Yarl Forum
சர்ச்சைக்குரிய தபால்தலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: சர்ச்சைக்குரிய தபால்தலை (/showthread.php?tid=2631)

Pages: 1 2 3 4


- SUNDHAL - 11-04-2005

சும்மா வதாண்டா வாதம் எதுக்கு இத சும்மா விட கூடாது இந்துக்கள தான் அவமாணபடுத்தி இருக்கினறார்கள்...
அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் இதே வேளையா போச்சு...இது மட்டும் இங்க நடக்கட்டும் சும்மா விட்டிடுவமா...உடுக்கு என்ன உடுக்கு பார்லிமெண்டுக்கு முண்ணால போய் சங்கு ஊதிட மாட்டம்... :evil: :evil: :evil:


- adithadi - 11-04-2005

வசம்பு: இதில் யாரையும் அவமானப்படுத்தியாக எனக்கு தெரியவில்லை. எனினும் ஒரு கேள்வி!
நாம் வெள்ளையரை வேட்டி,தலைப்பாகை கட்டி பொங்கலுக்கு தபால்தலை வெளியிட்டால் இவர்களும் போரட்டம் நடத்துவர்களா? சிரிப்புதானே வருகிறது.


- vasisutha - 11-04-2005

இந்த தபால்தலை பற்றி <b>Royal Mail</b> வெளியிட்டிருக்கும்
குறிப்பு இது

Arrow
<b>Madonna and the Infant Jesus</b> 68p
<img src='http://www.royalmail.com/IMAGE/MediaItemRepository/17300318_xmas_latest_68.gif' border='0' alt='user posted image'>


A Mughal painting from India, dating from around
1620-1630 AD, making it the oldest in this Christmas
collection. Although the artist is unknown, this piece
hangs in a collection at the Chhatrapati Shivaji Maharaj
Vastu Sangrahalaya in Mumbai 'formerly the Prince of
Wales Museum.


இதனுடன் சேர்த்து மொத்தம் 6 முத்திரைகள் வெளிவந்திருக்கிறது.

<img src='http://www.royalmail.com/IMAGE/MediaItemRepository/17300314_xmas_latest_2nd.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.royalmail.com/IMAGE/MediaItemRepository/17300315_xmas_latest_1st.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.royalmail.com/IMAGE/MediaItemRepository/17300316_xmas_latest_42.gif' border='0' alt='user posted image'>

<img src='http://www.royalmail.com/IMAGE/MediaItemRepository/17300317_xmas_latest_60.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.royalmail.com/IMAGE/MediaItemRepository/17300319_xmas_latest_112.gif' border='0' alt='user posted image'>



நத்தாருக்கான சிறப்பு வெளியீடாக இவை அமைந்துள்ளது.
இத்தளத்தின் மூலம் இவற்றை வாங்கவும் முடியும்..
(திரும்ப பெறுவதற்கு முன் வாங்கிவைக்கலாம்..
எப்படி ஐடியா?? :wink: )

http://www.royalmail.com/portal/rm/content...ediaId=22600462


- kuruvikal - 11-04-2005

ஜேசு கிறிஸ்தவ மதத்தை உருவாகச் சொல்லவில்லை...! அவர் எல்லா மனிதருக்கும் பொதுவானவர்..! எனவே எவரும் அவருடைய சித்தாந்தங்களை அறிய பின்பற்ற முனைவதை...ஏன் வித்தியாசமா பார்க்கனும்..! அவரே சொல்லிட்டார் தான் கடவுள் இல்லை... நான் ஒரு தூதன் மட்டுமே என்று..! தான் எல்லோருக்கும் பொதுவாவன் என்று.! எனவே மனிதர்களாக எவரும் அவரைப் பின்பற்றலாம்..! விரும்பின் வணங்கலாம்..(அவர் சொல்லவில்லை தன்னை வணங்கச் சொல்லி) அதை முத்திரையில் பதிப்பதில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை..!

வெள்ளையர்களைப் பொறுத்தவரை...அவர்கள் தங்கள் சொந்த தேசத்தில் வாழ்பவர்கள் அனைவருக்கும் எல்லாவிதத்திலும் இயன்றளவு பாகுபாடில்லாத சுதந்திரம் கொடுக்கின்றார்கள்...! அதை அனுபவிக்கும் இந்துக்கள் சரி முஸ்லீம்கள் சரி இதில் என்ன தவறு கண்டுவிட்டார்கள் பெரிதாக... அப்போ இந்தியா போல மதச் சண்டை பிடிக்கனுமா இங்கும்..!

இந்த முத்திரை... ஜேசு என்பவர் எல்லோருக்கும் சொந்தமான... சக மனிதன் என்பதையே காட்டுது...! அல்லது பண்டிகைக் காலம் என்பது எல்லோருக்கும் பொதுவானது...அதென்ன கிறிஸ்மஸ் விடுமுறை என்பது எல்லாருக்கும் எனும் போது குதூகலிக்கும் மற்ற மதத்தவர்கள்...இதில் மட்டும் வேற்றுமை பாராட்டுகின்றனர்..! எங்களுக்கு கிறிஸ்மஸ் விடுமுறற வேண்டாம் என்று சொல்லட்டும் பார்ப்போம்..!

எதுஎப்படியோ... றோயல் மெயிலின் இந்த முயற்சி பாராட்டத்தக்கதே...! இது உலகெங்கும் தனது கருவைத் தாங்கிச் சென்று பல உளவியல் மாற்றங்களை உருவாக்க வாழ்த்துக்கள்..! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea


- sathiri - 11-04-2005

அவர்கள் முத்திரை விடுவது இருக்கட்டும் நீங்கள் இந்துக்கள் புலத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடுவதனையும் அவர்கள் புது வருடத்தை கொண்டாடி வாழ்த்து தெரிவிக்கவும் கூட்டம் கூட்டமாய் கிறீஸ்தவ ஆலயங்களிற்கு உதாரணத்திற்கு பிரான்சில் லூர்து சார்த் யெர்மனியில் கேவலார் சுவிஸ் பாசல் மாதா போன்ற கோயில்களிற்கு போவத்ற்கு எதிராக அய்ரோப்பியன் வழக்கு போட்டா எப்படி இருக்கும் .அதை விட கிறீஸ்த்தவ நாடுகளில் உங்கள் வழிபாட்டு தலங்களிற்கு இடமில்லையெண்டால் ஒருகணம் யோசியுங்கள்


- Mathan - 11-04-2005

ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மற்றய மதத்தை வழிபடுவதில் தவறேதும் இல்லை, இந்து மதத்தவர்கள் யேசுவையோ, அல்லது கிறித்தவ மதத்தவர்கள் புத்தரையோ வழிபடுவதில் ஒரு தவறும் இல்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் இன்னொரு மதத்தை வழிபடுபதாக முத்திரை வெளியிடும்போது அது ஒரு மதத்தை உயர்த்தி மற்றய மதத்தை தாழ்த்துவது போல தோற்றமளிப்பதே எதிர்ப்புகள் கிளம்ப காரணம், ஒவ்வொரருக்கும் ஒவ்வொரு மத நம்பிக்கைகள் இருக்கின்றன, நாம் அவற்றை மதித்து நடக்கலாமல்லவா.

பொதுவா பொட்டு இந்துக்களின் மத அடையாளமாகவே கருதப்படுகின்றது,


- kuruvikal - 11-04-2005

Mathan Wrote:ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மற்றய மதத்தை வழிபடுவதில் தவறேதும் இல்லை, இந்து மதத்தவர்கள் யேசுவையோ, அல்லது கிறித்தவ மதத்தவர்கள் புத்தரையோ வழிபடுவதில் ஒரு தவறும் இல்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் இன்னொரு மதத்தை வழிபடுபதாக முத்திரை வெளியிடும்போது அது ஒரு மதத்தை உயர்த்தி மற்றய மதத்தை தாழ்த்துவது போல தோற்றமளிப்பதே எதிர்ப்புகள் கிளம்ப காரணம், ஒவ்வொரருக்கும் ஒவ்வொரு மத நம்பிக்கைகள் இருக்கின்றன, நாம் அவற்றை மதித்து நடக்கலாமல்லவா.

பொதுவா பொட்டு இந்துக்களின் மத அடையாளமாகவே கருதப்படுகின்றது,

இப்படிச் சொல்லுற நீங்களா..இந்து சமயத்தை கேவலமாக வக்கிரமாக விமர்சிக்க பார்த்திட்டு இருந்தீர்கள்..! அப்போ எத்தனை பேரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்தீர்கள்..! Confusedhock: :roll: Idea

நிச்சயமாக றோயல் மெயில் செய்ததில் தவறில்லை.பொட்டு இந்துக்களின் சொத்து என்றும் அதை மற்றவர்கள் பாவிக்கக் கூடாது என்றும் உலக சட்டம் எதுவும் இல்லை..! அதுபோல
பொட்டு வைத்த இந்துப் பெண் என்றாலும் ஆண் என்றாலும்....ஜேசுவை கிறிஸ்மஸ்ஸைக் கொண்டாடக் கூடாது என்றும் இல்லைத்தானே..! அது தனிமனித சுதந்திரம்..அதற்குள் மதத்தைத் திணித்து தலையிடுதல் அழகல்ல..! அவர்களுக்கு அந்த வடிவம் பிடிச்சிருக்கு அச்சிட்டார்கள்...! எந்த இந்துவாவது சொல்லட்டும் பொட்டு தங்களுக்குத்தான் ஒரே சொந்தம் என்று...??! நிச்சயமாக இல்லை..! ஆபிரிக்க ஆதிக்குடியினர் சிலரிடமும் பொட்டு வைக்கும் பழக்கம் உண்டு..அடையாளத்துக்கு..! :wink: Idea


- Mathan - 11-04-2005

நீங்கள் குறிப்பிட்ட விவாதங்கள் நடந்த இடம் என்னுடைய பொறுப்பில் இருக்கவில்லை, அதுதவிர என்னுடைய சொந்த கருத்துக்களின் அடிப்படையில் தணிக்கை செய்யவும் முடியாது. அந்த தலைப்புகள் குறித்த எனது கருத்தை நிர்வாகத்தில் தெரிவித்து இருந்தேன். நிர்வாகத்தில் உள்ளோரின் பெரும்பான்மை கருத்த்தின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றது,

டர்பன் தலைக்கவசம் சீக்கியர்களையும் குல்லா முஸ்லீம்களையும் குறிப்பது போல பொட்டு இந்துக்களை குறிக்கும் ஒரு அடையாளமாகவே கருதப்படுகின்றது. என்னை பொறுத்தவரையில் நான் கோயிலுக்கும் செல்லும் வழக்கம் உண்டு, அதே போல் சர்ச் சென்றும் இருக்கின்றேன். யாராக இருந்தாலும் இன்னொரு மதத்தினை புண்படுத்தும்படியாக நடந்து கொள்ள கூடாது என்ற அடிப்படையிலேயே எனது கருத்தை தெரிவித்தேன்,

இது குறித்து நான் தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை,


- kurukaalapoovan - 11-04-2005

இந்துக்கள் தங்கடை மதச்சடங்குகளை சமஉரிமையோடு தடங்கலின்றி நிறைவேற்ற ஒரு நீர்தேக்கத்தில ஆகுதி கரைக்க உரிமைவேணும் எண்டு வழக்குப்போட்டவை. அந்த நீர்தேக்கங்களிலிருந்து வீடுகளுக்கு தண்ணீர்வாறது. உப்படி உவையின்ரை சமஉரிமை ரோதனைகள் கொஞ்சனஞ்சமல்ல.

பிரித்தானியாவில் சுவாஸ்ரிக்கா சின்னம் தடை செய்யப்படவில்லை. அதற்கு ஒரு காரணம் இந்துக்களின் எதிர்ப்பு.


- Vasampu - 11-04-2005

குருவி மதனின் வாதம் சரியானதே. மதமென்பது தனிமனிதர் சுதந்திரம். தயவுசெய்து யேசு நாதரையும் மதங்களைப்பரப்ப முயலும் அயோக்கியர்கள் செய்யும் அட்டுழியங்களையும் ஒப்பிட்டு எழுhதாதீர்கள். யேசு மதங்களைக் கடந்தவர் என்றால் யேசு மற்றைய மதத் தெய்வத்தை வணங்குவது போல் முத்திரை வெளியிடட்டுமே. அப்படி வெளியிட்டால் அது பெருந்தன்மை. அப்படி வெளியிட்டிருந்தால் வெள்ளையர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதும் தெரியும்.

சாத்திரி ஒரு நாட்டில் நாம் வாழும்போது அந்நாட்டின் விடுமுறைகள் எமக்கும் சார்ந்ததுதான். ஒரு மதத்தை சார்ந்தவர் இன்னொரு மதக் கடவுளை வணங்குவதில் தப்பல்ல. அது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. உதாரணமாக பல வெள்ளையர்கள் ஹரே கிருஷ்ணாவில் சேர்ந்து கிருஷ்ணனை வணங்குகின்றார்கள். அதற்காக சிலுவை அணிந்த ஒருவர் கிருஷணனை வணங்குவதாக இந்தியா முத்திரை வெளியிட்டால் வெள்ளையர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா?? மற்றும் இங்கு இந்துக் கோவில்களையோ மற்றைய கோவில்களையோ தடைசெய்யாமலிருப்பதை சுட்டிக் காட்டினீர்கள். தாராளமாகத் தடைசெய்யட்டுமே. தடைசெய்தால் ஆசியாவிலுள்ள தேவாலயங்களுக்கு என்னாகும் என்பதை உங்களை விட இவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள்.

விட்டால் இந்துமத தெய்வங்கள் எங்கும் நிறைந்திருப்பதைக் காட்டவே உள்ளாடைகளிலும் பாதணிகளிலும் அச்சிட்டார்கள் என்றும் வாதிடுவீர்கள்.


- தூயவன் - 11-04-2005

மதனின் கருத்து நியாயமானது.
மற்றய மதங்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தப்படும் போது அவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். ஏதாவது பிரச்சனை எடுத்து உண்டு, இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்.

ஆனால் நாம் எமக்குள்ளேயே விதண்டாவாதம் கதைத்து மற்றவர்களை விட நாமே எம் இறைவனைச் சிறுமைப்படுத்துவோம்.

சங்கராச்சாரியார் மீது வழக்குத் தொடுக்கப்பட்டபோது பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். இதை கேவலமாக சிஎன்என் காரன் முதல் எல்லோரும் கதைத்தார்கள். ஆனால் பாலியல் து}ஸ்பிரயோகம் செய்ததாக பாதிரிமார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டபோது மெல்லமாக சொல்லி விட்டு நிற்பாட்டிவிட்டார்கள். இது தான் அவர்கள். அதுவும் அப்போதைய போப்பாண்டவர் பைபிளை உதாரணம் காட்டி மன்னித்தது தான் வேடிக்கை.
(புனித நு}ல் எனப்படும் பைபிளில் சில கசமுசாக்காள் உள்ளது குறிப்பிடத்தக்கது)


- adithadi - 11-04-2005

Mathan Wrote:பொதுவா பொட்டு இந்துக்களின் மத அடையாளமாகவே கருதப்படுகின்றது,

<b>பொட்டு தமிழர்களின் அடையாளம்.</b>


- Vasampu - 11-04-2005

அடிதடி பொட்டு தமிழரின் இந்து மத அடையாளம் தான். ஆனால் 100 வீதம் தமிழர்கள் இந்துமதத்தை சார்ந்தவர்களாகத்தான் முன்பு இருந்தார்கள். உம்மைப்போல் எதையும் அரைகுறையாக அறிந்து வைத்திருந்த சிலர் தமது வசதிகளுக்காக ( வேலை வீடு போன்றவற்றிற்காக ) அன்றும் மதம் மாறினார்கள். இன்றும் மதம் மாறுகின்றார்கள்.


- kuruvikal - 11-04-2005

Vasampu Wrote:குருவி மதனின் வாதம் சரியானதே. மதமென்பது தனிமனிதர் சுதந்திரம். தயவுசெய்து யேசு நாதரையும் மதங்களைப்பரப்ப முயலும் அயோக்கியர்கள் செய்யும் அட்டுழியங்களையும் ஒப்பிட்டு எழுhதாதீர்கள். யேசு மதங்களைக் கடந்தவர் என்றால் யேசு மற்றைய மதத் தெய்வத்தை வணங்குவது போல் முத்திரை வெளியிடட்டுமே. அப்படி வெளியிட்டால் அது பெருந்தன்மை. அப்படி வெளியிட்டிருந்தால் வெள்ளையர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதும் தெரியும்.

சாத்திரி ஒரு நாட்டில் நாம் வாழும்போது அந்நாட்டின் விடுமுறைகள் எமக்கும் சார்ந்ததுதான். ஒரு மதத்தை சார்ந்தவர் இன்னொரு மதக் கடவுளை வணங்குவதில் தப்பல்ல. அது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. உதாரணமாக பல வெள்ளையர்கள் ஹரே கிருஷ்ணாவில் சேர்ந்து கிருஷ்ணனை வணங்குகின்றார்கள். அதற்காக சிலுவை அணிந்த ஒருவர் கிருஷணனை வணங்குவதாக இந்தியா முத்திரை வெளியிட்டால் வெள்ளையர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா?? மற்றும் இங்கு இந்துக் கோவில்களையோ மற்றைய கோவில்களையோ தடைசெய்யாமலிருப்பதை சுட்டிக் காட்டினீர்கள். தாராளமாகத் தடைசெய்யட்டுமே. தடைசெய்தால் ஆசியாவிலுள்ள தேவாலயங்களுக்கு என்னாகும் என்பதை உங்களை விட இவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள்.

விட்டால் இந்துமத தெய்வங்கள் எங்கும் நிறைந்திருப்பதைக் காட்டவே உள்ளாடைகளிலும் பாதணிகளிலும் அச்சிட்டார்கள் என்றும் வாதிடுவீர்கள்.

வசம்பு...இங்கு களத்தில் எத்தினை விதமாக இந்து மதந்தைப் பழித்தார்கள்..அப்போ எங்கோ போனது இந்த மதிப்பளிப்பு..??! உண்மையில் இது இரட்டை வேடத்தனமாகவே தெரிகிறது..! களத்தில் ஒரு நியாயம்..வெளிக்கு ஒரு நியாயமாக..!

கிறீஸ்மஸ் கொண்டாடுவது இன்ன மதந்தவர் என்றதிலும் அது எல்லோராலும் கொண்டாடப்படுவது என்பதே நாங்கள் தரிசித்தது..! நாங்களும் கரோல் கீதம் இசைத்து நத்தார் தாத்தா வேடம் போட்டு ஊர் சுற்றியதும் உண்டு..! சேர்ச் போனதும் உண்டு...கிரமமாக..!

அதுவும் மேற்கைப் பொறுத்தவரை அவர்கள் மதத்திற்கு என்றில்லாமல் இனத்துவ அடையாளங்களுக்கு முக்கியம் கொடுக்கின்றனர்..! அந்த முத்திரையைப் பார்க்கின்ற போது பொட்டு வைத்த ஒரு குடும்பத்துடன் வெள்ளையர்கள் கலந்திருப்பது போல இருக்கிறது..! உண்மை... மேற்கில் குறிப்பாக ஆசியர்கள் வெள்ளைகளோடு நெருங்கிப் பழகுவது குறைவு.. கறுப்புகள் பழகுவதைக் காட்டிலும் இவர்கள் குறைவு..! இப்படியான தனிமைப்படுத்தல்களே..பேர்மிங்காம்...பிரட்பேட் பகுதிகளில் கலவரங்கள் தோன்றக் காரணம்...! இவற்றை மையமாக வைத்து ஒற்றுமையை நட்புறவை சகோதரத்துவத்தை வலியுறுத்த அந்த தபால்தலையை றோயல் மெயில் வெளியிட்டிருக்கும்...உண்மையில் அது சிறந்ததே..!

மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதிலும் மனிதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே முதன்மைத் தேவை...! அப்போதுதான் ஒற்றுமை சகோதரத்துவம் வளரும்...! அமைதி தோன்றும்..புரிந்துணர்வு பெருகும்..! மதம் மதம் என்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதால் எந்த நன்மையும் இல்லை..மத அடையாளங்களால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன...??! எதுவுமே இல்லை...! வெறும் இனத்துவ அடையாளத்துக்காக மதத்தை காக்கிறார்கள்..மனிதம் தொலைய.. அது அவசியம் தானா...! மேற்கில் (சில நாடுகளைத் தவிர) இளைய தலைமுறையிடம் மத வெறித்தன்மை வெகுவாக குறைந்துவிட்டது..! இந்தியா இலங்கை மற்றும் முஸ்லீம் நாடுகளில் உள்ளது போன்ற மத வெறி இல்லை...அவர்களிடம்..! எனவே அவர்கள் இம்முத்திரையை மதவாதக் கண்ணோட்டத்தில் காண்பதிலும்..சகோதரத்துவத்தை கொண்டுவர உதவுவதாகவே காண்பார்கள்...! அப்படிப் பார்க்கப்பட்டால்..அது றோயல் மெயிலுக்கே வெற்றி..! உலகில் தபால் தலையை அறிமுகப்படுத்திய நாடு...ஒருபோதும் முன்பின் யோசிக்காது இப்படி சீப்பான விமர்சனங்களுக்காக அம்முத்திரையை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை...என்றே கூறலாம்..! முத்திரைகள் வெறும் கடதாசிகளாக அன்றி ஒரு நாட்டின் மக்களின் சிறப்புகளை உலகறிய வைக்கும் பணியையும் செய்து வருகிறது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Netfriend - 11-04-2005

சிலுவை அணிந்த ஒருவர் கிருஷணனை வணங்குவதாக இந்தியா முத்திரை வெளியிட்டால் வெள்ளையர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா?? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->::,?:

இந்துமத தெய்வங்கள் எங்கும் நிறைந்திருப்பதைக் காட்டவே உள்ளாடைகளிலும் பாதணிகளிலும் அச்சிட்டார்கள் என்றும் வாதிடுவீர்கள். <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :


- Netfriend - 11-04-2005

............மேற்கில் (சில நாடுகளைத் தவிர) இளைய தலைமுறையிடம் மத வெறித்தன்மை வெகுவாக குறைந்துவிட்டது..! இந்தியா இலங்கை மற்றும் முஸ்லீம் நாடுகளில் உள்ளது போன்ற மத வெறி இல்லை....... 8) Idea


- adithadi - 11-04-2005

Vasampu Wrote:அடிதடி பொட்டு தமிழரின் இந்து மத அடையாளம் தான். ஆனால் 100 வீதம் தமிழர்கள் இந்துமதத்தை சார்ந்தவர்களாகத்தான் முன்பு இருந்தார்கள். உம்மைப்போல் எதையும் அரைகுறையாக அறிந்து வைத்திருந்த சிலர் தமது வசதிகளுக்காக ( வேலை வீடு போன்றவற்றிற்காக ) அன்றும் மதம் மாறினார்கள். இன்றும் மதம் மாறுகின்றார்கள்.

பொட்டு என்றால் என்னபதை நன்றாக புரிந்தபின் இங்கே வாரும்.

கிறிஸ்தவமதம் சார்ந்தவர்கள் தான் இவ் விடயத்திற்கு ஆதரவாக பேசுவார்களோ! தன்னை நம்பாவதன் தான் இறைவனை நம்புவான், வேதம் மூடர்களின் மகுடம்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் வேலை, வீடு கிடைக்கும்மா! அடேய்யப்பா, நான் முயற்ச்சி செய்கிறேன்.


- Vasampu - 11-04-2005

ஏன் இங்கு வேலை வீடு போன்ற அடிப்படை வசதிக்காக மதம் மாறியவர்களை நீங்கள் காணவில்லையா?? நல்ல ஜோக் :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தன்னை நம்பாவதன் தான் இறைவனை நம்புவான் வேதம் மூடர்களின் மகுடம். என்பதுதான் உங்கள் வேதவாக்கென்றால் ஏன் இவ்விடயத்தில் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குகின்றீர்கள்.


- Mathan - 11-04-2005

இது குறித்து தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை என்று எழுதியிருந்தேன், இருந்தாலும் ஒரு விடயத்தை குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை, தயவு செய்து பதில் கருத்து எழுதும் போது அவதானமாக இருங்கள். அவை கிறிஸ்தவ மத நண்பர்களையோ அல்லது வேறு மத நண்பர்களையோ மனம் வருந்த செய்யும் கருத்துக்களாக இருக்க கூடாது, நன்றி


- adithadi - 11-04-2005

வசம்பு: தயவு செய்து தலைப்புடனான விவாவதத்தில் பங்கு கொள்ளுங்கள்.

தமிழ் பெண்கள் ஏன் பொட்டு அணிகிறார்கள்? யாராவது விளக்க முடியும்மா?