![]() |
|
குஷ்பு மீண்டும் வம்பு: துணைக்கு சுகாசினி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: குஷ்பு மீண்டும் வம்பு: துணைக்கு சுகாசினி (/showthread.php?tid=2541) |
- Vaanampaadi - 11-15-2005 ``எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டுவதா?'' நடிகை சுஹாசினிக்கு டி.ராஜேந்தர் கண்டனம் சென்னை, நவ.15- ``நடிகர் சரத்குமாரை எஸ்.எம்.எஸ். மூலம் சுஹாசினி மிரட்டியது கண்டிக்கத் தக்கது'' என்று டைரக்டர் டி.ராஜேந்தர் கூறினார். <b>பேட்டி</b> சினிமா டைரக்டர் டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியாவில் எல்லாருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் உள்ளது. இந்தியா சுதந்திர நாடு. குஷ்புவாக இருந்தாலும், சுஹாசினியாக இருந்தாலும் கருத்து சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது. பெண்களுக்கு உரிய சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கிறது. நான் பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரானவன் அல்ல. ஒரு தனிப்பட்ட மனிதனின் பேச்சு, மற்றவருடைய கருத்துக்கு ஏற்றதாகத்தான் இருக்கும் என்று நினைப்பது தவறு. என்னைப் போலத்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நான் நினைக்க கூடாது. <b>தாடி</b> நான் தாடி வைத்து இருப்பதால் மற்றவர்களும் தாடி வைத்து இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. அதுபோல ஒரு கருத்தை சொல்லும்போது தன்னைப்போலத்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு யாரும் கருத்து கூறக்கூடாது. அதன்மூலம் மற்றவர்களுடைய மனதை புண்படுத்தவும் கூடாது. குஷ்புவும், சுஹாசினியும் எப்படி வாழவேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அவர்கள் சுதந்திரம்'' அதில் தலையிட விரும்பவில்லை. அவர்கள் பொத்தாம் பொதுவாக கருத்து கூறும்போது எம் தமிழ் பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்ககூடாது. <b>கண்ணகி</b> தமிழ்நாட்டில் கற்புள்ள பெண்கள் இருப்பதால்தான் மழை பெய்கிறது. கிராமத்து மக்களும் நகர்ப்புற மக்களும் தங்கள் பெண்களை இன்றும் தமிழ் கலாசாரத்தோடும் பண்போடும் தான் வளர்த்து வருகிறார்கள். கற்புள்ள பெண் கண்ணகிக்காக தமிழ்நாட்டில் வரலாறு இருக்கிறது. இளங்கோ அதை எழுதி இருக்கிறார். அந்த பெயரைத்தான் என் மகனுக்கு சிலம்பு (சிலம்பரசன்) என்று சூட்டி இருக்கிறேன். <b>பிரதிநிதியா?</b> அந்தசிலம்பில் இருந்து தெரிந்த மாணிக்க பரலாக நான் சொல்கிறேன். தமிழ் மக்கள் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்க சுஹாசினி என்ன தமிழர்களினë ஒட்டுமொத்த பிரதிநிதியா? தமிழர்களின் பிரதிநிதியாக இவரை யாராவது வாக்களித்து தேர்ந்தெடுத்து இருக்கிறார்களா? மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிற முதல்-அமைச்சரே குஷ்பு சொன்ன கருத்து தவறு என்று கூறியிருக்கிறார். பெண்களை நான் மதிப்பவன், துதிப்பவன் என்றாலும், தமிழக பெண்களின் மனம் புண்படும்படி சுஹாசினி கூறிய கருத்துக்கள் தவறு. சுஹாசினி எப்படியும் வாழட்டும். அதை கேட்க வேண்டியது மணிரத்னத்தின் பொறுப்பு. ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மக்களைப் பற்றி பேசினால் தட்டிக் கேட்க எனக்கும் இருக்கிறது பொறுப்பு. கண்டனம் தமிழனுக்கு கொம்பா முளைத்து இருக்கிறது என்று பேசி இருக்கிறார். கொம்பு முளைக்க நாங்கள் மாடல்ல. மனிதர்கள். தெம்பு முளைத்த தமிழர்கள். நடிகர் சங்க பொதுச் செயலாளர் சரத்குமார் அரசியலை கடந்து எனக்கு நல்ல நண்பர். அவருக்கு சுஹாசினி எஸ்.எம்.எஸ். கொடுத்து மிரட்டி இருப்பதாக கேள்விப்பட்டேன். அதுவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார். Dailythanthi - Vaanampaadi - 11-15-2005 திருந்தினார் சுகாசினி: மன்னிப்பு கேட்டார் நவம்பர் 15, 2005 சென்னை: குஷ்பு கருத்துக்கு ஆதரவாக தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது என்று பேசிய சுஹாசினி மன்னிப்பு கேட்டுள்ளார். சுஹாசினி தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது என்று பேசியதற்கு விளக்கம் கேட்டு தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடிகர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து சுஹாசினிக்கு நடிகர் சங்க செயலாளர் சரத்குமார் நோட்டீஸ் அனுப்பினார். இந் நிலையில் இன்று நடிகர் சங்கத்துக்கு சுஹாசினி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், நான் சர்வதேச திரைப்பட விழாவில் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக நான் பேசியது நடிகர் சங்கத்திற்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படுத்தி இருந்தால் அதற்கும் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். சுஹாசினி, அவரது தந்தை சாருஹாசன், சுஹாசினியின் கணவர் மணி ரத்னம் எல்லோரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள். சுஹாசினியின் கருத்துக்கு சாருஹாசன் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கணவரும் இயக்குனருமான மணி ரத்தினத்தின் ரியாக்ஷன் வேறு விதமாக இருந்துள்ளது. சுஹாசினியின் பேச்சை மணி ரத்தினம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவரது வீட்டுக்கு பாம் வைக்கப்பட்டதையும் அவருக்கு கொலை மிரட்டல் வந்து பிரச்சனை ஆனதையும் சுட்டிக் காட்டிய மணி ரத்தினம் நாம் ஏன் நமது நிம்மதியை கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும் சுகாசினியின் பேச்சால் குஷ்புவின் பிரச்சனைகள் அதிகமாகியிருப்பதாக கருதும் மணி ரத்தினம், இந்த விஷயத்தில் தனது நிலையை மாற்றிக் கொள்ளும்படி கூறியதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே இரு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தன் கணவருக்கு மேலும் நெருக்கடி தரக் கூடாது என்பதாலேயே சுஹாசினியும் தனது நிலையை மாற்றிக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் குஷ்பு மீது மீதான வழக்குகளை சில நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தாலும், சில நீதிமன்றங்கள் பிடிவாரண்ட் பிறப்பிக்கும் நிலைக்குப் போனதையும், அவர் கைதாகும் வாய்ப்பு உருவாகியுள்ளதையும் கணக்கிட்டுப் பார்த்து, தன் மீதும் வழக்கு, கைது என நடவடிக்கை பாய்ந்து அசிங்கமாவதைத் தவிர்க்க விரும்பியே நடிகர் சங்கத்துக்கும் மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார் என்கிறார்கள். எப்படியோ திருந்துனா சரி... Thatstamil - Vasampu - 11-15-2005 உப்படித்தான் முன்பு குஷ்புவும் ஜெயா தொலைக்காட்சியில் நீலிக் கண்ணீர் வடித்து மன்னிப்புக் கேட்கவில்லையா?? தற்போது தான் சொன்னது சரிதான் என மீண்டும் கொக்கரிக்கவில்லையா?? எனவே குஷ்புவிற்கும் சுகாசினிக்கும் சரியான நடவடிக்கை எடுப்பதன் மூலம்தான் எதிர் காலத்தில் ஏனையோரும் தம் மனம் போன போக்கில் கதைக்காமலிருப்பார்கள். சுகாசினியின் தந்தையார் சாருகாசன் ஏறக்குறைய ஒரு அரைப் பைத்தியம் சில வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் ரஜனி அலை அடித்துக் கொண்டிருந்தபோது ரஜனி அரசியலுக்கு வருவார் என எதிர் பார்ப்பிருந்தது. அப்போது பி.பி.சி வானொலி சாருகாசனைச் செய்வி கண்டபோது கேட்டது ரஜனி வென்று முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்பிருக்கின்றதாவென்று. அதற்கு சாருகாசனின் பதில் ரஜனிக்கு முதலமைச்சராக வாய்ப்பிருக்கின்றது ஆனால் எனக்கு முதலமைச்சராகத் தகுதியிருக்கின்றது. பி.கு: இவர் படிச்சது வெறும் வக்கீல் படிப்பு இவரின் திறைமையான வாதத்தினால் இவர் படிப்பு இவருக்கு சோறு போடவில்லை. அப்பப்போ நடிப்புத்தான் சோறு போட்டது. - Nilavan. - 11-16-2005 குஷ்புவுக்கு நிபந்தனை ஜாமீன்: செருப்பு வீச்சு போலீஸ் தடியடி நவம்பர் 16, 2005 மேட்டூர்: <img src='http://thatstamil.indiainfo.com/images30/optimized/kushboo3a-300.jpg' border='0' alt='user posted image'>இன்று சரணடைய வந்த குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி இல்லாததால் திரும்பிச் சென்ற குஷ்பு இன்று முறைப்படி சரணடைந்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தின் வெளியே குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்ட பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூர் இரண்டாவது நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் பணி காரணமாக சேலம் சென்றுவிட்டதால் குஷ்புவால் நேற்று சரணடைய முடியவில்லை. இதையடுத்து இன்று காலை 10.20 மணிக்கு மீண்டும் நீதிமன்றம் வந்த குஷ்பு நீதிபதியிடம் சரணடைந்தார். குஷ்புவின் வருகைøயொட்டி ஏராளமான பொது மக்களும், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இயக்கத்தினரும் அங்கு கூடியிருந்தனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்குள் சென்ற குஷ்புவிற்கு நீதிபதி ஸ்ரீதரன் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதன்படி பத்திரிக்கைகள், டிவி, நிருபர்களுக்கு குஷ்பு பேட்டியளிக்கக் கூடாது, ரூ. 5,000 பிணைத் தொகையாகக் கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. <img src='http://thatstamil.indiainfo.com/images30/optimized/kushbu-450.jpg' border='0' alt='user posted image'>நேற்று ஆஜரான குஷ்பு இந்த நிபந்தனையை ஏற்று ரூ. 5,000த்தை குஷ்புவின் சகோதரர் நீதிமன்றத்தில் செலுத்தினார். இதையடுத்து வழக்கை வரும் டிசம்பர் 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். முன்னதாக அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த முருகனின் வழக்கறிஞர், குஷ்புவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதாடினார். ஆனால், அதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். நீதிமன்றத்துக்குள் குஷ்பு இருந்தபோது வெளியில் கூடியிருந்த பாமக, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குஷ்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது குஷ்பு எதிர்ப்பு கோஷம் வலுவானது. இதைத் தொடர்ந்து காருக்குள் தாவி ஏறினார் குஷ்பு. அப்போது அவர் மீது சிலர் செருப்புகளை வீசினர். ஆனால், அதற்குள் குஷ்பு காருக்குள் போய்விட்டதால் செருப்புகள் கார் மீது விழுந்தன. <img src='http://thatstamil.indiainfo.com/images30/optimized/mettur11-300.jpg' border='0' alt='user posted image'> குஷ்புவை 'வரவேற்கும்' செருப்புகள் குஷ்புவுக்கு பாதுகாப்பு அளிக்க ஸ்டண்ட் நடிகர் விஸ்வநாத் தலைமையில் ஏராளமான வாட்ட, சாட்டமான ஆசாமிகளும் வந்திருந்தனர். குஷ்புவை கைது செய்யாத போலீஸ்: நேற்று குஷ்பு நீதிமன்றத்தில் ஆஜரானாலும், நீதிபதி இல்லாததால் அவர் முறைப்படி சரணடையாததால் அவரை போலீசார் கைது செய்திருக்க வேண்டும். என்றாலும், அவரை போலீசார் கைது செய்யவில்லை. அதற்கான காரணமாக மேட்டூர் போலீசார் கூறியதாவது: குஷ்புவைக் கைது செய்வதற்கு மேட்டூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் உத்தரவு சென்னை போலீசாரிடம் தான் உள்ளது. இதனால் கைது உத்தரவை அமலாக்க வேண்டியது சென்னை போலீசார். இதனால் தான் குஷ்புவை எங்களால் கைது செய்ய முடியவில்லை என்றனர். இதற்கிடையே நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் குஷ்புவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தபோது அரசுத் தரப்பில் (போலீஸ் தரப்பு) ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில், குஷ்புவைக் கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்னை போலீசார் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை. இதனால் அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தேடி வருகிறோம் என்றார். தனிப்படை அமைத்து குஷ்புவைத் தேடுவதாகச் சொன்னாலும் மேட்டூர் நீதிமன்றத்துக்கு வந்த குஷ்புவுக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரைப் பிடிக்க சென்னை போலீசுக்கு நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியிருப்பது தெரிந்தும் அவரைக் கைது செய்யாமல் நல்லபடியாக பாதுகாப்புக் கொடுத்து பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர் மேட்டூர் போலீசார். இதற்கிடையே மேட்டூர் நீதிமன்ற பிடிவாரண்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் குஷ்பு தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வெளியாவதாக இருந்தது. ஆனால், தனக்கு மேட்டூர் நீதிமன்றமே நிபந்தனை ஜாமீன் வழங்கிவிட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை இன்று அவர் வாபஸ் பெற்றுக் கொண்டார். Thanks to Thatstamil.com - aathipan - 11-16-2005 நாட்டில எத்தனையோ பிரச்சனை இருக்கு. அதைவிட்டுட்டு குஸ்புவை போட்டு டாச்சர் பண்ணுறாங்க. எல்லாhம் அரசியல்தான். தமிழ்நாட்டில எல்லோரும் கண்ணகிகள். குஸ்பு ஏதோ சொன்னதும் எல்லோருக்கும் அவமானமாப்போச்சு. - Vasampu - 11-16-2005 <b>நன்றாக இருக்கின்றது ஆதிபன் உங்கள் பதில்!!!!!!! அணைந்து போய்க் பொண்டிருந்த பிரைச்சினைக்கு மீண்டும் குஸ்புவும் சுகாசினியும் எண்ணெய் விட்டு எரிய விட்டிருக்கின்றார்கள். சரி தெரியாமல்த்தான் கேட்கின்றேன் தமழ் நாட்டில் எல்லோரும் கண்ணகிகளா என்று வினா எழுப்பியுள்ளீர்கள். உங்கள் வீட்டில் எல்லோரும் பத்தினிகளா என்று கேள்வி கேட்டால் பேசாமல் இருப்பீர்களா????? ஒரு போதும் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியாதீர்கள்.</b> - aathipan - 11-17-2005 ஓரு கோவி;ல்லை இரவுத்திருவிழா நடந்துது. கூட்டத்தில் பக்தர்களிடம் கொள்ளையடிக்க நிறையத்திருடங்க போயிருந்தாங்க. ஒரு திருடன் தெரியாம மாட்டிட்டான். கூட்டத்தில எல்லோரும் அவனை அடிச்சாங்க. இதைப்பாத்த மற்றத் திருடங்கள், தங்களோட பங்குக்கு கோவில்லையே திருட வந்தியா என்று கேட்டு அடி போட்டாங்க. குஸ்பு விடயமும் இதுபோலத்தான். எல்லாரும் சேர்ந்து அவங்களைத்தாங்கி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை இவ்வளவு பெரிது படுத்தியிருக்க வேண்டியதில்லை. எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக சொன்னதை இப்படி பெரிது படுத்திட்டாங்க அரசியல்வாதிகள். தமிழ்நாட்டில பஸ்களில் எல்லாம் மனைவியோடு மட்டும் உடலுறவு கொள்(ஒருவனுக்கு ஒருத்தி) என்ற அர்த்தத்துடன் பல வாசகங்களைக்காணலாம். அது மட்டுமன்றி தவறான உறவுகள் எயிட்சை தரும் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. அப்படின்னா ஏன் அரசியல்வாதிகள் சும்மா விட்டுட்டாங்க. தமிழ்நாட்டில இப்படி விளம்பரப்படுத்தினா அது எங்களை இழிவு படுத்திறமாதிரி இருக்கு. எங்க கலாச்சாரத்தை கொச்சைப்படுத்திறாங்க. நாங்க எப்பவும் ஒருவனுக்கு ஒருத்திதான். எங்க கலாச்சாரம் உயர்ந்தது. யாரும் எங்களுக்கு கற்றுத்தரதேவையில்லை. எயிட்ஸ் விழிப்புணர்வுக்குழு மன்னிப்புக்கேட்கவேண்டும். இப்பயெல்லாம் ஏன் சண்டைபோட்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை. - jeya - 11-17-2005 ஆதிபன் சம்பந்தம் இல்லாமல் கதைக்கிறீங்கள் என்று நினைக்கிறேன். குஸ்பு ஒட்டு மொத்த இந்திய பெண்களையும் கூறாமல் ஏன் தமிழ்நாட்டு பெண்களை மட்டும் குறிப்பிட்டு கூற வேண்டும். தமிழர் என்றால் இழிச்ச வாய்கள் என்று நினைப்பு தானே???? நான் தழிழீழத்தில் பிறந்தேன் அதற்காக எனது தமிழ் உறவுகளை எங்கிருந்தோ பிழைக்க வந்தவ ஏளனமா கூற ஈழத்தமிழன் ஒரு போதும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான். - இவோன் - 11-17-2005 <!--QuoteBegin-jeya+-->QUOTE(jeya)<!--QuoteEBegin-->ஆதிபன் சம்பந்தம் இல்லாமல் கதைக்கிறீங்கள் என்று நினைக்கிறேன். குஸ்பு ஒட்டு மொத்த இந்திய பெண்களையும் கூறாமல் ஏன் தமிழ்நாட்டு பெண்களை மட்டும் குறிப்பிட்டு கூற வேண்டும். தமிழர் என்றால் இழிச்ச வாய்கள் என்று நினைப்பு தானே???? நான் தழிழீழத்தில் பிறந்தேன் அதற்காக எனது தமிழ் உறவுகளை எங்கிருந்தோ பிழைக்க வந்தவ ஏளனமா கூற ஈழத்தமிழன் ஒரு போதும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நன்றாய்ச் சொன்னீர்கள். எனக்கும் இரத்தம் கொதிக்கிறது. அதுவும் தமிழகத்தில் பேருந்துகளில் எழுதப்பட்டிருப்பதாக ஆதிபன் சொன்னதைக் கேட்டபோது எனக்கு மாரடைப்பே வந்துவிட்டது. எவ்வளவு கீழ்த்தரமாக தமிழர்களை அரசு கருதுகிறது. எங்கள் உயரிய பண்பாட்டைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஒருவனுக்கு ஒருத்தியென்று விளம்பரம் செய்கிறது? ஏதோ தமிழர்கள் புகை பிடிப்பவர்கள் என்ற கோணத்தில் புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளதென்று அறிவிப்புச் செய்கிறது அரசு. பொது இடத்தில் புகைபிடிப்பதைச் சட்ட ரீதியாக் குற்றமாக்கியிருக்கிறது தமிழக அரசு. இது தமிழர்களை எவ்வளவு தூரம் கேவலப்படுத்தும் செயல்? சிங்களவனுக்கு எதிராகப் போராடுவதைவிட முதலில் தமிழக அரசுக்கும் எயிட்ஸ் விழிப்புக் குழுவுக்குமெதிராகத்தான் நாம் போராட வேண்டும். சகோதரத் தமிழர்களுக்கு ஓர் இழிவென்றால் எம்மால் பொறுத்துக்கொள்ள முடியுமா? அப்படிப் பொறுத்திருந்தால் ஈழத்தமிழன் சுரணைகெட்டவனென்று உலகம் ஏசும். எனவே புறப்படுவீர் எனதருமை ஈழத்தவர்களே. முதலில் இந்தியா பிறகு ஐ.நா. ஏனென்றால் அவர்களும் பாதுகாப்பான பாலுறவு பற்றிப் பிரச்சாரம் செய்கிறார்கள். எங்கள் தொன்மையான பண்பாட்டைக் கேலி பண்ணுகிறார்கள். இவர்களுக்கெதிரான "யுத்தத்தில்" நான் முதல் ஆளாக நிற்பேன். வாருங்கள் வீரர்களே - ஒன்றாய் சேருங்கள் தோழர்களே. - aathipan - 11-17-2005 நீங்கள் கொதித்தெழுவதைக்கண்டு சந்தோசமாக உள்ளது. நான் குஸ்புவின் ஆதரவாளன் அல்ல. ஆனால் இதைவிட எத்தனையோ பிரச்சனைகள் நடக்கிறது. நடந்தது. தமிழ்நாட்டவன் அடிமையாக வாழ்;கிறான் ஆந்திரா போன்ற மாநிலங்களிலே. அவர்கள் கல்லுடைப்பதற்காக அங்கு குடும்பத்துடன் சிறை வாழ்க்கை வாழ்கிறார்கள். இதற்கு நாம் என்னசெய்தோம்? கொதித்து எழுந்து தட்டிக்கேட்டோமா? தமிழனுக்கு தண்ணிதர மறுக்கிறது கர்நாடகம். கேட்டதற்கு அப்பாவித்தமிழர்களை அடித்துவிரட்டியது தங்கள் மாநிலத்தைவிட்டே? இதற்கு என்ன செய்தோம். இலங்கையில் மலையகத்தில் தமிழர்கள் அடிப்படை வசதியே இல்லாத லயத்தில் வாழ்கிறார்களே. அவர்களைப்பார்த்து என்றாவது கவலைப்பட்டதுண்டா? இலங்கையில் இந்திய இராணுவத்தால் அப்பாவிப்பெண்கள் கெடுக்கப்பட்டபோது உலகெங்கும் இருந்த தமிழர்கள் என்னசெய்தார்கள்.? - Birundan - 11-17-2005 <!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->ஓரு கோவி;ல்லை இரவுத்திருவிழா நடந்துது. கூட்டத்தில் பக்தர்களிடம் கொள்ளையடிக்க நிறையத்திருடங்க போயிருந்தாங்க. ஒரு திருடன் தெரியாம மாட்டிட்டான். கூட்டத்தில எல்லோரும் அவனை அடிச்சாங்க. இதைப்பாத்த மற்றத் திருடங்கள், தங்களோட பங்குக்கு கோவில்லையே திருட வந்தியா என்று கேட்டு அடி போட்டாங்க. குஸ்பு விடயமும் இதுபோலத்தான். எல்லாரும் சேர்ந்து அவங்களைத்தாங்கி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை இவ்வளவு பெரிது படுத்தியிருக்க வேண்டியதில்லை. எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக சொன்னதை இப்படி பெரிது படுத்திட்டாங்க அரசியல்வாதிகள். தமிழ்நாட்டில பஸ்களில் எல்லாம் மனைவியோடு மட்டும் உடலுறவு கொள்(ஒருவனுக்கு ஒருத்தி) என்ற அர்த்தத்துடன் பல வாசகங்களைக்காணலாம். அது மட்டுமன்றி தவறான உறவுகள் எயிட்சை தரும் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. அப்படின்னா ஏன் அரசியல்வாதிகள் சும்மா விட்டுட்டாங்க. தமிழ்நாட்டில இப்படி விளம்பரப்படுத்தினா அது எங்களை இழிவு படுத்திறமாதிரி இருக்கு. எங்க கலாச்சாரத்தை கொச்சைப்படுத்திறாங்க. நாங்க எப்பவும் ஒருவனுக்கு ஒருத்திதான். எங்க கலாச்சாரம் உயர்ந்தது. யாரும் எங்களுக்கு கற்றுத்தரதேவையில்லை. எயிட்ஸ் விழிப்புணர்வுக்குழு மன்னிப்புக்கேட்கவேண்டும். இப்பயெல்லாம் ஏன் சண்டைபோட்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> எய்ட்ஸ் தடுப்பு சரி நாட்டுக்கு தேவை, அதுவா பிரச்சினை பிரச்சினையான விடயம், படித்த எந்த ஆணும் திருமணத்தின்போது வரும் பெண்ணிடம் கன்னித்தன்மையை எதிர்பாக்க மாட்டான், எல்லா பென்களும் இஷ்டத்துக்கு போகிறவர்களா? குஷ்புக்கு சரி, சுகஷினிக்கும் இக்கருந்து சரிவரும், தமிழ்நாட்டு கிராமத்து பெண்கள் எல்லோருக்கும் சரிவரும் அவர்கள் அப்படித்தான் என்பது எப்படி பொருந்தும். நூத்தில பத்துவீதம் அப்படி இருந்தால் எப்படி தொனூறுவீதமும் அப்படித்தான் என்று கூறுவது, அதை விட அதை சொல்லுறதுக்கு ஒரு தகுதி வேனாமா? மதர் திரேசா போன்றவர்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், அவர்கள் சமுதாய பொறுப்பு உள்ளவர்கள், எபோதும் பொறுப்போடு கதைப்பர்கள், என்னப்பா தமிழனை ஆழவும் ஒருநடிகை தழிழன் கற்பை பற்றி பேசவும் ஒருநடிகை, தமிழன் அவ்வளவு தரம் தாழ்ந்து போய் இருக்கிறானா? இளமையாக இருக்கும் போது, எல்லாத்தையும் காட்டும்வரை காட்டி போட்டு, இப்ப போத்து மூடினால், சமூகப்பொறுப்பு வந்திடுமா? சரி தமிழனைபற்றி கதைக்க ஒரு தமிழன் இல்லையா? :wink: - aathipan - 11-17-2005 தமிழ்நாட்டு அகதிமுகாம்களில் வாழ்ந்த சில தமிழ்த்தாய்கள் வறுமையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். அவர்கள் வறுமையை ஒழித்து கண்ணீரை துடைக்க எத்தனை கைகள் நீண்டது? - வினித் - 11-17-2005 இறக்கும் போதும் தன்மாணத்துடன் தான் இறந்தர்கள் அவர்கள் உடம்பை விக்க இல்லை சரியா குஸ்புவை சொன்னா குஸ்புக்கு கோவில் கட்டினவர்களுக்கு கோவம் வருதுப்பா :twisted: :twisted: கரவெட்டிக்கு ஒரு மகேஸ்வரி எண்டா தமிழ்நாட்டுக்கு ஜெயாலலிதவும் குஸ்புவும் சுகாசினியும் <b><span style='font-size:25pt;line-height:100%'>அடிமையா வைச்சு இருப்பவனை விட அடிமையா இருப்பேன் எண்டு சொல்லுறவனுக்கு தான் சொருப்பால அடி போடனும்</b></span> :twisted: :twisted: - aathipan - 11-17-2005 நான் சொல்ல வந்தது இதுதான். குஸ்பு ஏதோ சோன்னாங்க எண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடுறீங்களே சந்தோசம்தான் ஆனா எமது தமிழன் பல்வேறு இன்னல்களில் வாடும்போது நாமெல்லாம் என்ன செய்தோம்? ஒன்று சேர்ந்தோமா?.. அரவணைத்தோமா? ஆதரித்தோமா? வெட்டி பந்தாவுக்கு சண்டைபோடுறதைவிட்டுட்டு. அமைதியா எனது மக்களுக்கு ஏதாவது செய்து தமிழன் நலம் பேணலாம் அல்லவா. எங்க வீட்டை எதிரிகள் கொழுத்தினாங்க அப்ப யாரும் அணைக்கத் தண்ணிகொண்டுவரல. இப்ப யாரோ வீட்டுக்கு முன்னால குப்பைகொழுத்தீட்டாங்கன்னு எல்லோரும் சண்டைக்கு தயாராகிட்டீங்களே. - Nithya - 11-17-2005 ம் என்னமோ.. படிக்க கவலையாகத்தான் இருக்கு .. ஒரு காலத்தில் கோவில் கட்டினார்கள் இப்போ செருப்பு தூக்குகிறார்கள் பிள்ளையாருக்கு செருப்பால் அடித்த பெரியார் மாதிரி இருக்கு கதை.. அதுக்காக நான் குஷ்புவை பிள்ளையார் என்று கூறவில்லை..! இந்த விடயம் இவ்வளவு விவரிதமாக வரும் என்று குஷ்பு கூட அன்று நினைத்திருக்க மாட்டார்கள்..! தமிழர் சமூகம் மாறிக்கொண்டுதானே வருகிறது இந்தியாவில்?? என்ன நாலு சிவருக்குள் எல்லாரும் பேசியதை குஷ்பு வெளிப்படையாக கூறிவிட்டார்..! தவறுதான் இல்லை என்று கூறவில்லை.. ஊதி ஊதி மற்ரரை பெரிது படுத்திவிட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்.. எப்படா இப்படி ஒரு சந்தர்பம் வரும் என்று பார்த்துக் கொண்டு இருந்த மாதிரி இருக்கு இனி குஷ்பு என்னதான் செய்ய முடியும்??? ஜெயா டி.வி. இல் குஷ்பு நடத்தி வந்த கோடிஸ்வரி மற்றும் அவர் நடித்து வந்த கல்கி நாடகம் இது எல்லாத்துக்கும் ஒரே முற்றுப்புள்ளி தானே?? இது ஒருபக்கம் இருக்க குஷ்பு நாடுகடத்து வேண்டுமாம்.. !! எல்லாம் செய்வார்கள் செய்துட்டு பெரிதா ஒரு டைலாக் "வந்தாரை வாளவைக்கும் எங்கள் தமிழ் மண்" இந்த மாதிரி அவர்களை அவர்கள்தான் மெட்சிக்கனும்..!! - aathipan - 11-17-2005 <!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin-->இறக்கும் போதும் தன்மாணத்துடன் தான் இறந்தர்கள் அவர்கள் உடம்பை விக்க இல்லை சரியா<!--QuoteEnd--><!--QuoteEEnd--> வறுமையில வாடி ஒன்றும் செய்யமுடியாமல் தற்கொலை முடிவுக்கு போயிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடுமை. இதற்காக சிறிதேனும் அனுதாபங்கொள்ளவில்லை நீங்கள். தன்மானத்துடன் தான் இறந்தார் என பெருமைப்படுகிறீர்கள். என்ன கஸ்டம் வந்தாலும் பெண்கள் விலைமாதர்கள் ஆகாமல் தற்கொலை பண்ணிக்கொண்டால் திருப்பதி உங்களுக்கு. அப்போது தமிழர் மானம் காக்கப்படும் இல்லையா? <!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin-->குஸ்புவை சொன்னா குஸ்புக்கு கோவில் கட்டினவர்களுக்கு கோவம் வருதுப்பா <!--QuoteEnd--><!--QuoteEEnd--> விஜய் படத்தை மாற்றுங்கள் முதலில். பொறுப்பாளர் கோடம்பாக்கம் என்பதையும் அகற்றிவிடுங்கள். அவை இரண்டும் நன்றாக இல்லை. - Vasampu - 11-17-2005 <b>ஏதோ பிரமாதமாக கருத்தெழுதுவதாக நினைத்துக் கொண்டு சேறு புூசாதீர்கள். பேருந்து வண்டிகளில் அரசு திருடர்கள் ஜாக்கிரதை என்றும் விளம்பரம் செய்துள்ளது. அதற்காக மக்கள் எல்லோரும் திருடர்கள் என்று அர்த்தமா?? அது போலத்தான் எயிட்ஸ் விளம்பரமும் குஸ்புவோ சுகாசினியோ பொதுப்படையாக கருத்துச் சொல்லியிருந்தா பிரைச்சினை வந்திருக்காது அவர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அனைவரையும் குறிப்பிட்டுச் சொன்னதாலேயே பிரைச்சினைகள் வந்தன. நீங்கள் குறிப்பிட்ட ஆந்திரா போன்ற மாநிலங்களில் கொத்தடிமைகளாக வைக்கப் பட்டிருந்த தமிழர்கள் அரசினால் மீட்கப் பட்டதால்த் தான் நாம் அந்தச் செய்திகளை அறிய முடிந்தது. </b> <b>ஆதிபன்:</b> நீங்கள் சமுதாயத்தில் காட்டும் ஈடுபாட்டைப் பார்க்கையில் உண்மையிலேயே புல்லரிக்குதப்பா. மற்றவர்கள் இருக்கட்டும் நீங்கள் சொன்ன விடயங்களைச் சரிசெய்ய நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லமுடியுமா???? மற்றவர்களுக்கு உபதேசிப்பதை விட தாங்களே செய்து காட்டுவதுதான் சிறந்தது. வெறும் வாய்ச் சவடால்களால் ஒன்றும் ஆகப் போவதில்லை. உண்மையில் சமுதாயச் சிந்தனைகள் இருந்திருந்தால் மற்றவர்கள் செய்வது தவறென்று எண்ணினால் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி இப்படிச் செய்யலாமே எனச் சொல்வது தான் மனிதத்தன்மை. அதை விடுத்து எதையெடுத்தாலும் குறை சொல்வதிலேயே பொழுதைப் போக்குவதே சிலர் வேலையாய் போச்சு. - Vasampu - 11-17-2005 <b>நித்தியா</b> நீங்கள் எதைப் புரிந்து கொண்டு கருத்து எழுதுகின்றீர்கள். சிலர் குஸ்புவிற்கு கோவில் கட்டினார்கள் என்பதற்காக எவ்வாறு தமிழ் நாட்டு மொத்தத் தமிழர்களையும் நீங்கள் குறை சொல்ல முடியும். தமிழ் சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதும் உண்மை அதற்காக எப்படி எல்லாத் தமிழர்களும் அப்படித்தான் என்று முடிவு செய்யலாம். உண்மையில் ஓரளவு ஓய்ந்து போய்க் கொண்டிருந்த பிரைச்சினையை யார் மீண்டும் பெரிதாக்கினார்கள். உண்மைகளை சரியாக அறியாமல் எழுந்தமானமாக கருத்தெழுதுவதைத் தவிருங்கள். - Birundan - 11-17-2005 குறை இருக்கும் இடத்தில் குறைதானே சொல்ல முடியும், நீங்கள் எப்படி நிறை கூறுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியும். விபரீதம் வருமென தெரியாமல் சொன்னார் சரி, பிழை என தெரிந்து மன்னிப்பு கேட்டார் சரி, சுகாஷினி கூட்டு சேர்ததும் தான் சொன்னது சரிதான் என்றால் என்ன நியாயம்,அப்ப அவர் மனதால் தான் செய்தது தவறென உணரவில்லை, சும்மா சாக்கு போக்குக்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இதையே நாளைக்கு சுகாஷினியும் கூறுவார். கேட்பவன் கேனயன் என்றால் கேள்வரகில் பால் வடியுது என்றும் சொல்வார்கள். - வினித் - 11-17-2005 Quote:உண்மையில் ஓரளவு ஓய்ந்து போய்க் கொண்டிருந்த பிரைச்சினையை யார் மீண்டும் பெரிதாக்கினார்கள். நான் இல்லை அண்ணா நான் நல்ல பிள்ளை தானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|