Yarl Forum
காட்டுமிராண்டிக் கலாச்சாரம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: காட்டுமிராண்டிக் கலாச்சாரம் (/showthread.php?tid=2420)

Pages: 1 2 3


- Danklas - 11-17-2005

ஓஒய்ய் நல்லவன், வசம்ஸ் சந்தில புகுந்து சிந்து விளையாடுற விளையாட்டை முதல்ல நிப்பாட்டுங்க,,,, உங்க மனதுக்குள் நினைச்சதையெல்லாதையும் இங்க சொல்லாதேங்க,,, இது உங்க வீட்டு சொத்த அல்ல.. பொது,,, ஆதரத்தோட முன்வையுங்க,, முடிக்கும் முழக்காலுக்கும் முடிச்சுபோடாதேங்க... ஒரு செயலை தட்டிக்கேட்காலாம் ஆனால் அதை இவர்கள்தான் செய்திருப்பினமெண்டுறதை ஆனித்தரமா ஆதரங்கள் இல்லாமல் முன்வைக்காதேங்க.....சுதந்திர தமிழீழத்தை மிட்க கன இளைஞர்கள் சின்ன வயசிலேயே என்னிப்பார்க்க முடியாத தியாகத்தை செய்திருக்கினம் மறந்திடாதேங்க,,,, :evil: :evil:


- Vasampu - 11-17-2005

<b>டண்ணுக்கண்ணா

உங்க பாணியெல்லாம் நமக்குத் தெரியாதுங்க. வரலாறுகள் தெரியாமல் நான் வளரவில்லை. உங்களைவிட எனக்கு நிறையவே தெரியுமுங்க. அதாலே உங்களைப் போல் நானும் ஒண்ணுமே தெரியாமல் சந்திலே புகுந்து அதென்னங்க ஆஆ சிந்து பாடவெல்லாம் மாட்டேனுங்க. குளிரிலே கண்டபடி புலம்பாமல் நன்றாக போர்த்து மூடிக்கொண்டு படுங்கோ.</b>


- இவோன் - 11-17-2005

டன்.. அது யாராக இருந்தாலும் அந்தக் காட்டுமிராண்டிகள் முகத்தில் காறித் துப்பத்தான் முடியும்.. அது கலாசாரம் பேணும் குழுவாகவே இருந்தாலும் அல்லது தேசவிரோத கும்பல்களாக இருந்தாலும் யாராயினும்...


- Niththila - 11-17-2005

அது சரி நல்லவனது கருத்தை முதலில இருந்து வாசிக்கும் போது ஒரு விடயம்புரியுது தானே புலிகளின்மீது பழி போட்டுட்டு பிறகு வக்காலத்து வாங்குறார் போல இருக்கு

எதுக்கு தேவையில்லாம புலிகளை இதுக்க சம்பந்தப்படுத்துறீங்க :evil:


- nallavan - 11-17-2005

ஐயா டண்,
இப்படியொரு கொலையே நடக்கவில்லை எண்டு சொல்ல வாறியளா?
என்னதான் சொல்ல வாறியள்?
எதைக் கண்டபடிக் கதைக்கவேண்டாமெண்டு சொல்லிறியள்?
இப்படியொரு கொலை நடக்கவில்லையென்றால் மட்டுமே என் பதிவு பொருந்தாது. மற்றும்படி அதில் என்ன தவறென்று சொல்ல முடியுமா?

இளைஞர்களின் தியாகம் பற்றி எங்களுக்குப் போதிக்கத் தேவையில்லை. எல்லாம் தெரியும். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
இது வழமையான யாழ்த்தனமான கதைதான். சம்பந்தா சம்பந்தமில்லாமல் தியாகம், அது இது எண்டு கொண்டுவந்து பூத்துறது.

ஆதாரத்துக்கு நானென்ன நேரே யாழ்ப்பாணம் போய் விசாரித்து வந்தா எழுதவேணும்? அப்பிடியெண்டா யாழ்க்களத்தில ஒருத்தனும் கருத்துக்கள் எழுதஏலாதே?

நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறன், ஒரு தரப்பிலயிருந்து அப்பிடிக் கதையாதை, இப்பிடிக் கதையாதை எண்டு ஒரே அட்வைஸ்தான். பெருமிதப்படுறதுக்கும் மகிழ்ச்சியடையிறதுக்கும் மட்டும் எந்த ஆதாரமும் தேவையில்லை. ஆனா விமர்சனம் வந்த உடன மட்டும் ஆதாரமில்லாமல் கதையாதை எண்டுறது. என்ன ஆதாரமில்லாமல் கதைக்கப்பட்டது என்பதையாவது சொல்லலாம். அதுவுமில்லை. பிறகென்ன அட்வைஸ் வேண்டிக்கிடக்கு?


- Danklas - 11-17-2005

Vasampu Wrote:<b>டண்ணுக்கண்ணா

உங்க பாணியெல்லாம் நமக்குத் தெரியாதுங்க. வரலாறுகள் தெரியாமல் நான் வளரவில்லை. உங்களைவிட எனக்கு நிறையவே தெரியுமுங்க. அதாலே உங்களைப் போல் நானும் ஒண்ணுமே தெரியாமல் சந்திலே புகுந்து அதென்னங்க ஆஆ சிந்து பாடவெல்லாம் மாட்டேனுங்க. குளிரிலே கண்டபடி புலம்பாமல் நன்றாக போர்த்து மூடிக்கொண்டு படுங்கோ.</b>

ஓ ரொம்ப தெரியும்போல? அதுதான் எப்ப எப்ப நேரம் கிடைக்கும் பொழுது வந்து விளாசுறீங்களோ?? அது சரி வசம்ஸ் இதை யார் செய்திருப்பாங்க எண்டு நினைக்கிறீங்க?? ஆதரம் எதாவது இருக்கோ?? இல்லை உங்களுக்குத்தான் யாரவது ஆதரம் இல்லாமல் கருத்தை (வதந்தி பரப்பி யாழ்களத்தை பத்தோட பதினொண்டாக்கா பிடிக்காதே)வைத்தா பிடிக்காதே?? அப்புறம் எப்படி இதுக்கு வக்காளத்து வாங்கிறியள்?? :roll: :evil:


- Danklas - 11-17-2005

nallavan Wrote:இளைஞர்களின் தியாகம் பற்றி எங்களுக்குப் போதிக்கத் தேவையில்லை. எல்லாம் தெரியும். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
இது வழமையான யாழ்த்தனமான கதைதான். சம்பந்தா சம்பந்தமில்லாமல் தியாகம், அது இது எண்டு கொண்டுவந்து பூத்துறது.

<b>ஆதாரத்துக்கு நானென்ன நேரே யாழ்ப்பாணம் போய் விசாரித்து வந்தா எழுதவேணும்? அப்பிடியெண்டா யாழ்க்களத்தில ஒருத்தனும் கருத்துக்கள் எழுதஏலாதே?</b>

நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறன், ஒரு தரப்பிலயிருந்து அப்பிடிக் கதையாதை, இப்பிடிக் கதையாதை எண்டு ஒரே அட்வைஸ்தான். பெருமிதப்படுறதுக்கும் மகிழ்ச்சியடையிறதுக்கும் மட்டும் எந்த ஆதாரமும் தேவையில்லை. ஆனா விமர்சனம் வந்த உடன மட்டும் ஆதாரமில்லாமல் கதையாதை எண்டுறது. என்ன ஆதாரமில்லாமல் கதைக்கப்பட்டது என்பதையாவது சொல்லலாம். அதுவுமில்லை. பிறகென்ன அட்வைஸ் வேண்டிக்கிடக்கு?

ஆதரம் இல்லாமல் எப்படி ஒரு தரப்பை குற்றம் சாட்டுவீர்கள்? நீங்கதான் இருவரும்தான் அதை (வசம்பரும் நீங்களும்) செய்திருப்பியள் எண்டு நான் சொல்லுறன்,, இதுக்கு என்ன சொல்லுறீயள்? :roll: :? :evil:


- nallavan - 11-17-2005

வாங்கோ நித்திலா!
பரவாயில்லை, உங்களுக்கு நானெழுதிறது விளங்குதே.
அதுசரி எங்க புலிகள் மீது பழிபோட்டனான்?
அதைச் சொல்லுங்கோ முதலில. பிறகு எங்க நியாயப்படுத்தினான். அதையும் சொல்லுங்கோ.
பிறகு ஏதோ விளங்கிறமாதிரிக் கதைக்கிறியள்?
இதைவிட விளக்கமா என்னால எழுத ஏலாது தங்கச்சி அல்லது அக்கா.

அட அதவிடுங்கோ. இந்தக் கொலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள் எண்டதையாவது சொல்லிறியளோ எண்டால் அதுவுமில்லை. எல்லாரும் கழுவிற மீனில நழுவிற மீன்தான். ஏதோ தேசத்துரோகியெண்ட முத்திரை குத்தப்பட்டிடும் எண்ட பயத்திலயோ என்னவோ சிலர் கடும் ரென்சன் ஆகி வந்து ஓதுகினம்.


- வன்னியன் - 11-17-2005

ஓமோம் நீங்கள் சொல்லுறது சரிதான் வசம்பு எத்தனை வீடுகளில் திருடர்களால் துர்ங்கமுடியாமல் பயந்துகொண்டிருக்கின்றார்கள். திருடடப்போற இடத்திலை நாய் குரைச்சால் எப்படியாவது ஒருசில தினங்களில் அந்த நாயைக்கொன்று விட்டு திருடவருவதும் யாழ் மக்கள் படுகிற அவதி உங்கடை(வசம்புவுக்கு) தெரியாது போலும். மக்கள் துர்ங்கும்போது மயக்கமருநு்(ஸபிரே) அடித்துவிட்டு திருடுவதும் மக்களஇ படுகிற அவஸ்தை இந்த மனிதாபிமான மனிதர்களுக்கு தெரியவில்லையா?
ஐயா கொஞ்சம் மக்கள் துன்பத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட மக்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படித்தான் செய்வார்கள். உண்மையில் திருடனாக இருந்தால் இந்த தண்டனைமக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்


- Vasampu - 11-17-2005

டண்
நீங்க கேட்டிட்டீங்க என்றபடியால் சொல்கிறேன். எனக்கு உங்களில் தான் சந்தேகம்.

நான் எங்கு எவரை நேரடியாக சொல்லியிருக்கின்றேன். இணையத்தளங்களில் வந்தவற்றையே குறிப்பிட்டிருக்கின்றேன். நீங்கள் உங்கள் பாட்டிற்கு அதற்கு அர்த்தம் கற்பித்தால் நான் என்ன செய்வது.


- இவோன் - 11-17-2005

நித்திலா முழுக்க வாசித்து விட்டு கருத்தெழுத பழகுங்க..

யாரும் புலிகள் மீது பழி போடவில்லை. எங்கை போட்டிருக்கெண்டு ஒருமுறை காட்டுங்க.. பார்க்கலாம்.. சும்மா கும்பல்ல கோவிந்தா போட வேண்டாம்.. அவரும் சொல்லுறார் நானும் சொல்லுவம் எண்ட மாதிரி..

சரி.. இதனை கலாசாரம் பேணும் குழு செய்யவில்லை என்றெ வைத்துக் கொள்வோம்.. யாரோ ஒரு தேசவிரோத குழு கொண்டு வந்து போட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் கட்டி வைக்கப்பட்ட இளைஞன் பின்னர் ஒரு வீதி கடந்து யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் மீட்கப்பட்டிருக்கிறார்.

அவரை அது வரைக்கும் இழுத்துக் கொண்டு போனது.. நமது யாழ்ப்பாண பெருமக்களில் சிலர் தானே.. அல்லது தேச விரோத கும்பல ்தானா...? அதுவரையும் யாழ் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களா..

அடித்துக் கொலை செய்ததிலே பொதுமக்களும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதனை எல்லா செய்திகளும் உறுதி செய்கின்றன.

யாழில் கூட சமூக விரோதிகள் உசார் அடித்தே கொல்லுவோம் என்று தான் தலைப்பு இடப்பட்டிருந்தது..

இங்கே யாரும் புலிகள் செய்ததாக சொல்ல வரவில்லை. எனது கோபம் எல்லாம ்அதில் சம்மந்தப்பட்ட பொதுமக்கள் எத்தனை வக்கிரம் பிடித்தவர்களாக இரு்பார்கள் என்பது தான்..

மீண்டும் சொல்கிறென்.. இதனைச் செய்தவர்கள் யாராயினும் அவர்கள் காட்டுத்தனமானவர்கள்.. பச்சைக் காட்டு மிராண்டிகள்..


- nallavan - 11-17-2005

டண்,
என்ன கதைக்கிறீர்கள்?
உதயனில் வந்ததை வைத்து யாரும் கதைக்கக்கூடாதா?
உங்கள் கதை என்னவென்றால் இந்தக் கொலையைப் பற்றியே யாரும் கதைக்கக்கூடாது என்றுதான் இருக்கிறது.
அதுசரி, இவ்வளவு நாளும் யாழில் நடந்த வாதங்களெல்லாம் எல்லாரும் யாழ்ப்பாணமோ குறிப்பிட்ட இடங்களுக்கோ போய் வந்துதான் கருத்து எழுதினார்களா?
ஏதோவொரு செய்தியை வைத்துத்தானே எழுதினார்கள்?

புலிகள் மீது குற்றம் சாட்டியதாகச் சிலர் சொன்னார்கள். எங்கே அப்படிச் சொன்னேன் என்று கேட்டால் பதிலில்லை.
நான் எழுதியிதில் எது ஆதாரமற்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள். பத்தாததுக்கு நானும் வசம்புவும்தான் செய்தோம் என்கிறீர்கள். இது கருத்தை எதிர்கொள்ளத் திராணியற்ற கோழைத்தனம்.(நகைச்சுவைக்காகச் சொல்லியிருந்தாலும்)

அதுசரி, உங்களுக்கேன் இப்படி தறிகெட்ட கோபம் வருகிறது? இதை ஈ.பி.டி.பி செய்ததென்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அப்போது இது காட்டுமிராண்டித்தனமில்லையென்று சொல்வீர்களா?
நான் சொன்னது, இந்தச் செயல் காட்டுமிராண்டித்தனமாதென்று. அது சரியா இல்லையா என்பதைச் சொல்லலாமே? (ஏற்கெனவே சொல்லிவிட்டீர்கள்.)
ஏதோ இப்படியொரு கொலை நடக்கவில்லையென்பது போன்றுதான் நீங்கள் கதைக்கிறீர்கள்.
நீங்கள் கேட்பது இக்கொலை நடந்ததா இல்லையா என்பதற்காக ஆதாரமா?


- இவோன் - 11-17-2005

ஆதாரம் ஆதாரம்.. புலிகளின் குரல் வானொலியின் செய்தியாளர் சொல்கிறார்.. இது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கிலிசை கெட்ட அடிதடிக் கும்பல்களின் வேலையாக இருக்க கூடும். அதே நேரம் தேச விரோத சக்திகளின் வேலையாகவும் இருக்க கூடும்.. ஆயினும் இதில் பொதுமக்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெளிவு என்கிறார்.

ஒரு வேளை இந்த இளைஞனை தேசவிரோத கும்பல் கொலை செய்திருந்தால்.. அவன் தியாகி.. திருடனல்ல..

அல்லது கலாசாரம் பேணும் குழு கொலை செய்திருந்தால் அவன் திருடன்..

எனது எண்ணமெல்லாம் புலிகள் அதில் நடவடிக்கை எடுக்க வேணும். சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது. போடுறவன் கொண்டு போட்டால் அடிக்கிற பொதுசனத்திற்கு எங்கெ போயிற்று புத்தி,.? மரமண்டைகளாயிற்றார்களா.. ? கந்த புராண கலாசாரத்தில வந்த பரபரம்பரையின் சிலதுகள் காட்டுமிராண்டிக் கலாசாரத்தை முன்னெடுக்கினம்..

புலிகளாலை முடியாதெண்டு சொல்ல முடியாது. உள்ளை புகுந்து அதற்கு காரணமானவர்களை பகிரங்கப் படுத்த வேணும்..


- Danklas - 11-17-2005

Vasampu Wrote:டண்
நீங்க கேட்டிட்டீங்க என்றபடியால் சொல்கிறேன். எனக்கு உங்களில் தான் சந்தேகம்.

நான் எங்கு எவரை நேரடியாக சொல்லியிருக்கின்றேன். இணையத்தளங்களில் வந்தவற்றையே குறிப்பிட்டிருக்கின்றேன். நீங்கள் உங்கள் பாட்டிற்கு அதற்கு அர்த்தம் கற்பித்தால் நான் என்ன செய்வது.

அட எப்படி வசம்ஸ் இவ்வளவு கரக்டா சொல்லுறீங்கோ?? இப்ப ஒத்துகொள்ளுறன் உங்களுக்கு நிறைய தெரியும் எண்டு..
வசம்ஸ் நீங்க பெரிய கில்லாடிதான்,, இல்லாட்டில் நேரடியா குறிப்பிடாமல் சுத்தி வளைச்சு முக்கைதொடுவீங்களோ?? அதென்ன புலிகளின் இனையத்தளத்தில் அந்த கொலைக்கு நியாயம் கற்பித்து இருக்கிறார்கள் எண்டு சொன்னீங்களே? அதில என்ன சொல்லி இருக்கு?? 20 வயது நிரம்பிய இளைஞன் தான் உண்டு தன் பாடு எண்டு இருந்தவரை இனம்தெரியாதவர்கள் கடத்தி கொடுரமா கொலை செய்திருக்குது எண்டா கிடக்கு?? :roll: :?

அது சரி நல்லவன் பொதுமக்களை குற்றம் சாட்டுறிங்க,, உதயன் பத்திரிகையில வந்தது எண்டுறீங்க, உதயன் பத்திரிகை நிருபர் நேர இருந்து பார்த்தவர் எண்டு சொன்னாரா? சப்போஸ் அந்த இளைஞரை கடத்திய குழு அந்த இளைஞன் செய்த அட்டகாசங்களை பற்றி அங்கு எழுதி வைத்திருப்பார்கள்,, அந்த இடத்துக்கு வந்த பொதுமக்களில் சில தூரோகிகளும் இருந்து தங்கள் கை வரிசையை காட்டி இருக்கலாம் இல்லையோ?? யாழ்ப்பாண பொதுமக்கள் ஒரு இளைஞனை கொட்டனால் 3 மணி நேரம் அடிச்சு கொல்லுற அளவுக்கு போகமாட்டார்கள்,, அதிலும் அந்த இளைஞன் தனிய திருட்டு சம்பவங்களில் சம்பந்தபட்ட படியினால் அவர்கள் இவ் செயலை செய்திருக்க வாய்ப்பில்லை,, ஓரிரண்டு மக்கள் (அவனால் பாதிக்கபட்ட) 2,3 அடி அடிச்சிருப்பாங்க.. இந்த நேரத்தில யாழ்பாணத்தில இருக்கிற வீர புருசர்கள் (கும்பல்) கை வரிசையை காட்டி இருக்கலாம் எல்லோ???,,, :roll: :?
(பல கோணத்தில ஆரயப்படவேண்டிய விடயத்தை ஓரிருவரை காட்டி ஆரயவேண்டாம் எண்டே கூற வருகிறேன்,,,)


- Niththila - 11-17-2005

இவோன் Wrote:நித்திலா முழுக்க வாசித்து விட்டு கருத்தெழுத பழகுங்க..

யாரும் புலிகள் மீது பழி போடவில்லை. எங்கை போட்டிருக்கெண்டு ஒருமுறை காட்டுங்க.. பார்க்கலாம்.. சும்மா கும்பல்ல கோவிந்தா போட வேண்டாம்.. அவரும் சொல்லுறார் நானும் சொல்லுவம் எண்ட மாதிரி..

சரி.. இதனை கலாசாரம் பேணும் குழு செய்யவில்லை என்றெ வைத்துக் கொள்வோம்.. யாரோ ஒரு தேசவிரோத குழு கொண்டு வந்து போட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் கட்டி வைக்கப்பட்ட இளைஞன் பின்னர் ஒரு வீதி கடந்து யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் மீட்கப்பட்டிருக்கிறார்.

அவரை அது வரைக்கும் இழுத்துக் கொண்டு போனது.. நமது யாழ்ப்பாண பெருமக்களில் சிலர் தானே.. அல்லது தேச விரோத கும்பல ்தானா...? அதுவரையும் யாழ் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களா..

அடித்துக் கொலை செய்ததிலே பொதுமக்களும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதனை எல்லா செய்திகளும் உறுதி செய்கின்றன.

யாழில் கூட சமூக விரோதிகள் உசார் அடித்தே கொல்லுவோம் என்று தான் தலைப்பு இடப்பட்டிருந்தது..

இங்கே யாரும் புலிகள் செய்ததாக சொல்ல வரவில்லை. எனது கோபம் எல்லாம ்அதில் சம்மந்தப்பட்ட பொதுமக்கள் எத்தனை வக்கிரம் பிடித்தவர்களாக இரு்பார்கள் என்பது தான்..

மீண்டும் சொல்கிறென்.. இதனைச் செய்தவர்கள் யாராயினும் அவர்கள் காட்டுத்தனமானவர்கள்.. பச்சைக் காட்டு மிராண்டிகள்..

இவோன் அண்ணா நான் சரியாகத்ததான் வாசிச்சனான் நல்லவன் போட்ட முதல் கருத்தை சரியா வாசியுங்க நான் சொல்லுறது புரியும்

அவரின் கருத்தில புலிகளின் நீதித்துறை கூட இப்படியான குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கேல்லை என்ற பொருள் பட கருத்து முன்வைத்து இருக்கார்

என்ர கேள்வி என்னெண்டா ஏன் புலிகளின் நீதித்துறையை இதுக்க இழுக்க வேணும் ஏதாவது ஒருவகையில அவர்களது பெயரை இதுக்க இழுத்து விடுற முயற்சி தானே :evil: ஏன் இலங்கை நீதித்துறையை பற்றி கதைக்க வேண்ட்யதுதானே அவையின்ர நீதி மன்றம் தானே யாழ்ப்பாணத்தில இருக்கு

அதுசரி நல்லவனை நான் கேட்ட கேள்விக்கு நீங்க எதுக்கு அண்ணா பதில் சொன்னீங்க :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- இவோன் - 11-17-2005

Quote:யாழ்ப்பாண பொதுமக்கள் ஒரு இளைஞனை கொட்டனால் 3 மணி நேரம் அடிச்சு கொல்லுற அளவுக்கு போகமாட்டார்கள்

உண்மைதான் தொடர்ந்து அடிக்க மாட்டாார்கள்.. ஒரவர் அடித்து விட்டு போக மற்றவர் வந்து அடித்திருக்கலாம். அவர் போக மற்றவர் வந்து அடித்திருக்கலாம். நீங்கள் கூட ஊகத்தின் அடிப்படையில் தானே சொல்லுகிறிர்கள். இருக்கலாம்... அடித்திருக்கலாம் என.. ஆதாரம் எங்கை..?


- kuruvikal - 11-17-2005

தேசவிரோத சக்திகளும் சமூகவிரோத சக்திகளும் இராணுவம் மற்றும் அதனுடன் இயங்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களால் பாதுகாப்பளிக்கப்பட்டு வளர்க்கப்படுபவர்கள்..! அவர்களால் மக்கள் படும் இன்னல்கள் எண்ணிலடங்காதவை..! மக்கள் தமது கஸ்டங்களை எடுத்துச் சொல்லியும் அவர்களுக்கு தேசவிரோத சக்திகளும் சமூகவிரோத சக்திகளும் பாதுகாப்பு அளிக்கும் போது அதனால் துன்பப்படும் மக்கள் இவர்கள் மீது ஆத்திரம் கொண்டு பழிவாங்க முற்படுவது தமிழர்களுக்கு மட்டுமானதல்ல..அது ஐரோப்பா என்றாலும் நிகழும்...! இப்படியானவர்களை மக்கள் தண்டிக்க முதல் மக்களைப் பாதுகாக்க சட்டத்தைக் காப்பதாகச் சொல்லும் ஆட்கள் ஆவன செய்ய வேண்டும்...!

இதைக் காட்டுமிராண்டித்தனம் என்பவர்கள்... குறிப்பிட்ட நபர் (குறித்த நபர் காட்டுமிராண்டியாக இருந்தது உறுதிப்படுத்தப்படால்) செய்த காட்டுமிராண்டித்தனங்களை வெளிக்காட்ட அதைத் தடுக்க முயலாதது ஏன்...??! அவர்கள் தங்கள் காட்டுமிராண்டித்தனங்களை கட்டவிழ்க்க சட்டம் இடமளித்தது ஏன்...??! அதனால் பாதிக்கப்படவர்களுக்கு ஏற்பட்ட நஸ்டங்களுக்கு பரிகாரம் என்ன...???! :roll: Confusedhock: Idea


- இவோன் - 11-17-2005

சரி.. அந்த 20 வயதுத் திருடனை தேசவிரோதி ஆக்கியாயிற்று. இனி அவன் துரோகி தானே.. சரியான தண்டனைதான்..

அது சரி.. அவன் தேச விரோத சக்திகளுடன் இணைந்திருந்தமைக்கான ஆதாரம் என்ன.. எந்த பத்திரிகை நிருபர் போய் பார்த்து வந்தார்..? லூசுத் தனமான கேள்விகளுக்கு லூசுத்தாமாகத்தான் பதில் சொல்ல முடியும்..


- இவோன் - 11-17-2005

அவனது திருட்டுச் சம்பவம் தொடர்பாக யார் விசாரித்தது. யார் முடிவு செய்தது.. ? காட்டுமிராண்டிகள் தானா..?


- இவோன் - 11-17-2005

ஐரோப்பாவில் நகைத்திருட்டுக்களுக்கெல்லாம் பொல்லால் அடித்து கொள்வார்களா.. அந்த மக்களின் உணர்வுகள் அப்படிதான் இருக்குமா..? அந்தச் சம்பவத்தில் தொடர்புற்ற தமிழ் காட்டுமிராண்டிகளை நியாயப் படுத்த ஐரோப்பிய மக்களை துணைக்கிழுக்க வேண்டாம்..

குருவி.. உங்களது.. புத்திஜீவிக்கதைகளை ஒரு புறத்தில் வைத்து விட்டு புரிதலோடு கதையுங்கள். இது உங்கள்.. மேதாவித்தனத்தை காட்டுகின்ற பிரச்சனை இல்லை..