![]() |
|
அண்ணோய் வணக்கம் - ! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: அண்ணோய் வணக்கம் - ! (/showthread.php?tid=120) Pages:
1
2
|
- narathar - 04-25-2006 லக்கிலுக் நான் தமிழ் நாட்டில் பல வருடங்கள் இருந்தேன் படித்தேன், தல சொல்வதைப் போல் பல சம்பவங்கள் பலருக்கு நடந்துள்ளன.குறிப்பாக தமிழ் நாட்டு கிவு பிரிவு பொலிசாரினாலும்,ரோவினாலும்.இதற்கு அடிப்படைக் காரணம் அங்கு ஈழத்தமிழர் மேல் பாவிக்கப் படும் பயங்கரவாதப் பட்டமும்,அதன் பால் ஏற்படுத்தப் பட்ட சட்டங்களும்.இவை எந்தவித நோக்கமும் இன்றி சிலருக்கு லஞ்சம் பெறும் வழியாக இருகின்றன.ஒரு ஈழத் தமிழரின் மேல் இவர் புலியாக இருக்கலாம் என்று எனக்குச் சந்தேகம் என்று சொல்லி எந்த வித கேட்டுக் கேள்வி இன்றி அவரை சிறையில் அடைக்கும் அதிகாரம் உங்கள் காவல் துறைக்கு உண்டு.பின்னர் லஞ்சம் குடுத்தே வெளியால் வர வேண்டிய நிலை இருக்கிறது.அதோடு ஈழத் தமிழரைச் சொல்லி அரசியல்வாதிகள் அரிசி,பணம் என்பவற்றை ஊழல் மூலம் அபகரிக்கும் நிலையும் இருக்கிறது.இவை பல தமிழ் நாட்டுப் பதிரிகையாளர்களால் அம்பலப் படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் எந்தவித அரசியல்,அதிகார பின் புலமும் பலமும் அற்ற வறிய மக்கள் மேல் எப்படி உங்கள் அரச அதிகாரிகள் பாய்வார்களோ அவ்வாறே எந்த வித அதிகார பின் புலமும் அற்ற ஈழத் தமிழர் மேலும் உங்கள் பொலிசும்,அதிகாரிகளும் தட்டிப் பற்றிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.அங்கு எதாவது காரியம் ஆக வேண்டுமெனின் ஒன்றில் யாரை யாவது தெரிந்து இருக்க வேண்டும்,இது ஒரு உயர் அதிகாரியாகவோ அன்றி அரசியல் வாதியாகவோ இருக்கலாம்,அல்லது லஞ்சம் குடுக்க வேண்டும். மேலும் ஈழத் தமிழர் பால் உண்மயான அன்புடய கரிசனை உடய மனிதர்களும்,தமிழ் நாட்டில் உண்டு.இவர்களின் தொகை மிகக் குறைவு. அனேகமானோர் பணத்திற்காக எதுவும் செய்யத் தயாராக இருகிறார்கள்.அப்படியானவர்கள் பணத்திற்காக உதவுவார்கள்.புதிதாக வருபவர்களைப் பயமுறித்தி பணம் பறிப்பதற்கெனவே சிலர் முனைப்புடன் உங்கள் பொலிசில் இயங்கின்றனர்.இவற்றைப் பற்றி அறிய உங்களுக்கு வாய்ப்புக்கள் இல்லாமல் இருக்கலாம் அல்லது அவற்றை வேண்டு மென்றே மறைக்கலாம். - Thala - 04-25-2006 Luckyluke Wrote:"தல" போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார்களா என்பதே எனக்கு சந்தேகம் தான்... எனக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஈழத்தமிழர் தான்... விடுதலைப்புலிகள் ஆதரவாளர் தான்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உமது தற்போதைய இருபிடமான ராகவாநகரும், மூவரசம் பேட்டையும், நங்கநல்லூர், மடிப்பாக்கம் (கூட்ரோட் உட்பட) பெரியார் நகர் எக்ரன்சன், கீழ்க்கட்டளை.. வானுவம் பேட்டை, நானும் கோலோச்சிய இடங்கள்.... :wink: ராகவா நகரில் ( கூட்ரோட்டுக்கு அண்மையில்) காசிநாதன் அடுக்குமாடி இருக்கிறது தெரியுமா..??? ஈழத்தவர் வாழும் 24 வீடுகள் இருக்கின்றதே...! எனக்கு தெரியாத தமிழகமா நல்ல டாமாசு....??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|