![]() |
|
அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா? (/showthread.php?tid=1337) Pages:
1
2
|
- வன்னியன் - 01-18-2006 தம்பியவை மற்றவர்களை தாக்காமல் நியாத்தை கதையுங்கோவன்.. எங்கடை சனத்துக்கு தாய் பிச்சையெடுத்தாலும் பரவாயில்லை குசுப்புவுக்குசங்கிலிபோட என்று ஒரு கூட்டம் திரிந்தது. தெரியும்தானே? அவையள் திருந்தமாட்டினம். அப்புமாரே லக்கிலுக்கு ராஜாதிராஜா நீங்கள் வந்தாரை வாழவைக்கிறனீங்கள் எண்டு தெரியும்.. தம்பியவை நாங்கள் கொஞ்சம் திருந்தியிட்டமெண்டு நினைக்கிறன். நீங்களும் கொஞ்சம் உலகை புரிஞ்சுகொள்ள வேணுமெண்டு நான் ஆசைப்படுகிறன். உங்கடை சூப்பிற ஸ்டார் ஒருக்கா ஐரோப்பாவிலை இருக்கிற தமிழ்ச்சனங்களுக்கு பிலிம்காட்டி(நீங்கள் புரிஞ்சுகொள்ளுவியள்) அதிலை வாற காசை கொண்டுபோய் அநாதை குழந்தைகளுக்குகுடுக்கப்போறன் எண்டவர் அவற்றை சுத்துமாத்தை விளங்கினவை அந்த நிகழ்ச்சியை நடக்கவிடாமல் குழப்பி போட்டினம். அதுக்கு பிறகு சூப்பிறஸடார் அவையளுக்கு பணம் குடுத்ததாக தெரியவில்லை. அந்த பெரியமனிசன் ஒரு படத்துக்கு வாங்கிற காசை குடுத்தால் குறைஞ்சாபோய்விடுவார். அதுகளை செய்யாயினம். அவர் அடுத்த முதலமைச்சர் என்று கதைக்கினம். அப்பு நீங்கள் ஏன் உங்களை ஆளக்கூடாது. ஓம் நீங்கள் வந்தாரை ஆளவைக்கிறனீங்கள். அதுதான் கூத்தாட வந்த ஒரு பெட்டச்சியின்ரை காலிலை உங்கடை மாண்புமிகு மந்திரிகள் காலிலை விழுகிறாங்கள். அதையும் ஒரு கள உறவு களத்திலை இணைத்திருந்தது. அந்த கூத்தாடி தமிழ்நாட்டை அட்டைமாதிரி உறிஞ்சி சொத்து சேர்த்துப்போட்டுது என்னுடைய ஆதங்கம் நீங்கள் சொந்தகாலிலை நிற்கவேணும் எண்டுறதுதான். உங்கடை சேவாக்கும் டிராவிட்டும் சாதனை செய்யமுடியாமல் போனதற்காக கவலைப்படுகிறன். அப்ப ராசா லுக்கு வரட்டோ? - Danklas - 01-20-2006 Vasampu Wrote:<b>இந்தியா அங்கு அகதியாய் இருக்கும் நம் மக்களுக்கு உதவி செய்யும்போது தனியொருவராய் தானும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் நினைப்பதில் என்ன தவறு. அவரது நோக்கம் உண்மையானதெனில் பாராட்டப்பட வேண்டிய விடயமே.</b> \"இந்தியாவில் சினிமாவினால்\" சினிமா பகுதியில் லக்கிலுக் எழுதியது. <span style='font-size:14pt;line-height:100%'>(இதை தெரிந்துகொள்ளத்தான் அந்த பிரிவை ஆரம்பித்தேன்)</span> Luckyluke Wrote:நல்ல கேள்வி..... வசம்பரே, லக்கிலுக் சொன்னதை கேட்டீர் தானே? இந்தியாவில எப்படி மக்கள் முன்னேறிக்கொண்டு போறாங்க எண்டு? பிறகு எதுக்கு புலத்தில இருக்கிற ஈழத்தமிழரிட்ட காசு வேண்டி இந்திய நாட்டுக்கு உதவி செய்யப்போறாரம் அந்த மைசூர் மகாராஜா? வசம்பரே உமக்கு தெரியுமோ இல்லையோ, சுனாமி ஆசியாவில அடிச்ச பொழுது இந்தியாவிலயும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழை மக்கள் இறந்தார்கள், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி செய்யட்டுமா எண்டு இந்திய அரசை கேட்டபொழுது இந்திய அரசு சொன்ன பதில் தெரிந்து இருக்கும் உமக்கு, எங்களுக்கு உதவி தேவையில்லை, நாங்கள் அதை சமாளிப்பம் எண்டு,, இவர்களுக்கு அப்புறம் எதுக்கு உதவி செய்யனும்? எப்பவோ சுதந்திரம் கிடைச்சுட்டுது இந்தியாவுக்கு, அவங்களுக்கு தெரியும் தங்கட நாட்டை எப்படி பாதுகாக்கனும் எண்டு,, அந்த இனையத்தளத்தை நடத்துற அட்மின் ஒரு உண்மையான ஈழத்தமிழர் (மனிதன்) எண்டால் அண்மையில் இராணுவத்தின் கெடுபிடிகளினால் வன்னிக்கு இடம்பெயரும் மக்களுக்கு தமிழர் புணர்வாழ்வுகழகம் உதவி செய்யுமாறு வேண்டுகோள்விடுத்திருந்தது, எங்க அதுக்கு உதவி செய்வாரா அந்த வசூல் ராஜா?? வசம்பரே ஒன்றை மாத்திரம் புரிஞ்சுகொள்ளும், யாழில இருக்கிற ஒரு சிலருக்கு நீர் ஜால்ரா போடுறதும், பதிலுக்கு அவங்கள் உங்களுக்கு சிங்க் சக் போடுறதும் நல்லதாப்படயில்லை,, யாழ் கருத்துக்களத்தையும் சில தமிழ் கருத்து புறம்போக்கு இனையத்தளங்கள் மாதிரி ஆக்கிப்போடாதையும்,, யாழில இருக்கிற ஒரு சிலரை நீர் நம்பி அவர்களுக்கு ஜால்ரா போடுறது நல்லாதாப்படல்லை,, அவங்கட செயல்களுக்கு ஒரு சின்ன உதாரணம் ஒரு கருத்துக்களத்தில் இவ்வளவு நாளும் குப்பை கொட்டின அந்த சில பேர், புதிசா ஒரு இனையத்தளத்தை கண்ட உடன, பழைய இனையத்தளத்திற்கு நன்றிக்கடன் செலுத்திறமாதிரி, அந்த பழைய கருத்துக்களத்தில் செய்யக்கூடாத பல வேலைகள் செய்து ஒருத்தரையும் அந்த கருத்துக்களத்தைப்பார்க்கவிடாமல் பன்னுறதுக்காக வேறு வேறு பெயர்களில் வந்து சொல்லக்கூடாத அத்தனை கூடாத சொற்களையும் களம் எங்கும் எழுதினதும் பத்தாமல், அங்க இருக்கிறவங்களை புதிய புறம்போக்கு தளத்துக்கு வாங்க எண்டு அன்பு கட்டளை இடுகினம், நன்றி உணர்வு ஒண்டு இருந்தால் இவ்வளவு நாளும் தங்களின் கருத்தை சுதந்திரமா எழுதவிட்ட அந்த பழைய கருத்துக்களத்திற்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருந்திருக்கலாமெல்லோ?? ஒண்டைமாத்திரம் புரிஞ்சு கொள்ளும், இப்படியானவர்கள்??? உமக்கு எதிராகவும் எழுதுவார்கள் வ*ம்பரே,,, பால் எது விசம் எது என்று வித்தியாசம் தெரிஞ்சும் கண்ணமூடிக்கொண்டு குடிக்கிறிர் ஆபத்து உமக்குத்தான், இதை புதிய புறம்போக்கு இனையத்தள வெப்மாஸ்ரரும் அறிந்து கொள்ளவேண்டும்,,,
- Vasampu - 01-20-2006 நன்றி டண் எனக்காக அக்கறை எடுத்து நீங்கள் எழுதிய பதிலிற்காக. ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் நான் எப்போதும் என்னிலையிலிருந்துதான் களத்தில் கருத்துக்களை எழுதி வருகின்றேன். எவரையும் நாடு இனம் மொழி என்று பார்க்காமல் மனிதனாக பார்த்துத்தான் எனது கருத்துக்களை வைக்கின்றேன். எவருக்கும் வக்காலத்தோ அல்லது ஜால்ராவோ போட வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதேபோல் களத்தில் எப்படியும் பிரைச்சினைகளை உண்டாக்குவதற்காக மற்றைய களங்களின் பிரைச்சினைகளை இங்கே கொண்டு வந்து போடுவதே சிலரின் வேலையாகவுள்ளது. என்னையும் வேறு ஒரு இணையத்தளத்துடன் சம்பந்தப் படுத்த முயற்சித்து தோல்வியடைந்ததையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அப்படியான விடயங்கள் உங்களுக்கு தவறாகப் படவில்லையா?? மேலே குறிப்பிடப்பட்டவர் யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் அவரது நோக்கம் சரியாகப்பட்டதால் அது விடயமாக எனது கருத்தையும் வைத்தேன். இந்தியாவில் லக்கிலுக் போன்ற சிலரின் பொருளாதார நிலையைப் போன்றுதான் எல்லோரும் இருக்கமுடியுமா?? அமெரிக்காவின் உதவியை இந்தியா நிராகரித்தது உதவி என்ற போர்வையில் அமெரிக்கா வந்து என்ன செய்யும் என்பதை இந்தியா உணர்ந்துதான். இந்த விடயம் டண்ணுக்கும் புரியாததல்ல. இலங்கைத் தமிழ் மக்களுக்காக பல்லாயிரக் கணக்காக நம்மக்கள் உதவும்போது ஒரு தனியொருவர் இந்திய மக்களுக்கு உதவ நினைப்பதை விமர்சிக்க முனைவதுதான் தவறான விடயம். இதனால் அப்படி என்ன பாதிப்பு?? எது செய்தாலும் விமர்சிக்க வேண்டுமென்ற உள்நோக்கமான சிலரின் சிந்தனைகள் மாறுவது தான் எதிர்காலத்தில் எம்மவர்கள் பற்றிய ஏனையவர்களின் சிந்தனையிலும் மாற்றங்களை உண்டுபண்ணும். - அருவி - 01-20-2006 Danklas Wrote:Vasampu Wrote:<b>இந்தியா அங்கு அகதியாய் இருக்கும் நம் மக்களுக்கு உதவி செய்யும்போது தனியொருவராய் தானும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் நினைப்பதில் என்ன தவறு. அவரது நோக்கம் உண்மையானதெனில் பாராட்டப்பட வேண்டிய விடயமே.</b> டண் இது புரிய வேண்டியவர்களிற்குப் புரியுது இல்லையே :roll: - அருவி - 01-20-2006 Vasampu Wrote:நன்றி டண் அமெரிக்காவின் உதவியை மட்டுமல்ல அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் மறுத்திருந்தது. அவரது நோக்கம் சரி என்கிறீர்களே எப்படி என்று சொன்னால் இன்னும் சிறப்பாய் இருக்கும். இன்னொரு உங்களின் கருத்துப்படி பார்த்தால் நீலன் திருச்செல்வம், கதிர்காமர் அனைவரையும் பாராட்டுவீர்கள் போல் உள்ளதே :roll: - Danklas - 01-20-2006 Vasampu Wrote:<b>அமெரிக்காவின் உதவியை இந்தியா நிராகரித்தது உதவி என்ற போர்வையில் அமெரிக்கா வந்து என்ன செய்யும் என்பதை இந்தியா உணர்ந்துதான்.</b> 1.அமெரிக்கா உதவி செய்கிறன் எண்டு சொன்னபொழுது இந்தியா அதை ஏற்காதமைக்கு பல காரணம், ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழர்களாகவும், ஏழை மக்களாகவும் இருந்தபடியால்த்தான் இந்தியா மத்திய அரசு சுனாமி விடயத்தை பாரிய விடயமாக எடுக்கவில்லை, இதுவே மும்பை டெல்லியில் நடந்திருந்தால், அமெரிக்காவின் உதவியை வேறு ஏதவது மாற்று வழி மூலம் பெற்றிருப்பார்கள்,, அமெரிக்கா எங்க இதே சாட்டில உள்ளே வந்துடும் எண்ட பயத்தினால்த்தான் இவர்கள் மறுத்தார்கள் என்பதும் ஒரு முக்கிய காரணம், ஒரு வளர்ந்து வரும் நாடு, அதிலும் பிராந்திய வல்லரசு வேற, அவர்களுக்கு ஒரு விடயத்தை எப்படி கையாளவேண்டும் எண்டுதெரியாதா? சிபிஐ, றோ எண்டு எதுக்கு வைத்திருக்கிறார்கள்? பலம் இல்லாத சிறிய நாடுகளை பயப்படுத்தவா? தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை அப்போது பார்த்திருப்பீர்கள், உலக நாடுகளை நேரடியாக வரச்சொல்லி கோரி இருந்தார்கள், அவர்கள் அப்படி வரச்சொன்னதுக்கு பல காரணம் இருக்கு, அதில பல ஆபத்துக்களும் இருந்தது, அந்த ஆபத்துக்களை எப்படி சமாளிக்கலாம் என்று அவர்களுக்கு தெரிந்து இருந்து தான் அப்படி செய்தார்கள், ஏன் அவர்களுக்கும் இந்தியாவிற்கு இருக்கிற பயம் இருக்காதா? சரி இந்திய மத்திய அரசு நாங்கள் பார்த்திக்கிறம் எண்டு சொன்னார்களே அதை நிறைவேற்றினார்களா? சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் மத்திய அரசினோ அல்லது மாநில அரசினோ உதவியை பெற்றார்கள்? ஒரு சில நடிகர்கள் (குறிப்பா விவேக் ஓபராய்) உடனே அந்த சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உதவியை வழங்கியபடியால்த்தான் அந்த மக்களுக்கு அவர் கடவுளாக தெரிந்தார், மத்திய அரசையோ மாநில அரசையோ மக்கள் அன்று மறந்துவிட்டார்கள், அன்று பாதிக்கப்பட்ட பலருக்கு பல மாதங்களின் பின் தான் உதவி கிடைத்தது சிலருக்கு என்னம் கிடைக்கவில்லை... :?: <b>இந்தியாவில் லக்கிலுக் போன்ற சிலரின் பொருளாதார நிலையைப் போன்றுதான் எல்லோரும் இருக்கமுடியுமா</b>?? லக்கிலுக் குறிப்பிட்டது தன்னுடைய வருமானத்தையோ அல்லது தனது குடும்பத்தின் வருமானத்தையோ அல்ல, பல படங்கள் வசூலில் சாதனை படைக்கிறது எண்டு சொன்னாரே, அந்த வசூல்களுக்கு லக்கிலுக் போன்ற ஒரு சிலர்தான் காரணமா? தமிழகத்தில் உள்ளவர்கள் தங்களின் மக்களுக்கு உதவி செய்ய நினைத்திருந்தால் அவர்கள் ஒரு நாளைக்கு சினிமாவுக்கு குடுக்கிற பணத்தை அவர்களுக்கு குடுத்திருக்கலாம், அல்லது ஒவ்வொரு நடிகர்களும் தங்களின் வருமானத்திலிருந்து ஒரு சிறுதொகையை வழங்கி இருக்கலாம், உங்களுக்கென்று தெரியுமா? உலகத்திலேயே கோடிஸ்வரர்கள் அதிகமாக வாழும் நாடு இந்தியா, அந்த நாட்டுக்கே இந்த மைசூர் மகாராஜா (அந்த இனையத்தளத்தை நடத்துபவர்) என்ன உதவி செய்யப்போறாராம்? ராமருக்கு உதவி செய்த அணில் மாதிரி தன்னை நினைத்துவிட்டரோ?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <b>மேலே குறிப்பிடப்பட்டவர் யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் அவரது நோக்கம் சரியாகப்பட்டதால் அது விடயமாக எனது கருத்தையும் வைத்தேன்.</b> ரொம்ப தெளிவா குழப்பீட்டீங்க எண்டு நினைக்காதேங்க,, உங்கட காதில நீங்களே எதையோ சுத்துறமாதிரி இருக்கு,,, :oops: - Aaruran - 01-21-2006 Luckyluke Wrote:நன்றி ஆதிபன், [size=15]LuckyLook, சும்மா அளக்காதேயும், அகதியாக வந்த ஈழத்தமிழர்களை எப்படி இந்தியா நடத்தியதென்பது உலகறிந்த விடயம், அவர்கள் எல்லோரையும் புலிகளாகக் கருதி, குழந்தைகளைக் கூட அகதி முகாம் என்ற பெயரில் பழைய சிறைகளில் அடைத்துப் போட்டு, வெளியேறாமல் காவலும் போட்டது தான் சனநாயக இந்தியா. வசதியுள்ள, அகதிமுகாமை விட்டு வெளியில் வாழ்ந்த இலங்கைத் தமிழர்களிடம் நாலைந்து மடங்கு வாடகை வாங்கித் தவித்த முயலை அடித்தவர்கள் பெரும்பாலான எங்களின் இந்தியச் சகோதரர்கள். ஓரு சில எங்களில் அக்கறையுள்ள இந்தியச் சகோதரர்களை ஈழத் தமிழர்கள் யாரும் மறக்கவில்லை. MGR உதவி செய்தார், கருணாநிதி செய்தார் என்று தொடங்காதேயும், அதைப் பற்றி வேறு தளத்தில் ஆராய்ந்துள்ளோம், இந்தியா ஒன்றும் நல்லெண்ணத்தில் ஈழத்தமிழருக்கு உதவி செய்யவில்லை. எங்களின் விடுதலைப் போரை, எங்களிண் அவலத்தை இந்தியா, தன்னுடைய சுயநலத்துக்குப் பாவித்துக் கொண்டது, எந்தக் குழந்தைக்கும் தெரியும், இந்தக் கதை. சீனா ஈழத்தமிழருக்கு அண்மை நாடாக இருந்தால் அங்கும் அகதியாகப் போவார்கள், அகதியாக உயிருக்குப் பயந்து ஓடும் போது, எந்த நாடென்று கருதுவதில்லை. உயிரைக் காப்பது தான் அந்தத் தருணத்தில் முக்கியமானது. ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதற்குக் காரணம் மிகவும் அண்மையயில் உள்ளது மட்டுமல்ல, தமிழர்கள் உள்ளார்கள், ஆதரவு தருவார்கள் என்றும் தான், ஆனால் ராமேஸ்வரத்திலும், மண்டபத்திலும், அவர்கள் படும் பாடும், வட இந்திய கடல்படையினர் அவர்களைத் துன்புறுத்துவதையும், ஈனப்படுத்துவதையும் தமிழ்நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதுவதில்லை. இந்தியா ஒன்றும் மனிதாபிமானத்தில் மட்டும் ஈழத்து அகதிகளை அனுமதிக்கவில்லை, இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின், சர்வதேச நாடுகள் அகதிகள் ஓப்பந்த்ததில் கையொப்பமிட்டுள்ள நாடு மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் கேட்கும் நாடு, அதை விட இந்து சமுத்திரத்தின் பண்ணையார் போல் நடந்து கொள்ள விரும்பும் நாடு, அப்படி மரியாதை எதிர் பார்த்தால் அதற்கேற்ப நடந்து கொள்ளவும் வேண்டும் அப்பொழுது தான் மரியாதை கிடைக்கும். அதனால் மற்ற நாடுகளைப் போல் தன்னைத் தேடி வரும் அகதிகளை மனிதாபத்துடன் நடத்தி உரிய வசதிகளைச் செய்து கொடுப்பது இந்தியாவின் கடமை மட்டுமல்ல, உலகநாடுகளில் இந்தியாவின் நற்பெயரும் அதில் தங்கியுள்ளது, ஆனால் படித்த இந்தியர்கள் கூட அகதிகள் வருவதைத் தாங்கள் பிச்சை போடுவதில் வல்லவர்கள், ஈழத்தமிழர்கள் அகதிகளாகப் பிச்சையெடுக்க வருகிறார்கள் என்றெல்லாம் பீற்றிக் கொள்கிறார்கள். உண்மையில், ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பின்பு, இந்தியா, ஈழத்தமிழரை நடத்திய, விதத்தையும், துன்புறுத்தல்களையும், மனிதவுரிமை மீறுதல்களையும் Amnesty International கூட கடுமையாக விமர்சித்திருந்தது, மிகவும் வறிய ஆபிரிக்க நாடுகள் கூட பல மில்லியன் அயல்நாட்டு அகதிகளை உள்வாங்கிப் பராமரிக்கிறார்கள், ஆனால் இந்தியாவின், பொருளாதார சக்தியை வாய் கிழியப் பேசிக் கொண்டு, பன்னிரண்டு ஈழத்தமிழகதிகள் புதிதாக வந்ததை ஒரு செய்தியாகப் போட்டுப் பீற்றிக் கொள்ளும் இந்தியர்களைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. ஒவ்வொரு நாளும் சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்குள் கொண்டு வந்து கொட்டும், அந்நியச் செலாவணியைப் பற்றி அவர்கள் பேச மாட்டார்கள், அதை விட இலங்கைத் தமிழர்கள் அங்கு தங்கியிருக்கும் போது, லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து, எத்தனையோ கைத்தொழில்களையும்,சிறு தொழிலாளர்களை ஊக்குவிப்பதும், வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்ல, அவர்களின் சினிமா உலகுக்கும், அதை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் ஈழத்தமிழர்களின்,வெளிநாட்டு அகதி டொலர் உதவுவதைப் பற்றிப் பேச மாட்டார்கள். அதை விட புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இந்தியப் பொருட்களின் சந்தையாகவும் விளங்குகிறது, பல இந்தியர்கள் எங்களை ஆதரிப்பதும், எங்களின் டொலருக்காகவும், தங்களுடைய நூல்களையும், கூத்துக்களையும் விற்பதற்காகத் தானென்பதும் எங்களுக்குத் தெரியும், ஈழத்தமிழரால் இந்தியா அடையும் வர்த்தக லாபத்தையும், அந்நியச் செலாவணியையும் பற்றிப் பேசமாட்டார்கள், நூறு வறிய ஈழ அகதிகளுக்கு வரிசையில் நிற்க வைத்து கத்தரிக்காய் இல்லாத, கத்தரிக்காய் சாம்பாரும், சோறும் போட்டதை மட்டும் வாய் கிழியப் பேசி நன்றிக்கடன் கேட்பவர்கள் தான் சில இந்தியச் சகோதரர்கள். :evil: - தூயவன் - 01-21-2006 ஆருரன் அண்ணா நண்பர் ஒருவர் சொன்ன விடயம். 95ம் ஆண்டு யாழ்பாணத்தில் இருந்து எங்கள் சனம் இடம்பெயரும் போது இந்தியாவின் சனநாயகம் வாய்திறக்கவில்லை. அப்போது ஜநா செயலாளராக இருந்த புூட்றஸ் காலி முதல் பலர் குரல்கொடுத்தபோதும் இந்தியா வாய் மூடி மௌனியாகத் தான் இருந்தது. ஆனால் ஓயாத அலைகள் தாக்குதலில், 40 000 இராணுவம் யாழ்பாணத்தில் மாட்டுப்பட்டு தவித்தபோது உடனே பாய்ந்தடித்து ஓடி வந்தது. அப்போது மத்திய அரசின் முகத்தை இனம் கண்டு கொண்டோம். எனவே தமிழனுக்கு அரைக்கிலோ அரிசியும், சாம்பாரும் சட்னியும் தான் தேவை என்று 87ல் உணவுப் பொட்டலம் போட்டபோதும் சரி, இப்போதும் சரி மத்திய அரசு தீர்மானமாக இருக்கின்றது போலத்தான் தோன்றுகின்றது - Danklas - 01-22-2006 Aaruran Wrote:[quote=Vasampu]என்ன ஊமை அவரே தான் வெங்காயம் என்பதை தெளிவுபடுத்திய பின் வெங்காயத்திடமிருந்து எதை எதிர் பார்க்கலாம். உரித்துப் பார்த்தால் ஒன்றுமேயிருக்காது தானே. <span style='font-size:22pt;line-height:100%'>Danklas, வெங்காயத்தைப் பற்றி வசம்பு என்றவர் இதை எழுதியபோது எங்கே போயிருந்தீர். அதற்கும் தலைப்புக்கும் சம்பந்தமுண்டோ? </span> தொடர்ந்தும் ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக்கொண்டு இருந்தால் யாழ்களமும் என்னொரு புறம்போக்கு இனையத்தளம் மாதிரி வந்துடும் பறவாயில்லையா??(வந்தாலும் பறவாயில்லை அங்க இருக்கிறதுகள் எல்லாம் இங்க வந்துடுமய்யா,,, ஏற்கனவே.............) உங்களுக்கு (வசம்பர், நீர், வெங்காயம் போன்றவர்கள்) என்ன 2,3 கருத்துக்களம் இருக்கு அங்க போய் இப்படி கருத்துக்களை வைப்பீர்(வைப்பார்கள்), ஆனால் இங்கே இருக்கிற பலருக்கு (குறிப்பாக பெண்களுக்கு) ஏது வழி? சிந்தித்துபாருங்கய்யா... :evil: :evil: :evil: - Aaruran - 01-22-2006 Danklas Wrote:என்ன ஊமை அவரே தான் வெங்காயம் என்பதை தெளிவுபடுத்திய பின் வெங்காயத்திடமிருந்து எதை எதிர் பார்க்கலாம். உரித்துப் பார்த்தால் ஒன்றுமேயிருக்காது தான் <span style='color:green'>நான் சொல்ல வந்த்தெல்லாம் வசம்புவுக்கு மட்டும் புத்தி சொல்ல ஏன் பயப்பட்டீர் என்பது மட்டும் தான். என்ன புதுக்கதை விடுகிறீர். நான் எந்தத் தளத்திலும் பெண்களை இழிவு படுத்தியதோ, மரியாதையில்லாமல் எதுவும் சொன்னதில்லை. எங்கள் தமிழ்ப் பெண்களை இழிவு படுத்தியவர்களை நான் இலகுவில் விட்டதுமில்லை. நீர் என்ன சொல்ல வருகிறீர்? </span> :roll: :roll: :roll: :x :x - Danklas - 01-22-2006 ஆமா,, நீங்கள் இருவரும் அமெரிக்கா ஈராக் நாட்டுத்தலைவர்கள், ஈராக்கில நடக்கும் யுத்தம் பற்றி சிரியசாக அலட்டிக்கொள்ளுறீங்க, இதுக்க ரஸ்யா அதிபர் நான் ஈராக் நாட்டோட இனைந்து அமெரிக்காவை எதிர்க்கிறன்,,,, :evil: :evil: ஜோவ் நான் யாருக்கும் ஜால்ரா போடவேண்டியதில்லை,, ஏற்கனவே வசம்புக்கு எதிரா மேலே நான் கருத்து எழுதி இருக்கிறன் வாசிக்கல்லையோ? பட் அந்த கருத்து தனிய வசம்பரை மட்டும் தாக்கவில்லை, அதில வேற விடயமும் சொல்லி இருக்கன், திருப்பி வசம்பர் எனக்கு பதில் கருத்து எழுதி இருந்தார், அதையும் வாசித்தேன், திருப்பி அதுக்கு நான் பதில் எழுதினால் அவரும் எழுதுவார், பிறகு களத்திண்ட பக்கத்தை மூட வைச்சீட்டாங்க எண்டு புலம்பச்சொல்லுறீரோ? உங்களைகுற்றம் சொல்ல ஏலாதப்பு,, ஏனெண்டால் நீங்கள் ஏற்கனவே பல புறம்போக்கு களங்களில் அனுபவப்பட்டுட்டீங்க, அந்த அனுபவத்தில யாழில வந்து கதைச்சுக்கொண்டு இருக்கிறீங்க,, ஒண்டுமாத்திரம் சொல்லமுடியும் இங்கே இருப்பவர்கள் அனைவரும் தமிழரின் தார்மீக விடுதலை போராட்டத்துக்கு ஆதரவனவர்கள் என்று கூறமாட்டேன், ஆனால் 95% வீதமானோர் ஆதரவானோர் என்பதையும், உங்கள் இருவரையும் விட (ஆரூரன், வெங்காயம்) இங்கே இருப்பவர்கள் நேரடியாக பங்களிப்பு வழங்கியவர்களும், வழங்கிக்கொண்டு இருப்பவர்களும் தான்,, தமிழில ஒரு பழமொழி இருக்கு வெங்காயம்,,, ஆமை 1000 முட்டைகளை இட்டுவிட்டு பேசாமல் இருக்குமாம், கோழி 1 முட்டையை இட்டுபோட்டு ஊரைக்கே சொல்லுமாம் இந்தா ஒரு முட்டை போட்டுட்டன் எண்ட வீரத்தைபாருங்க எண்டு,, அப்படித்தான் இருக்கு உங்க நிலைமை,,, மேலும் இது தொடராமல் கருத்தோடு சம்பந்தமாக கதைக்கிறது பெட்டர் எண்டு நினைக்கிறன்,, இல்லை தொடருவம் எண்டால் இந்த கருத்துப்பிரிவை திறந்து அதே பிரிவை மூட வைத்த சாதனை உம்மையே சாரும்...
- Vasampu - 01-22-2006 ஆருரன் உமக்கு கண்களில் ஏதும் கோளாறா??? நான் எனது கருத்தை மட்டும் தான் இப்பக்கத்தில் இணைத்தேன். அதனை முதுகெலும்பில்லாத சிலர் சீண்டிப் பார்த்த பின் தான் அவற்றிற்கு பதிலளித்துள்ளேன். |