Yarl Forum
களவாடப்படும் உரிமைகள் (ஒரு பேப்பரில்) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: களவாடப்படும் உரிமைகள் (ஒரு பேப்பரில்) (/showthread.php?tid=2242)

Pages: 1 2


- kuruvikal - 11-30-2005

தமிழினி தான் அவதானித்ததையே ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி இருக்கிறார்..! அது வரவேற்கப்பட வேண்டிய விடயம்..! அவர் எப்பத்திரிகையிலும் குறைபிடிக்கும் வகையில் இக்கருத்தை முன் வைத்திருக்க வாய்ப்பில்லை..! அதேவேளை வரிகளின் உண்மைச் சொந்தக்காரர்களுக்கான குரலாக தமிழினியின் இக்கருத்தை நாம் கருதுகின்றோம்..!

கருத்துக்களின் அடைப்படையில் ஒரு ஆக்கம் ஒருவரைக் கவர்ந்தால்..அதைப் பத்திரிகையில் பிரசுரிக்க விரும்பினால் தனது பெயரோடு ஆக்கத்தின் மூலத்தையும் தெரியப்படுத்துதல் நல்லது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathan - 12-01-2005

நிச்சயமாக ஆங்கங்களை பிரசுரிப்பவர்கள் அவற்றின் படைப்பாளிகளின் பெயர்களை (முடிந்தால் ஆக்கங்கள் பெறப்பட்ட இடத்தையும்) குறிப்பிட வேண்டும். படைப்புக்களை வேறு ஒருவர் தன்னுடைய படைப்பாக குறிப்பிடும் போது அதன் உரிமை யாருடையது என்பதை கண்டுபிடிப்பது கடினம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது. அது போன்ற சந்தர்ப்பத்தில் வாசகர்கள் அதனை இனம் காணும் போது சுட்டி காட்டுவதில் தவறில்லை. இந்த கவிதைகள் விடயத்தில் ஒரு பேப்பரின் கருத்தை தெளிவுபடுத்திய சாத்திரி மற்றும் சாந்தி அக்காவிற்கு நன்றிகள்.

அதேசமயம் யாழில் பிறருடைய ஆக்கங்களை இணைக்கும் போது தயவு செய்து ஆக்கங்களை எழுதியவர்களின் பெயரை மற்றும் ஆக்கங்கள் எடுக்கப்பட்ட இடத்தை குறிப்பிட மறக்காதீர்கள். இது ஏற்கனவே வலைஞன் அண்ணாவினால் அறிவுறுத்தப்பட்ட ஒன்றுதான். சில சமயங்களில் நாம் இதனை கவனத்தில் கொள்ளாமல் விட்டிருக்கலாம். அதனால் மீளவும் நினைவூட்டியுள்ளேன்.

மேலதிக விபரங்களை இந்த இணைப்பில் பாருங்கள்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6352[/size]