந்திருக்கும். இப்ப வந்து மாத்திச்சொல்லிறது பாக்கிற ஆக்களுக்கு ஏதோ தனிப்பட்ட பிரச்சினை மாதிரித் தெரியும். நன்றி. இவை வாதிக்கப்படக் கூடாதவை என்ற உங்கள் கருத்தைத் தெளிவுபடுத்திவிட்டதால் (இதைக்கூட பிறகு வந்து மாற்றிச் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்) இனி இவ்விசயம் பற்றி மற்றவர்களிடம்தான் அபிப்பிராயம் கேட்க வேண்டும்.. நன்றி. - nallavan - 10-23-2005 சரி, பிருந்தன் அண்ணா, உங்களுக்கு பதிவுகள் தூக்கப்பட்ட காரணம் தெரிந்திருந்தால், பிறகேன் இப்படியான கருத்தை எழுதினால் அங்கே தூக்கிவிடுவார்கள் என்ற பயம் ஈழநாதனுக்கிருப்பதாக எழுதினீர்கள். இக்கருத்து உங்களுக்குச் சரியாகப் புரியவில்லை என்றுதானே என்னால் எடுத்துக்கொள்ளப்படும்? அங்கே புளொக் வைத்திருந்தால் யாரும் பெரிய இது இல்லை. நான் சொல்ல வந்தது ஈழநாதனின் பக்கத்துக்கு இருக்கும் வாசகர் வட்டம் இவ்விவாதங்களையெல்லாம் நிறையப் பார்த்த கூட்டம். அதில்போல் அரிச்சுவடியிலிருந்து கதைக்க முடியாது என்றுதான் சொன்னேன். இதைப்பற்றி மட்டுந்தான் கதைக்க வேணும் எண்டு ஆர் சொன்னது? இதைப்பற்றி மட்டுந்தான் நாங்கள் சிந்தித்து அலைந்து கொண்டிருக்கிறோமென்று நீங்கள் சொல்வது எதன் அடிப்படையில்? வேறு விடயங்களே இல்லையா என்று கேட்கிறீர்கள். இதுவும் ஒரு விடயம் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். இது கதைக்கப்பட வேண்டிய விடயமில்லை என்பது உங்கள் கருத்தென்றால் அதை நேர்மையாக வையுங்கள். மற்றவர்களும் தங்கள் கருத்தை வைக்கட்டும். மட்டுறுத்துனர் தனது கருத்தைச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். அதைவிட்டுவிட்டு மற்றவர்களை முத்திரை குத்துவதை விடுங்கள். நீங்களே ஒரு இடத்தில் வாதிக்க வேண்டிய விடயம் என்று கருத்துச் சொல்லிவிட்டு அதேபக்கத்தில் எதிர்த்தும் கருத்துப்போடுகிறீர்கள். ஈழநாதனின் பக்கத்தில் விவாதிக்கலாமே என்று கேட்டுவிட்டு பிறகு உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று கேட்கிறீர்கள். பயத்தினால் தான் புளொக்கில் எழுதவில்லை என்றீர்கள். பிறகு அதை மறுத்துச் சொன்னபோது அங்கே எழுதினால் என்ன பெரிய கொம்பா என்கிறீர்கள். எனக்குப் புரியவில்லை. - இவோன் - 10-23-2005 இவற்றை வாதிக்கலாமா இல்லையா என்பதைத் தெளிவா முன்வையுங்கள். அதைவிட்டுவிட்டு தனிநபர் தாக்குதல்களில் இறங்காதீர்கள். அவர்களுக்கு இதுதான் எந்த நேரமும் சிந்தனை என்றோ கோளாறு என்றோ உங்கள் தீர்ப்பை யார்மீதும் சுமத்தாதீர்கள். நானும் வலைஞனின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஈழவனின் முயற்சி வரவேற்கத்தக்கது. அதை விமர்சிப்பவர்கள் கண்ணியமாக தங்கள் கருத்துக்களை எழுதலாமே? - Birundan - 10-23-2005 nallavan Wrote:அப்பிடிப் போடுங்கோ பிருந்தன் அண்ணோய். நான் சொன்னதை நீங்கள் எப்படி விளங்கிக்கொண்டீர்களோ எனக்குத்தெரியாது, நான் சொன்னது உந்த விவாதங்களை யாழ் களத்தில் விவாதிக்கவேண்டாம் என்றுதான், காரணமும் கூறினேன் இதை பார்ப்பதற்கு சிறுவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று, அதற்காகத்தான் கூறினேன் நாதனின் பக்கத்தில்தொடங்கசொல்லி நானும் வாறன் என்று,அங்குதானே சிறுவர்கள் வருவதில்லை, எல்லாமே பழப்போட்டுகொட்டை போட்டவர்கள்தான் வருகிறார்கள் என்று, அங்கு எதை விவாதிப்பீர்கள் முலை,யோணி,பிருஷ்டம்,ஓரினச்சேர்க்கை இது போன்ற அரிய கருத்துகள்தானே. நானும் உயிரியல்துறைதான் படித்தேன் வாருங்கள் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து ஒரு முடிவுகாணுவோம். ஆதரிக்க ஆயிரம் பேர் இருந்தாலும் எதிர்க்க ஒருத்தனும் இல்லாட்டி விவாதம் சப்பென்றுபோய்விடும். புரட்சி புரட்சி எண்டுறியள் இதிலதான் புரட்சி செய்வன் என்றால் என்ன செய்யிறது. அதுசரி விவாதிக்க வந்தால் தனித்துநின்று விவாதிக்க வேண்டும் அது என்ன இடையில் கூட்டு சேர்க்கிறது, கூட்டு தேடுறது. :wink: - nallavan - 10-23-2005 இதுதான் புரட்சியென்று நானெங்கே சொன்னேன்? நான் யாரைக் கூட்டுச் சேர்த்தேன்? "உங்களுக்கு எந்தநேரமும் இதைப்பற்றித்தான் சிந்தனை" என்று முன்னர் கூறியதைத்தான் இப்போது வேறுவடிவில் கூறுகிறீர்கள். இப்போது சொன்ன காரணங்களை முன்பு தெளிவாகச் சொல்லியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு அங்கே எழுதப்பயம் என்று சொன்னதில்தான இது திசைமாறியது. அதைவிட இதைவிட வேற விசயமேயில்லையா, இதுதான் உங்களுக்கு எந்தநேரமும் சிந்தனையா என்று கேட்டதன்மூலம் இது வாதிக்கப்படக்கூடாது என்பதுதான் உங்கள் கருத்து என்ற புரிதலே எனக்கு இருந்தது. தெளிவுபடுத்தியதற்கு நன்றி. சிறுவர் வருவார்கள் என்றெல்லாம் சொல்லி அதைப்பற்றி நானும்முன்பு சொல்லிவிட்டேன். இங்கே சிலர் செய்யும்வேலையே யோனி பற்றியும் முலை பற்றியும் கதைத்தால் தான் புரட்சியா என்று சிலரை மடக்கக் கேள்விகள் கேட்பது. இது மற்றவர்களைக் கதைக்க விடாமல் செய்யும் வேலைதானே யொழிய வேறெதுவும் இல்லை. இப்போது நானோ ஈழநாதனோ அல்லது இதற்கு ஆதரவாகக் கதைப்பவர்களோ 'எந்த நேரமும் இதே சிந்தனையில்தான் இருக்கிறோம். இதைவிட எங்களுக்கு வேற சிந்தனையே இல்லை" என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டோம். (இதைத்தான் கூட்டுச் சேர்க்கிறது என்கிறீர்களா? என்னை மட்டுந்தான் நீங்கள் சொன்னீர்களா? எல்லோரையுந்தானே?) இதைப்பற்றிக் கவலையில்லை. இது எதிர்பார்த்தது தானே? தேசத்துரோகி, தேசப்பற்றாளன் என்று சகட்டுமேனிக்கு முத்திரை குத்தப்படும் இடத்தில் இதுவும் நடப்பது வியப்ப்பில்லை. இருந்தாலும் இது பற்றிய விவாதம் ஆரோக்கியமாகத் தொடர்ந்தால் உயிரியில் படித்த உங்களிடம் அறிய நிறைய இருக்கிறது. - KULAKADDAN - 10-23-2005 ஈழ நாதனின் வினாவும் அது சார் விளக்கம், கருத்துக்களும் மீண்டும் தனிநபர் தாக்குதலாக மாறதபடி பார்த்துக்கொள்ளுமாறு சக உறுப்பினர் என்ற வகையில் வெண்டுகிறேன். இங்கு ஈழநாதன் கேட்டது அண்மையில் சர்ச்சைகுரியதாக கருதப்பட்ட டிசே யின் கவிதை போன்ற கவிதைகளை கருப்பொருளாக கொண்டு விவாதம் நடத்த எங்கு பொருத்தம், அவ்வாறு விவாதிக்க முடியுமா என்பதாக தான் புரிந்துகொண்டேன்.அவர் அதை உதாரணமாகவே சுட்டியிருந்தார் என்பதாகவே விளங்கியிருந்தேன். அது தொடர்பில் உறுப்பினர்கள், நிர்வாகத்தினர் கருத்து தெரிவிக்க சொல்லியும் கேட்டிருந்தார். [b]அது தொடர்பில் கருத்துபகிர்வுகள் வருகிறது. அதற்குள் ஏன் அவர் இப்படி தான், அவர்கள் இப்படி சிந்தனை உள்ளவர்கள் என்பது மாதிரியான தோற்றம் வரசெய்வது போல் ஒரு நடை. அத்தோடு ஏதோ நீக்கப்பட்ட வலைப்பூக்கள் ஏதோ இதற்க்க தான் தூக்கப்பட்டது போன்ற பாணியிலான கருத்தாக்கம், அவர்களுக்கு இப்படியான விடயங்களை பேசுவது தான் நாளாந்த வேலை போன்ற ஒரு தொற்றத்தை உருவாக்குது போல வசன அமைப்புக்கள். கொஞ்சம் ஏதும் வித்தியாசமாக எழுதிவிட்டாலே அவர் இப்படி என முத்திரை குத்தல்கள். அவர் எங்கு என்ன எழுதினாலும் அங்கும் இவ்வாறன அவர் எழுதிய தலைப்புடன் சம்பந்தமற்ற முன்னர் எழுதிய வித்தியாசமான கருத்துடைய ஆக்கத்தையும் புதிய ஆக்கத்தையும் தொடர்புபடுத்தி அதே பாணியிலான முத்திரை குத்தலை/ மறைமுக தாக்குதல்க்களை தொடருதல் போன்றவையே இறுதியில் புரிந்துணர்வை குறைத்து எங்கு பார்த்தாலும் விவாதப்பொருள் திசைமாறி தாகுதலாக தொடர்வது கடந்த கால அவதானம். உறுப்பினர்களுக்கிடையே கருத்து மோதல்கள் இருப்பது வழமை. ஒவ்வோருவருக்கும் தனிப்பட்ட சிந்தனைகள், கொள்கைகள் என்பன இருக்கும்.கருத்துக்கான எதிர்நிலைபாட்டை வைப்பது எப்போதும் வரவேற்கத்தக்கது. அது தேவையானதும் கூட. ஆனால் அங்கு மறைமுகமாக தாக்கும் வசன நடைகள் தேவையற்றவை தானெ உறவுகளே. அவரவருக்கு எவ்வகையில் அந்த குறித்தவிடயம் பாதகமாக தெரிகிறது என்பதை கூறுவது வேறு, அதற்குள்ளே மேலே நான் சொன்னது போன்ற பாணியிலான வசன அமைப்பிலான தாக்குதல்கள் தேவையற்றவை என்பது எனது கருத்து. கடந்தவை கடந்தவையாகவே இருக்க அனைவரும் நட்புறவோடு கருத்தாடி ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே எனது அவா. - Birundan - 10-23-2005 இந்த தலைப்புக்கான எனது கருத்து, நானும் வருகிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இவ்வளவுதான். சிறுவர்கள்வருவதால் இங்கு வேண்டாம் நாதனின் பக்கத்தில் கருத்தாட நானும் வருகிறேன். என பொருள்படும் இதில் தனிநபர்தாக்குதல் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இதற்க்கு கிடைத்தபதில். எழுதப்பட்டது: சனி ஐப்பசி 22, 2005 4:23 am Post subject: -------------------------------------------------------------------------------- குஸ்புவுக்கு ஆதரவாகக் கதைப்பவர்களைக் கொல்ல வேண்டுமென்று சொன்னவர்களும் இந்த விவாதத்துக்கு வருவதாகச் சொன்னது (இன்னொரு இடத்தில் நடந்ததைக் காவுவதாக எனக்கு அன்பான மிரட்டல் வந்தபின்னும் இதைச் சொல்கிறேன். ஏனென்றால் ஒரேநபர்தானே எல்லாம் சொல்கிறார்?) இதுதான் சொல்லப்பட்டது, அதனால்தான் இவ்வளவும் எழுதப்பட்டது :wink: தனிநபர் தாக்குதல் இன்றி கருத்தான கருத்தாடலே எனதும் அவா. 8) - nallavan - 10-23-2005 பிருந்தன், நீங்கள் குஸ்பு பற்றிய விவாதத்தில் அப்படிச் சொன்னீர்களா? இல்லையே? பிறகேன் உங்களைத்தான் சொன்னதாக எடுத்துக் கொண்டீர்கள்? நான் சொன்னது வசிசுதாவுக்கு. (நகக்குறி பற்றிச் சொன்னது உங்களுக்குப் பொருந்திப்போனதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்) - Birundan - 10-23-2005 நா தடுமாறி நாக்குபற்றி கதைத்ததால்தான் இந்தபிரச்சனை. வசி சிரித்த சிரிப்பில் எனக்கு நாக்கு தொங்குவது தெரியவில்லை. மறப்போம் மன்னிப்போம், கருத்தான கருத்தாடலுக்கு வழிசமைபோம். - vasisutha - 10-23-2005 vasisutha Wrote:குஸ்புக்கு கோயில் கட்டினவங்கள கூட மன்னிச்சுவிடலாம்.. இதுவும் கூட வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டதே தவிர சீரியசாக அல்ல என்பது களத்தில் என்னைத் தெரிந்த எல்லோரும் புரிந்துகொள்வார்கள். நாங்கள் எந்தக்கருத்தையும் சீரியசாக எடுப்பது கிடையாது. ஏனென்றால் அப்படி விவாதம் செய்யும் அளவிற்கு எமக்கு மூளை கிடையாது. உங்களைப்போல நல்ல அறிவார்த்தமுடன் சிறந்தகருத்துக்களை எழுத எனக்கு தெரியாது. நாதனுக்கு நான் எழுதியதும் பகிடிக்குத்தான். அவர் அதற்கேற்ப நாகரிகமாக பதிலும் தந்துள்ளார் உங்கள் கருத்து களத்தில் எனது இமேஜை பாதிக்கிறது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> .அதனால் தான் இத்தனை விளக்கமும் கொடுக்வேண்டி வந்தது. ச்சே.. ஏன்பா என்னை இப்படி இடைக்கிடை சீரியசா எழுத வைக்கிறீங்கள்.. :evil: :x :twisted: :x :evil: :twisted: - tamilini - 10-23-2005 வசியை ரென்சன் ஆக வைக்கிறாங்க. அப்புறம் கையில வாயில ஏந்திக்கிட்டு களத்தில மிரட்டப்போறார். :? :wink: - Eelavan - 10-24-2005 சே. களப்பக்கம் ஒருநாள் வராவிட்டால் என்னைக் கழுவிக் காயப்போட்டுவிட்டார்கள். முதலில் ஆவன செய்வதாக உறுதியளித்த வலைஞனுக்கு நன்றி.விவாதத்திற்கு இடமளிக்க முடியாதென்றால் கூட பரவாயில்லை எனக்குத் தேவை ஆம்.இல்லை பதில்தான். அன்பின் பிருந்தனுக்கு.உங்கள் கருத்துக்கள் உங்களை வெளிப்படுத்திவிடுகின்றன நன்றி. நான் மற்றவர்களைப் போட்டுத்தாக்கும் அல்லது எனது சொந்தக் கருத்துக்களை எழுதும் வலைப்பதிவு கவிதை என்பது.அது தூக்கப்படவில்லை.மற்றைய பதிவுகள் காலத்திற்கேற்ற கோலம் கொள்ளாமையினால் தூக்கப்பட்டன அவற்றை ஓரிரு நாளில் துலங்க வைக்க என்னால் முடியும். அவற்றில் எழுதுவதெல்லாம் ஈழத்து இலக்கியம்,சஞ்சிகைகள் பற்றிய அறிமுகம்,குறும்பட அறிமுகம் தான் அவற்றையும் தூக்கப்பட்டன என்று உங்களுக்கே விளங்கிய வகையில் மொட்டையாகச் சொல்லி அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பொய் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். பழமொழிகள் மீது எனக்கு நிறையவே நம்பிக்கை உண்டு அவை தவறுவதில்லை என்பது எனது அனுமானம். நான் இங்கே களத்தில் கருத்தாட விரும்பியது பாலியல் பற்றி எம்மிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்த வேண்டுமென்றுதான்.ஒழிய முலையையும் பிருட்டத்தையும் பற்றிக் கதைத்து வாயில் வீணி வடிய திருப்திப் பட்டுக்கொள்ள அல்ல ஆனா ஆவன்னாவிலிருந்து சொல்லிய பிறகும்முலை என்றால் ஆபாசம் யோனி என்றால்தான் புரட்சியா என்கிறீர்கள். சின்னப்பிள்ளைகளை முதலில் தேவாரமும்,திருக்குறளும் படிக்காமல் தடுக்கப்பாருங்கள் அங்கேதான் அதிகமான ஆபாசச் சொற்கள் இருக்கின்றன. தப்பித்தவறி அவர்களை கோவில் பக்கமோ தேர்ப் பக்கமோ விட்டுவிடாதீர்கள்.உடலுறவின் பல்வேறு படிநிலைகளை வக்கிர புத்தி பிடித்த சிற்பிகள் கோவில் சிற்பத்தில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். சிவனும் உமையும் களிறும் பிடியுமாகிக் கலந்தார்கள் என்று சமயப் பாடத்தில் சொல்லியிருப்பதை நீக்க வழக்குப் போடுங்கள் அது அனிமல் செக்ஸ். ஆபாசம். பசி தாகம் போன்று பாலியலும் ஒரு சாதாரண உடல் வேட்கைதான் அதனை அசிங்கம் ஆபாசம் என்று சொல்லாமல் நாகரீகமா மாற்றினால்,பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கி வயதெல்லை நிர்ணயித்து அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்க் கொண்டுவந்தால் உலகில் பாதி பாலியல்க் குற்றங்கள் குறையும். பாதி பாலியல் நோய்களும் குறையும். உலகில் எயிட்ஸ் நோய் அதிகமாக இருப்பது திறந்த பாலியற் செயற்பாடுகள் உள்ள அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ அல்ல.பல நூற்றாண்டு மரபும் கலாச்சாரங்களும் உள்ள ஆபிரிக்க நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தான்.இந்தியா உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. நாங்கள் இங்கே கதைக்காவிட்டால் ஓரினச் சேர்க்கையும் அரவாணிகளும்,பாலியல் தொழிலாளர்களும் உலகில் இல்லையென்றாகிவிடுமா நான் திரும்பவும் பழமொழியை நம்புகிறேன். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடாது - தூயவன் - 10-24-2005 காலத்துக்கு ஏற்றவகையில் புரட்சிக்கு புறப்பட்டு போனவீரவான்களே... முற்போக்குச்சிந்தனை என்று சொல்லிக் கொண்டு உங்கள் செய்கைக்கு ஏன் பிற்கோக்குவாதத்திலிருந்து உதாரணம் காட்டி உங்களை சிறுமைப்படுத்திக்கொள்கின்றீர்கள். மார்பை பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா? அல்லது பிண்டத்தை பற்றி ஏதுமே தெரியாதா? விமர்சனம் செய்வதாகக் கூறி என்னத்தை அதில் சாதிக்கப்போகின்றீர்கள்? உங்கள் மனதில் தேங்கிநிற்கும் காம உணர்ச்சிகளை இலக்கியம் சார்பான விவாதம் என்ற பெயரில் தீர்த்துக் கொள்ளும் கபட எண்ணமே இது. |