![]() |
|
தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? (/showthread.php?tid=2744) Pages:
1
2
|
- MUGATHTHAR - 10-27-2005 நாரதரே உமது கருத்துத்தான் எந்த ஒரு சுறனையுள்ள தமிழ் மகனும் ஏற்றுக் கொள்வான் எமது போராட்டத்தின் இறுதி என்னவெண்டு எல்லாருக்கும் தெரியும் ஆனா ஒரேயடியாக பெறமுடியாததை படிப்படியாகத்தான் பெற முடியும் ஏனெணில் எமக்கு எந்த ஒரு வெளி நாட்டுச சக்திகளின் ஆதரவுமில்லை நான் இங்கு ரணில் வரவேண்டும் எண்டு வக்காளத்து வாங்கேலை ஆனா மகிந்தா வரப்பிடாது என்பதில்தான் அப்பிடிச் சொன்னன் இனவாதிகள் கூட்டுச் சேர்ந்தவுடனேயே இன்று கொழும்பில் என்ன நடக்கு தமிழ் இளைஞர்கள் எல்லாரையும் யாழ் போகச் சொல்லி ஆயுதக்குழு மிரட்டியிருக்கு இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மிரட்டப்பட்டவர்கள் காணாமல் போவார்கள் யுத்தம் நடந்தால் எமது வெற்றிகள் கிட்டும்தான் ஆனா அதேநேரம் எத்தனையோ தேவைகளுக்காக வெளியிடங்களில் இருக்கும் அப்பாவிகளின் நிலை என்ன முன்னைய போராட்ட காலங்களில் ஈழத்தில் சண்டை நடந்தாலும் வெளியிடங்களில் பயமில்லாமல் தமிழ்ர் போய்வர முடிந்தது இனவாதிகளிடம் நாடு போனால் இப்படியான தன்மை வருமா.................... நான் இங்கு இனவாதிகள் எண்டு கூறுவது ஜே.வி.பி யை - Danklas - 10-27-2005 போடுங்கய்யா வோட்டு மகிந்த மாத்தையவைபார்த்து,,, குத்துங்கய்யா வோட்டு ஒட்டுன்னி தலைவன் டக்கி***சை பார்த்து... 8) - narathar - 10-27-2005 முகத்தார் நீங்கள் பயப்படுற மாதிரி ஒண்டும் நடக்காது எல்லாம் நல்ல படியா நிதானமா படிப்படியா நடக்கும்.சர்வதேசத்தின் கண் இலங்கை மேல் இருப்பதால் 83 போல் நடக்காது.அப்படி நடந்தால் நாடு இரண்டு படும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.மேலும் மகிந்தர் என்ன தான் இனவாதம் பேசினாலும்,கடசியில காசு கொடுக்கிறது வெளி நாடுகள்.பாப்பமேன் என்ன நடக்குது எண்டு.மாவீரர் நாளோட எல்லாம் தெழிவா இருக்கும். - adithadi - 10-27-2005 ஈழம்வாழ் தமிழர்கள் விவேமாகம் என நினைத்துக்கொண்டு ராஜபக்சவிற்கு வாக்குகளை போட்டால் நாம் ஒற்றையாட்சியை ஆதரிக்கிறோம் என ஆகிவிடும். ஆதலால் இவ்தேர்தல் நாளில் நன்கு வீட்டில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். ராஜபக்சதான் வெற்றிபெற வேண்டும் என எல்லோரினதும் அவா, ஆனால் அவர் வட,கிழக்குவாழ் மக்களின் வாக்குகளால் வெல்லக்கூடாது. - அருவி - 10-28-2005 MUGATHTHAR Wrote:தேர்தலை புறக்கணிப்பதால் நீங்கள் இனவாதிகளுக்கு நாட்டை ஆளுவதுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறீங்கள் <b>நாமளும் சண்டைய விரும்பல..... 3 வருடங்களிற்கு மேலாக சந்தர்ப்பம் வழங்கியாச்சு- கொஞ்சநாளென்றால் இன்னும் எவ்வளவு காலத்திற்கு? கொஞ்சநாள் யுத்தமின்றி சத்தமின்றி வாழ்வதா துன்பங்களை இன்னும் ஒரு குறுகிய காலங்கள் சுமந்தபின் காலம் முழுக்க யுத்தமின்றி சத்தமின்றி மகிழ்வுடன் வாழ்வதா சிறந்தது? ஒரு விடுதலைப் போராட்டத்தை அரசாங்கங்கள் இழுத்தடிப்பது அப்போராட்டத்திலிருந்து மக்களைப்பிரிப்பதற்கும், அப்போராட்டத்தில் ஈடுபடும் போராளிகளின் மனவலிமையைச் சிதைப்பதற்குமேயன்றி வேறல்லை </b>
- kurukaalapoovan - 10-28-2005 விடுதலைப்புலிகள் ஏட்டை அன்பளிப்பும் வேண்டாம் தொளிவு பெறுங்கோ எண்டு இலவசமா விட்டாலும் எங்கடையள் முன்னேறாது. தினமுரசை காசுகுடுத்து வேண்டி நுனிப்புல் மேஞ்சு போட்டு யாருக்கு குத்திறுது எண்டு குளம்பி தங்களுக்கு தாங்களே இன்னொருக்கா காது குத்த நிக்குதுகள். http://www.yarl.com/forum/viewtopic.php?t=...6824&highlight= http://www.yarl.com/forum/viewtopic.php?t=...7013&highlight= நான் எண்டால் அருமைக்குரிய சமாதான தேவனுக்குத்தான் போடுவன். அந்த தொழிவை தந்த பிருந்தனுக்கு நன்றி. - Vasampu - 10-28-2005 இந்த விடயத்தில் ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுத்துவிட முடியாது. அதேபோல் தேர்தலைப் புறக்கணிப்பதும் நல்லதல்ல. முதலில் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் தற்போது சிறுபான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது. அப்படியொரு நிலையை ஜே.ஆர.ஜெயவர்த்தனா முன்பே ஏற்படுத்திவிட்டார். வேண்டுமாயின் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களில் மட்டுமே வித்தியாசங்களைக் காட்ட உதவும். இதனை சென்றமுறை சந்திரிக்காவும் நிரூபித்து விட்டார். தற்போதுள்ள நிலைமையில் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போவது தென்னிலங்கை மக்களின் வாக்குகளே. அப்படிப் பார்க்கும் போது தென்னிலங்கையில் மகிந்தவிற்கே ஆதரவு அதிகமாகவுள்ளது. சிறுபான்மை மக்கள் வாக்குப் போடாமல் விடுவதாலோ அல்லது அந்த வாக்குகளை செல்லுபடியற்றதாக மாற்றுவதாலோ அது வெல்பவரைப் பாதிக்கப் போவதில்லை. மாறாக வெல்லக் கூடிய ஒருவருக்கு அவ்வாக்குகள்; செல்லுமிடத்தில் அவருக்கு பெருண்பான்மை அல்லது அறுதிப் பெருண்பான்மை கிடைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். இதனால் என்ன நன்மையென நீங்கள் கேட்கலாம். தற்போதய மகிந்தவின் இனவாதச் சிங்களக் கட்சியுடனான ஒப்பந்தங்கள் யாவும் ஒரு இராஜதந்திரமே!!! மகிந்த பலகாலமாக அரசியலிலும் பொறுப்பான பதவிகளிலும் இருந்திருக்கின்றார். ஆனால் அவர் இன்றுவரை சிறுபான்மை மக்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டது கிடையாது. அத்துடன் மகிந்த வென்று ஆட்சிக்கு வந்தால் அவரது முதல் வேலை பண்டாரநாயக்காவின் குடும்பத்தாரை அரசியலிலிருந்து ஓரம் கட்டுவதாகவேயிருக்கும். அதேபோல் மகிந்த பெருண்பான்மையுடன் வெற்றிபெற்று வந்தால் இந்த சிங்கள இனவாதக் கட்சிகளினால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. அதுபோல் அறுதிப் பெருண்பான்மையுடன் ஜெயித்து வந்தால் அரசியல் சட்டங்களில் மாற்றங்களை செய்வதற்கும் வழி கிடைக்கும். இவையெல்லாவற்றையும் விட மேலாக தற்போதய வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையின் பொருளாதாரநிலை வெளிநாடுகளை எதிர்த்துக் கொண்டு சிறுபான்மை மக்களைப் பாதிக்கும் செயல்களை ஆட்சிக்கு வரும் எவரினாலும் செய்ய முடியாது. எனவே மகிந்த வென்று வந்தால் டக்ளஸ் போன்றவர்களின் சுயதம்பட்டங்களுக்குத்தான் வழிவகுக்கும் போன்ற தப்பாண எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு எதிர்காலத்தை நன்கு சிந்தித்து நிகழ்காலத்தை தீர்மானிப்பதே நன்கு சிறந்தது. - Vasampu - 10-28-2005 Vasi wrote: ரணிலுக்கு குத்திட்டன் :roll: என்ன வசி பாவம் ரணில். எங்கெ குத்தினீர் முகத்திலா அல்லது மூக்கிலா??? :roll: :roll: - Niththila - 10-28-2005 Vasampu Wrote:Vasi wrote: கையாலயா இல்ல கையில இருக்கிற கத்தியால குத்தினனீங்களா வசி அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kurukaalapoovan - 10-30-2005 http://www.pathivu.com/content/nilavaram/d...ilavaram16.smil |