Yarl Forum
தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005.. (/showthread.php?tid=2258)

Pages: 1 2 3


- Birundan - 11-27-2005

வானம்பாடி அதற்கு பெயர்தான் தேசித்தைலவரின் உரைக்கான விளக்க உரை, எம்தலைவன் எளிதில் புரிந்து கொள்ளமுடியாதவர்களுக்கு புதிரானவன், புரிந்தவருக்கு உயிரானவன்.


- Vaanampaadi - 11-27-2005

இப்ப நான் என்ன சொன்னேன் .... அதாவது பாலசிங்கத்தின் நகைசுவை கருத்தை குழந்தைகள் கூட புரிஞ்சிக்கலாம்...அப்டீன்னு சொன்னேன்... ஏதாவது தப்புங்களா_


- Birundan - 11-27-2005

தப்புன்னு யார் சொன்னாங்க, அவர் ஒரு இலகுவில் புரிந்து கொள்ளமுடியா கவிதை என சொன்னேன்.


- iruvizhi - 11-27-2005

Vaanampaadi Wrote:
selvanNL Wrote:
Vaanampaadi Wrote:இப்ப நான் என்ன சொன்னேன் .... அதாவது பாலசிங்கத்தின் நகைசுவை கருத்தை குழந்தைகள் கூட புரிஞ்சிக்கலாம்...அப்டீன்னு சொன்னேன்... ஏதாவது தப்புங்களா_


வானம்பாடி நீங்க வைத்த கருத்தை கொஞ்சம் வடிவா யோசிச்சு எழுதுங்கள், தயவு செய்து இக்கருத்தினை திசை திருப்பாமல், இத்துடன் நிறுத்துங்கள், நிறுத்துவோம், நன்றி. Idea

நான் என்னாங்க யோசிக்கிறது..

வானம் பாடி கூறியதன் ஊடே நான் விளங்கிக் கொண்டது யாதெனில். தலைவரின் உரையினை பால அண்ணனின் விளக்கத்தினூடே புரிந்துகொண்டார் என்பதுவே. தேசியத்தலைவர் கூறிய கருத்தினை உள்வாங்கிக் கொண்டார் என்பதே அவரின் பதில்.

நன்றி யாழ்கள உறவுகளே


- iruvizhi - 11-27-2005

நீங்கள் மாவீரர்நாள் சிறப்புரைகளை தமிழ்நாதம்.கோம் என்னும் இத்தளத்திற்கு சென்று கேட்கலாம்.

http://www.tamilnaatham.com/Speeches.htm


- narathar - 11-27-2005

ஆளமான அரசியல் சிந்தனையின் பாற்பட்ட கருத்துக்களை எமக்கு விளங்கவில்லை என்று உள் வங்காதவர்,தமது மட்டுப் படுத்தப்பட்ட அரசியல் மற்றும் மொழி ஆழுமயை என்றுமே வளர்த்துக் கொள்ளப் போவதில்லை.

தலைவரின் உரயை பாலசிங்கம் அண்ணவர் அவர்கள் வாழைப் பழத்தில ஊசி ஏற்றிற மாதிரி விளாங்காதவைக்கு விளக்கிச் சொல்லி இருக்கிறார்.

போரடுபவர்களுக்கே போராட்ட அரசியலும்,மொழியும் அதன் வலிமையும், வலியும் விளங்கும்,பொழுதுபோக்குபவர்களுக்கு அல்ல.


- Thala - 11-27-2005

நல்ல கருத்தாளமான கருத்தோடு கூடிய அரசியல் சதுரங்க விற்பனர்த்தனத்தை தலைவர் அவர்கள் காட்டி இருக்கிறார் எண்றே சொல்ல வேண்டும். அதிலும் சமாதானத்துக்கான சிங்களவரின் வேசத்தைக் கலைத்து அவர்களின் மனப்போக்கை வெளிக்கொண்டு வருமுகமாக சிங்களத் தேசியத்தின் தலைவருக்கு சமாதான வேண்டுதலை தயவாக விடுத்து சமாதான விளையாட்டில் வீசப்படும் பந்தை இப்போ ராஜபக்ஸ கையில் திணித்த தந்திரத்ததுக்காகவே... தலைவருக்கு, பலமுறை தலைவணங்கலாம்...


- Aravinthan - 11-27-2005

Thala Wrote:நல்ல கருத்தாளமான கருத்தோடு கூடிய அரசியல் சதுரங்க விற்பனர்த்தனத்தை தலைவர் அவர்கள் காட்டி இருக்கிறார் எண்றே சொல்ல வேண்டும். அதிலும் சமாதானத்துக்கான சிங்களவரின் வேசத்தைக் கலைத்து அவர்களின் மனப்போக்கை வெளிக்கொண்டு வருமுகமாக சிங்களத் தேசியத்தின் தலைவருக்கு சமாதான வேண்டுதலை தயவாக விடுத்து சமாதான விளையாட்டில் வீசப்படும் பந்தை இப்போ ராஜபக்ஸ கையில் திணித்த தந்திரத்ததுக்காகவே... தலைவருக்கு, பலமுறை தலைவணங்கலாம்...


ரஜபக்சை துண்டைக் காணோம் துணியக்காணோம் என்று முழிக்கப் போறார்.


- narathar - 11-27-2005

இங்கே முக்கியமாக ராஜபக்சவுக்கு இருக்கப் போற குழப்பம் அடுத்த வருசம் என்பது இன்னும் 2 மாசமா அல்லது 12 மாசமா என்பது?
மேலும் தமிழரின் அடிப்படை அரசியற் கோரிக்கைகளை மறுதலித்துள்ள ராஜபக்ச எப்படி ஒரு தீர்வை முன் வைப்பார்.அப்படி வச்சா அவருக்கு பிரச்சினை, வைக்காட்டியும் பிரச்னை.


- Aravinthan - 11-28-2005

அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பேச்சு
http://www.tamilnaatham.com/special/bala_s...eech_2005/1.htm


பாலாவின் நகைச்சுவை உரை - Vaanampaadi - 11-28-2005

<b>ஒற்றையாட்சி-தாயகம் நிராகரிப்பு-சுயநிர்ணயம் நிராகரிப்பு-யுத்த ஒப்பந்தம் மீளாய்வு: மகிந்தவுக்கு அன்ரன் பாலசிங்கம் வரிக்கு வரி பதிலடி!! </b>

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று உரையாற்றிய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இனப்பிரச்சனை தொடர்பாக தெரிவித்த கொள்கைகளுக்கு தமிழீழ மதியுரைஞரும் அரசியல் ஆலோசகருமான அன்ரன் பாலசிங்கம் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

லண்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.11.05) நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமான, பேரெழுச்சியான மாவீரர் நாள் நிகழ்வில் அன்ரன் பாலசிங்கம் ஆற்றிய உரை:

எமது மண்ணுக்காகவும் எமது மக்களுக்காகவும் போராடி வீழ்ந்த எம் இன்னுயிர் மாவீரர்களதும் பொதுமக்களதும் நினைவாக இன்று நடைபெறுகிற நிகழ்ச்சியில் பங்கு பற்றி உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நான் இந்த மண்டபத்துக்கு வரும்போது எனது நண்பர் ஒருவர் சொன்னார். ஆனந்தசங்கரி அய்யாவும் இந்த கூட்டத்துக்கு வந்திருக்கிறார் என்று. அவர் வந்திருப்பது நல்லது. ஆனால் அவரை எங்களுக்கு ஒருமுறை அறிமுகப்படுத்த வேண்டும். அவரை கட்டிப்பிடித்து கொஞ்சம் வேண்டும் போல் ஆசையாக உள்ளது.

ஆனந்தசங்கரி அய்யா கொழும்பில் சொன்னாராம்.. நான் இந்த உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறேன்.. என் சொந்த ஊர் கிளிநொச்சிக்குப் போக முடியவில்லை என்று.

கிளிநொச்சிக்கு போக முடியலை என்று அவர் ஏன் அவசரப்படுகிறர் என்பது எங்களுக்குத் தெரியும். கிளிநொச்சியில் உள்ள கிராமத்தில் இவருக்குத் தெரிந்த 2 கிழவிகள் இருக்கின்றவாம்.

இவர் அங்கு போய் உடும்பை ரசிச்சு தின்றவராம். அதனால்தான் அங்க போக ஆசைப்படுகிறார். அவருக்குச் சொல்ல விரும்புகிறேன். அய்யா நீங்கள் கிளிநொச்சிக்கு எப்பவும் வரலாம். அங்க ஒரு 5 ஸ்டார் ஓட்டலை பொட்டம்மான் கட்டி வச்சிருக்கிறார். அங்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தி இருக்கிறார். அதில் பல முக்கியமான விடயங்களைச் சொல்லி இருக்கிறார்.

கடந்த வருடங்களில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், அதில் எமக்கு இயக்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டங்கள், நிழல் யுத்தகங்கள் பல முக்கிய விடயங்கள் சொல்லி இருக்கிறார்.

இறுதியாக ராஜபக்ச பற்றியும் அவரது அரசாங்கம் பற்றியும் அவரது கொகைகள் பற்றியும் எங்களது இயக்கம் நாங்கள் மேற்கொண்டு செய்ய உள்ளது என்ன? எங்களது திட்டம் என்ன? எங்களது போராட்டப் பாதை என்ன என்பதை மிகவும் தெளிவாகவும் விரிவாகச் சொல்லி இருக்கிறார்.

இந்த உரையில் 10, 12 முக்கிய விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

மகாவம்ச மன அமைப்பு என்று தலைவர் சொல்வது என்ன?

சிங்கள இனம் குறித்து... தலைவர் சொல்கிறார், சிங்கள இனம் இன்னமும் மகாவம்ச மன அமைப்பில் இருக்கிறார்கள் என்று.

மகாவம்ச மன அமைப்பு என்று தலைவர் சொல்வது என்ன?

மகாவம்சம் என்பது புத்த மதத்தவர்களது புராணக் கதை. ஒரு பித்த பிக்குவால் எழுதப்பட்ட வரலாறு. அதில் என்ன சொல்லப்படுகிறது எனில் புத்த பெருமான் இந்த இலங்கைத் தீவை சிங்களவர்களுக்கு சிங்கள இனத்துக்கு ஒரு தெய்வீக ப+மியாக எழுதிக் கொடுத்தாராம்.

தேரவாத பவுத்தம் வளருவதற்கான ஒரு புனித பூமி அது. சிங்களவருக்குத்தான் சொந்தம் என்று புத்தர் சொன்னாராம்.

ஆகவே அந்தக் காலம் தொடங்கி இந்த காலம் வரை கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆண்டுகளாக சிங்களவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இது எங்கள் சொந்தப் ப+மி- சிங்களருக்கென்று பௌத்தர்களுக்கு புத்த பெருமானால் கொடுக்கப்பட்ட பூமி. ஆகவே இதில் மற்றவர்களுக்கு இடமில்லை.

தமிழர்களுக்கும் இடமில்லை.. வேறு ஒவருக்கும் இடமில்லை.

இப்படியான ஒரு மகாவசம் மன அமைப்பில் (மைண்ட் செட்) சிங்களவர்கள் உள்ளன.

இதில் சிங்களவர்க்ளுக்கு யதார்த்தம் உண்மை விளங்கவில்லை.

அதாவது வட கிழக்கைத் தாயகமாகக் கொண்ட ஒரு தொன்மை வாய்ந்த இனம்-தமிழினம் தனித்துவ பண்பாடு, மொழி, கலாச்சாரம் வரலாற்றைக் கொண்டு, ஒரு தொன்மை வாய்ந்த தேசிய இனம்- வடக்கு கிழக்கில் வாழ்கிறது என்ற உண்மையை- யத்தார்த்தத்தை அன்றும் சரி இன்றும் சரி ஏற்கத் தயாராக இல்லை.

ஆகவே தலைவர் பிரபாகரன் சொல்கிறார்,

இந்த மகாவம்ச மன உலகத்திலிருந்து இந்த மகாவம்ச சிந்தனையிலிருந்து- இந்த புராண கட்டுகதையிலிருந்து சிங்கள தேசம் மாறப் போவது இல்லை.

ஆகவே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடிப்படைச் சித்தாந்தம் இப்படிச் சொல்லும் போது தமிழரை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்து, தமிழரை அங்கீகரித்து, அவர்களது தாயகத்தில் சுயாட்சி உரிமையை கொடுக்க சிங்களவர்கள் எப்போதும் தயாராக இல்லை என்று அடித்துச் சொல்கிறார்.

ஒரு மதத்தினது ஆணிவேரிலிருந்து இந்த கருத்துலகம் வருது.

புத்தர் சொன்னாராம்... புத்தர் யார்? புத்தர் ஒரு இந்து. அவர் இந்து பகுத்தறிவுவாதி.

அவர் சொன்ன தத்துவம், கடவுள் இல்லை. ஆன்மாவும் இல்லை. அடுத்த உலகமும் இல்லை.

கடவுளும் இல்லை என்று புரட்சிகரமான கருத்தைச் சொன்னவர் புத்தர். அவர் ஒரு இந்து சீர்திருத்தவாதி.

கடவுள் இல்லை என்று சொன்ன தத்துவஞானியை- அறிவாளியை நீ கடவுளாக வணங்குகிறாய்.

அப்படியான ஒரு கடவுள் இந்தத் தீவை எனக்கு எழுதி வைத்துவிட்டுப் போனதாக சிங்களவன் நம்புறான். அப்படியானால் சிங்களவனின் மேல்மாடியில் (மூளையில்) ஒன்றும் இல்லை. இப்படியான ஆட்களுடன் போய் எப்படிப் பேசுவது?

இதைத்தான் தலைவர் சொல்கிறார்...

ஏன் பேச்சுவார்த்தை?

சரி அப்ப பேசிப் பயனில்லை என்றால் சிங்கள அரசாங்கத்துடன் பேசிப் பயனில்லை என்று சொன்னால் பேசித் தீர்வைத் தரப்போவதில்லை என்று சொன்னால் அப்படி ஏன் பேச்சுவாத்தைக்கு போனீர்கள்? ஏன் பாலசிங்கத்தை அனுப்பினீர்கள்? என்பதற்கு விளக்கம் சொல்லுகிறார் தலைவர்.

நாங்கள் பேச்சுவார்த்தைக்குப் போனது உலகத்தினது நிர்பந்தம் காரணம் என்கிறார்.

ஒரு காலகட்டத்தில் இந்திய தலையிட்டபோது இந்தியாவின் அழுத்தம், நெருக்குவாரம் காரணமாகப் பேச்சுவார்த்தைக்குப் போனோம். திம்பு, பெங்களுர், டில்லிக்குப் பேச்சுவார்த்தைக்குப் போனோம். இந்தியாவினது நிர்பந்தங்களுக்குக் கீழ் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டியது நிர்பந்தம் வந்தது.

நானும் தலைவர் பிரபாகரனும் இந்தியாவில் இருக்கும் போது இப்படியான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. எங்களுக்குத் தெரியும் இப்படியான பேச்சுக்களில் பேசிப் பயனில்லை. ஆனால் இந்தியாக்காரன் கழுத்தை பிடித்து நெறித்துக் கொண்டு சொன்னான். போய்.. பேசு என்று.

அடுத்தது சர்வதேச உலகத்தினது நிர்பந்தங்கள். தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளோடு ரணிலோடு பேசினோம். இதற்கு சர்வதேச உலகத்தினது அழுத்தம் காரணம். சரி என்று பேசினோம்.

நாங்கள் பேசியதற்கு காரணம் என்ன என்று தலைவர் சொல்கிறார்..

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற ரீதியில் சர்வதேச அங்கீகாரம் பெற வேண்டும்; எமது இயக்கத்துக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் பெற வேண்டும். எமது மக்களினது பிரச்சனையை எமது மக்களினது போராட்டத்தை உலக அரங்கில் அறிமுகப்படுத்த போனோம் என்று தலைவர் சொல்லியுள்ளார்.

அடுத்து,

தமிழ் மக்களுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் அவர்களது தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நீதியான நியாயமான தீர்வைத் தரமாட்டார்கள் என்பதை உலகத்துக்கு நிரூபித்துக் காட்டவும் பேச்சுவார்த்தைக்குப் போனோம் என்கிறார் தலைவர். அது உண்மைதான்.

நாங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றோம். வெளிநாட்டு பத்திரிகை உலகத்தைச் சந்தித்தோம். ஏன் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது? எங்கள் மக்களின் பிரச்சனைகள் என்ன? கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பிரச்சனை ஏன் இழுபட்டுக் கிடக்கிறது என்று தெரியப்படுத்தினோம்.

ஒரு பக்கம் பேச்சுக்கு போக வேண்டிய நிர்பந்தம். மறுபுறம் எங்களுக்கும் தேவை.

சண்டையை விட பேச்சுவார்த்தையின் சிக்கல். சண்டையில் நேரடியாக எதிரியை மோதி அழித்து சாதனைகள் நிகழ்த்தலாம்.அதைச் செய்துள்ளோம்.

ஆனால் பேச்சுவார்த்தை என்பது வித்தியாசமான போராட்டம். அங்கே பொப்றிகள் இருக்கும். சதி வலைப் பின்னல்கள் இருக்கும்.

என்ன மாதிரி பாலசிங்கத்தை மடக்கலாம். புலிகளை என்ன மாதிரி அவர்களது இலட்சத்தியத்திலிருந்து திருப்பி வேறு பாதையில் கொண்டுபோலாம் என்று சதிகள் இருக்கும்.

இவைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை என்றால் சாதாரணவிடயம் அல்ல.

சிங்கள எதிரி தங்களிடம் உள்ள சிறந்த சாணக்கியர்கள், சிறந்த அறிவுஜீவிகள், பெரிய படிப்பாளர்கள், சட்ட மேதைகளை அனுப்புவார்கள்.

மிகவும் நுட்பமாக, தந்திரமாக, சாணக்கியமாக கையாள வேண்டும். இல்லையென்றால் தொலைந்தோம்.

அப்படியிருந்தும் சில சமயங்களில் நெருக்குதல்களுக்கு நாங்கள் ஆளாகியிருக்கிறோம்.

இந்தியாவுடன் நடந்த பேச்சு உதாரணம்.

ஜெயவர்த்தனவுடன் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் செய்கிறார். மாகாண சபை என்ற அப்ப சப்பை அதிகாரத்துடன் உள்ள திட்டம் அது.

அதைச் செய்துவிட்டு ஆயுதங்களைப் போடு என்றார்கள். நாம் ஆயுதங்களைக் கொடுத்தோம்.

மாகாண சபையை ஏற்க மறுத்தோம். அதன் பிறகு என்ன நடந்தது?

எங்களை அழிக்க இந்திய இரானுவத்தை ஏவிவிட்டது இந்திய அரசு.

அப்போது எங்களது இலட்சியத்துக்காக- எங்களது மக்கள் நலனை பேணுவதற்காக அந்த பெரிய வல்லரசையும் எதிர்த்தோம்.

நாங்கள் ஒரு சிறிய விடுதலை இயக்கமாக இருந்து பெரிய வல்லரசை எதிர்த்துப் போராடிய வரலாறு உங்களுக்குத் தெரியும். (மக்கள் பலத்த கை தட்டல்).

எங்களது இயக்கம் அழிந்தாலும் சரி..போராளிகள் அழிந்தாலும் சரி...நாங்கள் கொண்ட லட்சியத்துக்காக, மக்களைக் காப்பாற்ற எந்த சக்தியையும் எதிர்கொள்ளத் தயார் என்று பிரபாகரன் உலகுக்கு உணர்த்தினார். (கைதட்டல் அடங்கவில்லை).

ரணில்-மிலிந்த மொரகொட

ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர் மிலிந்த மொரகொட.

முந்திய அரசாங்கத்தில் பொருளாதார சீர்திருத்த அமைச்சர். பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர்.

அவர் தேர்தலுக்கு முன்னதாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.

நாங்கள் புலிகளை பேச்சுவார்த்தைக்கு இழுத்துக் கொண்டு போய் உலக நாடுகளைக் காட்டி இழுத்தடிச்சு கடைசியாக ஒன்றும் கொடுக்காமல் விட்டுவிட்டோம்.

சதிவலைக்குள் அவர்களை மாட்டிவிட்டோம். இதனால் புலிகள் இயக்கம் உடைந்தது. அந்த இயக்கத்திலிருந்து இருந்து ஒருவர் இயக்கத்தை விட்டு வெளியேறி இன்னொரு அமைப்பை உருவாக்கினார். அவர் யாரைச் சொல்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும்.

உண்மையில் நடந்தது என்ன?

ரணில் விக்கிரமசிங்க அரசு எங்களை பேச்சுவார்த்தைக்குக் கொண்டு போனது. காட்டுக்குள்ள காய்ஞ்சு போய் இவங்கள் கிடக்கிறாங்கள். மேற்குலக நாடுகளை நாகரீகத்தைக் காட்டினால் இவர்கள் போராட்டத்தை விட்டு ஓடிடுவார்கள் என்று நினைத்தார்கள்.

பேச்சுவார்த்தை நான்தான் தலைமை வகித்தேன்.

தாய்லாந்தில் பேச்சு நடக்கிறது. முக்கியமாக நானும் பீரிசும் தான் பெடரல் பற்றி இடறல் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் எங்களுடன் வந்த பொடியள் பின்னேரம் என்றால் கிளம்பிடுவார்கள். எங்க போறாங்கள் என்று பார்த்தால் இரவுதான் வருவார்கள்.

இப்படி சொப்பிங் போன ஒரு ஆள் குழம்பிட்டார். பெண்களிடம் மயங்கி குழம்பிய அவர் என்ன செய்திருக்க வேண்டும். இயக்கத்திலிருந்து விலகி போய் பாலியல் இயக்கத்தை ஆரம்பிச்சிருக்கலாம்.

தேர்தலுக்கு முன்பாக மிலிந்த மொறகொட சொல்கிறார்.. புலிகளுக்கு வெளிநாடுகளைக் காட்டி புலிகள் அமைப்பை உடைச்சு ஒரு தளபதியை வெளியிலெடுத்து சாதனை படைத்துவிட்டோம் என்றும் சதிவலை பின்னப்பட்டதும் என்கிறார்.

நாங்கள் ஏற்கனவே இந்த பேச்சுவார்த்தைகளின் சதிவலைப் பின்னல்கள், எந்த மாதிரி எங்களை வீழ்த்துவார்கள் என்ற சூத்திரம் எல்லாம் தெரிந்தும் பேச்சுவார்த்தைக்குப் போனோம்.

ஆகவே, இப்படியான சவால்களுக்கு முகம் கொடுத்து சாணக்கியமாக காய்களை நகர்த்தி இதிலிருந்து தப்பி வருகிறோம்.

30 வருட போராட்டத்தில் இடையிடையே போர் நிறுத்தம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் இந்தியாவின் அழுத்தம். இன்னொரு கட்டத்தில் சர்வதேசத்தின் அழுத்தம்.

ஆனால் தலைவர் சொல்கிறார், கடைசியாக நடந்த பேச்சு 4 ஆண்டுகாலமாக் இழுபட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைவர்தான் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தப் பிரகனடப்படுத்துகிறார். அது சும்மா பிரகடனம் அல்ல. பலத்தில் நின்றுகொண்டுதான் அந்தப் பிரகடனம் செய்யப்பட்டது.

என்ன பலம்?

வன்னி மாநிலம் முழுக்க நாங்கள் பிடித்து ஆனையிறவு படைத் தளத்தை துவம்சம் செய்து இராணுவ சமநிலையை எங்களுக்குச் சாதகமாக நிலைநாட்டி பலத்தின் அத்திவாரத்தில் நின்று நேசம் கரம் நீட்டியதாக தலைவர் சொல்கிறார்.

அன்று தொடங்கிய பேச்சு 4 ஆண்டுகாலமாக இழுபடுகிறது.

இந்தப் பேச்சு ரணிலுடன் 6 கட்டமாக நோர்ர்வே, ஜேர்மன், தாய்லாந்து, ஜப்பான் என நானும் இழுபட்டுத் திரிந்தேன்.

ரணிலின் ஆட்சிப் போய் சந்திரிகாவின் ஆட்சி வந்தது.

சந்திரிகாவுடனும் பேசினோம்.

இப்படியெலாம் பேசியும் இந்த 4 ஆண்டுகாலமாக எடுத்த முடிவுகள், பெற்ற தீர்மானங்கள், செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை.

சர்வதேச சதி வலைப் பின்னல் என்ன?

சர்வதேச சதி வலைப் பின்னல் பற்றி சொல்ல வேண்டும்.

இது என்ன மாதிரி பின்னப்பட்டது எனில்

இந்தப் பேச்சுவார்த்தையை சர்வதேச வல்லரசுகளை உள்ளடக்கியதாக விரிவாக்கம் செய்தல் என்பதுதான் சதி.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் போன்றவைகளை இழுத்து தாங்களாகத் தீர்மானம் போட்டு, இப்படிச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்ய வேண்டும் என்று எங்கள் மீது அழுத்தம் கொடுக்க நினைத்தார்கள்.

இங்கே 2 பேருக்கு மத்தியில்தான் பேச்சு. நோர்வேயை மத்தியஸ்தராக ஏற்றுக் கொண்டு நடத்துகிறோம்.

ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் எல்லோரும் மேசையில் அமர்ந்து அதைச் செய்; இதைச் செய் என்று கட்டளை போடத் தொடங்கினார்கள்.

நாங்கள் சுதந்திரமாக எங்களது மக்களின் பிரச்சனையை எங்கள் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். உலகம் தீர்மானிக்க முடியாது. ஆனால் உலகம் சொல்கிறது.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு; இறையாண்மையை மீறக் கூடாது தனியரசு அமைக்கக் கூடாது இப்படியான அழுத்தங்கள்... சர்வதேச உலகம் நெருக்குவாரங்கள் போட்டு- எங்களுடைய ஆயுதங்களையும் களையும் திட்டம்தான் சதிவலை என்று சொல்கிறோம்.

இந்த சதிவலையைக் கொண்டுவந்தவர் ரணில். கடைசியாக இந்த சதி வலையில் சிக்கியது ரணில். நாங்கள் நிற்கிறோம். (மக்கள் கைதட்டல்).

கடந்த ஆண்டே போர்த் திட்டமும் பொதுக்கட்டமைப்பும்

கடந்த மாவீரர் நாளில் தலைவர் சொன்னார்....

இடைக்காலத் தீர்வும் இன்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, ஒரு வெறுமைக்குள், ஒரு சூனியத்துக்கிஉள் எங்கள் மக்களை வைத்துள்ளோம். இந்த வெறுமைக்குள் இனியும் தொடர முடியாது.

இனி மேற்கொண்டு பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்தால் எங்கள் சுதந்திரத்தைப் போராட்டத்தை தீவிரப்படுத்டுவோம் என்று கூறினார்.

இப்படிச் சொல்லிட்டு எங்களது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான போர்த் திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தார்.

அவர் இப்படிக் கூறி அடுத்த மாதம் டிசம்பர் மாதம், சுனாமிப் பேரலை அடித்தது. தாயகத்தின் கிழக்கு கரையோர கிராமங்கள் எல்லாம் அந்த சுனாமி அள்ளிப் போனது.

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக 20 அயிரம் பேர் உயிரிழந்தனர். 3 இலட்சம் பேர் வீடுகளை, நிலங்களை இழந்து அகதிகளாக்கப்பட்டனர்.

இப்படியான பேரவலம்- இயற்கையின் ஊழிக் கூத்து. எங்கள் மாபெரும் மனிதாபிமான அவலத்தை எதிர்கொண்ட போது எப்படி ஐயா சண்டை போடுவது?

எங்கள் தலைவர் முழு படையணிகளையும் களத்தில் இறக்கினார். 3, 4 மாதமாக அனைத்துப் படையணிகளும் அற்புதமான நிவாரணப் பணிகளை செய்தனர்.

இயற்கையின் அனர்த்தத்தால் எமது போராட்ட திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் பேரழிவு உலக மன்சாட்சியை உலுக்கியது என்கிறார் தலைவர்.

பெருந்தொகை உதவி செய்ய உலகம் முன்வந்தது. 4 பில்லியன் டொலர் என்ற நியாயமான் உதவியை அளிக்க முன்வந்தனர்.

சந்திரிகா அம்மையார் நினைத்தார்... நல்ல தருணம் நழுவ விடாதே என்று சொல்வது போல் புலிகளுடன் பேசியாவது காசை எடுக்கலாம் என்று திட்டமிட்டார்.

இரண்டு பேருமாக பேசி பொதுக்கட்டமைப்பை உருவாக்கி வெளிநாட்டுக் காசை மக்களுக்குப் பகிர்ந்து கொடுப்போம் என்றார்.

எங்கள் மக்கள்தான் அதிகம் இறந்தது. சரி வெளிநாட்டு அரசாங்கங்கள் இவ்வளவு பெரிய காசைத் தரும் போது அதை வாங்கித் தர வேண்டியது எங்களது கடமை.

ஏனெனில் விடுதலை இயக்கம் என்ற ரீதியில் எங்களுடைய மக்களின் நலனைத்தான் பார்க்க வேண்டும்.

அல்லல்படுகிற மக்களை விட்டுவிட்டு போராட்டத்திற்கு இறங்கினால் அது சாத்தியமில்லை.

ஆகவே சந்திரிகாவுடன் பேசினோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் மாதக் கணக்கில் இதுவும் இழுபட்டது.

சமாதான செயலகங்கள் மட்டத்தில்தான் இந்தப் பேச்சு கொழும்பில் நடந்தன. இதில் சில விசயங்கள் விட்டுக் கொடுத்து பொதுக்கட்டமைப்புக்கு இணங்கினோம்.

நீண்டகாலத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கமும் சிறிலங்கா அரசும் ஒரு கட்டமைப்புக்கு இணங்கினார்கள். பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

ஆனால் ஒப்பந்தம் கைச்சாத்திட்டத்துக்கு பின்னர் சந்திரிகா அம்மாவின் அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்ட மொட்டைகள்- புத்த பிக்குகள் மற்றும் ஜே.வி.பியும் எதிர்த்து அரசாங்கத்திலிருந்து விலகி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர்.

உயர்நீதிமன்றமும் அவர்களுக்குச் சார்பாக தீர்ப்பை அளித்தது. நிவாரணப் பணத்தை பகிர்ந்தளிக்கிற இந்தப் பொதுக்கட்டமைப்பு செயலிழந்து செத்துப் போகுது.

இதைச் சுட்டிக்காட்டுகிற தலைவர், தமிழர்களுக்கு சமஸ்டியும் கொடுக்கத் தேவையில்லை; சுயாட்சியும் கொடுக்கத் தேவையில்லை- பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணமாக- வெளிநாடுகள் அளிக்கிற காசைப் பகிர்ந்து கொடுக்கிற ஒரு அதிகாரமைப்பையே தர முடியாத உன்னால் எங்கள் மக்கள் பிரச்சனையை எப்படித் தீர்க்கப் போகிறாய் என்று சொல்லும் தலைவர் அடித்துக் கேட்கிறார்...

சிங்கள ஆட்சிப் பீடம் - பேரினவாதம் - ஆளும் வர்க்கம் - எங்களுடைய மக்களின் பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை.

அப்படியானால் நாங்களாகத்தான் போராடி வெல்ல வேண்டும். சிங்களவனின் காருண்யத்தில் 57 வருசம் இருந்தது போதும்.

இதற்கு உதாரணமாகத்தான் சொல்கிறார் பொதுகக்கட்டைப்புக்கு நேர்ந்த கதி என்ன என்பதை.

நிழல் யுத்தம்

இது ஒரு புறம் இருக்க இந்த ஆண்டு மற்றொரு விடயம் நடந்தது என்கிறார் தலைவர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு நிழல் யுத்தம்- மறைமுக யுத்தம்.

யாரோ மறைந்து நின்று கண்ணிவெடி வைத்து கொல்லுவான். யாரென்று பார்த்தால் தெரியாது.

இந்த நிழல் யுத்தம் தொடங்கியது. இந்த ஆண்டு மிகத் தீவிரமாக நடந்தது.

எங்களின் மூத்த உறுப்பினர்கள், முக்கிய போராளிகள், ஆதரவாளர்கள், கல்விமான்கள், முக்கிய ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்படியான படுகொலை செய்து வந்தார்கள். இந்த பின்னணி தெரியலை. சூத்திரதாரி யாரென்று பார்த்தால் இராணுவப் புலனயாவுத்துறை.

அவைகளுக்குப் பின்னால் சிஙக்ள இனவாத அரசியல் தலைவர்கள். தலைவர் சொல்கிறார்.. இந்த அரூப கரங்கள்தான் இதை நடத்தின.

இது சமாதான யுகம். 4 வருசமாக போர் நிறுத்தம். நாம் அமைதி பேணுகிறோம். அவன் போட்டுத் தள்ளுகிறான் நம்மை.

இதுதான் சிங்கள ஆளும் வர்க்கத்தினது- இனவாதத்தின் நயவஞ்சகமான செயல்.

அப்படியானால் 4 வருடமாக எவ்வளவு பொறுமையோடு எங்கள் தலைவர்-தலைமைப்பீடம் இருந்திருக்கும்?

இந்தப் புறம் எங்கள் மீதுதான் விமர்சனம் வருகிறது. வெளிநாடுகளிலிருந்து எங்களுக்கு புலிகளுக்குச் சொல்கிறார்கள்- கொலைகளை நிறுத்துங்கள்.... (ளுவழி வாந மடைடiபெ)

அவன் கொல்வது யாரை? எங்களை அழிக்கிறான்.... ஆனால் உலகம் எங்களை விமர்சிக்கிறது.

தலைவர் என்ன சொல்கிறார் எனில்.. சிங்களவர்களுக்கு இராணுவத் தீர்வில்தான் நம்பிக்கை உண்டு. சமாதானத்திலோ பேச்சுவார்த்தையிலோ, தமிழர்களுடன் பேசி நீதி வழங்குவதில் விருப்பம் இல்லை.

சமாதானம் என்ற மாயைக்குள் வைத்துக் கொண்டு எங்களுக்கு எதிராக நிழல் யுத்தத்தை ஒரு நாசகார யுத்தத்தை நடத்தி, அழித்து இயக்கத்தை உடைக்கிறதுதான் அவர்களது நோக்கம்.

இதற்கு சிங்கள இரானுவம் நேரடியாக வரவில்லை. இதற்கு தமிழ் ஆயுதக் குழுக்கள் பயன்படுத்தப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் கூலிப் பட்டாளம் இருக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்திடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்களுக்கு எதிராக தமிழர்கள் செய்யும் கூத்துகள் இவை. இவைகளால்தான் அன்றும் இன்றும் பிரச்சனை. இங்கும் இருக்கு என்பதை இங்கே உள்ள அனைவரும் அறிவர்.

சமாதானம், போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை மூன்றும் சொற்பதங்களிலும் எதுவித அர்த்தமும் இல்லை என்கிறார் தலைவர்.

சமாதானம் என்று சொல்லிக் கொண்டு யுத்தம் செய்கிறீர்கள்.

முகத்தை மறைத்து இருண்ட யுத்தம்? நிழல் யுத்தம். அப்ப என்ன சமாதானம்?

போர் நிறுத்தம் என்றால் போர் நிறுத்த விதிகளை நீ செயல்படுத்தவில்லை.

இலட்சம் இலட்சமான மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி அகதி முகாம்களில் உள்ளர். இன்னமும் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து நிற்கிறாய். 10 வருடத்துக்கும் மேலாகவா நிற்பதா? கல்வீடுகளுடன் இருந்த இலட்சக்கணக்கான மக்கள் கொட்டில்களில் கிடந்து சாகிறர்கள்! இதுதானா போர் நிறுத்தம்.

போர் நிறுத்த விதிகளின் படி ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை எப்போதே பறித்திருக்க வேண்டும். ஆயுதங்களையும் பறிக்காமல் ஏவிவிவிட்டு எங்களை கொல்லச் சொல்கிறாய். இதுதான் போர் நிறுத்தம்- பேச்சுவார்த்தையாம்.

பேச்சுவார்த்தை என்றால் இழுத்தடிக்கிறது நோக்கம் . அதில் ஒரு சதிவலைப் பின்னல். உலக நாடுகளை பிடித்து எங்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் பேச்சுவார்த்தையாம். ரணில் ஜயா செய்த விளையாட்டு இதுதான்.

ரணிலும் தமிழர் வாக்களிப்பும்- சிங்களவனுக்குப் புரிந்த மொழி 'அடி"

எங்களில் பலபேருக்கு கோபம். ரணில் அய்யாவுக்குப் போட்டிருந்தால் நீங்கள் பேசப் போயிருக்கலாம் என்று சொல்கிறவர்களும் உண்டு. அவன் ஜயா ரணில் பயங்கர நரி. ராஜபக்ச பரவாயில்லை. அது ஒரு பயங்கர நரி.

ஏனென்றால் பேச்சுவார்த்தைகளில் இழுபட்டு களைச்சுப் போன மனுசன் நான் சொல்லுகிறேன். இவைகளை பிரேமதாச காலத்திலிருந்தே தெரியும்.

17 வயதில் பத்திரிகையாளனாகி இந்த அரசியல்வாதிகளோடு பழகியவன். அவர்களது சூத்திரங்கள், ஜில்மால்கள் எல்லாம் தெரியும்.

சிலபேர் ரணில் பரவாயில்லை.. என்னமோ பெடரல் தருவதாகச் சொல்கிறான் என்கிறார்கள்.

57 வருடமாகப் பெடரலிசம் பற்றி கதைத்திருக்கிறோம். அது என்ன புதுவிடமா ஐயா?

செல்வநாயகம் காலத்திலிருந்து பெடரல் பற்றித்தானே இடறல் பட்டுக்கிட்டு இருக்கிறோம்.

அவர்கள் பெடரலும் தரமாட்டார்கள். பெடரல் என்ற மாயைக் காட்டி ஏமாற்றுகிற வித்தை.

இந்தப் பொதுக்கட்டமைப்பையே ஒரு கிராம சபைக்கு இருக்கிற அதிகாரம் கூட இல்லாத பொதுக்கட்டமைப்பையே தராத சிங்களவன், தமிழர் தாயகத்தை ஏற்று, தமிழர் சுய நிர்ணய உரிமையை ஏற்று, உங்களைக் கொண்டு போய் சிம்மானத்திலே உட்கார வைத்து இந்தா சுயாட்சி என்றா தரப் போகிறான்.

சிங்களவனுக்குத் தெரிந்த மொழி இருக்கிறது. அது 'அடி". அடிச்சால்தான் அது விளங்கும். இது புலிகளுக்குத் தெரியும் (அடங்காத மக்கள் கை தட்டல்).

கடந்த 57 ஆண்டுகால அரசியல் வரலாறு- புலிகள் நடத்திய 30 ஆண்டுகாலம் போராட்டம்- கடந்த பல வருடங்களாகிய நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள்.. இவைகளை சீர்தூக்கிப் பார்த்து முடிவுக்கு வந்தால்...

இனியும் போய் சிங்களவரிடம் கையேந்தி எனக்கு கொஞ்சம் சலுகை தா, சமஸ்டி தா என்று கேட்பதில் பிரயோசனம் இல்லை.

அதாவது சிங்கள அரசியலில் இருந்த நம்பிக்கை, சிங்கள அரசியல்வாதிகளுடன் பேசி அவர்களது காரூண்யத்திலிருந்து ஏதாவது உரிமைகளைப் பெறாலாம் என்ற அந்த நம்பிக்கை உடைஞ்சு போச்சு.

எங்களுக்கு மட்டுமல்ல. மக்களுக்கும்.

சமீபகாலமாக தமிழீழம் எங்கும் பெரிய எழுச்சியைப் பார்த்திருப்பீர்கள். மக்கள் வெளியே வந்தார்கள். பொங்கு தமிழ் விழா- தமிழ்த் தேசிய எழுச்சி விழா.

சமுத்திரமாக வந்த மக்கள் குரல் எழுப்புகிறார்கள்.

அந்தக் குரல் சிங்களவனுக்கு இல்லை. சர்வதேச சமூகத்துக்கு...

சர்வதேச சமூகத்துக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்....

எங்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்.

எங்களுடைய தாயகத்தை ஏற்றுக் கொள்

எங்களுக்கு தன்னாட்சி உரிமை வேண்டும்.

எங்கள் மக்கள் எங்கள் மண்ணிலிருந்து உலகத்துக்கு அறைகூவல் விடுத்திருகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய பெரிய நிகழ்வுகள் நடந்தன.

கடைசியாகத் தேர்தல் வந்தது. யாருடைய தேர்தல்?

சிங்கள ஜனாதிபதியை நியமிக்கிற தேர்தல். ஏன் நாங்கள் இதில் பங்களிப்புச் செய்யனும்?

ரணில் வந்தால்... ராஜபக்ச வந்தால் பிரச்சனை தீருமா? தீராது.

இதில் எவனுக்கு வாக்கைப் போட்டு ஆட்சிப் பீடத்திலே ஏற்றி, மீண்டும் பழையபடி தாய்லாந்து போய் சுற்றிப் பார்க்கச் சொல்கிறியள்?

அப்ப இயக்கம், கூட்டணி எம்பிமாரை கூட்டி கதைச்சு சொன்னது.. நாங்கள் தலையை ஓட்டக் கூடாது. இதில நம்பாதீங்க. இதில் அக்கறைகாட்டதீர்கள் என்று சொன்னது இயக்கம்.

மக்களுக்கு புலிகளின் செய்தி விளங்கியது. மக்கள் தேர்தலில் வாக்களிக்க விரும்பலை. அதுதான் நடந்தது.

ஆனாலும் ஈ.பி.டி.பி போன்றவை கள்ள வோட்டுப் போட ஒழுங்கு செய்தார்கள்.

அங்கிருக்க பல்கலைக் கழக மாணவர்கள்- பொடியனுக- சும்மா விடவில்லை இதை. இரவு இரவாப் போய் பட்டாசு கொளுத்தி விரட்டி விட்டிருக்கிறார்கள்.

அதை வைத்துக் கொண்டு உலகம் முழுக்க எங்கள் மீது விமர்சனம்.

தேர்தல் புறக்கணிப்பும் சர்வதேச சமூகமும்

'நீங்கள் தேர்தலை புறக்கணிக்கச் சொன்னது மக்களின் சனநாயக உரிமையை மீறுவது- ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்தில் உங்களுக்குத் தடை வரப்போகிறது" என்று மிரட்டல் விடுகிறார்கள்.

அப்படியானால் சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் ஒன்று கேட்கிறோம்...

கடந்த 10 வருடங்களாக, சொந்த வீடுகள், சொந்த காணிகள், சொந்த கிராமங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, அனாதைகளாக அகதிகளாக, ஏதிலிகளாக இந்த அகதி முகாம்களிலும், நலன்புரி மையங்களிலும், இலட்சக்கணக்கான மக்கள் கிடக்கிறார்களே....

அவர்களது ஜனநாயக உரிமை பற்றி சர்வதேச சமூகமே கதைத்தீர்களா? அது ஜனநாயக உரிமை இல்லையா?

நாங்கள் ரணிலுக்கு வாக்களித்திருக்க வேண்டுமாம்...வாக்களித்திருந்தால் அவர் வந்திருப்பார். சதிவலை போடலாம் என்று அவர் காத்திருப்பார்.

தேர்தல் புறக்கணிப்பு முக்கியமான விடயம்.

இதுவரை காலம் இல்லாத முக்கிய விடயம் இது.

இதுவே முதல் முறையாக எங்கள் தமிழ் மக்கள், சிங்கள ஆட்சிப் பீடத்தை புறக்கணித்து, நீங்கள் யார் ஆண்டாலும் எங்களுக்குச் சம்மதமில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

சிங்கள தேசத்திலே இதனால் பெரிய தடுமாற்றம். என்ன விளையாட்டு இது, என்று அங்கே கேள்வி எழுகிறது.

மக்களே தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள். ஒரு தனிநபருக்காக, தனிநபர் ஆளுமைக்காக, ஒரு கட்சி கொள்கைகளுக்காக எங்கள் மக்கள் புறக்கணிக்கவில்லை. ரணிலையோ, ராஜபக்சவையோ எங்கள் மக்கள் புறக்கணிக்கவில்லை.

அவர்கள் புறக்கணித்தது

சிங்கள அரசியல் அமைப்பை-

சிங்கள ஆட்சிப் பீடத்தை!

வேண்டாமய்யா.. நாங்கள் இனி தனிவழியே போகப் போறோம். நீங்கள் உங்கள் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் எங்களது அரசியல் தலைவிதியை, அரசியல் தகமையை நாங்களாகத் தீர்மானிக்கிற காலம் வந்துவிட்டது என்ற செய்தி அங்கே சொல்லப்பட்டது. (மக்கள் அடங்காத கைதட்டல்).

மக்கள் கொடுத்த செய்தி வேறு. ஆனால் உலகம் எங்களைத்தான் விமர்சனம் செய்கிறது. உலகத்துக்கு மக்களின் விடயம் புரியவில்லை.

எனக்கு மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்....சந்திக்க வேண்டும் என்றார்..அவர்கள் கிளிநொச்சிக்குத்தான் போவதில்லை. என்னைத்தான் தேடுகிறார்கள்.

'மிஸ்டர் பாலசிங்கம், உங்கள் இயக்கம் மக்களைத் தடுத்து நிறுத்தி பயமுறுத்தி இந்தத் தேர்தலில் திசை திருப்பியதால் சிங்களத் தீவிரவதி ஒருவர் வந்துருக்கார். நிலைமை மாறப் போகிறது. சண்டை வரப்போகிறது. இதற்கு நீங்கள்தான் காரணம். ஆகவே ஐரோப்பிய ஒன்றியம் உங்களைக் கண்டிக்க தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்ய உங்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்"- என்று அவர் சொன்னார்.

அதற்கு நான் சொன்னேன்..

நீங்கள் எங்களைத் தண்டிக்கலாம். பிரிட்டனில் தடை இல்லையா என்று.

இவ்வளவு மக்கள் இன்றைய கூட்டத்துக்கு வரலையா (மக்கள் கைதட்டல்). நீதிமன்றம் வரைக்கும் கோவணம் கட்டிப் போய் நின்றார்களே ஒன்றும் எடுபடவில்லை.

ஏனெனில் மக்களையும் புலிகளையும் எவராலும் பிரிக்கமுடியாது ஜயா. (அடங்காத மக்கள் கைதட்டல்)

இங்கிலாந்தில் எனக்கும் தடை. நான் தனியே வெளிய போனபோது ஒருவர் கேட்டார்.. என்ன பாலா அண்ணை தனியா திரிகிறியள் என்று..?

நான் சொன்னேன்...'வீட்டில் கிடந்து குளிரில் ஹார்ட் அட்டாக் வந்து செத்தால் எனக்கு மதிப்பில்லாமல் போய் விடும். இப்படி தனியா திரியும் போது யாராலும் போட்டுத்தள்ளினால் மாவீரராக மாறிவிடலாம்" என்றேன்.

ஐரோப்பாவில் தடை வரலாம். சரி வரட்டும். ஐரோப்பியாவில் உள்ள


- adithadi - 11-28-2005

முதல் முறையாக TVIயில் தாயக நிகழ்ச்சிகள் மற்றும் பாலசிங்கம் உரையை நேரடியாக கேட்ட கூடியதாக இருந்தது.

வாழ்த்துக்கள்.


- hari - 11-28-2005

தலைவர் அவர்களின் உரை ஒளிவடிவில்
http://www.yarl.com/maaveerarnal2005/video.shtml

part 1
part 2
part 3
part 4
part 5
part 6

அன்ரன் பாலசிங்கம் அவர்களின் உரை ஒளிவடிவில்
part 1
part 2
part 3
part 4
part 5
part 6


- Vaanampaadi - 11-28-2005

<b>TVIயில் </b>

அப்டீன்னா என்னாங்க.....



உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.


- மேகநாதன் - 11-28-2005

இப்பதான் தமிழ்நாதத்தில் கேட்டேன்...
பாலா அண்ணையின் "தனித்துவம்" அருமை..
கன நாளைக்குப் பிறகு...

தலைவரின் வரிகளுக்கனுக்கான "வியாக்கியானங்கள்" கூடுதல் தெளிவு தந்த உரை ஆக அமைந்தது.....


- மேகநாதன் - 11-28-2005

மிக நேர்த்தியான இரசதந்திர/அரசியல் மொழிகளினூடான செம்மையான உரையாகவே தேசியத் தலைவர் அவர்களின் உரை அமைவது வரலாறு....

"எனது மக்களின் விடுதலைக்காக"(வெளியீடு - 1993)
என்ற நூலை படித்துப் பாருங்கள்..தலைவரின் கருதுக்களைப் படித்துப் பாருங்கள்...கருத்து/சிந்தனைப் போக்குகளை / மொழிநடைகளை அதன் தனித்துவத்தைப் பார்க்கலாம்..
உங்கதானே எல்லாம் இலகுவில் எடுக்கலாம்...
நாங்க வாழ்ற நாடு மாதிரி இல்லைதானே..

மேலும்,மக்களை,அதுவும் புலம் பெயர்ந்த மக்களது மன அமைவுகளூடாக மேலும் சில கருத்துக்களை ...
"வரிகளுக்கிடையில் வாசித்துக்" காட்ட வேண்டியதையே பாலா அண்ணையின் உரை எடுத்துக் காட்டுகிறது...
அது அவரது "தனித்துவத்தினை" வெளிப்படும்;வெளிப்படுத்தி உள்ளது...

மேலும்,
தலிவரின் உரையின் "முடிவை" சில ஊடகங்களே "திரிபு படுதியது" பற்றிக் கூட பாலா அண்ணையின் உரை சுட்டி இருப்பதைப் பார்த்தும்..."அது இது " என்று குழம்புவதேனோ???


- selvanNL - 11-28-2005

தமிழீழத்தேசியதலைவரின் உரை எதை சுட்டிக்காட்டுகிறது? எங்கள் புலத்துமக்களின் கடப்பாடு என்ன? ராஜபக்ஷாவின் நிலைப்பாடு என்ன? என்ன முடிவெடுப்பார் என்று கள உறவுகள் எதிர்பார்க்கிறீங்க??? :roll: :?

என்னைப்பொறுத்தவரை உலக நாடுகள் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும், இல்லையேல் யுத்தம் தொடங்குவது தவிர்க்கபட முடியாது, யுத்தம் தொடங்கினாலும் அது ஒரு இறுதி யுத்தமாகத்தான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஏனெண்டால் புலிகளிலும் பார்க்க தமிழ் மக்கள் மிகவும் ஆக்குரோசமாக நிற்கிறார்கள், நீங்கள் தொடங்குங்கள் மீதியை நாங்கள் பார்க்கிறோம் என்று மயிர் குச்செறியும் வசனங்களை பேசி வருகிறார்கள், :? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- அருவி - 11-28-2005

Vaanampaadi Wrote:<b>TVIயில் </b>

அப்டீன்னா என்னாங்க.....

வடஅமெரிக்கா கண்டத்தில் உள்ள ஓர் 24 மணிநேரத் தமிழ்த் தொலைக்காட்சி(<b>T</b>amil <b>V</b>ision <b>I</b>nc.)


- Niththila - 11-28-2005

இணைப்புக்கு நன்றி ஹரி அண்ணா

பாலா அங்கிளின் உரையை நேர கேட்டன் வந்திருந்த எமது உறவுகள் அமைதியாக இருந்து கேட்டார்கள் பல இடங்களில் கை தட்டி தமது ஆதரவையும் தெரிவித்தார்கள்.

தலைவரது உரை விளங்கேல்ல என்று ஏன் சில பேர் சொல்லுகினம் தமிழில தெளிவாத்தானே உரையாற்றி இருந்தார்


- MUGATHTHAR - 11-28-2005

கனபேர் தலைவர் யுத்ததுக்குரிய நாளை அறிப்பார் எண்டு எதிர்பாத்து இந்த பேச்சு ஒரு உப்;புச் சப்பில்லாமல் போட்டுதெண்டு சொல்கிறார்கள் ஒரு சாதாரண விடுதலை அமைப்பா இருந்தால் எடுத்தம் கவுத்தம் எண்டு தலைவர் திகதியை குறிப்பிட முடியும் ஆனால் எங்களின் அமைப்பு சகலதுறையிலும் திடமான ஒரு அத்திவாரத்தைப் போட்டு அதில் தான் நிக்கிறது எல்லா உலக நாடும் எத்pர்பாத்த இந்த உரையில் புலிகளின் சமாதானத்துக்கான தன்மை இன்னும் குறையவில்லை என்பதை தலைவர் வலியுறுத்தியுள்ளார் அத்துடன் தெற்கிலும் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கு அவர்கள் தங்களின் நிலையையே இன்னும் சரிப்பண்ணேலை அந்த நிலையில் எங்களின் பிரச்சனையைப் பற்றி அவர்களின் தெளிவான பதிலை உலகநாடுகள் அறிவதுக்கு ஒரு காலப்பகுதி குடுக்கப்பட்டிருக்;கு இதை மகிந்தா சாதகமாக பயன்படுத்தினால் இலங்கையின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும் அல்லது பிரிந்து செல்வதுக்கு அவரே உதவி செய்யதாகப் போய் விடும் . எதையோ எதிர்பாத்த சிங்கள கட்சிகளுக்கு தலைவரின் பேச்சு பல சிக்கல்களை உருவாக்கியிருக்கு உலகநாடுகளில் உண்மையான சிங்கள இனவாதத்தின் தன்மை இன்னும் கொஞ்ச காலத்தில் தெரிந்து விடும் அதுதான் இப்ப எங்களுக்கு தேவையான ஒண்டு .............