Yarl Forum
ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய (/showthread.php?tid=1239)

Pages: 1 2 3 4 5


- தூயவன் - 01-24-2006

Luckyluke Wrote:வைகோ ஒரு செல்லாக்காசு.... அவருக்கு தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5 லட்சம் வாக்குகள் இருந்தாலே பெரிய விஷயம்.... அவர் திமுக கூட்டணியின் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வெற்றி பெறப்போவது திமுக கூட்டணி தான்..... காங்கிரஸ் தனியாக நின்றாலோ அல்லது அதிமுகவுடன் இணைந்தாலோ தான் திமுக மண்ணைக் கவ்வும்.....

அதைப் பற்றி எமக்குக் கவலையில்லை. கள்ளஓட்டைப் போட்டு, அல்லது மற்றவர்களின் மதிப்பை வைத்து வெற்றி பெறும் சாதாரண அரசியல்வாதியாகக் கூட இருக்கலாம்.

ஆனால் ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கும் உண்மையானவர் அவர் என்பது மட்டும் தான் சொல்லமுடியும். மற்றவர்கள் போல் மதில்மேல் புூனையாகவோ, குள்ளநரித்தனம் மிக்கவராகவோ அவர் இருக்கிவில்லை. அந்த உணர்விற்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.
அது எமக்குப் போதும்.


- தூயவன் - 01-24-2006

MEERA Wrote:முதலில் எல்லோரும் ஒன்றை நினைவில் வைத்திருங்கள்.

<b>வைகோ இலங்கை அரசியல்வாதியில்லை</b>

நிச்சயமாக. அதை விட வார்த்தை தடுமாறும் இந்திய அரசியல்வாதியும் கிடையாது


- வர்ணன் - 01-24-2006

MEERA Wrote:முதலில் எல்லோரும் ஒன்றை நினைவில் வைத்திருங்கள்.

<b>வைகோ இலங்கை அரசியல்வாதியில்லை</b>

மீரா எதையாவது கொஞ்சமாவது தெரிந்தபின் பேசுங்க.
வை.கோ இப்போ நீங்க சொல்லுறதையும் தன்னோட மடி கணணியில பார்த்து கொண்டு இருக்கலாம்.

"இவ்ளோ காலம் நான் பட்ட கஸ்டம் வீணாய்போச்சே"
என்று அந்த மனிதனுக்கு உங்க அலட்டல் கருத்து மூலம்
மனசு நோக பண்ணாமல்- வேற வேலை இருந்தா பாருங்க மீரா-!

வை.கோ- போல எங்கட விடுதலை இயக்கத்துக்கும்- தலைவருக்கும்- விசுவாசமா இருந்த ஒரு அயல் நாட்டு அரசியல்வாதியை - எங்காவது நீங்க கண்டு இருக்கிங்களா? இல்லை இனி காண முடியுமா? :? 8)


- தூயவன் - 01-24-2006

வர்ணன்.
நான் நினைக்கின்றேன். சுத்துமாத்துதனத்தையும், தமிழருக்கு இவ்வளவு ஏமாற்றத்தையும் கொடுத்த இலங்கை அரசியல்வாதிகளைக் கருத்தில் கொண்டு தான் மீரா அப்படிச் சொல்லியிருக்ககூடும்.

எதுக்கும் அவரே தெளிவுபடுத்தட்டும்


- கந்தப்பு - 01-24-2006

தமிழகத்தேர்தலில் தி.மு.க அல்லது அ.தி.மு.க வினைத்தவிர வேறு ஒருவரும் வெல்லமுடியாது. ம.தி.மு.க சென்ற தேர்தலில் தனியாகப்போட்டியிட்டு எல்லாத்தொகுதியிலும் தோல்வியடைந்தார். ம.தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை தி.மு.க அல்லது அ.தி.மு.க வுடன் கூட்டுவைப்பதன் முலம் சில தொகுதிகளில் வெல்லலாம். அத்துடன் ம.தி.மு.க,பாட்டளிமக்கள் கட்சியுடன் கூட்டுவைப்பதினால் தி.மு.க, அ.தி.மு.க வினருக்கும் அதிக வாக்குகள் கிடைக்கிறது. ம.தி.மு.கவுக்கு குறைந்த தொகுதிகளினைக் கலைஞர் ஒதுக்குவதினால் ம.தி.மு.க
அ.தி.மு.க வுடன் கூட்டணி வைக்க இம்முறை முயர்ச்சிக்கிறது.

கனோன் சொன்னதுபோல ஈழத்தமிழர்களுக்கு எதிரான காங்கிரசுக்கட்சியுடன் வை.கோ கூட்டணியில் இப்பொழுது இருந்தாலும் வை.கோ எமக்குக்குரல் தருபவர்.அவர் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்தாலும் எம்மைக்கைவிடமாட்டார்.


- வர்ணன் - 01-24-2006

தூயவன் Wrote:வர்ணன்.
நான் நினைக்கின்றேன். சுத்துமாத்துதனத்தையும், தமிழருக்கு இவ்வளவு ஏமாற்றத்தையும் கொடுத்த இலங்கை அரசியல்வாதிகளைக் கருத்தில் கொண்டு தான் மீரா அப்படிச் சொல்லியிருக்ககூடும்.

எதுக்கும் அவரே தெளிவுபடுத்தட்டும்

தூயவன் -
அவர் எதையும் வந்து தெளிவு படுத்திட்டு போகட்டும்-
ஆனால் அவர் வார்த்தைகளுக்கு முழு அர்த்தம்
"நன்றி கெட்ட தனம்"!! 8)


- Luckyluke - 01-24-2006

தாய் தமிழன் எப்படியாவது அராஜக ஆட்சியில் சிக்கித் தவிக்கட்டும், அதற்கு வைகோவும் துணை போகட்டும், அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவு தந்தால் போதும் என்ற உங்களின் எண்ண ஓட்டம்.... அடடா.... என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.....


- வர்ணன் - 01-24-2006

அதரவு-தந்தால் போதும் என்றல்ல.....
அதரவு- தந்ததை மட்டும் நன்றியோடு நினைக்கிறோம்! 8)

அது நிற்க- "செல்லாகாசு" என்று நீங்க நினைக்கும் வை.கோ-
எப்பிடி ஒரு அராஜக ஆட்சியை எதிர்க்கும் திறன் கொள்வார்?
அடடடா... உங்க எண்ண ஓட்டம்...
எங்களூக்கும் மெய்சிலிர்க்க வைக்கிறதுதான்!

வாய்க்கு வந்த படியெல்லாம் ஓடுகிறதே!
செல்லாகாசு ஆன அவரை பற்றி உங்களூக்கு என்ன அக்கறை?
அவரை விட்டு விடுங்கள்! 8)


- Luckyluke - 01-24-2006

அடடா.... என்ன ஒரு அக்கறை உமக்கு....

உமக்கு ஆதரவு தந்தால் சந்தன கடத்தல் காரனை கூட காந்தி என்பீர் போல் இருக்கிறதே?

நல்லா இருக்கு நீங்கள் ஆதரவு பெறும் முறை.....


- Vasampu - 01-24-2006

ஈழத் தமிழ்மக்களுக்கு ஆதரவு தரும் வை.கோ , இராமதாஸ் போன்றவர்களுக்கு அவர்களின் கட்சி ரீதியாக தனிப்பட்ட செல்வாக்கு என்பது கிடையாது. அவர்களால் தி.மு.க அல்லது அ.தி.மு.க போன்ற செல்வாக்கான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் போது மட்டுமே சில ஆசனங்களை கைப்பற்ற முடிந்திருக்கின்றது. ஆனால் தனித்துப் போட்டியிட்ட போது டெபாசிட்டை கூட மீட்க முடியாத நிலையே இன்றும் தொடர்கின்றது. வை.கோ தி.மு.க கூட்டணியிலிருப்பதால் தான் இவ்வளவு சுதந்திரமாக அவரால் செயற் பட முடிகின்றது. ஆனால் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் வாய்மூடி மௌனியாகவே இருக்க வேண்டும். மீறினால் கஞ்சா வழக்குகள் போட்டாவது ஜெயலலிதா உள்ளே தள்ளிவிடுவார்.


- Luckyluke - 01-24-2006

ஜெயலலிதா உங்களுக்கு ஆதரவளித்தால் கூட, அவரது பின்னணி என்ன என்று தெரியாமால் எல்லோரும் இங்கே மகிழ்ச்சி அடைவார்கள் போல் தெரிகிறது... ஏற்கனவே சிலர் இப்போதே ஜெ. மீது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள்.... என்ன கொடுமையப்பா இது?


- Danklas - 01-24-2006

Luckyluke Wrote:ஜெயலலிதா உங்களுக்கு ஆதரவளித்தால் கூட, அவரது பின்னணி என்ன என்று தெரியாமால் எல்லோரும் இங்கே மகிழ்ச்சி அடைவார்கள் போல் தெரிகிறது... ஏற்கனவே சிலர் இப்போதே ஜெ. மீது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள்.... என்ன கொடுமையப்பா இது?

ஆமா ஆமா நீர் உளறுவது சா சொல்வது அத்தனையும் உண்மை,, ஜெயாக்காமீது சிலர் அல்ல தமிழ் மக்கள் அனைவரும் 100%அன்பு வைத்திருக்கிறார்கள், அதனால்த்தான் இன்று ஈழத்திலே மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துகின்றார்கள்.. Idea


- MEERA - 01-24-2006

இது நன்றி கெட்டத்தனமில்லை உண்மை... நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் எனது கருத்து.......

வைகோ ஈழத்தழிழர்களுக்கு ஆதராவாகக் செயற்பட்டாலும் அவர் இந்திய அரசியலுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அவர் அங்கு ஒரு பலமான நிலையிலிருந்தாலே அவர் எங்களுக்காக குரல் கொடுக்க முடியும்.


- kurukaalapoovan - 01-24-2006

அவர் முதற் கண் ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி. அது மாத்திரமல்ல அவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் தான்.
அவர் தமிழ்நாட்டை தளமாக கொண்டு இயங்குபவர் என்றரீதியில் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர் அவர்களின் தேவைகளை அபிலாசைகளை மைய்யமாகக் கொண்டது தான் அவருடை தேர்தல் விஞ்ஞாபனங்கள் கொள்கைகள் நகர்வுகள் இருக்கும். இது அவருடைய முன்னணியான பொறுப்பு, பணி.

;ஆனால் அவர் அந்தப் பொறுப்பை பணியை நிறைவேற்ற முன்னொடுக்கும் நகர்வுகளில் ஈழமக்களுக்கு அவர்களின் போராட்டத்திற்கு விடுதலைப்புலிகளிற்கு பாதகமானவற்றை செய்யமாட்டார் என்ற நம்பிக்கை உண்டு. அந்தவகையில் அவர் ஒரு நியாயமான அரசியல்வாதியாக இருப்பார்.

அவர் ஈழமக்களின் போராட்டத்தை விளங்கியவர் விடுதலைப்புலிகளின் தலமையில் நம்பிக்கையும் மதிப்பும் கொண்டவர் என்றரீதியில் அவருடைய ஆதரவு அரசியலுக்கு அப்பால் நிதானமாக என்றும் இருக்கும்;.


- அகிலன் - 01-25-2006

வைகோ மட்டும் அல்ல முதல்வர் ஜெயலலிதா ஈழத்தமிழருக்கு ஆதரவு அளிக்க முன்வந்தாலும் வேண்டாம் எண்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. ஒரு கட்சி சார்பாக இந்த இனப்பிரச்சினையை அணுகி சுயலாபம் காணுபவர்களிற்க்கு மகிழ்ச்சியாக இருகாதவிடயம் இது. வைகோ தன் கட்சிக்காகவும் தமிழக மக்களுக்காக எண்று எதுவாக காரணம் காட்டினாலும் பறவாய் இல்லை அவர் விரும்பியதை செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது. அவரைச் சார்ந்தவர்களின் நலனில் அக்கறை எடுக்க வேண்டியது அக்கட்சியின் தலைவரின் கடமை. அவர் செய்வது ஜனனாயகமும் கூட. ஜெயலலிதாவின் கூட்டணியில் வைகோ முன்னர் இருந்தவரும் கூட. ஆதலால் எது சரியானது எண்று அவருக்கு நன்குதெரியும்.


- தூயவன் - 01-25-2006

Vasampu Wrote:ஈழத் தமிழ்மக்களுக்கு ஆதரவு தரும் வை.கோ , இராமதாஸ் போன்றவர்களுக்கு அவர்களின் கட்சி ரீதியாக தனிப்பட்ட செல்வாக்கு என்பது கிடையாது. அவர்களால் தி.மு.க அல்லது அ.தி.மு.க போன்ற செல்வாக்கான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் போது மட்டுமே சில ஆசனங்களை கைப்பற்ற முடிந்திருக்கின்றது. ஆனால் தனித்துப் போட்டியிட்ட போது டெபாசிட்டை கூட மீட்க முடியாத நிலையே இன்றும் தொடர்கின்றது. வை.கோ தி.மு.க கூட்டணியிலிருப்பதால் தான் இவ்வளவு சுதந்திரமாக அவரால் செயற் பட முடிகின்றது. ஆனால் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் வாய்மூடி மௌனியாகவே இருக்க வேண்டும். மீறினால் கஞ்சா வழக்குகள் போட்டாவது ஜெயலலிதா உள்ளே தள்ளிவிடுவார்.
<b>
ஜரோப்பாவில் இருந்து அறிக்கை விடும் உமக்கே உப்படித் தெரிக்கின்றது என்றால் இவ்வளவு காலமும் துரோகத்தன அரசியலைக் கண்ட வைகோவிற்கு தெரியாமலா போய் விடும் என்று நினைக்கின்றீர்கள்? ஆகவே அவருக்கு என்ன முடிவு எடுக்கவேண்டும் என்று அவருக்குத் தெரியும்.</b>


- தூயவன் - 01-25-2006

Luckyluke Wrote:தாய் தமிழன் எப்படியாவது அராஜக ஆட்சியில் சிக்கித் தவிக்கட்டும், அதற்கு வைகோவும் துணை போகட்டும், அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவு தந்தால் போதும் என்ற உங்களின் எண்ண ஓட்டம்.... அடடா.... என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.....

இங்கே பாருங்கள். வைகோ செல்லாக்காசு என்று சொன்னவரே நீர் தான். பிறகு அவர் எங்கு போனால் தான் என்ன? நீர் ஏன் வருத்தப்படுகின்றீர்.

மேலும் நாங்கள் ஒன்றும் சுயநலமாக யோசிக்கவில்லை. நாம் சொல்வது என்னவென்றால், வைகோ மற்றவர்களைப் போல ஈழத்தமிழர் பிரச்சனையை தேவைக்காக பாவி;க்;காத சிறந்த தலைவர் என்பதையே!!


- வர்ணன் - 01-25-2006

தூயவன் Wrote:
Luckyluke Wrote:தாய் தமிழன் எப்படியாவது அராஜக ஆட்சியில் சிக்கித் தவிக்கட்டும், அதற்கு வைகோவும் துணை போகட்டும், அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவு தந்தால் போதும் என்ற உங்களின் எண்ண ஓட்டம்.... அடடா.... என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.....

இங்கே பாருங்கள். வைகோ செல்லாக்காசு என்று சொன்னவரே நீர் தான். பிறகு அவர் எங்கு போனால் தான் என்ன? நீர் ஏன் வருத்தப்படுகின்றீர்.

மேலும் நாங்கள் ஒன்றும் சுயநலமாக யோசிக்கவில்லை. நாம் சொல்வது என்னவென்றால், வைகோ மற்றவர்களைப் போல ஈழத்தமிழர் பிரச்சனையை தேவைக்காக பாவி;க்;காத சிறந்த தலைவர் என்பதையே!!

விடுங்க தூயவன் - இதுகளுக்கு எல்லாம் ..மன்னிக்கவும்- இவர்களுக்கு எல்லாம் நாங்க பதில் சொல்ல போய் ... என்ன ஆகபோகுது?
தூங்கிறவனை எழுப்பலாம்.. தூங்கிறமாதிரி....???????
8)


- தூயவன் - 01-25-2006

கும்பலோடு கோவிந்தா போடுவதை விட்டு, முதலில் என்ன எழுதியிருக்கின்றோம் என்ற படித்ததுப் பார்த்து எழுதினால் நாம் ஏன் பதில் போடப் போகின்றோம்?


- வர்ணன் - 01-25-2006

கருத்து சுதந்திரம் யாழ்ல இருக்கு...
அதுக்காக எது வேணும் எண்டாலும் பேசலாம் எண்டு நினைக்காதீங்க.

எங்களுக்கும் உணர்வுகள் இருக்கு- அதை உங்க பொழுது போக்கிற்காக பாவிக்காதீங்க.

உங்களுக்கு ஏதும் எழுதினால் போதும் எண்டு ஒரு ஆர்வம் இருக்கலாம்.

எங்கட நோக்கம் அது அல்ல.
மாவீரர் குடும்பத்தில இருந்து- கண்ணில கண்ட தமிழன் எல்லாரயும் கொன்றுபோட்டு போற சிங்களவனில உள்ள கோவம்!

உதவி ஒண்ணும் உங்களிட்ட இருந்து வேணாம்- உபத்திரவம் செய்யாமல் இருங்க! 8)