![]() |
|
தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தல் (/showthread.php?tid=1111) Pages:
1
2
|
- மேகநாதன் - 02-06-2006 <b>வெலிக்கந்தை கடத்தலை கண்டித்து மட்டக்களப்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் இன்று முதல் பகிஷ்கரிப்பு</b> வெலிக்கந்தையில் வைத்து ஆயுத தாரிகளால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் விடுவிக்கப்படாததைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் இன்று திங்கட்கிழமை முதல் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதிக்கவுள்ளது. இது தொடர்பாக இணையம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல்கோள் அனர்த்தம், யுத்தம், வறுமையென பல்வேறு பட்ட அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டு வேதனைகளே எஞ்சிய நிலையில் வாடிக் கொண்டிருக்கும் எம் மக்களின் மீட்சிக்காக அரச உதவிகள் மிக மிக தாமதமாகக் கிடைத்து வந்த வேளைகளில் அரச சார்பற்ற மனித நேய அமைப்புகளே காத்திரமான சேவைகளை வழங்கி வந்தன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்களே களத்தில் நின்று சேவை புரிந்து வருகின்றனர். இவர்கள் வாழ்வாதாரத்திற்காகவும், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சமூக அபிவிருத்திக்காகவும் தங்களை அர்ப்பணித்து சேவை புரிந்து வருகின்றனர். அண்மைக் காலமாக நடத்தப்பட்டு வரும் இனந்தெரியாத தாக்குதல்களினால் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம், மீதான தாக்குதல்களினால் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணி புரிவதற்கு சேவையாளர்கள் அஞ்சுகின்றனர். இதனால் மாவட்டத்தில் சுய தொழில் அபிவிருத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த திங்கட்கிழமை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் பணிபுரியும் செல்வி தனுஸ்கோடி பிரேமினி, சண்முகநாதன் சுவேந்திரன், த.வசந்தராஜ், கைலாயபிள்ளை ரவீந்திரன், த.பகீரதன் ஆகிய உத்தியோகஸ்தர்கள் வெலிக்கந்தையில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டதுடன், மேலும் ஐவர் கடத்தப்பட்டு மூவர் விடுவிக்கப்பட்ட போதும், மொத்தமாக ஏழு பேர் காணாமல் போனமை நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்களைப் பெரிதும் விரக்தி நிலைக்கு தள்ளியுள்ளதுடன் இவர்களின் சேவை நாட்டத்தினையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. 03.02.2006 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டத் தீர்மானத்தின் படி இந்த நிராயுத பாணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கடத்தலில் இருந்து இவர்களை விடுதலை செய்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசும், சர்வதேச சமூகமும், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் சம்பந்தப்பட்ட மனித உரிமை அமைப்புகளும் உடனடியாக இதைக் கருத்திற் கொண்டு இவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையினை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் இன்று முதல் மாவட்ட ரீதியான அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களின் தன்னார்வச் சேவைகளையும் பகிஷ்கரிக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளன. இதற்கமைவாக அனைத்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், திணைக்களங்களின் ஆதரவினையும் வேண்டி நிற்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. <i><b>தகவல் மூலம்- தினக்குரல்</b></i> - மேகநாதன் - 02-07-2006 <b>மட்டு. மாவட்டத்தில் பணி புறக்கணிப்பு வீதி வெறிச்சோடியது மக்கள் முடக்கம்! </b> மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பணிப்புறக்கணிப்பால் மாவட்டத்தின் முழு நடவடிக்கையும் ஸ்தம்பிதம் அடைந்தன. அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் தாக்குதலுக்குட்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்@ கடத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் உடன் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி மாவட்டத்திலுள்ள உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்களின் தொண்டர் நிறுவனங்கள் தமது பணிகளை புறக்கணித்து தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்கள். இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்தும் இடம்பெறவில்லை. பாடசாலைகள், அலுவலகங்கள், வங்கிகள், வைத்தியசாலைகளில் ஊழியர்களின் வருகை மிகக் குறைவால் வெறிச்சோடிக் காணப்பட்டது. ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, கல்லாறு, செங்கலடி, தேத்தாத்தீவு, வந்தாறுமூலை, சித்தாண்டி, வாழைச்சேனை பகுதிகளிலும் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. வீதிகளில் பொது மக்களின் நடமாட்டமும் மிகவும் குறைவாகக் காணப்பட்டது. வீதிகளில் இராணுவம், பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை புதன்கிழமை மீண்டும் தொண்டர் நிறுவனங்கள் தமது பணிகளை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 3ம் திகதி அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் எடுத்த விசேட கூட்ட தீர்மானத்தின்படி நிராயுபாணிகளான தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களால் விடுவிக்கப்பட வேண்டும். இதற்காக சர்வதேச சமூகம், இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு, மனித உரிமைகள் அமைப்புக்கள், அரசு ஆகியன அதிக அழுத்தம் கொடுத்து விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி நேற்று முதல் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலை காரணமாக அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது பணியை நிறுத்தியுள்ளன. இதனால் கடற்கோளால் பாதிக்கப்பட்ட மக்களின் சகல பணிகளும் முடங்கி விடுமோ என பாதிக்கப்பட்ட மக்கள் அச்சம் தெரிவித்துள்ளதுடன் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். <i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i> தொடர்புடைய செய்திக்கும் புகைப்படங்களுக்கும் http://www.sankathi.com/index.php?option=c...=1630&Itemid=26 - மேகநாதன் - 02-07-2006 <b>மட். படுவான்கரைப் பிரதேசமும் புறக்கணிப்பால் ஸ்தம்பிதம் </b> மட்டு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக படுவான்கரைப் பிரதேசமும் ஸ்தம்பிதம் அடைந்தது. கொக்கட்டிச்சோலை, பழுகாமம், போரதீவு, கரடியனாறு இலுப்படிச்சேனை, உறுகாமம் உட்பட அனைத்து இடங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன. பிரதேச செயலகங்கள், பாடசாலைகள் என்பன இயங்கவில்லை. அத்துடன் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை@ மண்முனை அம்பிளாந்துறையூடான பாதைப்போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டிருந்தன. <i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i> - மேகநாதன் - 02-07-2006 <b>ரீ.ஆர்.ஓ பணியாளர்கள் கடத்தல் - தொடரும் மக்கள் மீதான கெடுபிடிகளிற்கு வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் கண்டனம் </b> தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்டதும் அவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படாததும் அப்பட்டமான மனித உரிமை மீறல் நடவடிக்கையாகும். இது தொடர்பாக நாங்கள் சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறு வடக்கு கிழக்கு மகித உரிமைகள் செயலகத்தின் தலைவர் அருட்திரு கருணாரெட்ணம் அடிகளார் சங்கதியிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது தமிழர் தாயகப்பகுதிகளில் சிறிலங்கா அரசுடன் இணைந்து செயலாற்றுகின்ற ஆயுதக்குழுக்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் முலம் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் மேலும் அம்பலமாகியுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் சிறிலங்காவின் பொறுப்புள்ள அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்ற பொறுப்பற்ற பேச்சுக்கள் ஜெனிவாவில் நடைபெற இருக்கின்ற பேச்சுக்களையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இது மட்டுமல்லாது வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற சுற்றி வளைப்புக்கள் அடையாள அட்டை பரிசோதனைகள் கெடுபிடிகள் என்பன மக்களின் இயல்புவாழ்வில் பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடர்பிலான பலமுறைப்பாடுகள்; எமது செயலகத்தில் கிடைத்திருக்கின்றன. இந்த விசாரணைகள் தொடர்பாக நாம் இலங்கையில் இருக்கின்ற அனைத்து மனித உரிமைகள் செயலகத்தினுடனும் தொடர்பு கொண்டு நடவடிக்கைளை துரிதாமாக மேற்கொண்டு வருகின்றோம் என்றும் அருட்திரு கருணாரெட்ணம் அடிகளார் குறிப்பிட்டார். மேலும் வடக்கு கிழக்கு மீனவர்களின் நிலைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் மன்னார் யாழ்ப்பாணம் திருகோணமலை பிரதேசங்களில் மீனவர்களுக்கு அனமதி அட்டை என்ற போர்வையில் சிறிலங்கா கடற்படையினர் பல கெடுபிடிகளை ஏற்படுத்தி வருவதாகவும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பிலும் நாங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக தமிழ் மீனவர்களுக்கு இவ்வாறான கெடுபிடிகளை ஏற்படுத்தி சிங்கள மீனவர்களுக்கு அதே பகுதியில் சிறிலங்கா கடற்படை தரப்பு சில சலுகைகளை வழங்கி வருவதானது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். அத்துடன் திருகோணமலையில் பல சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழ் மீனவர்களின் நடவடிக்கைகளை முடக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படை தரப்பு ஈடுபட்டு வருகின்றது. எனவே இவ்வாறன செயற்பாடுகளை நமது செயலகம் முழுமையாக கண்காணிப்பதாகவும் கருணாரெட்ணம் அடிகளார் சங்கதிக்கு மேலும் தெரிவித்துள்ளார். <i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i> - மேகநாதன் - 02-08-2006 <span style='color:green'><b>'கடத்தப்பட்ட பணியாளர்களைத் தேடி வெலிக்கந்தை வனப்பகுதிக்குள் நுழைந்த பெற்றோர்' </b> [புதன்கிழமை, 8 பெப்ரவரி 2006, 16:32 ஈழம்] [ம.சேரமான்] கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களைத் தேடி வெலிக்கந்தை வனப்பகுதிக்குள் நுழையும் போராட்டத்தை பணியாளர்களின் பெற்றோர்கள் இன்று புதன்கிழமை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, பணியாளர்களின் உறவினர் ஒருவர் கூறுகையில், பணியாளர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக அரசாங்கம் செயற்படும் விதம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. உரிய அதிகாரிகளிடமிருந்து எதுவித தகவலையும் பெற முடியவில்லை. இதனால்தான் வெலிக்கந்தை வனப் பகுதியில் உள்ள துணை இராணுவக் குழுவினரது முகாம்களைத் தேடப் புறப்பட்டோம்" என்றார் அவர். கடத்தப்பட்ட பணியாளர்கள் விடுவிக்கப்படும் வரை வெலிக்கந்த பகுதியில் இந்து ஆலயத்தில் முகாம் அமைத்து தங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பணியாளர்களை சிறிலங்க இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் கடத்தினர். அவர்களில் மூவர் விடுவிக்கப்பட்டனர். 7 பேரது நிலைமை என்ன என்பது இன்னமும் தெரியவில்லை</span> <i><b>தகவல் மூலம்- புதினம்</b></i> - மேகநாதன் - 02-09-2006 <b>ஜெனீவாப் பேச்சு மேசைக்கு வெலிக்கந்தை விவகாரத்தை கொண்டுவர போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முடிவு</b> தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விடயத்தை ஜெனீவாப் பேச்சு வார்த்தை மேசைக்கு கொண்டுவரவுள்ளதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்றூப் ஹொக்லண்ட் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானுவிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்றூப் ஹொக்லண்ட் நேற்றுப் பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு, அவர்களை கரடியனாறு தேனகத்தில் சந்தித்தக் கலந்துரையாடினார். இச்ந்திப்பில் மாவட்டத் தளபதி நாகேஸ், மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், மாவட்ட திட்டமிடல் மேம்பாட்டுச் செயலகப் பொறுப்பாளர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுப்படைகள் எந்தெந்த இடங்களில் செயற்படுகின்றன என்ற தகவல்களை விடுதலைப்புலிகளிடம் கேட்டறிந்து கொண்டார். இச்சந்திப்பு தொடர்பாக மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கருத்துத் தெரிவிக்கையில்:- இன்றைய சந்திப்பில் ஒட்டுப்படைகளின் நடவடிக்கைகள் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராயப்பட்டது. எதிர்வரும் ஜெனீவாப் பேச்சு வார்த்தையில் ஒட்டுப்படை விவகாரம் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட விடயம் என்பவற்றை பேச்சு மேசைக்கு கொண்டுவரவுள்ளதாக கண்காணிப்புக் குழுத் தலைவர் எம்மிடம் தெரிவித்துள்ளார் என்றார் தயாமோகன். <i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i> - மேகநாதன் - 02-14-2006 <span style='color:darkred'><b>ஜெனீவாவில் அரசு கூறப் போகும் பதில் என்ன? </b> கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்களை விடுவிக்கின்ற நடவடிக்கை எதனையும் இதுவரை சிறிலங்கா அரசு மேற்கொள்ளாது இருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றது. கடத்தல் விவகாரம் நடைபெற்றுப் பதினைந்து நாட்களாகின்றன. இன்னும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாகவோ, கடத்தியவர்கள் தொடர்பாகவோ எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காது அரசு பாராமுகமாகவுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இன, மத, பேதங்களைக் கடந்து அனைத்து மக்களுக்கும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் உலக நாடுகள் பலவற்றில் கிளைகளை நிறுவி மனிதாபிமான ரீதியாகச் செயற்படுகின்றது. இது எந்த வகையிலும் குறுகிய அரசியல் அல்லாமலோ அல்லது குறுகிய ஒரு இனம் சார்ந்த அமைப்பல்ல எனினும் போரினால் மிகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் அது முன்னுரிமைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சுனாமிப் பேரழிவு ஏற்பட்டு தமிழர் தாயகத்தில் மக்கள் பெரும் அவதிக்குள்ளானபோது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மனிதாபிமானப் பணியானது முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. இதன் பின்னர் சிறிலங்கா படைப் புலனாய்வுப் பிரிவும், ஒட்டுக்குழுக்களும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிகளை முடக்கும் வகையில் அதன் அலுவலகம் மீதான தாக்குதலை மேற்கொண்டதன் விளைவு ஒரு பணியாளர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேவேளை, பேரினவாத ஊடகங்களும், பேரினவாத சக்திகளும் கூடத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மீது அவதூறான பிரச்சாரங்களைப் பரப்பி அதனைச் சர்வதேச ரீதியாக முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குச் சர்வதேச நாடுகளில் இருந்து கிடைக்கின்ற உதவி வேறு வழி முறைகளுக்குப் பயன்படுத்துவதாக இருந்த சக்திகள் குற்றம் சுமர்த்தின. எனினும் இந்தப் பேரினவாத சக்திகளால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை முடக்கிவிட முடியாத நிலையில் இப்போது வெலிக்கந்தைக் கடத்தல் விவகாரம் இடம் பெற்றுள்ளது. வெலிக்கந்தையில் சிறிலங்கா படையினரின் அதியுயர் பாதுகாப்புப் பகுதிக்குள் வைத்து இந்தத் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்த கருத்துக்களின்படி ஒட்டுக் குழுக்கள்தான் என்பது முழுமையான உண்மை. எனினும் சிறிலங்கா அரசோ அல்லது படைத் தரப்போ கடத்தல்காரர்களைக் கண்டு பிடித்து அந்தப் பணியாளர்களை மீட்க வேண்டியது ஜனநாயகத்தை பேணும் அரசாங்கத்தின் கடமை. ஆனால் பதினைந்து நாட்கள் கடந்த போதும் இன்னும் பதிலில்லாத சூழலே காணப்படுகின்றது. கடத்தியவர்கள் விடுவிக்கப்படவேண்டுமென உள்நாட்டிலிருந்தும், சர்வதேச ரீதியாகவும் பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. பல அகிம்சை வழிப் போராட்டங்கள் என்பன நடைபெற்றன. எனினும் இன்னும் இதற்குச் சாதகமான பதிலளிக்க அரசு தவறி விட்டது. வெலிக்கந்தையில் கடத்தல்காரர்களைத்தேடி பொலிசார் தேடுதல் நடத்துவதாக அரசு கூறுகின்றது. ஆனால் தீவுச்சேனையில் முகாமிட்டுள்ள ஒட்டுக் குழுக்களைக் கண்டு பிடிப்பதில் அரசு தவறு இழைத்து நிற்கின்றது. இதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களும் எச்சரிக்கைப்பட்டுள்ளனர். உங்களுக்கும் வெலிக்கந்தையில் ஏற்பட்ட நிலைமை ஏற்படும் என இவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதேபோன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கொழும்பு அலுவலகத்துக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அச்சுறுத்தல், மிரட்டல் அதிகரித்துச் செல்வதானது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிகளைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு முடியாத பாதமான சூழலையே ஏற்படுத்தும். எனவே இக்கடத்தல் விவகாரத்துக்கு ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் அரச குழு என்ன பதில் கூறப் போகின்றது பொறுத்திருந்து பார்ப்போம். </span> <b><i>நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு- </i> ஆசிரியர் தலையங்கம்(14/02/06)</b> - MUGATHTHAR - 02-14-2006 <b>காணாமல் போன தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளரை தேடும் பொலிஸாரின் நடவடிக்கை பலனளிக்கவில்லை</b> வெலிக்கந்தைப் பகுதியில் ஒட்டுக் குழுக்களால் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போன தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களை கண்டு பிடிப்பதற்காக கடந்த வாரப் பிற்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. வெலிக்கந்தை இராணுவ சோதனை நிலையத்திற்கு அருகில் வைத்து கடந்த மாதப் பிற்பகுதியில் கடத்தப்பட்டவர்களில் இதுவரை ஏழு பேர் விடுவிக்கப்படவில்லை. இவர்களுக்கு என்ன நடந்ததெனவும் தெரியவரவில்லை. இந்த நிலையிலேயே வெலிக்கந்தைப் பகுதியில் இவர்களைத் தேடி பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் கடந்த வாரப் பிற்பகுதியில் தேடுதலை மேற்கொண்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒட்டுப் படைகளால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட ஐவரையும் இணைத்துக் கொண்டே காடுகளினுள் இந்தத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின. எனினும் இந்தத் தேடுதலின் போது எவரும் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம் அண்மையில் கருணா குழுவிலிருந்து தப்பி வந்த சிறுவனொருவன் வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் கருணா குழுவின் முகாம்களிருப்பதாகவும் கடத்தப்பட்ட பலர் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தான். எனினும் இதுவரை அந்தச் சிறுவனை கண்காணிப்புக் குழு சந்திக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது தினக்குரல் டென்மார்க் பிரதமருக்கு எழுதப்பட்ட திறந்தமடலின் தமிழாக்கம் - Vasan - 02-14-2006 சிறிலங்கா அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழக்களால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளரை விடுவிப்பதர்க்கு டென்மார்க் அரசாங்கத்திடம் உதவிகோரி தமிழ்வொயஸ் இணையத்தளத்தால் டென்மார்க் பிரதமருக்கு எழுதப்பட்ட திறந்தமடலின் தமிழாக்கம். அனாஸ் போ ராஸ்முசன் பிரதமர் பிரதமர்அலுவலகம் கடந்த 29 , 30 திகதிகளில் 10 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கருணாகுழு என அழைக்கப்படும் அரசபடையின் ஓட்டுக்குழுவொன்றால் கடத்தப்பட்டுள்ளனர். இந்தக்குழுவுக்கு அரசபடையுடன் நெருங்கிய தொடர்பிருப்பதை போhநிறுத்த கண்காணிப்புக் குழவின் பேச்சாளரும் கடந்த 15 ந் திகதி சண்டேலீடர் என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மனிதநேயதொண்டர்கள் கடத்தப்பட்ட வெலிகந்த பிரதேசத்தில் கருணாகுழு என்ற அரசஒட்டுப்படையினர் சிறுவர்களுக்கு கட்டாயப்படுத்தி பயிர்ச்சியளிக்கும் ஒரு முகாமை வைத்திருப்பதாக முன்னாள் அவர்களின் 15 வயது உறுப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளார். இப்பொழுது 3 பணியாளர்கள் விடுவிக்கப்ட்டநிலையில் தொடர்ந்தும் 7 பணியாளர்கள் அவர்களால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவமானது தொடவிருந்த பேசிசுவார்த்தையை குழப்புமென அமெரிக்க கொங்கிராஸ் அங்கத்தவரும் கவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தமிழ்மக்களின் இயல்பு வாழ்கை சீரடையாவிடில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டாம் என உலகளாவிய ரீதியில் தமிழ்மக்களும் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கத்தெடங்கியுள்ளனர். கருணாகுழு உட்பட பல அரச ஒட்டுப்படைகளின் உத்தியோகபுூர்வ இணையத்தளங்கள் இங்கு டென்மார்க்கில் இருந்து இயங்குவது, ஒட்டுப்படைகளுக்காக சிலர் இங்கு செயப்படுவது என்பன போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினருக்கும் தெரியும். அவர்களுடைய இந்த இணையத்தளங்களில் இலங்கையில் இந்த ஒட்டுப்படைகளால் தமிழர்கள் மீதும் தமிழீழவிடுதலைப்போராட்டம் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் மட்டுமல்ல நடைமுறையில் உள்ள போர்நிறுத்தத்தை குழப்பமுயலும் நடவடிக்கைகளுக்கும் உரிமைகோரப்படுகின்றது. கடந்த நத்தார் தினத்தன்று பிராத்தனையில் ஈடுபட்டிருக்கையில் கொல்லப்பட்ட பாராளமன்றஉறுப்பினர் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு இவர்கள் உரிமைகோரியிருந்தார்கள். இந்த இணையத்தளங்களில் அரசஒட்டுப்படையைச் சேர்ந்தவர்களென கூறுபவர்களின் பேட்டியையும் காணக்கூடியதாகவுள்ளது. ஆகவே இங்கு இந்த செயல்களின் பின்னணியில் இருப்பவர்களுக்கு கடத்தப்பட்ட பணியாளர்கள் எங்கே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியும். இந்த திறந்தமடல் ஊடாக தமிழ்வொயிஸ் இந்த ஒட்டுப்படைகளுக்காக டென்மார்க்கில் செயல்படுவோர் முலம் இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவில் முக்கிய இடம் பெறும் டென்மார்க் அரசாங்கம் கடத்தப்பட்ட மனிதநேயபணியாளர்களை விடுவிக்கவேண்டும் என வேண்டுகின்றோம். உங்களிடம் இருந்து ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கும் தமிழ்வொயஸ் http://tamilvoice.dk/tamilvoiceappel.php |