![]() |
|
சினிமா கேள்வி பதில் போட்டி ... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: சினிமா கேள்வி பதில் போட்டி ... (/showthread.php?tid=2654) |
- அனிதா - 11-03-2005 [quote=RaMa]நடிகையின் பெயரில் வெளியான திரைப்படம்? ரோஐா நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்?? சிவாஐி இசைஅமைப்பாளரின் பெயரில் வெளியான திரைப்படம்?? தேவா இடத்தின் பெயரில் வெளியான திரைப்படம்? பம்பாய் ஓரே பெயரில் வெளியான 2 திரைப்படம்?? ஒரெ கதையில் வெளியான 2 திரைப்படம்?? கிட்லர்(மம்முட்டி நடித்தது) ரைகர் (சத்தியராஐ் நடித்தது) அட அட நல்லா யோசித்து கண்டுபிடித்திருக்குறீங்க .. ம்ம் நானும் யோசித்தன் ஒண்டும் நினைவில் வரயில்லை..சரி விஸ்ணு வந்து சரியா என்று சொல்லட்டும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 11-03-2005 ம்ம் சரி தான் அனிதா... ஆனால் ஒரே பெயரில் வெளியான திரைப்படம் தான் தெரியல... நாளைக்கு விஷ்ணு என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம்.... - Vasampu - 11-03-2005 சிவாஜி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லையே. எனவே அதனைப் பதிலாக எடுக்க முடியாது. அன்புள்ள ரஜனிகாந்த் எடுக்கலாம். ஒரே பெயரில் வந்த திரைப்படங்கள்: உத்தமபுத்திரன் - பி.யு.சின்னப்பா நடித்தது. உத்தமபுத்திரன் - சிவாஜி நடித்தது. இருவரும் இரு வேடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. நல்லதம்பி - என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தது. நல்லதம்பி - கார்த்திக் நடித்தது. - nallavan - 11-03-2005 சதிலீலாவதி என்ற பெயரிலும் இரு தமிழ்ப்படங்கள் வெளிவந்துள்ளன. இறுதியாக வந்த சதிலீலாவதி கமல், கோவை சரளா, ஹிரா நடித்த பாலுமகேந்திராவின் படம். முந்தையது பற்றித் தெரியவில்லை. அதிக நாட்கள் ஓடிய தமிழ்ப்படம் கரகாட்டக்காரன் அன்று. தியாகராஜபாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம்தான் அதிகநாட்கள் ஓடிய தமிழ்த்திரைப்படம். ஏறத்தாள 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடிச் சாதனை படைத்தது இப்படம். - nallavan - 11-03-2005 சரி. நானொரு கேள்வி கேட்கிறேன். தமிழ்ச்சினிமாவில் பெண்கவிஞர் ஒருவர் முதன்முதல் எழுதிய பாடல் எது? அதை எழுதியவர் யார்? - Vasampu - 11-03-2005 nallavan wrote: சதிலீலாவதி என்ற பெயரிலும் இரு தமிழ்ப்படங்கள் வெளிவந்துள்ளன. இறுதியாக வந்த சதிலீலாவதி கமல், கோவை சரளா, ஹிரா நடித்த பாலுமகேந்திராவின் படம். முந்தையது பற்றித் தெரியவில்லை. நல்லவன் நீங்கள் குறிப்பிட்ட சதிலீலாவதி படமும் சரியான விடைதான் முன்னைய சதிலீலாவதி திரைப்படம்தான் எம்.ஜி.ஆரின் முதல்த் திரைப்படம்.
- Vasampu - 11-03-2005 nallavan wrote: சரி. நானொரு கேள்வி கேட்கிறேன். தமிழ்ச்சினிமாவில் பெண்கவிஞர் ஒருவர் முதன்முதல் எழுதிய பாடல் எது? அதை எழுதியவர் யார்? ஒளவையாரின் பாடல்கள் ஏற்கனவே சினிமாவில் பயன்படுத்தப் பட்டுள்ளன...... அப்படிப் பார்த்தால் ஒளவையார் தான் விடை :roll: :?: :?: - Selvamuthu - 11-03-2005 வசம்புவின் பதில் அரைவாசிதான் சரி. சறோஜாதேவி நடித்த முதல் படம் நாடோடி மன்னன் சரியான பதில். அந்தப்படம் ஆரம்பத்திலிருந்து கறுப்பு வெள்ளைப் படமாக எடுத்திருந்தார்கள். ஆனால் சறோஜாதேவி வரும் காட்சியிலிருந்து "கலரில்" எடுத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 50 வீதம் கறுப்பு வெள்ளையாகவும் 50 வீதம் கலரிலும் எடுத்திருந்தார்கள். இதனால்தால் அதன் பிறகு வெளிவந்த கலர் படங்களை "முழு நீள வர்ணப்படம்" என்று குறிப்பிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் எல்லாப் படங்களும் கலரிலேயே வெளிவருவதால் இப்படியாகக் குறிப்பிடுவதில்லை. வாழ்த்துக்கள் தெரிவித்த மாணவர்கள் அனைவருக்கும் நன்றி. - Vasampu - 11-03-2005 என்னைப் பெயிலாக்காமல் 50வீதப் புள்ளிகளை வழங்கி திறமைச் சித்தியடைய வச்ச எமது கள தமிழாசிரியருக்கு ஆனந்த உடன் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
- Birundan - 11-03-2005 Vasampu Wrote:என்னைப் பெயிலாக்காமல் 50வீதப் புள்ளிகளை வழங்கி திறமைச் சித்தியடைய வச்ச எமது கள தமிழாசிரியருக்கு ஆனந்த 50% திறமைசித்தியா????????????????????????????? hock:
- Vasampu - 11-03-2005 Birundan wrote: 50% திறமைசித்தியா????????????????????????????? என்ன பிருந்தன் பாடசாலைப் பக்கம் போனதில்லையா????? :roll: :roll: 35 தொடக்கம் 49 வரை சாதரணசித்தி 50 தொடக்கம் 75 வரை திறமைச்சித்தி 76 தொடக்கம் 90 வரை விடேசித்தி 91 தொடக்கம் 100 வரை அதிவிசேடசித்தி - Birundan - 11-03-2005 Vasampu Wrote:Birundan wrote: மழை என்றா ஒதுங்கி இருக்கம், அதுவும் லீவுநாளில் மட்டும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 11-03-2005 பிறகென்ன உங்களுக்கு எல்லா நாளுமே லீவுநாள்த்தானே பிருந்தன். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Birundan - 11-03-2005 Vasampu Wrote:பிறகென்ன உங்களுக்கு எல்லா நாளுமே லீவுநாள்த்தானே பிருந்தன். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தப்பா நினச்சீட்டிங்க எனக்கல்ல பள்ளிக்கூடத்துக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 11-03-2005 அடடா பள்ளிக்கூடம் தப்பிற்றுது என்று சொல்லுரீங்க!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 11-04-2005 <i>அடுத்த கேள்வி:</i> முதன் முதலில் எந்த தமிழ் திரைப்படத்தில் <b>slow motion</b> காட்சிகள் காண்பிக்கப்பட்டது? :?: - Vasampu - 11-04-2005 வசந்தமாளிகை திரைப்படத்தில் இடம்பெற்ற மயக்கமென்ன இந்த மௌனமென்ன என்ற பாடல்க் காட்சியில் என்று நினைக்கின்றேன். சரியா வசி - vasisutha - 11-04-2005 சரியான விடை வசம்பு அண்ணா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அம்மாவும் அந்தபடம் என்றுதான் சொன்னார்.. சரி அடுத்த கேள்விய கேக்கிறீங்களா? :wink: - Vasampu - 11-04-2005 சரி வசி கேள்வியைக் கேட்கின்றேன். தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களுடன் படங்கள் வந்துகொண்டிருந்தபோது முதன்முதலாக பாடல்களே இல்லாமல் ஒரு படம் வெளிவந்தது. 1)அந்தத் திரைப்படத்தின் பெயர் என்ன? 2) படத்தின் கதாநாயகன் கதாநாயகி யார்? - Birundan - 11-04-2005 பேசும்படம் கமல்ஹசன்_ ? .................................................. |