Yarl Forum
இந்திய பாராளுமன்றத்தில் குண்டு ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: இந்திய பாராளுமன்றத்தில் குண்டு ? (/showthread.php?tid=2009)

Pages: 1 2


- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-Luckylook+-->QUOTE(Luckylook)<!--QuoteEBegin-->

ஆமாம்... கிணற்றுத் தவளைக்கு உலகம் எங்கே தெரியப்போகிறது?  <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதற்கெல்லாம் கவலைப் படக்கூடாது. நீங்கள் யாழுக்கு வந்திட்டீங்கள் அல்லவா. எனி உலகம் உங்களுக்கு தெளிவாகத் தெரியும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-Luckylook+-->QUOTE(Luckylook)<!--QuoteEBegin-->என்ன செய்வது.... இங்கே ஒரு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் இருப்பது எனக்கு தெரியாமல் போயிற்றே?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

யாரப்பா
எமக்கு தெரியாமல் யாழில் இணைந்திருப்பது?


- Mathan - 12-17-2005

இந்திய பாராளுமன்றத்தில் அதன் பின்பு என்ன நடந்தது என்ற செய்திகளை காணலையே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 12-17-2005

இந்திய நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு புரளி

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, இன்று காலை இந்திய நேரம் 11.48 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவசரமாக ஒத்திவைக்கப்பட்டு, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகிய அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னையிலிருந்து தமக்கு தகவல் கிடைத்ததாக இந்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாடில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல், தமிழக தலைநகர் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து, உள்ளூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் புதுதில்லிக்கு தகவல் தெரிவித்தனர் என்றார் சிவ்ராஜ் பாடில்.

இரு அவைகளிலும் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்திய பிறகு, ஆபத்தான பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், மதியம் 3 மணியளவில் மீண்டும் கூடின.

மக்களவை மீண்டும் கூடியபோது மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் இன்றைய சம்பவம் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

நாடாளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேசமயம், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாம் எப்போதும் விழிப்புடன் இருப்போம் என்றும், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் பணியமாட்டோம் என்றும் உறுதி ஏற்போம் என்றார் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி.

2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 5 துப்பாக்கிதாரிகள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்திய அரசாங்கம் அப்போது குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

BBC தமிழ்


- Luckylook - 12-17-2005

அந்த பயமுறுத்தும் நோக்கத்துடன் அனுப்பப்பட்ட மெயில் தமிழகம் நெல்லையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது....

குண்டுவைப்பு வெறும் பயமுறுத்தல் தான்....

வழக்கம் போல இந்த பழியையும் தமிழன் மீது போடாதிருந்தால் சரி....


- Luckylook - 12-17-2005

நாடாளுமன்றத்துக்கு மிரட்டல் மெயில்: நெல்லை பிரவுசிங் சென்டரில் போலீஸ் அதிரடி சோதனை
டிசம்பர் 17, 2005

சென்னை:

நாடாளுமன்றத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த இமெயில் திருநெல்வேலியில் இருந்து அனுப்பப்பட்டது உறுதியாகியுள்ளது.




நாடாளுமன்றத்திற்கும், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டது. இன்ஷா அல்லா என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மெயிலின் ஐபி அட்ரஸை வைத்து அது நெல்லையில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள பிரவுசிங் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

நெல்லை சரக டிஐஜி விஜய்குமார், எஸ்பி ஆனந்த்குமார் சோமானி ஆகியோர் பிராண்ட்பேண்ட் நெட் கபே என்ற அந்த இன்டர்நெட் சென்டரில் சோதனை நடத்தினர்.

அந்த இன்டர்நெட் சென்டரை நிர்வகிக்கும் பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிரவுசிங் சென்டருக்கு வந்து போனவர்களின் விவரம் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அந்த சென்டரில் உள்ள ஒரு கம்ப்யூட்டரில் இருந்து நேற்று காலை 9.30 மணி சுமாருக்கு சிபி இணையத் தளத்தின் மெயில் மூலமாக அமெரிக்கத் தூதரகத்துக்கு மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் அந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய நபரின் உருவ விவரத்தை சென்டரை நிர்வகிக்கும் பெண் வழங்கினார். அந்தத் தகவலின் அடிப்படையில் ஒரு உருவத்தை போலீசார் வரைந்துள்ளனர்.

அந்த நபரின் உருவ அமைப்பு கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடையே ஒரு நபரின் உருவத்துடன் ஒத்துப் போவதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இரவு 10 மணியளவில் அந்த சென்டரை நெல்லை போலீஸ் கமிஷ்னர் ஜெய முரளி தலைமையிலான போலீசார் சீல் வைத்தனர். அந்த சென்டருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த இன்டர்நெட் சென்டரை சோதனையிட்ட பின் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்திலும் போலீசார் சோதனையிட்டனர். இங்கு எதற்காக சோதனை நடந்தது என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்திற்கும், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டது.