Yarl Forum
சிங்களத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி-தமிழ்/முஸ்லிம் உறவு மீது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சிங்களத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி-தமிழ்/முஸ்லிம் உறவு மீது (/showthread.php?tid=2184)

Pages: 1 2


- மேகநாதன் - 02-11-2006

<b>ஜெனீவா பேச்சுக்களுக்கான முஸ்லிம் பிரதிநிதியின் பெயரை பரிந்துரைக்க மகிந்த வேண்டுகோள்! </b>

ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தும் சிறிலங்கா அரசாங்கக் குழுவில் இடம்பெற வேண்டிய முஸ்லிம் பிரதிநிதியின் பெயரை கையளிக்குமாறு அனைத்து முஸ்லிம் கட்சிகளுக்கும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சிறிலங்கா தகவல் அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்சவுடனான முஸ்லிம் கட்சிகளின் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>


- Sukumaran - 02-11-2006

பதட்டமான நிலை யாருக்கு தேவை?

அரசு ஒரு முஸலீம் பிரதிநிதிய அனுப்புங்க என கேக்கிறதா செய்தி போட்டாங்களே?