Yarl Forum
அம்மா கிடைக்குமா? :( - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: அம்மா கிடைக்குமா? :( (/showthread.php?tid=1688)

Pages: 1 2


- Snegethy - 01-04-2006

நீர் பெரிய அறிவாளியெல்லோ அப்ப உமக்கு இந்த விளக்கம் காணும்..இதுவே நான் ஒரு கேள்விகேட்டால் நீர் வடிவா விளங்கப்படுத்த வேண்டியிருக்கும்.


- வர்ணன் - 01-04-2006

Snegethy Wrote:நீர் பெரிய அறிவாளியெல்லோ அப்ப உமக்கு இந்த விளக்கம் காணும்..இதுவே நான் ஒரு கேள்விகேட்டால் நீர் வடிவா விளங்கப்படுத்த வேண்டியிருக்கும்.

அது நடக்கிற காரியமா? நீங்கள் கேள்வி கேட்டு நான் பதில் சொல்லுறது??
உங்கள போல அறிவாளிகள் கேள்வி கேட்டால் நான் என்ன ... பில்கேட்ஸ் கூட பதில் சொல்ல முடியாது :wink:


- RaMa - 01-04-2006

varnan Wrote:நல்லதொரு கருத்தை கதையின் கருவாக கொண்டிருக்கிறீர்கள் ரமா. வாழ்த்துக்கள்.

ஏன் குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லிவிட்டு டாக்டர் நமட்டு சிரிப்பு சிரித்தார் என்று கூறி இருக்கிறீர்கள்?
அதற்கு ஏதும் அர்த்தம் இருக்கிறதா கதையோடு சேர்ந்து?
இல்லையென்றால் ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் ஒரு உடலியலால் பாதிக்க பட்டவரின் குறைகளை கண்டு நமட்டு சிரிப்பு சிரிக்கவே மாட்டார் என்று நினைக்கின்றேன்!
இது உங்களின் கதையில் பிழை பிடிக்கும் நோக்கத்துடன் அல்ல.
குறைகளை சுட்டி காட்டுவதும் ஒரு நல்ல படைப்பாளியின் திறனை மேலும் ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில்.. தொடருங்கள் உங்கள் படைப்புக்களை! 8)

வணக்கம் வர்ணன் நன்றி உங்கள் சுட்டி கட்டுதலுக்கு. நான் எனது குடும்ப வைத்தியாரை மனதில் வைத்து அப்படி எழுதி விட்டேன். இன்னொரு காரணமும் இருக்கு. இந்த காதநாயகி அந்த வைத்தியாரிடம் சபதம் கட்டியிருக்கலாம் எனக்கு அம்மா பாக்கியம் கிடைக்கும் என்று. ஆனால் வைத்தியாரும் சொல்லியிருக்கலாம் இல்லையம்மா அது கஷ்டம் என்று. வைத்தியார் சொன்ன சொல் அவளுக்கு பிடிக்காத வெறுப்பு உணர்ச்சியில் அப்படி நினைத்திருக்கலாம் அல்லவா.
உதாராணமாக ஒருவரை நமக்கு பிடிக்காவிட்டால் அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் அது ஒரு சைக்கோ என்றோ லூசோ என்று தானே நினைப்போம். அந்த பிடிக்காதவர் செய்யும் நல்ல கரரியங்களும் எமக்கு கூடதாக தானே தெரியும். அப்படித்தான் இவளும் அந்த வெறுப்புணர்சியில் அவர் அப்படி தான் சிரித்தார் என்று ஒரு நோக்குடன் நினைத்திருக்கலாம் அல்லவா?


- RaMa - 01-04-2006

அப்புறம் கருத்துக்களும் வாழ்த்துக்களும் சொன்ன ப்ரியசகி விஷ்ணு சிநேகிதி வர்ணன் அகியோருக்கும் எனது நன்றிகள்.