Yarl Forum
இந்தியாவில் சினிமாவினால்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: இந்தியாவில் சினிமாவினால்... (/showthread.php?tid=1298)

Pages: 1 2


- தூயவன் - 01-20-2006

கமல் தெனாலியில் அப்படி கதைத்ததால் பலருக்கு அவர் மீது நிறையக் கோபம் உண்டு. அவர் ஈழத்தமிழரை அவமதித்து விட்டதாகவே உணருக்கின்றனர். சொல்லப் போனால் அப்படி யாரும் உச்சரிப்பதில்லை.

இருக்க யுத்தம் காரணமாக படைப்பாளிகள் புலம்பெயர்ந்து விட்டாலும், விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுப் பிரிவு இதுவரைக்கும் 50ற்கு மேற்பட்ட முழுநீளத்திரைப்படங்களைத் தயாரித்திருக்கின்றன. அதிகமாக குறும்படங்கள் வந்திருக்கின்றன.

இதை விட புலம்பெயர்ந்த நாடுகளிலும் படங்கள் வெளிவருக்கின்றன. அஜீவன் அண்ணா கூட பல குறும்படங்களை வெளியிட்டிருக்கின்றார்


- Luckyluke - 01-20-2006

அப்படியா,

நாங்கள் எல்லாம் கமல் மிக தத்ரூபமாக நடித்திருக்கிறார் என்றல்லவா நினைத்தோம்? அவர் மீது கோபப்பட்டு என்ன பயன்... இயக்குனர் மீதல்லவா உங்கள் கோபம் திரும்ப வேண்டும்?

எப்படியிருந்தாலும் 'இஞ்சாருங்கோ' என்ற வார்த்தை தமிழத்தில் பிரபலமானது அந்த திரைப்பட குழுவினரால் தான்.....


- rajathiraja - 01-20-2006

கன்னித்தில் முத்தமிட்டால் படம் என்க்கு மிகவும் பிடித்த ஒன்று. உங்கள் பல பேர் அதற்க்காக என் மேல் பாய வேண்டாம். மனிரத்னம் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு இடுத்து இருகிறார் என்று புரிந்து கொண்டு பார்த்தால் பிரச்சனை இல்லை. விடை கொடு எங்கள் நாடே பாடல் தேசிய விருது பெற்றது


- Luckyluke - 01-20-2006

குற்றப் பத்திரிகை படம் கொஞ்சம் எல்லை மீறியதால் தான் தடை செய்யப்பட்டதாக சொல்கிறார்கள்... அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை......


- sanjee05 - 01-23-2006

என்னதான் நடந்தாலும் என் கொள்கை மாறது. நான் எந்த ஒரு நடிகர்களுக்கும் ஆதரவு இல்லை

ரிரின் போகும் படைலைக்கு படைலை நடிகர்களூக்கு ஆதரவே ஒழிய இந்திய சினிமாவுக்கு அல்ல. இந்திய மக்கள் பாவம் அவர்களை சினிமாவுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள்

இப்ப வரும் படங்கள் எதில் ஆபாசக் காட்சிகள் இல்லை. அது இல்லாவிட்டால் இந்தியாவில் படம் படு தோல்வியாகிவிடும்


- Luckyluke - 01-27-2006

சஞ்சீ,

உங்களுக்கு இந்திய திரைப்படங்கள் அவ்வளவு பரிச்சயம் கிடையாது என நினைக்கிறேன்.... நீங்கள் வெறும் வணிகப்படங்களை மட்டுமே கண்டு களித்திருக்கிறீர்கள்... இங்கு கலைப்படம் என்றும் ஒரு பிரிவு உண்டு.... இந்திய கலைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரிதும் விரும்பப் படுகிறது.....


- ukraj - 01-27-2006

விஜயின் மனைவியின் புூர்வீகம் தொட்டிலடி (சண்டிலிப்பாய்க்கு அருகாமை.....?) இவர் இலண்டனில் தான் படித்தவர்(என்ன படித்தார் என்று தெரியாது)


- Luckyluke - 01-27-2006

அவர் சென்னையில் பள்ளி படிப்பை படித்தாரா?


- ukraj - 01-27-2006

இல்லை சிறு வயதிலிருந்தே லண்டனில் தான்......