Yarl Forum
இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி? (/showthread.php?tid=2689)

Pages: 1 2


- kuruvikal - 10-30-2005

tamilini Wrote:என்ன இப்படிச்சொன்னா எப்படி கறுப்புத்தமிழனுக்கு மீசை தானே பொக்கிசம்
:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது அவங்களுக்கு புரியல்லைப் போல..! அதுதான் சொல்லி சிரிக்காங்க..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- iruvizhi - 10-30-2005

நக்கீரன் கோபால் அண்ணனுக்கும் ஒரு மீசை இருக்கின்றது உண்மையிலேயே அவர் மீசை சிறப்புவாய்ந்தது.


- Selvamuthu - 10-30-2005

இலங்கைத் தமிழரை இலகுவாக அறிந்துகொள்வதற்கான 10 வழிகள். (நேரில் கண்டவை, காண்பவை)

1. தமிழரைக் கண்டாலும் தமிழிலே கதைக்கமாட்டார்கள்
2. தமிழர் கூட்டங்களிலும் ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள்.
3. தமது பிள்ளைகள் எல்லோரும் டாக்டர்களாக வரவேண்டும் என்றே எண்ணுவார்கள். இல்லையென்றால் தம் வாழ்வே முடிந்துவிட்டதாகக் கலங்குவார்கள். எவ்வளவு பணம் செலவானாலும் உலகின் எந்தப் பகுதிக்காயினும் அனுப்பி டாக்டருக்குப் படிக்க வைப்பார்கள். இறுதியில் தாம் நோயாளிகளாக அலைவார்கள்.
4. இடியப்பம் சொதி, சம்பலுடன் சாப்பிடுவார்கள்.
5. ஒரு பிள்ளைக்கு (பிள்ளை தயாரில்லாவிட்டாலும் பரவாயில்லை)3 அரங்கேற்றங்களும் செய்வார்கள்.
6. பெயருக்காவும், புகழுக்காகவும் பணத்தை தண்ணிபோல் செலவு செய்வார்கள்.
7. குளிர் காலத்திலும் வெறும் "சேட்" அல்லது "ரி-சேட்" உடன் வெளியே செல்வார்கள்.
8. கலியாண வீடுகளில் காப்புக்கள் அணிந்த கையை நாடியில் ஊன்றியபடியே மற்றவர்களுடன் கதைப்பார்கள்.
9. பொது இடங்களில் பதவியில் ஒருமுறை அமர்ந்துவிட்டால் இறங்கவே மாட்டார்கள். தமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று எண்ணுவார்கள்.
10. சீட்டுக் கட்டுவார்கள், எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டும் ஓடுவார்கள்.


- Netfriend - 10-31-2005

tamilini Wrote:
Quote:நானும் தமிழிச்சி
இதைப்பத்தி ஒன்றும் கேக்காட்டா நான் தமிழச்சி இல்லாமல் போயிடுவனா??
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->:?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Netfriend - 10-31-2005

8) Idea :? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Thiyaham - 10-31-2005

சண்முகி எழுதிய விடயங்கள் அத்தனையும் ஒரு வருடத்திற்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் forwarded e-mailஅனுப்பியிருந்தார்.ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள்.


- Birundan - 10-31-2005

Selvamuthu Wrote:இலங்கைத் தமிழரை இலகுவாக அறிந்துகொள்வதற்கான 10 வழிகள். (நேரில் கண்டவை, காண்பவை)

1. தமிழரைக் கண்டாலும் தமிழிலே கதைக்கமாட்டார்கள்
2. தமிழர் கூட்டங்களிலும் ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள்.
3. தமது பிள்ளைகள் எல்லோரும் டாக்டர்களாக வரவேண்டும் என்றே எண்ணுவார்கள். இல்லையென்றால் தம் வாழ்வே முடிந்துவிட்டதாகக் கலங்குவார்கள். எவ்வளவு பணம் செலவானாலும் உலகின் எந்தப் பகுதிக்காயினும் அனுப்பி டாக்டருக்குப் படிக்க வைப்பார்கள். இறுதியில் தாம் நோயாளிகளாக அலைவார்கள்.
4. இடியப்பம் சொதி, சம்பலுடன் சாப்பிடுவார்கள்.
5. ஒரு பிள்ளைக்கு (பிள்ளை தயாரில்லாவிட்டாலும் பரவாயில்லை)3 அரங்கேற்றங்களும் செய்வார்கள்.
6. பெயருக்காவும், புகழுக்காகவும் பணத்தை தண்ணிபோல் செலவு செய்வார்கள்.
7. குளிர் காலத்திலும் வெறும் "சேட்" அல்லது "ரி-சேட்" உடன் வெளியே செல்வார்கள்.
8. கலியாண வீடுகளில் காப்புக்கள் அணிந்த கையை நாடியில் ஊன்றியபடியே மற்றவர்களுடன் கதைப்பார்கள்.
9. பொது இடங்களில் பதவியில் ஒருமுறை அமர்ந்துவிட்டால் இறங்கவே மாட்டார்கள். தமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று எண்ணுவார்கள்.
10. சீட்டுக் கட்டுவார்கள், எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டும் ஓடுவார்கள்.

இந்த பண்புகள் எதுவுமே இந்திதமிழரிடம் இல்லையா?
சீட்டுக்காசை சுருட்டிக்கொண்டு ஓடாத எவரும் இல்லையா? சுருட்டாதவர்கள் இலங்கைத்தமிழர் இல்லையா? சீட்டு யார் கட்டுகிறார்கள்(தாச்சி) அவர்கள் அனைவரும் இந்திய தமிழரா? அல்லது இவை அனைத்தும் உங்கள் அனுபவ உதாரணங்களா? "மல்லாக்கா படுத்திருந்து எச்சி துப்புனா உங்க முகத்திலதான் விழும்" செல்வமுத்து. :wink:


- Niththila - 10-31-2005

என்ன அனியாயமா கிடக்கு பாவை எழுதிய குணங்கள் இல்லாட்டி அவை இலங்கைத் தமிழர் இல்லையா

தமிழாசிரியர் செல்வமுத்துவின் கருத்துகள் ஆட்சேபனைக்கு உரியவை


- Thiyaham - 10-31-2005

வாடகை வீட்டில் இருப்பதை கேவலமாக நினைப்பவர்கள். சொந்தமாக வீடு வாங்கி, தமது சந்தோசங்களை எல்லாம் துறந்துவிட்டு வீட்டுக் காசு(குறைந்தது இரு வேலைகள்) கட்டுவதற்கு மட்டும் உழைப்பவர்கள். மனைவி பிள்ளை குட்டிகளை நித்திரையில் மட்டும் காண்பவர்கள்


- adithadi - 10-31-2005

1. தமிழ்மொழிமேல் மிகுந்த பாசம் கொண்டவர்கள்.
2. பணத்தை நன்கு செலவழிப்பார்கள்.
3. வீட்டிற்கு வருபரை நன்கு உபசரித்து அனுப்புவார்கள்.
4. வர்த்தகம் செய்வதில் அலாதிபிரியம் உடையவர்கள்.
5. நான்கு இலட்சம் டாலர் வீட்டை நான்கு டாலர் போல் வேண்டுவார்கள்.
6. இறைவன்மேல் ஆதீத நம்பிக்கை உடையவர்கள்.
7. பிறர்ருக்கு உதவிசெய்யும் மனப்பாங்கு உடையவர்கள்.
8. கட்சிகள் துவங்குவார்கள், பின் தூங்கிவிடுவார்கள்.
9. ஒரு வேலையையும் 100% மனத்துடன் செய்யமாட்டார்கள்.
10. தண்ணி அடிப்பதில் மன்னர்கள்.


- Selvamuthu - 10-31-2005

பிருந்தன், நித்திலா
இது ஓர் நகைச்சுவை கலந்த ஆரோக்கியமான போட்டிதான். கோபப்படுவதற்கோ, ஆட்சேபிப்பதற்கோ உள்ள கருத்துக்கள் அல்ல. "அத்தனையும் உண்மைகள்". அதனைத்தான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். ஏன் சீட்டு என்றதும் பிருந்தன் அதிகமாகக் கோபிக்கிறார்? எத்தனையோ தெரிந்தவர்கள் இந்தச் "சீட்டு" க்கட்டி ஏமாற்றப்பட்டதை இங்கே அறிகிறேன். அப்படிப்பட்ட ஒருவர் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்து இங்கே பொதுசேவைக்குள் நுழைய முயல்கிறார். அண்மையில் ஒருவர் தனது பிள்ளைக்கு 3 ஆவது அரங்கேற்றம் செய்தார். இன்னமும் செய்யப்போவதாகவே அறிகிறோம் இத்தனைக்கும் அங்கு சென்று பார்த்திருந்தால்தான் தெரிந்திருக்கும். அரங்கேறியவர் அரைவாசிகூட தயாரில்லை. அரங்கேற்றம் செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார் என்பதே பலருடைய பேச்சாக இருந்தது. வீணாக விரயம் செய்யும் பணத்தை வேறு நல்ல விடயங்களுக்குக் கொடுக்கலாம்தானே. உலகமெங்கும் இலங்கைத் தமிழர்களை நம்பி பலர் வாழ்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் எமக்கு ஏற்படுகின்ற துயரங்களைத் துடைக்க அவர்கள் வருவார்களா? இன்னமும் நாம் ஏமாளிகளாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படியான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என்பதும் உண்மைதானே!


- Rasikai - 10-31-2005

அடுத்தாற்று அம்புஜத்தை பார்த்தேலா
அடுத்த வீட்டுச்சங்கதி எல்லாம் நமக்கெதுக்கு :oops:


- adithadi - 10-31-2005

செல்லமுத்து:

சீட்டு போட்டு மற்றவரை ஏமாற்றுவது, மற்றும் அரைகுறை அரங்கேற்றம் எல்லாம் எம் சமூகத்தில் நடப்பது மிகவும் அரிதே. ஒரு இலட்சம் தமிழரில் ஒருவர் அப்படியிருக்கலாம், அப்படியிருக்கும்போது முழு சமூகமும் சீட்டுகட்டி ஏமாற்றுவர் அல்ல. உமது தலைப்பு "இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?" அதாவது பெரும்பான்மையான தமிழர்களை எப்படியான பழக்கவழங்களை கொண்டிருக்கிறார்கள் என்பதே.


- Danklas - 11-01-2005

சன்முகி செல்வமுத்து இதெல்லாம் ரொம்ப ரூ மச்.. இலங்கை தமிழர்களை எண்டு போட்டது மகா தவறு... இப்படி நீங்க தலைப்பை போட்டு அதற்கு வேற விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறீங்க.. ஒருரி தமிழர்கள் சரி ஒரு 15% மக்கள் செய்கிறார்கள் எண்டு வைப்பமே, அது ஒட்டு மொத்த இலங்கை தமிழரையும் குறிக்குமா?

அதைவிட சண்முகி நீங்கள் கொண்டுவந்து போட்டதை நகைச்சுவைகளுக்க போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும்,, எனென்றால் தலைப்பை இலங்கை தமிழரை இனம்காணுவது எப்படி எண்டு போட்டிருந்தியள் ஆனால் கிழே சொல்லப்பட்டவிடயங்கள் சாதரணமாக மனிதர்கள் செய்வதுதான்.

ஐரோப்பா சமுகத்தை எடுத்துக்கொண்டாலே இதைவிட கேவலமாக செய்வார்கள் சொன்னால் எங்கள் இனம் எவ்வளவோ மேல் எண்டு படும். ஒட்டுமொத்த தமிழரும் அப்படி செய்வாங்க எண்டு போட்டதை வன்மையாக கண்டிகிறேன். அதற்கு விளக்கம் கொடுத்த தமிழ் வாத்தியாரை கொஞ்சமாக கண்டிக்கிறேன். :wink: :evil: :evil:


- SUNDHAL - 11-01-2005

யோவ் இதுல என்ன தப்பு வேண்டி இருக்கு?
ஆஆ? அவர் .லங்கை திமிழரா இருப்பார் சோ அதிக உரிமை எடுத்து இலற்கை தமிழர்ன்னு போட்டு இருப்பார்? ஏன் அதெல்லாம் நம்மட ஆக்கள் செய்யிறலன்னு சொல்ல வாரேலா?
அதுல சொன்னுது எல்லாமே நம்மட ஆக்கள செய்றது தானப்பா.........
சும்மா எதுக்கெடுத்தாலும் ஏன் இந்திய திமிழரபோடல அது இதுனுட்டு எப்பவுமே அவங்கல வம்புக்கு இலுத்து கொண்டு... :evil: :evil: :evil:
நம்ம பத்திதான்ப்பா நாம் சொல்ல முடியும்..


- Birundan - 11-01-2005

செல்லமுத்து இதில் எங்க நகைச்சுவை இருக்கு எங்க ஆரோக்கியமிருக்கு, இது என்ன போட்டி? ஒருசிலர் செய்யும் தவறைக்கொண்டு ஒட்டுமொத்த இலங்கைத்தமிழரையும் அவமானப்படுத்தி இருப்பதாகவே எனக்கு தெரிகிறது, நகைச்சுவை என்றால் நகைச்சுவை பகுதியில் போட்டிருக்கவேணும்,எங்கள் இனத்தை நாமே நக்கல், நளினம் பண்ணினால், மற்றவன் செய்ய எவ்வளவு நேரமாகும். தவறுகள் செய்பவர்களும் இருக்கிறார்கள்தான், அதை திருத்தவேண்டும், வாத்தியாரே நக்கல் பண்ணினால் வாத்தியாரிட்டை படிக்கும் பிள்ளைகள்? எங்கள் இடத்திலும் நாம் சீட்டு போட்டோம் ஒரு பதினைந்து பேர் சேர்ந்து ஒருத்தன் சீட்டை எடுத்துக்கொண்டு லண்டனுக்கு ஓடிட்டான், இன்னொருத்தன் சீட்டை எடுத்துக்கொண்டு கனடாவுக்கு ஓடிட்டான், இத்தனைக்கும் எம்மோடு சாப்பிட்டு, பழகியபெடியள், எந்த புத்தில் எந்த பாம்பிருக்கோ யார்கண்டது, உங்கள் கருத்துப்படி இவர்கள் இருவரும்தான் இலங்கைத்தமிழர் மிச்சம் பதின்மூண்றுபேரும், பொறுப்பு நின்றதால் அவர்கள் சுத்தியகாசை போட்டுக்கட்டியவரும், இந்தியத்தமிழரா? அல்லது இலங்கைச்சிங்களவரா? இந்த இருவரும் செய்த பிழைக்காக மற்ற பதிமூண்றுபேருக்கும் தண்டனையா? இது எந்த ஊரு ஞாயம். :wink:


- SUNDHAL - 11-01-2005

ஆனா சீக்கியர்களோட ஜோக்போட்டா நன்னா சிரிப்பாங்கப்பா..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 11-01-2005

சர்தாஜி ஜோக்கை சொல்லுறீங்களா?? ஒரு ஜோக் ஒண்டு,, சர்தாஜி ஒருவர் ரெயின் ஓட்டுனராக இருந்தார், அப்போ ஒரு முறை 200,250 பிரயாணிகளுடன் ரெயின் போய்கொண்டு இருக்கிறது அப்பக்கை திடிரெண்டு ரெயின் தண்டவாளத்தை விட்டு ஒரு தோட்டத்துக்குள் சென்று திரும்ப தண்டவாளத்துக்கு வந்த பொழுது அதில் இருந்த எல்லோரும் திடிரெண்டு ரெயினை நிறுத்தி அந்த சர்தாஜியை பார்த்து கேட்டாங்களாம் என்ன நடந்தது ஏன் தண்டவாளத்தை விட்டு விலகி தோட்டத்துக்கள்ள சென்றது எண்டு அதற்கு சர்தாஜி சொன்னாரம் ஒருத்தன் தண்டவாளத்தின் மேல நடந்து சென்று கொண்டு இருந்தான் அதுதான் எண்டாராம், அதற்கு பிராயணிகள் கேட்டார்களாம் இந்த ரெயினுக்க 200 பேருக்கு மேல இருக்கிறம் இவர்களை விட அந்த ஒருத்தனின் உயிர் முக்கியமா போச்சா உமக்கு எண்டு.. அதுக்கு உடன சர்தாஜி சொன்னாராம் எனக்கு அது தெரியும் பட் தண்டவாளத்தில போனவன் திடிரெண்டு ரெயினை கண்டுட்டு பக்கத்த இருந்த தோட்டத்துக்குள்ள ஓடிட்டான் எண்டாராம்.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 11-01-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil: :evil: :evil:


- simran2005 - 11-02-2005

1.கோழி கறி மணக்கிறதா
2.கோட் சுூட் போட்டு சந்தணம் குங்குமம் வய்திர்ப்பார்
3கடன் கேட்பார் அல்லது வட்டிக்கு கூடுப்பார்
4.ஆட்டுஇறச்சியும் போத்தலும் வேண்டுபவர்